Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

15 வருடங்கள் என்பதும் அது தமிழர்களின் முக்கிய காலகட்டம் என்பதும் அதில் அவர் பதவியில் ஒட்டி கொண்டு இருந்தார் என்பதும் அந்த காலப்பகுதியில் தனது இருப்பிடம் உட்பட தனது சுயலாபத்திற்காக தமிழர்களின் பாரிய இழப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்து பேசாதிருந்தது மட்டும் அன்றி அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருந்தார் என்பதுமே இங்கே கண்டனத்திற்கு ஆளாகின்றன. இதற்கும் புலிகளுக்கும் புலிகளின் காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எல்லா இடத்திலும் நீங்கள் கொலை ஆயுதம் என்று வாந்தி எடுப்பதை நிறுத்தினால் பல இடங்களில் விவாதம் மற்றும் தெளிவுகள் சரியாக நடக்க வழி வகுக்கும். டொட்.

அந்த 15 வருடங்கள் என்பது தமிழரின் அரசியல் நிலை என்பது  2009 ன் முன்பு எடுக்கப்பட்ட  அரசியல் முடிவுகளின்  விளைவால் நொந்து நூடில்ஸ் ஆகி போயிருந்த நிலமை என்பது நேர்மையாக சிந்திக்கும் அனைவரும் அறிந்ததே.  இந்த நிலமையை ஈடு கட்ட இந்த தலைமுறையில் யாராலும் முடியாது என்பதே துன்பகரமான உண்மை. 

  • Replies 328
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

இங்கும் இந்த அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் இருந்தது... இருக்கிறது... தொடர்கிறது.

வேதனை அவமானம் 😟
ஆனால் தமிழ்நாட்டில்  நடப்பது போன்று ஒடுக்கபட்ட தமிழர்கள் வீடுகளை எரிப்பது கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் இல்லை இங்கு என்று நினைக்கிறேன்.

Posted
45 minutes ago, island said:

நிழலி, தாங்கள் தளத்தின் உரிமையாளர்.  எமக்கு இங்கு  எழுத இடம் தந்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.  உங்களுடன் எதிர்வாதம் புரிந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 

இது தேவையற்ற செருகலாகவே நான் எடுத்துக் கொள்கின்றேன். அத்துடன் நான் இந்த தளத்தின் உரிமையாளரும் அல்ல. 

ஒரு போதும் என் கருத்துக்கு வரும் பின்னூட்டங்களை நான் எதிர்வாதமாக எடுத்துக் கொள்வது இல்லை. அவை எதிர்வினைகள் மட்டுமே. 

நன்றி
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, நிழலி said:

இது தேவையற்ற செருகலாகவே நான் எடுத்துக் கொள்கின்றேன். அத்துடன் நான் இந்த தளத்தின் உரிமையாளரும் அல்ல. 

ஒரு போதும் என் கருத்துக்கு வரும் பின்னூட்டங்களை நான் எதிர்வாதமாக எடுத்துக் கொள்வது இல்லை. அவை எதிர்வினைகள் மட்டுமே. 

நன்றி
 
தவறாக புரிந்து கொள்ளும்படி எழுதியதற்கு  மன்னிக்கவும். அதற்காக வருந்துகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Kandiah57 said:

அவர் சொல்லை கேட்டு   குண்டுகள் பொழிந்தவனுக்கும். ஐனதிபதி தேர்தலில் வாக்குப்போட்டார்கள்

😟

தலைவர் சொன்னதிற்காக, கட்சி சொன்னதிற்காக மக்கள் வாக்களிக்கும் நிலை இருக்க கூடாது.
நான் அப்போதைய நிலையில் சிவாசிலிங்கத்திற்கு தான் வாக்கு அளித்திருப்பேன். ஆனால் இப்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நீங்கள் இன்னொரு திரியில் சொன்னது போல் ஒரு ஜனாதிபதி தமிழ் வேட்பாளர்  சிங்களவர்கள் முஸ்லிம் மலையக மக்களுக்காக  நின்றால் அவரை நான் சுமத்திரன் எதிர்த்தாலும் வாக்கு அளிப்பேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

2. ஒவ்வொருவரும் தன் நிலைக்கேற்ப செயல் பட்ட காலத்தில், சம்பந்தன் தன்னால் செய்யக் கூடியதைச் செய்தார். இதற்குப் பயன் இல்லை என்பதால் யாரும் குறை சொல்ல முடியாது.

மறைந்த சம்பந்தர்   அவர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு    தலைவராக வாழ்ந்த காலம் அவர் பாராளுமன்றத்தில் அங்கத்தவத்தை இழந்த காலம் மட்டுமே .
அதன் பின்னர்  அவர் பாராளுமன்ற அங்கத்துவத்தை  மீண்டும் வெற்றி பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளின்  தயவால் மட்டுமல்ல
இந்தக் கூட்டமைப்புத் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் முகம் என்று அந்தத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனமாக அறிவிக்கப்பட்டதாலும் தான்.

