Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாப்பனய தேர்தல் மாவட்டத்தில் கனபேருக்கு இருக்கு ஆப்பு!😂

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது உத்தியோகபூர்வ தபால் முடிவுகள் வெளியாகின

10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்

https://thinakkural.lk/article/312030

இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

அதற்கமைய;

தேசிய மக்கள் சக்தி – 27,776 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,969 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1,528 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,031 வாக்குகள்

https://thinakkural.lk/article/312032

  • கருத்துக்கள உறவுகள்

அஇஅதிமுக வழக்கறிஞர் அணி - கெளரவம் மிக்க கருப்பு அங்கி...!!! ஒருவர் என்னதான்  வீராவேசமாகப் பேசுபவர் என்றாலும் நீதிமன்றம் என்றால் அவருக்கு ...M. A. Sumanthiran - Wikipedia

சுமந்திரன்... தனது பழைய  தொழிலுக்கு போக... 
இப்பவே  வக்கீல் உடையை தூசிதட்டி, அயன் பண்ணி வைக்கிறது நல்லது. 😂

அவரின்  பாராளுமன்ற கனவு... இம்முறை  நக்கிக்  கொண்டு  போகப் போகுது.  😂 animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

என் பி பி தனி பெரும்பான்மை என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது. அதற்கு மேல் எவ்வளவு என்பதே இனி கேள்வி என நினைக்கிறேன்.

👍...........

தனிப் பெரும்பான்மை எடுத்து விடுவார்கள் என்றே நானும் நினைக்கின்றேன்......... ஆனால், அதற்கு மேலே அதிகமாகப் போய் மூன்றில் இரண்டு எடுப்பது கொஞ்சம் கஷ்டமான விடயம் எங்களின் தேர்தல் முறையில்......... 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் அல்லவா?

ஓம் உடனடியாக இல்லை.

இப்படி யோசியுங்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஏன் இந்தியா போட்டது?

தமிழர் நலன் பேண? இல்லை.

அப்போ? தன் பிராந்திய நலன் பேண.

அதே பிராந்திய நலனை பேண இன்னுமொரு பிராந்திய-நலன்-பேணும் ஒப்பந்தத்தை இந்தியாவுட செய்து கொண்டு, இந்தியாவின் ஒப்புதலோடே 87 ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.

இதற்கு இந்தியாவை உடன்பட வைக்காமல் தடுக்கும் வலு எம்மிடம் தமிழ் நாட்டில் இப்போ இல்லை (87 இல் இருந்ததது).

ஜேபிவி மாகாணசபையை மிக மூர்க்கமாக கொல்கையலவில் எதிர்க்கும் அமைப்பு. 2/3 அதிலும் சில யாழ், மட்டு எம்பிகள் ஆதரவு இருப்பின், இந்தியாவை நெருக்க முடியும்.

அவர்களும் சீன பூச்சாண்டிக்கு பயந்து ஓம் படக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அஇஅதிமுக வழக்கறிஞர் அணி - கெளரவம் மிக்க கருப்பு அங்கி...!!! ஒருவர் என்னதான்  வீராவேசமாகப் பேசுபவர் என்றாலும் நீதிமன்றம் என்றால் அவருக்கு ...M. A. Sumanthiran - Wikipedia

சுமந்திரன்... தனது பழைய  தொழிலுக்கு போக... 
இப்பவே  வக்கீல் உடையை தூசிதட்டி, அயன் பண்ணி வைக்கிறது நல்லது. 😂

அவரின்  பாராளுமன்ற கனவு... இம்முறை  நக்கிக்  கொண்டு  போகப் போகுது.  😂 animiertes-gefuehl-smilies-bild-0090

சீப்பான காசுக்கு வருவாரோ...எனக்கு ஒரு கேசு இருக்கு....ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கண்ணா

2 minutes ago, goshan_che said:

ஓம் உடனடியாக இல்லை.

இப்படி யோசியுங்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஏன் இந்தியா போட்டது?

தமிழர் நலன் பேண? இல்லை.

அப்போ? தன் பிராந்திய நலன் பேண.

அதே பிராந்திய நலனை பேண இன்னுமொரு பிராந்திய-நலன்-பேணும் ஒப்பந்தத்தை இந்தியாவுட செய்து கொண்டு, இந்தியாவின் ஒப்புதலோடே 87 ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.

இதற்கு இந்தியாவை உடன்பட வைக்காமல் தடுக்கும் வலு எம்மிடம் தமிழ் நாட்டில் இப்போ இல்லை (87 இல் இருந்ததது).

