Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!

1600408504.jpg

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியினால் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 15க்கு குறையாமல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டணி இவ்விரு மாகாணங்களிலும் மொத்தமாக 6 - 8 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்ப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதாகவும், இம்முறை தேர்தலில் தமது கட்சி 10க்கு குறையாத ஆசனங்களைப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துவருகின்றன. 

அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு மற்று கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களில் இருந்தும் நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய கட்சியாக தமிழ் அரசுக் கட்சி இருப்பதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தம்மால் 15க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளடங்கலாக ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களின்போது பெரும்பாலும் 'ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தைக் களவெடுத்துவிட்டது' என்ற விடயத்தையே கூறிவருவதாகவும், இது அக்கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்டு அச்சமடைந்திருப்பதையே காண்பிப்பதாகவும் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார். (ச)

https://newuthayan.com/article/வடக்கு_-_கிழக்கில்_15ஆசனங்கள்_உறுதி-_சுமந்திரன்_தெரிவிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂
“ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣

நீங்கள் செய்யிற வேலைக்கு...  15  செருப்படிதான் கிடைக்கும்.  வாங்க ரெடியாய் இருங்கோ. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கனவு தானே மொத்தமும்  என்றும் காணலாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த தமிழ் அரசியல்வாதிகளின்ர சேட்டையளை பாக்க தலை வெடிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு  பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய அனைத்து தீவிர தமிழர தேசியவாதிகளுக்கிடையில் கடும் போட்டி.

 தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் கோஷ்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க இவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று பார்ததால் புலம் பெயர் தேசிய  வியாபாரம. செய்யும் கும்பலும் தமது விசுவாசிகளை ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.

தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை. 

ஒபாமா செய்தது போல முழுநீள பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் காட்டினாலும் நம்ப மாட்டியளோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

கனவு தானே மொத்தமும்  என்றும் காணலாம்....

விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ....
சுமந்திரன்  பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, animiertes-gefuehl-smilies-bild-0415.gif
இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

ஒபாமா செய்தது போல முழுநீள பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் காட்டினாலும் நம்ப மாட்டியளோ? 😂

வாய் காட்டிக்கொடுத்து விடுமே? (ஊருக்கு ஒரு தமிழ் இருப்பதும் நல்லதுக்கு தானே?🤣)

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

வாய் காட்டிக்கொடுத்து விடுமே? (ஊருக்கு ஒரு தமிழ் இருப்பதும் நல்லதுக்கு தானே?🤣)

யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ் என்று காட்டிக் கொடுத்து விடும் என்கிறீர்கள், அப்படியா?

அப்ப இந்த "தமிழ் தேசியம்" என்று நீங்கள் தலையில் தூக்கித் திரியும் "விக்கிரகம்" இதில் எந்த "தமிழ் வழக்கிற்குரியது"?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ் என்று காட்டிக் கொடுத்து விடும் என்கிறீர்கள், அப்படியா?

அப்ப இந்த "தமிழ் தேசியம்" என்று நீங்கள் தலையில் தூக்கித் திரியும் "விக்கிரகம்" இதில் எந்த "தமிழ் வழக்கிற்குரியது"?

அது உயிர். இது காது மூக்கு தொண்டை....????

அது உங்கள் கேள்விகளுக்கு சிரிக்க எழுதியது. அதையும் தூக்கி.....???😭

  • கருத்துக்கள உறவுகள்

cats.jpg

யார் தருவார் இந்த 15 ஆசனம்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துவருகின்றன. 

large.IMG_7251.jpeg.64a6142de2aa954df010

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

வடக்கு மற்று கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களில் இருந்தும் நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய கட்சியாக தமிழ் அரசுக் கட்சி இருப்பதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தம்மால் 15க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை இடைத்தேர்தலை மனதில் வைத்துச்சொல்கிறார்போல் உள்ளது. யாரறிவார் எல்லாம் 14.11க்குப் பிறகே வெளிச்சம். ஆனால், யாருக்கு வெளிச்சம் என்பதே இங்கு அவதானத்திற்குரியதாகும். தமிழினம் எந்தச் சூழலிலும் மிகச்சிறிய தொகையினர் ஒரு தடுமாற்றநிலைகொண்டு எடுக்கும் முடிவுகளைத் தவிர  உரிமைகளின் முன் சலுகைகளை நோக்கிய ஓடியதாக இல்லை. மக்கள் இந்தத் தேர்தலில் எத்தனை பேரை வீட்டினுள்(தஅக கட்சியின் சின்னத்தையல்ல) இருத்தப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

இந்தத் தேர்தலுடன் டமில் அரசியல்வியாதிகள் பாடம் படிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை. 

