Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
03 OCT, 2024 | 11:16 AM
image

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மதுபான நிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம் காணப்படுகின்றது, இவற்றிற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் யார் என்பது மக்களிற்கு தெரியவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், எதிர்வரும் தேர்தலிற்கு முன்னர் இதனை பகிரங்கப்படுத்தவேண்டும், இதன் மூலம் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளவர்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலைகள் அதிகரிப்பு என்பது சமூக பிரச்சினை, இது இளம்தலைமுறையினருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், மதுபானசாலைகளை விஸ்தரிப்பதில் நேரடியாக தொடர்புபட்ட அரசியல்வாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195372

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்….

கேரள கஞ்சா,  ஆப்கானிஸ்தான்  அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣

முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள்.
மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐

தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣

கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவும் அரசியல் தான். யாரோ இவரின் எதிரியை அழிக்கும் அரசியல். மக்கள் நலன் சாய்ந்து அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியோ பிழையோ சுமந்திரன் தான் மதுபான உரிமைப் பத்திரம் பெறவில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார். 

இப்போது சுமத்திரனை துரோகி என்று சொல்லிக்கொண்டு தமிழ் பிள்ளைகளை கொலைக்களம் அனுப்ப தமிழ் இன வெறியைத் தூண்டும் போலி தமிழத் தேசிய வியாதிகள் தாங்கள் மதுபான அனுமதிப் பத்திரம் வாங்கவில்லை என்று சொல்லட்டுமே, தாம் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்க என்ன தடை? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இதுவும் அரசியல் தான். யாரோ இவரின் எதிரியை அழிக்கும் அரசியல். மக்கள் நலன் சாய்ந்து அல்ல. 

அவரின் குருவை தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்….

கேரள கஞ்சா,  ஆப்கானிஸ்தான்  அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣

முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள்.
மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐

தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣

கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁

அவசரப்பட்டுட்டியே குமாரு,.....🤣

3 hours ago, விசுகு said:

இதுவும் அரசியல் தான். யாரோ இவரின் எதிரியை அழிக்கும் அரசியல். மக்கள் நலன் சாய்ந்து அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெயர்ப் பட்டியல் வெளிவரப்போவதில்லை (?) என்று தெரிந்தவுடன் அறிக்கை விட்டு தனக்கு சாதகமாக்குகின்றாரா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது சரி சுத்து ரணிலிடமும் சஜித்திடமும் வாங்கின பெட்டி என்ன மாதிரி..... இந்தமுறை உமக்கு ஆப்பு என்று தெரிந்து மத்தவர்களின் அழுக்கினை கிண்டுகிறார் ....அதுவும் மிக தப்புதான் அதற்ககாக நீர் ஒன்றும் உத்தமர் இல்லை ...... துரோகி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, MEERA said:

பெயர்ப் பட்டியல் வெளிவரப்போவதில்லை (?) என்று தெரிந்தவுடன் அறிக்கை விட்டு தனக்கு சாதகமாக்குகின்றாரா?

மாட்டிக்கினாரு ஒத்தரு அவரக் காப்பாத்தணும் கத்தரு,.....😭😁

2 hours ago, தமிழன்பன் said:

அது சரி சுத்து ரணிலிடமும் சஜித்திடமும் வாங்கின பெட்டி என்ன மாதிரி..... இந்தமுறை உமக்கு ஆப்பு என்று தெரிந்து மத்தவர்களின் அழுக்கினை கிண்டுகிறார் ....அதுவும் மிக தப்புதான் அதற்ககாக நீர் ஒன்றும் உத்தமர் இல்லை ...... துரோகி

வரலாற்றில் தமிழினத்தால் அதிகம் பாவிக்கப்பட்ட சொல் துரோகி,..🤣

Posted

சுமந்திரனின் கோரிக்கை சரியானது. 

பிரான்சில் ஒருவர் அரசியலில் நுளைவதானால் அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

சாராயக்கடை வைத்திருப்பது சட்டவிரோதமானதல்லவே. அரசாங்கம் தான் அனுமதி வழங்குகிறது. இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் பகிரங்கமான உரிமையாளைர்களையே கொண்டுள்ளது.

சாரக்கடை உரிமையாளரை மட்டும் ஏன் கிசுகிசு தகவல்கள் மூலம் குறிப்பிட வேண்டும் ? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/10/2024 at 16:14, ஏராளன் said:

இவற்றிற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் யார் என்பது மக்களிற்கு தெரியவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், எதிர்வரும் தேர்தலிற்கு முன்னர் இதனை பகிரங்கப்படுத்தவேண்டும், இதன் மூலம் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளவர்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் வழங்கியவர் இவருடைய தோஸ்த்துதானே, அவரிடமே கேட்டுத்தெரிந்திருக்க வேண்டியதுதானே? அனுமதி கொடுக்கும் போது தடுத்திருக்கலாம். இவருடைய எதிரிகள் சிறீதரன், விக்கினேஸ்வரன் இப்போ. நாடாளுமன்றத்தேர்தலில் இவர் கவிழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் இவர்களின் பெயரை வெளியிட்டு பழிவாங்க முனைகிறார். மக்கள் மேல் இவருக்கு அவ்வளவு அக்கறை, அயராது உழைப்பதால் இதுவரை காலமும் இதை கண்டுக்க அவருக்கு நேரமில்லை கண்டியளோ...... இப்பதான் வேளை வந்திருக்கு, வாக்கு கேட்ட களைப்போடு ஓடி வந்திட்டார் அனுரவை தேடி. தேர்தல் மேடைகளில் அவர்கள் மேல் சேறடித்து, உரத்து சவால் விடலாம் என்று கணக்கு போட்டிட்டார். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