அந்த நேரத்தில் அந்தகக் கூட்டமைப்பை உருவாக்கிய சிவில் அமைப்புக்கள் அதன் தலைமை கிழக்கிலிருந்து வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபடியால் தான் மறைந்த சம்பந்தன் ஐயா அவர்கள் தலைவராக பரிந்துரைக்கப்பட்டு அவரும் புலிகளை மக்களின் பிரதி நிதியாக ஏற்றுக்கொண்டு அவர்களின் அரசியல் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட சம்மதித்து தலமைப் பதவியை ஏற்றுக் கொண்டார்.( இதையும் புலிகளின் வற்புறுத்தல் , கொலை மிரட்டல், ஏற்றுக்கொள்ளாவிட்டால் போட்டு வைத்திருப்பார்கள் என்ற பாணியில் யோசித்தால் அது உங்கள் யூகம் )    
இது தான் உண்மை
 
எப்படி எப்போது எதற்காக சம்பந்தன்  ஐயா அவர்கள் தமிழர்களின்
விடுதலைக் கோட்பாட்டிலிருந்து   விலகினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

அன்றிலிருந்தே சம்பந்தர் ஐயாவும் தமிழர்களை அவர்களின் மனதை எப்படியெல்லாம் வெல்லலாம் எனக் கணித்து சந்தர்ப்பம் கிடைத்த நேரம் எல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு இப்படிச் சென்றுவிட்டார் .

50  களில் தமிழர்கள் திருகோணமலைக்கு யாத்திரை சென்று சிங்கள இனவாதத்திற்கான    தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

70  களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனி நாடே தமிழர்களின் பாதுகாப்பு என நிறைவேற்றப்பட்டது

80  களின்  பின்னர் 2009 வரை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முன்னிலை வகித்து  ஈழப்போராட்டம் உலக அரசியலாக மாற்றம் பெற்றது

இப்படியே தமிழர்களின் அரசியல் மற்றும் உரிமைப்  போராட்டம்  ஒரு முன்னேற்றத்திற்கான பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில்...

2009  க்குப் பின்னரும் ஈழத்   தமிழர்களின் தலைமை என் கையில் தான் இருக்கும்.... இருக்க வேண்டும்...... என்ற ஒரே கொள்கைப் பற்றுடன் வாழ்ந்த சம்பந்தர் ஐயா அ

தே ஈழத்து தமிழர்களின் உரிமைக்காக போராடிய அல்லது அந்த உரிமையை வென்றெடுக்க  முன்னெடுத்த ஒரு போராட்டத்தை யாரும் தெரிந்தால் கூறுங்கள்

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, island said:

அந்த 15 வருடங்கள் என்பது தமிழரின் அரசியல் நிலை என்பது  2009 ன் முன்பு எடுக்கப்பட்ட  அரசியல் முடிவுகளின்  விளைவால் நொந்து நூடில்ஸ் ஆகி போயிருந்த நிலமை என்பது நேர்மையாக சிந்திக்கும் அனைவரும் அறிந்ததே.  இந்த நிலமையை ஈடு கட்ட இந்த தலைமுறையில் யாராலும் முடியாது என்பதே துன்பகரமான உண்மை. 

அப்படியானால் அதை மக்களுக்கு சொல்லி ஏன் வாக்கு கேட்கவில்லை. மாறாக இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதுக்கு பித்தலாட்டம்??

நடந்து இனப்படுகொலை பற்றி இதுவரை இவர் செய்த வேலைப்பாடுகள் எவை? பூச்சிய த்தில் இருந்து மைனசில் விட்டதை தவிர....

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, விசுகு said:

15 வருடங்கள் என்பதும் அது தமிழர்களின் முக்கிய காலகட்டம் என்பதும் அதில் அவர் பதவியில் ஒட்டி கொண்டு இருந்தார் என்பதும் அந்த காலப்பகுதியில் தனது இருப்பிடம் உட்பட தனது சுயலாபத்திற்காக தமிழர்களின் பாரிய இழப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்து பேசாதிருந்தது மட்டும் அன்றி அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருந்தார் என்பதுமே இங்கே கண்டனத்திற்கு ஆளாகின்றன. இதற்கும் புலிகளுக்கும் புலிகளின் காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எல்லா இடத்திலும் நீங்கள் கொலை ஆயுதம் என்று வாந்தி எடுப்பதை நிறுத்தினால் பல இடங்களில் விவாதம் மற்றும் தெளிவுகள் சரியாக நடக்க வழி வகுக்கும். டொட்.

அவர் போயிட்டார். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? 

2009இன் பின் புலிகள் இயக்கத்திலேயே 108 பிரிவுகள். ஆளாளுக்கு தேசியத்தை உரிமை கொண்டாடுகின்றார்கள். 

எந்த கோஷ்டி எந்தப்பக்கத்தால எப்போது யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்ன செய்யும் என்று எவருக்கும் தெரியாது. 

