Jump to content

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,REUTERS

17 அக்டோபர் 2024, 14:16 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘இறந்த மூன்று பயங்கரவாதிகளின்’ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகள் கொல்லப்பட்டக் கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை," என்று இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறியிருக்கிறது.

கொல்லப்பட்டவர் யஹ்யா சின்வாரா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக AFP செய்தி முகமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சின்வாரின் டிஎன்ஏ மற்றும் பிற தரவுகளை அவர் சிறையில் இருந்த காலத்திலிருந்து ஏற்கனவே இஸ்ரேல் கோப்பில் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலும் தகவல்கள் பகிரப்படும்.

 

யார் இந்த யாஹ்யா சின்வார்?

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் குற்றம்சாட்டி வந்தது.

இவர் காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 62 வயதாகும் யாஹ்யா சின்வார், அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளானார்கள்.

1948 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985 ஆம் ஆண்டு கைதான போது ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார்.

இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர்.

ஹமாஸ் 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார்.

1988 ஆம் ஆண்டு சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எகிப்த்தில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம்

'மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள்'

சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார்.

அவர் 2011-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.

இதன் பிறகு அவர் காஸாவிற்கு திரும்பியதும், உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று கோபி மைக்கேல் கூறுகிறார்.

ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவர் மிகவும் கொடூரமானவர்," என்றும் கோபி மைக்கேல் கூறுகிறார்.

சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி கூறுகிறார்.

2013-ஆம் ஆண்டு, அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-ஆம் ஆண்டு அவர் அதன் தலைவராக ஆனார்.

 
சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹமாஸ் குழுவின் தலைவர்

சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள்.

2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது.

2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு பாலத்தீன மக்களை அவர் ஊக்குவித்தார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது.

சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்விடுவோமோ என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்பி வந்தது.

இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பயங்கரவாதி யஹ்யா சின்வாருக்கு இப்ப அளவற்ற அருளாளனும் நிகரற்ற பண்பாளனுமாகிய அல்லாஹ் 72 கன்னிகைகளையும் இன்னுமொரு அய்ட்டத்தையும் அருளியிருப்பான். கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் கொல்லப்படுவது பயங்கரவாதிகள் தரப்பில் கடும் சோகம்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய இஸ்ரேல்

புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார்.

மேலும் "இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” என்றார் காட்ஸ்.

"சின்வாரைக் கொன்றது பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பைத் திறக்கிறது. இது காஸாவில் ஹமாஸ், மற்றும் இரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று யதார்த்தத்திற்கு வழி வகுக்கும்,” என்றார்.

முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

இது ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Hamas Leader Yahya Sinwar: Israel ஹமாஸ் தலைவரை கொன்றதாக உறுதிப்படுத்தியது - BBC News தமிழ்

‘ஒரு வருடகால தேடுதல்’

இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு வருடகால தேடுதலுக்குப்’ பிறகு நேற்று (அக்டோபர் 16) காஸாவின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டார்’, என்று கூறப்பட்டுள்ளது.

சின்வார் இன்று (அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணம் தெளிவாக இல்லை.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தனது அறிக்கையில், சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகவும், ‘பல இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் கடத்தலுக்குப் பொறுப்பானவர்’ என்றும் கூறுயிருக்கிறது.

"காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில், தரைக்கு மேலேயும் கீழேயும் காஸாவின் பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்த யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்," என்று அது கூறுகிறது.

ஹமாஸின் மூத்த உறுப்பினர்களது சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலைத் தொடர்ந்து தெற்கு காஸாவில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

அப்பகுதியில் இயங்கி வரும் 828-வது படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேலிய வீரர்கள் ‘மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றனர்’ என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வார் என்பதை உறுதிப்படுத்தியது.

Link to comment
Share on other sites

X தளத்தில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் உடலினதும், அருகில் முகம் மறைக்கபட்ட இஸ்ரேல் இராணுவத்தினரதும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

(கொல்லப்பட்டவரின் உடல் சற்று கோரமாக இருப்பதால் என்பதால் அதை அப்படியே யாழில் இணைக்க முடியாது...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே ............

