Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை ‍ குவிந்த தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில், நக விகாரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இராணுவம் வெசாக் பண்டிகையினை வெகு கோலகலமாகக் கொண்டாடி வருகிறது. முழுக்க முழுக்க சிங்களத்தில் பதாதைகள், சிங்கள பெளத்த பாடல்கள், வீதி ஒழுங்குகளில் இராணுவம், வீதியோரக் கடைகளில் சிங்களவர்கள் என்று முற்றாக சிங்கள பூமியாக மாறியிருந்த  தமிழர்களின் கலாசாரத் தலைநகரை முண்டியடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழினம். 

ஐந்து நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் நினைவினை கண்ணீர் மல்க அனுசரித்த தமிழினத்தின் இன்னொரு பகுதி, அவ்வாறு அழித்தவன் நடத்தும், அவனது சொந்த இன, மத நிகழ்வை கண்டுகளிக்க அவதிப்பட்டு ஓடுகிறது.

இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வாருங்கள், வந்து வையுங்கள். 

  • Sad 2
  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும். 2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா

ரஞ்சித்

கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரம

நிழலி

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்: தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம், பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரியகுளத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர்!

833729039.jpeg

ஆதவன்)

யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் தான் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாநகரசபையின் ஆட்சிக்காலத்தில். யாழ்ப்பாணம் ஆரியகுளதில் எந்தவொரு அலங்காரத்தையும் முன்னெடுக்கும் போதும் அது தொடர்பில் மாநகரசபையிடம் அனுமதி பெறப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆட்சிக் காலத்தின்போது ஆரியகுளத்தில் மதம் சார்ந்த எந்தவொரு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மாநகரசபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இராணுவத்தால் அங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது; இராணுவத்தினர் ஆரியகுளத்தை துப்புரவு செய்து தரும்படியே கேட்டனர். ஆனால், அங்கு அலங்காரம் மேற்கொள்ள அனுமதி பெறவில்லை - என்றார். (ச)

https://newuthayan.com/article/ஆரியகுளத்தில்_இராணுவத்தால்_அனுமதியின்றி_அலங்காரங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் தான் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

large.IMG_6511.jpeg.c3995e2c80c6d57a86e0

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரஞ்சித் said:

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை ‍ குவிந்த தமிழ் மக்கள்

கடந்த வருடம் இந்தநேரம் யாழ்ப்பாணத்தில் நின்றேன்.

மனைவியின் தங்கையின் மகன்(15 வயது)லைற்று பார்க்க போவோமா என்று அலுப்பு கொடுக்க 

சரி வா போவோம் என்று மோட்டார் சைக்கிளில் ஆரியகுளம் போய் சுற்றி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையம் என்று பல இடங்களையும் பார்த்தோம்.

நிறைய கூட்டமாகவே இருந்தது.ஆச்சரியமாகவே இருந்தது.

என்னைப் போலவே பலரும் வந்திருப்பார்கள் என எண்ணினேன்.

வீடுவந்து படுத்து அடுத்தநாள் ஒருபக்க கன்னம் வீங்கிவிட்டது.

அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று ஆளாளுக்கு வீடே ஒரு வைத்தியசாலையாகி எல்லோரும் டாக்ரராகிட்டாங்க.

அதிலிருந்து எழுந்துவர 15 நாட்களாகி விட்டது.

ரொம்பவும் கஸ்டப்பட்டுப் போனேன்.

இதுவேற தொற்றும் என்று என்னை ஒதுக்கியும் வைச்சுட்டாங்க.

வீட்டுக்கு யாரும் வந்தாலும் கிட்ட வராதைங்கோ தள்ளி நில்லுங்கோ வாற சனத்தையம் பயப்புடுத்தி அட்டகாசம் பண்ணிட்டாங்க.

  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள். 

இதுதான் உண்மை...இதை ஊதிப் பெருப்பிப்பவர்கள்.. ..ஊதிப் பெருப்பிப்பவர்கள் யூ டியூப்பெர்ஸ்... இவைக்கு வரும்படி முக்கியம்...இந்த விழாவையே நரி தேர்தல் பிரச்சாரத்துக்கும் பாவிக்கப்போகுது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

கடந்த வருடம் இந்தநேரம் யாழ்ப்பாணத்தில் நின்றேன்.

