Jump to content

அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடும் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் திங்கட்கிழமை (14) யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

IMG_20241014_200726615_HDR.jpg

சுயேட்சை குழுவில் இராமநாதன் அருச்சுனா , சிவப்பிரகாசம் மயூரன், சிவசுப்பிரமணியம் யோகபாலன், கௌசல்யா நரேந்திரன் , இராமகிருஷ்ணா அறிவன்பன் , பத்மலோஜினி நவரத்தினம் , தம்பிஜயா கிருஷ்ணானந், சிறிகண்ணன் சிறிபிரகாஷ் மற்றும் பவித்திரா கிருபானந்தமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

https://www.virakesari.lk/article/196306

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். புதுமுகங்கள் தமிழ் மக்களிற்கு புதிய பல நல்ல விடயங்களை கொண்டு வரவேண்டும். இந்த தடவை ஒரு வேளை வெற்றி பெற முடியாவிட்டாலும் நல்லதொரு அடித்தளமாக, ஆரம்பமாக இந்த சுயேட்சை குழு அமைய வேண்டும்.

வேட்பாளார்களின் கல்வி/தொழில்/சமூக தொடர்புகள்/பின்னணி/ஆர்வம்/முயற்சி/கண்ணோட்டம் இவை பற்றி அறியத்தாருங்கள் பார்ப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் - வைத்தியர் அருச்சுனா

image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும். மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து, பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டுவருவோம். 

தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டு உள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே தமிழ் மக்கள் மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

எமது போராட்டம் அரசியல் சார்பற்ற போராட்டமாக முன்னெடுத்தோம். அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை சுட்டி காட்டிய போது எனக்கு எதிராக திரும்பினார்கள். 

அப்போதே அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டேன். 

உண்மையான அரசியல் செய்ய நிதி தேவையில்லை. அரசியல் செய்ய எனக்கு இரண்டு வருடம் சம்பளம் போதும், மக்களுக்காக அரசியல் செய்ய பணம் தேவையில்லை. எனக்கு 10 கோடி ரூபாய் பெறுமதியான காணி இருக்கின்றது. அது எனக்கு போதும். மக்களிடம் பணம் பெற்றால் அது தொடர்பில் வெளிப்படை தன்மையாக செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/196322

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவுக்காக பலர் மும்மரமாக வேலை செய்கிறார்கள் போல உள்ளது.

டாக்ரரும் முன்னர் உளறியது போல இல்லாமல் கொஞ்சம் தெளிவாக பேசுகிறார்.

அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் யாராவது வென்றால் அனுராவுடன் சேருவார்களோ?

பின்வரிசை வேட்பாளர்களுக்கும் பல மிரட்டல்கள் வந்துள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளையதலைமுறை அரசியலில் ஈடுபடுவதற்கு.. இன்னமும் பல இளைஞர்களுக்கு இது ஒரு ஊக்கசக்தியாக அமையட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களே… ஆறு இடத்தையும் எடுத்தால்,
தமிழரசு கட்சியை  எரிக்கிறதா, புதைக்கிறதா… என்ற நிலைமை நெருங்கி விட்டது போலுள்ளது. 😂

இப்போது களத்தில் இறங்கியுள்ள அர்ச்சுனா போன்ற புதிய முகங்களும், தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களும்…. தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் இருந்தே தமது வாக்கை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, தமிழரசு கட்சி மரண அடி வாங்கும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அதில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்பிலை.
அத்துடன் அனுர அலையும்… வடக்கு, கிழக்கில்… புதிதாக கிளம்பியுள்ளதால், தமிழரசுக் கட்சி தூக்கி வீசப்படும். 

எல்லாவற்றுக்கும் அந்த உளறுவாயன் சுமந்திரனும்,  கொம்பு சீவி விட்ட அல்லக்கைகளும் தான் காரணம். 🤣

Edited by தமிழ் சிறி
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை எரிப்பதா புதைப்பதா என்பதிலிருந்து தமிழரசுக் கட்சியை எரிப்பதா புதைப்பதா என்று வந்திருப்பது நல்ல வளர்ச்சியின் அறிகுற,..🤣

47 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள் இளையதலைமுறை அரசியலில் ஈடுபடுவதற்கு.. இன்னமும் பல இளைஞர்களுக்கு இது ஒரு ஊக்கசக்தியாக அமையட்டும்..

சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் அரசியலில் வருவது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் தலைமை நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். 

1 hour ago, ஈழப்பிரியன் said:

அர்ச்சுனாவுக்காக பலர் மும்மரமாக வேலை செய்கிறார்கள் போல உள்ளது.

டாக்ரரும் முன்னர் உளறியது போல இல்லாமல் கொஞ்சம் தெளிவாக பேசுகிறார்.

அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் யாராவது வென்றால் அனுராவுடன் சேருவார்களோ?

பின்வரிசை வேட்பாளர்களுக்கும் பல மிரட்டல்கள் வந்துள்ளதாம்.

