Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2024 at 03:53, Kavi arunasalam said:

large.IMG_6928.jpeg.ddd75b94f3fd5f77470f

உங்கள் கருத்துப்படத்திற்கு நன்றி, இதுவரை காலமும் குண்டு சட்டியினை குதிரையாக நினைத்து ஒரே இடத்தில் நிற்பதை குறியீடாக குறிக்கும் (மரக்குதிரை போல) செயலைத்தான் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது என நினைத்திருந்தேன், இப்போதுதான் புரிகிறது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத்தான் குறிக்கிறார்கள் என.

  • Replies 82
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள

  • தமிழன்பன்
    தமிழன்பன்

    சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை.

இங்கே வாக்குரிமை இல்லாத நாஙடகதான் பொதுவேட்பாளருக்கு எதிராக குத்தி முறிகிறோம்.

நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும்.

விசுகு நான் இலங்கை யாழ்ப்பாணம் போய் கண்டிறிந்தது

காசுபணம் செல்வாக்குடன் உங்களால் தனியாக வாழ்ந்திட முடியாது.

கெளரவமான வாழ்க்கை வாழ  வேண்டுமென்றால் நீங்கள் சொன்ன மாதிரியோ வேறு அரசியல் சக்திகளின் செல்வாக்கு பொலிஸ் செல்வாக்கு இப்படி இல்லாதவிடத்து ஒரு அடிமையாகவே வாழ வேண்டிவரும்.

இதை ஜீரணிப்பது கஸ்டம் தான்.இருந்தாலும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் சொல்லுங்கள் யாருக்கு வாக்கு போடலாம் என்று.....சுமாவின் அதே நிலைப்பாடா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழன்பன் said:

தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் சொல்லுங்கள் யாருக்கு வாக்கு போடலாம் என்று.....சுமாவின் அதே நிலைப்பாடா 

அதெல்லாம் சொல்ல மாட்டார்கள். பிரிக்க இருக்கும் ஒற்றுமை ஒட்ட இருப்பதில்லை. அது எம்மவருக்கு வரவே வராது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, island said:

எந்த பிரயோசனமும் அற்ற சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒற்றுமை.  உண்மையில் ஒற்றுமை என்பது அதுவல்ல.  

ஆமா....ஆமா உண்மையான ஒற்றுமை யாதெனில் 
நீதிமன்று படியேற்றி கட்சியை இரண்டாக உடைத்து விட்டு, மூடிய அறைக்குள் ஒவ்வொரு பெரும்பான்மை  ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து டீல் பேசி பெட்டியை வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதே ஆகச்சிறந்த உண்மையான ஒற்றுமையாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆமா....ஆமா உண்மையான ஒற்றுமை யாதெனில் 
நீதிமன்று படியேற்றி கட்சியை இரண்டாக உடைத்து விட்டு, மூடிய அறைக்குள் ஒவ்வொரு பெரும்பான்மை  ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து டீல் பேசி பெட்டியை வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதே ஆகச்சிறந்த உண்மையான ஒற்றுமையாகும்.  

இல்லை 

அது குண்டுச் சட்டிக்குள் சாணக்கிய அரசியல்? என்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் குண்டுச்சட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டும் கவி அருணாசலம் அய்யாவின்  கருத்து படம்  மிகவும் சிறப்பான கருத்து படம் .  தமிழ் அரசியல்வாதிகள் தாங்கள் குண்டுசட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டி  பேய்காட்டி தமிழ் மக்களையும் குண்டுசட்டிக்குள்ளேயே தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் குண்டுசட்டியை விட்டு வெளியேறி சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2024 at 18:11, nunavilan said:

ஜனாதியாகவே வரமாட்டார். எப்படி இந்த உறுதி மொழிகளை அளித்திருக்க முடியும்??

என்ன சின்னப்புள்ளையாட்டமே இருக்குரீங்க.. வெற்றி பெறக்கூடிய அரசியல்வாதிதான் உறுதி மொழி குடுக்கமுடியும்ன்னா நாட்ல எலெக்சன் உறுதிமொழியே யாரும் கொடுக்கமுடியாது..😂 காசா பணமா.. உறுதி மொழிதான.. அடிச்சு உடுரதுதான்..😂

On 19/8/2024 at 20:11, விசுகு said:

நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும்.

