Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழில் வெற்றிபெற்ற என்பிபி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!  இனி வடக்கில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு இடமில்லை. என்பிபி மக்களை இலகுவாக தம் வசப்படுத்திவிடுவார்கள். இப்போது தென்னிலங்கைக்கு வடக்கு மக்கள் பிரிவினையை விரும்பவில்லை என்ற செய்தியினை அவர்களால் சொல்லமுடியும். அதன் மூலமாக ஒற்றையாட்சிக்குள் ஏதவது அதிகாரபரவலாக்கல் திட்டம் எதுவும் முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். இப்போது சுமந்திரன் இல்லை பார் சிறிதரனும் கஜேயும் நாடாளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றி கண்டீனில் வடிவாகச் சாப்பிட்டுவிட்டு வரலாம். 

சுமந்திரன் இல்லையாதலால் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப்போராளிகள் இன்னொரு போராட்ட இலக்கு ஒன்றினைத் தேடவேண்டும்.  இனி புலம்பெயர் பட்டாசு கோஷ்டிகள் பாடு திண்டாட்டம்தான்!😂

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

எனவே தான் ஆளும் தரப்புக்கு வாக்களித்தனர்.

இதை எப்பவோ செய்திருக்கலாம்.

ஜே ஆர் முதல் கோட்டா ரணில் வரை எல்லோருடனும் முரண்பட்டது ஏன்?

குறிப்பாக யாழில் 25% மட்டுமே என் பி பி பக்கம் சாய்ந்ததை வைத்து - இந்த முடிவுக்கு வர முடியாது.

யாழில் கூட மக்கள் உரிமை அரசியலுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ள நிலையில் - சிலர் 2 சீட் ஒரு போனஸ் சீட்சை வைத்து - எல்லாரையும் அனுரவின் பஸ்சில் ஏத்திவிட முனைவதாக தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் நானும் இதைக்கவனித்தேன்.

இரண்டு நாட்கள் முதலும் இதைப்பறிறி எழுதியிருந்தேன்.

தாங்களாகவே முடங்கினார்களா?

பொலிசாரால் முடக்கப்பட்டதா?

தெரியவில்லை.

பொலிசாரால் முடக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சுவைப்பிரியன் said:

எதிர் பாத்து பாத்து களைத்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஒரு மாவட்டத்தில் 25% ஏனையவற்றில் அதை விட குறைய - நீங்கள் சொல்லும் களைத்து போன தமிழ் வாக்காளரிம் எண்ணிக்கை.

இதை வைத்து எல்லாரையும் ஏன் அதே வர்ணம் தீட்ட முயல்கிறீர்கள்.

11 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் . சாண‌க்கிய‌ன் ம‌ற்றும் சில‌ரின் பெய‌ரை குறிப்பிட்டு சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் எழுதி நீங்க‌ள் இவ‌ர்க‌ள் போலி த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் என்று Bro

என‌க்கு ந‌ல்லா நினைவு இருக்கு🤔..................

12 minutes ago, நிழலி said:

எனக்கு நான் அப்படி எழுதவில்லை என்று நல்லா நியாபகம் இருக்கு.

சாணாக்கியன் மீது எனக்கு பெரு விருப்பு இல்லை, விமர்சனம் பலது உண்டு. 

ஆனால் பிள்ளையானின் செல்வாக்கை, கோட்டா ஆட்சியில் எதிர்த்து, பிள்ளையனை இப்போ தோற்கடித்த அரசியல் செய்வது சின்ன விடயம் இல்லை.

