Jump to content

ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

03 MAY, 2024 | 09:42 PM
image
 

வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது.

அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை  பொழிவும் குறைந்து காணப்படுகின்றது.

மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும் முறையற்ற பாராமரிப்பே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த சில வாரங்களாக நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்த்தேக்கத்தை முகாமைத்துவம் செய்யும் நிர்வாகம்  விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு நீரை வெளியேற்றியது. இன்று அவர்களின் அந்த முயற்சி பாழாகிவிட்டது.

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  மீன்களுக்காக நீர்த்தேக்கத்தில் மேலதிக நீரை வெளியேற்றி சேறு மற்றும் குப்பைகளை அகற்றி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்த நிர்வாகம்  தீர்மானித்தது.

இந்நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரித்தமையினால் வெளியேற்றப்பட்ட நீரை மீண்டும் நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்காமல்  கீழுள்ள பகுதிக்கு வெளியிட நிறுவனம் முடிவு செய்தது. இதுவே  நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவடைய வழிவகுத்தது. மீன்கள் மொத்தமாக செத்து மடிந்தன என அந்நாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

"கடந்த 10 நாட்களாக துர்நாற்றம் வீசுவதால் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது" என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டோங்னாய் மாகாணத்தில் 40 செல்சியசுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெப்ப அலை வீசுகிறது.

ஆசியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கொடூரமான காணப்படுகிறது. இது உலக காலநிலை வரலாற்றில் மிகவும் தீவிரமான நிகழ்வு" என  வானிலை வரலாற்றாசிரியர் மாக்சிமிலியானோ ஹெர்ரேரா தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் அயல் நாடான கம்போடியாவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அங்கு வெந்நிலை 43C ஐ அடையவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க தூண்டியது.

தாய்லாந்தில், உடோன் தானி மாகாணத்தில் வெப்பநிலை 44C க்கும் அதிகமாக அதிகரித்தமையினால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் அணையில் நீர் மட்டம் குறைந்ததால் நீரில் மூழ்கிய 300 ஆண்டுகள் பழமையான நகரத்தின் எச்சங்கள் தென்படுகின்றன.

பங்களாதேஷில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.  பிலிப்பைன்ஸில் கல்வி நடவடிக்கை இணையவழி முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவில் வெப்பம் பக்கவாதம் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளன.

2024 ஆம் ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக இருக்கும் எனவும், கடந்த ஆண்டை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/182594

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில் கடும் வெப்பம் அலை

Published By: DIGITAL DESK 3   04 MAY, 2024 | 11:54 AM

image

’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட '5 டிகிரி செல்சியஸ்' வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

அதாவது, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தால், அது வெப்ப அலையாக அறிவிக்கப்படும். 

இந்நிலையில்,  முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மியன்மாரில் வெப்பம் ஆகக் கூடுதலாக 45 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

அதனையடுத்து, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், நேபாளில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சீனாவில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறைவான வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இந்தோனேஷியாவிலும், 37 டிகிரி செல்சியஸ் பிலிப்பைன்ஸிலும், 36 டிகிரி செல்சியஸ் சிங்கப்பூரிலும் பதிவாகியுள்ளது.

GMnbsL2XwAAAw2b.jpg

https://www.virakesari.lk/article/182645

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் காடுகளின் அவசியம் புரிகின்றது.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வெக்கை இங்கு இன்னமும் விண்டர் ஜக்கட்  ஓய்வுக்கு போக வில்லை இன்று காலையில் ஓரளவுக்கு வெப்பம் பின்னேரம் இருந்ததும் போச்சு .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄

இதெல்லாம் புதிதல்ல......
அரச நன்கொடை எனும் பெயரில்  வறிய மக்களுக்கு நாறிப்போன, புழு பிடித்த மீன்களை கொடுத்ததை என் கண்ணால் கண்டிருக்கின்றேன்.😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄

டக்ளசும் யாழ் இணையம் பார்க்கிறவராம்.

சொல்லியாச்சில்ல இனி செய்து முடித்திடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

டக்ளசும் யாழ் இணையம் பார்க்கிறவராம்.

சொல்லியாச்சில்ல இனி செய்து முடித்திடுவார்.

எனக்கொன்றும் ஆபத்திலைய்யே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

எனக்கொன்றும் ஆபத்திலைய்யே...?

