Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

எதுக்கும் இரண்டு புறாக்களை பிடிச்சு கடதாசிகளை கொண்டு போய் சேர்க்க training கொடுக்கத்தான் இருக்கு.

 

  • Replies 52
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெடித்தால் உள்ளதும் போய் விடும்.

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இரு மாதங்களுக்கு முன்னர் தாய்வானிடமிரிந்து 3000 இற்கு அதிகமான, அமைவிடத்தையும் உரையாடலையும் கண்டுபிடிக்க முடியாத பேஜர்களை ஹிஸ்புள்ளா கொள்வனவு செய்திருக்கிறது. தாய்வானில் இருந்து லெபனானிற்கு அனுப்பப்படு

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஒரு பொருளை உருவாக்குபவர்களால் அந்த பொருளை வைத்து நல்லது - கெட்டது எதுவுமே செய்ய முடியும்.😎 வீட்டில் இருக்கும் தனிப்பட்ட கணணிகளையே கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள் உள்ள  உலகத்தில் அல்லது கணணி தொழில

  • கருத்துக்கள உறவுகள்

90-91 களில் பேஜர் பாவித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

தர்ம யுத்தம் செய்து தோற்றுப் போன இனம் நாம். வெற்றி மட்டுமே அனைத்தும் சீரமைக்கிறது. எப்படி வென்றோம் என்பது கூட அறிவீலித்தனமானது உலகில் ....???

அசோக சக்கரவத்தியும் ஒர் போர் பிரியர் அவர் செய்த கொலைகள் எண்ணிலடங்காதவையாக் இருக்கும் ...இறுதியில் அரச மரக்கிளையை கொடுத்து அனுப்பி நாடுகளை(அன்றைய மன்னர்களை) அடிபணியவைத்தார் என நினைக்கிறேன்...அரச மரக்கிளையை ஒழுங்காக வளர்த்தால் மன்னர்களும் மக்களும் தப்பி பிழைத்தார்கள் த்ர்மசக்கரம் அவர்களுக்கு பரிசு .....அரச மரக்கிளையை உதாசீனப்படுத்திய மன்னர்களும் மக்களும் மேலோகம் போனார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

அசோக சக்கரவத்தியும் ஒர் போர் பிரியர் அவர் செய்த கொலைகள் எண்ணிலடங்காதவையாக் இருக்கும் ...இறுதியில் அரச மரக்கிளையை கொடுத்து அனுப்பி நாடுகளை(அன்றைய மன்னர்களை) அடிபணியவைத்தார் என நினைக்கிறேன்...அரச மரக்கிளையை ஒழுங்காக வளர்த்தால் மன்னர்களும் மக்களும் தப்பி பிழைத்தார்கள் த்ர்மசக்கரம் அவர்களுக்கு பரிசு .....அரச மரக்கிளையை உதாசீனப்படுத்திய மன்னர்களும் மக்களும் மேலோகம் போனார்கள்....

👍.............

வரலாறு எல்லாம் ஆராய்ந்து தான் உங்களின் புனைபெயரை தெரிந்தெடுத்திருக்கின்றீர்கள்................🤣.

புத்தர் ஆரம்பத்திலேயே தெளிந்தார், அசோகன் இடையிலே தெளிந்தார், நாங்கள் போகும் வரை இப்படியே போகட்டும் என்று போய்க் கொண்டிருக்கின்றோம் போல.............

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

எதுக்கும் இரண்டு புறாக்களை பிடிச்சு கடதாசிகளை கொண்டு போய் சேர்க்க training கொடுக்கத்தான் இருக்கு.

 

North America வில் விற்கப்படும் electronic உபகரணங்கள் மட்டும்தான் இனிப் பாதுகாப்பானவையாக இருக்கும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதாலதான் செத்தகிளிக்கு இஸ்ரேலுடன் மோதுறதுக்குப் பயம். அவனுகள் சொல்லுறதை மட்டுமில்லை சொல்லாததையும் செய்துகாட்டுவானுகள்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

dddih47_lebanon-walkie-talkie-blasts_625

லெபனானில் இரண்டாவது நாளாக தொடர்பு சாதனங்களில் வெடிப்பு!

லெபனானில் வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டாவது நாளாக பதிவான வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த நிலையில், அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது

மேலும் லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

அத்துடன் ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400105

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிறது லெபனானில்?

லெபனான் நாட்டில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியுள்ளது.