இந்த மனுசன் அவர்களின் நிலக்கீழ் சுரங்கப்பாதை வலையில் பாதுகாப்பாக சுற்றி வந்து கொண்டிருந்தது. ஆழ்கடல் மீன் ஒரு புது மூச்சு விட தண்ணீருக்கு மேல எப்பவாவது வருவது போல ஒரு தடவை வெளியால வந்திருக்கின்றார் போல..............

இனிமேல் இந்த சுரங்கப்பாதைகளை அடித்து நொறுக்குகின்றோம் என்று அப்பாவி மக்களை இஸ்ரேல் கொல்லத் தேவையில்லை......... என்ன பாவம் செய்த சனங்கள் அதுகள்........... இரண்டு பக்கங்களாலும் அடி....😌.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய  தொழில்நுட்ப சக்தியுடன் தேடித் தேடி அழித்து வெற்றிவாகை சூடுகின்றார்கள். இது இனி வரும் காலங்களில் இஸ்ரேலை நிம்மதியாக தூங்க விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் இஸ்ரேலின் மேல் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க தாக்குதலின் சூத்திரதாரி இவர்தான். இத்தாக்குதலின் ஊடாக பலஸ்த்தீன மக்களின் அறப்போராட்டத்தின் மீதான சர்வதேச அனுதாபத்தினை இவர் இழக்கவைத்தார். பலமுறை ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே நடந்துவந்த பணயக் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுக்களில் மிகக்கடுமையாக இவர் நடந்துகொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவரது இழப்பால் ஹமாஸின் போராட்டம் முற்றுப்பெற்றதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பலஸ்த்தீன மக்களின் அவலங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. 

பலஸ்த்தீன மக்களுக்கான சுமூக வாழ்வினை, அவர்கள் தங்கள் வாழிடத்தில் நிம்மதியாக அனுபவிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்பதே தமது ஒரே குறிக்கோள் என்று கருதுவதை ஈரானின் முல்லாக்களும் அதன் கூலிகளும் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவரின் கடைசி நேர வீடியோவைப் பார்த்தேன் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு, காயப்பட்ட நிலையில் ஒரு கதிரையில் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி இஸ்ரேலின் ட்ரோன் ஒன்று செல்கிறது. அதனை நோக்கி அருகில் இருந்த பலகை ஒன்றினை  எடுத்து எறிகிறார், ட்ரோன் விலக்கிக்கொள்கிறது. அடுத்த சில நிமிடங்களில் பூரண இராணுவ உடையில் அவரது சடலம் கீழே கிடக்க அருகில் இஸ்ரேலிய விசேட படைகள் நிற்கின்றனர். இறுதிவரை தன் மக்களுக்காகப் போரிட்டு மடிந்த தலைவர் என்று பலஸ்த்தீனர்கள் இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இவரது உடலை இஸ்ரேல் எடுத்துச் சென்று பல் ஆய்வுகளின் மூலம்  இவர் சின்வார்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

சுமார் 20வருடங்களாக இஸ்ரேலின் சிறையில் இருந்த சின்வார் 2011 ஆம் ஆண்டில் ஹமாஸினால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனின் விடுதலைக்காக இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட 1000 ஹமாஸ் உறுப்பினர்களில் ஒருவராக வெளியில் வந்தவர் . படிப்படியாக ஹமாஸின் தலைமைப்பொறுப்புக்களைப் பெற்ற இவர் முன்னாள் தலைவரின் இறப்பிற்குப் பின்னர் பிரதான தலைமைப்பொறுப்பை எடுத்தவர். சிறையில் இருந்த காலத்தில் மூளையில் வளர்ந்துவந்த கட்டியொன்றினை இஸ்ரேலிய இராணுவ மருத்துவர்கள் அகற்றி இவரைக் காப்பாற்றியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

https://edition.cnn.com/2024/10/17/world/video/sinwar-hamas-leader-killed-final-moments-idf-drone-lead-digvid

Edited by ரஞ்சித்
ஒன்றினை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான்.

எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள்,

ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம்

ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை  இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது.

இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே.

தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்து, கொலை செய்தது எப்படி?

இஸ்ரேல், ஹமாஸ், யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரிமி பேக்கர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 54 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேலிய படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர்.

