Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   17 SEP, 2024 | 08:29 PM

image
 

தொலைத்தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

GXrxs_XXQAEIgPc.jpg

பல பேஜர்கள் வெடித்துச் சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/193965

  • Replies 52
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெடித்தால் உள்ளதும் போய் விடும்.

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இரு மாதங்களுக்கு முன்னர் தாய்வானிடமிரிந்து 3000 இற்கு அதிகமான, அமைவிடத்தையும் உரையாடலையும் கண்டுபிடிக்க முடியாத பேஜர்களை ஹிஸ்புள்ளா கொள்வனவு செய்திருக்கிறது. தாய்வானில் இருந்து லெபனானிற்கு அனுப்பப்படு

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஒரு பொருளை உருவாக்குபவர்களால் அந்த பொருளை வைத்து நல்லது - கெட்டது எதுவுமே செய்ய முடியும்.😎 வீட்டில் இருக்கும் தனிப்பட்ட கணணிகளையே கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள் உள்ள  உலகத்தில் அல்லது கணணி தொழில

இஸ்ரேல் ஒரு மோசமான, மக்களை இலக்கு வைத்து கொல்லும் ஒரு நாடு தான். ஆயினும் கூட, இவர்களால் எப்படி இவ்வாறான தாக்குதல்களை செய்யக் கூடியதாக உள்ளது என ஆச்சரியமாக உள்ளது. அதுவும் pager போன்ற device களை வெடிக்க வைத்து.

கைபேசிகளையும் இப்படி வெடிக்க செய்ய முடியுமாக இருக்கலாம்.. தூரத்தில் இருந்து இப்படி வெடிக்க செய்யக் கூடிய வழிமுறைகளுடன் இருக்க கூடிய கைபேசிகளுடன் தான் நாம் வாழ்கின்றோமோ தெரியாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இஸ்ரேல் ஒரு மோசமான, மக்களை இலக்கு வைத்து கொல்லும் ஒரு நாடு தான். ஆயினும் கூட, இவர்களால் எப்படி இவ்வாறான தாக்குதல்களை செய்யக் கூடியதாக உள்ளது என ஆச்சரியமாக உள்ளது. அதுவும் pager போன்ற device களை வெடிக்க வைத்து.

கைபேசிகளையும் இப்படி வெடிக்க செய்ய முடியுமாக இருக்கலாம்.. தூரத்தில் இருந்து இப்படி வெடிக்க செய்யக் கூடிய வழிமுறைகளுடன் இருக்க கூடிய கைபேசிகளுடன் தான் நாம் வாழ்கின்றோமோ தெரியாது..

கைபேசிகள்(நடமாடும் வெடிகுண்டுகள்!!)  அடிக்கடி வெடிக்கின்றன தானே அண்ணா!

3 minutes ago, ஏராளன் said:

கைபேசிகள்(நடமாடும் வெடிகுண்டுகள்!!)  அடிக்கடி வெடிக்கின்றன தானே அண்ணா!

அது தொழில்நுட்ப கோளாறால், இது திட்டமிடப்பட்ட ஒரு செயலால்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஒன்பது பேர்கள் இறந்தும், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தும் இருக்கின்றனர் என்று கடைசித் தகவல் தெரிவிக்கின்றது. சில முக்கிய நபர்களும் இறந்தோ அல்லது காயம்பட்டோ இருக்கின்றார்கள், ஈரானின் லெபனானிற்கான தூதுவர் உட்பட........... மிகுதியானவர்கள் எல்லோரும் பொதுமக்களே........😌

சிறிய பிளாஸ்டிக் வெடிமருந்து உள்ளே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதே முதல் ஊகமாக இருக்கின்றது. லித்தியம் பாட்டரிகள் அதிக வெப்பத்தால் தீப்பிடிக்க கூடும், ஆனால் இப்படி ஒரே காலப்பகுதியில் பல இடங்களில் வெடிக்கமாட்டாது.

வெடிக்கவே வெடிக்காத அப்பிள் ஃபோன் என்று ஒரு விளம்பரம் ஐபோனிற்கு வந்தாலும் வரும்............ 

எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

வெடித்தால் உள்ளதும் போய் விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொருளை உருவாக்குபவர்களால் அந்த பொருளை வைத்து நல்லது - கெட்டது எதுவுமே செய்ய முடியும்.😎

வீட்டில் இருக்கும் தனிப்பட்ட கணணிகளையே கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள் உள்ள  உலகத்தில் அல்லது கணணி தொழில் நுட்பம் கூடிய விமானங்களையே ...........🤣

  • கருத்துக்கள உறவுகள்

இரு மாதங்களுக்கு முன்னர் தாய்வானிடமிரிந்து 3000 இற்கு அதிகமான, அமைவிடத்தையும் உரையாடலையும் கண்டுபிடிக்க முடியாத பேஜர்களை ஹிஸ்புள்ளா கொள்வனவு செய்திருக்கிறது. தாய்வானில் இருந்து லெபனானிற்கு அனுப்பப்படும் வழியில் இவை இடைமறிக்கப்பட்டு பற்றரியிற்கு அருகில் சிறிய வெடிபொருள் சேர்க்கப்பட்டபின் லெபனானிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பின்னர், இப்பேஜர்களுக்கு ஒரே நேரத்தில் குருஞ்செய்தியொன்றினை அனுப்பி வெடிக்கச் செய்திருக்கிறார்கள். 

