Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஓ.....அப்பிடியொரு வட்டத்தை கீறி வைத்திருக்கின்றீர்களோ?
அப்படியே படிக்காதவர் வட்டத்திற்குள் அடங்குபவர்களையும் குறிப்பிட்டு விடுங்கள்.

யாழில் வந்ததுக்கு முதல் தடவையா சிவப்பு வாங்கிட்டன் , ஏன் குமாரசுவாமியண்ணா இப்படி பண்ணினீங்க?

படிக்காதவர் வட்டத்திலிருப்பது நான் ஒருவன் மட்டுமே.

  • Replies 58
  • Views 6.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வ

  • அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ?  நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட  மீனவர்களைத்தானே?  இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்ற

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை  உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

யாழ்களத்தில் நான் கருதும் படித்தவர்கள் வட்டத்தில் இசையும் கோஷானும் உள்ளடக்கம் எதுக்கு உங்க இரண்டுபேருக்கும் இந்த வேண்டாத வேலை?

நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை 

உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை 

உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.

வட்டம் என்றுதானே சொல்லிருக்கேன் ஈழப்பிரியன் அண்ணா கண்டிப்பா அந்த வட்டத்திற்குள் நீங்களும் வருவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

யாழில் வந்ததுக்கு முதல் தடவையா சிவப்பு வாங்கிட்டன் , ஏன் குமாரசுவாமியண்ணா இப்படி பண்ணினீங்க?

படிக்காதவர் வட்டத்திலிருப்பது நான் ஒருவன் மட்டுமே.

ஒரு சிவ‌ப்பு புள்ளிக்கு நீங்க‌ள் வ‌ருத்த‌ ப‌டுகிறீங்க‌ள்

நான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எழுதின‌ ப‌ல‌ ந‌ல்ல‌ க‌ருத்துக்கு தொட‌ர்ந்து சிவ‌ப்பு புள்ளிய‌ அமுக்கி போட்டு போவார் ஒருத‌ர் 

கார‌ண‌ம் ஈழ‌ விடைய‌த்தில் யாழில் அவ‌ர் ப‌ர‌ப்பின‌ அவ‌தூறு 

த‌லைவ‌ரின் ம‌க‌ள் வ‌ருகிறா

ம‌திவ‌த‌னி அம்மாவின் அக்கா கூட‌ க‌தைச்சேன் அவா உறுதி செய்து விட்டா அப்ப‌டி யாழில் வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி அடிச்சு விட‌ 

அதுக்கு க‌டும் எதிர்ப்பை காட்டின‌ ந‌வ‌ர் என்றால் அது நான் தான்

அந்த‌ கோவ‌த்தை ம‌ன‌சில் வைச்சு பின்னைய‌ கால‌ங்க‌ளில் யாழில் நான் என்ன‌ எழுதினாலும் சிவ‌ப்பு புள்ளிய‌ அமுக்குவார்...............அதை நினைச்சு நான் க‌வ‌லைப் ப‌ட்ட‌து கிடையாது

தாத்தா சிவ‌ப்பு புள்ளி இட்ட‌து உங்க‌ளுடைய‌ க‌ருத்தை ஏற்றுக் கொள்ள‌ ஏலாது அல்ல‌து அந்த‌ க‌ருத்துட‌ன் உட‌ன் பாடு இல்லாம‌ இருக்க‌லாம்

அத‌ற்காக‌ குமார‌சாமி அண்ணா என் மீது வெறுப்பை காட்டுகிறார் என்று நினைக்க‌ வேண்டாம்................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

வட்டம் என்றுதானே சொல்லிருக்கேன் ஈழப்பிரியன் அண்ணா கண்டிப்பா அந்த வட்டத்திற்குள் நீங்களும் வருவீர்கள்.

அதுதானே பார்த்தன் ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டேன்.

நன்றி தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு சிவ‌ப்பு புள்ளிக்கு நீங்க‌ள் வ‌ருத்த‌ ப‌டுகிறீங்க‌ள்

அது சும்மா ஒரு வேடிக்கைக்கு சொன்னது பையன்

பச்சைபுள்ளி வந்தாலும், சதோஷமில்லை சிவத்த புள்ளி வந்தாலும் கவலையில்லை, ஏற்கனவே வந்த பச்சைபுள்ளிகளை ஒட்டுமொத்தமா யாரும் நீக்கிவிட்டாலும் கவலையில்லை. 

2 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுதானே பார்த்தன் ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டேன்.

