Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   16 JUL, 2024 | 04:59 PM

image
 

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது.

கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முக்கியஸ்தர்கள்,பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

IMG_20240716_153339.jpg

IMG_20240716_151232.jpg

IMG_20240716_151718.jpg

IMG_20240716_152331.jpg

IMG_20240716_153909.jpg

IMG_20240716_152321.jpg

IMG_20240716_151653.jpg

IMG_20240716_151554.jpg

https://www.virakesari.lk/article/188625

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களே போட்டு தள்ளி அவங்களே சிலையும் வைக்கிறார்கள் .😃

மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர்.

எம் இனத்தில் எம்முடன் கூடப் பிறந்த  ஒற்றுமையின்மை மற்றும் ஒத்துழையாமை போன்ற நோய்களால், மலினமான அரசியல் செய்து, சகோதர இயக்க படுகொலைகளின் முன்னோடியாக, தன் இயக்கத்தில் இருந்தவர்களையே போட்டுத் தள்ளி, பின்னர் அதே தன் இயக்கத்தாலேயே (டி.சிவராமின் திட்டத்தினால்) படுகொலை செய்யப்பட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

காவல்நிலையத்தில் காந்தி படமும் கள்ளர் படமும் இருப்பது போல் இதுவும் இருப்பது நல்லது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் கள்ளத் தொடர்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் சிலை வைக்கின்றார்கள்.  😁

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கோவிக்க மாட்டாரா??

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

சம்பந்தர் கோவிக்க மாட்டாரா??

சம்பந்தன்… சிங்களத்துக்கு செய்த சேவைக்கு, பாராளுமன்றத்தில் அவரின் சிலையை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

சம்பந்தர் கோவிக்க மாட்டாரா??

இவருடன் ஒப்பிட்டால் சம்பந்தரே வெட்கப் படுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர்.

நிச்சயமாக.

சிங்களத்திற்கெதிரான திடகாத்திரமான, கடும் பயிற்சி பெற்ற பெரும் தொகையான போராளிகளை கொண்ட ராணுவ கட்டமைப்பொன்றை முதன் முதலில் உருவாக்கியது உமாமகேஸ்வரனையே சாரும். அக்காலத்தில் போதியளவு நவீன ஆயுதங்களும் பொருளாதார வசதிகளும் இருந்திருந்தால் புளொட் கையினால் சிங்கள ராணுவமும் இலங்கை தேசமும் சின்னாபின்னமாயிருக்கும்.

இங்கே ரஞ்சித் இணைத்த போராட்ட ஆரம்பகால தொடரை பார்த்தபோது ஆரம்ப நாட்களில் புளொட் போராளிகள் சிங்கள இயந்திரத்திற்கெதிராக நடத்திய துணிகர தாக்குதல்கள், ரவுடிகள் துரோகிகள் களையெடுப்புக்கள், தலைமறைவு வாழ்க்கை, சிங்களத்தால் கைதுக்கள் சித்திரவதைகள் என்று கணிசமான போராட்ட பங்களிப்பை தியாகத்தை எம் மண்ணிற்காக உமா தலைமையிலான புளொட் வழங்கியிருந்தது.

 பொருளாதார வசதியின்மையும் , இந்தியா புளொட்டின் ஆயுத கப்பலை பறிமுதல் செய்ததும் அதனால் தின்றுவிட்டு தூங்கும் நிலைக்கு ஆயிரக்கணக்கான புளொட்டின் போராளிகள் வந்ததும், ஊர்மிளா விஷயமும் ,புலிகளுடனான மோதல் போக்கும், தனது அமைப்பின் போராளிகள் படுகொலைகளும் புளொட்டின் பாதையை படிப்படியாக மாற்றி பின்னாளில் சோத்து பாசல் என்று கேலி செய்யப்பட்டு முடிவில் சிறு குழுபோலாகி காலமாற்றத்தில் இலங்கை அரசுடனும் சேர்ந்து மாணிக்கதாசன் உபயத்தில் தமிழின படுகொலை அமைப்பாகவும் ஆகி பின்னாளில் தலைமைத்துவத்தையும் படுகொலை செய்து தேய்ந்து மறைந்து போனதை எதுவென்று சொல்ல?