தலைவர் வரப்போறார் வரப்போறார் வந்திட்டார் என்று 15 வருடங்களாக இன்னோர் தில்லாலங்கடி விளையாட்டுக்கள். 

கடைசியில் தலைவர் புதல்வி துவாரகாவின் மாவீரர் தின உரை. 

இங்கே பொதுநலத்தின் உச்சத்தை நாங்கள் காண்கின்றோம். 

தலைவர் அண்ணா மகன் சித்தப்பா இல்லை நம்புங்கள் என உரையாற்றுக்கின்றார். யாராடா நீ புதுசாய் முளைத்து உள்ளாய் என்று தடக்குப்படக்கு கருத்துக்கள். 

2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்தோருக்கு ஏதாயினும் ஒற்றுமையான நிகழ்ச்சிநிரலோ செயற்பாடோ உள்ளதா?

இங்கே சம்பந்தரை கழுவி ஊத்த முன் சம்பந்தப்பட்டோர் தங்கள் ஊத்தைகளை கழுவி சுத்தம் செய்யலாமே. 

அடிப்படையில் 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உரித்துடையவர்கள் யார் எனும் பிடுங்குப்பாடு நடக்கின்றது. 

அது இலங்கை தமிழர்களை தாண்டி உரிமை கொண்டாடும் போட்டி இந்தியாவரை சென்றுள்ளது. 

கொஞ்சம் புத்திசாலிகள் விடுதலை புலிகளை போற்றி புழந்து சொத்து சேர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் தமிழ் ஓட்டுக்கள் மூலம் அரசியலில் இடம்பிடிக்க முயற்சித்தார்கள். 

ஆக மொத்தத்தில் புலிகள் நாமம் சொல்லி ஆளாள் தாங்கள் பிழைக்கும் வழியை பார்த்தார்கள். 

இந்த குழப்பத்தில் குட்டையில் காலை விடாமல் சற்று தள்ளி நின்று சம்பந்தர் அரசியல் செய்தது ஒரு விதத்தில் பார்த்தால் சரியாகவே தோன்றுகின்றது. 

மேலே ஓர் காணொளி பார்த்தேன். அதில் சம்பந்தர் மலையாளி எனவும் ஒரு தமிழின துரோகி எனவும் இந்திய தமிழர் ஒருவர் யூரியூப்பில் வகுப்பு எடுக்கின்றார். 

ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது.

Edited by நியாயம்
அண்ணா மகன்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நிழலி said:

அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும்.

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை

வாடியிருக்குமாம் கொக்கு

என்பது போல எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் காத்திருந்து கஸ்டப்பட்டு பலர் வாந்தி எடுக்கிறார்கள்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, island said:

சிறுவர் போராளிகளாக இயக்கத்தில் இணைந்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் அரசியலை கற்று கொடுக்காது போக்கிலியாக வளர்ததது யார் குற்றம்?  அரசியலை கற்று கொடுத்திருந்தால் அவர்கள் சம்பந்தரை விட சிறந்த அரசியலை செய்திருக்கலாம். 

கல்லோ தம்பி

உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர்.

கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும் போது உலகம் போற்றக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.

வாழைப்பழத்தில ஊசி ஏத்துற மாதிரி நாசூக்காக உங்கள் எரிச்சல்களைக் கொட்டாதீங்கள்.

  • Like 7
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

அவர் போயிட்டார். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? 

2009இன் பின் புலிகள் இயக்கத்திலேயே 108 பிரிவுகள். ஆளாளுக்கு தேசியத்தை உரிமை கொண்டாடுகின்றார்கள். 

எந்த கோஷ்டி எந்தப்பக்கத்தால எப்போது யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்ன செய்யும் என்று எவருக்கும் தெரியாது. 

தலைவர் வரப்போறார் வரப்போறார் வந்திட்டார் என்று 15 வருடங்களாக இன்னோர் தில்லாலங்கடி விளையாட்டுக்கள். 

கடைசியில் தலைவர் புதல்வி துவாரகாவின் மாவீரர் தின உரை. 

இங்கே பொதுநலத்தின் உச்சத்தை நாங்கள் காண்கின்றோம். 

தலைவர் அண்ணா மகன் சித்தப்பா இல்லை நம்புங்கள் என உரையாற்றுக்கின்றார். யாராடா நீ புதுசாய் முளைத்து உள்ளாய் என்று தடக்குப்படக்கு கருத்துக்கள். 

2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்தோருக்கு ஏதாயினும் ஒற்றுமையான நிகழ்ச்சிநிரலோ செயற்பாடோ உள்ளதா?

இங்கே சம்பந்தரை கழுவி ஊத்த முன் சம்பந்தப்பட்டோர் தங்கள் ஊத்தைகளை கழுவி சுத்தம் செய்யலாமே. 

அடிப்படையில் 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உரித்துடையவர்கள் யார் எனும் பிடுங்குப்பாடு நடக்கின்றது. 