தமிழரசுக்கு தேவைப்படும் தலைவர் உள்ளதில் திறம் அவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கல்முனை புகழ் கரிஸ் தோல்வி
National People’s Power (NPP) 

1. Wasantha Piyathissa - 71,120
2. Manjula Ratnayake - 50,838 
3. Priyantha Wijeratne - 41,313
4. Muthumenike Rathwatte - 32,145

All Ceylon Makkal Congress (ACMC)

1. M.M Thahir - 14,511

Sri Lanka Muslim Congress (SLMC) 

1. Meerasahibu Uthumalebbe - 13,016

Ilankai Thamil Arasu Kachchi (ITAK) 

1. Kavindran Kodeeswaran - 11,962

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நடிகர் விஜகாந் மாதிரி.. விஜகாந்தையும் மக்களுக்கு பிடிக்கும்.. ஆனால் மெத்த படித்தவர்கள் பார்வையில் அவர் கோமாளி.. ஆனால் சாதரணமக்கள் தங்களில் ஒருவராக எளியவர் படிப்பறிவற்றவர் எண்டு பாத்தனர்.. 

உங்களுக்கு சாதாரணமக்களின் உளவியல் புரியல.. ஆட்டோ ஓட்டுறவன் மரக்கறி சந்த்தைக்காறனுக்கு இவ்வளவு படிச்சமனுசன் ஆனாலும் தங்களமாதிரி இருக்கே எண்டுதான் பார்ப்பார்கள்..

ப்ரோ,

அருச்சுனாவை இங்கே defend பண்ணி காலத்தை விரயமாக்காமல், முடிந்தால் ஊருக்குள் உள்ளவர்கள் மூலம் இவர்களை அடுத்த நிலைக்கு உந்த பாருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஒரு மாவட்டத்தில் 25% ஏனையவற்றில் அதை விட குறைய - நீங்கள் சொல்லும் களைத்து போன தமிழ் வாக்காளரிம் எண்ணிக்கை.

இதை வைத்து எல்லாரையும் ஏன் அதே வர்ணம் தீட்ட முயல்கிறீர்கள்.

எனக்கு நான் அப்படி எழுதவில்லை என்று நல்லா நியாபகம் இருக்கு.

நான் என்ன‌ பொய்யா சொல்லுறேன் Bro 

நீங்க‌ள் யாழில் அதிக‌மாய் எழுதிவிங்க‌ள் ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் சாண‌க்கிய‌ன் . சீமான் ப‌ற்றி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எழுதின‌து நினைவில் இருக்காது என்று நினைக்கிறேன்.......................

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

அதன் மூலமாக ஒற்றையாட்சிக்குள் ஏதவது அதிகாரபரவலாக்கல் திட்டம் எதுவும் முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.

மஹா சங்கத்தின் ஆதரவோடு? அப்ப அதில எதுவும் இருக்காது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 10 ஆம் பக்கத்தில் விட்டுட்டுப் போய் வந்து பார்த்தால், இப்ப 26 போகுது. ஆனால், a mixed bag of gifts போல  நல்ல, நல்லதல்லாத பல விடயங்கள் சில நடந்திருக்கின்றன:

1. சுமந்திரன், தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். எனக்கு ஏமாற்றம் தான், ஆனால் நான் அல்லவே வாக்காளன்?  எனவே, மக்கள் முடிவின் படி, அவர் மீள எந்த வழியிலும் தமிழ் அரசியலில் பங்கு பற்றாமல் விலகி விட வேண்டும். இனி பேச்சு, ஏச்சு கேட்க வேண்டியதில்லை. அவருக்கு நிம்மதி😂!

2. சாணக்கியன் வென்றிருக்கிறார். படிப்படியாக தமிழரசின் தலைமையை அடையும் வரை அவர் தொடர்ந்திருக்க வேண்டும்.

3. சிறிதரன், இனியாவது ஊழலை விட்டு விட்டு, கமுக்கமாகவாவது நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும்.

4. அர்ச்சுனா: இவரது வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அவர் புரிந்து கொள்வாரா என்பது தான் முக்கியமான கேள்வி😎. எல்லா இடத்திலும் அகலக் கால் வைக்காமல், லேசர் fபோகஸ் மாதிரி "மருத்துவ துறையில் முறைகேடான விடயங்கள், malpractice என்பன குறித்து புதிய சட்டங்களை இயற்ற, அல்லது இருக்கிற சட்டங்களை பலமாக்க முயற்சி செய்ய வேண்டும். அதை மட்டும் செய்தாலே முழு இலங்கைக்கும் பெரிய நன்மை செய்த பெருமை கிடைக்கும்.