ஆனால் இன மீட்புக்காக சிங்கள அரசமைப்பில் வகித்து வந்த அரச உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு அவர்களுக்கெதிராக ஒரு தமிழ் ராணுவத்தை கட்டிமைத்து போராடிய அந்நாளைய உமாமகேஸ்வரன் ஒன்றும் சாதாரணமானவரல்ல,

தமிழர் பகுதியின் வீதிக்கு வீதி சிங்கள கூலிபடைகள் நின்ற   அக்காலத்தில் சிங்கள தேசத்துக்கு எதிராய் போராட்ட இயந்திரத்தை கட்டியெழுப்பிய அந்நாளைய வீரமிக்க உமாமகேஸ்வரனுக்கு மட்டும் அஞ்சலிகள், அதன் பின்னர் திசைமாறிய  உமாமகேஸ்வரனுக்கு அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, valavan said:

 

ஆனால் இன மீட்புக்காக சிங்கள அரசமைப்பில் வகித்து வந்த அரச உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு அவர்களுக்கெதிராக ஒரு 

தமிழர் பகுதியின் வீதிக்கு வீதி சிங்கள கூலிபடைகள் நின்ற   அக்காலத்தில் சிங்கள தேசத்துக்கு எதிராய் போராட்ட இயந்திரத்தை கட்டியெழுப்பிய அந்நாளைய வீரமிக்க உமாமகேஸ்வரனுக்கு மட்டும் அஞ்சலிகள், அதன் பின்னர் திசைமாறிய  உமாமகேஸ்வரனுக்கு அல்ல.

ஒரு போராளியிடம் இருக்கக்கூடாத பலவீனங்களை அவர் கொண்டிருந்தார். எனவே அதுவே அவருக்கு எமனானது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

ஒரு போராளியிடம் இருக்கக்கூடாத பலவீனங்களை அவர் கொண்டிருந்தார். எனவே அதுவே அவருக்கு எமனானது.

என்னுடன் படித்த நண்பர்கள் இருவர் ஒருவர் பெயர் சேனதிராசா  சண்முகவடிவேல்.  இவன் என்னுடன் கைதடியில் ஒரே படசாலையில். படிந்தவன். சண்முகம்    என்று அழைப்போம். சகோதரங்கள். ஒன்பது பேர்   வறுமைப்பட்ட. குடும்பம்  உமாவின். இயக்கத்தில் முக்கியமானவன். 1976  ..... 1977   ஆண்டளவில் பலரையும் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினவன். என்னையும் கேட்டான்   நான் வீட்டைப் பார்க்க வேண்டும்    உதவி செய்கிறேன்   என்று   சொன்னேன்,...அவன் அடிக்கடி  காணமால் போய்விடுவன்.   பத்தாவது வகுப்பில்   தூய கணிதம்  பிரயோக கணிதம்  பௌதிகவியல்.  மூன்று படங்களிலும். Dஆக 3D. எடுத்து இருந்தேன்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அந்த நேரம் 10 பேர் தான்  பௌதிகவியலில். D எடுத்தார்கள்    அதில் கிராம புறத்தை  சேர்ந்த நானும் ஒருவன்   சண்முகம் உட்பட  பத்து நண்பர்களின்   கோரிக்கைக்கு அமைய. கைதடி சந்தியில்    ஆரியபாவனில்.  தேனீர்  வடை ரீசியம்.      வேண்டி கொடுத்தேன்”   அவனை அன்று தான்  கடைசியாகக் கண்டது    

மற்றையவன். செல்லத்துரை தர்மலிங்கம்.   யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் முதலாவது ஆண்டு பௌதிகவியல். பட்டதாரி. மாணவன்    

