Jump to content

இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இரான்

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
  • எழுதியவர், ரோசா அசாத்
  • பதவி, பிபிசி பாரசீகம்

இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்துள்ளது. டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் பிளாக் 1 பகுதியில் இது நிகழ்ந்துள்ளது.

பிபிசியைப் பொருத்தவரை, இந்த சம்பவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. சமூக ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்களில் இளம்பெண் உள்ளாடை அணிந்தபடி அலட்சியமாக வளாகத்தில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

வைரலான வீடியோ

இரான் மாணவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் இரான் மாணவி குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், உள்ளாடை அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். பல்கலைக் கழகத்தின் ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த உரையாடலின் ஆடியோ வீடியோவில் கேட்கவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த வீடியோ எங்கோ தொலைவில் உள்ள வகுப்பறை ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு வீடியோவில், இந்த பெண் பல்கலைக் கழக வளாகத்தின் பிளாக் ஒன்றின் அருகே சாலையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது.

அந்தப் பெண் திடீரென தனது ஆடைகளை களைகிறார். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் எதிர்வினையும் இதை உறுதிப்படுத்துகிறது. சிறிது நேரத்தில் பல போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு கார் சம்பவ இடத்திற்கு வந்தது.

காரில் இருந்து இறங்கிய பல அதிகாரிகள் அந்தப் பெண்ணை காருக்குள் ஏற்றிச் செல்வதை வீடியோவை காண முடிகிறது.

 

சமூக ஊடகங்களில் எதிர்வினை

இரானுக்கு வெளியே பல ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இதனை, "அந்தப் பெண் தனது ஆடைகளை களைவதன் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்” என்று விவரித்தன.

ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கும், பல்கலைக் கழக பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தைக்கும் எதிரான எதிர்வினையாக அந்தப் பெண் இப்படி செய்ததாக விவரிக்கப்படுகிறது.

இதுதொடர்பான பல செய்திகள் 'அமிர் கபீர் நியூஸ் லெட்டர்' என்னும் டெலிகிராம் சேனலில் வெளியாகியுள்ளன.

'அமிர் கபீர் நியூஸ்' கூற்றின்படி, “ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரால் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. அதனால் கோபமடைந்த அந்தப் பெண் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி தன் எதிர்ப்பை பதிவு செய்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

பிபிசி பாரசீகத்திற்கு பதிலளித்த `அமீர் கபீர் நியூஸ்’, தகவலறிந்த சிலரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த செய்திகளை வெளியிட்டதாகக் கூறியது.

 
இரான் மாணவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

நேரில் பார்த்தவர்களின் கருத்து என்ன?

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் பிபிசி பாரசீகத்திடம் அது குறித்து விவரித்தனர்.

பிபிசி பாரசீகத்திடம் அவர்கள் கூறுகையில், "அந்தப் பெண் தனது கையில் மொபைல் போனுடன் பல வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்” என்றனர்.

அவர்கள் கூற்றுபடி, அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்ததால் கோபமடைந்த பேராசிரியர் ஒருவர், அவர் என்ன செய்கிறார் என்பதை கேட்க ஒரு மாணவியை அவருக்குப் பின்னே அனுப்பினார். அதன் பின்னர் அந்தப் பெண் சத்தம் போட ஆரம்பித்தார்.

பல்கலைக் கழக வளாகத்தின் சாலையில் அந்தப் பெண் தனது ஆடைகளைக் களைந்திருப்பதை கண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சாட்சிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை.

அதேசமயம் பிபிசியிடம் பேசிய இரு சாட்சிகளும் அந்தப் பெண் வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த பின்னர் தான் கவனித்துள்ளனர். அவர் வகுப்பறைக்குள் வருவதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

அந்தப் பெண், வகுப்பறை இருந்த கட்டடத்தை விட்டு வெளியேறி ஆடைகளை களைவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது சாட்சிகளுக்கு தெரியாதா?

அந்தப் பெண் தன் ஆடைகளை களைந்த பிறகே இந்த இரண்டு சாட்சிகளும் அங்கு சென்றுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம், "உங்களை காப்பாற்ற வந்தேன்" என்று கூறியுள்ளார்.

இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒரு சமூக ஊடகப் பயனர், எக்ஸ் பக்கத்தில், "நான் உன்னைக் காப்பாற்ற வந்தேன்" என்று இந்தப் பெண் கூறியதாகப் பதிவிட்டிருக்கிறார்.

பல்கலைக் கழகம் கூறுவது என்ன?

இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அமீர் மஹ்ஜூப், ஒரு சமூக ஊடகப் பதிவில், அந்தப் பெண்ணை ஒரு பல்கலைக்கழக மாணவி என்று குறிப்பிட்டார். அவருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை என்று அவர் கூறினார்.

"மனம் சார்ந்த பிரச்னை காரணமாக, அந்தப் பெண் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடியோ எடுக்கத் தொடங்கினார், அதற்காக அவர் கண்டிக்கப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது." என்பது அமீர் மஹ்ஜூப்பின் கூற்று.

"மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் சாலையை நோக்கி ஓடிவந்து, இவ்வாறு செய்தார்” என்று அவர் கூறினார்.

இந்தப் ‘பெண்’ மாணவர்களை வீடியோ எடுத்த போது, அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு பதிலடியாக அவர் தனது ஆடைகளை கழற்றி வீசியதாகவும் ISNA உள்ளிட்ட இரானிய ஊடகங்கள் கூறியுள்ளன.

"மாணவி கடுமையான மன உளைச்சல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்" என பல்கலைக் கழகத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 
இரான் மாணவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மாணவியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை

இந்த மாணவி கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்வினை ஆற்றியுள்ளது.

"இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் ஹிஜாப் அணியாததற்காக தவறாக நடத்தப்பட்டு, நவம்பர் 2-ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட மாணவியை நிபந்தனையின்றி இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்வீட் செய்துள்ளது.

"பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் காவலில் இருக்கும் சமயத்தில் அவருக்கு எதிராக வன்முறையோ அல்லது பாலியல் தொந்தரவோ நடந்தால் அந்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும்" என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இந்த சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்." என்று குறிப்பிட்டார்.

 

ஹிஜாபிற்கு எதிரான போராட்டமா?

இரான் மாணவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

பல்கலைக் கழக மாணவி என்ன செய்தார் என்பது பற்றி பல்வேறு கதைகள் மற்றும் கூற்றுகள் பரவி வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் பற்றி தெரியவில்லை என்றாலும், கிடைக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த பெண்ணைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.

பல பயனர்கள் பெண்ணின் இந்த செயலை ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதற்கான எதிர்ப்பு மற்றும் பல்கலைக் கழக பாதுகாப்புப் படையினரின் கடுமையான அணுகுமுறைக்கு எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்தகைய கூற்றுகளை முன்வைப்பவர்களில் மரியம் கியானார்த்தி என்ற வழக்கறிஞரும் ஒருவர், "இந்த மாணவர்களின் கிளர்ச்சி, மாணவியர் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கடுமையான மற்றும் நியாயமற்ற அழுத்தத்தின் எதிர்ப்பு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்காக கட்டணம் வாங்காமல் வழக்கை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஹிஜாப் அணிய வேண்டிய அழுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடத்தை காரணமாக மாணவி தனது ஆடைகளை களைந்ததாக நம்பும் சமூக ஊடகப் பயனர்கள் அவரின் செயலை "துணிச்சல்" என்று அழைக்கின்றனர்.

அந்தப் பெண் பீதி மற்றும் அழுத்தத்தால் மட்டுமே இதைச் செய்ததாகவும், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட போராட்டம் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இருப்பினும், இரானிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் "பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்" (Women, Life, Freedom) இயக்கத்தின் எதிர்ப்பாளர்கள் பலரும், அந்த இயக்கத்தினர் ஆடைகள் இன்றி போராடவும் தயாராக உள்ளனர் என்ற அவர்களின் கூற்றை இந்தப் பெண்ணின் செயல் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

இந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை வழங்கவும் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவளிக்கவும் முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

b8ba34f0-99eb-11ef-9260-19e6a950e830.png

animiertes-brillen-bild-0020.gif

படம்... "கிளியர்" இல்லாமல் இருப்பது எனக்கு மட்டும் தானா? 😂
அல்லது உங்களுக்குமா? 🤣

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

படம்... "கிளியர்" இல்லாமல் இருப்பது எனக்கு மட்டும் தானா? 😂
அல்லது உங்களுக்குமா? 🤣

யேர்மன் மொழியில் செய்தியை கேட்க, பார்க்க விரும்பினால்,

https://www1.wdr.de/nachrichten/iran-protest-unterwasche-festnahme-100.html

செய்தியின் சுருக்கம்,

ஈரானில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பல்கலைக்கழக மாணவி தன் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழக முன் வளாகத்தில் வெளியார் முன்பாக நடமாடினாள்.

ஈரானிய இஸ்லாமிய அரசில், பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடு இருக்கின்றது என்பது உலகம் அறிந்த விடயம்தான். ஆனாலும் அவ்வப்போது தெஹ்ரான் போன்ற பெருநகரங்களில், இளம் சமுதாயத்தினர்முக்காடு அணிய வேண்டும்என்ற அரசின் கொள்கையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மஹ்சா அமினி  என்ற பெண் முக்காடு விடயத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போய் சித்திரவதையின் விளைவாக இறந்தார். ஈரானில், ஆடைக் கட்டுப்பாடுகளை பெண்கள் மீறினால் சித்திரவதைகளை,வன்முறைகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு மஹ்சா அமினி ஒரு சாட்சி.

ஈரானில், தனியார் பல்கலைக்கழகமான ஆசாத் பல்கலைக்கழகத்தின் ( Asad-University) நிர்வாகிகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் கட்டாயம் மொட்டாக்கு அணிய வேண்டும் என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின் கோபம் கொண்ட ஒரு மாணவி எதிர்ப்பைக் காட்டுவதற்காக தனது ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக் கழகத்துக்கு முன்பாகக் காட்சி தந்தார் என மனித உரிமை அமைப்பான ஹெங்கா (Hengaw )தெரிவித்திருக்கிறது.