அது இலங்கை தமிழர்களை தாண்டி உரிமை கொண்டாடும் போட்டி இந்தியாவரை சென்றுள்ளது. 

கொஞ்சம் புத்திசாலிகள் விடுதலை புலிகளை போற்றி புழந்து சொத்து சேர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் தமிழ் ஓட்டுக்கள் மூலம் அரசியலில் இடம்பிடிக்க முயற்சித்தார்கள். 

ஆக மொத்தத்தில் புலிகள் நாமம் சொல்லி ஆளாள் தாங்கள் பிழைக்கும் வழியை பார்த்தார்கள். 

இந்த குழப்பத்தில் குட்டையில் காலை விடாமல் சற்று தள்ளி நின்று சம்பந்தர் அரசியல் செய்தது ஒரு விதத்தில் பார்த்தால் சரியாகவே தோன்றுகின்றது. 

மேலே ஓர் காணொளி பார்த்தேன். அதில் சம்பந்தர் மலையாளி எனவும் ஒரு தமிழின துரோகி எனவும் இந்திய தமிழர் ஒருவர் யூரியூப்பில் வகுப்பு எடுக்கின்றார். 

ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது.

இவை எல்லாவற்றிக்கும் சம்பந்தன்  பதில் சொல்லியிருக்க வேண்டும்.2009 க்கு முன்னரும் பின்னரும் சம்பந்தன் அரசியிலில் முதன்மையானவராகவே இருந்துள்ளார்.

Posted

Quote

இந்த குழப்பத்தில் குட்டையில் காலை விடாமல் சற்று தள்ளி நின்று சம்பந்தர் அரசியல் செய்தது ஒரு விதத்தில் பார்த்தால் சரியாகவே தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயம் said:

அவர் போயிட்டார். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? 

உண்மை தான் நிகழ்ச்சி நிரல் இருந்தது இப்பவும் இருக்குது.

ஆனால் எல்லாமே வெளிநாட்டவர்களிடம்.

2009 க்கு பின் வெளிநாட்டவர்களின் தாளத்துக்கு எமது தலைவர்கள் நடனம் போடுகிறார்கள்.

அதுசரி பொலிசுக்காரன் தோரணையில் இதைக் கேட்கிறீர்களே.

உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாதா ஐயா?

கோமாவில் இருந்து இப்பதான் எழும்பி வந்தீர்களா?

இங்கு அத்தனை பேருமே ஐயா சம்பந்தன் 2009 க்கு பின் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார் என்று தானே கேட்கிறார்கள்.

அவர் ஏதாவது செய்திருந்தால் எழுதுங்கள் எல்லோரும் அறிந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னாள் பா.உ. அரியநேத்திரன் ஒரு வாட்ஸப் குழுமத்தில் பதிந்தது..

சம்பந்தன் ஐயா தொடர்பாக அறிந்தும் அறியாத உண்மைகள்..!

1. இலங்கை தமிழரசுக்கட்சியின்  முன்னாள் தலைவரும் அப்போது அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயாவுக்கு தாயகத்தலைமகன் எனும் பட்டம்  2014, செப்டம்பர்,27, ம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வாழும் வீரர்' விருது -2016, ஜனவரி,14, கனேடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 50 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

👉புலிக்கொடியும் சிங்கக்கொடியும்.. !

3. சம்பந்தன் ஐயா 2012, மே,01, ல் யாழ்ப்பாண மேதினத்தில் மேடையில் வைத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தன் ஐயாவின் கையில் பிடிக்கவைத்தார்.இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த கொடி ரணிலால் சம்பந்தன் ஐயாவுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.

4. ஆனால் சம்பந்தன் ஐயா திருகோணமலையில் 2004, அக்டோபர்,17, ல்  ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார் அந்த நிகழ்வில் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டோம்.

5. 2004,மாவீரர் நாள் 2004, நவம்பர்,27 அன்று சம்பந்தன் ஐயா தலைமையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் மாவீரர்களுக்கு 22, உறுப்பினர்களும் தீபம் ஏற்றி நினைவுகூரப்பட்டதுடன்.       சம்பந்தன் ஐயா மாவீரர்கள் தொடர்பாக புகழந்தும் பேசினார் என்பதும் வரலாறு.

-பா.அரியநேத்திரன்-
03/07/2024

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Justin said:

உங்கள் கருத்துடன் முற்றாக உடன்பாடில்லை, எனவே அந்த "டொட்" தாண்டி இதை எழுத அனுமதியுங்கள்:

1. மேலே கள உறவான   @நியாயம் தான் சம்பந்தன் பற்றிய துல்லியமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்: "அவர் பாராட்டப் பட வேண்டியவரும் அல்ல, அதே நேரம் இங்கே பலரும் செய்வது போல தூசிக்கப் பட வேண்டியவருமல்ல". ஆனால், விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவரும் அல்ல (ஆனால், புலிகளை விமர்சிப்பது புலிக்காய்ச்சலால் மட்டும் தான் என்பது வேறு விடயம்😎!).

