Jump to content

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, Kadancha said:

 

இந்த ஆய்வு செய்யப்பட முடியாது, சந்ததி சந்ததியாக ஆய்வு நடக்க வேண்டும்.


அனால், ஒரு சந்ததியில் கூட, ஓர்பாலின பெற்றோ  வளரும் பிள்ளை ஓர்பாலினத்தை  தேர்ந்து  எடுக்கும் சாத்தியக்கூறுகள், நேர்பாலினத்தில வளரும் பிள்ளையோடு ஒப்பிடும்  போது  கூடவா, குறையவோ  என்பதை பற்றி ஆய்வு நடக்காது.


அப்படி நடந்தலாலும், அது  சந்ததியாக ஆய்வு இருக்கும் போதே அதன் நம்பகதத்தன்மை பற்றி கதைக்கலாம்.


1. திருப்பியும் கேட் கிறேன், சந்ததி பரிசோதனைக்கு மற்றவர்கள் ஏன் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

2. அடிப்படையில் ஆண் விந்துவாலும், பெண் முட்டையிலும் உருவாக்கம் கருவின் சிசுவுக்கு. நேர்பாலினம் சமவாய்ப்பை , இடத்தை, சூழலை, மற்றும் எந்த வாழ்கை அம்சத்திலும் சமவாய்ப்பை  அளிக்கிறது  பாலினத் தெரிவுக்கு.

இது பிள்ளையின் அடிப்படை உரிமை என்றதை நிராகரித்து, பிள்ளைக்கு பெற்றோரின் பாலினத்தனமையை தீர்மானிப்பது, சிறுபான்மையின்  பாலியல் தேவைக்காக, அதுவும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் பெறாத பிள்ளைக்கு.

நேர்பாலினத்தில் வளரும் பிள்ளை மாறும் என்றால், அது ஊக்குவிக்கப்படாத, சார்பாக சீவப்படாத,  பிள்ளையின் உண்மையான தெரிவு.


இதில் வேறு பல வருங்கால விளைவுகள் சொல்லப்பட  முடியாது.  ஆய்வும் செய்யப்பட முடியாது.


இதில் வேறு பல வருங்கால விளைவுகள் சொல்லப்பட  முடியாது.  ஆய்வும் செய்யப்பட முடியாது.

ஏனெனில் பல பிள்ளைகள்  வளரும் போடு குறைபாடுகள் பற்றி பி பிரக்ஞை இல்லை, அனால் வெளியியில், வேறு நண்பர்களோ, தெரிந்தவர்களோ என்று பழகு பொது தான் அவர்களின் குறைபாடுகள், துர்பிரயோகத்துக்கு உட்பட்டதை பற்றி உணர்கிறார்கள்.

பிள்ளை வளர்ந்து, தன வளர்ந்து துர்பிரோயோக (ஒரு பாலின பெடோரோடம் .ளர்ந்தது) முறை என்றால் பிள்ளைக்கு பிறப்பிலேயே அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று ஆகி விடும். 

இது ஒரு உதாரணம் மாத்திரமே.


நீங்கள் சொல்லுவது மிகச்சிறிய கால இடைவெளி ஆய்வை வைத்து , அந்த  காலம் இல்லை என்றே சொல்லலாம்  (மனித விருத்தி வரலாற்று காலத்துடன் ஒப்பிடும் போது ), ஒரு துவாரப்பார்வை ஊடக.

நான் சொல்லுவது, பல பரந்துபட்ட முழு மனித வாழ்க்கை, கரிசனைகள்,  போன்றவற்றை உள்ளடக்கி.

 

 

 

விளங்க முடியாமல் குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள்.

(எனக்கு விளங்கிய வரையில்) உங்கள் கருத்துகளுக்கு அடிப்படையாக இருப்பவை இரண்டு விடயங்கள்:

1. ஆண் - பெண் குடும்பம் தான் பூரண குடும்பம் என்ற உங்கள் "நம்பிக்கை".

2. ஓரினச் சேர்க்கையாளர் மீதான அச்சம் - homophobia

இது இரண்டையும் தவிர, எந்த ஆதாரங்களையோ, முன்னுதாரணங்களையோ, மேற்கத்தைய சமூகங்களில் , நாடுகளில் இருக்கும் உதாரணங்களையோ அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும் இலக்கு உங்களிடம் இல்லை. இந்த மனநிலை இங்கே மட்டுமல்ல, முன்னரும் சில மானிடவியல், வரலாறு தொடர்பான திரிகளில் நீங்கள் வெளிக்காட்டியது தான். எனவே, ஆச்சரியமில்லை.