பல்கலைக் கழக நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள். இப்பொழுது அந்தப் பெண் ஒரு மனநோயாளி எனவும்  அவள்மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

ஈரான் ஜனாதிபதி Massoud Peseschkian தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மீதான ஆடைக் கட்டுபாடுகள் பற்றிய பிரச்சினையை தீர்க்கப் போவதாக உறுதியளித்திருந்தார். புதிய ஜனாதிபதியாக இருந்தாலும் அவரும் பழமைவாத-மிதவாத ஜனாதிபதிதான்

இங்கே யார் மனநோயாளி என்பதில் ஒரு குழப்பம் வருகிறதல்லவா?

 

Edited by Kavi arunasalam
  • Like 2
Link to comment
Share on other sites

ஈரான் தரப்பு வாதத்தை நம்ப முடியாது.

இந்தப் பெண் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காத் துன்புறுத்தப்பட்டதால் அதனை எதிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருந்தால் பாராட்டாமல் இருக்க முடியது. இவர் ஈரானிய பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தனது உடலை ஆயுதமாகக் காட்டியுள்ளார். 

கைது செய்யப்பட்ட இப் பெண்ணை மனநல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டாலும் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

iran.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

கைது செய்யப்பட்ட இப் பெண்ணை மனநல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டாலும் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

அந்த மாணவி ஹிஜாப் அணியவில்லை என்பதற்காகவே  கொல்லபட்டிருப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக அனைத்து சமூக அடக்குமுறைகளுகும் மதத்தினை ஒரு கருவியாக அனைத்து மதங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது, ஏனென்றால் அதனை கேள்விக்குள்ளாக்க முடியாது, மதங்களின் அடிப்படையே அச்சத்தினடிப்படை (சாமி கண்ணை குத்தும்) ஆகும்.

எமது இந்து சமயத்தில் இப்போது கூட பெண்களின் உடற்கூற்றியலில் உள்ள விடயங்களை வைத்து தீட்டு என்பதன் மூலம் பெண்களை இரண்டாம் நிலையில் வைத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

ஒவ்வொருவரும்  அவர் மதம் கூறும் விடயங்களை கேள்விக்கிடமின்றி நம்பும் அதே வேளை மற்ற மதங்களை கேள்விக்குள்ளாக்குகிறோம்.

மதங்கள் காலத்திற்கேற்ப பரிணாமம் பெறவேண்டும், அதற்கு முதலில் ஒவ்வொருவரும் தத்தமது மதங்களில் உள்ள குறைபாட்டை களையவேண்டும், மாறாக மற்றவர்கள் அடுத்த மதங்களை விமர்சிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என கருதுகிறேன்.

ஆனால் விமர்சிக்காமல் விட கூறவில்லை, இவ்வாறு விமர்சிக்காவிட்டால் அவர்களுக்கு தமது மதத்தில் உள்ள தவறுகள் தெரியவாய்ப்பில்லாமல் போகும் அதே நேரம் அந்த விமர்சனத்தில் வெறுப்பு இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

ஈரானில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பல்கலைக்கழக மாணவி தன் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழக முன் வளாகத்தில் வெளியார் முன்பாக நடமாடினாள்.

நிற்க.....

ஈரான் குடிமக்களுக்கு அந்த நாட்டு சட்டங்கள் விதிமுறைகள்  பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற உரிமை கொடுத்திருக்கின்றார்கள்.

நிர்வாணமாக நின்று நாட்டை திருத்த வேண்டிய அவசியம் எப்படி வந்தது என தெரியவில்லை?

அப்படியே நிற்க....
ஆடை கலாச்சார கட்டுப்பாடுகள் மேலைத்தேய நேச நாடு சவூதி அரேபியாவிலும் அது போன்ற நாடுகளிலும் இருக்கின்றது. அது பற்றி யாரும் விமர்ச்சிப்பதில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈரான் குடிமக்களுக்கு அந்த நாட்டு சட்டங்கள் விதிமுறைகள்  பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற உரிமை கொடுத்திருக்கின்றார்கள்.

இப்படியே எல்லோரும் வெளியேறினால் யாருக்கு ஆட்சி செலுத்துவது? அதோடு வெளியேறுபவர்கள் எங்கே செல்வது? கோழைத்தனமாக ஓட அந்தப்பெண் விரும்பவில்லைபோலும்.

9 hours ago, தமிழ் சிறி said:

படம்... "கிளியர்" இல்லாமல் இருப்பது எனக்கு மட்டும் தானா? 😂
அல்லது உங்களுக்குமா? 🤣

உங்கள் ஏக்கம் புரிகிறது சிறியர், எதற்கும் உங்கள் வீட்டுக்காரியிடம் இந்தக்கேள்வியை கேட்டுப்பாருங்கள், நன்றாக உங்களுக்கு புரியும்படி விளக்குவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை நிர்வாண போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவி

image_f518f5e099.jpg

ஈரான் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், குர்திஷ் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் விதிகளை மீறி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. ஹிஜாப்பை தூக்கி எறிவது மற்றும் ஹிஜாப் எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களால் அதிகாரிகள் திணறி போயினர்.