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி வரும் அமைப்பு ஹிஸ்புல்லா எனும் பெயர் கொண்ட அமைப்பாகும். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வந்தது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த செய்தி பரிமாற்ற பேஜர்கள் நேற்றைய தினம் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேஜர் வெடிப்பில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேஜர்கள் தயாரிக்கப்படும்போதே அதில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத்தின் சூழ்ச்சி உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சினிமாவில் வருவது போல் இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலை ஹேக்கிங் மூலம் செய்ய முடியும் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களை இதுபோன்ற ஹேக்கிங் மூலம் அடுத்தடுத்து வெடிக்க செய்ய முடியுமா என்ற கேள்வியே பலரை அச்சமூட்டியுள்ளது.

இந்த சம்பவங்கள் நடைபெற்று பரபரப்புகளும் அதிர்ச்சியும் அடங்குவதற்குள் அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கிடாக்கிகள் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லெபனான் தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/309537

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரசோதரன் said:

👍.............

வரலாறு எல்லாம் ஆராய்ந்து தான் உங்களின் புனைபெயரை தெரிந்தெடுத்திருக்கின்றீர்கள்................🤣.

புத்தர் ஆரம்பத்திலேயே தெளிந்தார், அசோகன் இடையிலே தெளிந்தார், நாங்கள் போகும் வரை இப்படியே போகட்டும் என்று போய்க் கொண்டிருக்கின்றோம் போல.............

போர் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று....ஆனால் உலகம் இயங்குவதே இந்த போரினால் தான் என்பது வரலாறு ...இதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதும் வரலாறு ....தனிநபர் மாற்றங்கள் தனிநபருக்கு வெளிச்சம் கொடுக்கும் ஆனால் சமுகத்திற்கு மாற்றத்தை கொடுக்காது...

புத்தர் ..தெளிவடைந்தார் அதனால் அவருக்கு நனமை ஆனால் உலகிற்கு ?
அசோகன்...கொலை செய்த பின்பு தெளிவடைந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது ....

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

தனிநபர் மாற்றங்கள் தனிநபருக்கு வெளிச்சம் கொடுக்கும் ஆனால் சமுகத்திற்கு மாற்றத்தை கொடுக்காது...

புத்தர் ..தெளிவடைந்தார் அதனால் அவருக்கு நனமை ஆனால் உலகிற்கு ?
அசோகன்...கொலை செய்த பின்பு தெளிவடைந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது ....

என்னுடைய புரிதல் வேறு விதமாக இருக்கின்றது. அத்துடன் பல பார்வைகள், கோணங்கள் இதில் இருக்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

'எந்த மாற்றம் வேண்டும் என்று விரும்புகின்றாயோ, அந்த மாற்றமாக நீயே இரு..........' என்பது போல காந்தியடிகள் சொல்லி இருக்கின்றார். அவர் வாழ்ந்ததும் அப்படியே. அவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றியே காந்தியம் உருவாகியது.

காந்தியமும், அஹிம்சாவாதமும் பாராபட்சமானவை. தீண்டாமை போன்ற கொடூரமான அடிப்படைப் பிரச்சனையைக் கூட அது தீர்க்கவில்லை என்று சொல்லி அம்பேத்கர் அவர்கள் வேறொரு வழியில் போனார். அவருக்கு புத்த பெருமானே சமூக நீதி, தத்துவ மற்றும் ஆன்மீக வழிகாட்டி. இன்றும் அம்பேத்கரை பின் தொடர்பவர்கள் பலர் புத்த பெருமானையும் தொடருகின்றனர், உதாரணம்: ரஞ்சித்.

இலங்கையில் இருக்கும் மதத்தையும், அதன் நெறிமுறைகளையும்  வெறும் அதிகார அரசியலாகவே பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். பெருமான் சொன்ன தம்மம் அங்கில்லை.

சில தனி ஒருவர்கள் நன்மை பயக்கும் வழிகாட்டியாக மாறுவார்கள் என்பதே என் புரிதல். இலக்கியத்தில் கூட பாரதியும், புதுமைப்பித்தனும் அடைந்த தெளிவே நவீன தமிழை எல்லோருக்கும் கொண்டு வந்தது.....🙏.    

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடித்துச் சிதறிய வாக்கி டோக்கிகள்; ஜப்பான் நிறுவனத்தின் விளக்கம்

லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து நூதன தாக்குதல் குறித்து ஜப்பான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும்,  40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலின் தாக்குதல் வளையத்திற்குள் சிக்கிவிடக்கூடாது என்று பல்வேறு யுத்திகளை கையாண்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு பேஜரை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று லெபனானில் இருக்கும் சில அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஹமாஸ் அமைப்பைச் சேராத பலரும் பேஜர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 17 ஆம் தேதி மாலை 3 மணியளவில் லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மக்கள் பயன்படுத்திய பேஜர் வெடித்துச் சிதறியது. அதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகம் இருக்கும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,800 பேர் காயமடைந்துள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் வெடிக்கத் தொடங்கிய பேஜர், ஒரு மணிநேரம் தொடர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு,  மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் பணிக்குத் திரும்பினர். உயிரிழந்த 12 பேரில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும், அதேசமயம் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று கூறி ஹிஸ்புல்லா அமைப்பு, பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நிச்சயம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடக்குவதற்குள் 18 ஆம் தேதி லெபனானில்  பல வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 32 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வாக்கி டாக்கி வெடிப்பால் ஆங்காங்கே தீப்பற்றி வீடுகள், வாகனங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குச் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கும் பின்னும் இஸ்ரேல் இருப்பதாக  ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகளில் ஜப்பான் நிறுவனமான ஐகான் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப் பட்டிருந்ததால், அந்த நிறுவனம் இந்த வெடிப்பு சம்பவங்களைக் குறைத்து கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஐகாம் நிறுவனம் இந்த வகையான வாக்கி டாக்கிகளை உற்பத்தி செய்வதை 2014ல் கைவிட்டதாகவும் இதை நாக்கள் தற்போது தயாரிப்பதில்லை எனவும், இவை 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை எனவும் விளக்கமளித்துள்ளது.

https://thinakkural.lk/article/309610

  • கருத்துக்கள உறவுகள்

Flight-fe.jpg?resize=750,375

பேஜர் – வாக்கி டாக்கிகளுடன் பயணிக்க தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்!

பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை விமானங்களில் கொண்டு வருவதற்கு கட்டார் ஏர்வேஸ் தடை விதித்துள்ளது.

லெபனானில் பல வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் வெடித்ததை அடுத்து, விமானங்களில் இதுபோன்ற விடயங்களைத் தடைசெய்யும் உத்தரவை நாடு பிறப்பித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, விமான நிறுவனம், சமூக ஊடக தளமான எக்ஸில், மறு அறிவிப்பு வரும் வரை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்று கூறியது.

செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் லெபனான் முழுவதும் பதின பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் 2,931 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் நிலவி வரும் நிலையில் குறித்த வெடிப்பு சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400341

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

 

22 hours ago, ரசோதரன் said:

காந்தியமும், அஹிம்சாவாதமும் பாராபட்சமானவை. தீண்டாமை போன்ற கொடூரமான அடிப்படைப் பிரச்சனையைக் கூட அது தீர்க்கவில்லை என்று சொல்லி அம்பேத்கர் அவர்கள் வேறொரு வழியில் போனார். அவருக்கு புத்த பெருமானே சமூக நீதி, தத்துவ மற்றும் ஆன்மீக வழிகாட்டி. இன்றும் அம்பேத்கரை பின் தொடர்பவர்கள் பலர் புத்த பெருமானையும் தொடருகின்றனர், உதாரணம்: ரஞ்சித்.

 

காந்தியம் இந்தியாவிலயே தோல்வி கண்ட விடயம் ...
அம்பேத்காரின் வாரிசுகள்  ,(ரஞ்சித் போன்றவர்கள்) தளித்  அடையாளத்துடன் பெளத்த மத்ததை பரப்பும் செயல்களில் இடுபடுகிறார் என நான் பார்க்கிரேன் ..இலங்கையிலும் இதை ஒரு சில தமிழ் மற்றும் சிங்கள அரசியல் வாதிகள் செய்ய தொடங்கியுள்ளார்கள்....

கருத்துக்களை,கொள்கைகளை உருவாக்கியவர்கள் நல்லெண்ண்த்துடன் செய்திருக்கலாம் ஆனால் அதை காவிசெல்பவர்கள் வெறித்தனத்துடன்  சமுகத்திற்கு எடுத்து செல்கின்றனர் ....பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் பழைய கருத்துக்களையும்  ,கொள்கைகளையும் காவிச்செல்கின்றனர் .... 

