Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு....

யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்....

https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/

  • கருத்துக்கள உறவுகள்

சாச்சா.....  உதெல்லாம் தமிழரசுக்கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்படாதவர்களின் வீண் பேச்சு, சுமந்திரன் மேலுள்ள பொறாமையால் பேசுகிறார்கள். மக்கள் சுமந்திரனை அமோகமாக வரவேற்பார்கள். "ஒருவர் சொன்னால்; கேட்டோடு, ஊரோடினால்; சேர்ந்தோடு (ஒத்தோடு)." சுமந்திரன் மேல் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு விமர்சனம்? அவரது திருகு தாளம் வெளிப்படையானது. இதன் காரணம், இப்போ கட்சியிலிருந்தே வெளிப்படுகிறது. இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்? ஆனால் காலதாமதம், தலைமையின் இயலாத்தன்மை, மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமை அவரை இந்தளவுக்கு கட்டுக்கடங்காதவராக உருவாக்கியிருக்கிறது. இவரது அபிமானிகள்,  உறவுகள், நண்பர் இன்னும் இவர் உத்தமர் என்று வாதாடி தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

உமாகரன் ராசையா போன்றவர்கள் தமிழ் நாட்டின் அர்ஜுன் சம்பத் ரகம். சீமான் போன்றவர்களை விட பைத்தியம் முற்றியவர் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

உமாகரன் ராசையா போன்றவர்கள் தமிழ் நாட்டின் அர்ஜுன் சம்பத் ரகம். சீமான் போன்றவர்களை விட பைத்தியம் முற்றியவர் இவர்.

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து 

ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது 

பதவி வெறியர்கள் இருக்க கூடாது 

சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? 

இப்படி வேண்டுமானால் சொல்லலாம்,

தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு....

யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்....

https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/

1) கோபம் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதல் காரணமாக வரவில்லை.  தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது. 🤣

2) உமாகரன் எப்போது ஒட்டுமொத்த  தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 

3) யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மட்டும்தானா தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? 

4) டமிலரசுக் கட்சியின் உயிர் வாழ்க்கையே தமிழரை முட்டாள்களாக வைத்திருப்பதில்தான் தங்கியிருக்கிறது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பகிடி said:

அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? 

இப்படி வேண்டுமானால் சொல்லலாம்,

தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை 

கண்டிப்பாக இருக்கிறது  சுமத்திரன். தெரிவு செய்த வேட்பாளர்கள்  தகுதி அற்றவர்கள். அவரகளைவிட தகுதியானவர்கள் தமிழரசுகடசியில். பல ஆண்டுகளாக  அங்கத்துவம் பெற்று இருக்கிறார்கள்  ஆனால் அவர்கள் சுமத்திரனின். அடிமைகள் இல்லை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள். சுமத்திரனின். அடிமைகள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து 

ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது 

பதவி வெறியர்கள் இருக்க கூடாது 

சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது 

சாதி வெறியர்களும் சமய வெறியர்கள் மட்டும் இருக்கலாம். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது

இல்லை தரமற்றவர்களை வேட்பாளர்களாக  நியமிக்கப்பட்டுள்ளதால் வந்த கோபம். 

6 minutes ago, Kapithan said:

உமாகரன் எப்போது ஒட்டுமொத்த  தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 

அவர் குத்தகைக்கு எடுக்கவில்லை    சுமத்திரன் தான்  எடுத்து உள்ளார்    

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சாதி வெறியர்களும் சமய வெறியர்கள் மட்டும் இருக்கலாம். 

😁

கட்சி பணிகளில் வெறியுடன் ஈடுபடக்கூடாது   அது எந்த வெறி 

என்றாலும்   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1) கோபம் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதல் காரணமாக வரவில்லை.  தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது. 🤣

2) உமாகரன் எப்போது ஒட்டுமொத்த  தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 

3) யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மட்டும்தானா தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? 

4) டமிலரசுக் கட்சியின் உயிர் வாழ்க்கையே தமிழரை முட்டாள்களாக வைத்திருப்பதில்தான் தங்கியிருக்கிறது. 

🤣

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தவறுகள் இருக்கலாம். அனைத்தையும் ஆதரிக்க முடியாது. அவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால்,   வட இந்திய ஆர். எஸ்.எஸ் , இந்துத்துவா ********** உமாகரனுக்கு இதை சொல்லலும் அருகதை கிடையாது.  மதவாத நச்சுக்கருத்துகளை ஈழத்தமிழரினையே விதைப்பதை முதலில் இவர் நிறுத்த வேண்டும். பின்னர் தமிழரசுக்கடசியை விமர்சிக்கலாம். 