மனைவியின் தங்கையின் மகன்(15 வயது)லைற்று பார்க்க போவோமா என்று அலுப்பு கொடுக்க 

சரி வா போவோம் என்று மோட்டார் சைக்கிளில் ஆரியகுளம் போய் சுற்றி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையம் என்று பல இடங்களையும் பார்த்தோம்.

நிறைய கூட்டமாகவே இருந்தது.ஆச்சரியமாகவே இருந்தது.

என்னைப் போலவே பலரும் வந்திருப்பார்கள் என எண்ணினேன்.

வீடுவந்து படுத்து அடுத்தநாள் ஒருபக்க கன்னம் வீங்கிவிட்டது.

அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று ஆளாளுக்கு வீடே ஒரு வைத்தியசாலையாகி எல்லோரும் டாக்ரராகிட்டாங்க.

அதிலிருந்து எழுந்துவர 15 நாட்களாகி விட்டது.

ரொம்பவும் கஸ்டப்பட்டுப் போனேன்.

இதுவேற தொற்றும் என்று என்னை ஒதுக்கியும் வைச்சுட்டாங்க.

வீட்டுக்கு யாரும் வந்தாலும் கிட்ட வராதைங்கோ தள்ளி நில்லுங்கோ வாற சனத்தையம் பயப்புடுத்தி அட்டகாசம் பண்ணிட்டாங்க.

🤣...........

சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும்.

2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார்.

சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை  விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!).

மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான்.

இதே மக்களிடமிருந்து தான், நியாயமான  கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம்,  போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.

  • Like 12
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. 

முற்றும். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, Kapithan said:

இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. 

முற்றும். 🙏

இதில் அடையும் சந்தோசம் இருக்கிறதே ...அளப்பரியது....முற்றுப்புள்ளி...3 தடவை போடுகின்றேன்..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அலங்காரம், ஒளிவிளக்கு, உணவு எல்லாம் பார்க்க நல்லாய்த்தான் உள்ளது. 

நாம் சிறுவயதில் பார்த்தபோது உள்ளதைவிட இப்போது தொழில்நுட்பம் புகுந்து அட்டகாசமாக விளையாடுகின்றது. 

முன்பை விட இப்போது சனங்களுக்கு இராணுவம் மீது உள்ள பயம் போய்விட்டது. சகஜமாக உறவாடுகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Justin said:

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும்.

2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார்.

சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை  விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!).

மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான்.

இதே மக்களிடமிருந்து தான், நியாயமான  கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம்,  போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.

இரண்டு இனங்கள் தத்தமது கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்து சமமாக மதிப்பளித்து நடக்கும் போது நீங்கள் சொல்வது சரியாகலாம். ஆனால் இன்று இது ஒரு திசை மாற்றாக அல்லது மதத்திணிப்பாக பார்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. நன்றி. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நியாயம் said:

அலங்காரம், ஒளிவிளக்கு, உணவு எல்லாம் பார்க்க நல்லாய்த்தான் உள்ளது. 

நாம் சிறுவயதில் பார்த்தபோது உள்ளதைவிட இப்போது தொழில்நுட்பம் புகுந்து அட்டகாசமாக விளையாடுகின்றது. 

முன்பை விட இப்போது சனங்களுக்கு இராணுவம் மீது உள்ள பயம் போய்விட்டது. சகஜமாக உறவாடுகின்றார்கள். 

இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான்.

அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை.

சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, nedukkalapoovan said:

இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான்.

அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை.

சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!

உங்கள் வினாக்களுக்கு பதில் கூறுவதற்குரிய தரவுகள் என்னிடம் இல்லை.

ஆனால் நான் கேள்விப்பட்ட விடயம் என்ன என்றால் வெள்ளவத்தையிலும் தமிழ் ஆட்கள் வெசாக் தினத்தில் உணவு உட்கொண்டார்கள். வேடிக்கை பார்த்தார்கள். இவ்வாறே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும். யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்கள், வர்த்தகர்களின் பிரசன்னம் இல்லாதபடியால் இராணுவத்தினர் அலங்காரம், உணவு கொடுத்தலை செய்கின்றனர். 

நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். 

@ரஞ்சித் மேற்கண்ட உரையாடலில் எழுதிய விடயம்/எழுதிய பாணி ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று அல்ல. அவர் எழுத்துக்கள் அப்படித்தான். எல்லோரும் ஒரே மாதிரி அல்லதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

🤣...........

சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.