Edited by Justin
Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

kandiah Thillaivinayagalingam

"ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

ரஞ்சித்

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

Kavi arunasalam

கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2024 at 22:36, ரஞ்சித் said:

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது.

இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும்.

ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன?

 

மிகவும் தெளிவான கருத்து.

ஓரின இணைகளில் மட்டுமல்ல, எதிர்ப்பால் இணைகளிடையேயும் கூட பாலியல் உறவு என்பது ஒரு மிகச்சிறு வீதத்தில் தான் அவர்களது பிணைப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. அதுவும் பிள்ளைகள், குடும்பம் என்று உண்மையான பயணம் (அதுவும் கஷ்டமான பகுதி) சூடு பிடிக்கும் போது, செக்ஸ் என்பதை நினைக்காமலே பிணைப்பிலும், பாசத்திலும் இருக்கும் நிலை இருக்கிறது.

ஆனால், "ஓரினச் சேர்க்கையாளர்" என்றவுடனேயே, பல எதிர்ப்பாளர்களின் மனதில் அவர்கள் எப்படி உடலுறவு செய்வர் என்ற கேள்வியும், அது பற்றிய நக்கல்களும் தான் முதல் துலங்கலாக இருக்கின்றன. இது பார்ப்பவன் கண்ணின் குறையேயன்றி, பார்க்கப் படுபவனின் பிரச்சினை அல்ல😂!

வந்திறங்கிய நாள் முதல், அமெரிக்காவின் நீல மாநிலங்களில் தொடர்ந்து வாழ்ந்த அனுபவத்தில், இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் கொண்ட குடும்பங்கள் சிலவற்றைக் கண்டு பழகிய அனுபவம் இருக்கிறது. எனக்குப் புரிந்த வரை, இவர்கள் சாதாரணமான மனிதர்கள். சில விடயங்களில், சாதாரணத்தைத் தாண்டி, வேறு காரணங்களுக்காக ஒதுக்கப் படும் மக்களின் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்கள்.

இவர்களை நாம் ஒதுக்கி வைக்க ஒத்துழைத்தால், குடியேறிகளின் வம்சாவழியினராக வாழப் போகும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரு தரப்பைப் பகைத்து எமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் முட்டாள்களாக இருப்போம்!   

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2024 at 17:59, ரசோதரன் said:

கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம்.

ஆனுமான்  சாயிபாபாவுக்குமே  கோவில் கட்டுகின்றார்களே என்று பார்த்தால் தங்களுடைய அம்மாமார்களக்கும் நடிகைகளுக்குமே கோவில் கட்டுகின்றார்கள். மற்றும் பெண்ணுக்கு வாழைமரத்தோடும்  மழைவர வேண்டும் என்று தவளையோடும் அந்த புனித திருமணம் நடத்தபட்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

ஆனுமான்  சாயிபாபாவுக்குமே  கோவில் கட்டுகின்றார்களே என்று பார்த்தால் தங்களுடைய அம்மாமார்களக்கும் நடிகைகளுக்குமே கோவில் கட்டுகின்றார்கள். மற்றும் பெண்ணுக்கு வாழைமரத்தோடும்  மழைவர வேண்டும் என்று தவளையோடும் அந்த புனித திருமணம் நடத்தபட்டிருக்கின்றது.

🤣.......

குஷ்புவின் 'கோவில்' என்று தான் இன்றும் சொல்கின்றனர்.......சமீபத்தில் கூட செய்திகளில் அடிபட்டது..... 'அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பிச்சைக் காசு........' என்று குஷ்பு தெய்வம் சொன்ன விவகாரத்தில் என்று நினைக்கின்றேன்......

தவளைக்கும் தவளைக்கும் நடந்தாலும் அது திருமணமே...

கழுதைக்கும் கழுதைக்கும் நடந்தாலும் அது கல்யாணமே......