ஹமாஸ் தலைவரான, 61 வயதான சின்வார், காஸா முனையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைகளில் மெய்க்காப்பாளர்கள் மற்றும் இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தி பெருமளவு காலத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தெற்கு காஸாவில் இஸ்ரேல் படையினர் ரோந்து மேற்கொண்டபோது அவர் கொல்லப்பட்டார். அப்போது குறைவான காப்பாளர்களே அங்கிருந்தனர். அங்கு பணயக் கைதிகள் யாரும் இல்லை.

அவர் கொல்லப்பட்டது குறித்த மேலதிக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சின்வார் கொல்லப்பட்டது குறித்து நாங்கள் இதுவரை அறிந்த தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.

வழக்கமான ரோந்து

கடந்த புதன்கிழமையன்று ரஃபா நகரில் அமைந்துள்ள தல்-அல்-சுல்தான் பகுதியில் 828வது பிஸ்லாமக் (Bislamach) படையணியினர் ரோந்து மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மூவரின் இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் இஸ்ரேல் துருப்புகள் சண்டையிட்டுள்ளன. இதில், அவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.

அந்த நேரம் வரை குறிப்பிடத்தக்க மோதலாக இது கருதப்படவில்லை. மேலும், வியாழக்கிழமை காலை வரை இஸ்ரேலிய படையினர் அந்தப் பகுதிக்கு மீண்டும் செல்லவில்லை.

இந்தச் சண்டையில் இறந்தவர்கள் குறித்து பரிசோதனை செய்யும் போதுதான், அங்கிருந்த ஒரு சடலம், நம்ப முடியாத வகையில் ஹமாஸ் தலைவரின் தோற்றத்தை ஒத்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

திடீர் தாக்குதல் நிகழலாம் என்ற சந்தேகத்தால், அச்சடலம் அங்கேயே விடப்பட்டு, விரல் மட்டும் அகற்றப்பட்டு பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் அப்பகுதி பாதுகாப்பானது எனத் தெரிய வந்ததை அடுத்து, அங்கிருந்து அந்தச் சடலம் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “அவர் (யாஹ்யா சின்வார்) அங்கிருப்பார் என்பது எங்கள் படைகளுக்குத் தெரியாது, ஆனாலும் நாங்கள் தாக்குதலைத் தொடர்ந்தோம்” என்றார்.

அந்தப் பகுதியில் மூன்று நபர்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும், தங்கள் படைகள் அவர்களைக் கண்டறிந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மூவரும் பிரிந்து சென்றதாகவும் கூறினார்.

சின்வார் என அடையாளம் காணப்பட்ட நபர், “தனியாக ஒரு கட்டடத்திற்குள் ஓடினார்” என்றும் ட்ரோன் மூலம் அவரது இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

 
இஸ்ரேல், ஹமாஸ், யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த செப்டம்பர் மாதம், ரஃபாவின் தெருக்களில் ரோந்து சென்றுகொண்டிருந்த இஸ்ரேலிய துருப்புகள்

சின்வார் மனித கேடயமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்பட்ட பணயக் கைதிகள் யாரும் அப்பகுதியில் இல்லை. ஒருவேளை யாரும் அறியாதவண்ணம் அவர் அங்கிருந்து இடம்பெயரும் முயற்சியில் இருந்திருக்கலாம். அல்லது, அவரது பாதுகாப்புக்காக இருந்த வீரர்களில் பலரை அவர் இழந்திருக்கக்கூடும் என்பதையே அவருடன் இருந்த மிகச் சிறிய அளவிலான பாதுகாவலர்கள் குழு உணர்த்துகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறுகையில், “சின்வார் ஓடும்போது அவர் அடித்து, தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவர் ஒரு படைத் தலைவராக இறக்கவில்லை, தன்னுடைய நலனை மட்டுமே சிந்தித்த ஒருவராகவே அவர் இறந்தார். எங்களுடைய அனைத்து எதிரிகளுக்கும் இது ஒரு செய்தி” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சியில், சின்வார் கொல்லப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த கடைசி தருணங்கள் காட்டப்பட்டன.

பெருமளவு அழிக்கப்பட்ட கட்டடத்திற்குள் ட்ரோன் மூலம் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இடிபாடுகள் நிறைந்த கட்டடத்தின் முதல்தளத்தில் தலை மூடப்பட்டு, நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரை நோக்கி அந்த ட்ரோன் செல்கிறது.

