Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!

SelvamSep 28, 2024 22:20PM
tamil-nadu-minister-udhayanidhi-stalin-1

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் இன்று (செப்டம்பர் 28) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

GYk3ArIWYAAeU1o-768x1031.jpeg

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

GYk3H5iWEAILxtI-768x986.jpeg

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களுக்கு நாளை மாலை 3.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

 

 

https://minnambalam.com/political-news/tamilnadu-cabinet-reshuffle-udhayanidhi-will-become-deputy-cm/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேவலங்கெட்ட குடும்ப அரசியல்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣.

ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தக்க நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மிகவும் சரியான முடிவு. 

(ஸ்ராலின் நோய்வாய்ப்பட்டுருக்கிறார் எனும் வசந்தி உண்மையாக இருக்குமோ  🤨)

👍

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆத்திமுக்கா(😄) போல் சிதறுண்டு போகாமல் கட்சி காப்பாற்றப் பட வேண்டும் என்றால் இதைத் தவிர கட்சித் தலைமைக்கு வேறு வழி இல்லை. சில வேளைகளில் கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போகலாம் ஆனால் கட்சி ஓரளவுக்கு உயிப்புடன் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு தொண்டர்கள் விலக நேரலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣.

ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........

வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டின் துணை முதல்வராகிறார் உதயநிதி - 3 அமைச்சர்கள் நீக்கம், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி

தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், தமிழ்நாடு (கோப்புப் படம்)
28 செப்டெம்பர் 2024, 22:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சனிக்கிழமை இரவில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கும் என்னென்ன துறைகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI

படக்குறிப்பு, செந்தில் பாலாஜியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ்

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவில் பலரும் கூறிவந்தாலும், அது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக எதையும் அறிவிக்காமல் இருந்தார்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு முன்னொருமுறை பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

"தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 
தமிழ்நாடு, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், தமிழ்நாடு

அரசியலில் வேகமாக வளர்ந்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கட்சிக்குள் பதவியளித்தபோதும் பல கடுமையான விமர்சனங்கள் கட்சிக்குள் இருந்தும் கட்சிக்கு வெளியில் இருந்தும் எழுந்தன.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியளித்தபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது வாரிசு என்பதால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை மிகத் தீவிரமாக முன்னிறுத்துவதாக இந்த விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினை இதுவரை ஏற்காமல் இருந்தவர்களிடமும் அவருடைய இந்தப் பேச்சு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்த உதவியதாக அரசியல் விமர்சர்கள் கூறினார்கள்.

மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மிக வேகமானதாகவே நகர்கிறது. 14 வயதில் இருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபாடுகாட்டி வந்த மு.க. ஸ்டாலினுக்கு 31 வயதில்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின், 2006ஆம் ஆண்டில் தனது 53வது வயதில்தான் அமைச்சரானார். ஆனால், திரைத்துறையிலேயே தனது ஆர்வத்தைக் காட்டிய உதயநிதி ஸ்டாலின், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

2019 ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.

தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அரசியலுக்கு வந்து ஒன்றரை ஆண்டிலேயே கட்சியில் முக்கிய பதவிக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டிலேயே அமைச்சராகவும் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவான நிலையில், உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்து வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இருந்தபோதும் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. இப்போது அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதயநிதி ஸ்டாலின்: திமுகவின் அடுத்த வாரிசா? சீனியர்களின் நிலை என்ன ஆகும்?

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK/UDHAYANIDHISTALIN

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் அமைச்சரவையில் புதிதாக நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உதயநிதியைச் சுற்றி கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த துணை முதலமைச்சர் சர்ச்சை ஓய்ந்தாலும் கட்சி மற்றும் ஆட்சியில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.

இதனால் அரசியல்ரீதியாக தி.மு.க-வுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் உதயநிதியை முன்னிறுத்துவதில் தி.மு.க., தலைமை அவசரம் காட்டுகிறதா?

 

சென்னை ராஜ்பவனில் ஞாயிறு அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கோவி.செழியன், ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ளனர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

 

முன்னதாக, 28ஆம் தேதி (சனிக்கிழமை) இரவில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிய அமைச்சரவையில் நான்கு பேர் சேர்க்கப்படுவது குறித்தும் மூன்று பேர் நீக்கப்படுவது குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு அமைச்சரவையில் பொன்முடி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ராஜ கண்ணப்பன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டதைவிட, உதயநிதியின் துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்த விவாதங்களே பேசுபொருளாக மாறியுள்ளன.