ஓணாண்டிக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல்.. . துரோகிப்பட்டம் பார்சல் குடுக்கிற குருப்பாண்ணா நீங்கள்..? பூனைக்குட்டி வெளீல வந்திட்டுதா..?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன சின்னப்புள்ளையாட்டமே இருக்குரீங்க.. வெற்றி பெறக்கூடிய அரசியல்வாதிதான் உறுதி மொழி குடுக்கமுடியும்ன்னா நாட்ல எலெக்சன் உறுதிமொழியே யாரும் கொடுக்கமுடியாது..😂 காசா பணமா.. உறுதி மொழிதான.. அடிச்சு உடுரதுதான்..😂

🤣........

ஐந்து பேர்கள் மட்டுமே அவரின் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தாலும், ஃபீல்ட் மார்ஷல் சரத் உறுதிமொழி கொடுத்திருக்கின்றார். இலங்கையின் முன்னேற்றதிற்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாகவும், அதனை அவர் அழித்தொழிக்கப் போவதாகவும் வாக்குக் கொடுத்து வாக்கு கேட்டிருக்கின்றார்............ 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2024 at 19:40, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை.

இங்கே வாக்குரிமை இல்லாத நாஙடகதான் பொதுவேட்பாளருக்கு எதிராக குத்தி முறிகிறோம்.

என்னட்ட இருந்து என்ன எதிர்பாக்குறீங்க..? அரியத்தையும் விக்கியையும் தூக்கிவச்சு கொஞ்சனுமா நான்.. எனக்கு தலைவன் மானமும் வீரமும் உயிரென மதித்த தலைவன் பிரபாகரன் தான்.. கண்ட கண்ட நாய்ங்கள் இல்ல.. இவனுங்க பின்கதவால் சிங்களத்துடன் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.. விக்கி சம்பந்தி மகிந்த நாமல் கூட்டத்திட்ட பெட்டி வாங்கி ரணில சயித் அனுராவுக்கு கிடைக்கும் தமிழர் வாக்கை பிரிக்க செய்யும் சதி தெரியாத பேபே அல்ல நான்..

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லது தலைவர்களை கண்டியுங்கள்.நாங்களும் ஆதரவு தருகிறோம்.

அதற்காக பொதுவேட்பாளரை பழி வாங்குகிறோமோ என்று

போரினாலும் சகல வழிகளில் நொந்து போயிருக்கும் மக்களைப் பார்த்து வார்த்தைகள் விடுவது நல்லதல்ல.

சரி பொதுவேட்பாளரை பிடிக்கலை.

அப்போ யாருக்குத் தான் வாக்குப் போடலாம்.அதையாவது சொல்லலாமில்ல.

பலரும் பொதுவேட்பாளர் பிழை என்கிறார்களே தவிர

சிங்கள் வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை.

எனக்கும் இன்னமும் ஒரே குளப்பமாகவே உள்ளது.

ஆனாலும் ஒருபக்கம் பொதுவேட்பாளர் நிற்பது

சுமந்திரனுக்கு பேரம்பேச இலகுவாகிறது என எண்ணுகிறேன்.

On 19/8/2024 at 22:45, தமிழன்பன் said:

தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் சொல்லுங்கள் யாருக்கு வாக்கு போடலாம் என்று.....சுமாவின் அதே நிலைப்பாடா 

ஆராய்ச்சிகள் நடக்கிறது.

அனேகமாக அடுத்த மாதம் 21-22ம் திகதிகளில் ஆராய்ச்சி முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

.😂 ..😂

ஓணாண்டிக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல்.. . துரோகிப்பட்டம் பார்சல் குடுக்கிற குருப்பாண்ணா நீங்கள்..? பூனைக்குட்டி வெளீல வந்திட்டுதா..?😂

இல்லை 

அவரது கூட்டங்களில் தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சலுகைகள் அறிவிக்கப்படுவது வழமை. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

இல்லை 

அவரது கூட்டங்களில் தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சலுகைகள் அறிவிக்கப்படுவது வழமை. 