இதன்பின்னர், பாதுகாப்பு படையினர் கடுமையாக செயல்பட்டு, அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் திடீரென ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார். இதனால், சுற்றியிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அடையாளம் தெரியாத அந்த இளம்பெண்ணை பிடித்து சென்றனர். இதன்பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

 இதுபற்றி பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஆமிர் மஜாப் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காவல் நிலையத்தில்... அந்த இளம்பெண் கடுமையான மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், அந்த இளம்பெண் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றிய வீடியோ மற்றும் ஊடக செய்திகள் வெளியான நிலையில், அந்த பெண் தெளிவான நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார் என ஒரு சிலர் கூறுகின்றனர்.

லெய் லா என்ற பயனாளர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொதுவெளியில் உள்ளாடையுடன் தோன்றுவது என்பது பெண்களில் பலருக்கு மோசம் வாய்ந்த ஒரு கனவாகவே இருக்கும். ஹிஜாப் கட்டாயம் என்ற அதிகாரிகளின் முட்டாள்தன நிபந்தனைக்கு எதிராகவே இந்த நிகழ்வு நடந்துள்ளது என தெரிவித்து வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதுபற்றி ஈரான் நாட்டில் உள்ள ஆம்னெஸ்டி என்ற அமைப்பு வெளியிட்ட செய்தியானது, ஹிஜாப் சரியாக அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த இளம்பெண் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார். இந்த ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிராகவே அவர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிவிக்கின்றது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் அவருக்கு உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அரை-நிர்வாண-போராட்டம்-நடத்திய-பல்கலைக்கழக-மாணவி/50-346528

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

 

அரை நிர்வாண போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவி

image_f518f5e099.jpg

ஈரான் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், குர்திஷ் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் விதிகளை மீறி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. ஹிஜாப்பை தூக்கி எறிவது மற்றும் ஹிஜாப் எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களால் அதிகாரிகள் திணறி போயினர்.

இதன்பின்னர், பாதுகாப்பு படையினர் கடுமையாக செயல்பட்டு, அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் திடீரென ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார். இதனால், சுற்றியிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அடையாளம் தெரியாத அந்த இளம்பெண்ணை பிடித்து சென்றனர். இதன்பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

 இதுபற்றி பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஆமிர் மஜாப் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காவல் நிலையத்தில்... அந்த இளம்பெண் கடுமையான மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், அந்த இளம்பெண் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றிய வீடியோ மற்றும் ஊடக செய்திகள் வெளியான நிலையில், அந்த பெண் தெளிவான நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார் என ஒரு சிலர் கூறுகின்றனர்.

லெய் லா என்ற பயனாளர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொதுவெளியில் உள்ளாடையுடன் தோன்றுவது என்பது பெண்களில் பலருக்கு மோசம் வாய்ந்த ஒரு கனவாகவே இருக்கும். ஹிஜாப் கட்டாயம் என்ற அதிகாரிகளின் முட்டாள்தன நிபந்தனைக்கு எதிராகவே இந்த நிகழ்வு நடந்துள்ளது என தெரிவித்து வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதுபற்றி ஈரான் நாட்டில் உள்ள ஆம்னெஸ்டி என்ற அமைப்பு வெளியிட்ட செய்தியானது, ஹிஜாப் சரியாக அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த இளம்பெண் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார். இந்த ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிராகவே அவர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிவிக்கின்றது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் அவருக்கு உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அரை-நிர்வாண-போராட்டம்-நடத்திய-பல்கலைக்கழக-மாணவி/50-346528

இந்தப்பதிவு சிறியருக்காக இணைத்தது போலிருக்கே. இப்போ படம் கிளியரா தெரிகிறதா சிறியர்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இப்படியே எல்லோரும் வெளியேறினால் யாருக்கு ஆட்சி செலுத்துவது? அதோடு வெளியேறுபவர்கள் எங்கே செல்வது? கோழைத்தனமாக ஓட அந்தப்பெண் விரும்பவில்லைபோலும்.

எப்படியிருந்தாலும் முல்லாக்கள் கொள்கையை விரும்புபவர்களும் இருக்கின்றார்கள் தானே? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நிற்க.....

ஈரான் குடிமக்களுக்கு அந்த நாட்டு சட்டங்கள் விதிமுறைகள்  பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற உரிமை கொடுத்திருக்கின்றார்கள்.

நிர்வாணமாக நின்று நாட்டை திருத்த வேண்டிய அவசியம் எப்படி வந்தது என தெரியவில்லை?

அப்படியே நிற்க....
ஆடை கலாச்சார கட்டுப்பாடுகள் மேலைத்தேய நேச நாடு சவூதி அரேபியாவிலும் அது போன்ற நாடுகளிலும் இருக்கின்றது. அது பற்றி யாரும் விமர்ச்சிப்பதில்லை. 