கொல்லப்பட்டவரிலும் காயப்பட்ட 2400 பேரிலும் பெரும்பாலானவர்கள் ஹிஸ்புள்ளா போராளிகள்.

இத்தாக்குதலின் பின்னால் மொசாட் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஸ்புள்ளாவை நிலைகுலைய வைத்துவிட்டு அதன்மீது பாரிய யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட இஸ்ரேல் முயல்கிறதா என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இஸ்ரேல் ஒரு மோசமான, மக்களை இலக்கு வைத்து கொல்லும் ஒரு நாடு தான். ஆயினும் கூட, இவர்களால் எப்படி இவ்வாறான தாக்குதல்களை செய்யக் கூடியதாக உள்ளது என ஆச்சரியமாக உள்ளது. அதுவும் pager போன்ற device களை வெடிக்க வைத்து.

கைபேசிகளையும் இப்படி வெடிக்க செய்ய முடியுமாக இருக்கலாம்.. தூரத்தில் இருந்து இப்படி வெடிக்க செய்யக் கூடிய வழிமுறைகளுடன் இருக்க கூடிய கைபேசிகளுடன் தான் நாம் வாழ்கின்றோமோ தெரியாது..

Ciber attack என்று கூறுகிறார்கள்.  இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் ஆரம்பமானவுடன் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர் கைபேசிகளின் பாவனையிலிருந்து தங்கள் உறுப்பினர்களை தடை செய்து pagers ஐ பாவிக்கும்படி அறிவுறுத்தல் செய்திருக்கிறார்கள. 

சிறுவர்கள் பொதுமக்கள் என 3500க்கும் மேற்பட்டோ காயமடைந்துள்ளனர். 8 பேர்  கொல்லப்பட்டுள்ளனர். பலர் அவயவங்களை இழந்துள்ளனர். 

இது ஒரு மோசமான பயங்கரவாதச் செயல் ஆகும். 

8 hours ago, ரசோதரன் said:

இதுவரை ஒன்பது பேர்கள் இறந்தும், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தும் இருக்கின்றனர் என்று கடைசித் தகவல் தெரிவிக்கின்றது. சில முக்கிய நபர்களும் இறந்தோ அல்லது காயம்பட்டோ இருக்கின்றார்கள், ஈரானின் லெபனானிற்கான தூதுவர் உட்பட........... மிகுதியானவர்கள் எல்லோரும் பொதுமக்களே........😌

சிறிய பிளாஸ்டிக் வெடிமருந்து உள்ளே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதே முதல் ஊகமாக இருக்கின்றது. லித்தியம் பாட்டரிகள் அதிக வெப்பத்தால் தீப்பிடிக்க கூடும், ஆனால் இப்படி ஒரே காலப்பகுதியில் பல இடங்களில் வெடிக்கமாட்டாது.

வெடிக்கவே வெடிக்காத அப்பிள் ஃபோன் என்று ஒரு விளம்பரம் ஐபோனிற்கு வந்தாலும் வரும்............ 

முன்னர் ஈரானின் அணுத் தொழில் நுட்ப ஆராச்சி நிலையமொன்றிற்கு என இறக்குமதி செய்யப்பட்டு நிலத்திற்குப்  பதிக்கப்பட்ட Ceremic  Tiles உடன் வெடிமருந்தைக் கலந்து, குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்த ஆராச்சிக் கூடத்தையே அழித்திருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்

hospital-beirut-pagers-exploding-lebanon

லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும்
காயமடைந்த சுமார் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது.

இதன்போது சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்தியதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2024/1399831

  • கருத்துக்கள உறவுகள்

போரும் உலகமும் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றனவா??? எல்லாவற்றையும் நாம் கையில் கொண்டு திரிகிறோமா??? விடுதலைப் புலிகளின் வலை அமைப்புக்களும் இவ்வாறான ஒரு சூழ்ச்சிக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரப்பு கெட்டித்தனமாகவும், சாகசமாகவும், புத்திசாதுர்யமாகவும் வர்ணித்தும், புகழ்ந்தும், மெய்ச்சிலிர்த்தும் கொள்கின்றது. 

மேற்கத்தைய ஊடகங்கள் சீ. என். என் உட்பட இந்த தாக்குதலை கண்டித்ததாக தெரியவில்லை. இவ்வளவிற்கும் இஸ்ரேல் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை. 

உலகம் மிகவும் சிக்கலானதும் கோரமானதும் அவலமானதுமான ஒரு கட்டத்தினுள் உள்ளது. 

பலரும் சமூக ஊடக வலைப்பின்னல்கள், மிந்திரையினுள் கட்டுண்டு, மண்டை கழுவப்பட்டு உள்ளதால் அறிவுக்கண்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள். 

எமது காலத்திலேயே தொழில்நுட்பம், விஞ்ஞானம் தொடக்கம் சமூகவியல், அரசியல், போரியல் வரை முக்கியமான பலவித மாற்றங்களை நாங்கள் நேரடியாக காண்கின்றோம். 