அப்போ நீங்கள் ஊரை விட்டு ரொம்ப தூரமா அந்த காலத்தில் நிக்கிறீங்கள் என்று அர்த்தம்.. இதெல்லாம் தலைவர்கள் சொல்லமாட்டார்கள்.. ஏனெனில் அரசுடன் டீம் என்று துரோகிப்பட்டம் வந்திடும்.. ஊருக்குள் ஆள் சேர்க்க வரும் அல்லக்கைகள்தான் சொல்லுவார்கள்.. அவர்களை வச்சு சொல்லவைப்பார்கள்.. 

அண்மையில் என் ஒன்றுவிட்ட சகோதரம் சுமந்திரனின் வலதுகை ஒருவரைப்பிடித்து மக்கள் வங்கியில் வேலை கிடைச்சிட்டு..

இப்போ எல்லாம் தூய கதை எல்லாம் எடுபடாது ஊரில்.. அது முடிஞ்சு போச்சு.. அதையும் பேசி அத்துடன் வாழ்வாதாரத்துக்கும் ஏதும் செய்தால்தான் ஓட்டு.. அதை மட்டும் பேசிட்டு திரிஞ்சா வக்கில் எடுக்கா சைக்கிள் ஓடின கதையாப்போம் அரசியல் வாழ்க்கை..

80களில் ஊரை விட்டு வரும்பொழுது உங்கள் நினைவுகளில் தங்கிவிட்ட ஊர் அல்ல இப்போ..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நல்லது தலைவர்களை கண்டியுங்கள்.நாங்களும் ஆதரவு தருகிறோம்.

அதற்காக பொதுவேட்பாளரை பழி வாங்குகிறோமோ என்று

போரினாலும் சகல வழிகளில் நொந்து போயிருக்கும் மக்களைப் பார்த்து வார்த்தைகள் விடுவது நல்லதல்ல.

சரி பொதுவேட்பாளரை பிடிக்கலை.

அப்போ யாருக்குத் தான் வாக்குப் போடலாம்.அதையாவது சொல்லலாமில்ல.

பலரும் பொதுவேட்பாளர் பிழை என்கிறார்களே தவிர

சிங்கள் வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை.

எனக்கும் இன்னமும் ஒரே குளப்பமாகவே உள்ளது.

ஆனாலும் ஒருபக்கம் பொதுவேட்பாளர் நிற்பது

சுமந்திரனுக்கு பேரம்பேச இலகுவாகிறது என எண்ணுகிறேன்.

எனக்கு இந்த நாட்டை வித்த மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வரக்குடாது.. இன்னும் ஒருக்கா நான் மணெண்ணைக்கும் பெற்றோலுக்கும் லைன்ல நிக்கேலாது.. ஒரு அப்பிள் ஒரு ஆரேஞ் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கேலாது.. ஒரு றாத்தல் பாணுக்கு மத்தியானமே போய் லைன்ல நிக்கேலாது.. எனக்கு என் வாழ்வாதார பிரச்சினை.. விடிஞ்சா பிள்ளையள் சாப்பிட சாப்பாடு செய்ய சாமான் மலிவா கிடைக்கோணும்.. பாம்பு கீம்பு கடிச்சா இல்லா அவசர அத்தியாவசியத்துக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வாகனத்துக்கு பெற்றோல் இருக்கோணும்.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊர் அரசியல் ஃபண் எடுக்கிறதுக்கு கதைக்கிறது..

ஊரில் இருக்கிறவனுக்கு அது பிள்ளைகுட்டியளுக்கு சாப்பாடு போடுற வாழ்வாதார பிரச்சினை.. மீண்டும் நாட்டை வித்த மகிந்தா யுகம் வருவதை ஒரு சாமானிய ஏழையால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. அந்த வலி ஊரில் பட்டவனுக்கு தெரியும்..

ஒரு மாத கொலிடேயில் ஊருக்கு வந்தவையே லைன்ல பெற்றோலுக்கு நிக்க ஏலாது எண்டு பேஸ்புக்கில பந்தி எழுதினவை.. அதுவே வாழ்வாய்போனவனுக்கு எப்படி இருந்திருக்கும்..