இல்லாவிட்டால்.......மழை பெய்யாது, வானம் பொய்க்கும்....அந்த அந்த ஊர் மக்களையே கேட்டும் பார்க்கலாம்............😜.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ஆனால், "ஓரினச் சேர்க்கையாளர்" என்றவுடனேயே, பல எதிர்ப்பாளர்களின் மனதில் அவர்கள் எப்படி உடலுறவு செய்வர் என்ற கேள்வியும், அது பற்றிய நக்கல்களும் தான் முதல் துலங்கலாக இருக்கின்றன. இது பார்ப்பவன் கண்ணின் குறையேயன்றி, பார்க்கப் படுபவனின் பிரச்சினை அல்ல😂!

உங்கள் கருத்து எழுத்துக்களிலிருந்து  அறிவது யாதுவெனில்  ஒரினச் சேர்க்கையை. எதிப்பவர்கள்.  ....ஒரினச் சேர்க்கையளார்களையும். எதிர்கிறார்கள். என்பது தெளிவகிறது   ஏன் அப்படி கருத வேண்டும்   இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் இல்லையா?? மற்றும்   ஒரு ஒரினச் சேர்க்கை தம்பதியினர்  20 வயதில்  இணைந்து    80 வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்றால்    அவர்களின் பிற்கால.வாழ்க்கை   50,.80  வயது வரை எப்படி இருக்கும்??   சொந்த குழந்தை என்பது  அது நான் தான்   தந்து எடுக்கும் குழந்தை அப்படியல்ல.  நிறைய வித்தியாசம் உண்டு”   அந்த பிள்ளைகள் 20 வயதில்  எனது  பெற்றோர் நீங்கள் இல்லை என்று சொன்னது உடன்  நங்களுடைய சொந்த தாய் தந்தை தேடிய நிறைய சம்பவங்களை  நான் அறிந்து உள்ளேன்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

ஒரு ஒரினச் சேர்க்கை தம்பதியினர்  20 வயதில்  இணைந்து    80 வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்றால்    அவர்களின் பிற்கால.வாழ்க்கை   50,.80  வயது வரை எப்படி இருக்கும்??   சொந்த குழந்தை என்பது  அது நான் தான்   தந்து எடுக்கும் குழந்தை அப்படியல்ல.  நிறைய வித்தியாசம் உண்டு”   அந்த பிள்ளைகள் 20 வயதில்  எனது  பெற்றோர் நீங்கள் இல்லை என்று சொன்னது உடன்  நங்களுடைய சொந்த தாய் தந்தை தேடிய நிறைய சம்பவங்களை  நான் அறிந்து உள்ளேன்   

புனித திருமணம் என்று சொல்லபடுகின்ற  மதகுரு வந்து   கழுத்தில் செயின் கட்டி தமிழ் ஆண் v பெண் செய்த திருமணத்திலேயே அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் 20  வயதில் அவர்களை வேண்டாம் என்று விட்டு தனியா சென்று வசிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசர் சரியாகத்தான் கூறியுள்ளார்  என்பது என் நம்பிக்கை. 

Link to comment
Share on other sites

49 minutes ago, Kandiah57 said:

மற்றும்   ஒரு ஒரினச் சேர்க்கை தம்பதியினர்  20 வயதில்  இணைந்து    80 வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்றால்    அவர்களின் பிற்கால.வாழ்க்கை   50,.80  வயது வரை எப்படி இருக்கும்??

உண்மையில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்றால் சந்தோசமாக வாழ்வார்கள். இது சாதாராண ஆண்- பெண் சோடிகளுக்கும் பொருந்தும்.

 

52 minutes ago, Kandiah57 said:

சொந்த குழந்தை என்பது  அது நான் தான்   தந்து எடுக்கும் குழந்தை அப்படியல்ல.  நிறைய வித்தியாசம் உண்டு”

என்ன வித்தியாசமெனில் தத்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவின் இறப்புக்கு ரொரன்டோவில் கூடிய சனத்தொகை தான் இன்றும் அதி கூடிய சனத்தொகையாக உள்ளது. இதுவும் ஒரு வித்தியாச்ம் தான்.

இவர்களுக்கும் ஓரின சேர்க்கைக்கும் சம்பந்தமே இல்லை இல்லை இல்லை.