எமது காலத்தின் பின், இன்னும் ஒரு 50 வருடங்களின் பின் உலகம் எப்படி அமையும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதே கடினமாக உள்ளது. 

அந்த காலத்தில் மனிதாபிமானம், நேர்மை, மனிதநேயம் கிஞ்சித்துக்கும் காணப்படுமா என்பதே கேள்விக்குறி. எல்லாமே வியாபார கொடுக்கல் வாங்கல்களாகவும், டீல்களாகவும், வர்த்தக மயமாகவும் மாற்றப்படலாம். 

நாம் பழைய உலகில் வாழ்ந்தபடியால் புதிய உலக மாற்றங்கள், நியதிகளை ஜீரணிக்கமுடியாது உள்ளது. ஆனால், எமைத்தொடரும் சந்ததிகளுக்கு புதிய உலக ஒழுங்கே வாழ்க்கை என்பதால் அவர்கள் அனைத்தையும் முகம் கொடுத்து வாழ்வார்கள் என நினைக்கின்றேன். 😟

புதிய சிந்தனைகள், உத்திகளை எல்லா தரப்புமே கையாளக்கூடும். ஒருவர் செய்ததை, ஒரு அணுகுமுறையை இன்னொருவர் நகல் எடுப்பதற்கு இந்த சமூக ஊடக/இணைய/செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதிக சிரமம் இராது. 

யார் இந்த தாக்குதலை மேற்கொண்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கப்போகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து சிதறிய சம்பவத்திற்கு இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு – 9 பேர் பலி – 3000 பேர் காயம் - அதிர்ச்சியில் லெபனான்

Published By: RAJEEBAN   18 SEP, 2024 | 07:41 AM

image

ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் குழந்தையொன்று உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000 பேர் காயமடைந்துள்ளனர்.

பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பல பேஜர்கள் வெடித்துச் சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

GXuStFaXIAA_9pl.jpg

காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2800 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனானிற்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்புல்லா அமைப்பு தனது பல பிரிவுகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலே இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பதில் நடவடிக்கை குறித்து எச்சரித்துள்ளது.

செவ்வாய்கிழமை சம்பவம் காரணமாக லெபனான் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னொருபோதும் இடம்பெற்றிராத இத்தைகைய சம்பவத்தை நம்பமுடியாத நிலையில் லெபனான் மக்கள் காணப்படுகின்றனர்.

கையடக்க தொலைபேசிகள் ஹக் செய்யப்படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படலாம் என்பதற்காக தங்கள் உறுப்பினர்கள் பயன்படுத்திவரும் பேஜர்கள் பெருமளவில் வெடித்துச்சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் நபர் ஒருவரிடமிருந்த பேஜர் வெடித்துச் சிதறுவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன. அவர் நிலத்தில் விழுந்து கிடந்து வலியால் துடிக்கின்றார், ஏனையவர்கள் அங்கிருந்து விலகி ஓடுகின்றனர்.

காயமடைந்த பெருமளவானவர்களை ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளிற்கு விரைந்தன. காயமடைந்தவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பெய்ரூட்டின் அஷ்ரபீஹ் மாவட்டத்தில் உள்ள LAU மருத்துவ மையம் அதன் பிரதான வாயிலை மூடி உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது. "இவை மிகவும் உணர்வுபூர்வமான பயங்கரமான காட்சிகள் என இது மிகவும் உணர்திறன் மற்றும் சில காட்சிகள் பயங்கரமானவை" என்று ஒரு ஊழியர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான காயங்கள் இடுப்பு முகம் கண்கள் மற்றும் கைகளில் காணப்பட்டன என அவர் கூறினார். "நிறைய உயிரிழப்புகள் விரல்களை இழந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அவை அனைத்தும்".

ஈரானிய தூதர் மொஜ்தாபா அமானியின் மனைவி வெடிப்புகளால் காயமடைந்துள்ளார் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ErxIcdyo.jpg

எட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக ஹெஸ்பொல்லாவின் ஊடக அலுவலகம் அறிவித்தது. அந்த இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்த விவரங்களை அது வழங்கவில்லை அவர்கள் "ஜெருசலேமுக்கு செல்லும் வழியில் உயிர்த்தியாகம் செய்தனர்" என்று மட்டுமே கூறியது.

கொல்லப்பட்டவர்களில் ஹெஸ்பொல்லா எம். பி. அலி அம்மரின் மகனும் பெக்கா பள்ளத்தாக்கில் ஹெஸ்பொல்லா உறுப்பினரின் 10 வயது மகளும் அடங்குவதாக குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. பின்னர் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான ஹசன் ஃபட்லல்லாவின் மகன் காயமடைந்ததாகவும் அவர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் தெரிவித்ததாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகத்தின் கூற்றுப்படி நாட்டின் உள்நாட்டுப் போரில் ஹெஸ்பொல்லா அரசாங்கப் படைகளுடன் இணைந்து போராடும் அண்டை நாடான சிரியாவில் பேஜர்கள் வெடித்ததில் பதினான்கு பேர் காயமடைந்தனர்.

https://www.virakesari.lk/article/193975

Edited by ஏராளன்
எழுத்துப்பிழை, இடைவெளி திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்பொலா ஆர்டர் செய்த 5,000 பேஜர்களில் மொசாட் ரகசியமாக வெடிமருந்து வைத்ததா? புதிய தகவல்கள்

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, பேஜர் வெடிப்புகளை தொடர்ந்து, மூன்று பெண்கள் பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்களை பார்க்க வருகிறார்கள் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் மர்பி, ஜோ டைடி
  • பதவி, பிபிசி செய்தியாளர் மற்றும் சைபர் நிருபர்
  • 18 செப்டெம்பர் 2024, 08:08 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாயன்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறின.