அந்த யுகம் மீண்டும் வர தூனைபோகும் இந்த பொதுவேட்பாளர்கூட்டத்தின் நயவஞ்சகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது..

தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வெளிநாட்டிலும் கொழும்பில் சிங்களவர்களுடன் சம்பந்தம்வைத்து வசதியாக செட்டில் ஆக்கிவிட்டு ஓய்வுகாலங்களை கழிக்க அரசியலில் ஈடுபட்டு எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒரு போதும் மன்னிக்கமுடியாது.. இனத்துரோகிகள் இவர்கள்..

தமிழர்களின் வாக்கு ஒரு போதும் தமக்கு கிடையாது என தெரிந்துகொண்ட இன அழிப்பு செய்த மகிந்த கூட்டம் இவர்களுக்கு பெட்டி குடுக்க பெட்டி வாங்கிக்கொண்டு மற்றைய ஆட்சியை பிடிக்ககூடிய கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளை விழவிடாமல் தடுக்க மீண்டு ஒரு இருண்ட யுகத்துள் இலங்கையை தள்ள சூழ்ச்சி செய்யும் சகுனிகள்தான் இந்த பொதுவேட்பாளர் கூட்டம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

நான் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தியதை முழுமையாக எதிர்க்கின்றேன். இதன் காரணங்கள், பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள் அதற்கு சொல்லும் காரணங்கள் அனைத்தும், மக்களை முழு முட்டாள்களாக நினைத்துச் சொல்லும் காரணங்கள் என்பதால். அதில் முக்கியமானவை "நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை" சொல்லப் போகின்றோம் என்பதும். "தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டப் போகின்றோம்" என்பதும் தான்.

நடைமுறையில் நகைப்புக்கிடமான, நடைமுறையில் பலனளிக்காத ஒன்றிற்காக வளங்களைப் பயன்படுத்தி மக்களை அணி திரட்டுவது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதால் இதனை எதிர்க்கின்றேன்.

ஆனால் நீங்கள் அவர்கள் மகிந்தவிடம் பெட்டி வாங்கிவிட்டு இதனைச் செய்கின்றனர் என்பதை முற்றாக ஏற்க மறுக்கின்றேன். இது எந்தவிதமான ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு இது. சுரேஸ் பிரேசந்திரன், விக்கி போன்றோர் தம் இருப்பை அரசியலில் பேணுவதற்காக, சோதி மாஸ்ரர் , நிலாந்தன் போன்றவர்களின், மக்களின் மன நிலையை, தற்போதைய தேவைகளை அறிய விரும்பாத, அரசியல் சூனிய அறிவை நம்பி வகுத்த திட்டம் என்பதுக்கு அப்பால், இதில் பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாக நாம் நம்பத் தயாரில்லை. இது தொடர்பாக உங்களிடம் ஆதாரம் ஏதும் இருப்பின் எம்மிடம் பகிரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காசா பணமா.. உறுதி மொழிதான.. அடிச்சு உடுரதுதான்..😂

3 hours ago, ரசோதரன் said:

ஐந்து பேர்கள் மட்டுமே அவரின் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தாலும், ஃபீல்ட் மார்ஷல் சரத் உறுதிமொழி கொடுத்திருக்கின்றார். இலங்கையின் முன்னேற்றதிற்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாகவும், அதனை அவர் அழித்தொழிக்கப் போவதாகவும் வாக்குக் கொடுத்து வாக்கு கேட்டிருக்கின்றார்..

உண்மையாகவே ஐனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அய்யாவும் மார்ஷல் சரத்துமே கண்ணை மூடிக் கொண்டு மக்களுக்கு வாக்கறுதிகளை தாராளமாக அடித்து விடலாம் அவர்கள் ஒரு போதும் வெற்றி அடையபேவதில்லை.

