Jump to content

சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

பதிவிடுவதும், அதற்கு வரும் லைக்குகளும் மனிதர்களை இலகுவாக அடிமையாக்குகின்றன போல. இது ஒரு போதை.

இவர் பேராதனை மருத்துவமனை என்றில்லை, இனி எங்கேயும் ஒரு மருத்துவராக வேலை செய்யும் மனப்பாங்கை இழந்து விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மருத்துவமனை நிர்வாகப் பணி இவருக்கு ஒத்து வரலாம், ஆனால் இலங்கையில் எந்த மருத்துவமனையில் இவரை ஒரு நிர்வாகியாக உள்ளே விடுவார்கள்.............

பேராதனை மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களின் மற்றும் நிர்வாகத்தினரின் பெயர்களையும் விபரங்களையும் அந்த மருத்துவமனையின் இணைய தளத்தில் சென்று பார்த்தேன். பலர் மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். உலகின் பல நாடுகளிற்கு இலகுவாகச் சென்று அங்கேயே வசதியாக வாழக் கூடிய நிலையில் இருப்பவர்கள். ஆனாலும் பேராதனை மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒருவர் தமிழர், சிலர் இஸ்லாமியர், ஏனையோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் போன்று தெரிகின்றது. அங்கேயும் இவர் குற்றம் தேடி பதிவிடுவதை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வது தான் இலட்சியம் என்றால், அங்கேயே மருத்துவ சேவையினூடே செய்யலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

நியாயம்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

Ahasthiyan

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

பொறுமை. முக்கியம்,.   ....... அர்ச்சுனா   சின்ன பையன் இந்த சமூகத்தில் அடிபட்டு  உருண்டு பிரண்டு   காயம்பட்டு அனுபவங்களை பெற்றுக் கொண்டு வரட்டும்   .... ஒரு இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் விருப்பம் போல் பொது வேட்பாளர். ஆவார் 🙏

அப்ப சுமந்திரன் அரசியலுக்கு வரேக்கை கடல் அளவு அனுபவம்..... :hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அப்ப சுமந்திரன் அரசியலுக்கு வரேக்கை கடல் அளவு அனுபவம்..... :hurra:

இல்லை தான்   இப்ப படிப்படியாக கிடைக்கிறது     தமிழரசு கட்சியை உடைத்தார்.    நீதிமன்றம் போனார். ....கூடிப்பேசினார்     நீதிமன்றத்திலிருந்து  வெளியில் வந்தார்   

படிப்படியாக வளர்கிறார்     🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இல்லை தான்   இப்ப படிப்படியாக கிடைக்கிறது     தமிழரசு கட்சியை உடைத்தார்.    நீதிமன்றம் போனார். ....கூடிப்பேசினார்     நீதிமன்றத்திலிருந்து  வெளியில் வந்தார்   

படிப்படியாக வளர்கிறார்     🤣

என்னதான் குத்தி முறிஞ்சாலும் நம்ம பெரியவர் சம்பந்தர்ர றெக்கோர்ட்ட உங்க ஒருத்தராலையும் அடிக்கேலாது :gutenmorgen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

படிப்படியாக வளர்கிறார்  

No No No

படிப்படியாக உடைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

No No No

படிப்படியாக உடைக்கிறார்.

நான் சொன்னது அவர் வளர்கிறார்.  என்று   நீங்கள் சொல்வது கட்சியை உடைக்கிறார். என்பது   இதுகுள்.   

No No.  No.  தேவையில்லை 🤣😂😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் அர்ச்சுனாவை பொது வேட்பாளரா போட்டால் என்ன என்று யாழ்களத்தில் பேசப்படுகின்றது
அவர் தான் ஒரு நேர்மையான மக்களுடைய உண்மையான அரசியல்வாதியாக இருப்பேன் என்று அறிவித்துள்ளார்.  தன்னை ஒரு யதார்த்தவாதி என்ற அப்படிபட்டவர்  ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்காக தமிழ் பொது வேட்பாளர் என்ற இவர்களது பகிடி வேலையில்  இறங்க மாட்டார் என்று நம்புகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன். 

மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை துணிகரமாக செயற்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். 