2. ஒவ்வொருவரும் தன் நிலைக்கேற்ப செயல் பட்ட காலத்தில், சம்பந்தன் தன்னால் செய்யக் கூடியதைச் செய்தார். இதற்குப் பயன் இல்லை என்பதால் யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப் பயன் இல்லாத செயல் செய்தார்கள் என்று ஒரு தரப்பைத் திட்டுவதானால் புலிகளையும் திட்ட வேண்டிய நிலை வரும். இதை @island சுட்டிக் காட்டியதில் அர்த்தம் இருக்கிறது. திரிக்குத் தொடர்பும் இருக்கிறது.

3. ஆனால், "பயனற்ற செயல்கள் செய்தார், செயலே செய்யாமல் இருந்தார்" என்று சம்பந்தரை வைதோரை விட , "புலிகளை மானசீகமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்" என்று  கருதியோர் தான் அவர் மரணத்தை இங்கே கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு, புலிகளை இழுக்காமல் எப்படி பதில் சொல்வது என நீங்கள் ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா? என்னிடம் அப்படியெதுவும் இல்லை.

4. இந்த சம்பந்தன் மீதான வசவையெல்லாம் "எதிர்கால தமிழ் தலைவர்களுக்கு பாடம் கற்பிக்க செய்கிறோம்" என்று நேராகவே ஒருவர் எழுதியிருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்? "2009 இற்கு முன்னர் இருந்த அதே நிலைப்பாட்டோடு, புலிகளின் பாரம்பரியத்தை தலையில் சுமக்காத தலைமையாக இருந்தால், செத்தாலும் திட்டுவோம், உயிரோடிருக்கும் போதும் செருப்பால் அடிப்போம்" என்று என்று தான் எனக்கு விளங்குகிறது.

இந்த அணுகுமுறையின் விளைவு என்னவென்று நினைக்கிறீர்கள்?

தாயகத்தில், அடுத்த நிலையில் ஒரு தமிழ் அரசியல் தலைமையும் இளையோரிடமிருந்து இப்போது இல்லை. இனியும் அவர்கள் வரப் போவதில்லை. இப்படி வெளிநாட்டில் சொகுசாக இருந்த படி தாயக அரசியல் வாதிகளுக்கு செருப்புக் காட்டும் "மண்ணு லாறி" கூட்டங்கள் இருக்கும் வரை, தாயக தமிழர்களுக்கு அரசியல் தலைமையும் புதிதாக வராது, அரசியல் ரீதியாக முன்னேற்றமும் வராது.

இத்தகைய ஒரு பேரிடர் நிலை வராதிருக்க, பேசித்தான் ஆக வேண்டும். 

கடைசியாக இருந்த தமிழரசு கட்சியை பிளந்தததை தவிர இந்த திருவாளர் சாதித்தது என்ன? சும்மா வெறும் கதை விடக்கூடாது. புலிகளை இங்க சொல்வதற்கு என்ன முகாந்திரம் .

7 hours ago, நியாயம் said:

அவர் போயிட்டார். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? 

2009இன் பின் புலிகள் இயக்கத்திலேயே 108 பிரிவுகள். ஆளாளுக்கு தேசியத்தை உரிமை கொண்டாடுகின்றார்கள். 

எந்த கோஷ்டி எந்தப்பக்கத்தால எப்போது யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்ன செய்யும் என்று எவருக்கும் தெரியாது. 

தலைவர் வரப்போறார் வரப்போறார் வந்திட்டார் என்று 15 வருடங்களாக இன்னோர் தில்லாலங்கடி விளையாட்டுக்கள். 

கடைசியில் தலைவர் புதல்வி துவாரகாவின் மாவீரர் தின உரை. 

இங்கே பொதுநலத்தின் உச்சத்தை நாங்கள் காண்கின்றோம். 

தலைவர் அண்ணா மகன் சித்தப்பா இல்லை நம்புங்கள் என உரையாற்றுக்கின்றார். யாராடா நீ புதுசாய் முளைத்து உள்ளாய் என்று தடக்குப்படக்கு கருத்துக்கள். 

2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்தோருக்கு ஏதாயினும் ஒற்றுமையான நிகழ்ச்சிநிரலோ செயற்பாடோ உள்ளதா?

இங்கே சம்பந்தரை கழுவி ஊத்த முன் சம்பந்தப்பட்டோர் தங்கள் ஊத்தைகளை கழுவி சுத்தம் செய்யலாமே. 

அடிப்படையில் 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உரித்துடையவர்கள் யார் எனும் பிடுங்குப்பாடு நடக்கின்றது. 

அது இலங்கை தமிழர்களை தாண்டி உரிமை கொண்டாடும் போட்டி இந்தியாவரை சென்றுள்ளது. 

கொஞ்சம் புத்திசாலிகள் விடுதலை புலிகளை போற்றி புழந்து சொத்து சேர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் தமிழ் ஓட்டுக்கள் மூலம் அரசியலில் இடம்பிடிக்க முயற்சித்தார்கள். 