போரினாலும் சகல வழிகளில் நொந்து போயிருக்கும்  தமிழ் மக்களை எழும்ப விடாமல் மேலும் மேலும் நொந்து போக வைக்கின்ற   தமிழர்களை நகைப்புக்கிடமானவர்களாக்கும்  நயவஞ்சக முயற்ச்சி தான் தமிழ் பொது வேட்பாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவுக்கு வாக்குப் போட்டோம்>ரணிலுக்கு வாக்குப் போட்டோம்.பொன்சேகாவுக்கு வாக்குப் போட்டோம்>மைத்திரிக்கு வாக்குப் போட்டோம்.சஜித்துக்கு வாக்குப் போட்டோம். இவர்களில் வென்றவர்கள் சந்திரிகாவும் மைத்திரியும் . இருவருமே தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு துரும்பளவுதானும் செயற்படவில்லை. 2009 பின் மகிந்த கட்சியினர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்நற தமிழர்கள் வாக்களித்தார்கள். ஆனால் மைத்திரி மகிந்தவையே பிரதமராக்கினார். எந்த ராஜபக்சே குடும்பத்தை சிங்களவர்களே அடித்து விரட்னார்களோ அதே ராஜபக்ச குடும்பத்தை குறுக்கு வழியில் பதவிக்கு வந்த ரணில் அரவணைத்தார். இப்பொழுது சொந்தக்கட்சியின் பலத்தை விட ராஜபக்சேக்களிடமிருந்து பிரிந்து வந்தவர்களை நம்பியே தேர்தலில் நிற்கிறார்.நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?பொது வேட்பாளருக்கு அந்த வாக்கைப் போடுவதால் வரும் நட்டம் என்ன?. எந்த விடயத்தையும் பரிசோதனை செய்து பார்ப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது.நான் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள்  தங்கள் கட்சியின் இருப்பையும்>தாறஙகளும் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டவும் இதைப்பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்தியாவின் செல்லப் பிள்ளைகள் 13  இற்குப் அப்பால் அவர்கள் கனவு கூட காணமாட்டார்கள். அனூல் அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக நடத்தும் அரசியலை தமிழ்மக்கள் சாதகமாகப் பயன்படுத்துவதில் என்ன நட்டம் வந்து விடப் போகிறது.தமிழ்மக்கள் ஒரே ஒரு வாக்கினைப் பொது வேட்பாளருக்கு மட்டும் செலுத்த வேண்டும். இன்னுமொரு  விடயமும் இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தல். ஆனால்  நவீன ஜனநாயகத்தில் புறனக்கணிப்பவர்களைப் புறக்கணித்து விட்டு வெல்பவர்களைக் கொண்டாடுவது உலக வழமையாகி விட்டது. நாங்கள் ஒற்றுமையாக  பொது வேட்பாளருக்கு வாக்களித்து இந்தப் பரிசோதனை முயற்சியைச் செய்வோம்.இந்த முறை ஜனாதிபதி முதல்சுற்றில் தெரிவாகாமல் இருந்து பொது வேட்பாளர் ஒர கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது பேசுபொருளாகும்.பரிசோதனை முயற்சியைச் செய்து பார்பதில் எந்த இழப்பையும் தமிழர்கள் புதிதாகப் பெற்ற விடப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட)  எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே   முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே   எனலாம். 

விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள்  இருந்த போதும் அதைத் தாண்டி  அவர்களது அரசியல் தனி நாட்டை  நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள்.  ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து  தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. 

ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள்  அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே  போராடுகின்றார்கள்.  ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா?  அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா?  உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா?  வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது  அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை  பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம்  வலியுறுத்த முடியுமா?    தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக்  கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு  மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம்  பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே  அமையும் என்பது எனது கருத்து.  தமிழ

 தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள்,  அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள்,  புலம் பெயர் இணையத்தள  அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள்   என்று பலர் இருந்தும்  இதை கணக்கில் எடுக்காதது ஏன்?  நாம் இந்த உலகில்  வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க,  நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை  உபயோகிப்போம் என்ற அவர்களது  எண்ணமே இதற்கு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

456305032_906948534803453_25111513509585

யாருக்கு வாக்களிப்பது என்று   வீட்டுக்குள் (தமிழரசு கட்சிக்குள்) அடிபிடி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட)  எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே   முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே   எனலாம். 