மண்டையில போட்டு முடிஞ்சு, இப்ப விளக்கு பிடிக்கிறம்....🙁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

cats.jpg

யார் தருவார் இந்த 15 ஆசனம்?

ஐயோ...... பயமுறுத்துகிறியள். மஹிந்த, இப்படியொரு பதாகை வைத்தார் பாருங்கோ.... கண்ணூறு பட்ட மாதிரி  அதோடு முடிவாகிப்போனது அவரது அரசியல் கனவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஐயோ...... பயமுறுத்துகிறியள். மஹிந்த, இப்படியொரு பதாகை வைத்தார் பாருங்கோ.... கண்ணூறு பட்ட மாதிரி  அதோடு முடிவாகிப்போனது அவரது அரசியல் கனவு.

அதாலதான் நான் இவருக்கு இப்படி ஒரு பதாதை உருவாக்கினேன் இப்படியாச்சும் இந்த ஈழத்து கருணாநிதி எங்கையெண்டாலும்  ஓடி போகட்டுமெண்டு

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் தேசியத்துக்கெதிரான கருத்துக்களை ஒரு பக்கம் எடுத்து வைத்துவிட்டு இதனைப் பார்க்கலாமே. சுமந்திரன் கூறுவதுபோல 15 ஆசனங்களை அவரது கட்சி கைப்பற்றுமாக இருந்தால் நல்லது என்பதே எனது எண்ணம். தெற்கைச் சாராத, தமிழர் தாயகத்தை தளமாகக் கொண்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்வது தமிழரைப் பொறுத்தவர் நல்ல விடயமே. அதனால் எவர் தாயகத்தை அடிப்படையாக வைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் எனது ஆதரவு அவர்களுக்கே. ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். 
தமிழர்களின்  அரசியல் நலன் தொடர்பாக உண்மையான அக்கறையும், அதுகுறித்து செயற்படும் துணிவும் இருந்தால் சுமந்திரனுக்கு வாக்களிக்கலாம். அதைச் சுமந்திரன் உறுதிப்படுத்த வேண்டும். செய்வாரா? 

என்னைப்பொறுத்தவரை சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி நமது தாயகத்தில் காலூன்றுவதைக் காட்டிலும் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான வேறு எவருமோ தேர்தலில் வெல்வது மேலானது. பொதுவேட்பாளர் விடயத்தில் நான் இதே நோக்கத்திற்காகத்தான் அவர்களை ஆதரித்தேன், எமது தாயகத்தில் அவருக்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த முயற்சியை எல்லோருமாகச் சேர்ந்து இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை.

வாழ்த்துக்கள் சுமந்திரன், முயன்று பாருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அதாலதான் நான் இவருக்கு இப்படி ஒரு பதாதை உருவாக்கினேன் இப்படியாச்சும் இந்த ஈழத்து கருணாநிதி எங்கையெண்டாலும்  ஓடி போகட்டுமெண்டு

நீங்கள் விரட்டினாலும் அவருக்கு இருக்கவே இருக்கிறது வீடு, ஓடிப்போய்  பாதுகாப்பாக  ஒழிப்பதற்கு.   

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரஞ்சித் said:

ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். 

சுட்டுப்போட்டாலும் நம்ம அரசியவாதிகளுக்கு அது எட்டாப்பொருத்தம். அவர்கள் அதைப்பற்றி சிந்தித்திருந்தால்; வடக்கில் இவ்வளவு கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லையே. நாளைக்கு சீனன் போட்டியிட்டாலும்வியப்பில்லை. அபிவிருத்தியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் அது மக்களுக்கானதல்ல. அதனாலேயே  மக்களிடம் வரும்போது சிலருக்கு சிங்கள புலனாய்வு பாதுகாப்பளிக்கிறது. தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவை, பொதுமக்கள் சுமந்திரன்  சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டம் நேர்த்தியாக போய்க்கொண்டிருந்தது சுமந்திரன் பேசும்வரை. அதன் பின், ஒரு பொதுமகன் எழும்பி சுமந்திரனிடம் கேள்வி கேட்டார் பாருங்கள், வந்ததே வந்தது சுமந்திரனுக்கு கெட்ட கோபம்., உடனே, "இங்கே இருப்பதென்றால்; வாயை மூடிக்கொண்டு இருக்கவும், இல்லையேல்; வெளியேற்றப்படுவீர்கள்." என்று எச்சரித்தார். இராணுவமோ புலனாய்வோ என்னவோ ஒன்று இதற்காகத்தான் இவர் பின்னால் திரிகிறதோ என்னவோ? "ஊமையர்  சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி."

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை. 

தமிழர்கள் அல்லாதர்கள் பலர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

தமிழர்கள் அல்லாதர்கள் பலர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்....

அவர்கள் எம்மை கேலி செய்வதில்லையே. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.