Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு

sri-lanka-airport.jpg

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரையில் இலங்கை அரசியலின் பிரபுக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக “தினமிண” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் (21) பிற்பகல் 2.25 க்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்திய விமான சேவையில் ஏ.ஐ-272 விமான சேவையில் இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் (21) இரவு 11.15க்கு முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பங்கொக் நோக்கி எயார் ஏஷியா விமான சேவையில் எப்.டீ-141 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் வெளியேறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்சவின் மனைவி அவருடைய தந்தை திலகசிறி வீரசிங்க நேற்று (22) காலை 3.30க்கு டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே.-649 விமானத்தில் வெளியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் டுபாய் மூலம் அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக “தினமிண” செய்தி வெளியிட்டுள்ளது.
 
https://akkinikkunchu.com/?p=292562

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரையில் இலங்கை அரசியலின் பிரபுக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக “தினமிண” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

நாமலின் மனைவியும், மனைவியின் தந்தையும் போன வாரமும் வெளியேறினார்கள் என்று ஒரு செய்தி வந்து இருந்ததது. பசில் மருத்துவப் பயணம் என்று சொல்லி துபாய் கிளம்பிய அதே நாட்களில்........

நாமல் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை போல.........🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடி தப்ப வேண்டியவர்கள் ஓடி தப்புகின்றார்கள்.இவர்கள் மீண்டும் ஒரு காலத்தில் மா மேதைகளாக வரவேற்கப்படுவார்கள். 🤣

அது சரி நம்ம டக்ளஸ் அண்ணன்ரை சத்தத்தை காணேல்லை என்ன மாதிரி? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி நம்ம டக்ளஸ் அண்ணன்ரை சத்தத்தை காணேல்லை என்ன மாதிரி? 😎

அனுராவின் காலில் விழ தவமிருக்கிறார் 

திருடர்கள். அவர்களுக்கு பிரபுக்கள் அந்தஸ்து. ஆமாம்... மக்களின் பணத்தில் இவர்கள் பிரபுக்கள். அவசர பயணம், தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். அவர்கள் அரசியலில் வென்றபோது இப்படியான கைதுகளின் மூலமே எதிரிகளை காலில் விழ வைத்தனர். இப்போ இவர்கள் மடியில் கனம், அதனால் தப்ப முயற்சிக்கிறார்கள். கடைசி வரை வெல்வோம் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் இறுதியில் மாட்டுப்பட்டார்கள். டக்ளஸ் ஹிஹி...... அவரை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால்; அவரின் நிலை என்ன என்று சிந்திக்கிறார். முன்பெல்லாம் அரச பதவியேறியவுடன், இவரை அழைத்து பணி கொடுப்பது வழக்கம். இப்போ அந்த அழைப்புக்காக காத்திருக்கிறாரோ என்னவோ, சுமந்திரன் வாழ்த்துச் சொல்லி கேட்கவில்லை. அவரும் தப்பி விட்டாரோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரோ தெரியவில்லை, விசாரித்துப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓடி தப்ப வேண்டியவர்கள் ஓடி தப்புகின்றார்கள்.இவர்கள் மீண்டும் ஒரு காலத்தில் மா மேதைகளாக வரவேற்கப்படுவார்கள். 🤣

அது சரி நம்ம டக்ளஸ் அண்ணன்ரை சத்தத்தை காணேல்லை என்ன மாதிரி? 😎

"நானும் கம்னியூஸ்டா" 
"நானும் பனங்காட்டு கம்னியூஸ்டா" 
"நானும் ஆய்தமேந்தி ஜனநாயகவாதியாக வந்த தோழேன்டா"

என பல டயலோக் பேசி  அனுராவை கட்டி தழுவ முயற்சிப்பார் ..

கடற்படை தளபதியின் பாதுகாப்பில் இருப்பாரோ..

