Jump to content

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

Oruvan

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதான விடயத்தை அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரொலோ, புளொட் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன. தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் பின்புலத்திலேயே அனந்தி சசிதரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

என்றாலும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்திவந்தது

பேராசிரியர் ஒருவரை களமிறக்கும் அடிப்படையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பேச்சுகள் தொடரும் சூழலில் சிவில் அமைப்புகளுக்கு தெரியாது அனந்தி சசிதரன், தாம் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக எந்த அறிவித்துள்ளார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன..

அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை.

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரிய வரலாற்றுத் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

எழுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசம் ஒரு தலைப் பட்சமாகத் தீர்மானித்துவந்துள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசு ஈழத்தமிழர் தேசத்தையும் அதன் தாயகத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

ஆக்கிரமித்துள்ள சிங்கள தேசம் நிர்ணயிக்கும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து விளையாடி ஆக்கிரமிக்கப்பட்ட தேசம் தனக்குரிய அரசியற் தீர்வைக் கண்டுவிடச் சற்றும் இடமளிக்காத வகையில் இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையும் மத ரீதியான முதன்மைத்துவமும் அரசியலமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தல் அரசியலில், அதுவும் குறிப்பாக பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏன் தமிழர்களான நாமும் பங்கேற்கிறோம் என்றால், அதற்கு ஒரு காரணம் உள்ளது.

ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்தின் பிரதேச வாரியான பிரதிநிதித்துவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு எமது தேசிய இனத்தின் அரசியல் வேணவா மறுதலிக்கப்படுவதற்கும் மலினப்படுத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தல் அரசியல் ஓர் அரசியல் வெளியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவும் எமது மக்களிற் பெரும்பான்மையினரின் ஜனநாயக ஆணை இல்லாதோர் எமது பிரதிநிதிகள் போல வலம்வந்து எமது தேசிய வேணவாவைத் திரிபு படுத்தாமல் இருப்பதற்காகவும் எமது பிரதேச ரீதியான தேர்தல் அரசியலை நாம் ஓர் தடுப்பு உத்தியாகப் பயன்படுத்துகிறோமே அல்லாது, தேர்தல் அரசியலை மூலோபாய வழிவகையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்தவில்லை. இத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதன் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை நாம் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதாக எவரும் ஒரு போதும் பொருள்கோடல் செய்ய இயலாது.

அதுமட்டுமன்றி, அவ்வப்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வளங்களை ஏதேனும் ஒரு வகையில் ஆற்றுப்படுத்த இயலுமா என்ற முயற்சியிலும் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துகிறோம். சர்வதேசத் தளத்தை நோக்கி எமது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு இந்தப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தித்துப் பயன்படுத்துகிறோம்.

இவ்வகையில் மாகாண சபையின் அங்கீகாரத்தோடு ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தேசத்தின் கருத்தியலை எண்ணற்ற வழிகளில் முன்வைத்து வந்துள்ளேன்.

பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் மாகாண சபைப் பிரதிநிதித்துவமும் எவ்வாறு பொருத்தமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய மிகச் சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளே செயற்பட்டுள்ளனர். காத்திரமான சில நகர்வுகளை மாத்திரமே மேற்கொள்ள முடிந்துள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிறைவேற்றிய இன அழிப்பு நீதிக்கான தீர்மானம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

தேர்தல் அரசியல் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கைத் தீவில் ஒரு மூலோபாய வழியாக அமையும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டது. அதை எந்த அளவில் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதில்

மட்டுமே நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் என்பது பெயரளவில் ஜனாதிபதி என்ற ஒரு தனிமனிதரிடம் வைப்பாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம் மீதான மத ரீதியான முன்மைத்துவத்துவத்தையோ எமது மூலோபாயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது.

இதைப் போலவே இலங்கைப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையும் தீவு முழுவதிலுமான தேரவாத சிங்கள அரசியற் பௌத்தத்தின் முதன்மைத்துவத்தையும் மாற்றுவதற்கோ நீர்த்துப்போகச் செய்வதற்கோ எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை. 