ஜேபிவி மாகாணசபையை மிக மூர்க்கமாக கொல்கையலவில் எதிர்க்கும் அமைப்பு. 2/3 அதிலும் சில யாழ், மட்டு எம்பிகள் ஆதரவு இருப்பின், இந்தியாவை நெருக்க முடியும்.

அவர்களும் சீன பூச்சாண்டிக்கு பயந்து ஓம் படக்கூடும்.

கடன் தலக்கு மேலை இருக்கே...அண்ணச்சிதானே தாங்கணும்...அதாலை பழைய ஆட்கள் மாதிரி இழுத்து அடிப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

இது வரைக்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,...

General Election 2024 Result

Jathika Jana Balawegaya
76.1%
Jathika Jana Balawegaya

Votes - 125,855

Samagi Jana Balawegaya
 
11.6%
Samagi Jana Balawegaya

Votes - 19,242

New Democratic Front
 
5.5%
New Democratic Front

Votes - 9,146

Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Podujana Peramuna

Votes - 5,9223.6%

Sarvajana Balaya
Sarvajana Balaya

Votes - 2,3981.5%

People's Struggle Alliance
People's Struggle Alliance

Votes - 514

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாதவூரான் said:

இருக்கலாம். ஆனால் தற்போதைக்குநான் கேள்விப்பட்ட வரையில் ஜனவரிக்கு உள்ளூராட்சித் தேர்தலும் ஏப்பிரலுக்கு மாகாணசபைத் தேர்தலும்நடக்கலாம்

ஓம்…மெதுவாகத்தான் செய்வார்கள்.

மறுபடியிம் மாவட்ட சபைக்கு போகலாம், இதற்கு முஸ்லிம்கள், மட்டகளப்பில் கணிசமான தமிழர்கள், யாழில் குறிப்பிடதக்க அளவு தமிழர்கள் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன். 

திருமலை, அம்பாறை, வன்னி தமிழருக்கு ஆப்புத்தான். 

சகலதையும் “புதிய இலங்கை” கோசத்தால் பூசி மெழுகிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

சீப்பான காசுக்கு வருவாரோ...எனக்கு ஒரு கேசு இருக்கு....ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கண்ணா

இவர் என்ன வழக்கு என்றாலும்... காசு விஷயத்தில் கறாராக இருப்பார் என்று சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில்,  மாவை சேனாதிராசாவுக்காக வாதாடிய பொது நல வழக்கு ஒன்றில் "லம்பாக" கறந்து போட்டுத்தான் விட்டாரம்.   ஆன படியால்... நீங்கள் வேறை லோயரை பிடிக்கிறது நல்லது அல்வாயான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

👍...........

தனிப் பெரும்பான்மை எடுத்து விடுவார்கள் என்றே நானும் நினைக்கின்றேன்......... ஆனால், அதற்கு மேலே அதிகமாகப் போய் மூன்றில் இரண்டு எடுப்பது கொஞ்சம் கஷ்டமான விடயம் எங்களின் தேர்தல் முறையில்......... 

கொஞ்சம் அல்ல நிறையே கஸ்டம்.

77இல் கிடைத்த 2/3 ஐ வைத்து தன் இஸ்டபடி அரசியல் சட்டத்தை எழுதிய ஜே ஆர், அதன் பின் எவரும் அதை மாத்த கூடாது என கொண்டு வந்த தேர்தல் முறை இது.

ஆகவே இதில் எவருக்கும் 2/3 கிடைப்பது கடினம். ஆனால் தேர்தலுக்கு பின்னான கூட்டின் மூலம் மகிந்த இதை சாதித்து காட்டி 18ம் திருத்தத்தை நிறைவேற்றினார்.

8 minutes ago, alvayan said:

கடன் தலக்கு மேலை இருக்கே...அண்ணச்சிதானே தாங்கணும்...அதாலை பழைய ஆட்கள் மாதிரி இழுத்து அடிப்பினம்

இழுபடும் ஆனால் பழையோரை விட இதில் ஜேவிபி முனைப்புக்காட்டும்.