5. NPP யில் தெரிவான தமிழ் உறுப்பினர்கள்: இவர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கும். இதை NPP யோடு இணைந்து இவர்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. மணல் கொள்ளை, போதை, மது வியாபாரங்கள், வாள் வெட்டு, பொலிசின் நேர்மை இவை போன்ற விடயங்கள் மிக அடிப்படையான baseline விடயங்கள்.

இதெல்லாவற்றையும் விட பெரிய பொறுப்பு, புலத் தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு இருக்கிறது: அது sit on your hands! இது வரை செய்ய முயன்று தோற்ற ரிமோட் கொன்ட்ரோல் அரசியலைக் கைவிட்டு விட்டு "உங்கள் பிள்ளை குட்டிகளைப் படிக்க வையுங்கள்" - நானும் அதைத் தான் செய்யப் போகிறேன்🤐

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

நான் என்ன‌ பொய்யா சொல்லுறேன் Bro 

நீங்க‌ள் யாழில் அதிக‌மாய் எழுதிவிங்க‌ள் ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் சாண‌க்கிய‌ன் . சீமான் ப‌ற்றி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எழுதின‌து நினைவில் இருக்காது என்று நினைக்கிறேன்.......................

 

யார் பொய் சொல்வது என்பதல்ல கேள்வி. 

தவிரவும் நான் எழுதிய பலதை நீங்கள் 180 பாகை எதிர் வழமாக விளங்கி கொண்டதும் முன்பு நடந்ததே.

எனவே அப்படி சொன்ன கருத்தை மீள பதியுங்கள். தொடர்ந்து உரையாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

யார் பொய் சொல்வது என்பதல்ல கேள்வி. 

தவிரவும் நான் எழுதிய பலதை நீங்கள் 180 பாகை எதிர் வழமாக விளங்கி கொண்டதும் முன்பு நடந்ததே.

எனவே அப்படி சொன்ன கருத்தை மீள பதியுங்கள். தொடர்ந்து உரையாடலாம்.

என‌க்கு நீங்க‌ள் எழுதின‌து நினைவி இருக்கு அது தான் உங்க‌ளிட‌ம் கேட்டேன்

இனி இதை ப‌ற்றி விவாதிக்க‌ விரும்ப‌ வில்லை இல்லை.................  

 

அள‌வோட‌ யாழில் எழுதும் என‌க்கு நான் என்ன‌ எழுதினேன் என்ற‌து எப்ப‌வும் நினைவில் இருக்கும்😁........................

*Total Tamil Representatives (Without National List)*

Badulla - 2

Matara - 1

Jaffna - 6

Batticaloa - 4

Nuwaraeliya - 4

Trincomalee - 2

Ratnapura - 1

Vanni - 4

Gampaha - 1

Digamadulla - 1

 

*Total - 26*

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

என‌க்கு நீங்க‌ள் எழுதின‌து நினைவி இருக்கு அது தான் உங்க‌ளிட‌ம் கேட்டேன்

இனி இதை ப‌ற்றி விவாதிக்க‌ விரும்ப‌ வில்லை இல்லை.................  

 

அள‌வோட‌ யாழில் எழுதும் என‌க்கு நான் என்ன‌ எழுதினேன் என்ற‌து எப்ப‌வும் நினைவில் இருக்கும்😁........................

எனக்கும் அப்படித்தான் நான் எழுதாதும், எழுதவில்லை என நினைவிருக்கும்.

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மத்தியகுழு சுமந்திரனையே விரும்புகிறது.

இருந்ததை இல்லாமல் செய்தார், இப்போது இருப்பதையும் இல்லாமல் செய்யவா ? 

தோற்றுப்போனால் தேசியப்பட்டியல் ஏற்று வரமாட்டேன் என்றவர் அல்லவா  அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எனக்கும் அப்படித்தான் நான் எழுதாதும், எழுதவில்லை என நினைவிருக்கும்.