காயமடைந்திருப்பதாகத் தோன்றும் அந்த நபர் கம்பு போன்ற ஒரு பொருளை ட்ரோன் மீது வீசியதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் அந்த வீடியோ முடிவடைந்தது.

 

சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல்

இஸ்ரேல், ஹமாஸ், யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸாவில் வியாழக்கிழமை மதிய நேரத்தில் யாஹ்யா சின்வார் உயிரிழந்தாரா என்பதற்கான “சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக” இஸ்ரேல் முதலில் அறிவித்தது.

அந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே, ஹமாஸ் தலைவருடன் ஒத்த அம்சங்களைக் கொண்ட நபரின் சடலம் தொடர்பான படங்கள், சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன. அதில் அந்நபருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்தது. பிரசுரிக்க முடியாத நிலையில் கோரமாக அந்தப் படங்கள் உள்ளன.

இருப்பினும், உயிரிழந்த மூன்று பேரின் அடையாளத்தை “இந்தக் கட்டத்தில்” உறுதிப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறிது நேரத்திலேயே யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக, “தாங்கள் அதிகம் நம்புவதாக” இஸ்ரேல் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். எனினும், அவருடைய இறப்பை உறுதி செய்வதற்கு முன்பாக அனைத்து அவசியமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அதிக நேரமாகவில்லை. வியாழக்கிழமை மாலையே, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சின்வார் “கொல்லப்பட்டதாக” இஸ்ரேல் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “தீயசக்திக்குப் பெரும் அடி” என்றும், “ஆனாலும், காஸாவில் நடைபெற்று வரும் போர் முடிவுறவில்லை” எனவும் எச்சரித்துள்ளார்.

 

இஸ்ரேல் ராணுவம் சின்வாரை சுற்றி வளைத்தது எப்படி?

இஸ்ரேல், ஹமாஸ், யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,IDF

திட்டமிடப்பட்ட தாக்குதலின்போது சின்வார் கொல்லப்படவில்லை என்றாலும், அவர் எங்கிருக்கலாம் என்பது குறித்து உளவுத்துறை தகவல் அளித்த பகுதிகளில் பல வாரங்களாகத் தாங்கள் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் மிகவும் உள்ளே சென்று, அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்து, அப்பகுதிக்கு மெதுவாக முன்னேறியுள்ளனர்.

ஓராண்டுக்கும் மேலாக சின்வார் தலைமறைவாக இருந்தார். முகமது டைஃப், இஸ்மாயில் ஹனியே போன்ற மற்ற ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டது, அக்டோபர் 7 தாக்குதலை மேற்கொள்ள அவர் பயன்படுத்திய கட்டமைப்பை அழித்தது, ஆகியவற்றின் விளைவாக இஸ்ரேலின் அழுத்தத்தை சின்வார் நிச்சயமாக உணர்ந்திருப்பார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு பகுதியில் தங்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் தங்கள் படைகள் “சின்வாரை பின்தொடர்ந்ததால், அவருடைய நகர்வுகள் சுருக்கப்பட்டு, பெரும்பாலும் தடை செய்யப்பட்டது, இதையடுத்து அவர் கொல்லப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

‘இதுவே போரின் முடிவு இல்லை’

இஸ்ரேல், ஹமாஸ், யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்டோபர் 7 தாக்குதல் நடந்தது முதலே, சின்வாரை கொல்வது இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது. ஆனால், அவரது முடிவு மட்டுமே காஸா போரின் முடிவை உறுதி செய்துவிடவில்லை.

நெதன்யாகு, தான் ‘பழிதீர்த்துவிட்டதாக” கூறினாலும், குறைந்தபட்சம் ஹமாஸ் பிடியில் இருக்கும் 101 பணயக் கைதிகளை மீட்கும் வரையிலாவது இந்தப் போர் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“பணயக் கைதிகளின் குடும்பங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். போரில் இதுவொரு முக்கியமான தருணம். நமது அன்புக்குரியவர்கள், அனைவரும் வீட்டிற்குத் திரும்பும் வரை நாங்கள் முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுவோம்,” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

ஆனால், தற்போதைய சூழலில், பணயக் கைதிகளை திருப்பிக் கொண்டுவர ஏதுவான ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்படும் என்று கருதியதாக இஸ்ரேலில் உள்ள பணயக் கைதிகளின் குடும்பங்கள் தெரிவித்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டாலும் இஸ்ரேலிற்கு எதிரான எங்கள் யுத்தம் தொடரும் - பாலஸ்தீனிய மக்கள்

image

யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேலிற்கு எதிரான யுத்தம் தொடரும் என பாலஸ்தீன மக்கள் உறுதி வெளியிட்டுள்ளனர்.