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாகினும் சரி, பாராளுமன்றப் பெரும்பான்மையாகினும் சரி ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட எந்தத் தீர்வையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அழுத்தம் இன்றி ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இன அழிப்புப் போரின் பின்னரான முழுமையான ஆக்கிரமிப்புச் சூழலில் அந்த நிலைமை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் மெய்நடப்பு அரசொன்றைக் கட்டியெழுப்பி, அமைதிப் பேச்சுக்களைத் தீவுக்கு அப்பாலான மூன்றாம் தரப்புச் சர்வதேச அனுசரணையோடும் மத்தியஸ்தத்தோடும் ஏற்படுத்தும் சூழலைத் தோற்றுவித்து, ஒற்றையாட்சித் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு எமக்குத் தேவையான மூலோபாய அழுத்தத்தை ஏற்படுத்த முடிந்தது. அதன் போது தனது சுயநிர்ணய உரிமையை ஈழத்தமிழர் தேசம் நடைமுறையில் எடுத்தாண்டது. அதன்மூலம் அரசியற் தீர்வுக்கான அரசிலமைப்புக்கு அப்பாலான சூழல் உருவாக்கப்பட்டு அரசியற் தீர்வு பற்றிப் பேசப்பட்டது. யார் பேச்சுவார்த்தை மேசையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்கவேண்டும் யார் பங்கேற்கக் கூடாது என்பதை மக்களாணையோடு எடுத்தாள தேர்தல் அரசியல் பயன்பட்டது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது.

எப்போதோ தந்தை செல்வா அவர்களால் முடித்துவைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருந்த கட்சி மீண்டும் மேற்கொண்டுவரப்பட்டது தேர்தல் இலச்சினையை ஒரு அரசியல்வாதி முடக்கியதால் நேர்ந்த ஒரு விபத்து மாத்திரமே. இதையெல்லாம் மீண்டும் சிறிதாவது மக்களுக்கு நினைவுபடுத்தவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை உள்ளாக்க சர்வதேச அழுத்தம் ஒன்றே ஈழத்தமிழர் தேசத்திடம் எஞ்சியுள்ள வழிவகையாக உள்ளது. இதுவே மூலோபாய முன்னெடுப்புக்கான பாதை.

ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமை எனப்படுவதும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி எனப்படுவதும் இரண்டு பெரும் மூலோபாயத் தூண்கள்.

ஆகவே, இந்த மூலோபாய வழிவகையை ஈழத்தமிழர் தேசம் எடுத்தாள வேண்டுமானால் சிங்களப் பேரினவாத வேட்பாளர்களை நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக்கும் தேர்வுகளுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசம் ஈடுபடுவது எதுவகையிலும் பொருத்தமற்றது. அவர்களோடு பேரம் பேசியும் எதையும் சாதிக்கமுடியாது. அவர்கள் நலிவடைந்துள்ளார்கள், பிளவடைந்துள்ளார்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி தெரிவுகளை மேற்கொண்டு எதையும் மூலோபாய ரீதியாகச் சாதித்துவிட இயலாது. இதற்கு ஏற்கனவே வரலாறு பல பாடங்களைப் புகட்டியுள்ளது.

தற்காலிக உத்தியாக ஜனாதிபதித் தேர்தலைக் கையாண்டு மூலோபாயத்துக்குரிய அரசியற் பயணத்தைச் சிதைத்துவிடுவது தவறானது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும்.

இதனாற் தான், ஜனாதிபதித் தேர்தலை நாம் எவ்வாறு கையாளுவது என்பதில் மூலோபாயத்துக்குரிய அணுகுமுறைக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கருத்து மேலெழுகிறது. இதனாற் தான் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையை நானும் ஆதரிக்கிறேன். ஆனால், அதற்கு ஏற்ற சரியான கொள்கை வகுப்பு இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி அதற்குரிய சரியான வேட்பாளரும் எம்மிடம் இருக்கவேண்டும்.

ஈழத் தமிழருக்கான சர்வதேச அரசியலை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையற்ற சூழலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழல் உருவாக்கியுள்ளது.

ஆதலால், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஈழத்தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவரை ஈழத்தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாக சர்வதேசம் கணிப்பிடும் நிலையைத் தோற்றுவிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது.