நீங்க ஊரிலேயே படித்தவர் என்பது எனக்கு எப்போதோ தெரியும் ஈழபிரியன் அண்ணா. 😌

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, valavan said:

யாழில் வந்ததுக்கு முதல் தடவையா சிவப்பு வாங்கிட்டன் , ஏன் குமாரசுவாமியண்ணா இப்படி பண்ணினீங்க?

படிக்காதவர் வட்டத்திலிருப்பது நான் ஒருவன் மட்டுமே.

நானும் சிவப்பு புள்ளி இட யோசித்தேன். ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் தவறுகள் திருத்தப்படவேண்டும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். 

நான் இசையை பற்றி சொல்வது என்றால் அவருடைய ஆங்கில புலமையை சொல்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ நீங்க‌ள் அவ‌ரின் ஆலோச‌க‌ராக‌ இருங்க‌ளேன் அண்ணா

த‌மிழ் இன‌த்துக்கு புன்னிய‌மாய் இருக்கும்..................

விஜேய் இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் எத்த‌னை த‌ட‌வை ஊட‌க‌த்தை ச‌ந்திச்ச‌வை

குறை சொல்வ‌து எளிது அவ‌ர் இட‌த்தில் இருந்து அவ‌ர் செய்யும் அர‌சிய‌லை நீங்க‌ள் செய்து பார்த்தால் தான் தெரியும் அத‌ன் வேத‌னை......................க‌ட‌ந்த‌ இர‌ண்டு நாளாக‌ ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்காக‌த் தானே ஊர் ஊராய் போய் குர‌ல் கொடுக்கிறார் ம‌க்க‌ள் முன்னாள் மேடையில் பேசுகிறார்☹️.........................

அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? 

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட  மீனவர்களைத்தானே? 

இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? 

பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன்  கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? 

உங்களிடம் பதில் இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாம் தமிழரின் முதலாவது தேர்தலுக்கு முன் எத்தனை சீட் எடுப்பார்கள் என நானும் இசையும் ஒரு பெட் கட்டினோம். அதில் இசை தோற்றால், அவர் யாழில் சீமான் ஆதரவாக எழுதமாட்டேன் என சூளுரத்தார்.

இவைகள் நடந்த போது நான் யாழ்களத்தில் இல்லை.

6 hours ago, goshan_che said:

சரியாக நியாபகம் இல்லை, ஆனால் அதன் பின்னும் சில தடவை இசை வந்தார்…

   ஓம்   நான் யாழ்களத்தில் சேர்ந்த பின்பு சீமான் பற்றி நான் எழுதியதிற்கு அவர் விளக்கம் தந்தவர்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறீலங்காவுக்கும் தமிழக தமிழர்களுக்குமான பிரச்சினை இல்லை.  ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுமான பிரச்சினை. இதைக்கூட உணராதவர்கள் ...?😭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? 

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட  மீனவர்களைத்தானே? 

இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? 

பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன்  கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? 

உங்களிடம் பதில் இருக்கிறதா? 

சீமானின் தேர்த‌ல் அறிக்கைய‌ பாருங்கோ 2016க‌ளில் இருந்து இப்ப‌ வ‌ரை சிறு மாற்ற‌ங்க‌ள் தான் செய்து இருக்கிறார்

சீமான் பேச‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு தான் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளும் க‌ச்ச‌ தீவை மீட்போம் மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண்போம் என்று தேர்த‌ல் நேர‌ம் அறிக்கை விட்ட‌வை.................

உங்க‌ளுக்கான‌ ப‌தில் அதில் இருக்கு

இது சீமான் மீன‌ ம‌க்க‌ளை ஏமாற்ற‌ சொல்ல‌ வில்லை

சீமான் 2010ம் ஆண்டு எத‌ற்காக‌ ஒரு வ‌ருட‌ம் சிறைக்குள் இருந்தார் யாருக்காக‌ இருந்தார் என்ப‌தாவ‌து நினைவிருக்கா அல்ல‌து அத‌ற்க்கான‌ விள‌க்க‌ம் தேவையா😉............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? 

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட  மீனவர்களைத்தானே? 

இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? 

பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன்  கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? 

உங்களிடம் பதில் இருக்கிறதா? 

என் மீன‌வை தொட்டால்

த‌மிழ் நாட்டில் ப‌டிக்கும் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ளை தொடுவேன் என்று ஆவேச‌மாக‌ பேசின‌த‌ற்காக‌ க‌ருணாநிதி சீமானை ப‌ல‌ மாத‌ம் சிறையில் அடைத்தார்....................சீமான்  மீனாவ‌ர்க‌ள் மீதான‌ அக்க‌றையில் 14 வ‌ருட‌த்துக்கு முத‌ல் பேசினார்....................

சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டைக்கு போதை த‌லைக்கு மேல் ஏறினால் என்ன‌ செய்வாங்க‌ள் என்று நான் சொல்லி தெரிய‌ வேண்டிய‌த‌ல்ல‌ 

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்தில் கிளாலி க‌ட‌லில் வைச்சு எத்த‌னை த‌மிழ‌ர்க‌ளை சுட்டு வெட்டி கொன்ற‌வ‌ங்க‌ள்☹️.........................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

என் மீன‌வை தொட்டால்

அந்த நடிகையா.  ???.  🤣🤣🙏.   பையன்   

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

அந்த நடிகையா.  ???.  🤣🤣🙏.   பையன்   

சிவ‌ப்பு புள்ளி உங்க‌ளுக்கான‌ ப‌தில் ஜ‌யா..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, valavan said:

சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு.

பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும்   இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை .

கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள்.

அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள்.

1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது.

ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும்  மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, 

ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள்.

இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.

அமைதியாக,எகத்தாளம் இல்லாமல் மற்றவரை மட்டம் தட்டாமல்  தரமான விளக்கத்திற்கு நன்றி வளவன் 👍 🙏

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

அமைதியாக,எகத்தாளம் இல்லாமல் மற்றவரை மட்டம் தட்டாமல்  தரமான விளக்கத்திற்கு நன்றி வளவன் 👍 🙏

நான் அறிந்து யாரையும்மட்டம் தட்டியோ எகத்தாளம் பண்ணியோ காயப்படுத்தியோ  கருத்திட நினைத்ததில்லை., அடுத்தவரை மட்டம் தட்ட என்னிடம் எந்த தராதரமும் இல்லை.

நீண்ட காலத்தின் பின்னர் சிறிதுகாலம் விடுமுறையில் உள்ளேன் அதனால் கொஞ்சம் அதிகமாக பேசி அதிகமாக பதிவுகளிட்டதால்  உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம், 

இயல்பில் அதிகம் பேசுவதில்லை, அதனால்தான் ஏறக்குறைய யாழில் இணைந்து 9 வருடங்களாகியும் 1500  கருத்துக்களைகூட என்னால் தொட முடியவில்லை.

எனினும்  உங்கள் கருத்து பெறுமதி மிக்கது, முடிந்தவரை எகத்தாளமின்றி என்னை அமைதிப்படுத்த இனி  கூடுதல் முயற்சி செய்கிறேன் நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள்.

இந்திய எல்லையில் நாம் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கே வந்த  இலங்கை கடற்படை எம்மை தாக்கி... இலங்கை கடற் கொள்ளையர் எம்மை தாக்கி...🤣
அங்கே  சீமான் கட்சி, திமுக, அதிமுக, மோடி கட்சி எல்லாமே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கடற்கொள்ளை செய்வதற்கே தீவிர ஆதரவு. இலங்கை தமிழ் மீனவர்கள் பாவங்கள் என்றோ குறைந்தது எல்லை தாண்டி போகாதீர்கள் அது குற்றம் என்றோ ஒரு போதுமே சொல்வது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இது சிறீலங்காவுக்கும் தமிழக தமிழர்களுக்குமான பிரச்சினை இல்லை.  ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுமான பிரச்சினை. இதைக்கூட உணராதவர்கள் ...?😭

பிரச்சனை இரு பக்க தமிழர்கிடையே என்பது சரியே….

ஆனால் பிரச்சனையில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியிலும் கொழும்பிலும் மட்டுமே இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்…

உடான்ஸ் சாமியாய நமஹ…

மகனே…..

நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே…

அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது….

அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்…

எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே….

பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை.

புரிந்தவன் பிஸ்தா….

புரியாதவன் பாதாம்….

ஓம்…கிரீம்…டோநட்….

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆனால் பிரச்சனையில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியிலும் கொழும்பிலும் மட்டுமே இருக்கு.

முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு  அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

என் மீன‌வை தொட்டால்

த‌மிழ் நாட்டில் ப‌டிக்கும் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ளை தொடுவேன் என்று ஆவேச‌மாக‌ பேசின‌த‌ற்காக‌ க‌ருணாநிதி சீமானை ப‌ல‌ மாத‌ம் சிறையில் அடைத்தார்....................சீமான்  மீனாவ‌ர்க‌ள் மீதான‌ அக்க‌றையில் 14 வ‌ருட‌த்துக்கு முத‌ல் பேசினார்....................

சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டைக்கு போதை த‌லைக்கு மேல் ஏறினால் என்ன‌ செய்வாங்க‌ள் என்று நான் சொல்லி தெரிய‌ வேண்டிய‌த‌ல்ல‌ 

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்தில் கிளாலி க‌ட‌லில் வைச்சு எத்த‌னை த‌மிழ‌ர்க‌ளை சுட்டு வெட்டி கொன்ற‌வ‌ங்க‌ள்☹️.........................

பொருளாதாரத் தடைக்கும் நீங்கள் கூறுவதம் என்ன தொடர்பு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்…

உடான்ஸ் சாமியாய நமஹ…

மகனே…..

நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே…

அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது….

அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்…

எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே….

பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை.

புரிந்தவன் பிஸ்தா….

புரியாதவன் பாதாம்….

ஓம்…கிரீம்…டோநட்….

ஐசே க்றீம் என்பதை, கிறீஸ் போத்தல் என்று வாசித்து விட்டேன் வா. போன கிழமை கொஞ்சநாளா ஒரு கராஜிக்கு ஒடிடிங் செய்ய போனேவா, consumable stock ல் அங்க ஒரே க்றீஸ் போத்தல், லுப்ரிக‌ன்ட் பூசுதல், ஒயில் செஞ்சிங், ஜக் அடித்தல், வச‌லின் குப்பி, வேலை முடிய கைதுடைக்க கொட்டன் துணி  என ஒரே இந்த ஜராவா சாமன்கள் தான் வா

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, colomban said:

ஐசே க்றீம் என்பதை, கிறீஸ் போத்தல் என்று வாசித்து விட்டேன் வா. போன கிழமை கொஞ்சநாளா ஒரு கராஜிக்கு ஒடிடிங் செய்ய போனேவா, consumable stock ல் அங்க ஒரே க்றீஸ் போத்தல், லுப்ரிக‌ன்ட் பூசுதல், ஒயில் செஞ்சிங், ஜக் அடித்தல், வச‌லின் குப்பி, வேலை முடிய கைதுடைக்க கொட்டன் துணி  என ஒரே இந்த ஜராவா சாமன்கள் தான் வா

அதுக்காக கிறீஸ் போத்தலை இப்படியா உதைப்பீங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பிரச்சனை இரு பக்க தமிழர்கிடையே என்பது சரியே….

ஆனால் பிரச்சனையில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியிலும் கொழும்பிலும் மட்டுமே இருக்கு.

அந்த அளவுக்கு போகத் தேவையில்லை என்று தான் நான் நினைக்கிறேன். நாம் தமிழர் என்று மனச்சாட்சியுடன் இரு பகுதியும் சிந்தித்தால் அவர்கள் தேவையில்லையே?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அந்த அளவுக்கு போகத் தேவையில்லை என்று தான் நான் நினைக்கிறேன். நாம் தமிழர் என்று மனச்சாட்சியுடன் இரு பகுதியும் சிந்தித்தால் அவர்கள் தேவையில்லையே?

என்னதான் உங்கள் சகோதரனாக இருந்தாலும், உங்கள் வளவுக்குள் இருக்கும் தென்னை அனைத்தையும், உங்களை விட பெரிய இயந்திரத்தை பாவித்து மொட்டை அடிப்பது மட்டும் இல்லாமல், இனி வளர முடியாதவாறு குருத்தையும் கூட அரிந்து கொண்டு போனால்….

இதற்கு மேல் நீங்கள் எப்படி மனச்சாட்சியுடன் விட்டு கொடுக்க முடியும்?

தமிழ்நாட்டில் இருந்து வருபவை “பண முதலைகளின்” மல்டி-டே-டிரோலர்கள்.

அவர்களிடம் மனச்சாட்சி யாவது ஹைகோட்டாவது!

நாம் வேறு எதையும் கேட்பதில்லை. உங்கள் நாடு ஏற்கும் கோட்டுக்கு அப்பால் நில்லுங்கள் என்பதை மட்டுமே.

கப்பலில் பறப்பது இந்திய கொடி, பாகிஸ்தானோடு சண்டை என்றால் நெக்குருவது இந்தியன் ஆமிக்கு, கேவலம் கெட்ட இந்திய பாலியல் வல்லுறவு இராணுவத்தை அமரன் குமரன் என துதிப்பது…..

எம் மீன் வளத்தை சுரண்ட மட்டும் - தமிழன் ? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.