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளுவதுமே. உண்மையில் இது மட்டுமே அவர்களால் செய்யக்கூடியதும்.
ஆனால் இந்த மண்குதிரைகளை எப்போது புலத்துத்தமிழர்கள் நம்பத்தலைப்பட்டார்கள் என்றால் அது புலிகளின் காலத்தில், உண்மையிலே ஒன்றுக்கும் உதவாத கூத்தாடி மண்குதிரைகள்  புலிகளின் பக்கபலத்துடன் பெரும் விசையுடன் மக்களுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் புலிகளின் அரசியல் முகம் என்பதால் மக்களும் இவர்களை ஏற்றுக்கொள்ள இந்த கூத்தடிகளோ தங்களது உண்மையான விசை எது என்பதை அறியாமல் தங்களை பெரிய வீரர்களாகவும்  மக்களோ இவர்களை ஏக அரசியல் பிரதிநிதிகளாகவும் வரித்துக்கொள்ள மண்குதிரைகளெல்லாம் பொன்குதிரைகளாயின. என்று விடுதலைப்புலிகள் ஈழத்தமிழர்கள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கூத்தாடிகளின் மாயவிம்பம் கலையத்தொடங்கியது.
கூத்தாடிகளுக்கு தலைவர்கள் தரப்பட்டார்கள். கூத்தாடிகளின் பொறுப்பு ஒரு விற்பனை பிரதிநிதியின்(சேல்ஸ் Rep) இன் வேலை, ஆயிரம் பொய்யை சொல்லியாவது தரப்பட்ட தலைவரை ஈழத்தமிழர்களின் தலையில் கட்டிவிடுவது. அதை அவர்களும் சரிவர செய்தார்கள். ஈழத்தமிழர்களும்  கூத்தாடிகளை பற்றிக்கொண்டிருந்த மாயவிம்பத்தை கைவிடத்துணியவில்லை. விழைவு கூத்தாடி மண்குதிரைகளை நம்பி இனப்படுகொலை பங்கில் எந்தவிதத்திலும் சளைக்காத பொன்சேகாவிற்கு பெருவாரியாக வாக்களித்து மகிழ்ந்தனர். அதாவது சர்வதேசத்தின் இந்த சோதனை முயற்சியில் ஈழத்தமிழர் சர்வதேசத்திற்கு சொல்லிய செய்தி நாங்கள் ஒரு சிறப்பான எடுப்பார்க்கைப்பிள்ளைகள்என்பதே. இன்று மண்குதிரைகளை நினைத்து அங்கலாய்க்கும் நாம் அன்று இறுதிப்போரில் இந்தியாவில் குப்புறப்படுத்துக்கொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்ததும் எமக்கு தீர்வு எடுத்து தருவதற்கு திரும்ப களத்திற்கு வந்த கூத்தாடி குதிரைகளை செருப்புத்தேய தேய கும்மியெடுத்திருந்தால் குறைந்தபட்சம்  இந்த அரசியல் வெறுமையையாவது தடுத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் ஈழத்தமிழர்களே எடுத்திருந்தினர். அறிவிலிகள், மடையர்கள் தான் ஒருவனால் ஒன்று முடியாது என்று தெரிந்துகொண்டே அதனை அவனிடம் கொடுத்து விட்டு  அவன் அதை சரிவர செய்வான் என்று தொடர்ந்து எதிர்பார்ப்பார்கள் என்பது எனது கருத்து. என்னைப்பொறுத்தவகையில் ஈழத்தமிழர்கள் இந்த இரண்டுபதங்களாலும் அழைக்கப்பட சகலவகையிலும் பொருத்தமானவர்கள்               

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இந்த நாட்டை வித்த மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வரக்குடாது.. இன்னும் ஒருக்கா நான் மணெண்ணைக்கும் பெற்றோலுக்கும் லைன்ல நிக்கேலாது.. ஒரு அப்பிள் ஒரு ஆரேஞ் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கேலாது.. ஒரு றாத்தல் பாணுக்கு மத்தியானமே போய் லைன்ல நிக்கேலாது.. எனக்கு என் வாழ்வாதார பிரச்சினை.. விடிஞ்சா பிள்ளையள் சாப்பிட சாப்பாடு செய்ய சாமான் மலிவா கிடைக்கோணும்.. பாம்பு கீம்பு கடிச்சா இல்லா அவசர அத்தியாவசியத்துக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வாகனத்துக்கு பெற்றோல் இருக்கோணும்.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊர் அரசியல் ஃபண் எடுக்கிறதுக்கு கதைக்கிறது..