இருப்பினும் இதைச் சரிவரச் செய்யவேண்டுமானால், ஆக்கிரமித்துள்ள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எவரையும் விட அதிக வாக்குகளைப் பெறும் வகையில் ஒருவரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர் தேசம் தகுந்த தேர்தல் விஞ்ஞாபனத்தோடு நிறுத்தவேண்டும். அவர் அதிக வாக்குகளால் வெற்றிபெறவேண்டும். அவர் எமது நிழல் ஜனாதிபதியாக இயங்கவேண்டும்.

பொதுவேட்பாளரின் முழுமுயற்சியும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி நோக்கியதாக அமையவேண்டும்.

இதற்குரிய அஞ்சாநெஞ்சத் துணிவும், தகைமையும் வன்மையும் பொருந்திய ஒருவர் ஈழத்தமிழர் நிழல் ஜனாதிபதிக்குரிய பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படவேண்டும்.

இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திப்பது ஈழத்தமிழர் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

அதுமட்டுமல்ல, அரச பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி போன்றவற்றின் தார்ப்பரியங்களைப் புரியாத, அவற்றை எடுத்தாள இயலாத ஒருவர், அதுவும் இவ் விடயங்களில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ஒருவர் பொதுவேட்பாளராகி இந்தக் கைங்கரியத்தைச் சாதிக்கமுடியாது.

ஆகவே, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது.

அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது.

அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் நான் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.

ஆகவே, இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பை ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுச்சபை மேற்கொள்ளவேண்டும். அதனால், இதைச் சரிவர மேற்கொள்ள இயலுமா என்பதை நிறுவுவதும் அதை நடைமுறையிற் சாதிப்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசத்தின் சமூகப் பொறுப்பாகும்.

பொதுவேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்துக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு எந்தவித பொறுப்புக்கூறலும் அற்ற வகையில் விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்காமல் நடக்கவேண்டிய விடயத்தை பொறுப்புக்கூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இதயசுத்தியுடனும் அணுகவேண்டும்.

இதை எதிர்பார்க்கும் வேளையில், குறிப்பாக எதிர்வரும் நாட்களில் தென்னிலங்கையில் களமிறங்கத் தயார் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இயன்றளவு நேரடிச் சந்திப்புகளை மேற்கொண்டு சில ஆழமான கேள்விகளை எழுப்பி இலங்கை ஒற்றையாட்சி ஜனாதிபதிக்கான சிங்கள தேசத்தின் வேட்பாளர்களை ஈழத்தமிழர்கள் ஏன் நிராகரிக்கவேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் நேரடியாகவே தெரிவிக்கவுள்ளேன். அதன் விளைவுகளை மக்களுக்கும் அறிவிக்கவுள்ளேன். என்னால் இயன்ற அர்த்தமுள்ள பங்கு இதுவாகவே இருக்கமுடியும்.

குறிப்பாக, ஆறாம் சட்டத்திருத்தத்தை அகற்றி, ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்து, தீவின் வடக்கு-கிழக்குப் பகுதியில் பௌத்தத்திற்கான முதன்மைத்துவத்தை நீக்குவதே தனது விருப்பம் என்று பகிரங்கமாக எந்த ஒரு சிங்கள வேட்பாளரேனும் தெரிவிக்கத் தயாராக உள்ளாரா என்ற கேள்வியையும், இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்றதா இல்லையா என்பதை இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பட்டயத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கி அரச பொறுப்புக்கூறலை விசாரிக்க சர்வதேச நீதி மன்றை நாடும் துணிவு சிங்கள வேட்பாளர்களில் எவருக்கேனும் உண்டா என்றும் அவர்களிடன் நேரடியாகவே வினவி அவர்கள் அதற்குத் தரும் பதிலை ஈழத்தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவும் என்னாலியன்ற முயற்சியை மேற்கொள்ள உள்ளேன். 

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தைப் போலவே,

புலம் பெயர் சமூகத்திலும் ஒற்றுமையின்மை காணப்படுகிறது. இதற்கு, பிராந்திய அரசியலும் சர்வதேச அரசியலும் பிரதான காரணம். இமாலயப் பிரகடனம் எங்கிருந்து இங்கு வந்தது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்குரிய விடை கிடைக்கும்.