மத்திய கிழக்கில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்திருப்பதாக கதையடிபடுகிறது. உண்மை பொய் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

இவருக்கு 2009 இன் பின் மாவீரர்தினத்தை முன்னெடுக்க திலீபனின் நினைவுநாளை கொண்டாட எல்லோரும் பயந்து இருந்த காலங்களில் பாராளுமன்ற பதவியும் இல்லாமல் துணிந்து இவைகளை முன்னெடுத்ததை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்கிறார்கள்.

மற்றும்படி எதுவும் பெரிதாக தெரியவில்லை.

தையிட்டியிலும் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள்.இதுவும் முன்னரே நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

இம் முறை தோல்வி அடைவார் என நினைக்கின்றேன். உடல் நிலையும் ஒரு தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

இம் முறை தோல்வி அடைவார் என நினைக்கின்றேன். உடல் நிலையும் ஒரு தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என கேள்விப்பட்டேன்.

இவர்களின் கட்சி… உள்ளூர் பிரச்சினைகளில் மக்களோடு  முன் நிற்பதால், அந்த ஆதரவு வாக்குகளாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகளையும் மறுக்க முடியாது நிழலி.
இவர்களின் கட்சிக்கு  ஓரு இடம் கிடைக்கும் என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஆளுமை மயூரனிடம் இருப்பதாகவே உணர்கிறேன்..

இதுவரை எதுவித தகுதியும் இல்லாத பலரை பாராளுமன்றம் அனுப்பியிருப்போம். 

வராதுவந்த மாமணியாக ஆகச்சிறந்த அறிவாளி இன்று தேர்தலில் களம் கண்டிருக்கிறான். இது ஒரு அரியவாய்ப்பு..

அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம்பெற்று இதுவரை எவராலும் நெருங்க முடியாத இசட் புள்ளியுடன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தான்..

படிக்கின்ற காலத்தில் அவனை தனியார் கல்வி நிலையத்தில் அவதானித்து இருக்கிறேன். துடிப்பானவன்.. பின்னர் ஒருமுறை தனது தாயினது ஓய்வூதியம் தொடர்பாக நான் பணியாற்றிய அலுவலகத்தில் வந்திருந்தான்... எதுவித பந்தாவுமற்ற சிறந்த கல்வியாளன்.. பல்துறை விற்பன்னன்...

இம்முறை இவனை எமக்கான அரசியல் தலைமையாக தேர்ந்தெடுத்து ஏனைய சாக்கடைகளை அரசியலில் இருந்து விரட்டவேண்டும்...

https://www.facebook.com/share/p/JENhhD7K5hSBpKPv/?mibextid=WC7FNe

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள்

நானும் மயூரன் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டேன். வெளிநாட்டு செட் அப் என்றும் ஒரு பேச்சு. இவர்களால் ஏதாவது நல்லது நடக்கும் என்றால் வரவேற்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஆளுமை மயூரனிடம் இருப்பதாகவே உணர்கிறேன்..

இதுவரை எதுவித தகுதியும் இல்லாத பலரை பாராளுமன்றம் அனுப்பியிருப்போம். 

வராதுவந்த மாமணியாக ஆகச்சிறந்த அறிவாளி இன்று தேர்தலில் களம் கண்டிருக்கிறான். இது ஒரு அரியவாய்ப்பு..

அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம்பெற்று இதுவரை எவராலும் நெருங்க முடியாத இசட் புள்ளியுடன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தான்..

படிக்கின்ற காலத்தில் அவனை தனியார் கல்வி நிலையத்தில் அவதானித்து இருக்கிறேன். துடிப்பானவன்.. பின்னர் ஒருமுறை தனது தாயினது ஓய்வூதியம் தொடர்பாக நான் பணியாற்றிய அலுவலகத்தில் வந்திருந்தான்... எதுவித பந்தாவுமற்ற சிறந்த கல்வியாளன்.. பல்துறை விற்பன்னன்...

இம்முறை இவனை எமக்கான அரசியல் தலைமையாக தேர்ந்தெடுத்து ஏனைய சாக்கடைகளை அரசியலில் இருந்து விரட்டவேண்டும்...

https://www.facebook.com/share/p/JENhhD7K5hSBpKPv/?mibextid=WC7FNe

images?q=tbn:ANd9GcS1JHY2ZM3TtSakyfSk9eL  images?q=tbn:ANd9GcQZekIDu4IYaOALMTYZwzd

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால விடிவுக்காக வருக! வருகவென வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தமில்லாத பதிலளித்த வைத்தியர் அருச்சுனா!

851368795.jpeg

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் , ஊடகவியலாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் வழங்காது, சம்பந்தமில்லாத பதில்களை வைத்தியர் அருச்சுனா வழங்கி இருந்தார். 

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, 

கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் , இலஞ்சம் வாங்குதல் , துஸ்பிரயோகம் , மோசடிகள் என பலவற்றை சமூக ஊடங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். அது தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார் 

அதற்கு, "தற்போது இதற்கு பதில் வழங்க முடியாது. சில காலத்தில் பதில் சொல்லுவோம் நீங்கள் மறந்தாலும் உங்கள் வீடு தேடி வந்து சொல்லுவேன்" என பதில் கூறினார். 