56 minutes ago, Kandiah57 said:

அந்த பிள்ளைகள் 20 வயதில்  எனது  பெற்றோர் நீங்கள் இல்லை என்று சொன்னது உடன்  நங்களுடைய சொந்த தாய் தந்தை தேடிய நிறைய சம்பவங்களை  நான் அறிந்து உள்ளேன்   

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

என்ன வித்தியாசமெனில் தத்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவின் இறப்புக்கு ரொரன்டோவில் கூடிய

இவரை தத்து எடுத்தவர்கள். ஒரினச். சேர்க்கையளார்களா. ??   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

என்ன வித்தியாசமெனில் தத்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவின் இறப்புக்கு ரொரன்டோவில் கூடிய சனத்தொகை தான் இன்றும் அதி கூடிய சனத்தொகையாக உள்ளது. இதுவும் ஒரு வித்தியாச்ம்

ஆமாம் எனக்கு தெரியும்,..அது அவர் சிறந்த தலைவர்  போராடி 40 ஆண்டுகள் சிறைவாசம். அனுபவித்தார. ........நாட்டுக்கு விடுதலையை பெற்று தந்தார்  .....இப்படியான காரணங்களுக்குக்கா   மாறாக  தத்து எடுத்து வளர்க்கப்பட்டார். என்பதற்காக அல்ல   அவர் ஒரினச் சேர்க்கையளாரில்லை   அவர் விரும்பியது  ஒர் ஆபிரிக்கா வாழ் இந்தியா  பெண்ணை  திருமணம் செய்தது ஆபிரிக்கா பெண்ணை,..அவரது மனைவி   அவருடன் உடலுறவு கொள்ள விரும்பாத போது,அல்லது அழைக்காதபடியால்.   இன்னொரு ஆபிரிக்கா நாட்டின் தலைவரின் மனைவியுடன் காதல் மற்றும் தொடர்பில் இருந்தார்.  ஒரினச் சேர்க்கையை.  நடவில்லை. 

4 hours ago, Kapithan said:

பாப்பரசர் சரியாகத்தான் கூறியுள்ளார்  என்பது என் நம்பிக்கை. 

அவர் ஒரினச். சேர்க்கையை மட்டும் எதிர்த்தால். சரியாகும் ....அது சமுதாயத்தின் நன்மை கருதியதால் கூறி இருக்கலாம் ஆனால்   ஒரினச். சேர்க்கையளார்களை   எப்படி எதிர்க்கலாம்.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kandiah57 said:

அவர் ஒரினச். சேர்க்கையை மட்டும் எதிர்த்தால். சரியாகும்

நீங்க வேற..

அவருக்கு அவரது வீட்டில் இது பயங்கர குடைச்சல். அந்த கோபத்தை தான் இப்படி காட்டுகிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன தான் அறிவு பூர்வமாக விவாதித்தாலும்...
நாங்கள் ஊரில் ,சும்மா கே.கே....சாப்பை..என நகைச்சுவையாக அதன் தீவிரதன்மை புரியாமல் பேசிய விடயங்கள் ...இன்று புலம்பெயர்ந்த பிரதேசத்தில் எமது அடுத்த தலைமுறையினரின் வாசற்படியில் வந்து நிற்கின்றது..
ஒரினசேர்க்கையாளர்களினால் பாதிக்கப்பட்ட சாதாரண பெண்கள் அதிகம்...
ஒரு மருத்துவர் (ஒரினசேர்க்கையாளர்)அதை பெண்ணிடம் கூறாமல் தனது தாயின் வேண்டுகோளுக்காக ஒர் சாதாரணபெண்னை திருமணம் முடித்த பின்பு ...அந்த பெண்னுடன் வாழ்க்கை நடத்தாமல் விலகி சென்றுள்ளார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thailand.jpg?resize=731,375&ssl=1

தன்பாலினத் திருமணத்துக்குத் தாய்லாந்து அரசு அனுமதி!

ன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை  தாய்லாந்து அரசு  நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம்  தன்பாலின திருமணத்துக்கு  அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது.

இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து  தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1388687

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2024 at 01:31, kandiah Thillaivinayagalingam said:

 

இன்று இந்த தன்பாலின தம்பதிகளுக்கு திருமண உடன்படிக்கை அவசியம் என நம்புகிறேன் 

ஏனெனில் 

"அவர்களது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான பி்ரச்சனைகள் வராது இருக்க". 