சாத்தான் குட்டிச் சாத்தான் ஆகிறது,....🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kapithan said:

சாத்தான் குட்டிச் சாத்தான் ஆகிறது,....🤣

உந்தக் குசும்பு தானே… வேண்டாம் என்கிறது. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

உந்தக் குசும்பு தானே… வேண்டாம் என்கிறது. 😂

இது அவரது சொந்தக்குணம், மாற்ற முடியாது. மாற்றிப்போடுவது, நழுவுவது, அடாவடி பண்ணுவது. "உன் நண்பனைப்பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.

அது சரி சிறியர்..... நான் ஒருவரை கனநாளாக தேடுகிறேன், தகவலேதும் இல்லை. தேர்தல் வேலைக்காக போய்விட்டாரோ? அல்லது இரட்டை வேடம் வேண்டாமென களைந்து விட்டாரோ?    
  
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

இது அவரது சொந்தக்குணம், மாற்ற முடியாது. மாற்றிப்போடுவது, நழுவுவது, அடாவடி பண்ணுவது. "உன் நண்பனைப்பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.

அது சரி சிறியர்..... நான் ஒருவரை கனநாளாக தேடுகிறேன், தகவலேதும் இல்லை. தேர்தல் வேலைக்காக போய்விட்டாரோ? அல்லது இரட்டை வேடம் வேண்டாமென களைந்து விட்டாரோ?    
  
சாத்தான்…   நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லையே.
அவர் பெயரின் முதல் எழுத்தை “கிசு கிசு” பாணியில் சொல்லவும். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்…   நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லையே.
அவர் பெயரின் முதல் எழுத்தை “கிசு கிசு” பாணியில் சொல்லவும். 

😀

கோழி கூவும் என்று நினைக்கிறேன்.😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்…   நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லையே.
அவர் பெயரின் முதல் எழுத்தை “கிசு கிசு” பாணியில் சொல்லவும். 

😀

உங்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர். அவருக்காக ஒருதடவை சிறப்புச்சான்றிதழ் அளித்தவர் நீங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, சுவைப்பிரியன் said:

கோழி கூவும் என்று நினைக்கிறேன்.😄

1 minute ago, satan said:

உங்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர். அவருக்காக ஒருதடவை சிறப்புச்சான்றிதழ் அளித்தவர் நீங்கள். 

@goshan_che கோசானை சொல்கிறீர்கள் போலுள்ளது. 🧐 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

இது அவரது சொந்தக்குணம், மாற்ற முடியாது. மாற்றிப்போடுவது, நழுவுவது, அடாவடி பண்ணுவது. "உன் நண்பனைப்பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.

அது சரி சிறியர்..... நான் ஒருவரை கனநாளாக தேடுகிறேன், தகவலேதும் இல்லை. தேர்தல் வேலைக்காக போய்விட்டாரோ? அல்லது இரட்டை வேடம் வேண்டாமென களைந்து விட்டாரோ?    
  
பய புள்ள கோத்து விடுது பார்,..🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che கோசானை சொல்கிறீர்கள் போலுள்ளது. 🧐 🙂

12 minutes ago, Kapithan said:

பய புள்ள கோத்து விடுது பார்,..🤨

 அவருக்கு என்ன நடந்தது? சரியாக  துப்பு விளக்கினேன் போலுள்ளது, அங்கால ஒருவர் முந்திக்கொண்டு  துள்ளுறார். எனது அவதானிப்பு  உண்மையாய் இருக்குமோ? 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/10/2024 at 03:49, satan said:

 அவருக்கு என்ன நடந்தது? சரியாக  துப்பு விளக்கினேன் போலுள்ளது, அங்கால ஒருவர் முந்திக்கொண்டு  துள்ளுறார். எனது அவதானிப்பு  உண்மையாய் இருக்குமோ? 

பல்லு விளக்கவே துப்பில்லை, இதற்குள் துப்பு விளக்கி….விளங்கிடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

பல்லு விளக்கவே துப்பில்லை, இதற்குள் துப்பு விளக்கி….விளங்கிடும்🤣

வாங்கோ, வாங்கோ, சொல்லுங்கோ புதினத்தை. நீங்கள் காணாமல் போன அப்பவே நினைத்தேன் தேர்தல் வேலையாய்த்தான் மினைக்கெடுக்கிறியள் என்று. கண்டது சந்தோசம் இனி களம் கலகலப்பாயிடும். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.