இதில் ஒன்பது பேர் பலியாகினர். 2,800 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஹெஸ்பொலா இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்கள் இதோ.

பேஜர் வெடிப்பு எப்போது, எங்கு நடந்தது?

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:45 மணியளவில் (13:45 BST) லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்கத் தொடங்கின.

பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாக, சிலரில் பாக்கெட்டுகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக சாட்சிகள் தெரிவித்தனர்.

ஒரு சிசிடிவி காணொளியில் கடையின் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேஜர் வெடித்தது.

ஆரம்பத்தில் சிறியளவில் வெடிக்கத் தொடங்கியது, பின்னர் சுமார் ஒரு மணி நேரம் இது தொடர்ந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ஏராளமான மக்கள் லெபனான் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி, குழப்பமான சூழல் நிலவியதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.

 
பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

பேஜர்கள் வெடித்தது எப்படி?

செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலின் அளவை குறிப்பிட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பேஜர் பேட்டரிகள் அதிக வெப்பமடைவதற்கு `ஹேக்கிங்’ காரணமாக இருக்கலாம், இதனால் சாதனங்கள் வெடித்திருக்கலாம் என்று சிலர் கூறினர். இதுபோன்ற செயல் முன்னெப்போதும் நிகழாத ஒன்று.

ஆனால் பல வல்லுநர்கள் இது சாத்தியமற்றது என்கின்றனர். பேஜர் வெடித்த காட்சிகளை பார்க்கும் போது பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து அது நிகழ்ந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறினர்.

மாற்றாக, பிற ஆராய்ச்சியாளர்கள் பேஜர்கள் தயாரிப்பு அல்லது விநியோகத்தின் போது தாக்குதல் நடக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கும் என்று வாதிடுகின்றனர்.

’சப்ளை செயின்’ தாக்குதல்கள் இணைய பாதுகாப்பு உலகில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது, சமீபத்தில் ஹேக்கர்கள் சில சாதனங்களை அவற்றின் தயாரிப்பின் போதே அணுகி அவற்றை மாற்றி அமைக்கின்றனர். இதன் மூலம் பல உயர்மட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் இந்த தாக்குதல்கள் பொதுவாக மென்பொருள் சார்ந்து இருக்கும். வன்பொருள் சார்ந்த விநியோகச் சங்கிலி தாக்குதல்கள் மிகவும் அரிதானவை, ஏனெனில் சாதனத்தில் நேரடியாக மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

இது விநியோகச் சங்கிலி தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், பேஜர்களை ரகசியமாக சேதப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கை நிகழ்ந்திருக்கும்.

ஒரு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ ஆயுதங்கள் நிபுணர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) பிபிசியிடம், இந்த சாதனங்கள் ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 கிராம் வரை ராணுவ உயர்தர வெடிமருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருக்கலாம். போலி மின் சாதனக் கூறுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்" என்றார்.

ஒரு எண்ணெழுத்து (alphanumeric) குறுஞ்செய்தி இதற்கு ஒரு சமிக்ஞையாக செயல்பட்டிருக்கும் என்று நிபுணர் கூறினார்.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

இந்த தாக்குதலில் உயிரிழந்த இருவர் ஹெஸ்பொலா எம்.பி.க்களின் மகன்கள் என்று ஹெஸ்பொலாவுக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையிடம் தெரிவித்தது. ஹெஸ்பொலா உறுப்பினர் ஒருவரின் மகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக இரானிய ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இந்த தாக்குதலில் காயமடையவில்லை என்று ராய்ட்டர்ஸ் முகமை, ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான் பொது சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் கூறுகையில், பெரும்பாலானவர்களுக்கு கைகள் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.

பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "பெரும்பாலான காயங்கள் முகம், கண்கள் மற்றும் கைகளில் ஏற்பட்டன. சிலருக்கு விரல் அல்லது கைகள் துண்டிக்கப்பட்டன. ” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பெரும்பான்மையான மக்கள் சிவில் உடையில் உள்ளனர், எனவே அவர்கள் ஹெஸ்பொலா போன்ற ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். அதே சமயம் படுகாயமடைந்தவர்களில் வயதானவர்கள், சிறிய குழந்தைகள் ஆகியோரும் அடக்கம். துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்ததையும் பார்க்க முடிந்தது. காயமடைந்தவர்களில் சிலர் சுகாதாரப் பணியாளர்களாக உள்ளனர்" என்று அமைச்சர் கூறினார்.