29 minutes ago, கந்தப்பு said:

அனுராவின் காலில் விழ தவமிருக்கிறார் 

வன்மையாக கண்டிக்கிறேன் ....🤣
ஒரு கம்னியூஸ்ட் தோழன் மற்றோர் சோசலிச தோழனின்  காலில் விழுந்த சரித்திரமில்லை..🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

 டக்ளஸ் ஹிஹி...... அவரை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால்; அவரின் நிலை என்ன என்று சிந்திக்கிறார். முன்பெல்லாம் அரச பதவியேறியவுடன், இவரை அழைத்து பணி கொடுப்பது வழக்கம். இப்போ அந்த அழைப்புக்காக காத்திருக்கிறாரோ என்னவோ, சுமந்திரன் வாழ்த்துச் சொல்லி கேட்கவில்லை. அவரும் தப்பி விட்டாரோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரோ தெரியவில்லை, விசாரித்துப்பாருங்கள்.

இப்படியானவர்களுக்கு  பதவி கொடுத்தால் மீண்டும் சிறிலங்காவை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றார் அனுரா என்பது தான் அர்த்தம்..

  • கருத்துக்கள உறவுகள்

அவரை அனுரா அழைக்கப்போவதுமில்லை, பேசப்போவதுமில்லை. தன் இனத்தை காட்டிக்கொடுத்து,  விற்று வயிறு வளர்க்கும் ஜென்மங்களை அவர் தேடமாட்டார். அப்படியென்றால் தேர்தலுக்கு முன்,  சும்மா ஒரு மரியாதைக்காக கூட அவரை சந்திக்கவேயில்லை யாழ்ப்பாணம் வந்தபோது. இவருக்கு ஓடி ஒளிக்க நாடுகளுமில்லை இந்தியாவுக்கு போகலாம் .........?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

பார்ப்போம் அனுரா உண்மையான் சோசலிசவாதியா அல்லது பாராளுமன்ற கம்னியூஸ்டா என்று காலம் பதில் சொல்லட்டும்....
வழமையாக தமிழ்மக்களின் தமிழ்எதிரிகளைதான் சிங்கள தேசம் அரவணைத்து மந்திரி பதவிகளை கொடுப்பார்கள்...இவர் வேறுபடுவார் என் அஎதிர்ப்பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தெரியும், தனக்கு எந்த கட்சியும் ஆதரவு கொடுக்காது, ஆனால் தொந்தரவு கொடுத்து விரட்டுவார்கள் என்பது. மக்கள் பலம் உண்டு, ஆதலால் நீதிமன்றத்தின்மூலமே காரியங்களை கையாளும்போது இவர்கள் நொறுங்க, நொறுக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் அவரும் மாற வாய்ப்பிருக்கிறது பதவியை தக்க வைக்க. அல்லது உதறிவிட்டு வெளியேற வேண்டும். எல்லாம் தெரிந்தே கால் பதித்துள்ளார். ஊழல்வாதிகள் அடங்கியிருக்கிறார்கள், ஆடத் தொடங்குமுதல் அடக்கிவிட வேண்டும். அப்போதே சவாலை சமாளிக்க முடியும் அவரால்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

உண்மை ...

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தின் காவலன் இதோ உங்கள் முன் ,

முகத்தில் ஒருவித பயமும் சோகமும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்கிற கோஷத்துடன்  கதிரையேறுகிறவர்கள் அதிலே நிலையாய் இருந்ததுதான் வரலாறு. அதற்கு முற்றுப்புள்ளி!

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற சோசலிசவாதிகளுக்கு இந்த ஜனாதிபதி அதிகாரம் ஒர் வரப்பிரசாதம் ...
தொடர்ந்து ஆட்சியை அமைத்து கொள்ள ..இது உலக வரலாறு ...
வெனிசுலா பாணியா...கியுபா பாணியா...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பாராளுமன்ற சோசலிசவாதிகளுக்கு இந்த ஜனாதிபதி அதிகாரம் ஒர் வரப்பிரசாதம் ...
தொடர்ந்து ஆட்சியை அமைத்து கொள்ள ..இது உலக வரலாறு ...
வெனிசுலா பாணியா...கியுபா பாணியா...