இங்கே அவர் புகழுக்காகவும், பேஸ்புக் லைக்ஸ் இற்காகவும் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கின்றார் எனும்படியாக பின்னூட்டங்கள் உள்ளன. 

உண்மையில் அவரது நிலையில் நின்று பார்த்தால் தனது இருப்பை தக்க வைக்க சமூக ஊடகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பை பேணவேண்டியது தனிப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் ஒன்றாகவும் காணப்படலாம். அவருக்கு எதிராக எத்தனை எதிரிகள் உள்ளார்களோ தெரியாது.  இந்தவகையில் பார்த்தால் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை அவர் இடுவதும், நேரலைக்கு வருவதும் தவறாக தெரியவில்லை. 

சமூகத்திற்காக குரல் கொடுக்க வந்த ஒருவரை பைத்தியக்காரன், தலை சுகமில்லாதவர், அங்கோடை கேஸ் என சிலர் விளிப்பது, கதை கட்டிவிடுவது எமது சமூகத்தின் தரத்தை காண்பிக்கின்றது.

காலங்காலமாக தாத்தா, பாட்டா, அம்மா, அப்பா என சாகவச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தைகள் பிறந்த சரித்திரம் மாற்றப்பட்டு ஆறு மாதங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரசவங்களே நடந்தன எனும்போது இந்த அசமந்த போக்கை, அக்கறையீனத்தை மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டியது பலருக்கு கெளரவ பிரச்சனையாகிவிட்டது.

தமது கெளரவங்களை காப்பாற்றிக்கொள்ள மருத்துவர் அர்ச்சனாவிற்கு தலை சுகம் இல்லை, இவர் புகழிற்கு அடிமையாகிவிட்டார் என பிரச்சாரம் செய்தால் தாம் தப்பிக்கொள்ளலாம் என தவறுகள் செய்தவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ. 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ மாபியாவுக்கு எதிராக போராட்ட நாடகம் அரங்கேற்றிய யாழ் வைத்தியர் அர்ச்சுனா கட்சி ஆரம்பிக்கிறார்!

மக்களிடம் நிதியுதவியும் கோருகின்றார்.   
 
காசு தரட்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவருக்கு... நாக்கிலை, சனி பகவான் உட்கார்ந்து  இருக்கின்றார் போலுள்ளது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

இவருக்கு... நாக்கிலை, சனி பகவான் உட்கார்ந்து  இருக்கின்றார் போலுள்ளது. 😂

மங்குசனி
பொங்குசனி
மரணசனி.

டாக்ரருக்கு இனித்தான் பொங்குசனி.
ஆனபடியால் பயப்படத் தேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மருத்துவ மாபியாவுக்கு எதிராக போராட்ட நாடகம் அரங்கேற்றிய யாழ் வைத்தியர் அர்ச்சுனா கட்சி ஆரம்பிக்கிறார்!

மக்களிடம் நிதியுதவியும் கோருகின்றார்.   

இவருடைய வழி இதுதான் என்று நான் கணித்திருந்தேன்

large.IMG_6889.jpeg.3bc17c67d39c8e33c91b

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kavi arunasalam said:

இவருடைய வழி இதுதான் என்று நான் கணித்திருந்தேன்

large.IMG_6889.jpeg.3bc17c67d39c8e33c91b

அவ்வப்போது மருத்துவர் அர்ச்சனா பற்றிய செய்திகளை பார்க்கின்றேன். கட்சி தொடங்குவது என அவர் முடிவெடுத்து நிதி ஆதரவு கேட்டால் எனது சிறிய பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன். 

சாவகச்சேரி/தென்மாராட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை; மக்கள் மக்களின் தேவைகளுக்கு உழைக்கக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கூறி உள்ளார். 

இவர் போன்று துணிவாக கதைக்கக்கூடிய, வீதியில் இறங்கி போராடக்கூடிய ஒருவர் கட்சி தொடங்கினால் அதற்கு நாம்ஆதரவை வழங்குவது சிறப்பு. மக்களின் அடிப்படை தேவைகள் பற்றி இங்கே உண்மையான கரிசனை கொண்ட ஒருவர் உழைக்கின்றேன் என திடசங்கற்பம் செய்யும்போது நாம் அதை நையாண்டி செய்தால் எங்களில் ஏதோ   குறைபாடு உள்ளது என்பது தவிர வேறு ஏதும் இல்லை. 