நன்றி அன்பு P.S.பிரபா


முதலாவது, எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் விபரமாக விளங்கப்படுத்தி உள்ளேன், 

ஆனால் அதை "திருமணம்" என்ற பெயரில் அழைக்க முடியாது, வேண்டும் என்றால் வேறு ஒரு பெயரில் அழைக்கலாம் என்பதே என் வாதம், அதற்கான முழு காரணங்களும் வரிசைப்படுத்தி தந்துள்ளேன்.

இரண்டாவது, 

என்றாலும்  "அவர்களது குழந்தைகளுக்கு" ????

இதை விளங்கப் படுத்துகிறீர்களா ???

 

வணக்கம்,  

உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. 

ஒரு திருமண உடன்படிக்கையினால் வரும் சட்டரீதியான அனுகூலங்களையும் பிற அனுகூலங்களையும் இந்த same sex couples அடையும் வேண்டும் என்றால் அதற்கு அவர்களது திருமணத்தையும் சட்டரீதியாக்கவேண்டும், [இதற்குள் குழந்தைகளை தத்து எடுப்பது தொடங்கி surogacy, egg/sperm donors மூலம் பெறுவது ( இந்த முறைகளை தனியே same sex couples மட்டும் நாடுவதில்லை என்பதையும் நடைமுறையில் பார்த்து வருகிறோம்) முதல் எல்லா வகையான அனுகூலங்களும் வரும்]. 

இந்த விடயம் இலகுவில் முடிவுக்கு வரும் விடயமோ ஒரே நாளில் மாறும் விடயமோ இல்லை. இங்கே பலரும் தங்களது எண்ணங்களை எழுதியிருந்தார்கள். ஆகையால் இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை என்றாலும் கூட எனது கருத்திற்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள். என்னைப் பொறுத்த வரை சட்டரீதியாக திருமணம் செய்து வாழும் எனது பெற்றோரின் மூலம் என்ன நன்மைகளை சட்டரீதியாகவும் குடும்ப வாழ்க்கை என்றதற்குள் நான் பெற்றேனோ அதனை இந்த same sex couplesன் பிள்ளைகளும் பெறவேண்டும்.  De facto relationship கூட எல்லா உரிமைகளும் அனுகூலங்களும் இல்லை. ஆகவே திருமண உடன்படிக்கையை தவிர வேறு முறைகள் சரிவரமாட்டாது. 

நன்றி

வணக்கம்

On 16/6/2024 at 05:19, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களில் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் குறைவு என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியாவில் தன்பாலினத்தவர்களை திருமணத்தை அனுமதித்த பின்பு தான் வெள்ள பெருக்கு அழிவுகள் கொரோனா அழிவு எல்லாம் வந்தது ஆண்டவர் கொடுத்த தண்டணை என்று தமிழ் கிறிஸ்தவர்கள் சொன்னதை நீங்கள் காணவில்லை என்று நினைக்கிறேன்.

அவுஸ்ரேலியாவில் 2017ல்தான் தனபாலினத்தவர்களின் திருமணத்தை சட்டரீதியானதாக மாற்றினர்கள் அப்படியென்றால் அதற்கு முன் நடந்த காட்டுத்தீ தொடங்கி வெள்ளப்பெருக்குகள் வரைக்கும் காரணம் இந்த தமிழ் கிறிஸ்தவர்களாமா? 

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களத்தில்  நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நான் தனிப்பட்ட முறையில் கீழே உள்ள முடிவுக்கு வருகிறேன்.
 
ஆனால் 'திருமணம்' என்ற வார்த்தையை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உணர்கிறேன், இல்லையெனில் மனித சமூகத்தின் சமூக அமைப்பும் அதன் அற்புதமான கலாச்சாரமும் எதிர்காலத்தில் வெடிக்கலாம் ??  குறிப்பாக சமூக கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் என்று எண்ணுகிறேன் 
 
எனினும் சமூகங்கள் வரலாற்று ரீதியாக சமூக விதிமுறைகள் மற்றும் வரையறைகளில் மாற்றங்களுக்கு ஏற்றதாக காலப்போக்கில், தன்னை சரிப்படுத்தி, ஆரம்பத்தில் சீர்குலைப்பதாகத் தோன்றுவது சாதாரணமாகி ஏற்றுக்கொள்ளப்படுவதும் உண்டு என்பதையும் நம்புகிறேன் 
 
 
ஒரே பாலின இணைப்பு அதிகாரப்பூர்வமாக "திருமணம்" என்று அழைக்கப்பட வேண்டுமா என்பது வரலாற்று, சமூக, மொழியியல் மற்றும் நெறிமுறை பரிமாணங்களை [historical, social, linguistic, and ethical dimensions] உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது. 
 