இரண்டு பேரும்  சிறந்த நண்பர்கள்  எனக்கும் தான்   

1984 இல் மார்கழியில். இங்கே வந்து விட்டேன்   

1986 இல்  இரண்டு புளட் இயக்க. நண்பர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள்  ஒருவரின் பெயர்  சுரேஷ்   மற்றவர். பெயர் தெரியாது    இவர்களை   இயக்கம்  சுட்டதாக  அதாவது புளட் சுட்டு. கொன்று விட்டது”   இந்த சண்முகம் சாவகச்சேரி பெறுப்பாளர். ஆகும் மிகவும் கவலையளித்தது 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்… சிங்களத்துக்கு செய்த சேவைக்கு, பாராளுமன்றத்தில் அவரின் சிலையை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். 😂

சிங்கள தேசியக்கொடியை ஆட்டினவருக்கு அவர் இறப்புக்கு அரைக்கம்பத்தில் கூட விட சிங்கள இனவாதம் விரும்பவில்லை அதுதான் சிங்களம் இதே நிலைதான் சிங்கள அரசுடன் இருக்கும் பிள்ளையான் கருணா அங்கஜன் டக்களஸ் போன்றவர்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

உமாமகேஸ்வரன் கொலை:சித்தார்த்தனிற்கு தெரியுமாம்?

plote.jpg
புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் அதன் தற்போதைய தலைவர் த.சித்தார்த்தன் அறிந்திருந்ததாக கழக முக்கியஸ்தர் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சிலர் உமா மகேஸ்வரனின் மரண தண்டனையை யாரோ சிலர் கூலிக்காக செய்தது போல் காண்பிக்க முற்படுகிறார்கள்.
 
மாணிக்கதாசன் எனக்கு தகவல் தருகையில் கொழும்பில் இருந்த புளொட் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த தலைவர் உமாவை பார்த்து பேச வேண்டும் என்று தகராறு பண்ணினார்கள் என தெரிவித்திருந்தார்.பின்பு கல்கிசையில் ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன் சந்திப்பு நடந்த போது தோழர்களும் உமா மகேஸ்வரனும் மிகப்பெரும் வாக்குவாதபட்டனர். உமா மகேஸ்வரன் தோழர்களை பார்த்து நீங்கள் எல்லாம் இயக்கத்தை விட்டு போங்கள் என்னால் புது இயக்கம் கட்டியெழுப்ப முடியும் எனக்கூறினார்.அப்போது மாறன் போன்ற தோழர்கள் மிகக் கடுமையாக ஆரம்பத்திலிருந்து அக்காலம் வரை உமாமகேஸ்வரன் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டியதோடு அத்துலத் முதலியின் தொடர்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். மாணிக்கம்தாசனும் சித்தார்த்தனும் தோழர்களை சமாதானப்படுத்த செய்த முயற்சி பலிக்கவில்லை எனக் கூறினார். அங்கிருந்த அவ்வளவு தோழர்களும் உமா மகேஸ்வரனைபதவியில் இருந்து துரத்த வேண்டும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசியிருக்கிறார்கள்.
uma.jpg
அச்சமயம் கொழும்பு நிர்வாகப் பொறுப்பில் என்னைத்தான் போட்டிருந்தார்கள். என்னை அங்கு வர முடியுமா என மாணிக்கம் தாசன் கேட்டார். நான் இந்த நேரத்தில் அங்கு வர விரும்பவில்லை என கூறினேன் . பொடியங்கள் எல்லோரும் பெரியவருக்கு எதிராக இருக்கிறார்கள் என்ன நடக்குமோ தெரியாது என அவர் கூறினார். இதன் பின்புதான் எல்லோரும் கலந்துபேசி இரகசியமாக தலைவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தார்கள்.
 
