Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   04 JUL, 2024 | 02:03 AM

image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர்  உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில்,  ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஆளுநருபழக்கு களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறும்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187629

  • Replies 76
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன்.  அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது.  சிவத்தமிழ்ச்செல்வி தங்

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவ

  • கந்தப்பு
    கந்தப்பு

    தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகன

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு; ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்துமூடல்! வடக்கு ஆளுநர் பணிப்புரை!
 
 
1215656767.jpg

 

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும், அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட் டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் குளிக்கும் இடத்துக்கு மேற்புறமாக கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்த சிறுமிகள். அதுதொடர்பில் தமது பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் இல்லத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீதியைப் பதிவு செய்வதற்காகவே கமரா பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருத்துமாறு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை ஆளுநருக்கு வழங்கப்பட்டதையடுத்து, அறிக்கைகளின் பிரகாரம் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதி பெறாத மற்றொரு இல்லத்தையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர் மேற்பார்வை செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யாமல் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார். (ச)
 

https://newuthayan.com/article/மாணவிகள்_குளிக்கும்_வீடியோக்கள்_பதிவு;_ஆறு.திருமுருகனால்_நடத்தப்படும்_சிறுவர்_இல்லம்_இழுத்துமூடல்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் ...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

large.IMG_6828.jpeg.81208c31261628ea3667

  • கருத்துக்கள உறவுகள்

இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா  

11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா  

சிவபூமி - சிவசேனை இரண்டும் ஒரே குட்டைகள். 

இதற்கும் முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் விடுதியை மூட உத்தரவு!

02-1.jpg

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அந்த விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

தெல்லிப்பளை பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நிலையம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் மற்றும் நன்னடத்தை பிரிவிற்கும், வடமாகாண ஆளுநருக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உடனடியாக அவ்விடுதியை மூடிவிட்டு, அதன் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305243

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சிவபூமி - சிவசேனை இரண்டும் ஒரே குட்டைகள். 

இதற்கும் முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளனர்.

இது பெரிய வீட்டு சமாச்சாரம் என்பதால் அமுக்கி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன். 

அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது. 

சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது முயற்சி, மற்றும் அவருக்கு ஒத்தாசை வழங்கியவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆதரவில் சிறப்பாக கோயிலையும், இதர நிர்வாகத்தையும் நீண்டகாலம் கொண்டு சென்றார். 

இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. 

தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின் செய்தி தளத்தில் இந்த செய்தி உள்ளது. ஆனால், இது துர்க்காபுரத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதியாக கூறப்படவில்லை. செய்தியை இணைத்தவர்கள் முடியுமானால் செய்தியின் உண்மை தன்மையை தெளிவுபடுத்தவும். 

இங்கு பொதுவான ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். 

இலங்கையில் க.பொ.த சாதாரணம் கற்றுவிட்டு க.பொ.த உயர்தரம் கற்கச்செல்லும் மாணவர்கட்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. 

குறிப்பாக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவிகள் உயர்தரத்திற்கு இடம்/பாடசாலை மாறவேண்டி உள்ளது. 

வீட்டு சூழ்நிலை இடம்கொடுக்காத நிலையில் (தங்கும் இடம் வாடகை, உணவு செலவு, ரியூசன் செலவு: ஒரு பாடம் கிட்டத்தட்ட மாதம் 1,250 ரூபா கட்டணம், போக்குவரத்து செலவு) இலவச விடுதிகளில் விலை குறைவான இடங்களில் சென்று தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 

நியாயம்,

மேலே உள்ள செய்திகள் வீரகேசரி, உதயன் மற்றும் தினக்குரல் செய்தித் தளங்களிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்வின் செய்தியை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை. 

செய்தியின் பிரகாரம் இதற்குப் பொறுப்பான ஆறுதிருமுருகனும் அவர் சார்ந்த சிவபூமியுமே இங்கு கண்டனத்துக்கு உள்ளாகியதே தவிர சிறுவர் விடுதியின் அவசியம் பற்றியதல்ல. சிவபூமி பற்றிய விமர்சனங்களில் எதுவித மாற்றமுமில்லை.