எல்லோரும் சும்மா இருக்க வழக்கு போட்டு வடக்கு-கிழக்கை பிரித்தவர்கள் அவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kalutara Cumulative

Jathika Jana Balawegaya

29,076 seats-2.png - 0

Jathika Jana Balawegaya 
78.99%78.99% Order
Samagi Jana Balawegaya

3,340 seats-2.png - 0

Samagi Jana Balawegaya 
9.07%9.07% Order
New Democratic Front

1,913 seats-2.png - 0

New Democratic Front 
5.20%5.20% Order
Sri Lanka Podujana Peramuna

1,160 seats-2.png - 0

Sri Lanka Podujana Peramuna 
3.15%3.15% Order
Sarvajana Balaya

613 seats-2.png - 0

Sarvajana Balaya 
1.67%1.67% Order
Generic placeholder image

708 seats-2.png - 0

Other
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இவர் என்ன வழக்கு என்றாலும்... காசு விஷயத்தில் கறாராக இருப்பார் என்று சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில்,  மாவை சேனாதிராசாவுக்காக வாதாடிய பொது நல வழக்கு ஒன்றில் "லம்பாக" கறந்து போட்டுத்தான் விட்டாரம்.   ஆன படியால்... நீங்கள் வேறை லோயரை பிடிக்கிறது நல்லது அல்வாயான். 😂

எதையோ சொல்லுறது...மலிஞ்சா ரோட்டுக்கு வருமென்று...வெயிட்  பண்ணி பார்த்து கோட்டடிக்கு போவம்..வேப்பமர நிழலிலை நிண்டாலும் நிற்பார்..😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

General Elections 2024: Kalutara, Postal;
NPP - 29,076
SJB - 3,340
NDF - 1,528
SLPP - 1,160
SB - 613- adaderana.lk

நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து)

. யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் அநுர 2/3  பெரும்பான்மையை தண்டுவார் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 15ல் இருந்து 17வரை இணைய வழங்கியினை மாற்றுவதால் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் புகழாரம்! - ஜே.வி.பி நியூஸ்

என்னப்பா.... இன்னும் தமிழ்ப் பகுதி, தபால் வாக்குகள் இன்னும் எண்ணி வரவில்லையா?
யாழ். மத்திய கல்லுரியில் வாக்கு எண்ணுகிறார்களா, நித்திரை கொள்ளுகிறார்களா.

சுமந்திரனை யாழ். மத்திய கல்லுரி வளவுக்குள் கால் வைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆளை... உள்ளுக்கு விட்டால்,  போனமுறை மாதிரி சுத்துமாத்து பண்ணிப் போடும். கவனம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது,

அனுராவுக்காக கூடிய யாழ் கூட்டம் தெனபகுதியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

களுத்துறை மாவட்ட தபால் மூல வாக்குகள்

image
 
களுத்துறை மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியாகியுள்ளன

தேசிய மக்கள் சக்தி - 29 076

ஐக்கிய மக்கள் சக்தி - 3340

பாராளுமன்றத் தேர்தல் 2024 : களுத்துறை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு :தேசிய மக்கள் சக்தி 29, 076 : ஐக்கிய மக்கள் சக்தி 3, 340 புதிய ஜனநாயக முன்னணி 1,913

WhatsApp_Image_2024-11-14_at_22.48.53.jp

https://www.virakesari.lk/article/198737

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து)

. யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.

இதைத் தான் பல வருடங்களாக இங்கே எழுதி வருகிறேன். இப்ப கண் கெட்ட பின்.....???

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது

உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே 

ஆம். உறுதிப்படுத்த நேரம் எடுக்கும்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இதைத் தான் பல வருடங்களாக இங்கே எழுதி வருகிறேன். இப்ப கண் கெட்ட பின்.....???

விசுகர்... இவர்களுக்காக தரித்து நின்ற பஸ்ஸை... ஏண்டாப்பில்  தவற விட்டு விட்டார்கள். 
இனி கைகாட்டி பிரயோசனம் இல்லை.

அடுத்த ஐந்து வருடத்துக்குள்....  இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப, 
ஆரோக்கியமான புது முகங்களை நிறுத்த  முயற்சி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.

தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.

செய்ய வேண்டிய பணி. அடம்பன் கொடியும் திரண்டால் தான் பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ஸ் டமில் தேசிய பிஸினஸ் புள்ளிங்கோஸ் எல்லோரும் அனுரவின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு வரிசை கட்டி  நிற்பதாகக் கேள்வி,.....😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது

இப்படி நடந்தால் தமிழ்த் தேசியத்தை கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு குப்புறபடுத்து தூங்கவேண்டியதுதான். புலம்பெயர் புண்ணியவான்கள் சும்மா இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும். கடந்த 15 வருடங்களாக மாறிமாறி குதிரைகளுக்கு பணம்கட்டியும் மாடுகளுக்கு கொம்பு சீவியும் விட்டதன் பெறுபேறு எனக்கொள்ளலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.