Jump to content

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலவு காத்த கிளி” 

நாங்கள் தமிழர்கள். பழமையை  என்றும் பழுதடைய விட்டதில்லை. பழுதடைந்த சம்பந்தரையும் சுமந்திரனையுமே பாராட்டி வந்தவர்கள், இந்தப் பழமொழியையும் பழுதடைய விடமாட்டோம்.🤫

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%

இன்னுமா... இந்த உலகம் நம்பளை நம்புது. 😂
ஆமா... அது, அவங்க விதி. 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுமந்திரனின் வழமையான செயற்பாடுதான். சிங்களத்துக்கு வாக்கு போடாவிட்டால் நாம் ஒன்றும் தீர்வு காணமுடியாது என்று பயமுறுத்துவது, அப்படி காலம் காலமாய் போட்டு என்னத்தை கண்டோம்? அது சரிவரவில்லையோ .... இதோ! தேர்தல் முடிந்த கையோடு தீர்வு, நான் தனிநபர் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டேன் என்பார். உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை, தமிழ்  மக்களின் பிரச்சனைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று நடைமுறைப்படுத்துவது மட்டுந்தான் பாக்கி என்றார், பின்னர் ரணில் ஏமாற்றி விட்டார் என புலம்பினார். ரணிலோ தற்காலிக ஜானாதிபதியானவுடன், சுதந்திர தினத்துக்குமுன் தீர்வு என்று வேறு சொன்னார், எதுவும் நடக்கவில்லை. உறுதியளிக்கும்போது தெரியாதா அவருக்கு இது எவ்வளவு அசாத்தியம்  என்று? அப்போ பொழுது போக்குக்கு சொன்னாரா?  உதெல்லாம் தேர்தற் பேச்சு, தேர்தல் முடிந்தால் போச்சு. அவசரமாக தேர்தல் தீர்வு பொதி தயார்! அவர்களிடம் தமிழருக்கான தீர்வு ஏதும் இருந்திருந்தால் ஏன் இவ்வளவுகாலமாக இழுத்தடிக்கிறார்கள்? இன்னும் ஏன் நமது நிலத்துக்குள்  ஊடுருவுகிறார்கள்? தடை ஏற்படுத்துகிறார்கள்? திருப்பித்தரவேண்டாம், இருக்கிறதையே அச்சுறுத்தி பிடுங்குகிறார்கள். சிங்களத்தை நாடிபிடித்துப்பார்க்க சுமந்திரனுக்கு அனுபவமில்லை அல்லது சுயநலம் விடவில்லை. மக்களோடு மக்களின் பிரச்சனையில் பிரசன்னமாகாதவர், அவர்களின் பிரச்சனை என்னவென்று தெரியுமா? சிங்களத்தோடு சேர்ந்து வாழ்வது அவரது இனிய அனுபவத்தில் நமது பிரச்சனை தெரிய வாய்ப்பேயில்லையே. கோத்தபாய தப்பி ஓடும்வரை அரகலியாவை  ரசித்தவர் பதவிக்கு  வந்தவுடன் அதை எவ்வாறு சிதைத்து தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து தனது காரியத்தை நிறைவேற்றினார். ஆனால் பேரின வாதிகள் தமிழருக்கெதிராக  முழக்கமிடும்போது ஏன் அமைதியாக இருந்தார்? அவரால் செய்ய முடியாததல்ல, செய்ய மாட்டார்கள். ஆசை காட்டி தமது  இருப்பை தக்க வைத்துக்கொள்வார்கள் இந்தப்பிரச்சனை. இல்லாவிடில் அவர்களால்  அரசியல் செய்ய முடியாத  அனாதையாகி  விடுவார்கள். பார்க்கவில்லையா நாமல்த் தம்பி சொன்னதை?  தமிழரோடு அதிகாரங்களை பகிரவிரும்பாமல், இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் அடைந்து நிராதரவாய் நிற்கும்போது மன்னிப்பு கேட்க்காதவர், அதிகாரங்களை பகிர முன்வராதவர், ஏன் வெற்றிவிழாக்களில் பெருமிதமாக தோன்றியவர், இவ்வளவு காலமும் இல்லாமல் தேர்தல் வரும்போது, ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ வருவதை விரும்புகிறாராம். அதை ஏன் இவ்வளவு காலமும் அறிவிக்கவில்லை? இது நடக்கக்கூடிய காரியமா? ஒருவேளை சிங்களமக்கள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க தொடங்கிவிட்டால்; என்கிற சந்தேகம் வர ஆரம்பித்து அதை தடுக்க எடுக்கும் நடவடிக்கையாக இருக்குமோ? அதிகாரங்களை பகிருகிறோம் என்றால் மீள் பரிசீலனை செய்யலாம், இது நடைபெற முடியாத காரியம், வேண்டுமென்றால், சுமந்திரன் டக்கிளஸ் இன்ன பிறர் நம்பலாம். நாங்கள் உங்களை நன்றாகவே கணித்து வைத்துள்ளோம். இவர்களின் தேர்தல் வாக்குறுதி,  வடக்கில்; "பிரச்சனையை தீர்க்கிறோம்." தெற்கில்; "தமிழருக்கு உரிமை ஏதும் இந்த நாட்டில் இல்லை." இதுதான் இவர்களின் தேர்தல் மூலதனம். இதை தமிழர் நாம் தெரிந்து இந்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து நிலைத்து நிற்போமானால், பின்னாளில் தெற்கும் மாறும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்குப் பின்னரல்ல, தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படல் வேண்டும்.  மீண்டும் ஏமாற்றுவதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார்.  அதனைத் தமிழர்கள் நன்கறிவார்கள்.  சுமந்திரனுக்கு இதில் ஏதாவது இலாபம் கிடைக்கலாம், அதனால் ரணிலுடன் சேர்ந்து தமிழர்களை எமாற்றப் பார்க்கிறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள்   தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த  தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது  என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது.  தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.   ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி  எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும்.

இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட)  ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு  கேட்பது  ஒன்றே  ஜதார்தத பூர்வமானது.  எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில்  இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும்  அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை.  இப்போது இதை செய்ய தவறினால்,  முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட  மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான். 

எம்மவர்களுக்கு மறதி அதிகம். 

அவர்களின் கண்களுக்குத் தெரிவது சுமந்திரன் எனும் ஒற்றை மனிதன் மட்டுமே. சுமந்திரனை அகற்றிவிட்டு வேறொருவரை முன்னிறுத்துங்கள் என்றால் அதும் முடியாது. தற்போதைய சூழலில் ரணில் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருக்குமானால் அதை வரவேற்க வேண்டும் எனும் பொது அறிவுகூட எம்மவர்களிடம் இல்லை. 

எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது தொடர்பில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. 

மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கிளாக்காய் மேல் என்பது இந்த புலம்பெயர்ஸ் களுக்குப் புரிவதிலை. 

"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா "

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, island said:

காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள்   தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த  தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது  என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது.  தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.   ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி  எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும்.

இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட)  ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு  கேட்பது  ஒன்றே  ஜதார்தத பூர்வமானது.  எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில்  இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும்  அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை.  இப்போது இதை செய்ய தவறினால்,  முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட  மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான். 

அண்ணே யதார்த்தவாதி வெகுசனவொரோதி.. தெரியாத உங்களுக்கு.. தெரியாட்டி துரோகிப்பட்டம் பார்சல்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

20 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை.. இதுதான் இப்போதைக்கு இருக்கு சாத்தியப்படக்கூடிய தீர்வு.. இது மட்டும் நிகழ்ந்தால் தமிழைனத்துக்கு கிடைக்ககூடிய மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.. தமிழ் நாடு அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஆவது எமது, நாம் என்ற உரிமையுடன் வாழலாம்.. ஆனால் தேர்தல் முடிய காற்றில் பறக்கவிட்டால்..?

ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.. இதில் இருந்து மீள தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..

கதை கட்டுரை மட்டும் எழுதினால் போதாது கருத்துக்களை வாசித்து கிரகிக்கிறதும் வேணும்.. எழுமானத்தில் கதைப்பதை விளங்கிக்கொள்ளவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அதைத்தான் நானும் சொல்கிறேன். 

திறமையான ஒருவர்கூடவா உங்களிடம் இல்லை.  இருந்தால் அவரை முன்னிறுத்திக் காட்டுங்கள். 

முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் .

அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று  ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன்  19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ?

முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁

உங்க ஆள் யாருடன் கதைக்க போனாலும் கதவை இறுக்கி பூட்டின பின்தானே கதைப்பாரமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எம்மவர்களுக்கு மறதி அதிகம். 

