Jump to content

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சிhttps://tamilwin.com/article/we-are-ready-for-general-elections-1727158260

அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி | Sri Lanka Bar Licence Cancelled

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

  • Replies 75
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, புலவர் said:

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று  மதுபான அனுமதி பத்திரங்களில்...  ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது. 
சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது. 
கிளிநொச்சியில்  இரண்டு நாட்களுக்கு முன் ஏற்கெனவே இருந்த மதுபான நிலையத்துக்கு அருகில்  புதிய மதுபான நிலையைம் 700 மீற்றர் இடை வெளியில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. 

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும் தானே... அதுமட்டும் நடக்கிறதை பார்த்துக் கொண்டு இருப்போம். animiertes-gefuehl-smilies-bild-0234.gif

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, புலவர் said:

அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

அரசியல்வாதிகள் என்றால் யார் யார்?

எனக்கு தெரிந்து அங்கயன் மட்டுமே.

சிறிதரனுக்கும் கிடைத்ததாக வதந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடிப்பிரியர்கள் வாக்குப்போட மாட்டார்கள், அது சரியா? போதை என்று வந்தால்; அரசியல் வாதிகள், காவற்துறை, இராணுவம் எல்லாம் சேர்ந்து அனுராவை மேலே கொண்டு போகப்போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, satan said:

குடிப்பிரியர்கள் வாக்குப்போட மாட்டார்கள், அது சரியா? போதை என்று வந்தால்; அரசியல் வாதிகள், காவற்துறை, இராணுவம் எல்லாம் சேர்ந்து அனுராவை மேலே கொண்டு போகப்போகிறார்கள். 

நானும் அனுராவுக்கு போட மாட்டேன் 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

அரசியல்வாதிகள் என்றால் யார் யார்?

எனக்கு தெரிந்து அங்கயன் மட்டுமே.

சிறிதரனுக்கும் கிடைத்ததாக வதந்தி.

சிறிதரனுக்கு கிடைக்காவிட்டால் எவருக்கும் கிடைக்காது, 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று  மதுபான அனுமதி பத்திரங்களில்...  ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது. 
சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது. 
கிளிநொச்சியில்  இரண்டு நாட்களுக்கு முன் ஏற்கெனவே இருந்த மதுபான நிலையத்துக்கு அருகில்  புதிய மதுபான நிலையைம் 700 மீற்றர் இடை வெளியில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. 

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும் தானே... அதுமட்டும் நடக்கிறதை பார்த்துக் கொண்டு இருப்போம். animiertes-gefuehl-smilies-bild-0234.gif

இலங்கையில் எத்தனை மதுபானகடைகள் உண்டு”??

வடக்கில் எத்தனை உண்டு” ???

கிழக்கில் எத்தனை உண்டு???

யாழ்ப்பாணம். ரவுணுக்குள். நிறைய பார்கள்.   பார்த்த ஞாபகம் 🤣🙏.    கேள்விகள் கடினமில்லை    இலகுவானது    இல்லையா?? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் எத்தனை மதுபானகடைகள் உண்டு”??

வடக்கில் எத்தனை உண்டு” ???

கிழக்கில் எத்தனை உண்டு???

யாழ்ப்பாணம். ரவுணுக்குள். நிறைய பார்கள்.   பார்த்த ஞாபகம் 🤣🙏.    கேள்விகள் கடினமில்லை    இலகுவானது    இல்லையா?? 😂

விஜய்காந்த்தின் 'ரமணா' படத்தை கிட்டடியில் திரும்பவும் பார்த்திருக்கின்றீர்கள் போல.........🤣.

உங்களுக்காக ஒரு AI இடம் இந்தக் கேள்விகளை கேட்டேன். 'அப்படி எல்லாம் ஒரு தகவலும் இங்க கிடையாது, போ போ.........' என்று கலைத்துவிட்டது..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, ரசோதரன் said:

உங்களுக்காக ஒரு AI இடம் இந்தக் கேள்விகளை கேட்டேன். 'அப்படி எல்லாம் ஒரு தகவலும் இங்க கிடையாது, போ போ.........' என்று கலைத்துவிட்டது...

நல்ல காலம் அடி விழல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

நானும் அனுராவுக்கு போட மாட்டேன் 😅

காரணம்? ம் ...... வெளியில சொல்லாதீங்கோ, பலபேர் உங்கள் கூட்டணியில் சேர்வார்கள், நீங்களும் சேர்ந்து போட்டியிடலாம் தேர்தலில், வாக்குகள் எண்ணவே கஸ்ரப்பட்டு உங்களை வெற்றியாளராக்கி அறிவிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

காரணம்? ம் ...... வெளியில சொல்லாதீங்கோ, பலபேர் உங்கள் கூட்டணியில் சேர்வார்கள், நீங்களும் சேர்ந்து போட்டியிடலாம் தேர்தலில், வாக்குகள் எண்ணவே கஸ்ரப்பட்டு உங்களை வெற்றியாளராக்கி அறிவிப்பர்.