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் மனம் திறந்தால்; முழு உண்மைகள் தெரிய வரும். அந்தக் கூட்டத்திற்கு பின்பு எடுத்த நடவடிக்கைகளதான் இது. இதில் ஆறும் பேர் உமாமகேஸ்வரனை கூலிப்படையாக கொலை செய்ய செயல்படவில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் அப்படி கூலிப்படையாக செயல்பட்டு இருந்தால் அதற்கு தலைமை தாங்கியவர்கள் மாணிக்கதாசன் மற்றும் சித்தார்த்தன் மற்றும் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் அனைவரும் தான் என வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!

 

AVvXsEj8vCKIZp99QnriTuTUGY5i3s9TFh7Ize8uXrS4OcTMASOlt-nycRnPxMP6mdXCA4pqj-qm9edEZbKW-SyzsJnrXBkI1f5phbW3GXn7ZRBvfkR3_CG6F1LsnsqttU-uD-EXdd-L8MAIxq1yU6qfJi-40GCLpjQDbSIKkvM20xGsiKHR70cg_O3PKKvwvw=s16000


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயலாளருமான - 'ஆனந்தி அண்ணர்' என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சதானந்தன் அவர்கள் நேற்று ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் யாழில் நடைபெற்றது.

 

1945 மே 16இல் யாழ் .உடுப்பிட்டி கொம்மாந்துறையில் பிறந்தவர்.

தேசிய தலைவர் மற்றும் ஆரம்ப காலப்போராளிகள் பதுங்கியிருந்த மண்ணே கொம்மாந்துறையாகும்.  

புளொட் அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளையும் நன்கு அறிந்துகொண்டிருந்த போதும், அவற்றை மௌனமாகக் கடந்து சென்றவர் ஆனந்தி. அன்று அவர் அவற்றை விமர்சிக்க முற்பட்டு இருந்தால் அவர் சில தசாப்தங்களுக்கு முன்னரேயே காலமாகி இருப்பார் இல்லையேல் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பார். ஆரம்பத்தில் சந்ததியாருடன் நெருக்கமாக இருந்தமையாலும் சந்ததியார் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இவரையும் உமாமகேஸ்வரன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். அதன் பின்னர் ரகுமான் ஜான் உட்பட தீப்பொறி குழுவினார் வெளியேறிய போதும் ஆனந்தியும் கண்காணிக்கப்பட்டார். அதன் பின்னாக ஆனந்தியும் தவிர்க்க முடியாமல் உமாமகேஸ்வரனின் விசுவாசியானார். அவர் புளொட்டில் நடைபெற்ற அத்தனை அராஜகங்களையும் மௌனமாக சகித்துக்கொண்டார். கடைசியில் உமா மகேஸ்வரனதும் மாணிக்கதாசனதும் கொலைகளைக் கூட ஏற்கனவே அறிந்திருந்தும் அவற்றை மௌனமாகவே கடந்து சென்றார். 

ஆனந்திக்கு பிள்ளைகளும் இல்லாததால் அவரும் அவருடைய துணைவியாரும் இளம் போராளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதியதும் உண்டு. அவ்வாறான ஒரு வருடன் ஆனந்தி மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன் உரையாடி உள்ளார். அந்த உரையாடலில் காந்திய காணி தொடர்பாகவும் உமா மகேஸ்வரனதும் மாணிக்கதாசனதும் படுகொலைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவரையும் கடந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றார். மாணிக்கன்தாசனின் மெய்பாதுகாவலரான சிவா, புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான பவான் மற்றும் ஆர்.ஆர்(தராகி சிவராம் கொலையாளி) ஆகியோரும் காந்திய காணி பற்றிய உரையாடலை அறிந்து வைத்துள்ளனர். மேலும் இந்திய றோ முகவரான வெற்றிச்செல்வன் எழுதும் பல புரட்டுகளுக்கு ஆனந்தி அவர்கள் பதில் எழுத ஆரம்பித்துள்ளதாகவும் கூறி இருக்கின்றார். இன்றைய புளொட் அமைப்பின் அச்சாணியாக இருக்கின்ற ஆர்.ஆர்(தராகி சிவராம் கொலையாளி) ரோ வெற்றிச் செல்வனின் வரலாற்று புரட்டுகள் பற்றிய திரிபுகளுக்கான பதிலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