அட நானும் ஏதோ புத்தரின் கோபப் பார்வை என்று எண்ணிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் தான். உடனே இணக்க அரசியல் எழுதுவோர் ஓடிவாருங்கள், "அதெப்படிச் சொல்வீர்கள், கொழும்பில் கோயில் இல்லையா? ஆடித்தேர் இழுக்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே. எல்லாம் இருக்கிறது, ஆனால், தமிழினம் சிங்கள இனத்தை ஆக்கிரமித்து கொழும்பில் நிற்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, வடக்குக் கிழக்கில் எந்தவிடத்திலுமோ நடப்பது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புத்தான். இந்த ஆக்கிரமிப்பினை எம்மால் வேடிக்கை வினோதமாகத்தான் பார்க்க முடிகின்றதென்றால் பிழை ஆக்கிரமிப்பாளனில் இல்லை.

சுமந்திரனுக்கோ அங்கஜனுக்கோ யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளுக்கும், 2010 இல் சரத் பொன்சேகாவிற்கு விழுந்த வாக்குகளுக்கும் இடையே எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் தாம் வாக்களிக்கவேண்டும் என்கிற கேள்வியோ, வாக்களிப்பதால் உருவாகப்போகும் விளைவுகள் குறித்தோ யாழ்ப்பாணச் சமூகம் அக்கறைப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. தம்மை இன்றைவரை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்தின் எந்த வாக்காள‌ருக்கு நாம் வாக்களிக்கலாம், எவருக்கு வாக்களிக்காது விட்டால் நாம் விரும்பும் ஒரு சிங்கள வேட்பாளருக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கவலைப்படும் நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்துவிட்டிருப்பதும் சிங்களவர்களின் பிழையில்லை. 

தையிட்டியில் (இன்றும் நடக்கிறது) அடாத்தாக தமிழர் நிலங்களில் விகாரை கட்டும்போதும், குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்து அப்பகுதியை பெளத்த பூமியென்று நிறுவும்போதும், நாவற்குழியில் இனக்கொலையாளியொருவனால் விகாரை திறந்துவைக்கப்பட்டபோதும், திருகோணமலையில் தமிழர் தாயகப்பகுதியில் புதிதாக விகாரை கட்டி எழுப்பும்போதும் வெறுமனே ஓரிரு மக்களும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே அங்கு நின்று ஆர்ப்பரிப்பதும் யாருடைய பிழை? ஏன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஓரிருவரைத் தவிர, மொத்தத் தமிழர்களுக்கும் இது பிரச்சினையாகத் தெரியாது போனதெப்படி? 

இதை எழுதவேண்டியிருப்பதே யாழ்ப்பாணத்து தமிழர்களின் இன்றைய அரசியல்க் கையறு நிலையினைச் சுட்டிக்காட்டத்தான். தமிழர்களின் இருப்பைத் தக்கவைப்பத‌ற்கான தேவை யாழ்த்தமிழர்களுக்கு இல்லாமற்போனதெப்படி? காணி விடுவிப்புப் போராட்டம், அரசியற்கைதிகளின் விடுதலைப் போராட்டம் என்பவற்றிற்கு வந்து "குவியும்" ஆயிரமாயிரம் தமிழர்கள் இனிமேல் வராது போய்விடுவார்கள் என்கிற நியாயமான கவலை சிலருக்கு !!! நான்கைந்து பாதிக்கப்பட்ட மக்களும், இன்றுவரை தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெற்றோரையும் தவிர எத்தனை "ஆயிரம்" தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் வந்து குவிகிறார்கள்? இந்தத் தேவையற்ற எச்சரிக்கை ஏன்? நீங்கள் போராடுவதற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அம்மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மீதிப்பேர் வேடிக்கை நிகழ்வுகள் உட்பட தமது நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கச் செல்லவில்லையா? இல்லாத‌ ஒன்றை இருப்பதாகக் காட்டி எச்சரிக்கை வேறு விடுக்கிறீர்கள்?

அரசியல்மயப்படுத்தப்படாத, அல்லது அரசியலில் தேசிய நீக்கம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து இதனைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கமுடியாது. சில தினங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் வந்து இணைந்துகொண்ட தமிழ் மக்களுக்கும் நேற்று நாகவிகாரையைச் சுற்றி ஓடியோடி "வேடிக்கை" பார்த்த தமிழர்களுக்கும் இடையே வித்தியாசம் நிச்சயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். 