அருமையான‌ விள‌க்க‌ம் தாத்தா👍.........................

Link to comment
Share on other sites

22 hours ago, குமாரசாமி said:

நிற்க.....

ஈரான் குடிமக்களுக்கு அந்த நாட்டு சட்டங்கள் விதிமுறைகள்  பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற உரிமை கொடுத்திருக்கின்றார்கள்.

சிங்கள அடக்குமுறை பிடிக்காவிட்டால் எங்களைப்போல் நாட்டை விட்டு வெளியேறாமல் போராடப் போனது தவறுதான். 

எப்படியிருந்தாலும் சிங்களவரின் கொள்கைகளை விரும்பும் தமிழரும் இருக்கிறார்கள் தானே.

9 hours ago, வீரப் பையன்26 said:

அருமையான‌ விள‌க்க‌ம் தாத்தா👍.........................

அதுமட்டுமல்ல, வெளிநாடு வந்தபின் இங்குள்ள அகதிகளை விரும்பாத இனத்துவேசக் கட்சிகளை ஆதரிப்போம்.😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2024 at 11:12, Kavi arunasalam said:

 

இங்கே யார் மனநோயாளி என்பதில் ஒரு குழப்பம் வருகிறதல்லவா?

 

👍.................

'இடியாப்பத்திற்கு மாற்றுக் கருத்து இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். இடி அமீனுக்கும் மாற்றுக் கருத்தா.........' என்பது போல சு.ப. சோமசுந்தரம் அவர்கள் முன்னர் இங்கு பகிர்ந்திருந்த அவருடைய மகள் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்தது இந்த இடத்தில் ஞாபகம் வருகின்றது ............🫢.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, இணையவன் said:

சிங்கள அடக்குமுறை பிடிக்காவிட்டால் எங்களைப்போல் நாட்டை விட்டு வெளியேறாமல் போராடப் போனது தவறுதான்.

உலகில் ஒரு பிரச்சனை நாட்டுக்கு நாடு வேறு படும். இன விடுதலைகள் உட்பட...
உதாரணத்திற்கு எமது விடுதலைக்கான காரணங்கள் வேறு. பலஸ்தீன விடுதலைக்கான காரணங்கள் வேறு. ஈரானில் நடக்கும் பிரச்சனைகள் வேறு.அதே மாதிரி உக்ரேன் பிரச்சனைகளும் வேறு. எல்லாம் விடுதலையை நோக்கியே நகருகின்றது. ஆனால் காரணங்கள் வெவ்வேறானவை. இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலை,சுதந்திரம் எனும் போர்வையில் உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் சாம்பாராக்கிக்கொண்டு இனியும் இங்கே வராதீர்கள்.

53 minutes ago, இணையவன் said:

எப்படியிருந்தாலும் சிங்களவரின் கொள்கைகளை விரும்பும் தமிழரும் இருக்கிறார்கள் தானே.

கதிர்காமர்,சுமந்திரன் போன்று தமிழினத்தின் வலிகளை உணராத மரத்துப்போன சிந்தனையாளர்கள்.

56 minutes ago, இணையவன் said:

அதுமட்டுமல்ல, வெளிநாடு வந்தபின் இங்குள்ள அகதிகளை விரும்பாத இனத்துவேசக் கட்சிகளை ஆதரிப்போம்.😂

இன்றைய காலங்களில் அகதிகளாக வருபவர்கள் என்ன செய்கின்றார்கள் என தெரியாமல் எழுதிய கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 00:30, குமாரசாமி said:

ஈரான் குடிமக்களுக்கு அந்த நாட்டு சட்டங்கள் விதிமுறைகள்  பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற உரிமை கொடுத்திருக்கின்றார்கள்.

நீங்களா இதைச் சொல்கிறீர்கள் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது குமாரசாமி. தாயகத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிர்க் குரல் தரும் நீங்கள் பெண் அடக்குமுறைக்கு ஏன் குரலை அடக்கிக் கொள்கிறீர்கள் என்பது புரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்கள் முன்பு பொதுவெளியில் ஹிஜாப் அணியாததால் ஒரு மாணவியை காவல்துறை அடித்தே கொன்றார்கள் பின்பு அது ஈரான் முழுவதும் பெரும் கலவரமானது.

அதுக்கே அப்படியென்றால் அரை நிர்வாணமாக நின்றதுக்கு பொதுவெளியில் தூக்கிலிடுவார்களா, அல்லது தலையை வெட்டுவார்களா, இல்லை ஏற்கனவே வெட்டிவிட்டார்களா என்றே தோன்றும்.

ஐரோப்பா அமெரிக்கா பக்கம் அகதியா வரும் இஸ்லாமிய ஆண்கள் வந்து முதல் வேலையாக ஒரு வெள்ளைக்கார பெண்ணை பிடிப்பதுக்கு அவர்கள் மதத்தில் ஹராம் என்று சொல்லப்படும் பப் கிளப், பார், மேற்கத்திய இசை நிகழ்ச்சி என்று  முழுமூச்சாக அலைவார்கள், ஆனால் அவர்களின் பெண்கள் கண்களைகூட தெளிவாக பார்க்க முடியாதபடி கறுப்பு உடையினால் மூடவேண்டுமென்றும் குரானை படித்தபடி அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்றும்  எதிர்பார்ப்பார்கள்.