சந்திப்போம்.

உங்க‌ள் அள‌வுக்கு நான் யாழில் அர‌சிய‌ல் திரிக்குள் எழுதுவ‌து மிக‌ குறைவு

சீமானின் பெய‌ரையும் அதில் எழுதின‌ ப‌டியால் தான் என‌க்கு இப்ப‌வும்  நினைவு இருக்கு

 

யாழில் சீமான் ப‌ற்றிய‌ திரி யாரும் திற‌ந்தால் அத‌ற்க்குள் அவ‌தூறு இருந்தா என் க‌ருத்தை முன் வைப்பேன் ம‌ற்ற‌ம் ப‌டி எல்லா திரிக்குள்ளும் மூக்கை நுழைக்கும்  ப‌ழ‌க்க‌ம்  என்னிட‌ம் இல்லை பிரோ🫤....................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

😁😁😁😁😁😁😁...................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

இதெல்லாவற்றையும் விட பெரிய பொறுப்பு, புலத் தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு இருக்கிறது: அது sit on your hands! இது வரை செய்ய முயன்று தோற்ற ரிமோட் கொன்ட்ரோல் அரசியலைக் கைவிட்டு விட்டு "உங்கள் பிள்ளை குட்டிகளைப் படிக்க வையுங்கள்" - நானும் அதைத் தான் செய்யப் போகிறேன்🤐

புலத்தமிழ் செயற்பாட்டாளருக்கு மட்டும் அல்ல. புலத்தமிழ் “எழுத்தாளர்” நமக்கும் தேவையான அறிவுரை.

கடந்த சில வருடங்களாகவே ஊர் அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை.

இந்த தேர்தல் இழுத்து வந்து விட்டது.

சரி உறவுகளே இன்னொரு திரியில் சந்திப்போம்.

————-

சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி.

ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா.

அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா.

சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு.

பொஹோமஸ் துதி.

எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா ! 

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

நான் மேலே கூறிய 6 இல் எதை வரட்டு தேசிய கொள்கை என்பீர்கள்?

நான்  வரட்டு தேசியம் என்று கூறியதில் பல கூறுகள் இருந்தாலும் உதாரணத்துக்கு ஒன்று,  எமக்கு சாதகம் இல்லாத ஒரு  அரசியல் சூழ்நிலையில் எமக்கு நன்மை பயக்கும் அரசியல் விடயங்களை  எதிர்த்தரப்பிடம் பேசிப் பெறுவதற்கு  சாதுரியமான  மென் அணுகுமுறையை பயன் படுத்தாமல், வாசலில் நின்று, தா என்று  கேட்டுவிட்டு, தாற எண்ட  இப்ப தா இல்லை எண்டா போயிருவன் என்று உணர்சசிவசப்பட்டு  கோபத்துடன் உடனடியாக  திரும்பிவந்து  கிடைக்காத அந்த விடயத்துக்காக காலமெல்லாம் புலம்பும் நடைமுறை என்பதும் இதற்குள் அடங்கும். 

இதை மேலும் ஒரு  இலங்கை வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறிப் புரிய வைக்க முயற்சிக்கிறேன். முன்பு    இலங்கை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கான வெட்டுப்புள்ளி 12.5 வீதமாக இருந்தது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழு  ஒரு உறுப்பினரை பெறுவதற்கு குறைந்தது 12.5 வீத வாக்குகளை பெற வேண்டும். அதை பெறாத குழுக்கள்/ கட்சிகள் போட்டியில் இருந்து நீக்கப்படும்.  இதனால் சிறுபான்மைக்கட்சிகள் குறிப்பாக முஸ்லீம் கட்சி பாதிக்கப்படுவதைக் கண்ட  மறைந்த  அஸ்ரப் 1988 ல் பிரேமதாசவுடன் இணக்கமாக பேசி குழையடித்து அதை 5 வீதமாக குறைப்பதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை பிரேமதாசவை கொண்டு செய்வித்தார்.  அதனால் அவரது கட்சி உட்பட சிறிய கட்சிகள் பலனடைந்தன. இப்போது கூட  பல சிறிய கட்சிகள் பலனடைவது அந்த சட்ட மாற்றத்தால் தான்.  கஜே கட்சியும் அர்சசனாவும் இத்தேர்தலில் பலனடைந்ததும் இதனால் தான். 