லெபனானுக்கு வெளியே, அண்டை நாடான சிரியாவில் இதேபோன்ற வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட `மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

 

யார் பொறுப்பு?

இதுவரை இந்த பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. லெபனானின் பிரதமரும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் "லெபனான் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்" என்று பிரதமர் நஜிப் மிகாட்டி கூறினார்.

தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹெஸ்பொலா தனது அறிக்கையில், "பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு அந்த நாடே முழுப் பொறுப்பு" என்று கூறியது.

"இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்திய `கிரிமினல்’ எதிரி நிச்சயமாக இந்த பாவச் செயலுக்கு நியாயமான தண்டனையைப் பெறுவார். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தண்டனை கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் தலைவரான பேராசிரியர் சைமன் மாபோன் பிபிசியிடம் கூறுகையில்: "இஸ்ரேல் தனது இலக்கை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக உள்ளது. இதனை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த தாக்குதலின் அளவு முன்னெப்போதும் இல்லாதது" என்று அவர் குறிப்பிட்டார்

ஹெஸ்பொலாவின் "தகவல் தொடர்பு வலையமைப்பில் இஸ்ரேல் ஆழமாக ஊடுருவியுள்ளதை இந்தத் தாக்குதல் பிரதிபலிக்கிறது” என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சத்தம் ஹவுஸைச் சேர்ந்த லினா காதிப் கூறினார்.

இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காரணமா?

ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானின் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பேஜர்களை ஹெஸ்பொலா பயன்படுத்துவது ஏன்?

இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்ப பேஜர்களை ஹெஸ்பொலா பயன்படுத்துகிறது. இதை ஒரு குறைந்த-தொழில்நுட்பம் கொண்ட தகவல் தொடர்பு வழிமுறையாக ஹெஸ்பொலா பெரிதும் நம்பியுள்ளது.

பேஜர் என்பது வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனம். இது எழுத்து அல்லது குரல் செய்திகளை காண்பிக்கும்.

நீண்டகாலம் முன்பே மொபைல் போன்கள் மிகவும் எளிதாக கண்காணிப்புக்கு இலக்காகக் கூடியவை என்று கருதப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. காரணம் 1996 ஆம் ஆண்டு, ஹமாஸ் வெடிகுண்டு நிபுணரான யாஹியா அய்யாஷை இஸ்ரேல் மொபைல் போன் மூலம் படுகொலை செய்தது. அவரது செல்பேசி அவரது கையில் இருந்த போது வெடித்து சிதறியது.

ஆனால், ஒரு ஹெஸ்பொலா செயற்பாட்டாளர் ஏபி செய்தி முகமையிடம், இந்த பேஜர்கள் ஹெஸ்பொலா குழு இதற்கு முன்பு பயன்படுத்தாத புதிய பிராண்ட் என்று கூறினார்.

சிஐஏவின் முன்னாள் ஆய்வாளர் எமிலி ஹார்டிங், பாதுகாப்பு அத்துமீறல் நடந்திருப்பது ஹெஸ்பொலாவுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.

"இத்தகைய சம்பவங்கள் மக்களுக்கு உடல் ரீதியாக ஆபத்தானது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் முழு பாதுகாப்பு அமைப்பையும் சந்தேகிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இஸ்ரேலுடனான மோதலில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்கள் ஒரு முழுமையான உள் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்." என்று அவர் தெரிவித்தார்.

 
பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பேஜர் வெடிப்பால் காயமடைந்த நபர் சிகிச்சை பெறுகிறார்.

ஹெஸ்பொலா-இஸ்ரேல் மோதல் அதிகரிக்குமா?

ஹெஸ்பொலா இஸ்ரேலின் எதிரியான இரானுடன் கூட்டணி வைத்துள்ளது. தெஹ்ரானின் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, ஹெஸ்பொலா அமைப்பும் இஸ்ரேலும் பல மாதங்களாக அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளன. இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை நாட்டின் வடக்கே குடியிருப்பவர்களை பாதுகாப்பாக திரும்பச் செய்தது. அப்பகுதி அதிகாரப்பூர்வ போர் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக திரும்பிய சில மணி நேரங்களுக்கு பிறகு பேஜர் வெடிப்புகள் நிகழ்ந்தன.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிகாரியிடம் இஸ்ரேல் "அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானதைச் செய்யும்" என்று கூறினார்.

முன்னதாக திங்கட்கிழமை, இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, முன்னாள் அதிகாரி ஒருவரைக் கொல்ல ஹெஸ்பொலா முயற்சி செய்ததாகவும், அதனை முறியடித்ததாகவும் கூறியது.

செவ்வாய் நடந்த பேஜர் வெடிப்புகளுக்கு பதிலடி கொடுக்கப் போவதாக ஹெஸ்பொலா ஏற்கனவே அச்சுறுத்தி வருவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறலாம் என்ற அச்சம் உள்ளது.