"தமிழ்த்தேசியம் என்று ஊரில் வாய்திறந்தால் அடிதான் விழும்" ‍ இந்த நிலை வரக் காரணம் என்ன? ஐம்பதினாயிரம் போராளிகளும், ஒன்றரை இலட்சம் மக்களும் ஏன் மடிந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தான் கூறுவது போல எமக்கேன் தேவையற்ற பிரச்சினை, அது பிரச்சினை உடையவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் அனைவரும் இருந்திருக்கலாமே? அவர்கள் தம்மை தேசியத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்வதற்கான தேவை ஒன்று இருந்ததுதானே? அது இன்றும் இருக்கிறதுதானே? பிறகேன் தேசியம் கதைத்தால் அடிவிழும் என்கிற பயம்? அப்படி நிலை ஏற்பட யார் காரணம்? புலிநீக்கம் செய்கிறோம், தேசிய நீக்கம் செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம், அடையாளம் துறக்கிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம், தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்று பேசிப்பேசியே ஒரு சமூகத்தை அரசியல் கோமா நிலைக்குக் கூட்டிச் சென்றது யார்? இதைக்கேட்டால் "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால் அடிதான் விழும் " என்கிறீர்கள். 

முதலில், யாழ்ச் சமூகம் உட்பட, மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுங்கள். உங்களின் நடுநிலை, இணக்க, தேசிய நீக்க அரசியலால் பிரிந்துபோய், நமக்கேன் தேவையில்லாத வேலை என்று இருக்கும் சமூகத்தை தூக்கியெழுப்புங்கள். ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் எதிர்கொண்ட‌ பிரச்சினைகளைக் காட்டிலும் பலமடங்கு பிரச்சினைகள் அவர்களின் முன்னால் இன்றைக்கு இருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பினை சிங்களம் கட்டுப்பாடின்றி, தட்டிக் கேட்போர் இன்றி மிகச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகிறது. 

கண்ணாடி ஏதுமின்றி குருடர்களாக, அரசியலில் அநாதைகளாக, திக்கற்றவர்களாக, செல்லும் வழிதெரியாது நடுவீதியில் நிற்பவர்களாக தமிழர்களை வெகுவிரைவில் நீங்கள் கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள். இப்படிப் போனதன் விளைவே முள்ளிவாய்க்காலுக்கும், கார்த்திகை 27 இற்கும் செல்லும் மக்களுக்கும், நாகவிகாரையில் வெசாக் பார்த்து இன்புற்று, தம்மைக் கொன்றொழித்த மிருகங்களுடன் "சகஜமாகக் கூடிக் குலவும்" இன்னொரு மக்கள் கூட்டத்திற்கும் இடையே நிரந்தரமான இடைவெளி ஒன்று உருவாவதற்குக் காரணம்  . 

Edited by ரஞ்சித்
  • Like 7
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

இரண்டு இனங்கள் தத்தமது கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்து சமமாக மதிப்பளித்து நடக்கும் போது நீங்கள் சொல்வது சரியாகலாம்

இதுதான் அடிப்படை. இது பலருக்குப் புரிவதில்லை. அறைக்குள் இருக்கும் யானையினைப் பார்க்க பலருக்கு முடிவதில்லை. கேட்டால் தீவிரக் கண்ணாடி போட்டுப் பார்க்கிறோம் என்று எங்களைக் கூறுகிறார்கள். 

சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுப்பெற்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகிடைத்து, தமிழர்கள் கெளரவமாகவும், சுயமரியாதையாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலை வரட்டும். பின்னர் இரு சகோதர இனங்களாக, இரு சமத்துவ இனங்களாக அவன் வெசாக்கை எமது தாயகத்திலும், நாம் எமது பொங்கலை அவனது தாயகத்திலும் கொண்டாடலாம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, நியாயம் said:

யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்கள், வர்த்தகர்களின் பிரசன்னம் இல்லாதபடியால் இராணுவத்தினர் அலங்காரம், உணவு கொடுத்தலை செய்கின்றனர். 

நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். 