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் சில மதிப்புமிக்க காரணங்கள் என் மனதில் தோன்றின. அவை சரியா பிழையா என்பதை நீங்கள் எடுத்துக் கூறலாம் 
 
ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வதற்கான சில காரணங்களை கீழே தருகிறேன்
 
 
சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாதது / Equality and Non-Discrimination:
 
சட்ட அங்கீகாரம் / Legal Recognition
 
ஒரே பாலினத் சங்கங்களை அல்லது இணைந்து வாழ்வதை   "திருமணம்" என்று அழைப்பது, இந்த ஜோடிகளுக்கு பரம்பரை, வரிவிதிப்பு மற்றும் உடல்நலப் பாதுகாப்பு நலன்கள் [inheritance, taxation, and healthcare benefits] உட்பட, பாலினத் தம்பதிகளைப் போலவே சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் உரிமைகளை வழங்குகிறது இன்றைய நடை முறையில்
 
[என்றாலும் சட்டங்களை அதற்குத் தக்கதாக, ஒரு பாலின கூட்டுக்கும் அவை செல்லுபடியாகும் என்று இலகுவாக மாற்றலாம்?? என்பதும் கவனிக்கத் தக்கது!!]  
 
சமூக ஏற்றுக்கொள்ளல் / Social Acceptance: இது, மேலே கூறியவை,  சமூக ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிக்கிறது மற்றும் ஒரே பாலின உறவுகளின் செல்லுபடியாகும் தன்மையை பாலின உறவுகளுடன் சமமான நிலையில் அங்கீகரிப்பதன் மூலம் களங்கத்தை குறைக்கிறது.
 
மொழியின் பரிணாமம்:
 
மாறும் இயல்பு: சமூக மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மொழி காலப்போக்கில் உருவாகிறது. "திருமணம்" போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தற்கால புரிதல்கள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற கருதுகோள் 
 
முன்னோடிகள்: திருமணத்தின் வரையறை காலப்போக்கில் பல்வேறு வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியதாக மாறி உள்ளது  உதாரணமாக, பலதார மணம் என்பது பல கலாச்சாரங்களில் பொதுவானதாக இருந்தது, ஆனால் இப்போது குறைவாகவே உள்ளது.
 
வரலாற்று சூழல்:
 
பல்வேறு நடைமுறைகள்: வரலாறு முழுவதும், பல்வேறு வகையான இணைவுகள் மற்றும் இருவர் ஒன்றாக வாழ்தல் உள்ளன. உதாரணமாக, சில பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்கள் ஒரே பாலின இணைவை  அங்கீகரித்தன, இருப்பினும் அவர்கள் "திருமணம்" என்று என்றும் அழைக்கவில்லை.
 
விரிவுபடுத்தும் வரையறைகள்: பல பாலினச் சூழல்களுக்குள்ளும் கூட, திருமணத்தின் கருத்து காலகட்டங்களில் கணிசமாக வேறுபட்டுள்ளது 
 
 
ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை நிராகரிப்பதற்கான காரணங்கள் கீழே தருகிறேன்  
 
 
 
பாரம்பரிய வரையறைகள்:
 
வரலாற்று நிலைத்தன்மை / Historical Consistency: "திருமணம்" என்ற சொல் வரலாற்று ரீதியாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சங்கத்தை குறிக்கிறது, சுமேரிய நாகரிகத்திலிருந்து தமிழ் சங்க காலம் மற்றும் பல கலாச்சாரங்கள் வரை அப்படியே பார்க்கப்படுகிறது.
 
கலாச்சார முக்கியத்துவம்: பல கலாச்சாரங்களில், திருமணம் என்பது மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது இரு பாலின சேர்க்கை, அதாவது ஆண் & பெண்  என்று கண்டிப்பாக வரையறுக்கிறது.
 