ஆண்களை ஊர்மேய விட்டுவிட்டு பெண்களை மட்டும் மதத்துக்காக ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து கொல்வது எந்தவகை இறைநம்பிக்கை என்று எழுத்துகூட்டி படிச்சாலும் புரியாது.

உடை என்பது மதத்தை கொண்டோ கலாச்சாரத்தை கொண்டோ எவர்மீதும் திணிக்கப்படுவது ஏற்புடையதல்ல, உடைகள் கண்ணியமானதாக இருந்தாலே போதுமானது.

பெரும்பாலான ஈரான் ஈராக், ஆப்கான் பெண்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு வந்ததும் ஜீன்ஸ் ரீஷேர்ட்ட்க்கு மாறிவிடுகிறார்கள், ஒரு சிலர் மூடிக்கொண்டு திரிகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயவிருப்பு கிடையாது மதவெறியினால் வீட்டில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே தம் விருப்பை வேறு வழியின்று வெளிக்காட்ட முடியாமல் வாழ்கிறார்கள்.  ஏற்கனவே பலரை சொந்த அம்மா அப்பா சகோதரர்களே  கொன்றும் இருக்கிறார்கள், 

பெரும்பாலான ஈரான் ஈராக் ஆப்கான் நாட்டு மக்கள் பிறருடன் நட்பாக பழக கூடியவர்கள், உலக நாகரிகத்துடன் சேர்ந்து கல்வி தொழில் என்று தமதுபாட்டில் நிம்மதியாக வாழகூடியவர்கள், அவர்களை மதவெறியூட்டி நாசமாக்குவதே இந்த பள்ளிவாசல் தொழுகைகளில்தான்,

இஸ்லாமியர்கள் அனைவருமே தமது மதம்தான் பெரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதவர்கள்,தமது மதம்தான் உலகத்தை ஆளனும் என்று மனசுக்குள் நினைப்பவர்கள்  ஆனால் எல்லோருமே அதை பிற சமூகத்தில் திணிக்க நேரடியாக முயற்சிக்காதவர்கள்.

நம்மில் அல்லுலூயோ கோஷ்டி என்று ஒரு கூட்டம்  நல்லாயிருக்குறவனை பிடிச்சு ஆண்டவர் வருகிறார் அடுத்த பஸ்ஸில எண்டு சொல்லி தண்ணிக்குள்ள தலையை முக்கியும் மேளங்களை அதிக ஒலியில் காதுக்கு கிட்ட கொண்டுப்போய் அறைந்தும் மனநோயாளி ஆக்குவார்கள், ஆனால் ஒரிஜினல் கத்தோலிக்கர்கள் எந்த மதவெறியுமில்லாது அவர்கள் வழிபாடு வாழ்க்கை, நட்புறவு  என்று இருப்பார்கள்.

அதேபோல்தான் இந்த கூட்டமும்  பலவீனமானவர்களை மதவெறியூட்டி மண்டையை கழுவி அடுத்த மதக்காரனை  கொல்லவும், சக உயிர் என்று சிந்திக்காமல் தமது உறவு பெண்களை ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டு கொல்லவும் செய்கிறார்கள்.

ஈரானை பொறுத்தவரை கொமேனி எனும் மதவெறி தலைவன் காலமாகும்வரை  அடிப்படைவாதத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் நிலமை கவலைக்கிடம்தான், அவரின் காலத்தின் பின்னர் ஓரளவாவது குறையும் வாய்ப்பு உண்டு என்பதே உலக மக்கள் எண்ணம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 10:30, குமாரசாமி said:

அப்படியே நிற்க....
ஆடை கலாச்சார கட்டுப்பாடுகள் மேலைத்தேய நேச நாடு சவூதி அரேபியாவிலும் அது போன்ற நாடுகளிலும் இருக்கின்றது. அது பற்றி யாரும் விமர்ச்சிப்பதில்லை. 

அதே போல எமது கோயில்களிலும் ஆண்கள் அரை நிர்வாணமாக செல்வதனை யாரும் கண்டு கொள்வது கூட இல்லை.😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அதே போல எமது கோயில்களிலும் ஆண்கள் அரை நிர்வாணமாக செல்வதனை யாரும் கண்டு கொள்வது கூட இல்லை.😁

🤣..............

நல்லாவே கண்டுகொள்கின்றார்கள், வசீ................... அரை நிர்வாணமாக போகாவிட்டால்........

'ஏய்........... இங்க சேட்டு போடக் கூடாது, தெரியாதா............' என்று ஒரு கும்பலே மொய்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரான்: பல்கலைக்கழகத்தில் ஆடைகளை களைந்த பெண் ஹிஜாபுக்கு எதிராகப் போராடினாரா?