இதுவரையில் நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை ஆதாரங்களை வைத்துக்கொண்டு , முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ , மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க காரணம் என்ன ? என கேட்ட போதும், 

அதற்கு பதில் கூறாது, நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். (ப)

https://newuthayan.com/article/சம்பந்தமில்லாத_பதிலழித்த_வைத்தியர்_அருச்சுனா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவின் செல்வாக்கு அவரது மாறுபட்ட செயல்பாடு மற்றும் கருத்துக்களால் சிதைந்து விட்டது. இந்த நிலையில் இந்த வேளையில் இது தேவையற்றது. இருக்கும் கொஞ்ச வாக்குகளையும் பிரித்து பிரித்து.....,???

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

அதற்கு, "தற்போது இதற்கு பதில் வழங்க முடியாது. சில காலத்தில் பதில் சொல்லுவோம் நீங்கள் மறந்தாலும் உங்கள் வீடு தேடி வந்து சொல்லுவேன்" என பதில் கூறினார். 

இதுவரையில் நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை ஆதாரங்களை வைத்துக்கொண்டு , முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ , மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க காரணம் என்ன ? என கேட்ட போதும், 

நீதிமன்றம் சொல்லியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீதிமன்றம் சொல்லியிருக்கலாம்.

கெளசல்யா கூடவே திரிவது அர்ச்சனாவின் வாயைக் கட்டு படுத்த தான் போலும்,யூருப்பர்ஸ் மற்றும் மீடியாக்காரர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்குமே பதில் சொல்ல எத்தணிக்கும் போதும் தடுக்கப்படுறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அர்ச்சுனாவுக்காக பலர் மும்மரமாக வேலை செய்கிறார்கள் போல உள்ளது.

டாக்ரரும் முன்னர் உளறியது போல இல்லாமல் கொஞ்சம் தெளிவாக பேசுகிறார்.

அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் யாராவது வென்றால் அனுராவுடன் சேருவார்களோ?

பின்வரிசை வேட்பாளர்களுக்கும் பல மிரட்டல்கள் வந்துள்ளதாம்.

சேர்வார்கள் என்பது போல தான் அர்ச்சுனாவின் பேச்சு இருக்கின்றது ....அதே நேரம் தமிழ்தேசியத்துடன் தொடர்ந்து பயணிப்பேன் எனவும் கூறியுள்ளார்...இளய சமுதாயம் அதுவும் வக்கீல் பின்புலம் இல்லாத சமுகம் தமிழ்தேசியத்தை முன்னேடுத்து செல்ல வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அர்ச்சுனாவுக்காக பலர் மும்மரமாக வேலை செய்கிறார்கள் போல உள்ளது.

டாக்ரரும் முன்னர் உளறியது போல இல்லாமல் கொஞ்சம் தெளிவாக பேசுகிறார்.

அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் யாராவது வென்றால் அனுராவுடன் சேருவார்களோ?

பின்வரிசை வேட்பாளர்களுக்கும் பல மிரட்டல்கள் வந்துள்ளதாம்.

அர்ச்சுனாவின். அரசியல் பிரவேசத்தையும். வேட்பாளர்களையும். வரவேற்குறேன். 🙏🙏🙏🙏

வணக்கம்… 🙏 வாருங்கள்  தேர்தலில் வென்று தமிழ் மக்களின்  பிரதிநிதிகளாக  பாராளுமன்றம் செல்லுங்கள்‘  வாழ்த்துக்கள்   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் - வைத்தியர் அருச்சுனா

6 பிளாஸ்டிக் கதிரைகள் எங்கயோ குலுக்கல் முறையில குடுக்கப்போறானுகள் போலகிடக்கு।😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாலி said:

6 பிளாஸ்டிக் கதிரைகள் எங்கயோ குலுக்கல் முறையில குடுக்கப்போறானுகள் போலகிடக்கு।😂

இந்த நிலை அர்ச்சுனாவுக்கு மாத்திலமல்ல எல்லோர் நிலையுமே இப்படி தான் உள்ளது.

கந்தப்புவின் போட்டி மிகமிக தலைவலியை கொடுக்கப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அதற்கு, "தற்போது இதற்கு பதில் வழங்க முடியாது. சில காலத்தில் பதில் சொல்லுவோம் நீங்கள் மறந்தாலும் உங்கள் வீடு தேடி வந்து சொல்லுவேன்" என பதில் கூறினார். 

இதுவரையில் நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை ஆதாரங்களை வைத்துக்கொண்டு , முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ , மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க காரணம் என்ன ? என கேட்ட போதும், 

அதற்கு பதில் கூறாது, நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். (ப)

🤣............

இதே போலவே நடிகர் கமலும் அவர் கண்டுபிடித்த ஊழல்கள் பற்றி முன்னர் சொல்லியிருந்தார், பின்னர் இப்பொழுது காணாமல் போயும் விட்டார்................ இவர்களைப் போன்றோரின் பேச்சு நாங்கள் நாலு பேர்கள் திண்ணையில் இருந்து உலக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வதைப் போல....... வெறும் வாயை மென்று, திண்ணைகளில் நல்ல பெயர் எடுக்க மட்டும் உதவும்............🫣.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.