"உதயநிதியை அதிகார மையமாக முன்னிறுத்துவதன் மூலம் கருணாநிதி காலத்தில் இருந்து தற்போது வரை கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள சீனியர்களின் எதிர்காலம் என்னவாகும்?" என்ற கேள்விகளும் எழுந்தன.

இதற்கான விளக்கத்தையும் உதயநிதி கொடுத்திருக்கிறார். ஞாயிறு அன்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்" எனக் கூறினார்.

தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை" என்றார்.

 

'ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த வாரிசு'

சென்னை ராஜ்பவனில் ஞாயிறு அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ளனர்.

பட மூலாதாரம்,FACEBOOK/UDHAYANIDHISTALIN

படக்குறிப்பு, சென்னை ராஜ்பவனில் ஞாயிறு அன்று நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க-வின் 2006-2011 ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, துணை முதலமைச்சராக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார். இதன்மூலம் தி.மு.க-வின் அடுத்த அதிகார மையமாக அவர் அறியப்பட்டார்.

அதேநேரம், இளைஞரணிச் செயலாளராக தி.,மு.க-வுக்குள் வந்த ஐந்தே ஆண்டுகளில் துணை முதலமைச்சராக உதயநிதி முன்னிறுத்தப்பட்டிருப்பது அரசியல்ரீதியான விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.

"துணை முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அதில் பத்து சதவீதம் அளவுக்குக்கூட உதயநிதி மெனக்கெடவில்லை. காலம் அவரை இயல்பாகவே அந்த இடத்தை நோக்கி நகர்த்திச் சென்றது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

"தி.மு.க என்ற கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்த வாரிசாக உதயநிதியை அறிவித்துவிட்டார்கள். தி,.மு.க., நாளேடான முரசொலியில் அக்கட்சியினர் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால், ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சில விஷயங்களைச் சொல்கிறது" என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் எஸ்.பி.லட்சுமணன்.

 

அரசியல் வாரிசுகள் வளர்க்கப்படுகிறார்களா?

துணை முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அதில் பத்து சதவீதம் அளவுக்குக் கூட உதயநிதி மெனக்கெடவில்லை

பட மூலாதாரம்,S.P. LAKSHMANAN

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்

அதிகார மையத்தை நோக்கி உதயநிதியை சிறிது சிறிதாக தி.மு.க தலைமை நகர்த்தி வருவதாகக் கூறும் லட்சுமணன், "உதயநிதியின் இந்த உயர்வை கட்சிக்குள் ரசிக்காதவர்கள்கூட எதிர்ப்பைக் காட்டுவதற்கு தயங்கும் சூழல்தான் தி.மு.க-வில் இருக்கிறது. யாருக்கும் அவ்வளவு துணிச்சல் இல்லை" என்கிறார்.

அதேவேளையில், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், கட்சி மற்றும் ஆட்சிக்குள் உதயநிதியின் "உழைப்பையும் கவனிக்க வேண்டும். கட்சி நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணம் என உரிய பங்களிப்பை அவர் கொடுத்திருப்பதாக" மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணணன் குறிப்பிடுகிறார்.

வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் கட்சியாக தி.மு.க உள்ளதாகவும் உதயநிதியை துணை முதலமைச்சராக முன்னிறுத்துவதன் மூலம் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

தி.மு.க., அமைச்சரவையில் சீனியர்களின் வாரிசுகளாக தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோர் உள்ளதாகக் கூறும் மாலன், "இந்தி எதிர்ப்புப் போராட்டம், மிசா சட்டம் போன்ற நிகழ்வுகளில் துன்பங்களை எதிர்கொண்ட தி.மு.க-வினருக்கு உரிய பதவிகள் கிடைக்கவில்லை" என்கிறார்.

"துணை முதல்வர் பதவிக்கு அரசமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தார்மீகரீதியாக உதயநிதியை முன்னிறுத்துவதன் மூலம் அதிகாரத்துக்கும் ஊழலுக்கும் வழிவகுப்பதாகவே முடியும்" எனக் கூறுகிறார் அவர்.

 

தி.மு.க சொல்லும் விளக்கம் என்ன?

வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் கட்சியாக தி.மு.க உள்ளதாகவும் உதயநிதியை துணை முதலமைச்சராக முன்னிறுத்துவதன் மூலம் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

பட மூலாதாரம்,MAALAN

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் மாலன்

இதை மறுத்துப் பேசும் தி.மு.க செய்தித்தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், ஜம்மு காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல் உள்ளதாகக் கூறுகிறார்.

"ஓர் இயக்கத்துக்காகப் பாடுபடக்கூடிய அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொடுக்க முடியாது. சட்டமன்றத்தில் உள்ள 234 எம்.எல்.ஏக்களும் அப்பா-மகன் இல்லை. இது முழுக்க முழுக்க மக்கள் தீர்மானிக்கக் கூடிய விஷயம்," என்கிறார் அவர்.

ஸ்டாலின் மகனாக இருப்பதால் உதயநிதியின் துணை முதல்வர் பதவி விமர்சிக்கப்படுவதாகக் கூறும் கான்ஸ்டன்டைன், "இந்தப் பதவியை இன்னொருவருக்குக் கொடுத்தால் நடக்கும் பணிகளைவிட உதயநிதியிடம் கொடுத்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என நினைக்கிறோம்" என்கிறார்.

"தி.மு.க தலைமை நினைத்திருந்தால் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தி, தேர்தலை சந்திக்காமலேயே உதயநிதியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும். அவர் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றார். ஓராண்டுக்குப் பிறகே அமைச்சர் ஆனார்" என்கிறார் கான்ஸ்டன்டைன்.

ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தருவதற்கு கருணாநிதி காலம் தாழ்த்துவதாகக் கூறி விமர்சித்தவர்கள்தான், இப்போது உதயநிதி முன்னிறுத்திப்படுவதையும் விமர்சிப்பதாகக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.

மேலும், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, ஃபார்முலா 4 பந்தயம் என மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை உதயநிதி நடத்திக் காட்டியதாகவும், அவருக்குப் போதுமான தகுதிகள் இருப்பதால் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

2026 சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பா?

"தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, பார்முலா 4 பந்தயம் என மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை உதயநிதி நடத்திக் காட்டினார்".

பட மூலாதாரம்,CONSTANTINE

படக்குறிப்பு, தி.மு.க செய்தித்தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தியே தற்போது தி,மு.க தலைமை செயல்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தினாலும் அதனால் எந்த பாதிப்பும் தி.மு.க-வுக்கு ஏற்படப் போவதில்லை" என்றார்.

"மக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு இடையூறு ஏற்படாதவரை மற்ற பிரச்னைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை."

மாலனை பொறுத்தவரை, உதயநிதியை முன்னிறுத்துவது என்பது மக்களை நேரடியாக பாதிக்கக் கூடிய விஷயம் இல்லை.

சீமான், விஜய் போட்டியை சமாளிக்க முடியுமா?

ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன், 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தி தி.மு.க., தேர்தலை எதிர்கொண்டால் அது தவறாக முடியவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்தார்.

எஸ்.பி.லட்சுமணனின் கூற்றுப்படி, 2026 தேர்தல் களம், ஸ்டாலினா அல்லது மற்றவர்களா என்பதாகவே இருக்கப் போகிறது.

"நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட வரும்போதோ, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக சீமான் களமிறங்கும்போதோ அவர்களுக்கு எதிராக உதயநிதியை மட்டுமே முன்னிறுத்த முடியாது."

உதயநிதி அந்த இடத்திற்கு இன்னும் வளரவில்லை எனக் குறிப்பிடும் அவர், "எதிர்காலத்தில் வேண்டுமானால் அப்படியொரு போட்டி வரலாம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, நீர்வேலியான் said:

வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார். 

வெட்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/9/2024 at 05:18, நீர்வேலியான் said:

வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார். 

அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்?? குறி என்றோ வைக்கப்பட்டுவிட்டது. அதை அடைந்திருக்கிறார்கள். மக்களும் இளவரசர் என்று தெரிந்தே வாக்களித்து வரவேற்றனர். எனவே அவர்கள் கூட வெட்கப்பட தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் என்பது சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் . ........ தந்தை பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து வந்தார் . .......அவருக்குப்பின் கருணாநிதியைவிட சீனியராக இருந்த சிலரையும் கவர்ச்சியான பேச்சாலும் நரித்தனமான தந்திரங்களாலும் (ரயில் வராத தண்டவாளத்தில் படுத்தல் ,  சமீபத்தில் 2 ஏர் கூலருடன் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் மனைவிகள் அமர்ந்திருக்க ஓரிரு மணித்தியால உண்ணாவிரதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ) ஓரங்கட்டி பதவிக்கு வந்து பின் எம் . ஜி . ஆர் போன்ற பெரிய கிளைகளை வெட்டி  விலக்கி விட்டு தன் குடும்பத்தினரை உள்ளே கொண்டுவந்து புயலாலும் அசைக்க முடியாத ஆலமரமாக்கி விட்டு போயிருக்கிறார் .......ஆனாலும் எம் . ஜி . ஆர் ஆண்ட 10/12 ஆண்டு காலம் எழும்பமுடியாது உறக்க நிலையில் இருந்தனர் ..... பின் ஜெயலலிதாவின் காலத்திலும் அதே நிலை தொடர்ந்தது ......ஆனால் சசிகலாவின் பேராசையால் அ . தி . மு . க   சரிய அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் ........அதிலும் அவர்களில் உதயநிதி படித்தவர் ,  திரைத்துறையின் மூலம் ஏற்கனவே எல்லோராலும் அறியப்பட்டவராக இருக்கின்றார் .......கட்சி பல வருடங்களுக்கு நிலைத்து நிற்க வேறென்ன வேண்டும் . .......எதிர்த்து வரும் கட்சிகளுக்கு குழி பறித்துக் கொண்டிருந்தாலே போதும் .......! 

  • Like 1
Posted
17 hours ago, ஏராளன் said:

துணை முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அதில் பத்து சதவீதம் அளவுக்குக்கூட உதயநிதி மெனக்கெடவில்லை. காலம் அவரை இயல்பாகவே அந்த இடத்தை நோக்கி நகர்த்திச் சென்றது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

திட்டமிட்டு செய்வது. பிறகு இயல்பாக வருகிறது என்று பத்திரிகையாளரை வைத்து சொல்ல வைப்பது.  
வாக்களித்த மக்களுக்கு ஜனநாயகம் என்றால் இப்படித்தான் என நினைத்தார்களோ என்னவோ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/9/2024 at 18:28, ஏராளன் said:

உதயநிதி ஸ்டாலின்: திமுகவின் அடுத்த வாரிசா? சீனியர்களின் நிலை என்ன ஆகும்?

அவர்கள் சீனியர்கள் அல்ல. அடிமைகள். 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போன மாதம் ஒரு நிகழ்வில் ஸ்டாலின் கலந்து கொண்டதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது அவர் அமெரிக்கா போவதற்கு முன். அவரின் நடையே மிகப் பலவீனமாக இருந்தது. கால்களை நேரே வைத்து அவர் நடக்கவில்லை. இரண்டு கால்களும் பக்கவாட்டில் போய்க் கொண்டிருந்தன. குரல், அசைவுகள் எல்லாமே மிகவும் பலவீனமானவையாக இருந்தன. பின்னர் முதலீடுகளை ஈர்க்கவென்று அமெரிக்கா வந்தார். அமெரிக்காவில் கடற்கரையில் சைக்கிள் ஓடினார்.

இவருக்கு ஏதாவது தீவிரமான உடல் உபாதைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இந்த நியமனம் வேறு அந்த சந்தேகத்தை இன்னும் கூட்டுகின்றது.

தமிழ்நாட்டில் எல்லாப் பிராந்திய கட்சிகளுமே வாரிசு அரசியல் தான் செய்கின்றன - திமுக, அதிமுக, பாமக, வைகோவின் கட்சி, விஜய்காந்தின் கட்சி, மூப்பனார் கட்சி,................. நாளைக்கு விஜய்யும் இதையே செய்வார், சீமானும் இதையே செய்வார். 

அதிமுகவில் முறையான வாரிசுகள் இல்லாததால், அந்தக் கட்சியே குலைந்து போய்விட்டது. அந்தப் பயம் திமுகவிற்கு இருக்கும் என்றாலும், இந்த நியமனம் இப்போது தேவையற்றதும், மிக அவசரகதியில் உதயநிதியினைக் கொண்டு வந்து உயர்த்தி விட்டது போலவும் தெரிகின்றது.