தமிழரசு கட்சியை ஆர் எஸ் எஸ் அடிமை ஆக்க முடியவில்லை என்ற கோபமே இவருக்கு. மற்றபடி தமிழ் உணர்வு எல்லாம் இவரது நடிப்பே. 

  • கருத்துக்கள உறவுகள்
 
Kiri 'Zi
அதென்ன எல்லாருக்கும் கட்சி சீட் தரேல்ல எண்டவுடன மட்டும் கோவம் வந்து கட்சிய விட்டு கோவமா வெளியேறுறீங்கள்
🤣
இந்த பதிவிற்கு முகநூலில் வந்த மேல் பின்னூட்டம்  "தமிழரசு மீது கோபக் கனல் கக்கும்" ஆட்களின் முகத்திரையைக் கிழித்து விடுவது போல் இருப்பதால் இணைத்திருக்கிறேன்.
9 hours ago, Kandiah57 said:

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து 

ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது 

பதவி வெறியர்கள் இருக்க கூடாது 

சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது 

உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

ஏற்கனவே தமிழரசுக் கட்சி உதிரிக் கட்சிகளோடு இணையவிரும்பவில்லை.  இப்பொழுது வேட்பாளர்கள் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு எல்லாம் சேர்ந்து, வீட்டுக்கு கல் எறிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிய எல்லாம் அமர்ந்து விடும். கட்சியை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே சங்கு ஊதிக் கொள்வார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம் சிறீதரன் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

கட்சியை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே சங்கு ஊதிக் கொள்வார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம் சிறீதரன் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை.

அழகான புலுடா கதைகள் சொல்லியே மிகுதி தமிழர் காலத்தையும் வீணடித்துவிடுவார்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:
உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

ஆமா! இவ்வளவு காலமும் இல்லாத பதவி வெறி இப்பதான் வந்தது அவர்களுக்கு. எல்லோரையும் அடக்கியாளும் சுமந்திரன் மட்டும் பதவி ஆசை இல்லாத ஞானியாக்கும்.. இன்று சுமந்திரனால் வரவேற்கப்படுபவர்கள் நாளைக்கு விரட்டப்படுவார்கள், அப்போதும் இதே ஞாயத்தை கூறுவீர்களா? இவர் கட்சியின் கொள்கையோடு கலந்துபேசி கட்சிக்குட்ப்பட்டா கருத்துக்களை வெளியிடுகிறார்,  அங்கத்தவரை விரட்டுகிறார்? அல்லது புதியவர்களை நியமிக்கிறார்? தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரி போல் முடிவுகளை எடுக்கிறார் அதனாலேயே அங்கத்தவர் விலகுகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2024 at 15:41, Justin said:

உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

இந்த கருத்து  சுமத்திரனால். நியமிக்கப்பட்டுள்ளவர்களும்.  பொருந்தும்  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

ஆமா! இவ்வளவு காலமும் இல்லாத பதவி வெறி இப்பதான் வந்தது அவர்களுக்கு. எல்லோரையும் அடக்கியாளும் சுமந்திரன் மட்டும் பதவி ஆசை இல்லாத ஞானியாக்கும்.. இன்று சுமந்திரனால் வரவேற்கப்படுபவர்கள் நாளைக்கு விரட்டப்படுவார்கள், அப்போதும் இதே ஞாயத்தை கூறுவீர்களா? இவர் கட்சியின் கொள்கையோடு கலந்துபேசி கட்சிக்குட்ப்பட்டா கருத்துக்களை வெளியிடுகிறார்,  அங்கத்தவரை விரட்டுகிறார்? அல்லது புதியவர்களை நியமிக்கிறார்? தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரி போல் முடிவுகளை எடுக்கிறார் அதனாலேயே அங்கத்தவர் விலகுகின்றனர். 

ஒரு கருத்தை மட்டும் பார்த்துத் தான் பதில் எழுதுவீங்கள் போல, அக்கம் பக்கம் பார்க்க விடாமல் சுமந்திரன் வெறுப்பு கண்ணை மறைக்கிறது போல😂

நீங்கள் புலவர் இணைத்த தவராசா அவர்களின் செவ்வி பார்க்கவில்லையோ? 2020 இலும் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் எடுத்து பின்னர் இழந்திருக்கிறார். இது வரை விலகாமல் இருக்கக் காரணம் தமிழரசை விட்டுத் தனியாகப் போய் இவர் போன்றோர் முகவரி தேட இனி முடியாது. எனவே தான் தமிழரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு " சீட்டுத் தா" என்று அழுகின்றனர்.