ஆக மொத்தத்தில் புலிகள் நாமம் சொல்லி ஆளாள் தாங்கள் பிழைக்கும் வழியை பார்த்தார்கள். 

இந்த குழப்பத்தில் குட்டையில் காலை விடாமல் சற்று தள்ளி நின்று சம்பந்தர் அரசியல் செய்தது ஒரு விதத்தில் பார்த்தால் சரியாகவே தோன்றுகின்றது. 

மேலே ஓர் காணொளி பார்த்தேன். அதில் சம்பந்தர் மலையாளி எனவும் ஒரு தமிழின துரோகி எனவும் இந்திய தமிழர் ஒருவர் யூரியூப்பில் வகுப்பு எடுக்கின்றார். 

ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது.

ஐயா , சம்பந்தர் அரசியல் செய்தாரா ? அட , அந்தாள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புது உடுப்பு போட்டதுதான் மிச்சம் . இது அரசியலா ? அட போங்க உங்க பகிடிக்கு அளவேயில்லை .

அவர்கள் தம்மால் முடிந்ததற்கும் அதிகமாக செய்து விட்டு போயிட்டார்கள். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது?  என்று ஏன் இதுவரை புலிகளை தூற்றியவர்களை நீங்கள் கேட்கவில்லை.

ஆனாலும் நான் ஆயிரம் தடவைக்கு மேல் இதே கேள்வியை இங்கே கேட்டபோது ஏன் உங்கள் நியாயம் மௌனம் காத்தது??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் ஏதாவது செய்திருந்தால் எழுதுங்கள் எல்லோரும் அறிந்து கொள்வோம்

இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது  என்பது உங்களுக்கு தெரியாத???  

தந்தை செல்வா.  இவர்களுடன் பேசி பயனில்லை’ என்று தான்   தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தார்கள் 1977 இல். ஆனால் இதில் தொண்டமானையும். ஏன் இணைத்தார?? என்பது எனக்கு விளங்கவில்லை 

2009 இல். நாங்கள் அறிந்த விடயம்  ஆயுதப்போராட்டம் மூலமும்   ஒன்றும் பெற முடியாது   என்பது  

சர்வதேசம் தான்  போராட்டம் தோல்விக்கு காரணம்   ஏனெனில் பேச்சுவார்த்தை நடத்தும் படி  பிரபாகரனுக்கு கடுமையான தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்தது ஆனாபடியால் தான் 2002 ஒப்பந்தம் கையெழுத்திட்டார்  பிரபாகரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் தீர்வு கிடையாது என்பது   ஆனால் சர்வதேச அழுத்தை தட்டி கழிக்க முடியவில்லை  

இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் வெற்றி தான்   சர்வதேச ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Justin said:

காயம் பட்டவனை ஏற்ற வந்த கப்பலில் கூட மக்களை ஏற்ற அனுமதிக்காத சிறைப்படுத்தல் காரணமேயில்லை

  வீம்புக்கு விதண்டாவாதம் செய்யக்கூடாது. ஆமா, தாம் உண்டு தம் தொழிலுண்டு என்று இருந்த தமிழரை கொன்று அவர் தம் சொத்துக்களை எரித்து உங்கள் பிரதேசத்துக்கு ஓடுங்கள் என்று கப்பலிலேற்றி சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாக விரட்டியவர்கள் வெற்றிக்களிப்பில் இருந்துகொண்டு மக்களை ஏற்ற கப்பல் விடுவார்களாம் அதை அவர்கள் அனுமதிக்கவில்லையாம். சாதாரண  பொதுமக்களே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் கோயில், வைத்தியசாலைகள் மீது குண்டு பொழிந்தது ஏன்? தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றியது ஏன்? உணவுக்களஞ்சியங்களை குண்டு போட்டு அழித்ததும் ஏன்? போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் தொகையை குறைத்து கணக்கு காட்டியது ஏன்? மீட்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம், தங்குமிட வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்? போரிலே சம்பந்தப்படாத சிறுவர் தங்கியிருந்த செஞ்சோலை மீது குண்டு போட்டு கொன்றதும் அங்கவீனர்களாக்கியதும் ஏன்? வன்னியில் சிக்குண்டவர்கள் தப்பித்துச் செல்லாதவாறும் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியுலகு அறியாதவாறு தடுத்ததும் யார்? அந்த மக்களுக்கான உணவு மருந்துகளை மறுத்தது யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டுவந்த கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியது யார் மக்கள் மீது அவ்வளவு அக்கறையிருந்திருந்தால்? ஏன்.... கோத்தபாய கொம்பனி பலதடவை  சொல்லியிருக்கிறார்கள், சர்வதேசம் போர்நிறுத்ததை வலியுறுத்தி தம்மை கட்டாயப்படுத்தியும் அதை ஏற்காமல் தாமே போரை நடத்தி புலிகளை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் என்றாரே. அப்போ, சர்வதேசம் புலிகளை காப்பாற்றவா போர்நிறுத்தம் கோரியது? போரை உருவாக்கியதே சிங்களந்தான். புலிகள் எங்கிருந்து உருவானார்கள்? ஏன் உருவானார்கள்? அவர்கள் உருவாவதற்கு முன் தமிழ் மக்கள் காயப்படவில்லையா கொல்லப்படவில்லையா? அல்லது வன்னியில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்களா? மக்கள் ஏன் வன்னிக்கு சென்றார்கள்? தங்கள் சொந்த இடங்களை விட்டு, ஏன் மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார்கள் அரசாங்கம் மக்களை காப்பாற்றியிருந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நியாயம் said:

மேலே ஓர் காணொளி பார்த்தேன். அதில் சம்பந்தர் மலையாளி எனவும் ஒரு தமிழின துரோகி எனவும் இந்திய தமிழர் ஒருவர் யூரியூப்பில் வகுப்பு எடுக்கின்றார். 

ஒரு நிமிடம் 20 வினாடி பார்த்தேன். குப்பை  பெயரோ தமிழா தமிழா பாண்டின் 🙆‍♂️
ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது  🤣

பிரபாகரனே மலையாளி என்று நிறைய செய்திகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, island said:

 இன்று அவரை திட்டித் தீர்க்கும்  புலம் பெயர் அரசியலாளர்கள் கூட தாயகத்துக்கு விசிற் அடித்து தமது குடும்ப உறுபகினர்களுடன் மகிழ்வாக இருக்க  சந்தர்ப்பம் 2016 ல் அவரது அரசியல் முடிவினால் உருவான நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏற்பட்டது. 2015 ன் முன்பு. தாயகத்திற்கு செல்ல தொடை நடுங்கிக் கொண்டிருந்து,  2016 ன் பின்னர் இலங்கை சென்ற பல புலம் பெயர் வீராதி வீரர்கள் பலரை நான் அறிவேன்.   

கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்த பின்பு தான் மாற்றங்கள் வந்தன என்பதும் அவர்கள் மறுத்தாலும் வெளிப்படையாக மற்றவர்களுக்கும் தெரிந்த நிகழ்வு இது. இந்த மாற்றத்தை பயன் படுத்தி தான் தமிழ் தேசியவாதிகள் இலங்கை சென்று அங்கே பார்த்த அவர்கள் தான் இவர்களா என்று சந்தேககபடும்  அளவுக்கு நன்றாக என்ஜோய் பண்ணினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தன் ஐயாவின் கையில் பிடிக்கவைத்தார்.இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த கொடி ரணிலால் சம்பந்தன் ஐயாவுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.

3 hours ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா திருகோணமலையில் 2004, அக்டோபர்,17, ல்  ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார்

அவருக்குத் தெரியாமல் அவரது கையில் சிங்கக்கொடியைக்  கொடுத்தது போல்,  திருகோணமலையில் புலிக்கொடி என்று தெரியாமலே அந்தக் கொடியை அவர் ஏற்றி இருக்கலாம் என்றொரு வாதத்தையும் வைக்க முடியும் அல்லவா?

large.IMG_6825.jpeg.147f26990adec1a6de71

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

2009 இல். நாங்கள் அறிந்த விடயம்  ஆயுதப்போராட்டம் மூலமும்   ஒன்றும் பெற முடியாது   என்பது  

ஈழப்பிரியன் அய்யா எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன என்று யாழ்களத்தில் கருத்து பதிந்தவர். அவர் அப்படி தான் நம்பி கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kavi arunasalam said:

அவருக்குத் தெரியாமல் அவரது கையில் சிங்கக்கொடியைக்  கொடுத்தது போல்,

அப்போ இலங்கை அரசு தெரியாமல் கொடுத்த சிறிலங்கா பாஸ்போட்டை பெற்று கொண்டு வெளிநாடு போகலாம். வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழர் அங்கிருந்து கொண்டு  சிறிலங்கா குடியுரிமை பாஸ்போட்டை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். சம்பந்தன் அய்யா இலங்கை கொடி பிடித்தது தான் பிழையோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

அவருக்குத் தெரியாமல் அவரது கையில் சிங்கக்கொடியைக்  கொடுத்தது போல்,  திருகோணமலையில் புலிக்கொடி என்று தெரியாமலே அந்தக் கொடியை அவர் ஏற்றி இருக்கலாம் என்றொரு வாதத்தையும் வைக்க முடியும் அல்லவா?

large.IMG_6825.jpeg.147f26990adec1a6de71

இது வாதமல்ல. இது தான் உண்மை. நிச்சயமாக சிங்க கொடியையோ புலி கொடியையோ தனது விருப்பத்தின் பேரில் சம்பந்தர் பிடித்திருக்க மாட்டார்.  தனது மன விருப்பதிற்கு மாறாக அவர் செயற்பட்டார்.  இதை அவர் தனது சுயநலனுக்காகவே செய்தார்.  அவரது இந்த இரண்டு செயலும் தமிழருக்கு நன்மை எதையும் கொடுக்கவில்லை.  ஒரு அரசியல்வாதியாக அவர் பலனடைந்தார் எனக் கூறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