இருப்பினும் இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்குவதில் சில காத்திரமான நகர்வுகள் பல முனைகளில் இருந்தும் புலம்பெயர் ஈழத்தமிழர் தரப்புகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தவகையில், காத்திரமான நகர்வுகள் முன்னேறிச் செல்லும் வகையில் எமது மூலோபாய முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை இத்தால் வலியுறுத்துகிறேன்.

 

https://oruvan.com/sri-lanka/2024/06/14/ananthi-sasitharan-is-running-as-a-tamil-general-candidate

Link to comment
Share on other sites

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளேன்! - அனந்திஅதிரடி அறிவிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்👏

இனி நிறைய ஓட்டப்போட்டிகளைப் பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார்.

large.IMG_6569.jpeg.9bfd089374870d252848

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இனி தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் 

உங்கள் தனிப்பட்ட கருத்து/ ஆலோசனை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பொது  வேட்பாளரை முழுமூச்சுடன் எதிர்ப்பேன் என்றவர் களத்தில் குதிக்கலாம்.... ஆனந்திக்கு அச்சுறுத்தல்கள், தூதுகள், வசைகள் வரலாம்..... நீ, நான் போட்டிகள் எழலாம்.....எது வேண்டுமானாலும் நேரலாம், இதெல்லாம் நமக்கு புதிதல்ல. பொது வேட்பாளர் வென்றால்; தாம் காட்டிக்கொடுத்து தரகு பணம்பெறுவது ஊரை பேய்க்காட்டி உலா வருவது தடைப்படுமே என்கிற ஏக்கத்தில், ஏதோ தமிழருக்கு சிங்களமே ஜனாதிபதியாகவேண்டுமென்று கொக்கரிக்கிறார். இவ்வளவுகாலமும் யார் ஜனாதிபதியாக இருந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழர் ஏதிலிகளானார்கள் என்று தெரியவில்லை, ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர் போல் கதையளக்கிறார் ஒருவர். அவரை முதலில் உண்மையை உணர செய்யுங்கள், தற்போதைய முடிவுக்கு தமிழர் வரக் காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தி, ஜதார்த்ததை ஏற்றுகொள்ளச்செய்யுங்கள். கற்பனையில் வாழும் ஒருவரை நிஜத்துக்கு கொண்டு வாருங்கள். ஏற்கெனவே தான்தான் ஜனாதிபதி எனும் நப்பாசையை வெளியிட்டவர் அவர். மூர்க்கமாக தமிழரை அழிக்க கங்கணம் கட்டும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழருக்கு  என்னத்தை வாங்கித்தரப்போறார்? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உங்கள் தனிப்பட்ட கருத்து/ ஆலோசனை என்ன?

புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு ஶ்ரீலங்கா ஜனாதிபதி அனந்தி சசிதரன் நிச்சயம் சிறந்த தீர்வை கொண்டுவருவார் என ற நம்பிக்கையுடன் வாக்களிப்போம். 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

மாண்புமிகு ஶ்ரீலங்கா ஜனாதிபதி அனந்தி சசிதரன் நிச்சயம் சிறந்த தீர்வை கொண்டுவருவார் என ற நம்பிக்கையுடன் வாக்களிப்போம். 

தமிழர் தரப்பு பிரதிநிதியாக  போட்டியிடுகின்றார். வெற்றியடைய மாட்டார் என்பது கடவுளுக்கே தெரியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பு பிரதிநிதியாக  போட்டியிடுகின்றார். வெற்றியடைய மாட்டார் என்பது கடவுளுக்கே தெரியும்.

குமாரசாமி ஐயா நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில டமிழ் அரசியல்வாதிகள் எங்கே தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்றல்லவா ஏலவே அரங்கமைத்து அச்சுறுத்தல் பாணியில் அறைகூவல் விடுகிறார்கள். 