இது எனது பார்வை ...உங்களது நேரத்திற்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இந்து மதத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், குறைந்த சாதியினர் என்று உயர் சாதியினரால் கருதப்படும் ஒரு பகுதியினர் இழிவாக நடத்தப்படுவது போன்றவை அம்மக்கள் சாதிய வேற்றுமைகள் அற்றதாகக் கருதப்படும் பெளத்த மதத்திற்கோ அல்லது இஸ்லாமிய மதத்திற்கோ மாறுவது நடக்கிறது. அம்பேத்காரின் புரட்சியும் இதன் அடிப்படையில் அமைந்ததுதான். இதில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வேண்டுமானால் உயர் சாதியினரின் முகத்தில் அறையும் முகமாக "உங்கள் மதம் வேண்டாம் போடா" என்று பெளத்த மதத்தைத் தழுவோர் இதன் மூலம் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டைப் போல் இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழர்களின் மத்தியிலும் சாதிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் ஆலயங்களுக்கு வருவதற்கான தடை, வீடுகளுக்குள் வருவதற்கான தடை, உணவருந்துவதற்குத் தனியே சிறட்டைகள், வெளியில் வைக்கப்படும் கோப்பைகள் என்று இருந்தபோதிலும் தற்போது இது திருமணம் முடிக்கும்காலத்தில் மட்டும் பாவிக்கப்படுகின்ற, உயிர்ப்புடன் இருக்கின்ற, மறுக்கமுடியாத காரணியாக இருக்கிறது.  ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பெளத்தத்திற்கு மாறுவதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கின்றது. சிங்கள பெளத்த பேரினவாதத்தினால் உந்தப்பட்ட அருண் சித்தார்த் போன்ற துணை இராணுவக் குழு முக்கியஸ்த்தரும், சுரேன் ராகவன் போன்ற சிங்களத்திற்குச் சேவை செய்யும் புத்தி ஜீவிகளும் இதனை முன்னெடுத்து வருகிறார்கள். சாதிய வேற்றுமையினைக் காரணம் காட்டி சிங்கள பெளத்த மயமாக்கல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

தமிழ்நாட்டைப் போல் இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழர்களின் மத்தியிலும் சாதிய வேற்றுமைகள் இருக்கின்றன.

ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்).

இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது.

ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது.

2 hours ago, ரஞ்சித் said:

 ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பெளத்தத்திற்கு மாறுவதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கின்றது. சிங்கள பெளத்த பேரினவாதத்தினால் உந்தப்பட்ட அருண் சித்தார்த் போன்ற துணை இராணுவக் குழு முக்கியஸ்த்தரும், சுரேன் ராகவன் போன்ற சிங்களத்திற்குச் சேவை செய்யும் புத்தி ஜீவிகளும் இதனை முன்னெடுத்து வருகிறார்கள். சாதிய வேற்றுமையினைக் காரணம் காட்டி சிங்கள பெளத்த மயமாக்கல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.

என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து  தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக  இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும்.

நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா?

உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட  ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  

1 - தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்).

 இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து

2- தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 

இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???

இந்த நுண் அரசியல் செய்தவர்கள் ஆங்கிலக்கல்வியினை கற்றவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆங்கிலக்கல்வியின் மூலம் பொருளாதார வளம் பெற்று சமூக மாற்றம் ஏற்படுவதனை விரும்பவில்லை இவ்வாறான செயலை கிப்பொகிரட் என ஆங்கிலத்திலும் தமிழில் முரண்நகை (நயவஞ்சகர்) என கூறுவார்கள்.

அது காலனித்துவ கால பிரச்சினை, தற்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம், பிரான்ஸில் பிறக்கும் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் பிரென்ச் மொழி மட்டும் தெரியும் என வைத்துக்கொள்வோம்; அவர்கள் பிரன்சு பிரஜைகளாக இருந்தாலும் அவர்களை நீங்கள் பிரென்சு இனத்தவர் என அழைப்பீர்களா அல்லது தமிழர் என அழைப்பீர்களா? அவ்வாறே நீங்க்ளே விரும்பி பிரென்சு இனத்தவர் என அழைத்தாலும் பிரென்சு இனத்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா?

ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் வேற்றுமையினை களையவேண்டும் என்பதற்காக கூறினேன், சிங்கள பெரும்பான்மையினர் எவ்வாறு இலங்கையிலுள்ள மற்ற சிறுபான்மையினரை தமக்கு சமமாக கருதவேண்டும் என விரும்புகிறோமோ அதே போல் எம்க்குள்ளும் அதே நிலைப்பாடு இருக்க வேண்டும்.

உண்மையில் நீங்கள் நினைப்பது போல இதனை உரிந்து கொள்வது சிக்கலான விடயம் ஒன்றும் இல்லை, எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான் என்ற சாதாரண புரிதலிருந்தால் போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனானில் இரண்டு நாட்களாகத் தொடரும் மனித வேட்டை! உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலிய உளவு அமைப்பு!!

இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' என்றால் யார் என்பதை உலகிற்கு மறுபடியும் நிரூபித்த ஒரு தாக்குதல்.

17ம் 18ம் திகதிகளில் லெபனானிலும், சிரியாவிலும் திடீர்திடீரென்று பேஜர்களும், தொலைத்தொடர்புச் சாதனங்களும் ஆயிரக்கணக்கில் வெடித்துச் சிதறியதில் 35 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, 3500 பேர்வரையில் படுகாயம் அடைந்திருந்தார்கள்.

ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பாவித்த தொலைத் தொடர்பு உபகரணங்களையே வெடிக்கவைத்து வித்தியாசமான ஒரு தாக்குதலை மேற்கொண்டிருந்தது இஸ்ரேலிய மொசாட் அமைப்பு.

மொசாட்டினால் எப்படி இதனைச் செய்யமுடிந்தது?

எப்படித் திட்டமிட்டார்கள்?

எத்தனை காலத்து திட்டம் இது?

இந்த விடயங்கள் பற்றிய தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்: 

https://ibctamil.com/article/walkitalki-and-pager-ecploded-in-lebanan-by-mosad-1726738321

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

இந்த நுண் அரசியல் செய்தவர்கள் ஆங்கிலக்கல்வியினை கற்றவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆங்கிலக்கல்வியின் மூலம் பொருளாதார வளம் பெற்று சமூக மாற்றம் ஏற்படுவதனை விரும்பவில்லை இவ்வாறான செயலை கிப்பொகிரட் என ஆங்கிலத்திலும் தமிழில் முரண்நகை (நயவஞ்சகர்) என கூறுவார்கள்.

அது காலனித்துவ கால பிரச்சினை, தற்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம், பிரான்ஸில் பிறக்கும் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் பிரென்ச் மொழி மட்டும் தெரியும் என வைத்துக்கொள்வோம்; அவர்கள் பிரன்சு பிரஜைகளாக இருந்தாலும் அவர்களை நீங்கள் பிரென்சு இனத்தவர் என அழைப்பீர்களா அல்லது தமிழர் என அழைப்பீர்களா? அவ்வாறே நீங்க்ளே விரும்பி பிரென்சு இனத்தவர் என அழைத்தாலும் பிரென்சு இனத்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா?

ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் வேற்றுமையினை களையவேண்டும் என்பதற்காக கூறினேன், சிங்கள பெரும்பான்மையினர் எவ்வாறு இலங்கையிலுள்ள மற்ற சிறுபான்மையினரை தமக்கு சமமாக கருதவேண்டும் என விரும்புகிறோமோ அதே போல் எம்க்குள்ளும் அதே நிலைப்பாடு இருக்க வேண்டும்.

உண்மையில் நீங்கள் நினைப்பது போல இதனை உரிந்து கொள்வது சிக்கலான விடயம் ஒன்றும் இல்லை, எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான் என்ற சாதாரண புரிதலிருந்தால் போதும்.

இது பற்றி பேசுவது என்றால் கனக்க எழுதவேண்டும். எழுதிக் கொண்டே இருக்கலாம்.

என் பேரப்பிள்ளைகள் சார்ந்த கேள்விகளுக்கு பதில் தந்தால் நிறம் அதற்குள் வந்து நின்றுவிடும். 

அப்படியானால் இந்த உலகம் உங்கள் கடைசி வரி போல் எல்லோரும் சாதாரண மனிதர்கள் என்ற நிலை வரணும். அவ்வாறு வந்தால் நான் தமிழன் நீ பிரெஞ்சுக்காரன் என்பதும் இருக்கமுடியாது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது பற்றி பேசுவது என்றால் கனக்க எழுதவேண்டும். எழுதிக் கொண்டே இருக்கலாம்.

என் பேரப்பிள்ளைகள் சார்ந்த கேள்விகளுக்கு பதில் தந்தால் நிறம் அதற்குள் வந்து நின்றுவிடும். 

அப்படியானால் இந்த உலகம் உங்கள் கடைசி வரி போல் எல்லோரும் சாதாரண மனிதர்கள் என்ற நிலை வரணும். அவ்வாறு வந்தால் நான் தமிழன் நீ பிரெஞ்சுக்காரன் என்பதும் இருக்கமுடியாது அல்லவா?

இந்த விடயங்கள் உண்மையில் ஒன்றுமில்லாத விடயங்கள்தான் அதனை தீவிரமாக எடுக்க தேவையில்லை, நீங்கள் ஒரு விவாதத்திற்காக கூறினீர்கள் என்பதும் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - லெபனான்: பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பில் தொடரும் மர்மம் - விடை தெரியாத கேள்விகள்

இஸ்ரேல் - லெபனான், பேஜர், வாக்கிடாக்கி வெடிபபு

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்து சிதறியதில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பென்னட்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

லெபனானில் இரண்டு வெவ்வேறு தொடர் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்து சிதறின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். அத்தகைய நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விவரம் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

லெபனான், ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹெஸ்பொலா இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேல் இதுகுறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பிபிசி இந்த வழக்கை தைவானில் இருந்து ஜப்பான், ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் மீண்டும் லெபனானில் இருந்து நெருக்கமாக பின்தொடர்கிறது. பேஜர்கள், வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்தது தொடர்பாக நீடிக்கும் விடை தெரியாத கேள்விகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பேஜர்கள் குறிவைக்கப்பட்டது எப்படி?