Edited by நியாயம்
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

எமது இனத்தின் சாபக்கேடு இது. தாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். ஆனால் ஒருத்தர் செய்ய என்று வந்து விட்டால் படை எடுத்து வருவார்கள் குறை பிடித்து ஓட ஓட விரட்ட. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எமது இனத்தின் சாபக்கேடு இது. தாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். ஆனால் ஒருத்தர் செய்ய என்று வந்து விட்டால் படை எடுத்து வருவார்கள் குறை பிடித்து ஓட ஓட விரட்ட. 

படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. 

அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை. 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன்.

இவர் பேராதனை பட்டதாரி.

படிக்கும் போதே ஒரு விளையாட்டு வீரராக (Basket ball)இருந்திருக்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் பேராதனை பட்டதாரி.

படிக்கும் போதே ஒரு விளையாட்டு வீரராக (Basket ball)இருந்திருக்கிறார்.

இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர்.  பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார்.

எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாலி said:

இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர்.  பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார்.

எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!

தகவலுக்கு நன்றி வாலி.

பிழையான தகவலுக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. 

அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை. 

ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக உங்கள் கருத்து உள்ளது, இவ்வாறு சிந்திக்கவில்லை, வாழ்க்கை அனுபவம் ஒரு Implicitly learning என்பார்கள், இதனாலேயே எமது கல்விசார் சமூகம்(Explicitly learning environment) மிகவும் தவாறான முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்களோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்தடைந்த மருத்துவர் அர்ச்சுனா!

587794566.JPG

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பேராதனை மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று சாவகச்சேரி மருத்துவமனைக்கு மீண்டும் வந்தடைந்துள்ளார்.

இவ்வாறாக மருத்துவமனைக்கு முன் நின்று கொண்டு "மீண்டும் எனது வீட்டுக்கு" என்ற ஒரு செய்தியை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அத்துடன் இன்று மாலை யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூடைப்பந்து ஆட்டத்தில் ஸ்புட்னிக் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  (ப)

https://newuthayan.com/article/மீண்டும்_வந்தடைந்த_மருத்துவர்_அர்ச்சுனா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 24/7/2024 at 13:57, தமிழ் சிறி said:

இவருக்கு... நாக்கிலை, சனி பகவான் உட்கார்ந்து  இருக்கின்றார் போலுள்ளது. 😂

எந்த மக்கள் ஆதரித்தார்களோ அவர்களே வைத்தியரை கலைக்கும் காலம் வரப்போகிறது போலுள்ளது..அவரது தற்போதைய பேச்சுக்கள் நடைமுறைகள் மக்களுக்கு பயனற்றவையாகவே இருக்கிறது..பணம் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்..உங்கள் விருப்பங்களை தடுக்கவில்லை.நல்ல முறையில் செயல்படுத்துவாரா என்பதை தற்போதைய பதிவுகளைப் பார்த்து விட்டு முடிவெடுங்கள்..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, யாயினி said:

எந்த மக்கள் ஆதரித்தார்களோ அவர்களே வைத்தியரை கலைக்கும் காலம் வரப்போகிறது போலுள்ளது..அவரது தற்போதைய பேச்சுக்கள் நடைமுறைகள் மக்களுக்கு பயனற்றவையாகவே இருக்கிறது..

நண்பர் ஒருவர் இந்தியன் 2 படம் திரையரங்கில் பார்த்தவர் படம் எப்படி என்று கேட்டேன் ஒரு விசர்  படம் என்றார். கதாநாயகன்  ஊழல் மோசடிக்கு எதிராக போராடுகின்றாராம் ஆனால் படத்தின் இறுதியில்  ஊழல் மோசடிக்கு எதிராக போராடி அவரை மக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்களாம்.அந்த படத்தில் வருவது போன்றா ஊழல் மோசடிக்கு எதிராக போரடிய டொக்டர் அர்ச்சுனாவை யாழ்பாணத்து மக்கள் கலைக்க போகின்றார்கள். டொக்டர் அர்ச்சுனாவின் பேச்சுக்கள் நடைமுறைகள் பயனற்றவையாக இருந்தால் கலைக்க வேண்டுமா சிறிதரன் விக்னேஸ்வரன் & Co. வின் பேச்சுகள் எந்தவிதமான பயனும் அற்றவையும் தீமையானவையும். இது வரை ஊழல் மோசடிகாரர்களையும்  கள்ள அரசியல்வாதிகளையும்  அவர்கள் கலைக்க இல்லை தானே.