கட்டாய ஹிஜாப்

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகத்தில் வெளியானது.
  • எழுதியவர், பர்ஹாம் கோபாடி
  • பதவி, பிபிசி பாரசீகம்

`கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆடைகளைக் களைந்த பெண்ணை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என இரானில் மனித உரிமை ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று, டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பிளாக் 1 பகுதியில் நடைபாதையில் ஒரு பெண் தனது உள்ளாடைகளுடன் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது.

மற்றொரு காணொளியில், அந்தப் பெண் தனது உள்ளாடைகளைக் களைவது போலக் காட்டப்பட்டுள்ளது, சற்று நேரத்தில் சாதாரண உடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து காருக்குள் ஏற்றுகிறார்கள்.

அந்தப் பெண் "மனநலம் பாதிக்கப்பட்டு", "மனநல மருத்துவமனைக்கு" அழைத்துச் செல்லப்பட்டதாக ஆசாத் பல்கலைக்கழகம் கூறியது.

 

பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் இயக்கத்தின் செயல்பாடா?

சமூக ஊடகங்களில் பல இரானியர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் பெண்ணின் செயலை, "பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம்" (Women, Life, Freedom) இயக்கத்தின் ஒரு பகுதி என்று பலர் விவரித்தனர். இந்த இயக்கத்தில் இருக்கும் பல பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க வேண்டும், நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்ற கடுமையான சட்டங்களை பகிரங்கமாக மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாசா அமினி என்ற குர்திஷ் பெண் “சரியாக” ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக முந்தைய செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.

டெலிகிராம் செயலியில் உள்ள அமீர் கபீர் செய்தி சேனல் (Amirkabir Newsletter) "இரானிய மாணவர் இயக்கத்திற்கான ஊடகம்" என்று தன்னை விவரிக்கிறது. இரானிய பெண் ஆடைகளைக் களைந்ததால் கைது செய்யப்பட்ட செய்தியை இந்த சேனல் தான் முதலில் வெளியிட்டது. அந்தச் செய்தியின்படி, ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
`ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக போராடிய இரானிய பெண்ணை விடுவிக்க வேண்டும்’ : சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அந்தச் செய்தியில், ``அந்தப் பெண்ணை சாதாரண ஆடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் காருக்குள் ஏற்றினர். அப்போது அந்தப் பெண்ணின் தலை காரின் கதவு மீது மோதியது. இதனால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் அந்தப் பெண்ணை அவர்கள் ஏதோ ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்” என்று எழுதப்பட்டுள்ளது.

``ஆசாத் பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்குள் நுழைந்த அந்தப் பெண் மாணவர்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார் என்றும், விரிவுரையாளர் எதிர்த்தபோது, கூச்சலிட்டுக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்” என்றும் நேரில் பார்த்த ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறினார்.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் மாணவர்களை நோக்கி "நான் உங்களைக் காப்பாற்ற வந்தேன்" என்று உரக்க கத்தினார்.

இதற்கிடையில், இரானிய ஊடகம் ஒரு நபரின் முகத்தை மறைத்து ஒரு வீடியோவை வெளியிட்டது. அவர் அந்தப் பெண்ணின் கணவர் என்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்காக அவரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த நபர் கூறியதாகவும் காணொளியில் உள்ளது. ஆனால் இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசி பாரசீக சேவையால் சரிபார்க்க முடியவில்லை.

 

கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கான எதிர்ப்பா?

இரான்: பல்கலைக்கழகத்தில் ஆடைகளை களைந்த பெண் ஹிஜாபுக்கு எதிராகப் போராடினாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

கனடாவில் வசிக்கும் பெண்கள் உரிமை ஆர்வலர் அஸ்ஸாம் ஜன்ஜாராஃபி, 2018இல் ஒரு போராட்டத்தின்போது ஹிஜாபை அகற்றிய பின்னர் ஈரானில் இருந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடிவிட்டார்: “நான் கட்டாய ஹிஜாப் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தபோது கைது செய்யப்பட்டேன்."

மேலும், "கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து நான் போராடியபோது, பாதுகாப்பு அதிகாரிகள் என்னைக் கைது செய்தனர். அதோடு, எனது குடும்பத்தினரை மிரட்டி, என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர்" என்று அஸ்ஸாம் ஜாங்ரவி கூறினார்.

அஸ்ஸாம் ஜாங்ரவி 2018இல் ஒரு போராட்டத்தின்போது, தனது ஹிஜாப்பை அகற்றியதற்காக இரானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இரானில் இருந்து வெளியேறினார்.

இரான் "வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியை உடனடியாகவும் நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பு, "அதிகாரிகள் அவரை இன்னும் விடுதலை செய்யவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

"அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு எதிராக வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைச் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டும். மேலும் இந்தச் செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

இரான் சிறையில் இருந்து அறிக்கை வெளியிட்ட நர்கஸ் முகமதி

`ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக போராடிய இரானிய பெண்ணை விடுவிக்க வேண்டும்’ : சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இந்தச் சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இரானில் சிறையில் உள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரானியரான நர்கஸ் முகமதி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

"பெண்கள் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தாக்கப்படுகின்றனர். ஆனாலும் நாங்கள் அதிகாரத்திற்குத் தலை வணங்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.

"பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவி நீண்ட கால ஒடுக்குமுறைக்கான கருவியாக இருந்த தனது உடலை, எதிர்ப்பு தெரிவிக்கும் கருவியாகப் பயன்படுத்தினார். அவரது விடுதலை மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் அழைப்பு விடுக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

🤣..............

நல்லாவே கண்டுகொள்கின்றார்கள், வசீ................... அரை நிர்வாணமாக போகாவிட்டால்........

'ஏய்........... இங்க சேட்டு போடக் கூடாது, தெரியாதா............' என்று ஒரு கும்பலே மொய்க்கும்.

மதங்கள் என்று வரும்போது பெரும்பாலும் கேள்விகிடமின்றி ஒரு விடயத்தினை பின்பற்றுவதாகவே உளது, ஆரம்பத்தில் இயற்கை வழிபாடு இருந்ததாக கூறுகிறார்கள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாமல் இருக்க இயற்கை அனர்த்தம் ஏற்படுத்தும் விடய்ங்களை வழிபட்டனர் (பயத்தின் காரணமாக).

இந்த பயபக்தி அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது, ஆரம்பகால உடைகளாக எம்மவர்கள் மேலாடை அணிவதில்லை என நினைக்கிறேன், அதே போல் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் தூசி புயலை சமாளிப்பதற்காக முகத்தினை மூடிய ஆடை அணிந்திருக்கலாம், அதனையே மரபு என தற்காலத்திலும் பின்பற்றும் நிலை காணப்படுகிறது, அதனை கலாச்சாரம் என கூறுவதற்கு மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்.

நாங்களும் இதே மாதிரியான  முட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு பிற மதங்களினை  இலகுவாக கேள்விக்குள்ளாக்க முடிவதற்கான காரணம், நாம் நம்பும் மதம் என்றால் பயபக்தி இருக்கும் அதனை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம் ஆனால் மற்ற மதங்கள் தொடர்பில் எந்த வித பயமும் இல்லாதனால் எனது மதம் சிறந்தது மற்ற மதங்கள் மோசமானவை எனும் பொதுவான நிலைப்பாடாகவே இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நாங்களும் இதே மாதிரியான  முட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு பிற மதங்களினை  இலகுவாக கேள்விக்குள்ளாக்க முடிவதற்கான காரணம், நாம் நம்பும் மதம் என்றால் பயபக்தி இருக்கும் அதனை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம் ஆனால் மற்ற மதங்கள் தொடர்பில் எந்த வித பயமும் இல்லாதனால் எனது மதம் சிறந்தது மற்ற மதங்கள் மோசமானவை எனும் பொதுவான நிலைப்பாடாகவே இருக்கும்.

நாங்கள் வழிபடுவதே பாலியல் சின்னம்தானே. கோயில் கோபுரங்கள் முழுதும் பாலியல் சிலைகள்தானே. மதங்கள் மனிதர்களை நல் வழிப்படுத்தவே இருக்க வேண்டும்.  

அர்த்தநாதீஸ்வரர் இருப்பது இந்து மதத்தில்தனே ஆனாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் ஆண்கள்தானே முடிவெடுக்கிறார்கள். விழாக்களில் கூட ஆண்கள் ‘சூட்’  அணிந்திருப்பார்கள். பெண்கள் சேலை அணிந்து வருவார்கள்.

அன்று கணவன் இறந்தால்  மனைவி உடன்கட்டை ஏறினாள். இன்று நிலமை அப்படி அல்ல.

எந்த மதமானாலும்  நல்லதை ஏற்க வேண்டும். அல்லதை களைய வேண்டும்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vasee said:

அதே போல எமது கோயில்களிலும் ஆண்கள் அரை நிர்வாணமாக செல்வதனை யாரும் கண்டு கொள்வது கூட இல்லை.😁

உண்மையை சொன்னீர்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். குறிப்பாகஇ எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால் நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும். அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால் வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.அந்தப் பெட்டிகளில் ஒன்று இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும் வாக்களிக்க அந்த பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்’ என்றார்.   https://eelanadu.lk/வாக்காளர்-அட்டை-இன்றியும/  
    • வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி,  நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)   https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!
    • கடன்.  ஏன் பெற்றீர்கள். ???.    அந்த பணத்தை என்ன செய்தீரகள்.??    வருமானம் வாராதா. துறைகளில்.  பணத்தை முதலீடக்கூடாது     போர் ஒரு வருமானம் தாராதா துறை  அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன்   போரிடுவது   கடன் பெற்று போரிடுவது    மூட்டாள்தனமாகும்    போர் வெற்றியா  ?? இல்லை தோல்வியா??    தோல்வி தான்   அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள்   இந்த போர்  நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது     ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது    இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது    ஆனால்  போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும்    புலிகள் இல்லை அவர்களின் போர்  தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும்    உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
    • தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா
    • வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..?  ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.