Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

🤣.................

வன்முறையான வழிகள் ஒன்றையும் நீங்கள் பிரேரிக்கவில்லை தானே, விசுகு ஐயா....................

அபத்தம் அபத்தம் 🤣

இது வன்முறை அல்ல மென்வலு பெண்மை மென்வலு பற்றியது😋

8 minutes ago, ரசோதரன் said:

🤣.................

வன்முறையான வழிகள் ஒன்றையும் நீங்கள் பிரேரிக்கவில்லை தானே, விசுகு ஐயா....................

 😋

Edited by விசுகு

  • Replies 96
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில

  • மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா

  • வாலி
    வாலி

    இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மத

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது.

1 முஸ்லிம்.

1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள்.

ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣.

@MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?

ஆம் தமிழர். தனிப்பட்ட ரீதியில் இவரை தெரியாது.

(இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது.

1 முஸ்லிம்.

1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள்.

ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣.

@MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?

இவர் ஒரு ஐயர் குடும்பம் என்று சில இடங்களில் சொல்லியிருந்தார்கள். இவரின் பேட்டி ஒரு பார்த்தேன், நன்றாகவே ஆங்கிலத்திலும் உரையாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு வழியாக,

கிழக்கு மாகாணத் தமிழருக்கு ஒரு பிரதி அமைச்சர்,

மலையகத்தமிழருக்கு இரு கபினெட் அமைச்சர்கள் + ஒரு பிரதி அமைச்சர்,

முஸ்லிம்களுக்கு ஒரு பிரதி அமைச்சர் + பிரதி சபாநாயகர் கிடைத்துள்ளது.

5 எம்பிகள், 2 தேர்தல் மாவட்டங்களை அள்ளி கொடுத்த வடக்கு மாகாணத்துக்கு - குச் நஹி🤣.

அதுவும் 3 எம்பிகளை அள்ளி கொடுத்து, புதிய ஒன்றுபட்ட இலங்கையை வரவேற்ற யாழ்ப்பாண தமிழருக்கு….

சூப்பிய பனங்கொட்டை கூட இல்லையாம்🤣.

நாகவிகாரை 😁 விகாராதிபதியின் காலில் விழுந்ததெல்லாம்  கனவா கோபாலு.....

காத்தான் குடியிலை வெடி வெடியாம்...பார்லிமென்டில் உச்சத்தில் இருக்கிறா பதவியும் (பிரதிச்சபாநாயகர்)...சிங்களவனிடம் ஒட்டி உறவாடும் (ஹேசிய ந்ல்லிணக்கம்) கிடைத்திட்டுதாமெல்லே..இனி நாம பால்சோறூம் ..கட்டா சம்பலும்தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்...  வெளி உலக  பிரச்சினைகளை சமாளிக்க,  
அந்த இனத்தவனை போட்டு..  பிரச்சினையை அடங்கச் செய்வதில் சிங்களவன் கெட்டிக்காரன்.

நம்ம கதிராமர் செய்யாததையா இவை செய்யப்போகினம்...நம்ம சூமரே தேசிய்ம் வாயில் சொல்லிக்கொண்டு...வவுத்தால எத்தனை நஞ்சை கக்கினவர்...பார்ப்பமே என்ன நடக்குதெண்டு..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இந்தானால்தான் அங்கயன், டக்கிளஸ், பிள்ளையானை விட என் பி பி எம்பிகளும் அவர்களின் காலில் விழும் அரசியலும் நம் இன இருப்புக்கு ஆபத்தானது.

உண்மை ...இன்று அவுஸ்ரேலியாவில் பூர்வீக குடிகளை முற்றாக அழிந்துவிட்டார்கள் ...ஆனால் புலம்பெயர்ந்த சகல இனத்தவரும்(எங்கன்ட பிள்ளகள் உடபட),வெள்ளைகளும் பொது மேடைகளில் ஏறி "இந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக இனங்களுக்கு(அந்த கிராமத்தில் வாழந்த இன குழுமங்களின் பெயர்களை) மரியாதை செலுத்துகிறோம் " என கூறுவார்கள்..

அதுபோன்ற நிலை எமமக்களுக்கு வராமல் இருக்க வேணும் ....200 வ்ருடங்களுக்கு பின்பு சிங்கள மொழியில் "இந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளாகிய யாழ்ப்பாணீஸுக்கு மரியாதை செலுத்துகிறோம்" என சொல்லாமல் இருக்க எல்லாம் வல்ல புத்த பகவான் டமிழ் மக்களுக்கு அருள் புரிய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கை தமிழ்  இனம் அழியவேண்டிய இனம் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை.
ஸஹ்ரான் கூட குறிவைத்தது இலங்கை தமிழர்களை மட்டுமே  

மற்றவர்கள் அழியவேண்டும் என நினைக்கும் மனப்பாண்மையே இலங்கையின் அழிவிற்கு காரணமாக இருந்துவந்துள்ளது, சிங்களவர்கள் தமிழர்களும் இஸ்லாமியர்கள் அழிய வேண்டும் என நினைக்கிறார்கள், தமிழர்களும் இஸ்லாமியர்களும் தமக்கிடையே மற்றவர்கள் அழிய வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஸஹ்ரான்? பிள்ளையான் என கூறுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

மற்றவர்கள் அழியவேண்டும் என நினைக்கும் மனப்பாண்மையே இலங்கையின் அழிவிற்கு காரணமாக இருந்துவந்துள்ளது,

மாற்றுக்கருத்தில்லை நம்மை ஒடுக்குவதில் சிங்களவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பங்காற்றிய ஒருகூட்டத்திற்கு ஆதரவாக நிற்பதென்பது நம்மை நாமே செருப்பால் அடித்துக்கொள்வதற்கு சமம்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றுபாருங்கள் அப்போது தெரியும்  எப்படி உங்களையும் சிங்களவனையும் கோர்த்துவிட்டு அவன் எஸ்கேப் ஆகுவான் என்று. அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் அவனுக்கு ஆதரவாக போனதற்காக  மட்டும் திரும்ப சிங்களவனிடம் இருந்து வெழுவை விழும்   

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2024 at 20:45, goshan_che said:

இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர்.