டொக்டர் அர்ச்சுனா போராட்டத்தால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு  நிரந்தர மின் உற்பத்தி யந்திரம் வந்துவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சாவகச்சேரி பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து அனேகமானவர்கள் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கமே பேசி வந்தார்கள்..அது நான் உட்பட அது தான் நடந்தது..ஒட்டு மொத்த மக்களும் தன் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று நினைத்து கொண்டு வைத்தியர் எல்லாரையும் முட்டாளக்க கூடாது..கடந்த ஒரு மாதமாக என்ன செய்கிறார்..அதை சொல்லுங்கள்...... ஓடி, ஒடி அதைத் செய்தேன், இதை செய்தேன் என்று செவ்வி குடுத்து கொண்டு இருக்கிறாரே தவிர.. ஏதாவது உருப்படியா நடக்கிறதா..சுகவீன விடுப்பு எடுத்து கொண்டு போய் நின்று விளையாட்டு நடக்கிறது..சரி அது அவர் விருப்பம் என்றே வைத்து  கொள்வோமே,நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை சொல்லித் தான் அர்ச்சனாவின் சட்டதரணியும் மேற் கொண்டு கருத்துக்களை வைக்க சொல்லி எழுதி இருந்தார்..அதாவது காமடி.

அர்ச்சனா இணையத்திலிருந்து என்ன செய்கிறார்..?

போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..? தனது தந்தை போராளித் தலைவரின் முக்கிய பொறுப்ப்பிலிருந்தவராம்...அப்படி பட்டவர்கள் மதுப் பிரியர்களாக இருந்திருந்தால் பெரிய, பெரிய பொறுப்புக்களில் இருந்திருப்பார்களா.?.இருந்திருக்க முடியுமா.?அவர் வீட்டில் அவரது பெற்றோர் பிள்ளைகளுக்கு மது கொடுப்பது வழமையாம்.இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவா இருக்கிறது...

பல தரப்பட்ட வயதுடையவர்களும் வந்து போகும் இடங்களில் ஒன்று முகனூல் அதில்  தான் எவ்வளவு மது ஒருவர் எடுக்க வேணும் என்பது பற்றி வேணும் என்றால் சொல்கிறாராம்..தானும் மண்ணாகி மற்றவர்களையும் மண்ணாக்குவது என்பது இது தான்...இப்படி நிறைய, நிறைய இவரைப் பற்றி அப்டுடேற்றா வாசித்திருக்கிறேன்.

இவர் உண்மையாக மக்களுக்கு பணியாற்றத் தான் படித்தார் மற்றும் பணியாற்றத் தான்
 யாழ்ப்பாண பக்கம் போனவர் என்றால் நேரத்தை வீணடிக்க மாட்டார்..ஒரு மீடியாகாரரை பேசும் போது கெட்ட வார்த்தை பாவித்தார் அது உங்களுக்கு தெரியுமா.?

சுய அறிவோடு நின்று பேசும் எந்த மனிதர்களது வாயிலும் அப்படியான வார்த்தைகள் வரவே வராது..அதுவும் ஒரு படித்தவர் வாயிலிருந்து அப்படியான வார்த்தைகள் வரவே கூடாது..மற்றவர்கள் மேல் விரல் நீட்ட முதல் நாங்கள் சரியாக இருக்கிறமா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேணும்.

எனது நோக்கம் பிழை பிடிப்பதோ அவருக்கு போகும் உதவிகளை தடுப்பதோ அல்ல.மொத்தத்தில் ஒரு வைத்தியரையும் கன்டிகப்ற் ஆக்குறீங்கள்..நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, யாயினி said:

போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?

நான் வீடியோ பார்க்கவில்லை  தெரிந்தவர்கள் சொன்னார்கள் போதை பாவிப்பது தவறு இல்லை என்கின்ற மாதிரி அவர் சொன்னதாக. தவறே தான் 😟

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.