அது தவிர உங்கள் இரு கருத்துக்களிலும், நடைபெற்ற சம்பவத்தை - அது சட்டப்படி குற்றம் என்று தீர்க்கப்படாவிட்டாலும் கூட, இம்மியளவும் கண்டிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

https://tellidurga.com/about-our-temple/

தெல்லிப்பளை துர்க்கை சிறுவர் இல்லத் தகவல்கள் 👆

 

பிறிதொரு செய்தி 👇

யாழில் பாழடைந்த வீட்டில் சிறுவர் இல்லம்.

2024-07-04 06:50
facebook.pngtwitter.pngwhatsapp.pngviber.pngskype.png

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த தை மாதம் 03 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் கடந்த மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன் , ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில் , மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே படுத்து உறங்கி எழும்பும் நிலை காணப்பட்டுள்ளது.

அத்துடன் மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள் , குறித்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.

அதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் , யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பொறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலேயே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது.

அதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று , முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல் , தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.eyetamil.ca/news-story/14911/news

https://pagetamil.com/2024/07/04/தெல்லிப்பளை-சிறுவர்-இல்ல/

தெல்லிப்பளை சிறுவர் இல்ல விவகாரத்தில் பிரதேச செயலகம் மீதும் குற்றச்சாட்டு: சைவ சமயத்தின் பெயரால் மூடி மறைக்க முயற்சியா?

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம்

Sri Lanka PoliceJaffnaSri Lankan Peoples
 By Shankar 39 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 
Follow us on Google News
விளம்பரம்

 யாழ். தெல்லிப்ப்பளை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு முடியாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் இயங்கிவந்துள்ளது.

 

 

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில், மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே உறங்கும் நிலையில் காணப்பட்டுள்ளது.

மேலும், மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள், குறித்த வீட்டிலிருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.

 

 

 

இதேவேளை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

 

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பெறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலையே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது.

 

இதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று, முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல், தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

 

இந்த நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://jvpnews.com/article/children-s-homes-operating-worse-place-in-jaffna-1720121745

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கௌரவ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/

வட மாகாண சபையின் official web 👆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

 

இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. 

தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும். 

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 5ஆம்திகதி யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர் பத்திரிகையிலும்  ‘உதயன் பத்திரிகையில் வெளியான செய்திபற்றி உதயன் பத்திரிகையின் ஊடக அறத்தினை பற்றி இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளது’. PDF வடிவில் உள்ளதினால் இணைக்க முடியவில்லை

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

ஆமாம் நானும் பார்த்தேன்    மிகவும் கவலையளிக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் காழ்புணர்வுடன் சொல்லுகின்றது என்பது ஆறுதிருமுருகனுக்கு வேண்டியவர்களின் கூற்று. அப்படியானால் வடமாகாண ஆளுநரும் காழ்ப்புணர்வுடன் தான் செயற்படுகின்றாரா? 

மீண்டும் திறக்கப்படமுடியாதபடி இந்த குறிப்பிட்ட சிறுவர் இல்லம் மூடப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு யாருக்கு பொருந்திதோ இல்லையோ ஆறு திருமுருகன் ஐயா விடயத்தில் பொருந்தும் தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும்  வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள் 

எல்லாவற்றையும் வென்று அந்த துர்கை அம்மன் துணையுடன் மீண்டெழுவார் ஐயா ஆறு திருமுருகன் 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுண்டல் said:

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு யாருக்கு பொருந்திதோ இல்லையோ ஆறு திருமுருகன் ஐயா விடயத்தில் பொருந்தும் தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும்  வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள் 

எல்லாவற்றையும் வென்று அந்த துர்கை அம்மன் துணையுடன் மீண்டெழுவார் ஐயா ஆறு திருமுருகன் 

உங்கள் பிள்ளைகள் குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் வீடியோ எடுத்தாலும் இப்ப்டித்தன் சமயத்தை இழுப்பீர்களா?  

சரியான சுரணை கெட்ட ஆளாக இருக்கிறீரே சுண்டல்,...

🤣

(நான் என்ன எழுதுகிறேன் என்று தெரிந்துகொண்டுதான் எழுதுகிறேன்.)

 

4 hours ago, கந்தப்பு said:

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

விடியோ எடுத்ததைப் பற்றிக் கவலை இல்லை இந்த பன்னாடைக் கூட்டத்திற்கு. 