இந்த சம்பவம் நடந்த பின்னர் ஆரம்பத்தில் எழுந்த சில ஊகங்களில், 'பேஜர்கள் ஒரு சிக்கலான ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் குறிவைக்கப்பட்டிருக்கலாம், இதனால் அவை வெடித்துச் சிதறி இருக்கலாம்' என்றனர்.

ஆனால் அந்த ஊகம் நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டது.

அதிக சேதம் விளைவிப்பதற்காக, பேஜர்கள் ஹெஸ்பொலா கைகளில் சேரும் முன்பே அவற்றில் வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஜர்களின் உடைந்த பாகங்களில், `கோல்ட் அப்பல்லோ’ என்ற தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லோகோவைக் காண முடிகிறது.

தைவான் தலைநகர் தைபேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வணிக பூங்காவில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அலுவலகங்களை பிபிசி பார்வையிட்டது.

`கோல்ட் அப்பல்லோ’ நிறுவனர் சூ சிங்-குவாங் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்றதாக கூறினார். இந்த நடவடிக்கைக்கும் அவர்களின் வணிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்தார்.

 
இஸ்ரேல் - லெபனான், பேஜர், வாக்கிடாக்கி வெடிபபு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பேஜர் வெடிப்பால் ஒரு போன் கடையில் இருந்து வரும் புகை (கோப்புப்படம்)

"நீங்கள் லெபனானில் இருந்து வெளியான படங்களைப் பாருங்கள். வெடித்த பேஜர்களில் இது தைவானில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை, நாங்கள் அந்த பேஜர்களை தயாரிக்கவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த பி.ஏ.சி என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக சூ சிங்-குவாங் கூறினார்.

"எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறினார்.

கோல்ட் அப்பல்லோ நிறுவனர் குறிப்பிட்ட பி.ஏ.சி. நிறுவனம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செயல்படுகிறது.

பி.ஏ.சி. நிறுவனத்திலிருந்து நடந்த பணப் பரிமாற்றங்கள் "மிகவும் விசித்திரமாக இருந்தன" என்றும் மத்திய கிழக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதால் சிக்கல்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஹங்கேரி நிறுவனத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பி.ஏ.சி. கன்சல்டிங் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திற்கு பிபிசி சென்றது.

இந்த முகவரியில் 12 நிறுவனங்கள் இயங்குகின்றன. கட்டடத்தில் உள்ள எந்த நிறுவனமும் பி.ஏ.சி. நிறுவனத்தைப் பற்றி எங்களிடம் எதுவும் கூறவில்லை.

இந்த நிறுவனம் முதன்முதலில் 2022 இல் ஹங்கேரியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிறுவனம் அங்கே உற்பத்தியில் ஈடுபடவில்லை. செயல்பாட்டு தளம் இல்லாத வர்த்தக இடைத்தரகராக மட்டுமே செயல்படுகிறது.

லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் வெளியிடப்பட்ட பி.ஏ.சி. க்கான ஒரு தகவல் குறிப்பில், எட்டு நிறுவனங்களுக்காக பணிகளை செய்வதாக கூறி, அந்நிறுவனகங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சிக்கான DfID துறையின் பெயரும் உள்ளது.

 
இஸ்ரேல் - லெபனான், பேஜர், வாக்கிடாக்கி வெடிபபு

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,வெடித்துச் சிதறிய பேஜர் (சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது)

DfID துறையின் பெயர் இருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தது. ஆனால் ஆரம்ப உரையாடல்களின் அடிப்படையில், DfID துறைக்கும் பி.ஏ.சி. கன்சல்டிங் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அது கூறியது.

பி.ஏ.சி. இன் இணையதளம் அதன் தலைமை நிர்வாகி மற்றும் நிறுவனர் - கிறிஸ்டியானா பார்சோனி-ஆர்சிடியாகோனோ என ஒருவரை குறிப்பிட்டுள்ளது.

பார்சோனி-ஆர்சிடியாகோனோவை தொடர்புகொள்ள பிபிசி பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

அவர் என்பிசி செய்தி ஊடகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது: "நான் பேஜர்களை உருவாக்கவில்லை. நான் இடைநிலை வேலைகளை மட்டுமே செய்து வருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

 

பி.ஏ.சி நிறுவனத்தின் பின்னணியில் இருப்பது யார்?

