Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4c57ba6a96567d99979c9491eea1041f1f0696b5-1024x1087.jpg?w=1000&h=1062&fm=webp&q=70

President Ebrahim Raisi, Foreign Minister Hossein Amir-Abdollahian, Tabriz Friday Prayers imam Ayatollah Al-e Hashem, East Azarbaijan governor general Malek Rahmati, Raisi's bodyguard and the pilot have all been killed in the chopper crash in northwestern Iran, semi-official Mehr News reported.

மகிழ்ச்சி!

ஈரானில் இனியாவது முல்லாக்களின் அராஜகம் ஒழிந்து மக்கள் முக்கியமாக பெண்கள் அடிப்படை சுதந்திரத்தையாவது அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த மகிழ்ச்சி நீடிக்கும்.

ரணிலின் கல்லோயா திட்டம் இதனால் பாதிக்கப்பட்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஜனாதிப‌தியின் பாதுகாப்பான பயணத்திற்கு இன்னமும் 60 வருடப் பழமையான அமெரிக்க உலங்குவானூர்தியைப் பாவித்தது ஏன்? 

மனுசனுக்கு 72 கன்னிகை ஆசை வந்திட்டுதோ..அதுதான் எட்றா  அமெரிக்கன் கெலியை என்றுவிட்டு... போயிருப்பார்..

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் இருவரும் உயிரிழப்பு

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 மே 2024

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.

அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் உயிரிழந்துவிட்டனர்.

முன்னதாக, இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது. அடுத்தபடியாக, அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட வெளியான நிலையில், தற்போது இரான் அதிபர் ரைசி உயிரிழந்ததை அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடும் பனிமூட்டம் - மீட்புப் பணியில் சிரமம்

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது.

விபத்து நடந்தது எங்கே?

இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.

இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,IRAN PRESIDENTIAL WEBSITE

படக்குறிப்பு,இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்
இரான் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,TASNEEM

படக்குறிப்பு,தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்
இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹெலிகாப்டர் விழுந்த இடம் அடையாளம் காணப்பட்டது

இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.

வெப்பத்தின் மூலம் ஹெலிகாப்டரின் இருப்பிடத்தை கண்டறியும் துருக்கியின் பேரெக்டர் அகின்ஸி (Bayraktar Akinci) என்ற ஆளில்லா விமானம் வெப்பத்தின் மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட நீண்ட தூர ட்ரோனின் காட்சிகள், இரவில் ஒரு நிலப்பரப்பின் கழுகு பார்வை காட்சியையும், ஒரு மலைப்பகுதியில் தோன்றும் ஒரு இருண்ட புள்ளியையும் காட்டியது.

இதுகுறித்த விவரம் இரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

இரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்தது.

பல மணி நேர தேடுதலின் முடிவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாண்ட், 'நிலைமை நல்லவிதமாக தோன்றவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் இடத்தை "சில நிமிடங்களில்" அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பதாக கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் தோராயமாக 2 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"யாரும் உயிருடன் இருக்கும் அறிகுறி இல்லை"

அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதற்கான "அறிகுறி எதுவும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

இரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகாப்டர் "முற்றிலும் எரிந்துவிட்டது" என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"விபத்தில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஹெலிகாப்டரின் சிதைவு புகைப்படம்

ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் சமூக ஊடக சேனல்களில் ட்ரோன் காட்சிகள் பகிரப்பட்டுள்ளன. இது அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவைக் காட்டுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

ரெட் கிரசன்ட் படமெடுத்த அந்த காட்சிகள், மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது போல் காட்சியளிக்கும் தரைப் பரப்புக்கு அருகே ஹெலிகாப்டரின் வால் பகுதி தெரிகிறது.

அந்த இடத்தில் யாரும் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,AFP

வடமேற்கு இரானில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும், வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் பலர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இரானிய மக்கள் பிரார்த்தனை

இரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு இரானியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மஷாத் என்ற நகரில் அதிபர் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாயின.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஜர்பைஜான் 'ஆழ்ந்த' கவலை

இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் "ஆழ்ந்த கவலை" அடைந்ததாக அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் கூறியுள்ளார்.

இரான்-அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.

"இரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரைசிக்கு நட்பு ரீதியில் விடை கொடுத்தேன். அதன் பிறகு இரான் உயர்மட்டக் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதியது என்ற செய்தியால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் சதியா?

இரானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், "அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடல்கள் இந்த கட்டத்தில் தவறான விளையாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன. ஆனால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன்" என்றார்.

"ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு இரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அவையின் ஆயுதப்படை சேவை கமிட்டிக்கான குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் "இது நல்லதே" என்று கூறியுள்ளார்.

"ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

"ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக திகழும்" என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

"அவர் மறைந்து விட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க இரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

விபத்து குறித்து அதிபர் ஜோ பிடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

  • இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார்.
  • 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
  • 2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2019 ஆம் ஆண்டில், ஆயதுல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
  • அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

Published By: DIGITAL DESK 3

20 MAY, 2024 | 10:52 AM
image
 
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

441064051_1560368327856441_2518658397608

441010377_763001795649237_57627958426549

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

மகிழ்ச்சி!

ஈரானில் இனியாவது முல்லாக்களின் அராஜகம் ஒழிந்து மக்கள் முக்கியமாக பெண்கள் அடிப்படை சுதந்திரத்தையாவது அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த மகிழ்ச்சி நீடிக்கும்.

ரணிலின் கல்லோயா திட்டம் இதனால் பாதிக்கப்பட்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி!

இவ‌ரின் இழ‌ப்புக்கு ப‌ல‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் இர‌ங்லைத் தெரிவிக்கின‌ம்

இவ‌ருக்கு ஒரு ப‌க்க‌ம் கெட்ட‌ பெய‌ர் இருந்தாலும் ம‌று ப‌க்க‌ம் ந‌ல்ல‌ பெய‌ரும் இருக்கு................................த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ரிட‌ம் இல்லை......................ம‌ற்ற‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நீங்கா இட‌ம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப‌ தான் தெரியுது...............................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஈரான் அதிப‌ர் அங்கு செல்வ‌தை த‌விர்த்து இருக்க‌னும் இவ‌ரின் எதிரிக‌ள் அங்கு ம‌றைமுக‌மாய் இருப்ப‌து தெரியாம‌ வெளிக்கிட்டு க‌ட‌சியில் இந்த‌ அவ‌ல‌ நிலை அவ‌ருக்கு நேர்ந்து விட்ட‌து................................இர‌ண்டாம் க‌ட்ட‌ அமைப்பை அங்கு அனுப்பி ச‌ரி செய்து இருக்க‌லாம்

எல்லாம் ந‌ட‌ந்து முடிந்து விட்ட‌து இனி புல‌ம்பி என்ன‌ செய்வ‌து😥..............................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் இழ‌ப்புக்கு ப‌ல‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் இர‌ங்லைத் தெரிவிக்கின‌ம்

இவ‌ருக்கு ஒரு ப‌க்க‌ம் கெட்ட‌ பெய‌ர் இருந்தாலும் ம‌று ப‌க்க‌ம் ந‌ல்ல‌ பெய‌ரும் இருக்கு................................த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ரிட‌ம் இல்லை......................ம‌ற்ற‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நீங்கா இட‌ம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப‌ தான் தெரியுது...............................

மரண வீட்டிலும் உங்களுக்கு ஜோக் கூடிப் போய்ச்சுது😂!

வெனிசுவெலாவைக் கொள்ளையடிச்சு தன் சட்டைப் பைக்குள் போட்ட நிக்கலஸ் மதுரோ, ஆப்கானின் தலிபான் (பெண்களை பள்ளிக் கூடம் போனால் கொல்கிற கூட்டத்தின்) அமைச்சர், இவை போன்றவை மனதில் நிச்சயம் நீங்கா இடம் பிடித்திருப்பார். அப்படி பிடிக்கா விட்டால் தான் அது செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

என்ன‌ அண்ணா இது ஜோக் அடிக்கும் நேர‌மா.........................இந்தியா தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் ஈரான் அதிப‌ரின் இழ‌ப்புக்கு இர‌ங்க‌ல் தெரிவிப்ப‌தோடு இவ‌ர் எப்ப‌டி ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனினார் என்று ஒவ்வொரு த‌ள‌த்திலும் கேட்க்க‌ கூடிய‌ மாதிரி இருக்கு..........................................

Edited by வீரப் பையன்26

1 hour ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் இழ‌ப்புக்கு ப‌ல‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் இர‌ங்லைத் தெரிவிக்கின‌ம்

இவ‌ருக்கு ஒரு ப‌க்க‌ம் கெட்ட‌ பெய‌ர் இருந்தாலும் ம‌று ப‌க்க‌ம் ந‌ல்ல‌ பெய‌ரும் இருக்கு................................த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ரிட‌ம் இல்லை......................ம‌ற்ற‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நீங்கா இட‌ம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப‌ தான் தெரியுது...............................

கோத்தா, மகிந்த ஆகியோர் பதவியில் இருக்கும் போது இறப்பு ஏற்பட்டிருந்தாலும் உலக நாடுகளின் தலைவர்கள் இரஙகலைத் தெரிவித்து இருப்பர்.