 தமிழ் தரப்புகளுக்கு இவ்வாறாக  சிறுக சிறுகப் பேசி எமக்கு சாதகமான விடயங்களை  பெற்றுக்கொள்ளும் திறமை உள்ளதா?

  இதையே தமிழ் தரப்பு என்றால் அதை வைத்து மக்களிடையே உசுப்பேற்றி  பிரச்சாரம் செய்து  அதற்கெதிராக  போராட்டம் என்று வாய் கிழிய கத்தி நாடகம் போட்டு சும்மா இருந்த  இனவாதிகளை தூண்டி அதை எதிர்க்கப்பண்ணி, அதை செய்ய விரும்பும் சிங்கள தலைவர்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுத்து செய்ய விடாமல் பண்ணி விட்டு பின்பு அன்றாடம்  அதைக் கூறிக் கூறி புலம்பிக்கொண்டிருப்பர். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

 

சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி.

ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா.

அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா.

சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு.

பொஹோமஸ் துதி.

எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா ! 

 

 

ஒபகே பிரத்தனவா இட்டு வேவ கியல மம பிராத்தனா கரனவ. ஒபகே அனாகத்த கட்டியுத்து வலட்ட சுப பத்தும். ஒபட்ட தெருவன் சரணாய்.

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி.

ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா.

அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா.

சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு.

பொஹோமஸ் துதி.

எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா !

படித்தவுடன் கிழித்துவிடவும் எண்ட கணக்கா படிச்சாச்சு கிழிச்சசாச்சு  என்று போகாம  படிச்சத தமிழ்ள எமக்கெல்லாம் புரியும் படி சொல்லிற்று  போறது. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-1464.jpg
12 பெண்களை மக்கள்  NPP க்காக தெரிவு செய்துள்ளார்கள்.

அதில் மூன்று தமிழ் பெண்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அதில் மூன்று தமிழ் பெண்கள்.

நான்கு தமிழ் பெயெர் கிடக்கே...

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

 

சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி.

ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா.

அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா.

சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு.

பொஹோமஸ் துதி.

எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா ! 

 

 

 

19 minutes ago, zuma said:

 

ஒபகே பிரத்தனவா இட்டு வேவ கியல மம பிராத்தனா கரனவ. ஒபகே அனாகத்த கட்டியுத்து வலட்ட சுப பத்தும். ஒபட்ட தெருவன் சரணாய்.

 

அம்மட்ட உடு..(அதான் எனக்கு தெரியும்)

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

நான்கு தமிழ் பெயெர் கிடக்கே...

ஓம். நீங்கள் சொல்லிய பின்புதான் வடிவாக கவனித்தேன் அல்வாயன். 
பதுளை,யாழ்ப்பாணம், மாத்தறை, நுவரேலியா என  நான்கு. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி.

ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா.

அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா.

சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு.

பொஹோமஸ் துதி.

எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா ! 

அப்பா "தனக்கெடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்று சின்ன வயதிலேயே சொன்னதால் எனக்கு சிங்களமும் தெரியாது. சிங்கள நண்பர்களும் கிடையாது. ராத்திரித்தான் Google Translate துணையுடன் “தோழர் அநுர” என்றால் “அநுர சகோதரய” என்று அறிந்தேன்😊

ஆகவே, அநுர சகோதரயவுடன் X தளத்தில் இணையவுள்ளேன்!

மெல்ல மெல்ல சிங்களம் பழகுவோம்☺️

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.