  வீம்புக்கு விதண்டாவாதம் செய்யக்கூடாது. ஆமா, தாம் உண்டு தம் தொழிலுண்டு என்று இருந்த தமிழரை கொன்று அவர் தம் சொத்துக்களை எரித்து உங்கள் பிரதேசத்துக்கு ஓடுங்கள் என்று கப்பலிலேற்றி சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாக விரட்டியவர்கள் வெற்றிக்களிப்பில் இருந்துகொண்டு மக்களை ஏற்ற கப்பல் விடுவார்களாம் அதை அவர்கள் அனுமதிக்கவில்லையாம். சாதாரண  பொதுமக்களே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் கோயில், வைத்தியசாலைகள் மீது குண்டு பொழிந்தது ஏன்? தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றியது ஏன்? உணவுக்களஞ்சியங்களை குண்டு போட்டு அழித்ததும் ஏன்? போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் தொகையை குறைத்து கணக்கு காட்டியது ஏன்? மீட்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம், தங்குமிட வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்? போரிலே சம்பந்தப்படாத சிறுவர் தங்கியிருந்த செஞ்சோலை மீது குண்டு போட்டு கொன்றதும் அங்கவீனர்களாக்கியதும் ஏன்? வன்னியில் சிக்குண்டவர்கள் தப்பித்துச் செல்லாதவாறும் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியுலகு அறியாதவாறு தடுத்ததும் யார்? அந்த மக்களுக்கான உணவு மருந்துகளை மறுத்தது யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டுவந்த கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியது யார் மக்கள் மீது அவ்வளவு அக்கறையிருந்திருந்தால்? ஏன்.... கோத்தபாய கொம்பனி பலதடவை  சொல்லியிருக்கிறார்கள், சர்வதேசம் போர்நிறுத்ததை வலியுறுத்தி தம்மை கட்டாயப்படுத்தியும் அதை ஏற்காமல் தாமே போரை நடத்தி புலிகளை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் என்றாரே. அப்போ, சர்வதேசம் புலிகளை காப்பாற்றவா போர்நிறுத்தம் கோரியது? போரை உருவாக்கியதே சிங்களந்தான். புலிகள் எங்கிருந்து உருவானார்கள்? ஏன் உருவானார்கள்? அவர்கள் உருவாவதற்கு முன் தமிழ் மக்கள் காயப்படவில்லையா கொல்லப்படவில்லையா? அல்லது வன்னியில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்களா? மக்கள் ஏன் வன்னிக்கு சென்றார்கள்? தங்கள் சொந்த இடங்களை விட்டு, ஏன் மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார்கள் அரசாங்கம் மக்களை காப்பாற்றியிருந்தால்?

சாத்தான், அமைதி கொள்ளுங்கள். உங்கள் போல ஹோம் வேர்க் செய்யாமல் வந்து உணர்ச்சி/பக்தி மயமாகக் கருத்தெழுதுவோருக்குப் பதில் சொல்ல புலிகளைக் குறிப்பிட்டு எழுத வேண்டியிருக்கிறது - உடனே "புலிகளை ஏன் இழுக்கிறீர்கள்?" என்று சண்டைக்கு வருகிறார்கள் -திரி திசை மாறுகிறது. எனவே உங்கள் அப்பிரண்டீசு வேலையை நிறுத்தினாலே எவரும் புலிகளை கையைப் பிடித்து இழுக்க வெண்டு வராது😎!

பி.கு: காயம்பட்ட பொது மக்களை ஏற்ற கப்பல் அனுப்பியது ICRC யும், MSF உம். கப்பல் அனுப்ப வேண்டி வந்தததன் காரணம், இராணுவப் பகுதிக்கு மக்கள் தரை வழியாகத் தப்பிப் போக முடியாமல் தடை இருந்ததால் (தடுத்திருந்தது சிங்கள இராணுவம் அல்ல!). கப்பலில் போக முயன்றவர்களைக்  கூட "முழங்காலுக்கு கீழே போயிருந்தால் போகலாம், பாதம் போயிருந்தால் போக முடியாது" என்று கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டன. "கப்பலில் இடம் காணாதல்லோ?" என்று நீங்கள் அடுத்த புருடாவை விட முதல்: கப்பல்  பாதி நிரம்பித் தான் எப்போதும் புறப்பட்டது.

எனவே, முள்ளி வாய்க்கால், இறுதிப் போர் பற்றிய உங்கள் "அம்புலிமாமாக் கதைகளை" நிறுத்தினால், நாமும் புலிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடலாம். அதை விட வேறு வழிகள் இல்லை!

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
    • போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.