மாற்று சொற்கள் / Alternative Terminology:
 
சிவில் யூனியன்கள் / Civil Unions: ஒரே பாலின தம்பதிகள் தங்கள் கூட்டு வாழ்வை  "சிவில் யூனியன்கள்" அல்லது "வீட்டு கூட்டு வாழ்வு / "domestic partnerships," போன்ற வேறுபட்ட வரையறைவுகளின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என்று பலர்  வாதிடுகின்றனர், இதனால் திருமணத்தின் பாரம்பரிய கருத்தை மாற்றாமல் ஆனால், ஒரே மாதிரியான சட்ட உரிமைகளை வழங்க முடியும்  
 
பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் / Respecting Diversity: வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துவது உறவுகளின் பன்முகத்தன்மையை மதிப்பதுடன் அதன் இயல்பையும் தானாகவே வரையறுத்து, விளக்கமான கருத்தை துல்லியமாக கொடுக்கிறது.  
 
 
சமூக பதற்றத்திற்கான சாத்தியம்:
 
திருமணத்தின் வரையறையை மாற்றுவது சமூக மற்றும் பாரம்பரிய கருத்துக்களை இலகுவாக சிதைத்து, வருங்கால சந்ததிக்கு எப்படியும் வாழலாம் என்ற ஒரு கட்டுப்பாடற்ற நிலையை அல்லது இதை புது நடப்பாக , ஃபேஷன்னாக ஊக்கிவிக்கலாம் ??
 
சமரச தீர்வுகள்: எனவே "சிவில் யூனியன்" போன்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், இது, இந்த கூட்டு என்ன என்பதையும், அதன் தாற்பரியங்களையும் இலகுவாக எடுத்துரைக்க முடியும் 
 
இறுதியாக,
 
உங்கள் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் . அது உங்களைப் பொறுத்தது 
 
நன்றி 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
Edited by kandiah Thillaivinayagalingam
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச் சேர்க்கையில் எங்கே "திரு" வருகிறது? 

"திரு" வே இல்லாதபோது "திருமணம்" மட்டும் எங்கேயிருந்து வரும்? 

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

ஓரினச் சேர்க்கையில் எங்கே "திரு" வருகிறது? 

"திரு" வே இல்லாதபோது "திருமணம்" மட்டும் எங்கேயிருந்து வரும்? 

 

இருபாலினச். சேர்க்கையில் திரு வருகிறதா  ??? இல்லை இருந்தாலும்  திருமணம் என்கிறார்கள்  ...

குறிப்பு,....ஆண்+ஆண் அல்லது பெண் + பெண் அல்லது ஆண்+ பெண்     இவ்வாறு இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்தால்  திருமணம் என  வரையறுக்கப்படும்.    இது புதிய விதி    🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2024 at 18:25, குமாரசாமி said:

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

இந்த கருத்து பல நாட்களுக்கு முன் என்னால் எழுதப்பட்டது. அதன் மூலம் வந்த பல பின்னோட்டங்களின் பின் குமாரசாமி ஆகிய நான் என் கருத்தை மாற்றினேன். நான் எழுதியது சரியில்லை தவறுதான் எனவும் எழுதியிருந்தேன்.

அதன் பின்னரும் சசிவர்ணம் எனும் உறவு எனக்கு சிவப்பு புள்ளி குத்தியுளார். 

@Sasi_varnam  அவர்கள் இனிமேலாவது ஒரு திரியில் உள்ள முழு கருத்துக்களையும் வாசித்து விட்டு தனது திறமையை காட்டுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருப்பினும்  ஒரின சேர்க்கையாளகள் தங்களுக்கேற்ப  வாழட்டும். இவர்கள் இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி வாழும் சமூகத்துடன் தம்மையும் இணைத்து வாழும் புதிய சட்டங்களை கோரக்கூடாது. நாம் அவர்களை ஒதுக்கவில்லை. ஆனால் அவர்கள் தனியாக வாழட்டும். அத்துடன் ஓரினவாதிகள் அவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையை முற்று முழுதாக தடை செய்ய வேண்டும்.

இயற்கையால் படைக்கப்பட்டது தான் ஆண் பெண் இனம். அது இனவிருத்தியை முக்கியமாக கொண்டது. ஒருவருக்கு தன் பால் இன உணர்ச்சி இருந்தால் அதை அதை தணிக்க ஒன்று சேருங்கள்.தணியுங்கள். முடிந்தது கதை.