இவர்களுக்கும், நாம் தமிழ்நாட்டின் ஊழல் கட்சிகளில் காணும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு வித்தியாசம் தான்: தமிழ்நாட்டில் வெள்ளை வேட்டி, சட்டை, தவராசா அவர்களுக்கு கோட்டு சூட்டு😎!

  • கருத்துக்கள உறவுகள்

462775808_557860450247794_87750146893066

குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

462775808_557860450247794_87750146893066

குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣

"படம் பார்" குழு முன்னர் மாவைக்கு யாரோ குடை பிடிக்கிற படமும் எங்கேயோ தேடியெடுத்துப் போட்டது, அதே போல இப்ப இதுவும் போட்டிருக்கு. இனி வந்து படத்தைப் பற்றி "5 வசனம் எழுதுவினம், மிகவும் "ஆழமாக" இருக்கும் அந்தக் கருத்துக்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

462775808_557860450247794_87750146893066

குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣

இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும்   இவரும் இவரது ஆதரவளார்களும்.  10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள்   அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது  விடில்.  

வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள்  

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும்  என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

அவர்களிடம்  பதில் இல்லாவிட்டால்...  "அழாப்பி"  விளையாட்டுத்தான் விளையாட வேண்டும். 😂
வேறு வழி, இல்லையே....?  பாவங்கள்... வெள்ளை அடிக்க, எவ்வளவு கஸ்ரப் படுகிறார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி 

இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் ஒரு தமிழ் அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாமே அது எந்தக் கட்சி?

விக்கி கட்சி? அல்லது தவராசா கட்சியா? 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும்   இவரும் இவரது ஆதரவளார்களும்.  10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள்   அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது  விடில்.  

வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள்  

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும்  என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂

கந்தையருக்கு யாழ் களத்தில் சில வருடங்கள் முன்பு நடந்த உரையாடல்கள் தெரியவில்லைப் போல.

சுமந்திரன் மீதும், சாணக்கியன் மீதும் அவர்களது மதத்தைக் குறிப்பிட்டு தமிழ் தேசியம் பேசியது நடந்திருக்கிறது. சாணக்கியன் "பறங்கியருக்குப் பிறந்து விட்டு, மதமும் மாறி விட்டு (சிலரின் கற்பனையில் சிங்களக் காதலியும் வைத்துக் கொண்டு)  தமிழரைப் பற்றி யோசிப்பாரா?" என்று கேட்டோரும் இங்கே நிற்கிறார்கள். அப்படி அவர் கேட்ட போது ஓடி வந்து ஆதரவுக் குறிகள் இட்டோரும் இங்கே "அப்பாவிகள்" மாதிரி திரிகீனம் - நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்😂!

இப்போது சில வருடங்களாக அனேகமான தமிழ் அரசியல் வாதிகளை முழுப்பெயர் கொண்டு அழைக்கிற வழக்கம் உருவாகியிருக்கிறது. ஏன் என்று நினைக்கிறீர்கள்? "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என்று ரொய்லெற் ஊடகங்கள் புலத்தில் இருந்து எழுத ஆரம்பித்த  போது "மத அடையாளத்தை நாசூக்காகச் சுட்டிக் காட்ட அப்படி எழுதுகிறார்கள்" என்று பலர் கண்டு கொண்டு கண்டித்தார்கள். அதன் பின் தம் கொண்டையை மறைக்க "சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன்" என்று எல்லோரையும் முழுப்பெயரால் சுட்ட ஆரம்பித்தார்கள் இந்த ரொய்லெற் ஊடகர்களும், புலம்பெயர் தேசியர்களும்!

எனவே, நீங்கள் மதம் கடந்த மனிதராக இருக்கலாம், ஆனால் உங்களை உசுப்பேத்துபவர்கள் அப்படியானவர்கள் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

அது சரி  நீங்கள் மற்றவர்களை பார்த்து தான் கருத்துகள் எழுதுகிறீர்களா?? அதாவது உங்கள் கருத்துகள் மற்றவர்கள் கருத்துகளில் தங்கி அல்லது சார்ந்து இருக்கிறதா???   அப்படி என்றால் தயவுசெய்து அதனை மாற்றி விடுவது நல்லது 🙏🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.