ஊரில் இருக்கிறவனுக்கு அது பிள்ளைகுட்டியளுக்கு சாப்பாடு போடுற வாழ்வாதார பிரச்சினை.. மீண்டும் நாட்டை வித்த மகிந்தா யுகம் வருவதை ஒரு சாமானிய ஏழையால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. அந்த வலி ஊரில் பட்டவனுக்கு தெரியும்..

ஒரு மாத கொலிடேயில் ஊருக்கு வந்தவையே லைன்ல பெற்றோலுக்கு நிக்க ஏலாது எண்டு பேஸ்புக்கில பந்தி எழுதினவை.. அதுவே வாழ்வாய்போனவனுக்கு எப்படி இருந்திருக்கும்..

அந்த யுகம் மீண்டும் வர தூனைபோகும் இந்த பொதுவேட்பாளர்கூட்டத்தின் நயவஞ்சகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது..

தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வெளிநாட்டிலும் கொழும்பில் சிங்களவர்களுடன் சம்பந்தம்வைத்து வசதியாக செட்டில் ஆக்கிவிட்டு ஓய்வுகாலங்களை கழிக்க அரசியலில் ஈடுபட்டு எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒரு போதும் மன்னிக்கமுடியாது.. இனத்துரோகிகள் இவர்கள்..

தமிழர்களின் வாக்கு ஒரு போதும் தமக்கு கிடையாது என தெரிந்துகொண்ட இன அழிப்பு செய்த மகிந்த கூட்டம் இவர்களுக்கு பெட்டி குடுக்க பெட்டி வாங்கிக்கொண்டு மற்றைய ஆட்சியை பிடிக்ககூடிய கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளை விழவிடாமல் தடுக்க மீண்டு ஒரு இருண்ட யுகத்துள் இலங்கையை தள்ள சூழ்ச்சி செய்யும் சகுனிகள்தான் இந்த பொதுவேட்பாளர் கூட்டம்..

இலங்கையில் இதுவரை ஆண்ட அரசுகளே இந்தநிலைக்கு காரணம் என்கிறார்கள்.நீங்கள் வெறும் மகிந்த மேல் பழியைப் போட்டு மற்றவர்களை தப்பிக்க வைக்கிறீர்கள்.

அப்போ மகிந்த வராமல் ரணில் சயித் அனுரா யாராவது ஒருத்தர் வந்தால் உங்களுக்கு சந்தோசமே.

பொதுவேட்பாளரை எதிர்க்க ஏதோ காரணம் என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இதுவரை ஆண்ட அரசுகளே இந்தநிலைக்கு காரணம் என்கிறார்கள்.நீங்கள் வெறும் மகிந்த மேல் பழியைப் போட்டு மற்றவர்களை தப்பிக்க வைக்கிறீர்கள்.

அப்போ மகிந்த வராமல் ரணில் சயித் அனுரா யாராவது ஒருத்தர் வந்தால் உங்களுக்கு சந்தோசமே.

பொதுவேட்பாளரை எதிர்க்க ஏதோ காரணம் என்று நினைத்துவிட்டேன்.

இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் உங்களுடையதோ உங்களுக்கு   நன்றி சொன்னவரதோ  வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, உங்கள் இருவரதும்   அடுத்த   vacation  ஐ கூட பாதிக்கப்போவதில்லை. ஆனால் அது தனது வாழ்வாரத்தை கடுமையாக  பாதிக்கும் என்பதால் ஒரு பொது மகனான சிந்தித்து வாக்களிக்க வேண்டும்,  உங்களைப் போல் பொறுப்பற்று  பொழுது போக்குக்காக டம்பி பீஸுகளுக்கு வாக்களிக்க தன்னால் முடியாது   என்கிறார்.  @பாலபத்ர ஓணாண்டி.  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இதுவரை ஆண்ட அரசுகளே இந்தநிலைக்கு காரணம் என்கிறார்கள்.நீங்கள் வெறும் மகிந்த மேல் பழியைப் போட்டு மற்றவர்களை தப்பிக்க வைக்கிறீர்கள்.