அதற்காக பிள்ளை ஆசை பிள்ளைகளை தத்தெடுக்கும் ஆசை எதனால் எங்கிருந்து வருகின்றது? ஒரு பாலின சேர்க்கையால் பிள்ளை பெற்றெடுக்க முடியவில்லை எனில் ஒரின சேர்க்கையும் இயற்கைக்கும் மாறானதே.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இயற்கையால் படைக்கப்பட்டது தான் ஆண் பெண் இனம். அது இனவிருத்தியை முக்கியமாக கொண்டது.

உண்மை  முற்றிலும் உண்மை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரின சேர்க்கையாளர்கள் செய்யும் கூத்துகள் தான் இவை. நாளைய கால மாற்றங்கள் மூளை வளர்ச்சிகள் வரும் போது ஆடு,மாடு,நாய் பூனைகளுடனும் பாலியல் தொடர்பில் இருப்பதை சட்ட பூர்வமாக்க போராட்டம் நடத்துவர்.

ஏனெனில் அன்று ஓரின பாலியல் இலைகாய்மறையாக இருந்து இன்று சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதோ அதே போல் விலங்குகளுடனான பாலியலும் அங்கீகரிக்கப்படும் காலமும் வரும்.

காலக்காட்டாறு எனும் விகுதியில் இதுவும் தகும்.

GQag-UI7-W0-AEr-SBh.jpg

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2024 at 12:25, குமாரசாமி said:

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

கு.சா அண்ணா,  நான் பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை வாசிப்பவன். அந்த வகையில் உங்கள் சோப்பிளங்கித்தனமான கருத்துக்கு அதை வாசித்த கணத்தில் ஒரு அதிருப்திப்  புள்ளியை வழங்கி இருந்தேன்.
பிறகு உங்கள் புரிதலை மாற்றி, கருத்தில் இருந்த தவறை உணர்ந்தது சிறப்பு. 
-1 புள்ளியை நானும் வாபஸ் வாங்கி இருக்கிறேன். இன்னும் இந்த திரியில் நிறைய வாசிக்க இருக்கிறது, நேரம் இல்லை. ஆனாலும் பாப்பரசர் எண்டால் என்ன அவரின் கொப்பர் பெய்ப் பரசர் எண்டால் என்ன தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைத்தால் வளர்ச்சியடைந்த சமூகங்களில் இருந்து அடி பலமாய் தான் இருக்கும்.

"Trans rights are Human Rights"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓரின சேர்க்கை நாடகத்தில் யார் அப்பாவாக இருக்க வேண்டும் .யார் அம்மாவாக இருக்க வேண்டும். அதற்குரிய குணாதிசயங்கள் வேண்டும் அல்லவா?

ஏனென்றால்  ஓரின சேர்க்கையாளர்களில் ஒருவர் வன்மையாகவும் மற்றவர் மென்மையாகவும் இருப்பர்.

Link to comment
Share on other sites

பல நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பெண்களுக்கு வாக்குரிமையை அனுமதிப்பதா இல்லையா என்று இழுபறி நடந்துள்ளது. பின்னர் தயங்கித் தயங்கி ஒவ்வொரு நாடாக பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். 

இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை அழிப்போம் ஒழிப்போம் என்று முழக்கமிடும் தீவிரவாதிகள் போல் அன்று பெண்களுக்கு ஏன் வாக்குரிமை தர வேண்டும் என்று எதிர்த்தவர்கள் இருந்திருப்பார்கள்.

ஒருபாலின உறவை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் உடலுறவை மையப்படுத்தியே எழுதியதைக் காண முடிகிறது. மிகவும் கண்ணியமான மென்மையான உணர்வுள்ள பல ஒருபாலினத்தவர்களுடன் பல வருடங்களாகப் பழகியுள்ளேன். சிலர் பார்வைக்குச் சாதாரண ஆண் பெண்களாகவே தெரியும். இவர்களுடனான உரையாடல்களில் என்றும் ஆபாசமோ பாலுணர்வோ தென்பட்டதில்லை. 

ஐரோப்பாவில் பிறந்து படித்து வளர்ந்த உங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி உரையாடிப் பாருங்கள், அவர்கள் தெளிவாக உள்ளனர். காலம் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது வரலாறு. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குரிமை மனித இன உரிமை சம்பந்தப்பட்டது.ஓரினச்சேர்க்கை மனிதகுல அழிவு சம்பந்தப்பட்டது இரண்டையும் கலந்து சாம்பார் ஆக்குவதில் நம்மவர்கள் வல்லவர்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.