அழிவடைந்த யுத்தத்தினால் சிதையுண்டுபோயுள்ள கான் யூனிசில் உள்ள பாலஸ்தீனியர்கள் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ள போதிலும் யுத்தம் தொடரும் என உறுதியாக தெரிவிக்கின்றனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி சுயாதீன செய்தியாளர்களை பயன்படுத்தி பாலஸ்தீனியர்களின் கருத்தினை பெற்றுள்ளது( இஸ்ரேல் பிபிசியை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிப்பதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.)

இந்த யுத்தம் யாஹ்யா சின்வரையோ அல்லது வேறு எவரையுமோ நம்பியிருக்கவில்லை எந்த தலைவர் அல்லது அதிகாரி மீது நம்பிக்கையை வைத்து இந்த யுத்தத்தை பாலஸ்தீனிய மக்கள் முன்னெடுக்கவில்லை என வைத்தியர் ரமடான் பாரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இது பாலஸ்தீன மக்களிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழிப்பு போர், பிரச்சினை என்பது யஹ்யா சின்வரை விட மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் எங்களை மாத்திரம் அழிக்கவிரும்பவில்லை, அவர் முழு மத்திய கிழக்கையும் அழிக்க விரும்புகின்றனர். அவர்கள் லெபனானில், சிரியாவில், யேமனில் போரிடுகின்றனர் என அட்னன் அசூர் என்பவர்  தெரிவித்துள்ளார்.

எங்களிற்கும் யூதர்களிற்கும் இடையிலான யுத்தம் 100 வருடங்களிற்கு மேல் 1919ம் ஆண்டிலிருந்து இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சின்வரின் மரணம் ஹமாசிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு நான் அப்படி நினைக்கவில்லை ஹமாஸ் என்பது சின்வரில்லை அது மக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196595

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் கட்டமைத்த "பயங்கரவாத அச்சு சரிகிறது” - ஹமாஸ் தலைவர் கொலை குறித்து இஸ்ரேல் பிரதமர்

image

ஈரான் கட்டமைத்த 'பயங்கரவாத அச்சு சரிகிறது’ என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.

கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள வீடியோ செய்தியில், “ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது. ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மோஷன், ஏற்கெனவே இஸ்மாயில் ஹனியாவும் கொல்லப்பட்டார். ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃபை வீழ்த்தினொம். ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் மக்கள் மீது செலுத்தும் பயங்கரவாதத்தின் படியும் முழுமையாக விரைவில் முடிவுக்கு வரும். ஈரான் தலைமையிலான தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்த மாறுபட்ட எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதன் மூலம் இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம். மிகப் பெரிய யூத இனப் படுகொலைக்குப் பின்னர் எங்கள் மக்களின் மீது மோசமாக தாக்குதலை நடத்தியவரின் கணக்கைத் தீர்த்துள்ளோம்.

இருப்பினும் ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை. கடினமான நாட்கள் இன்னும் இருக்கின்றன. இறுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்று கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/196565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டாலும் இஸ்ரேலிற்கு எதிரான எங்கள் யுத்தம் தொடரும் - பாலஸ்தீனிய மக்கள்

இவர்கள் பயங்கரவாதத்தை விட்டு விலகவேண்டும். இல்லாவிட்டால் தேடித்தேடி வேட்டையாடப்படுவார்கள். பயங்கரவாதத்துக்கெதிரான சரியான தடுப்பூசி இஸ்ரேலிடம் இருக்கிறது என்பதனை இப்பயங்கரவாதிகள் உணரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடியாது என்பது இரு தரப்பிற்கும் தெரியும், பார்வையாளர்களுக்கும் தெரியும்.

இஸ்ரேலியரால் கொல்லப் பட்டது 42000 பலஸ்தீனிய மக்கள், அதில் 3 இல் ஒருவர் குழந்தை- இந்தக் குழந்தைகளின் இளம் பெற்றோர், அல்லது சகோதரங்கள் இஸ்ரேலை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை அடுத்த  30 -40 ஆண்டுகளுக்கு. எனவே, யுத்தம் முடியாது.