நீங்க இலங்கை போகும்போது சொன்னால் 

போட்டுக்குடுக்கலாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கை ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது, வடக்கு கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் 52 பாகை செண்டிகிரேட் வரை வெப்பம் கூடும் வாய்புள்ளதாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் நினைகிறேன், இயற்கையானா நீர் தேக்கத்தில் ஒரு பகுதியை வலை மூலம் பிரித்து, அடிப்பபரப்பையும் வலை மூலம் பிரித்து கட்டப்பட்ட மிக ஆழம் குறைந்த செயற்கை  நீர் தேக்கம்.

(படத்தில் உள்ளவரால் எப்படி நிற்க முடிகிறது?)
 

அநேகமாக  எல்லா மேற்றப்பரப்பு, நீந்தும் (ஆழ் நீர்) மீன்களுக்கு நீந்தும் காற்றுப் பை (swim bladder) இருக்கிறது. (இப்படி இல்லாதது சுறாவும், திருக்கையும், ஆனால், அவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் மிதத்தலுக்கு உதவுகிறது).

எனவே, (மேற்பரப்பு) சூழலில் ஏதும் மாற்றம் என்றால், விரைவாக ஆழத்துக்கு செல்லும், குடியகலும் (schooling, ஆங்கிலத்தில், ஒரே திசையில் செல்லும் மீன் குழு) தன்மை கொண்டவை.     

(அடைக்கப்படாமல் இருந்தால் இவை அநேகமாக தப்பி இருக்கும்)   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். 
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன்.
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். 
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன்.
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். 
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன்.
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். 
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன்.
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். 
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். ✍️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

இது நான் நினைகிறேன், இயற்கையானா நீர் தேக்கத்தில் ஒரு பகுதியை வலை மூலம் பிரித்து, அடிப்பபரப்பையும் வலை மூலம் பிரித்து கட்டப்பட்ட மிக ஆழம் குறைந்த செயற்கை  நீர் தேக்கம்.

(படத்தில் உள்ளவரால் எப்படி நிற்க முடிகிறது?)
 

அநேகமாக  எல்லா மேற்றப்பரப்பு, நீந்தும் (ஆழ் நீர்) மீன்களுக்கு நீந்தும் காற்றுப் பை (swim bladder) இருக்கிறது. (இப்படி இல்லாதது சுறாவும், திருக்கையும், ஆனால், அவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் மிதத்தலுக்கு உதவுகிறது).

எனவே, (மேற்பரப்பு) சூழலில் ஏதும் மாற்றம் என்றால், விரைவாக ஆழத்துக்கு செல்லும், குடியகலும் (schooling, ஆங்கிலத்தில், ஒரே திசையில் செல்லும் மீன் குழு) தன்மை கொண்டவை.     

(அடைக்கப்படாமல் இருந்தால் இவை அநேகமாக தப்பி இருக்கும்)   

வணக்கம், கடஞ்சா!

இது போல அவுஸ் நீர்த்தேங்கங்களிலிம் இவ்வாறு நிகழ்வதுண்டு. நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால், நீரில் கரைந்திருக்கும் பிராணவாயுவின் அளவு குறைவடையும். இது மீன்கள் இறக்கக் காரணமாக அமைகின்றது.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன Published By: VISHNU   18 MAY, 2024 | 12:57 AM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது. இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது. அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார். இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது.  அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கைப்பற்றினர். 215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20   ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை. மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில்  அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது. மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண் https://www.virakesari.lk/article/183821
    • கேட்காது கண்ணிருந்தும் குருடு செவி இருந்தும் செவிடு
    • இன அழிப்பின் நினைவழியாத நாள்.. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்தக் குறுகிய வன்முறைவெளிக்குள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கான சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிகமோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிபந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் நடைபெறவுள்ளன.'முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அந்த துயரவலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.  எனவே எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணி திரண்டு அஞ்சலிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது   https://newuthayan.com/article/இன_அழிப்பின்_நினைவழியாத_நாள்..
    • 18 MAY, 2024 | 07:28 AM   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183838
    • 1958 இனக்கலவரத்தின் போது, தலையை மணந்து நல்லெண்ணை மணக்கிறதா?, காதில் ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்தும் தமிழர்களை அடையாளம் கண்டு சிங்களவர்கள் தாக்கினார்கள். அதற்குப் பிறகு காது குத்தல் என்பது எங்கள் மத்தியில் மெதுவாக அழிந்து போயிற்று. பணத்தேவைக்காக காது குத்தல் நிகழ்வுகள் எனது ஊரில் ஆங்காங்கே நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது நிலாமதி, நான் 1958க்கு முன்னர் பிறந்தவன். ஸ்டையில் எல்லாம் இப்பொழுது எனக்கு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. “காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை”
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.