Jump to content

தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!

SelvamSep 28, 2024 22:20PM
tamil-nadu-minister-udhayanidhi-stalin-1

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் இன்று (செப்டம்பர் 28) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

GYk3ArIWYAAeU1o-768x1031.jpeg

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

GYk3H5iWEAILxtI-768x986.jpeg

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களுக்கு நாளை மாலை 3.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

 

 

https://minnambalam.com/political-news/tamilnadu-cabinet-reshuffle-udhayanidhi-will-become-deputy-cm/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேவலங்கெட்ட குடும்ப அரசியல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣.

ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்க நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மிகவும் சரியான முடிவு. 

(ஸ்ராலின் நோய்வாய்ப்பட்டுருக்கிறார் எனும் வசந்தி உண்மையாக இருக்குமோ  🤨)

👍

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திமுக்கா(😄) போல் சிதறுண்டு போகாமல் கட்சி காப்பாற்றப் பட வேண்டும் என்றால் இதைத் தவிர கட்சித் தலைமைக்கு வேறு வழி இல்லை. சில வேளைகளில் கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போகலாம் ஆனால் கட்சி ஓரளவுக்கு உயிப்புடன் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு தொண்டர்கள் விலக நேரலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣.

ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........

வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் துணை முதல்வராகிறார் உதயநிதி - 3 அமைச்சர்கள் நீக்கம், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி

தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், தமிழ்நாடு (கோப்புப் படம்)
28 செப்டெம்பர் 2024, 22:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சனிக்கிழமை இரவில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கும் என்னென்ன துறைகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI

படக்குறிப்பு, செந்தில் பாலாஜியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ்

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவில் பலரும் கூறிவந்தாலும், அது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக எதையும் அறிவிக்காமல் இருந்தார்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு முன்னொருமுறை பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

"தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 
தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், தமிழ்நாடு

அரசியலில் வேகமாக வளர்ந்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கட்சிக்குள் பதவியளித்தபோதும் பல கடுமையான விமர்சனங்கள் கட்சிக்குள் இருந்தும் கட்சிக்கு வெளியில் இருந்தும் எழுந்தன.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியளித்தபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது வாரிசு என்பதால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை மிகத் தீவிரமாக முன்னிறுத்துவதாக இந்த விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினை இதுவரை ஏற்காமல் இருந்தவர்களிடமும் அவருடைய இந்தப் பேச்சு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்த உதவியதாக அரசியல் விமர்சர்கள் கூறினார்கள்.

மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மிக வேகமானதாகவே நகர்கிறது. 14 வயதில் இருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபாடுகாட்டி வந்த மு.க. ஸ்டாலினுக்கு 31 வயதில்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின், 2006ஆம் ஆண்டில் தனது 53வது வயதில்தான் அமைச்சரானார். ஆனால், திரைத்துறையிலேயே தனது ஆர்வத்தைக் காட்டிய உதயநிதி ஸ்டாலின், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

2019 ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.

தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அரசியலுக்கு வந்து ஒன்றரை ஆண்டிலேயே கட்சியில் முக்கிய பதவிக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டிலேயே அமைச்சராகவும் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவான நிலையில், உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்து வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இருந்தபோதும் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. இப்போது அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 4 மாதத்தில் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளது. அதாவது 1  கிழமைக்கு 10 புதிய மதுபான அனுமதி பத்திரங்கள்   வழங்கப்  பட்டுள்ளது. மாத்திரமே வழங்கப் பட்டதாக  மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி சப்பைக் கட்டு கட்டுகின்றார்.  இவர்களுக்கு குறுகிய காலத்தில் 172  அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவது அதிகமாக தெரியவில்லையா? அதனை யார், யார்.... பெயரில் வழங்கப் பட்டது என்ற தகவலையும் மதுவரித் திணைக்கள ஆணையர் வெளிக் கொணர வேண்டும்.  எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மதுபான அனுமதி பத்திரங்களை வாங்கி விட்டு  உத்தமன் மாதிரி...  வெள்ளை வேட்டியும், கோட்டு சூட்டும் போட்டுக் கொண்டு  ஊருக்குள் நடமாடுகிறார்கள். 
    • உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன்.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=193711
    • 29 SEP, 2024 | 10:03 AM தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.    தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.      அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.   தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,     விசேடமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது.    அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.    அத்துடன் ப.அரியநேத்திரனை கட்சியில் இருந்து விலக்குமாறு பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் சில விடயங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கத்தினை கேட்டுவிட்டு தீர்மானங்களை எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.    அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இன்று விசேடமான அறிவிப்பு ஒன்றை மனம் உவந்து விடுக்கின்றோம்.   தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கின்ற, விசேடமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் எங்களுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கவேண்டும் என்று வினயமாக ஒரு அறிவிப்பு விடுக்கின்றோம்.    சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கிவந்து  இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்.   அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் பெயரிலும் அதன் சின்னத்திலும் தான் நாங்கள் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றொம்.    அந்த அழைப்பை ஏற்று வந்தால் மிக விரைவாக நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அடுத்துவரும் ஒருசில நாட்களில் அவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.   அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழரசுக் கட்சி தனித்தும் போட்டியிடும். அத்துடன் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை ஒன்று வெளிப்படுத்தப்பட்டது.    ஒரு உறுப்பினரே அங்கு தெரிவுசெய்யப்படும் சூழ்நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்ததந்த மாவட்டக் கிளைகளோடு பேசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என தீர்மானித்திருக்கின்றோம்.    அத்துடன் இந்த தேர்தலில் வடகிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளது   தமிழ் பொதுக் கட்டமைப்பிடம் இருந்து இதுவரை எந்தவித அழைப்புகளும் வரவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ்க் கட்சி.    இதுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக வேறு பல கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டபோதும் எமது சின்னத்திலும் பெயரிலுமே தேர்தலில் போட்டியிட்டோம். அந்த வகையில் பிரதான கட்சி என்ற வகையிலேயே இந்த அழைப்பை விடுக்கின்றோம்.  வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக சரியான அணுகலை நாங்கள் மேற்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களிடத்தில் பாரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.  தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு பல்வேறு  எண்ணப்பாடுகள் கூடியிருக்கின்றது.    அது நல்ல விடயம். எனவே இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என்று அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலேயே வேட்பாளர் தெரிவு இடம்பெறும்.    அதனை ஆராய்வதற்காக நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த குழு இறுதி முடிவுகளை எடுக்கும். மாவட்ட ரீதியாக கலந்தாலோசித்து அந்த முடிவுகளை எடுப்போம்  என்றார்.   https://www.virakesari.lk/article/195022
    • பேஸ்புக் பண மோசடி - யுக்ரைன் பிரஜைகள் இருவர் கைது தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த யுக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நாட்டில் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. விளம்பரத்தைப் பார்க்கும் நபர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் கடத்திச் செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், உனவட்டுன பிரதேசத்தில் இருந்து இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விடயத்தை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைதான இருவரும் யுக்ரைன் பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடி செயலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=193692
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.