1.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதே தப்பு.
2.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டவே கூடாது.
3.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளருக்கு எதிராக முழுமூச்சோடு செயற்படுவேன்.
4.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் அரைஞாண்கொடியையும் கழற்றிவிடுவர்.
5.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் சஸ்டிக்கு ஆபத்து.
      இப்படியான தமிழர் தரப்புகளின் கோதாவில் இவரது நகர்வை எப்படியாவது ஒழித்துக்கட்டவே முயற்சிப்பர். அதனை சிங்களவரோ அல்லது சிங்கள அரசோ செய்யத்தேவையுமில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கணவனையும் பறிகொடுத்துவிட்டு இனத்துக்காக் குரல்கொடுப்பவரை வரவேற்காதுவிடினும் வசைபாடாதாவது இருக்கலாம்.ஆனால், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு.  ஐநாவுக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் சேலையணிந்துதானே வருகிறவர் என்று நினைக்கின்றேன்.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
15 hours ago, குமாரசாமி said:

உங்கள் தனிப்பட்ட கருத்து/ ஆலோசனை என்ன?

புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே

ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

இது பிழையான. கருத்து,....முடிவு     ஏனென்றால் அனுபவம் என்பது கல்வி தகமையை விட உயர்ந்த தகுதி   ஆகவே ஆனந்தி வரலாம் ..... தமிழர்களாக.  ஒற்றுமையாக வரவேற்ப்போம்.   

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

இது பிழையான. கருத்து,....முடிவு     ஏனென்றால் அனுபவம் என்பது கல்வி தகமையை விட உயர்ந்த தகுதி   ஆகவே ஆனந்தி வரலாம் ..... தமிழர்களாக.  ஒற்றுமையாக வரவேற்ப்போம்.   

ஏற்கனவே அரசியலில் இருந்தவர் என்றால் எதிர்காலத்தில் அந்த வாக்கை வைத்து தன்னை வளர்கவே நினைப்பார்கள்.

பெயரே பொது வேட்பாளர்.

அடுத்து இரண்டாவது வாக்கை என்ன செய்யலாம் என்று இன்னமும் முடிவாகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

குமாரசாமி ஐயா நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில டமிழ் அரசியல்வாதிகள் எங்கே தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்றல்லவா ஏலவே அரங்கமைத்து அச்சுறுத்தல் பாணியில் அறைகூவல் விடுகிறார்கள். 

1.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதே தப்பு.
2.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டவே கூடாது.
3.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளருக்கு எதிராக முழுமூச்சோடு செயற்படுவேன்.
4.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் அரைஞாண்கொடியையும் கழற்றிவிடுவர்.
5.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் சஸ்டிக்கு ஆபத்து.
      இப்படியான தமிழர் தரப்புகளின் கோதாவில் இவரது நகர்வை எப்படியாவது ஒழித்துக்கட்டவே முயற்சிப்பர். அதனை சிங்களவரோ அல்லது சிங்கள அரசோ செய்யத்தேவையுமில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கணவனையும் பறிகொடுத்துவிட்டு இனத்துக்காக் குரல்கொடுப்பவரை வரவேற்காதுவிடினும் வசைபாடாதாவது இருக்கலாம்.ஆனால், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு.  ஐநாவுக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் சேலையணிந்துதானே வருகிறவர் என்று நினைக்கின்றேன்.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

ஏன் தமிழர் சார்பாக ஒருவரை போட்டியிட வைக்க வேண்டும்  என எண்ணுகிறீர்கள்?

8 hours ago, விசுகு said:

புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே?

வெற்றியடைய முடியாது என்று 100க்கு 10000000000%!உறுதி செய்யப்பட்ட ஒரு விடயத்திற்கு ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் போட்டியிடக்கூடாது என்று கூறுவதை, ஒரு MP பதவிக்கான போட்டியில் அல்லது ஒரு உள்ளூராட்சித் தேர்தலில்  கூறுவார்களா? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே அரசியலில் இருந்தவர் என்றால் எதிர்காலத்தில் அந்த வாக்கை வைத்து தன்னை வளர்கவே நினைப்பார்கள்.