நாவற்குழியில், திருகோணமலையில், தையிட்டியில் இதே இராணுவம் தான் விகாரையினைக் கட்டியது. நாவற்குழி விகாரைக்கு முதன்முதலான சமய அனுட்டானங்களை ஆரம்பித்து வைத்தவனே சவேந்திர சில்வாதான். இன்று, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமித்து நிற்கும் எல்லா இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலீஸ் முகாம்களுக்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடாத்தாக விகாரைகளைக் கட்டிவருவதும் அதே இராணுவம்தான். மாங்குளத்தில் கட்டப்பட்ட விகாரையினைச் சுற்றிச் சிங்களக் கிராமமும், நாவற்குழியில் சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

சாதாரண சிங்கள வியாபாரிகளும், மக்களும் இல்லாததால்த்தான் இராணுவம் பண்டிகை நடத்தியது, மென்பானம் கொடுத்தது என்று எழுதுகிறீர்களே? ஆக்கிரமிப்பை நடத்துவது இராணுவம். அதன்பின்னரே சாதாரண மக்களும், வியாபாரிகளும் கொண்டுவந்து இறக்கப்படுவார்கள். வடக்குக் கிழக்கு பூகோள இணைப்பை உடைத்தெறிய‌ மணலாற்றில் 80 களில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், அந்த இராணுவ முகாம்களைச் சுற்றி மென்மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். முகாம்களுக்கு சிங்கள மக்கள் பாதுகாப்பு, சிங்கள மக்களுக்கு முகாம்கள் பாதுகாப்பு என்று அன்று அரசு திட்டமிட்டுக் குடியேற்றம் செய்தது, இன்றும் அப்படித்தான்.

உங்களுக்குப் புரியாது. எழுதினால், என்னை மனநலம் குறைவானவன் என்று எழுதுகிறீர்கள். ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.  

Edited by ரஞ்சித்
spelling
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது நேற்று தையிட்டியில் தமிழர்களின் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவமும், பிக்கு ஒருவனும் அமைத்துவரும் விகாரையினை எதிர்த்துப் போராடும் ஒரு சில தமிழ் மக்கள். ஒரு அரசியற் கட்சியையும், சில பத்து மக்களையும் தவிர இது ஒரு பிரச்சினையாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கேட்டால், "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால், இப்போராட்டங்களுக்கு ஆள்த்திரட்டவும் சிரமப்பட வேண்டி வரும்" என்று எச்சரிக்கைகள். இந்த மக்களை நீங்கள் திரட்டத் தேவையில்லை. தாமாக தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் இன்னமும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் உண்மை. நாக விகாரையில் வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டமெங்கே, இந்த மக்கள் எங்கே?

Edited by ரஞ்சித்
spelling
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரசோதரன் said:

சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.

இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி  செய்வதற்கு  வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது.  ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை  வரவேற்றவர்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி  செய்வதற்கு  வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது.  ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை  வரவேற்றவர்கள்.

ஈழப்பிரியனுடன் ஒரு பகிடி விடுவதற்காகவே அதை எழுதியிருந்தேன்.....மற்றபடி எந்தக் கடவுளும் எந்த நோயையும் கொடுப்பதில்லை .......👍...எங்கள் ஊரில் இப்படியான சில நோய்களை அம்மாளாச்சி கொடுப்பதாக சொல்வார்கள். ஓரு வெருட்டல் தான்....😀

Edited by ரசோதரன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது. 

ஆகா நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்:

தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம்,

பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம்,

பின் போராட போன சக தமிழ் இயக்கங்களை துரோகிகள் என்றோம்,

பின் சக போராளிகளையே துரோகிகள் என்றோம்.

இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்..

ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி  செய்வதற்கு  வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது.  ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை  வரவேற்றவர்கள்.

இது எல்லாம் நாடகத்துக்காக குருமாரை வலிந்து வரவைப்பதால்..நடப்பது..

தயிட்டி விகாரைக்கு  சிங்களவன் பஸ்சில் ஏற்றி வரப்படுகிறான்..அவனுக்கு காசும் சாப்பாடும் குடிபானமும் கொடுக்கப்படுகிறது..ஆமியின் உசாரில் தமிழனை வெருட்டவும் செய்கிறான்..

ஆரியகுளத்திலோ..வெளிநாட்டுக்காசில்..வயிறுவளர்ப்போர்..உடுப்பையும் ..செல்வாக்கைய்ம் காட்ட வருகின்றனர்..இவையின் சோடனைகளை சோக்காட்ட ..காணோளி வர்ணணை யாளர் இருக்கினம்..இன்னொரு சாரார் இலவசம் சாப்பாடுமட்டும்  பெற  வருகினம்...இங்கு இன உணர்வு  அரசபலத்தால் மழுங்கடிக்கப்படுகிறது...என்ன செய்வது ..தமிழனின் விதி..

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.