அப்போ மகிந்த வராமல் ரணில் சயித் அனுரா யாராவது ஒருத்தர் வந்தால் உங்களுக்கு சந்தோசமே.

பொதுவேட்பாளரை எதிர்க்க ஏதோ காரணம் என்று நினைத்துவிட்டேன்.

ரனினில் நீண்ட கால அரசியலில் தமிழருக்கு செய்த நன்மைகள் எவை என்று யாராவது சொல்ல முடியுமா?
சிங்கள மக்களிடன் சேர்த்து சாம்பார் ஆக்காமல் தனித்து தமிழருக்கு செய்த நன்மைகள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் உங்களுடையதோ உங்களுக்கு   நன்றி சொன்னவரதோ  வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, உங்கள் இருவரதும்   அடுத்த   vacation  ஐ கூட பாதிக்கப்போவதில்லை. ஆனால் அது தனது வாழ்வாரத்தை கடுமையாக  பாதிக்கும் என்பதால் ஒரு பொது மகனான சிந்தித்து வாக்களிக்க வேண்டும்,  உங்களைப் போல் பொறுப்பற்று  பொழுது போக்குக்காக டம்பி பீஸுகளுக்கு வாக்களிக்க தன்னால் முடியாது   என்கிறார்.  @பாலபத்ர ஓணாண்டி.  

இவரை தெரிவு செய்தவர்கள் மற்றும் அவரது கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாயகத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களையும் சேர்த்து தான் நீங்கள் உங்கள் வன்மத்தை தீர்த்து கொள்கிறீர்கள். அந்த வன்மத்தை தீர்க்க இதுவரை திட்டி மட்டும் தீர்த்து வந்த புலிகளைக் கூட தூக்கி பிடிக்க முயல்வது காணக்கூடியதாக இருக்கிறது. தொடருங்கள். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இவரை தெரிவு செய்தவர்கள் மற்றும் அவரது கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாயகத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களையும் சேர்த்து தான் நீங்கள் உங்கள் வன்மத்தை தீர்த்து கொள்கிறீர்கள். அந்த வன்மத்தை தீர்க்க இதுவரை திட்டி மட்டும் தீர்த்து வந்த புலிகளைக் கூட தூக்கி பிடிக்க முயல்வது காணக்கூடியதாக இருக்கிறது. தொடருங்கள். 

எனது எந்த கருத்துலும் யாரிலும் வன்மத்தை கொட்டவுமில்லை யாரையும் நான் திட்டவும் இல்லை.

தாயக/ புலம் பெயர் அரசியல்வாதிகளின் தமிழ் தேசிய அரசியல் என்ற பெயரில் செய்யும் அரசியலின் பாரிய முரண்பாட்டையும் தமிழர் அரசியலை பின்னோக்கி  செலுத்தும் செயலையுமே சுட்டிக்காட்டினேன். 

தமிழர் அரசியல்வாதிகள் அன்றில் இருந்து தொடர்சசியாக செய்துவரும்,  தமிழரை மட்டும் மையப்படுத்தும்  உசுப்பேற்றல் அரசியல் மூலம்,  எப்படி ஶ்ரீலங்கா அரசியலமைப்பை மாற்ற முடியும் என்று உங்களால் பதில் கூற முடியுமா?  ஶ்ரீலங்கா அரசியலமைப்பை  மாற்ற ஶ்ரீலங்கா மக்களில் பெரும்பான்மை  மக்கள் சாதகமாக வாக்களித்தால் மட்டுமே முடியும் என்ற ஜதார்த்தத்தை,  உங்களால் அல்லது உங்களை போலவே தாயகத்திலும்  உதவாக்கரை தீவிர தமிழ் தேசியம் பேசும் அரசியல் கோமாளிகளால் புறந்தள்ள முடியுமா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.