https://www.pathivu.com/2021/10/subramaniam sathananthan94.html

  • கருத்துக்கள உறவுகள்

வேறுபாடு 

தேசியத் தலைமைக்கு உலகத் தமிழர்கள் ஒருபோதும் சிலை வைக்கப் போவதில்லை. ஆனால் வரலாறு முழுவதும் தமிழினம் பிரபாகரனையும் அவன் பிள்ளைகளையும்  நெஞ்சில் வைத்துப் பூசிக்கும். 

ஆனால், 

மறக்கப்படும், மறக்கப்பட்ட மனிதர்களுக்கு சிலை வைத்து நினைவுபடுத்த வேண்டிய தேவை சித்தார்த்தன் வகையறாக்களுக்கு  இருக்கிறது. இந்த மறக்கப்பட்ட மனிதர்களை தமிழினம் வரலாறு முழுவதும் இழிவாகத்தான் பார்க்கும்’ என்பதற்கு நாமே சாட்சி. 

அதெல்லாம் சரிதான், 

அயோக்கியர்களுக்காக  சிலை வைக்கும் அயோக்கியர்களை என்ன சொல்வது? 

😏

7 hours ago, நிழலி said:

மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர்.

எம் இனத்தில் எம்முடன் கூடப் பிறந்த  ஒற்றுமையின்மை மற்றும் ஒத்துழையாமை போன்ற நோய்களால், மலினமான அரசியல் செய்து, சகோதர இயக்க படுகொலைகளின் முன்னோடியாக, தன் இயக்கத்தில் இருந்தவர்களையே போட்டுத் தள்ளி, பின்னர் அதே தன் இயக்கத்தாலேயே (டி.சிவராமின் திட்டத்தினால்) படுகொலை செய்யப்பட்டவர்.

தலைவருக்குரி ஒரு பண்பும் இவரிடம் இல்லை என்பது என் கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உமாமகேஸ்வரன் கொலை:சித்தார்த்தனிற்கு தெரியுமாம்?

முழுக்கொலை பற்றியும் இவருக்கு (சித்தாத்தனுக்கு) தெரியும். தனியாக நின்று வெல்ல முடியாததால் கூட்டமைப்புடன் ஒட்டிக்கொண்ட பக்கா சுயநலவாதி இப்போ உமாவுக்கு சிலை வைக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வேறுபாடு 

தேசியத் தலைமைக்கு உலகத் தமிழர்கள் ஒருபோதும் சிலை வைக்கப் போவதில்லை. ஆனால் வரலாறு முழுவதும் தமிழினம் பிரபாகரனையும் அவன் பிள்ளைகளையும்  நெஞ்சில் வைத்துப் பூசிக்கும். 

ஆனால், 

மறக்கப்படும், மறக்கப்பட்ட மனிதர்களுக்கு சிலை வைத்து நினைவுபடுத்த வேண்டிய தேவை சித்தார்த்தன் வகையறாக்களுக்கு  இருக்கிறது. இந்த மறக்கப்பட்ட மனிதர்களை தமிழினம் வரலாறு முழுவதும் இழிவாகத்தான் பார்க்கும்’ என்பதற்கு நாமே சாட்சி. 

அதெல்லாம் சரிதான், 

அயோக்கியர்களுக்காக  சிலை வைக்கும் அயோக்கியர்களை என்ன சொல்வது? 

😏

தலைவருக்குரி ஒரு பண்பும் இவரிடம் இல்லை என்பது என் கருத்து. 

மிக அருமையான கருத்து. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

தலைவருக்குரி ஒரு பண்பும் இவரிடம் இல்லை என்பது என் கருத்து. 