எண்ணைவளமுள்ள வெனிசுவேலாவையும், உள்ளூர் உற்பத்தியில் தங்கியிருக்கும் கியூபாவையும் ஒப்பிடுதல் பொருத்தமாக இல்லையென்று நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

எண்ணைவளமுள்ள வெனிசுவேலாவையும், உள்ளூர் உற்பத்தியில் தங்கியிருக்கும் கியூபாவையும் ஒப்பிடுதல் பொருத்தமாக இல்லையென்று நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

வெளிநாட்டு தலையீடுகள் பற்றி கூறினேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

வெளிநாட்டு தலையீடுகள் பற்றி கூறினேன்

நன்றி,
தமிழரைச் சமத்துவமான பங்காளிகளாக ஏற்க மறுத்தவாறு, ஒருமைப்பாடு, இறையாண்மை என்று கூவியபடி சிங்களம் நாட்டைப் பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இலங்கைத்தீவை விற்றாகிவிட்டது. எவர் அரசுத்தலைவரானாலும், இந்த கூட்டுச் சங்கிலியில் இருந்து வெளியில் வரமுடியாதெனபதே யதார்த்தம். முதலில் பொருண்மியத்தைத் தற்போதுள்ள நிலையில் வைத்திருக்கவே போராடவேண்டியிருக்கும். அ.நா.நிதியத்தையோ, கடன் வழங்கிய நாடுகளையோ இலகுவில் கடந்துவிட முடியாது. எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், சில வழிகள் உண்டு அவை கடுமையானவையாகவும், ஏதிர்ப்பலையை உருவாக்கக் கூடியவையுமாகும். 
1.மகிந்த சக சகோததர்களினால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிதியை மீளக்கொண்டுவருதல்.
2.உள்ளக மட்டத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் வருமானத்துக்கு மேலான சொத்துகளை அரசுடைமையாக்கல். 
3. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதிகளை இனங்கானலும். இதில் விவசாயப் பொருட்களுக்கு உற்பத்திக் காலம் தேவை. உடனடியாகக் கடல் வளங்களைப் பயன்படுத்தலாம். 
4. தமிழரையும் ஒரு சமத்துமான பங்காளராக ஏற்று உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவதன் ஊடாகக் கணிசமான புலம்பெயர் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் போன்றவற்றை செய்தல் போன்றன சில சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் கொண்டுவரலாம். 
75ஆண்டு காலத்தில், தமிழினத்தை அழிக்கவெனப் படைத்துறைப் பெருக்கத்தோடு   நஞ்சுக்குண்டுகளையும், ஆயுதங்களையும் 30ஆண்டுகளாகக் கொள்வனவு செய்தமையின் விளைவே இந்த ஊதிப்பெருத்துள்ள பொருண்மிய நெருக்கடியென்பதை உண்மையான மாக்ஸிஸவாதியாயின் புரிந்துகொண்டிருப்பார். அரசுத் தலைவர் மாறியுள்ளபோதும், மாற்றங்கள் இலகுவானவையல்ல. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?

தலையங்கத்தை பார்த்ததும் யோசிக்க வைக்குது 😃

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?

றோயல் பமிலிக்கு ஈடாக ……🙂

  • கருத்துக்கள உறவுகள்

அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - விமான நிலையத்தில் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்

நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சட்ட நடவடிக்கை

ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன..

https://tamilwin.com/article/more-than-20-people-to-leave-from-sri-lanka-1727141036

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன..

இலங்கையில் மட்டுமா அல்லது வேறுநாடுகளிலும் இப்படி... இந்தப் பெரிய ஊழல்வாதிகளைக்கொண்ட இந்தியாவில்கூட இப்படி யாரும் ஓடுவதில்லையே.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

இந்தப் பெரிய ஊழல்வாதிகளைக்கொண்ட இந்தியாவில்கூட இப்படி யாரும் ஓடுவதில்லையே.