கிளாலி படுகொலைகள், ஜேவிபி காலத்தில் சிங்களவர்கள் மீது செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் பிரேமதாசா கொல்லப்பட்ட போது உலக தலைவர்கள் இப்படித் தான் நடந்து கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ அண்ணா இது ஜோக் அடிக்கும் நேர‌மா.........................இந்தியா தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் ஈரான் அதிப‌ரின் இழ‌ப்புக்கு இர‌ங்க‌ல் தெரிவிப்ப‌தோடு இவ‌ர் எப்ப‌டி ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனினார் என்று ஒவ்வொரு த‌ள‌த்திலும் கேட்க்க‌ கூடிய‌ மாதிரி இருக்கு..........................................

நீங்கள் எந்தத் தளத்தில் "ஏனைய நாடுகளோடு நல்ல நட்பைப் பேணினார்.." என்று கேட்கிறீர்களோ பார்க்கிறீர்களோ தெரியாது. இது வரை கருத்து வெளிப்படுத்திய எல்லா நாடுகளும் "ஈரானுக்கு அனுதாபங்கள்" என்று தான் சொல்லியிருக்கின்றன - இது ஒரு நாகரீகமான செயல்முறை, அவ்வளவு தான்.

ஆனால், ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள் (இதில் இந்தியாவும் கூட வரலாம், மலிவு எண்ணை வாங்கியதால்😎!) மட்டும் தான் "நல்லவர் வல்லவர், உலகத் தலீவரை இழந்தோம்" என்று புலம்பியிருக்கின்றன. இவை எந்த நாடுகள் என்று தேடி, ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் இயலுமை உங்களுக்கு இருக்கிறதென நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

இரங்கல் என்பது அந்த நாட்டுக்கு, அந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் கௌரவம். 

ஒரு கெட்ட தகப்பன் என்றாலும் அவரது இழப்பிற்கு பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வது போல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள்

ஈரான் காட்டு சட்ட நாடு எனின்......?
தேன் கூடுகள் போல வாழ்ந்த......
ஈராக் மீதான இரண்டாம் போர் அண்ணர் நடத்தியது ஏன்?
தன் மக்களையும் தன் நாட்டையும் செழிப்பாக வைத்திருந்த கடாபி மேல் போர் தொடுத்து நாட்டையே அழித்து நாசமாக்கியது ஏன்?

அறப்படித்த  காட்டு மூளைச்சட்டாம்பிகள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஈரான் காட்டு சட்ட நாடு எனின்......?
தேன் கூடுகள் போல வாழ்ந்த......
ஈராக் மீதான இரண்டாம் போர் அண்ணர் நடத்தியது ஏன்?
தன் மக்களையும் தன் நாட்டையும் செழிப்பாக வைத்திருந்த கடாபி மேல் போர் தொடுத்து நாட்டையே அழித்து நாசமாக்கியது ஏன்?

அறப்படித்த  காட்டு மூளைச்சட்டாம்பிகள். 
 
ஓம், சதாமும் அவர் மச்சான் "கெமிக்கல் அலியும்" சேர்ந்து தேன் கூடு தான் வளர்த்தாய்ங்க😎! அதே போல கடாபி "நீங்கள் வந்து அடைக்கலம் புகுந்த ஜேர்மனியில்" ஒரு குண்டு வைத்து ஆட்களைக் கொன்றது அவர்களை மேலே 72 கன்னியருடன் அனுப்பி வைக்க மட்டும் தான், கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது அவருக்கு!

சீரியசாக மேலும் சொல்லலாம், ஆனால் உங்கள்  மெமறி பிரச்சினை சரிவரும் வரை நான் நேரம் விரயம் செய்யத் தயாரில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் உந்த‌ உல‌கில் நூற்றுக்கு நூறு நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் கிடையாது....................இது அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் ந‌ல்லாவே பொருந்தும்.........................

ப‌ல‌ ஆபிரிக்கா நாட்டை நாச‌ம் செய்த‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து

எல்லாம் அள‌வுக்கு அதிக‌மாய் ஆசைப் ப‌ட்டு பொய் செய்தியை ப‌ர‌ப்பி ம‌ற்ற‌ நாட்டு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை சுர‌ன்டி கொழுத்த‌ நாடுக‌ள் தான் அதிக‌ம்...............................ஈராக்கில் ச‌தாம் ம‌க்க‌ளை கொன்ற‌தை விட‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் கொன்று குவிச்ச‌ ம‌க்க‌ள் தான் அதிக‌ம்

இன்று வ‌ரை ச‌தாம் அணுகுண்டு த‌யாரிக்க‌ தொட‌ங்கின‌ ஒரு ஆதார‌த்தையும் அமெரிக்கா ச‌ர்வ‌தேச‌த்துக்கு காட்ட‌ வில்லை......................இது தான் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ளின் பெரிய‌ உருட்டு..........................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Justin said:

ஓம், சதாமும் அவர் மச்சான் "கெமிக்கல் அலியும்" சேர்ந்து தேன் கூடு தான் வளர்த்தாய்ங்க😎!