கூடுதல் அறிக்கை : பிரான்சிஸ் மாவோ

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இப்போது walkie talkie களும் வெடிக்கத் தொடங்ககி விட்டன லெபனானில்.

https://www.bbc.com/news/live/cwyl9048gx8t

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்பல்லா அமைப்பின் மீது ஒரு எதிர்கால இராணுவ நடவடிக்கையின் போது அதிர்ச்சி வைத்தியமாக (element of surprise) செய்யவிருந்த வேலையை, இஸ்ரேல் இப்போதே அவசரமாகச் செய்ய வேண்டி வந்து விட்டது என்கிறார்கள்.

இனி புதுக் கொம்பனியொன்றை உருவாக்கி, புதிய அண்டர் வேர் மாதிரி ஏதாவது ஹிஸ்பல்லா போராளிகளுக்கு விற்றுத் தான் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் இஸ்ரேல்😎

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் பொருளாதாரம் 

இரண்டும் அவர்கள் கையில். இன்னும் கனக்க பார்க்க இருக்கு. 

34 minutes ago, நிழலி said:

இப்போது walkie talkie களும் வெடிக்கத் தொடங்ககி விட்டன லெபனானில்.

https://www.bbc.com/news/live/cwyl9048gx8t

ஏதாவது பெரிதாக நடாத்தி முடிக்க போகிறார்களா???

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

அறிவியல் பொருளாதாரம் 

இரண்டும் அவர்கள் கையில். இன்னும் கனக்க பார்க்க இருக்கு. 

சனத்தொகையில் உலகில் 1% அளவேயுள்ள யூதர்கள் இதுவரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 20% மேற்பட்டவற்றை பெற்றுள்ளார்கள் என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகத் திறமையானவர்கள் தான். ஆனால், பல இடங்களிலும் பொதுமக்களையும் எந்த வித வேறுபாடும் இன்றி தாக்குவதை இவர்கள் தவிர்க்கவேண்டும். இவர்கள் வேறு நாடுகளுக்கு கொடுக்கும் ஆலோசனைகள் கூட அப்பாவி பொதுமக்கள் மீது எந்த கரிசனையும் அற்றது, உதாரணம்: இவர்கள் இலங்கை அரசிற்கும், இராணுவத்திற்கும் வழங்கியதாக சொல்லப்படும் ஆலோசனைகளும், வழிமுறைகளும்.   

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனானில் நூற்றுக்கணக்கில் வெடித்த பேஜர்கள் தயாரானது எங்கே? வெடிக்கச் செய்தது யார்?

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

லெபனானில் தலைநகர் பெய்ரூட் உள்பட நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பேஜர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த சுமார் 2,750 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களால் லெபனான் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர் இரான், சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

நவீன தகவல் தொடர்பு யுகத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெஸ்பொலா இன்னும் பேஜர்களையே பயன்படுத்துகிறது. அதனை குறிவைத்தே இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ரகசிய தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஹெஸ்பொலாவும் இஸ்ரேலையே கைகாட்டுகிறது. ஆனால், இஸ்ரேலோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறது.

அந்த பேஜர் எங்கே தயாரானது? அதனை வெடிக்கச் செய்தது யார்?

பேஜர் சிதைவுகளில் தெரியவந்தது என்ன?

லெபனானில் பல இடங்களில் வெடித்துச் சிதறிய பேஜர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன. அந்த பேஜர் புகைப்படங்களை ஆய்வு செய்யும் போது, 2 பேஜர்களின் பின்புறம் தெரிகிறது. அதில் ஒட்டப்படும் லேபிள்களில் பொதுவாக, விநியோகஸ்தர், மாடல் எண், இயங்கும் அதிர்வெண், போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தில் உள்ள பேஜர் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அந்த விவரம் தெரியவில்லை.

ஆனால், இரு பேஜர்களின் பாகங்களிலும் GOLD என்ற வார்த்தையை தெளிவாகப் பார்க்க முடிகிறது. மாடல் எண் ஒரு பகுதியளவு தெரிகிறது. அது AR-9 அல்லது AP-9 போல் தெரிகிறது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்யும் போது, அந்த பேஜர்கள், ரக்கட் பேஜர் AR-924 என்ற மாடலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. அந்தமாடல் தைவானைச் சேர்ந்த கோல்ட் அப்பொலோ என்ற நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய பேஜர் (சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது)

வெடிக்காத பேஜர்கள் ஆய்வு - கூறுவது என்ன?

லெபனானில் பல நூறு பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததைத் தொடர்ந்து, ஹெஸ்பொலாவின் வெடிக்காத பேஜர்களில் இருந்து ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக வெடிமருந்து வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு கிட்டத்தட்ட 6 அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களை தொடர்புபடுத்துகிறது.