பிஏசி நிறுவனம் உண்மையில் இஸ்ரேலிய உளவுத்துறையின் கீழ் இயங்குவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

பேஜர்களை உருவாக்கும் பொறுப்பில் இருந்த இஸ்ரேலிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களின் அடையாளத்தை மறைக்க மேலும் இரண்டு ஷெல் நிறுவனங்கள் நிறுவப்பட்டதாக மூன்று இஸ்ரேலிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறுகிறது.

பிபிசியால் இந்த தகவல்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை - ஆனால் பி.ஏ.சி. உடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனத்தை பல்கேரிய அதிகாரிகள் இப்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

லெபனானில் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய 1.6 மில்லியன் யூரோ ($1.8m; £1.3m) பணம் பல்கேரியா வழியாக ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டதாக பல்கேரிய ஊடகமான bTV வியாழனன்று தெரிவித்துள்ளது.

ரேடியோ சாதனங்கள் குறிவைக்கப்பட்டது எப்படி?

இரண்டாவது அலை தாக்குதல்களில் வெடித்த வாக்கி டாக்கிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகளில் சில ஜப்பானிய நிறுவனமான ICOM தயாரித்த IC-V82 மாடல் என்பது மட்டும் தெரிய வந்தது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய காவல்துறை வட்டார அதிகாரி, அந்த சாதனங்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹெஸ்பொலாவால் வாங்கப்பட்டவை என்றார்.

முன்னதாக, Icom இன் அமெரிக்க துணை நிறுவனத்தில் உள்ள விற்பனை நிர்வாகி அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம், லெபனானில் வெடித்த ரேடியோ சாதனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை. அவை போலியான தயாரிப்புகள் (knockoff product) போலத் தோன்றுவதாகக் கூறினார். ஆன்லைனில் போலி பதிப்புகளை வாங்குவது எளிது என்று கூறினார்.

ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள Icom IC-V82s-ஐ பிபிசி சில நொடிகளில் கண்டுபிடித்தது.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 2014 இல், இந்த மாடலின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக ICOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதை இயக்கத் தேவையான பேட்டரிகளின் உற்பத்தியையும் நிறுத்திவிட்டதாகக் கூறியது.

வெளிநாட்டில் உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்வதில்லை என்று நிறுவனம் கூறியது. அதன் அனைத்து தயாரிப்புகளும் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

வெடித்த வாக்கி-டாக்கிகளின் பேட்டரியைச் சுற்றி ஏற்பட்டுள்ள சேதங்களை பார்க்கும் போது அவற்றில் வெடிமருந்து பொருத்தப்பட்டிருக்கலாம் என்று ஐகாம் இயக்குநர் யோஷிகி எனோமோயோ கூறியதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
இஸ்ரேல் - லெபனான், பேஜர், வாக்கிடாக்கி வெடிபபு

சாதனங்கள் வெடித்தது எப்படி?

சாதனங்கள் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் சாதனங்களை தொடுவது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகளில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஐ.நா.வுக்கு லெபனான் தூதரகம் அனுப்பிய கடிதத்தின்படி, சாதனங்களுக்கு அனுப்பப்பட்ட "மின்னணு செய்திகள்" மூலம் சாதனங்கள் வெடித்தன என்று அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை பார்த்த ராய்ட்டர்ஸ் செய்தி முகமை இதுபற்றி செய்தி வெளியிட்டது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "வெடிப்பதற்கு முன், பேஜர்களுக்கு ஹெஸ்பொலாவின் தலைமையிலிருந்து செய்திகள் வந்தன. அதன் பின்னர் சாதனங்கள் வெடித்துச் சிதறின. அந்த செய்திகள் சாதனத்தை ட்ரிகர் செய்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கி டாக்கி சாதனங்களுக்கு என்ன வகையான செய்தி அனுப்பப்பட்டது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

மற்ற சாதனங்களிலும் பிரச்னை உள்ளதா?

லெபனானில் மக்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வி இது தான். மற்ற சாதனங்கள், கேமராக்கள், தொலைபேசிகள் அல்லது மடிக்கணினிகளிலும் வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நினைப்பது வீண் கற்பனை.

லெபனான் ராணுவம் பெய்ரூட்டின் தெருக்களில் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோவைப் பயன்படுத்துகிறது.

லெபனானில் உள்ள பிபிசி குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் தொலைபேசிகளையோ கேமராக்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

"எல்லோரும் பீதியில் உள்ளனர். எங்கள் மடிக்கணினிகள், தொலைபேசிகளுக்கு அருகில் இருக்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கிறோம். எல்லா பக்கமும் ஆபத்து இருப்பது போல் தெரிகிறது, என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை" என்று கிடா என்ற பெண் பிபிசியிடம் கூறினார்.