இதில் ஹமாஸ் போன்ற வன்முறை மட்டுமே வழி என்று நினைக்கும் அமைப்புகளும் ஆச்சரியம் தருகின்றன: "தங்கள் தலை போனாலும் பரவாயில்லை, இஸ்ரேலுக்குக் கீறல் விழுந்தால் போதும்" என்ற மனநிலை, உண்மையில் என்ன மாதிரியான மனப் பாங்கென்று விளங்கவில்லை. இனி இவர் தான் அடுத்த தலைவராக வரக்கூடும் என்று யாரும் சும்மா ஊகித்தாலே அவர்களைத் தூக்கி விடுவார்கள் போல இருக்கு!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம் மற்றும் அறிவியலில் அவர்கள் தான். அதுவே வெற்றிக்கு ஒரே வழி. இதை தமிழர்கள் உண்ணும். தொடரணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய பலஸ்தீன் அழிவுகளும் அதன் தலைவர்களின் அழிப்புகளையும் பார்க்கும் போது எனக்கு முள்ளிவாய்க்கால் அழிவுகளின் ஞாபகம் தான் வந்து தொலைத்தது.

என்னைப்பொறுத்த வரைக்கும் பலஸ்தீனத்திற்கான ஆதரவுகளும் பக்க பலங்களும் என்றுமே அழியாது.அதை இஸ்ரேலால் அழிக்க முடியாது.

உலகில் இனிவரும் காலங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நாடு இஸ்ரேல் என பெயர்  எடுத்தாலும் எடுக்கலாம்.😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

இவர்கள் பயங்கரவாதத்தை விட்டு விலகவேண்டும். இல்லாவிட்டால் தேடித்தேடி வேட்டையாடப்படுவார்கள். பயங்கரவாதத்துக்கெதிரான சரியான தடுப்பூசி இஸ்ரேலிடம் இருக்கிறது என்பதனை இப்பயங்கரவாதிகள் உணரவேண்டும்.

விடுதலைப்புலிகள் மீது சர்வதேசம் கொண்டு வந்த தடையை நியாயப்படுத்தும் இன்னொரு கருத்து.☝ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் மீது சர்வதேசம் கொண்டு வந்த தடையை நியாயப்படுத்தும் இன்னொரு கருத்து.☝ 

இப்படியான மடைமாற்றும் பதிவுகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை இடையில் வந்து செருகி தம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் ****** பதிவு இது!  மடைமாற்றிவிட்டால் பிறகென்ன பட்டாசு குழு காட்சில ஒரே அடைமழை தான்.

புலிகள் இன்னொரு இனத்தின் தாயக நிலப்பரப்பை தமது தாயகம் என்று சொல்லிப் போராடவில்லை. புலிகள் சிங்கள தேசமொன்று உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று போராடவில்லை. புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்ததில்லை புலிகள் சிங்கள மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்துவது இல்லை (ஒருசில தவறுகள் நடந்தது என்பது உண்மை ஆனால் தாக்குதலின் நோக்கம் சிங்கள மக்களைக் கொல்வது அல்ல. வேறு சில இலக்குகள் தாக்கப்படும்போது மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்).

இங்கு இவையனைத்தையும் செய்யும் ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை  புலிகள் இயக்கத்துக்கு ஒப்பாக நினைத்து கருத்தெழுதுவது என்பது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்ற கதைதான். அதாவது இவர்கள் தத்தமது மனக்களுக்குள் புலிகளை பயங்கரவாதிகளாகவே உருவகப்படுத்திக்கொண்டுள்ளனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் மீது சர்வதேசம் கொண்டு வந்த தடையை நியாயப்படுத்தும் இன்னொரு கருத்து.☝ 

அண்ணை,

நான் வாலிக்குச் சார்பாகக் கதைக்கிறேன் என்று எண்ணவேண்டாம். ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டிய அவரது கருத்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை மட்டுமே குறிக்கிறது என்பது எனது தாழ்மையான எண்ணம். இஸ்ரேலுக்கெதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை ஹமாஸ் நிறுத்தவேண்டும். ஏனென்றால், அது இன்னும் இன்னும் பல்லாயிரக்கணக்கான பலஸ்த்தீனர்களின் படுகொலைகளில்த்தான் சென்று முடியப்போகிறது. அடுத்தது, ஹமாஸிற்கோ அல்லது ஹிஸ்புல்லாவிற்கோ தலைமையேற்க எவர் வந்தாலும் அவர்களை இஸ்ரேல் கொல்லும், இதுதான் நடக்கிறது, அதைத்தான் வாலியும் குறிப்பிடுகிறார். 