வேற என்ன ....பழரச பாணம் விற்க்கும் கடைக்கு லைசண்ஸ் இல்லை என்ற காரண்ம தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று  மதுபான அனுமதி பத்திரங்களில்...  ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது. 
சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது. 
கிளிநொச்சியில்  இரண்டு நாட்களுக்கு முன் ஏற்கெனவே இருந்த மதுபான நிலையத்துக்கு அருகில்  புதிய மதுபான நிலையைம் 700 மீற்றர் இடை வெளியில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. 

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும் தானே... அதுமட்டும் நடக்கிறதை பார்த்துக் கொண்டு இருப்போம். animiertes-gefuehl-smilies-bild-0234.gif

உங்கள் தகவல்களுக்கு ஆதாரம் உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, putthan said:

வேற என்ன ....பழரச பாணம் விற்க்கும் கடைக்கு லைசண்ஸ் இல்லை என்ற காரண்ம தான் 

அந்த பழரச போத்தல் சின்னத்தில் வாக்கு கேட்டால் தேர்தலில் முன்னிலை வாக்குகள் அவருக்குத்தான். இந, மத வேறுபாடில்லாமல்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நியாயம் said:

உங்கள் தகவல்களுக்கு ஆதாரம் உள்ளதா? 

இதுகள் எல்லாம் நாலு சுவருக்குள் நடக்கும் விடயங்கள்.
இதற்கெல்லாம் ஆதாரம் வைத்துக் கொண்டு தங்களின் எதிர்காலத்தை பாழாக்க மாட்டார்கள். பல  இணையங்களில் உலாவிய செய்திகளே இவை. 

ஜனாதிபதி நேரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும் போது அவர்களின் முகம் வெளியே வரும்.

அங்கஜன் இராமநாதன்.. தனது தந்தைக்கு புதுப்பிக்கப் பட்ட மதுபான அனுமதி கிடைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அந்தச் செய்தி யாழ்களத்திலும் இணைக்கப் பட்டு இருந்தது. மற்றவர்கள் அமசடக்கி கள்வர் போல் இதனைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கின்றார்கள்.

 விரைவில் அவர்களின் சுயரூபம் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

மற்றவர்கள் தமிழ்த்தேசியப் போர்வைக்குள் ஒளிந்து இருப்பார்கள். ஒரு பார் லைசென்சை 300 -400 இலட்சங்களுக்கு விற்கலாம் என்றால் யார் வேண்டாம் என்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர்,அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்.
அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/309968

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, புலவர் said:

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர்

அனுமதி இல்லை என்றால் தற்போது இலங்கையில் மதுபானாம் விற்பனை நிறுத்தபட்டு விட்டதா ?

அப்ப மது பிரியர்கள் என்ன செய்கிறார்கள் ?😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, பெருமாள் said:

அனுமதி இல்லை என்றால் தற்போது இலங்கையில் மதுபானாம் விற்பனை நிறுத்தபட்டு விட்டதா ?

அப்ப மது பிரியர்கள் என்ன செய்கிறார்கள் ?😀

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்… பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற  மதுபான அனுமதி கொடுக்கப் பட்டதாம். அதனைத்தான் இப்போ ரத்து செய்திருக்கின்றார்கள்.
பழைய அனுமதியுடன் இயங்கிக் கொண்டிருந்த மதுபானக் கடைகளில் ஒரு மாற்றமும் இல்லை.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்… பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற  மதுபான அனுமதி கொடுக்கப் பட்டதாம். அதனைத்தான் இப்போ ரத்து செய்திருக்கின்றார்கள்.
பழைய அனுமதியுடன் இயங்கிக் கொண்டிருந்த மதுபானக் கடைகளில் ஒரு மாற்றமும் இல்லை.

அப்பாடா பாலை வாத்தீங்கள் சிறியர்.😆

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

bar.jpg?resize=750,375

அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை.

மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1401514

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=193707

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஏராளன் said:

அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

4 மாதத்தில் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளது.
அதாவது 1  கிழமைக்கு 10 புதிய மதுபான அனுமதி பத்திரங்கள்   வழங்கப்  பட்டுள்ளது.
மாத்திரமே வழங்கப் பட்டதாக  மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி சப்பைக் கட்டு கட்டுகின்றார். 
இவர்களுக்கு குறுகிய காலத்தில் 172  அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவது அதிகமாக தெரியவில்லையா?

அதனை யார், யார்.... பெயரில் வழங்கப் பட்டது என்ற தகவலையும் மதுவரித் திணைக்கள ஆணையர் வெளிக் கொணர வேண்டும். 
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மதுபான அனுமதி பத்திரங்களை வாங்கி விட்டு  உத்தமன் மாதிரி...  வெள்ளை வேட்டியும், கோட்டு சூட்டும் போட்டுக் கொண்டு  ஊருக்குள் நடமாடுகிறார்கள். 

Posted

விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஒன்றுமே தெரியாதாம். பாவம் நீதியரசருக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கு

https://fb.watch/uWwixBWHOw/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நிழலி said:

விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஒன்றுமே தெரியாதாம். பாவம் நீதியரசருக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கு

https://fb.watch/uWwixBWHOw/

இந்தாளின் கை ரொம்பவும் சுத்தமாக இருக்கும் என்று நம்பிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.