அரசியலுக்கு புதியவர்.  தன்னை வளர்க்க நினைக்க மாட்டாரா ??   இல்லை அவரும்,. எவரும் தன்னை வளர்க்க தான் முயல்வார்கள்.  உதாரணம்   நீதிபதி விக்கினேஸ்வரன்.   .....ஆகவே எவர் வந்தாலும்  விரும்பி வருபர்களை ஆதரிக்க வேண்டும்   ஆனந்தி  வேறு வேட்பாளர் இருந்தால்  தான் போட்டி இடவில்லை என்றும் கூறுகிறார்   உங்களிடம் சிறந்த வேட்பாளர் இருந்தால் சொல்லுங்கள்   

8 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்து இரண்டாவது வாக்கை என்ன செய்யலாம் என்று இன்னமும் முடிவாகவில்லை.

இந்த இரண்டாவது வாக்கு தேவையற்றது   உதாரணமாக  நான் முதலாவது வாக்கு போட்டவர். தோல்வி இரண்டாவது வாக்கு போட்டவர். வெற்றி    இங்கே முதல் வாக்கு  பெறுமதியை இழந்து விட்டது  ....விளங்குகின்றதா.  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த அடிப்படை அறிவே இல்லையென்பது அவர்கள் இங்கு எழுதும் கருத்துக்களில் அவ்வப்போது தெரிகிறது.

முதலாவதாக, இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பது இலங்கையின் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எப்போதாவது ஒரு கோரிக்கையாக, அபிலாஷையாக இருந்திருக்கிறதா? இல்லை. அப்படியிருக்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் நிற்பது தோல்வியைத்தான் தரும் என்று ஆளாளுக்கு கட்டியம் கூறுவது ஏன்? அப்படியானால் உங்களைப்பொறுத்தவரை தமிழருக்கு இருக்கும் பிரச்சினையெல்லாம் தம்மில் ஒருவரை ஜனாதிபதியாக்குவதுதான் என்று  நீங்கள் நம்புவது போலல்லவா இருக்கிறது? ஆகவே, முதலில் இந்த மாயையில் இருந்து வெளியே வாருங்கள். இலங்கை என்பது சிங்கள பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. ஆகவே சிறுபான்மையினமான தமிழரில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாவது மிகவும் கடிணமானது, அது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒன்றும் அல்ல. இந்தத் தெளிவு இருந்தால் பொதுவேட்பாளர் குறித்த உங்களின் சர்ச்சைகளில் 50 வீதம் தெளிவாகி விடும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

இங்கே பலருக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த அடிப்படை அறிவே இல்லையென்பது அவர்கள் இங்கு எழுதும் கருத்துக்களில் அவ்வப்போது தெரிகிறது.

வணக்கம்!

இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான்.

அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன்.

இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்? 

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான்.

1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முற்றாக‌ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு.
2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்).
3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு    ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்).
4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு).
5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு.
6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு. 

1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும்.

இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்களை அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான். 

இறுதியாக சுமந்திரனிடம் ஒரு கேள்வி : உங்களைத் தமிழர்களோ, அல்லது அவர்களில் ஒரு பகுதியினரோ துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அப்படிக் கூறியதன் காரணம் என்ன? (தமிழரின் நலன்களைக் காத்துக்கொள்ள நீங்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் உங்களைத் துரோகியாக்கப்போவதில்லை என்பது  உங்களுக்குத் தெரியாதது அல்லவே). அப்படியானால் எதற்காக இந்தத் துரோகிப் பட்டம் தொடர்பான அச்சம் உங்களுக்கு வருகிறது (இதை நமட்டுச் சிரிப்புடன், "என‌க்கு உதுக்கெல்லாம் பயமில்லை. எத்தினை பாத்தாச்சு" என்று சவடால் விட்டாலும்)? 

Edited by ரஞ்சித்
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

வணக்கம்!

இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான்.

அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன்.

இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.

சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது.  


தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர்  தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன். 


உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே?

2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை. 

☹️

என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து  

பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ??? 

இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான். 

ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் :  வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா -  யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர்.  அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு  ஐம்பது வாகன‌ங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த  ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார்.  29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார்.  அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன.   தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல்  இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள்  தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து,  1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள்  முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன :  கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அள‌ம்பில்.
    • நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். "இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார்.   பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள். காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர். "தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார். கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார். பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார். "அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார். கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன. மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன. பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார். "ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார். "ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c4nnq1glz9no
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.