முன்னொருமுறை இதே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் தொடர்பான கருத்தில் ஹமாஸ் குறித்த அவரது கருத்தொன்றிற்கு நானும் புலிகளை இணைத்து எழுதினேன். அதற்கு அவர் தந்த விளக்கம் எனக்குச் சரியாகப் பட்டது. இன்று நடந்திருப்பதும் அதுதான்.

இனத்தின் விடுதலைக்காகவும், இருப்பைத் தக்கவைக்கவும் போராடும் புலிகளையும், இஸ்ரேலை அழிப்பதற்காகவே செயற்படும் ஹமாஸையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது தவறென்பதே அவரது வாதம். அது எனக்குச் சரியாகவே தெரிகிறது.

பலஸ்த்தீன மக்களினதும் ஈழத்தமிழினத்தினதும் அவலங்கள் ஏறக்குறைய ஒரேமாதிரியானவை. ஆனால் ஹமாஸும் புலிகளும் ஒன்றல்ல. 

உங்களை ஆத்திரப்பட வைக்க எழுதவில்லை. மனதில் பட்டதை எழுதினேன், அவ்வளவுதான். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாலி said:

இப்படியான மடைமாற்றும் பதிவுகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை இடையில் வந்து செருகி தம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் ****** பதிவு இது!  மடைமாற்றிவிட்டால் பிறகென்ன பட்டாசு குழு காட்சில ஒரே அடைமழை தான்.

என் கருத்து வலிமைக்காக  விடுதலைப்புலிகளை இடையில் கொண்டு வந்து செருகவில்லை. எமக்கு எந்தளவிற்கு புலிகளைப்பற்றிய விசுவாசமும் உண்மையும் தெரிகின்றதோ அதே போல் அந்தந்த பலஸ்தீன விசுவாச மக்களுக்கும் கமாஸ் பெரிதாக தெரிகின்றார்கள்.உயிரையும் கொடுக்கின்றார்கள்.எங்களுக்கு விடுதலைப்புலிகள் எவ்வளவு பெரிதோ அவர்களுக்கு கமாஸ்.

40 minutes ago, வாலி said:

புலிகள் இன்னொரு இனத்தின் தாயக நிலப்பரப்பை தமது தாயகம் என்று சொல்லிப் போராடவில்லை. புலிகள் சிங்கள தேசமொன்று உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று போராடவில்லை. புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்ததில்லை புலிகள் சிங்கள மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்துவது இல்லை (ஒருசில தவறுகள் நடந்தது என்பது உண்மை ஆனால் தாக்குதலின் நோக்கம் சிங்கள மக்களைக் கொல்வது அல்ல. வேறு சில இலக்குகள் தாக்கப்படும்போது மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்).

இவ்வளவு இருந்தும் என்ன பலன்?

41 minutes ago, வாலி said:

இங்கு இவையனைத்தையும் செய்யும் ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை  புலிகள் இயக்கத்துக்கு ஒப்பாக நினைத்து கருத்தெழுதுவது என்பது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்ற கதைதான். அதாவது இவர்கள் தத்தமது மனக்களுக்குள் புலிகளை பயங்கரவாதிகளாகவே உருவகப்படுத்திக்கொண்டுள்ளனர்.

கமாஸ் இயக்கத்திற்கு நிகராகவே விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேச தடை இருக்கின்றது. இதைப்பற்றி  ஏதாவது சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவர் சின்வாரின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டே கொல்லப்பட்டிருக்கிறார் என்று அவரது சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனை செய்த இஸ்ரேலிய மருத்துவர் கூறியிருக்கிறார். இது சின்வார் தாங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் முதலில் கூறியதற்கு முரணானதாகும். 