சரியான கருத்து 

ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில  பேர் மற்றவர்களையும் வாங்க  போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டை வெட்டுவதற்கு முன், ஆட்டிடமே அனுமதி கேட்கும் தேர்தல் இது. 😂

அ- லெனின்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சரியான கருத்து 

ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில  பேர் மற்றவர்களையும் வாங்க  போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .

ஆமா..யாழிலும் சின்ன சுமந்திர்ன் இருக்காருங்கோ...

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, பெருமாள் said:

1) முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது

2) லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் .

3)அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று  ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன்  19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ?

4)/முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .

1,3) தமிழர் அரசியலில் இருந்து இதுவரை ஒன்றுமே செய்யாத எல்லோரும் பதவி விலகும்போது சுமந்திரனும் தானாகவே பதவி விலக வேண்டும்/விலகுவார்  என்பதுதானே நியாயமாக இருக்க முடியும். 

2) தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடி கல்லெறிவது அத்துணை கெளரவமான செயலாக இருக்கிறதா உங்களுக்கு? 

4) தலைகள் இருக்க வாலை  மட்டும் கழற்றிவிட வேண்டும் என்பது கொஞ்சம்  ஓவர், யுவர் ஹொணர். 

😁

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சரியான கருத்து 

ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில  பேர் மற்றவர்களையும் வாங்க  போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .

பெருசு, 

கொஞ்சம் நிதனமாக வாசிப்பது,....😁

28 minutes ago, alvayan said:

ஆமா..யாழிலும் சின்ன சுமந்திர்ன் இருக்காருங்கோ...

அல்வாயன், 

சுமந்திரனுக்கு கனடாவில்  கல்லால் எறிவார்கள் என்று பெருமாள் கூறியது உங்களை நினைவில் வைத்துத்தான் என்பது என் ஊகம்,.. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பெருசு, 

கொஞ்சம் நிதனமாக வாசிப்பது,....😁

அல்வாயன், 

சுமந்திரனுக்கு கனடாவில்  கல்லால் எறிவார்கள் என்று பெருமாள் கூறியது உங்களை நினைவில் வைத்துத்தான் என்பது என் ஊகம்,.. 🤣

அப்ப இப்பவே போட்டுக்கொடுக்க நீங்கள்  ரெடிதானே....🤣 ..ஏற்கனவே என்னைப் பற்றி ரெகார்டுகள்  ரெடிபண்ணீட்டிங்களா?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

 தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.  

இப்போது கூட பொது தமிழ் வேட்பாளர் என்பது என்ன தமிழரின் மிச்சம் மீதி பலம் ஏதாவது இருந்தால் அதையும்  விழலுக்கு இறைத்த நீராக்கிவட வேண்டும் என்ற முயற்சி .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?ரணில்எழுத்து மூலம் உறுதி அளித்தாரா?ரணில் 1983 இல் இருந்து அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை பிரதமர் பதவியில் இருந்தார் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் கொடுக்காத 13{ இன்னுமா கொடுக்கப் போகிறார்.முந்தி என்றால் ரணிலுக்கு வாக்களிக்காவிட்டால் ராஜபக்சேக்கள் வந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். இப்பொழுது ராஜபக்சேக்களின் தயவில் ஜனாதிபதியாகி சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ராஜபக்சேக்களைக் காப்பாற்றிய ரணில் தமிழரகளுக்குத் தீர்வு தருவார் என்று தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலையே நடத்தாத குள்ள நரி ரணில். சிங்களமக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சிங்கள மக்களை ஏமாற்றி பின்கதவு வழியால் ஜனாதிபதி ஆகிய ரணில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்வார் என்பது முழுமுட்டான்த்தனம்.

Edited by புலவர்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு  இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ?

அதை செய்யாது  ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? 

45 minutes ago, புலவர் said:

இரண்டு பேருமே பின்கதவால் வந்த கூட்டம் ஒன்று தீர்வு என்று பொய் மான் காட்டுறது அடுத்தது  .............மூத்துரத்தை குடித்து வலிந்து வெற்றி  கொண்டது .(ஓவரா இருந்தால் நிர்வாகம் நீக்கி விடுங்க )

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

பெருமாள் என்ன எழுதி உள்ளார் என்று கவனமாக படியுங்க என்று தானே நீங்க ஏன் மிச்சம் மீதியை நீட்டி முழக்குகிறது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு  இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ?