லெபனான், சிரியா, இரான், தைவான், ஹங்கேரி வரிசையில அந்த பட்டியல் இஸ்ரேல் வரை நீள்கிறது. லெபனான், சிரியாவில் பேஜர்கள் வெடித்தன. இரான், ஹெஸ்பொலாவுக்கு புரவலராக இருக்கிறது. அந்த பேஜர் கோல்ட் அப்பொலோ நிறுவனத்தின் லோகோவைக் கொண்டிருந்ததால் தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. தற்போது அது ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இறுதியாக வரும் இஸ்ரேலே இந்த வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் உளவு அமைப்பான மொசாட்டே இதற்கு காரணம் என்பது பல நிபுணர்களின் கூற்றாக உள்ளது. இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் கூறாவிட்டாலும் கூட, இதனை செய்வதற்கான தொழில்நுட்பத் திறனும், ஹெஸ்பொலாவுக்கு பலத்த அடி கொடுக்கும் நோக்கமும் வேறு எந்த நாட்டிற்கோ அல்லது அமைப்புக்கோ இல்லை என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கூற்று.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பே காரணம் - ராய்ட்டர்ஸ்

ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவளால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டதைவிட முன்பே பேஜர்களை இஸ்ரேல் வெடிக்கச் செய்ததா?

ஹெஸ்பொலா ஆர்டர் செய்த போதே, ஆயிரக்கணக்கான பேஜர்களில் அதிஉயர் வெடிமருந்துகளை இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு ரகசியமாக வைத்துவிட்டது என்று லெபனான் பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது. அதேவேளையில், ஹெஸ்பொலாவுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலின் தொடக்கமாகவே இதனைச் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக ஆக்ஸியோஸ் மற்றும் அல்-மானிட்டர் ஊடகத்திடம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தனித்தனியே தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த திட்டம் ஹெஸ்பொலாவுக்கு தெரியவந்திருக்கலாம் என்று இஸ்ரேலுக்கு சமீப நாட்களில் சந்தேகம் வந்துவிட்டதாகவும், அதனால், முன்கூட்டியே பேஜர்களை வெடிக்கச் செய்துவிட்டதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

"பயன்படுத்த வேண்டும் அல்லது அவற்றை இழக்க வேண்டும் என்ற நிலையில் இஸ்ரேல் இருந்தது" என்று ஆக்ஸியோஸ் ஊடகத்திடம் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, சூ சிங்-குவாங், கோல்ட் அப்பொலோ நிறுவனர்

எங்களுக்கு தொடர்பு இல்லை - தைவான் நிறுவனம்

நாம் ஏற்கனவே கூறியபடி, லெபனானில் வெடித்த பேஜர்கள் "கோல்ட் ஏஆர்-924" மாடல் போல் தோன்றுகிறது.

ஆனால், லெபனானில் பேஜர்கள் வெடித்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தைவானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கோல்ட் அப்பொலோவின் நிறுவனர் சூ சிங்-குவாங் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த BAC என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அவர் கூறினார்.

"எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறுகிறார்.

கோல்ட் அப்பொலோ சுட்டிக்காட்டும் BAC நிறுவனம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை மையமாகக் கொண்டது.

லெபனானில் நடந்தது குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர், தங்கள் நிறுவனமும் அதனால் பாதிக்கப்பட்ட ஒன்றுதான் என்றார்.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தைவானில் கோல்ட் அப்பல்லோ அலுவலகத்தில் காவல்துறையினர் உள்ளனர்.

தைவான் அரசு கூறுவது என்ன?

தைவானில் இருந்து லெபனானுக்கு நேரடியாக இதுபோன்று ஏற்றுமதி நடந்ததாக எந்தவொரு ஆவணமும் இல்லை என்று தைவானின் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார். கோல்ட் அப்பொலோ நிறுவனம் 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு 2.6 லட்சம் பேஜர்களை ஏற்றுமதி செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்களை பார்க்கையில், தாங்கள் ஏற்றுமதி செய்த பேஜர்கள் அதன் பிறகு மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த நிறுவனம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோல்ட் அப்பல்லோ அலுவலகத்தில் சோதனை

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள பிபிசி குழு, பேஜர் தாக்குதலை தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்துள்ள தைவானிய நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் அலுவலகங்களுக்குச் சென்றுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் தற்போது வரை அந்த வளாகத்திற்குள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஊழியர்களை விசாரித்து ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நிறுவன வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா

இஸ்ரேலுக்கு லெபனான் எச்சரிக்கை

இதுவரை இந்த பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. லெபனான் பிரதமரும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் "லெபனான் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்" என்று பிரதமர் நஜிப் மிகாட்டி கூறினார்.

தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹெஸ்பொலா தனது அறிக்கையில், "பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு அந்த நாடே முழுப் பொறுப்பு" என்று கூறியது.

"இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்திய `கிரிமினல்’ எதிரி நிச்சயமாக இந்த பாவச் செயலுக்கு நியாயமான தண்டனையைப் பெறுவார். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தண்டனை கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா நாளை உரையாற்றுவார் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.

பேஜர் வெடிப்பு, லெபனான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, மரியா ஜகரோவா, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்

ரஷ்யா கண்டனம்

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த உயர்-தொழில்நுட்ப தாக்குதலை திட்டமிட்டவர்கள் வேண்டுமென்றே மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தூண்டும் வகையில் பெரிய அளவிலான ஆயுத மோதலை தூண்டிவிட முயற்சி செய்கின்றனர்.” குற்றம்சாட்டியுள்ளார்.

லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி உடனான தொலைபேசி அழைப்பின் போது, துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இந்த தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலை துருக்கியின் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை ஜெனிவா ஒப்பந்தத்தை மீறிய செயலாக கருதுவதாக அயர்லாந்து துணை பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

"இது ஒரு புதிய போர் முறை. எனவே இது குறித்து நாம் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், மேலும் சர்வதேச சமூகம் தாக்குதலின் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தலைநகர் டப்ளினில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மைக்கேல் மார்ட்டின் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

அறிவியல் பொருளாதாரம் 

இரண்டும் அவர்கள் கையில். இன்னும் கனக்க பார்க்க இருக்கு. 

ஏதாவது பெரிதாக நடாத்தி முடிக்க போகிறார்களா???

thermal runaway பற்றி டார்க் வெப்பில் பல வருடம்களுக்கு முன்பே உளறி இருந்தார்கள் ஆம் பெரிதாக நடக்கும் சந்தர்பங்களின் அளவு கூடியுள்ளது லித்தியம் பற்றரிகள் மின்சார கார்களில் இதே போன்று நடக்க சந்தர்ப்பம் நிறையவே உண்டு தவிர்க்க முடியாது எதிர்காலம்களில் .

😄பேசாமல் குதிரை வண்டிலுக்கு திரும்புவதுதான் பாதுகாப்பு 😄

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

சனத்தொகையில் உலகில் 1% அளவேயுள்ள யூதர்கள் இதுவரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 20% மேற்பட்டவற்றை பெற்றுள்ளார்கள் என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகத் திறமையானவர்கள் தான். ஆனால், பல இடங்களிலும் பொதுமக்களையும் எந்த வித வேறுபாடும் இன்றி தாக்குவதை இவர்கள் தவிர்க்கவேண்டும். இவர்கள் வேறு நாடுகளுக்கு கொடுக்கும் ஆலோசனைகள் கூட அப்பாவி பொதுமக்கள் மீது எந்த கரிசனையும் அற்றது, உதாரணம்: இவர்கள் இலங்கை அரசிற்கும், இராணுவத்திற்கும் வழங்கியதாக சொல்லப்படும் ஆலோசனைகளும், வழிமுறைகளும்.   

தர்ம யுத்தம் செய்து தோற்றுப் போன இனம் நாம். வெற்றி மட்டுமே அனைத்தும் சீரமைக்கிறது. எப்படி வென்றோம் என்பது கூட அறிவீலித்தனமானது உலகில் ....???

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

thermal runaway பற்றி டார்க் வெப்பில் பல வருடம்களுக்கு முன்பே உளறி இருந்தார்கள் ஆம் பெரிதாக நடக்கும் சந்தர்பங்களின் அளவு கூடியுள்ளது லித்தியம் பற்றரிகள் மின்சார கார்களில் இதே போன்று நடக்க சந்தர்ப்பம் நிறையவே உண்டு தவிர்க்க முடியாது எதிர்காலம்களில் .

😄பேசாமல் குதிரை வண்டிலுக்கு திரும்புவதுதான் பாதுகாப்பு 😄

Thermal management systems for batteries in electric vehicles: A recent  review - ScienceDirect

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தர்ம யுத்தம் செய்து தோற்றுப் போன இனம் நாம். வெற்றி மட்டுமே அனைத்தும் சீரமைக்கிறது. எப்படி வென்றோம் என்பது கூட அறிவீலித்தனமானது உலகில் ....???

உண்மையான, ஆனால் மனதை அழுத்தும் கூற்று, விசுகு ஐயா.

முடிவுகள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன என்றும் சொல்வார்கள்......... இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது...........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சனத்தொகையில் உலகில் 1% அளவேயுள்ள யூதர்கள் இதுவரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 20% மேற்பட்டவற்றை பெற்றுள்ளார்கள் என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகத் திறமையானவர்கள் தான். ஆனால், பல இடங்களிலும் பொதுமக்களையும் எந்த வித வேறுபாடும் இன்றி தாக்குவதை இவர்கள் தவிர்க்கவேண்டும். இவர்கள் வேறு நாடுகளுக்கு கொடுக்கும் ஆலோசனைகள் கூட அப்பாவி பொதுமக்கள் மீது எந்த கரிசனையும் அற்றது, உதாரணம்: இவர்கள் இலங்கை அரசிற்கும், இராணுவத்திற்கும் வழங்கியதாக சொல்லப்படும் ஆலோசனைகளும், வழிமுறைகளும்.   

ஹமாஸ் போன்ற இயக்கங்கள் தோன்றுவதற்கும் வளர்வதற்கும், இவர்களின் பல செயற்பாடுகள் காரணம்.  இதனால்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் படிப்படியாக வலுவிழந்து போனது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

லித்தியம் பற்றரிகள் மின்சார கார்களில் இதே போன்று நடக்க சந்தர்ப்பம் நிறையவே உண்டு தவிர்க்க முடியாது எதிர்காலம்களில் .

இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகளும்,அரச பிரமுகர்களும்,பெரும் புள்ளிகளும் மின்சார கார்கள் பாவிக்க மாட்டீனம் எண்டுறியள்? 😎

நான் கைத்தொலைபேசியை தொடர்ந்து  பாவிக்கலாமா விடுவமா எண்டு யோசிக்கிறன். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.