ஏனென்றால் ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் ஆளும் கட்சிகளின் கூட்டாளிகள் அல்லது அடிவருடிகள். அதனால் அவர்களோ குடும்பமோ பயந்து எங்கும் ஓடவேண்டியதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nochchi said:

நன்றி,
தமிழரைச் சமத்துவமான பங்காளிகளாக ஏற்க மறுத்தவாறு, ஒருமைப்பாடு, இறையாண்மை என்று கூவியபடி சிங்களம் நாட்டைப் பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இலங்கைத்தீவை விற்றாகிவிட்டது. எவர் அரசுத்தலைவரானாலும், இந்த கூட்டுச் சங்கிலியில் இருந்து வெளியில் வரமுடியாதெனபதே யதார்த்தம். முதலில் பொருண்மியத்தைத் தற்போதுள்ள நிலையில் வைத்திருக்கவே போராடவேண்டியிருக்கும். அ.நா.நிதியத்தையோ, கடன் வழங்கிய நாடுகளையோ இலகுவில் கடந்துவிட முடியாது. எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், சில வழிகள் உண்டு அவை கடுமையானவையாகவும், ஏதிர்ப்பலையை உருவாக்கக் கூடியவையுமாகும். 
1.மகிந்த சக சகோததர்களினால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிதியை மீளக்கொண்டுவருதல்.
2.உள்ளக மட்டத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் வருமானத்துக்கு மேலான சொத்துகளை அரசுடைமையாக்கல். 
3. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதிகளை இனங்கானலும். இதில் விவசாயப் பொருட்களுக்கு உற்பத்திக் காலம் தேவை. உடனடியாகக் கடல் வளங்களைப் பயன்படுத்தலாம். 
4. தமிழரையும் ஒரு சமத்துமான பங்காளராக ஏற்று உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவதன் ஊடாகக் கணிசமான புலம்பெயர் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் போன்றவற்றை செய்தல் போன்றன சில சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் கொண்டுவரலாம். 
75ஆண்டு காலத்தில், தமிழினத்தை அழிக்கவெனப் படைத்துறைப் பெருக்கத்தோடு   நஞ்சுக்குண்டுகளையும், ஆயுதங்களையும் 30ஆண்டுகளாகக் கொள்வனவு செய்தமையின் விளைவே இந்த ஊதிப்பெருத்துள்ள பொருண்மிய நெருக்கடியென்பதை உண்மையான மாக்ஸிஸவாதியாயின் புரிந்துகொண்டிருப்பார். அரசுத் தலைவர் மாறியுள்ளபோதும், மாற்றங்கள் இலகுவானவையல்ல. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

சீனா மறைமுகமாக பணத்தை வாரிவழங்கினால் இவரது கனவு நிஜமாகும் இல்லையென்றால் ...இவர் விரும்பும் தேர்தல்களை வைப்பதே மிகவும் கடினமாக இருக்கும்....காரணம் பணம்....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

சீனா மறைமுகமாக பணத்தை வாரிவழங்கினால் இவரது கனவு நிஜமாகும் இல்லையென்றால் ...இவர் விரும்பும் தேர்தல்களை வைப்பதே மிகவும் கடினமாக இருக்கும்....காரணம் பணம்....

உண்மைதான், ஆனால் சீனா அவளவுதூரம் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்குமா?சிலவேளை ரணிலுக்குக் கொடுத்ததுபோல் இந்தியா கொடுக்கலாம்.  இந்திய அமெரிக்க உளவு அமைப்புகளைக் கடந்து நடக்குமா? அநுராவின் பொருண்மிய இலக்குகள் கடினமானவையாகவே இருக்கும். சிலவேளை குறுகியகால மரவள்ளி, மிளகாய், நெல், சிறுதோட்டப் பயிர்களை நோக்கி மக்களை நகர்த்தக்கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.