உண்மை தான்   இவரது இயக்கத்தில் வடமாகாணத்துக்கு பொருப்பாக். எக்கவுனடன். நல்லையாவின். மகன் தயாபரன். இருந்தான்.  பொறியியல் இரண்டாவது ஆண்டு மாணவன்   படிப்பை விட்டுட்டு இயக்கத்தில் சேர்ந்தவன்.  இயக்கப்பெயர்  சந்திரன்   இயக்கத்திலிருந்துமிடையில். விலகி விட்டான். கைதடி சொந்த ஊர்  இப்போது கனடா இல் குடும்பமாக வாழ்கிறார்கள் 

மற்றும் எனது நண்பன் சண்முகம்  சாவகச்சேரி பொறுப்பாளர்    அவன்  தனது நண்பனுக்கு. எனக்கும் நண்பர்கள் தான்  கடிதம் எழுதினான்.  எல்லோரும் பச்சை கள்ளன்கள்  ஆயுதம் ஆள்கள் இருந்தும்  போரடவில்லை   காலம் வீணணாகப். போய்க் கொண்டுருக்கிறது      புளட்டை சேர்ந்த இரண்டு பேரை அடைக்கலம் கொடுத்து  கைதடியில். வைத்து இருந்ததை கண்டு பிடித்து  சண்முகம் மற்றும் தர்மலிங்கம் இருவரையும். சுட்டு விட்டார்கள்   இருவரது தாய்மாரும். தெரு தெருவாக. அழுது திரிந்தார்கள் உமா இடம் பேச்சு எற்ப. செயல்கள இல்லை   இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகிக்கலாம். ஆனால்  ஆயுதப் போராட்டங்களை செய்யும் அமைப்புக்கு இல்லை   அதுக்கு பிரபாகரன் தான்  சரியான ஒரே நபர் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Kapithan said:

தலைவருக்குரி ஒரு பண்பும் இவரிடம் இல்லை என்பது என் கருத்து. 

பிளட் இயக்கம் மற்றும் உமாமகேஸ்வரன் பற்றி ஒரு ஊடக பேட்டியில் யாழ்கள உறவு @arjun   அவர்களே நல்லமாதிரியாக சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

உண்மை தான்   இவரது இயக்கத்தில் வடமாகாணத்துக்கு பொருப்பாக். எக்கவுனடன். நல்லையாவின். மகன் தயாபரன். இருந்தான்.  பொறியியல் இரண்டாவது ஆண்டு மாணவன்   படிப்பை விட்டுட்டு இயக்கத்தில் சேர்ந்தவன்.  இயக்கப்பெயர்  சந்திரன்   இயக்கத்திலிருந்துமிடையில். விலகி விட்டான். கைதடி சொந்த ஊர்  இப்போது கனடா இல் குடும்பமாக வாழ்கிறார்கள் 

மற்றும் எனது நண்பன் சண்முகம்  சாவகச்சேரி பொறுப்பாளர்    அவன்  தனது நண்பனுக்கு. எனக்கும் நண்பர்கள் தான்  கடிதம் எழுதினான்.  எல்லோரும் பச்சை கள்ளன்கள்  ஆயுதம் ஆள்கள் இருந்தும்  போரடவில்லை   காலம் வீணணாகப். போய்க் கொண்டுருக்கிறது      புளட்டை சேர்ந்த இரண்டு பேரை அடைக்கலம் கொடுத்து  கைதடியில். வைத்து இருந்ததை கண்டு பிடித்து  சண்முகம் மற்றும் தர்மலிங்கம் இருவரையும். சுட்டு விட்டார்கள்   இருவரது தாய்மாரும். தெரு தெருவாக. அழுது திரிந்தார்கள் உமா இடம் பேச்சு எற்ப. செயல்கள இல்லை   இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகிக்கலாம். ஆனால்  ஆயுதப் போராட்டங்களை செய்யும் அமைப்புக்கு இல்லை   அதுக்கு பிரபாகரன் தான்  சரியான ஒரே நபர் 🙏

உமா தொடர்பாக அவரது சகாக்கள் கதை கதையாகக் கூறுவார்கள்  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.