திமுக என்றும் முறையான ஒரு வாரிசு இல்லாத கட்சியாகப் போவதில்லை. உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்காமல் இருக்க, அதே நேரத்தில் ஸ்டாலினிற்கு ஏதாவது ஆகினால் கூட, திமுக உடையப் போவதில்லை. ஸ்டாலினின் இடத்தை உதயநிதியே நிரப்புவார். உதயநிதிக்கு போட்டியே இருக்காது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால், உதயநிதியின் இடத்தை அவரின் மகன் இன்பநிதி பின்னர் ஒரு காலத்தில் நிரப்புவார் என்று கூடச் சொல்லலாம்.

இந்த அவசர நியமனம் ஒரு அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குகின்றது.

ஸ்டாலின் பதவியேற்ற புதிதில், இறையன்புவை தலைமைச் செயலாளர் ஆக்கியதுடன், முன்பில்லாத ஒரு நிர்வாகத்தையும், அரசியலையும் தமிழ்நாட்டில் கொண்டு வரப் போகின்றார் என்பது போல ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த பல நிகழ்வுகள், முக்கியமாக செந்தில் பாலாஜி ஏன் இப்போது கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டார் என்ற பின்புலம், ஸ்டாலின் ஒன்றும் வித்தியாசமானவர் இல்லை என்றே உணர்த்திவிட்டது. மருமகன் சபரீசன் மற்றும் குடும்பத்தின் பிடியில் இவரும் கருணாநிதி போல போய்விட்டார்.

அதன் ஒரு நீட்சியே இந்த நியமனமும் போல.

மன்னராட்சி முடியவில்லையா என்று விசனமாக இருக்கின்றது. இவர்கள் மன்னர்கள், இளவரசர்கள், குட்டி இளவரசர்கள் போன்றவர்களே. இவர்களின் குடும்பங்களில் பிறந்தாலே, அவர்கள் ஆளப் போகின்றவர்கள் தான்.

இவர்களுக்கு மாற்றாக சினிமா பிரபலங்கள் ஓரிருவர் வரக்கூடும். எம்ஜிஆர், ஜெயலலிதா போல. சினிமாப் பிரபலங்கள் மன்னர்கள் அல்ல.............. மாறாக அவர்கள் தங்களை கடவுள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சட்டியா, அடுப்பா என்று துள்ளிக் கொண்டிருக்க வேண்டும் நாங்கள்.    

 

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

அவர் அமெரிக்கா போவதற்கு முன். அவரின் நடையே மிகப் பலவீனமாக இருந்தது. கால்களை நேரே வைத்து அவர் நடக்கவில்லை. இரண்டு கால்களும் பக்கவாட்டில் போய்க் கொண்டிருந்தன.

அமெரிக்கா வந்தார். அமெரிக்காவில் கடற்கரையில் சைக்கிள் ஓடினார்.

அண்ணா தெரிந்து கொள்ள கேட்கிறேன் சைக்கிள் ஓடுவது தானே நடப்பதை விட கடினம்  நடை தான் சுலபமான பயிற்சி என்றபடியால் தானே சீனியர்களுக்கு நடப்பதை ஊக்கிவிக்கபடுகின்றது. நடப்பதற்கு கஷ்டபட்டவர் சைக்கிள் ஓடியது தான்..

1 hour ago, ரசோதரன் said:

குடும்பத்தின் பிடியில் இவரும் கருணாநிதி போல போய்விட்டார்.

இனி இலங்கை தமிழ் தேசியவாதிகள் கவுரவ அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகவும் ஓவரைம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் வைப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணா தெரிந்து கொள்ள கேட்கிறேன் சைக்கிள் ஓடுவது தானே நடப்பதை விட கடினம்  நடை தான் சுலபமான பயிற்சி என்றபடியால் தானே சீனியர்களுக்கு நடப்பதை ஊக்கிவிக்கபடுகின்றது. நடப்பதற்கு கஷ்டபட்டவர் சைக்கிள் ஓடியது தான்..

இனி இலங்கை தமிழ் தேசியவாதிகள் கவுரவ அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகவும் ஓவரைம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் வைப்பார்கள்

நீங்கள் சொல்வது சரியே........ அவர் இங்கு ஏதாவது சிகிச்சை முடித்து அதன் பின்னரே சைக்கிள் ஓடினாரா அல்லது அந்த சைக்கிள் ஓட்டமே சிகிச்சையின் ஒரு பகுதியா என்று தான் சொல்ல வந்தேன். அந்தச் சைக்கிள் கூட கொஞ்சம் புதுமையாக ஓடியது. அதுவாக ஓடியது போலவே இருந்தது........... ஒரு EV போல ஓடியது....😀.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.