உலகில் பல்வேறு இனங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட குணாதியங்கள் கொண்டவை. ஈராக்/ லிபியாவை பொறுத்தவரை தடியுடன் ஆட்சி செய்ய வேண்டிய இனம். அதை சரியாகவே செய்தார்கள். ஜனநாய்கத்தை மேற்குலகு திணித்தின் மூலம் அந்த நாடுகளில் தினசரி இரத்தக்களரி.
அதை விட அதே நாட்டவர்கள் நாகரீக மேற்குலகிற்கு அகதிகளாக படையெடுத்த பின்னரும் திருந்திய பாடில்லை....சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்.....கத்திக்குத்துகள் இன்னும் பல.....

குற்றம் செய்தவன் மன்னிப்பு கேட்டாலும் நம்ம இனத்தில் உள்ளவர்கள் தம் கருத்து வெற்றிக்காக வாதாடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் தான் இன்று கஞ்சி குடித்துக்கொண்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் உந்த‌ உல‌கில் நூற்றுக்கு நூறு நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் கிடையாது....................இது அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் ந‌ல்லாவே பொருந்தும்.........................

ப‌ல‌ ஆபிரிக்கா நாட்டை நாச‌ம் செய்த‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து

எல்லாம் அள‌வுக்கு அதிக‌மாய் ஆசைப் ப‌ட்டு பொய் செய்தியை ப‌ர‌ப்பி ம‌ற்ற‌ நாட்டு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை சுர‌ன்டி கொழுத்த‌ நாடுக‌ள் தான் அதிக‌ம்...............................ஈராக்கில் ச‌தாம் ம‌க்க‌ளை கொன்ற‌தை விட‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் கொன்று குவிச்ச‌ ம‌க்க‌ள் தான் அதிக‌ம்

இன்று வ‌ரை ச‌தாம் அணுகுண்டு த‌யாரிக்க‌ தொட‌ங்கின‌ ஒரு ஆதார‌த்தையும் அமெரிக்கா ச‌ர்வ‌தேச‌த்துக்கு காட்ட‌ வில்லை......................இது தான் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ளின் பெரிய‌ உருட்டு..........................................

அமெரிக்கன் வியற்நாமில் கொன்றான், ஐரோப்பியன் அதற்கு முன் அவுசிலும், அமெரிக்காவிலும் கொன்றான், எனவே  நாம் சதாமையும், கடாபியையும், இப்ப றைசியையும் மனிதாபிகள் றேஞ்சுக்கு வைத்துக் கும்பிட வேண்டுமென்ற புளித்துப் போன வாதம் பல காலமாய் பரவி வருவது தான். இரண்டு தரப்பையும் நேர்மையாகச் சுட்டிக் காட்டுவதில், கண்டிப்பதில் என்ன பிரச்சினை ஒரு மனிதனுக்கு இருக்க முடியும் என்கிறீர்கள்? இதை நான் செய்திருக்கிறேன் (நீங்கள் வாசித்தே இருக்க மாட்டீர்கள்), ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்களா?

ஆயிரக் கணக்கில் தம் மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிரிகளைக் குறை சொன்னால்  உங்களுக்கும், தாத்தாவுக்கும் ஏன்  உங்களையே குற்றம் சொன்னது போன்ற ஆத்திரம் வருகிறதென யோசிக்கிறேன்! ஒரு பதில் தான் கிடைக்கிறது😎.

  • கருத்துக்கள உறவுகள்

 மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர்களின்  போர் நுட்ப ஆய்வாளர்கள் அருஸ் உட்பட எதிர்பார்த்தேன்🤣

________________________

ஜனநாயக சுதந்திரத்தை வளர்த்து எடுக்க பாடுபடும் இரு நாடுகளான ஈரானும் ஈராக்கும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களில் பல வருடங்களாக போர் செய்தார்களாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, Justin said:

ஆயிரக் கணக்கில் தம் மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிரிகளைக் குறை சொன்னால்  உங்களுக்கும், தாத்தாவுக்கும் ஏன்  உங்களையே குற்றம் சொன்னது போன்ற ஆத்திரம் வருகிறதென யோசிக்கிறேன்! ஒரு பதில் தான் கிடைக்கிறது😎.

இஞ்சை பாரடா கூத்தை....
தன்ரை நாடு பவுத்திரமாம்
ஆனால் மற்றைவன்ரை நாடுகளிலை ஒரே குண்டு மழை பொழியலாமாம்..........👈🏽😎

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.