😏😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி ஒருத்தன் பூட்டிட்டு இல்லது பூட்டவைச்சு சதி செய்திட்டு பாவம் அந்தாள சாட்டினா ….. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

ஊடகத்திற்கு ஊடக தர்மம் 
அவசியல் இல்லையா?

எந்தவொரு ஊடகத்திற்கும் ஊடக தர்மம் என்ற ஒன்று முக்கியம். தனி நபரின் பெயரை செய்தியில் போடுவது முறையன்று. ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரது பெயரை வெளியிடாமல் இருப்பது ஊடக தர்மம். 

ஏன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் பெயர்களைக்கூட வெளியிட்தாக இல்லை.

நிலமை இவ்வாறிருக்க, தமிழர்கள் மத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக, தமிழர்களின் மரபுரிமைகளையும், தமிழ்த் தேசியத்தையும் பாதுகாக்கின்ற ஒருவராக இருக்கக்கூடிய ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் அற நிலையம் ஒன்றை எந்தவித விசாரணையும் இன்றி மூடுவதற்கு ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை பொருத்தமானதல்ல.

அந்தச் செய்தியை பிரதான தலைப்புச் செய்தியாக, தனி ஒருவரது பெயரை பிரதான தலைப்பில் போடுவது ஊடகத்திற்கு இழுக்கு.

ஈ.பி.டி.பி ஸ்ரீதர் தியேட்டரை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருப்பதைப் போன்று யாழ்.உதயன் பத்திரிகையும் தனி ஒருவரின் காணியை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருக்கின்றது. 

உதயன் பத்திரிகை நிறுவனம் இயங்கும் காணியை காணி உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கி அதற்கான எழுத்துமூல உடன்பாட்டையும் ஆறு.திருமுருகன் ஐயாவிற்கு வழங்கியுள்ளார் என அறியவருகின்றது. இது உதயன் தலைவர் சரவணபவனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.

காணியை ஆக்கிரிமிக்க கனவு கண்டவருக்கு இந்த காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டமை பொறுக்க முடியாது உள்ளது. இதனால் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தி, ஊடக தர்மத்தை மீறி ஆறு.திருமுருகன் ஐயாவைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இச்செய்திக்கு எதிராக ஆறு.திருமுருகன் ஐயா மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதை செய்யவேண்டும். 

போரில் பாதிக்கப்பட்டுள்ள அநாதைப் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்கும் உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரை இவ்வாறு பாதிக்கப்பட வைப்பதும் அவரது செயற்பாட்டைக் குழப்புவதற்கு முனைவதும் மிகக் கேவலமான செயல் ஆகும்.

வட்சப்பில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

இன்று 5ஆம்திகதி யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர் பத்திரிகையிலும்  ‘உதயன் பத்திரிகையில் வெளியான செய்திபற்றி உதயன் பத்திரிகையின் ஊடக அறத்தினை பற்றி இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளது’. PDF வடிவில் உள்ளதினால் இணைக்க முடியவில்லை

இன்றைய காலைக்கதிர் (பக்கம் 1,4) வந்த இந்த செய்தியை யாரவது இங்கு இணைக்கமுடியுமா?  

வலம்புரி பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகளிர் இல்லத்தினை மூடுமாறு ஆளுநர் உத்தரவு என்ற செய்தி தவறானது என்று வெளியிட்டிருக்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கந்தப்பு said:

இன்றைய காலைக்கதிர் (பக்கம் 1,4) வந்த இந்த செய்தியை யாரவது இங்கு இணைக்கமுடியுமா?  

வலம்புரி பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகளிர் இல்லத்தினை மூடுமாறு ஆளுநர் உத்தரவு என்ற செய்தி தவறானது என்று வெளியிட்டிருக்கிறார்கள்

kalaikathir-05-07.jpg

2.jpg

3.jpg

இதுவா ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

kalaikathir-05-07.jpg

2.jpg

3.jpg

இதுவா ஐயா?

நன்றி . 

முதல் பக்கத்தில் ‘இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் வந்த பெட்டி செய்தியும் , அதைதொடர்ந்து 4 பக்கத்தில் வந்த முழு செய்தியும் இணையுங்கள்

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.