ஆரம்பத்தில் அவர் இருந்த கட்டடப் பகுதியிலிருந்து இஸ்ரேலியத் தாங்கி அணி ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பதிற்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலியர்கள் அக்கட்டடத்தை நோக்கித் தாங்கியால் சுட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இஸ்ரேலிய ட்ரோன் ஒன்று ஒரு கை துண்டிக்கப்பட்டு, கால்கள் நடக்கமுடியாதளவிற்கு செயலிழந்துபோய், உடலில் பல குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருக்க அரை மயக்க நிலையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்த சின்வாரைக் கண்டது. தனது இடது கையினால் பலகையொன்றினை எடுத்து ட்ரோன் நோக்கி சின்வார் எறிய முற்படுகிறார். ஆனால், அதன் பின்னரான ஒளிப்ப‌டத்தில் சின்வாரின் இறந்த உடல் கீழே கிடக்க, சுற்றியும் இஸ்ரேலிய வீரர்கள் நிற்கிறார்கள். 

இந்த இடைவேளையில் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொன்றோ அல்லது அருகிலிருந்து அவரைச் சுட்டுக் கொன்றோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

சின்வார் கொல்லப்பட்டாலும் போர் தொடரும் என்று அறிவித்திருக்கும் ஹமாஸ், இஸ்ரேல் இராணுவம் காசாவிலிருந்து முற்றாக வெளியேறி, யுத்தத்தை நிறுத்தி, பலஸ்த்தீனக் கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. அதேவேளை ஹமாஸினால் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 101 பணயக் கைதிகளான இஸ்ரேலியர்களை விடுவிக்கும்வரை தனது இராணுவ நடவடிக்கையினை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

தற்போது சின்வாரின் உடலை வைத்து கைதிகள் பரிமாற்றம் என்று ஒன்று நடைபெறலாம் என்று பேசப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

பலஸ்த்தீன மக்களினதும் ஈழத்தமிழினத்தினதும் அவலங்கள் ஏறக்குறைய ஒரேமாதிரியானவை. ஆனால் ஹமாஸும் புலிகளும் ஒன்றல்ல. 

வணக்கம் ரஞ்சித்!
இஸ்ரேல் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் பலஸ்தீன் குடியிருப்புகளில் செய்யும் அட்டூளியங்கள் எல்லாம் சரியென சொல்ல வருகின்றீர்களா?
ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்க முதலே இஸ்ரேல் பலஸ்தீனிய மண்ணில் செய்த அஜாரகங்கள் உங்களுக்கு நினைவில்லையா? அல்லது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என சொல்லப்போகின்றீர்களா?

இதுவொன்றும் கோபதாபங்களில்லை..
விவாதங்கள் மட்டுமே. 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இஸ்ரேல் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் பலஸ்தீன் குடியிருப்புகளில் செய்யும் அட்டூளியங்கள் எல்லாம் சரியென சொல்ல வருகின்றீர்களா?
ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்க முதலே இஸ்ரேல் பலஸ்தீனிய மண்ணில் செய்த அஜாரகங்கள் உங்களுக்கு நினைவில்லையா? அல்லது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என சொல்லப்போகின்றீர்களா?

இல்லை அண்ணை, இதெல்லாமே நடந்தது. இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஈஸ்ரேல் நடத்துவது ஆக்கிரமிப்பு யுத்தம்தான். ஈழத்தமிழர் மீது அவ்வாறான ஆக்கிரமிப்பொன்றினை நடத்தலாம் என்று ஜெயவர்த்தனா, காமிணிக்குச் சொல்லிக் கொடுத்ததே இஸ்ரேலிய மொஸாட்டுக்கள் தான். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்த்தீனர்களை விரட்டியடித்துவிட்டு இஸ்ரேலியர்களைக் குடியேற்றி ஆயுதமயப்படுத்தியதைத்தான் இலங்கையிலும் தமிழர் தாயகத்தில் மொஸாட்டுக்கள் செய்வித்தார்கள். ஆக, ஈழத்தமிழரின் அவலங்கள் ஆரம்பிக்கப்படு முன்னமே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் ஆரம்பித்து விட்டன. 

நான் சொல்ல வந்தது ஹமாஸும் புலிகளும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்கள் என்பதைத்தான்.

இவ்விரு அமைப்புக்கள் மீதான சர்வதேசத் தடை என்பது தடை விதிக்கும் நாடுகளின் நலன்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. மாறாக இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் சரியானவையா தவறானவையா எனும் அடிப்படையில் அல்ல. 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.