 
இஸ்ரேல் - லெபனான், பேஜர், வாக்கிடாக்கி வெடிபபு

சாதனங்கள் வெடிக்க என்ன காரணம்?

குறிப்பாக, இந்த வாரம் சாதனங்கள் தூண்டப்பட்டு வெடித்தது ஏன் என்பதற்கு பல யூகங்கள் உள்ளன.

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேல் மீதும் அதைச் சுற்றியும் ஹெஸ்பொலா தாக்குதல்கள் மேற்கொண்டதை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடமாக எல்லை தாண்டிய பகைமை தொடர்கிறது. ஹெஸ்பொலாவுக்கு மோசமான செய்தியை அனுப்ப இஸ்ரேல் இந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

அப்படி இல்லையெனில், இஸ்ரேல் இந்த நேரத்தில் அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லாவிட்டாலும், சதித்திட்டம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.

அமெரிக்க ஊடக நிறுவனமான ஆக்சியோஸ் கூற்றுப்படி, ஒரு மிகப்பெரிய போரின் தொடக்கமாக, ஹெஸ்பொலா அமைப்பை முற்றிலும் முடக்குவதற்கான ஒரு வழியாக பேஜர் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால், ஹெஸ்பொலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதை இஸ்ரேல் அறிந்து கொண்டதால், முன்கூட்டியே தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

ஒரு தோல்வி எப்பொழுது 'மிகப் பெரிய தோல்வி' என்றாகின்றது என்றால், தாம் எப்படித் தோற்றோம் என்கின்ற உண்மை தெரியாமலேயே இருந்துவிடுவதுதான் அவர்களுக்கான மிகப் பெரிய தோல்வி.

எதனால் தோற்றோம்.. எதனால் இப்படியான இழப்பு ஏற்பட்டது என்பதை கடைசிவரை கண்டறியாமலேயே இருப்பது என்பதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய தோல்வி.

இப்படியான மிகப் பெரிய தோல்விகளை எதிரிகளுக்கு வழகுவதில் வின்னர்கள்தான்- இஸ்ரேலிய 'மொசாட் 'அமைப்பினர்.

https://ibctamil.com/article/mysterious-attacks-of-mosad-in-lebanon-1727355347

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2024 at 06:51, தமிழ் சிறி said:

சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன.

கரும்புலித்தாக்குதலைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்த மேற்குலக சக்திகள் இந்தத் தாக்குதல் அழிவுகள் குறித்து என்ன செய்யப்போகிறார்கள். இவர்களால் இஸ்ரவேலைத் தடைசெய்ய முடியுமா? 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

மிகப் பெரிய தோல்விகளை எதிரிகளுக்கு வழகுவதில் வின்னர்கள்தான்- இஸ்ரேலிய 'மொசாட் 'அமைப்பினர்.

பாவம் மனுசனும் இப்ப மொசாட் பரப்புரைப் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டார்போலும். இஸ்ரேலின் உளவாளிகள் உள்ளே இருககிறார்கள். இல்லையென்றால் அடிப்படைத் தகவல்களைப் பெறமுடியாதல்லவா? விலைபோன அரேபியர்கள் இருக்கமாட்டார்களா?
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடிய பேஜர் தாக்குதல்: அதிர்ச்சியளித்த நெதன்யாகுவின் அறிவிப்பு

கடந்த செப்டம்பர் மாதம் லெபனானிலும், சிரியாவிலும்(Lebanon and Syria) பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பேஜர் மற்றும் தொலைத்தொடர்புச் சாதன வெடிப்பு சம்பவங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அறிவிப்பானது இஸ்ரேல் மீதான அச்சத்தை மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில், லெபனானில் வெடித்த ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு சாதனங்கள் மீதான கொடிய செப்டம்பர் தாக்குதலுக்கு தான் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) சுட்டிக்காட்டியதை தொடர்ந்து குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

40 பேர் பலி

இந்த கொடிய தாக்குதலில் 40 பேர் பலியாகியதோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர்.

கொடிய பேஜர் தாக்குதல்: அதிர்ச்சியளித்த நெதன்யாகுவின் அறிவிப்பு | Middle East War Netanyahu Approved Pager Attacks

இதற்கமைய இஸ்ரேல் முதல் முறையாக இந்த நகர்வில் ஈடுபட்டதாக நெத்தன்யாகு ஒப்புக்கொண்டார்.

இதன்படி பேஜர் தாக்குதல்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கையை அறிவித்தது.

மேலும், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, ஹிஸ்பொல்லாவின் கோட்டையாக கரதப்பட்ட இடங்களில் இஸ்ரேல்  கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

https://tamilwin.com/article/middle-east-war-netanyahu-approved-pager-attacks-1731261173?itm_source=parsely-api

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.