அதை செய்யாது  ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? 

ஆயுத போராட்டத்தை விரும்பாதவர், இன அழிப்பே நடக்கவில்லை என்று சத்தியவாக்கு கொடுத்தவர் ஏக்கிய ரட்ட/எக்கிய ரட்ட  என்று சொன்னவர் கடந்த 10 வருடத்தில் புடுங்கியது என்னவாம் என கேட்டுச்சொல்லுங்கள்.....கேட்டுச்சொல்லுங்கள்...:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அப்ப இப்பவே போட்டுக்கொடுக்க நீங்கள்  ரெடிதானே....🤣 ..ஏற்கனவே என்னைப் பற்றி ரெகார்டுகள்  ரெடிபண்ணீட்டிங்களா?

பட்டங்கட்டுவது எனது தொழில் அல்ல. 

அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

😁

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

லண்டன், கனேடியத் டமில்ஸ்ஸை ISSIS றேஞ்சுக்குக் கொண்டுவந்த பெருமாளை நான் வன்மையாகக் கண்டிக்கும்  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பட்டங்கட்டுவது எனது தொழில் அல்ல. 

அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

😁

லண்டன், கனேடியத் டமில்ஸ்ஸை ISSIS றேஞ்சுக்குக் கொண்டுவந்த பெருமாளை நான் வன்மையாகக் கண்டிக்கும்  🤣

என்னை வன்மையாக கண்டியுங்க முதலில் உங்க ஆள் சுமத்திரன் தன்னுடைய அடுக்குமாடி கனடா குடியிருப்பில் இருந்த குடும்பத்தை வாடகை தரவில்லை என்று குடி எழுப்பிய கதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? 😀

கல்லெறிந்து கொள்வது தமிழர் பண்பாடு இல்லை என்ற சொல் பதமாவது உங்களுக்கு புரியவில்லை ?

கொல்வது சரியானது பிழைதிருத்தம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, பெருமாள் said:

என்னை வன்மையாக கண்டியுங்க முதலில் உங்க ஆள் சுமத்திரன் தன்னுடைய அடுக்குமாடி கனடா குடியிருப்பில் இருந்த குடும்பத்தை வாடகை தரவில்லை என்று குடி எழுப்பிய கதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? 😀

கல்லெறிந்து கொள்வது தமிழர் பண்பாடு இல்லை என்ற சொல் பதமாவது உங்களுக்கு புரியவில்லை ?

கொல்வது சரியானது பிழைதிருத்தம் .

1) யாருடைய பெயரில், எங்கே  சுமந்திரன் சொத்தை Canada வில் வைத்துள்ளார்?  அப்படி சொத்து வைத்திருப்பாரானால் அது சட்டப்படிதானே வைத்திருப்பார். இதில் தவறு எங்கே? . 

அடி னி ஏதாவது? 🤨

2) நீங்கள் வள்ளல்  பரம்பரை. உங்கள் வீட்டிற்கு வாடகை தரவில்லை என்பதற்காக நீங்கள் குடியெழுப்ப மாட்டிர்கள். ஆனால் சுமந்திரன் உங்களைப் போல வள்ளல் இல்லையே,.....🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

யாருடைய பெயரில், எங்கே  சுமந்திரன் சொத்தை Canada வில் வைத்துள்ளார்?

அடி நுனி ஏதாவது தெரியுமா?  

சிலவேளை உங்க உண்மையான பெயரிலும் பதிவு இருக்கலாம் ஏன் என்றால் சுமத்திரன் தமிழருக்கு எதிராக  பிழை செய்கிறார் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குவது நீங்கள் மட்டும் தானே இதே யாழில்  ?

9 minutes ago, Kapithan said:

நீங்கள் வள்ளல்  பரம்பரை. உங்கள் வீட்டிற்கு வாடகை தரவில்லை என்பதற்காக நீங்கள் குடியெழுப்ப மாட்டிர்கள். ஆனால் சுமந்திரன் உங்களைப் போல வள்ளல் இல்லையே,.....

சும்மா கொதிக்க வேணாம் பேராண்டி  சும் கனடா வந்தவுடன் சில நேரம்  ஏன் தனி கார் எடுத்து போகிறார் அதையாவது புரிந்து கொண்டால் காணும் ?

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.