கோசான் எனக்கொரு ச‌ந்தேகம். இல‌ங்கை வம்சாவழி தமிழவர்கள் என்பவர்கள் யார்? என்ன வரைவிலக்கணம்?
(இங்கு நீங்கள் வடக்கு கிழக்கு என ப்ரக்கடில் போட காரணம் என்ன?)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

கோசான் எனக்கொரு ச‌ந்தேகம். இல‌ங்கை வம்சாவழி தமிழவர்கள் என்பவர்கள் யார்? என்ன வரைவிலக்கணம்?
(இங்கு நீங்கள் வடக்கு கிழக்கு என ப்ரக்கடில் போட காரணம் என்ன?)

வணக்கம் கொழும்பான்.

இப்போ வேலைக்கு வெளிகிடுகிறேன். விரிவாக எழுத வேண்டிய விடயம். 

பின்னர் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

கோசான் எனக்கொரு ச‌ந்தேகம். இல‌ங்கை வம்சாவழி தமிழவர்கள் என்பவர்கள் யார்? என்ன வரைவிலக்கணம்?
(இங்கு நீங்கள் வடக்கு கிழக்கு என ப்ரக்கடில் போட காரணம் என்ன?)

இலங்கை வம்சாவழி என்பதை வரைவிலக்க்கணப்படுத்த முன்னம், இந்திய வம்சாவழி தமிழர் யார் என்பதை வரைவிலக்கணம் செய்வது அவசியம் என நினைக்கிறேன்.

1. இலங்கைக்கு 1815 (ஒன்றுபட்ட இலங்கை ஆங்கிலேய ஆட்சி) இன் பின், இந்தியாவில் இருந்து வந்து, குடியேறி வாழ்பவர்களின் சந்ததிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் எனலாம். இவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும் - இவர்களின் அடையாளம் இதுவாகவே இருக்கும்.  இவர்கள் மலையகத்தில் பெருமளவிலும், மேற்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும், இதர தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசிக்கிறனர்.

இவர்களில் சிறிய தொகையினர் இனவன்முறை, நாடு கடத்தலில் தப்பிக்க என வடக்கு கிழக்கில் வந்து வாழ்ந்து, பதிவு அடிப்படையில் அந்த மாகாண வாக்காளர்/மக்கள் என உருமாறிவிட்டனர். எனிலும் இவர்களை சமூக பார்வையில் அவர்களை சூழ இருக்கும் இலங்கை வம்சாவழி தமிழ் சமூகம் இன்றும் இந்திய வம்சாவழி என்றே கருதுகிறது.

இந்த இந்திய வம்சாவழி மக்கள் பண்பாட்டில் தற்போதைய தமிழ் நாட்டு மக்களின் கண்ணாடி பிரதிகளாக இருக்கிறனர். குறிப்பாக இவர்களின் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டை, சாதி பெயர்களை குறிப்பிடலாம்.

2. இவர்கள் அல்லாத - 1815 க்கு முன்பிருந்தே மூதாதைகள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை வம்சாவழி.  இவர்கள் பண்பாடும், மத அனுஸ்டானங்களும், உணவுகளும், சாதிய முறைகளும் தமிழ் நாட்டு/ இந்திய வம்சாவழி தமிழர்களை விட பெரிதும் வேறுபட்டும், சில இடங்களில் மலையாளிகளோடு ஒத்தும் இருக்கும்.

இவர்களைத்தான் 1815 க்கு முன் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரும், போத்துகேயரும் தமது பதிவுகளில் மலபாரி வசிப்பாளர் Malabari inhabitants என்றனர். இவர்களின் சந்ததியினரே இலங்கை வம்சாவழி தமிழர்.

யாழ்பாணம், வன்னி, திருமலை, மட்டு-அம்பாறை என இவர்கள் இருப்பது யாரும் அறிந்ததே. பலர் அறியாத விடயம், முந்தல் போன்ற இடங்களில் இன்றும் உள்ளவர்களும், நீர்கொழும்பு-மன்னார் வரையான கடலோரத்தில் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று கீழ்நாட்டு சிங்களவராக அடையாளம் மாறிய தமிழரும் இலங்கை வம்சாவழியே (1815 க்கு முன்).

ஆகவே இவர்களும் ஒற்றை பண்பாட்டில் உள்ளவர் அல்ல.

3. இந்த பகுப்பு வெறும் மூதாதைகள் இலங்கைக்கு வந்த காலத்தின் அடிப்படையிலானது மட்டுமே.

ஆங்கிலத்தின் since records began என்பார்கள் - இந்திய வம்சாவழியினர் இலங்கை வந்தது பதிவுகள் ஆரம்பமான பின்.

இலங்கை வம்சாவழியினர் பதிவுகள் ஆரம்பிக்கும் போதே (when records began) இந்த மண்ணில் வாழ்கிறார்கள் (குளக்கோட்டன், யாழ்பாண அரசு, வன்னிமைகள்).

அவர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் (time immemorial/ pre historic times) தொட்டு வாழும் பூர்வகுடிகளா என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வி. ஆனால் திசமாராம தொல்பொருட்கள் - இப்படி இருக்கலாம் என ஊகிக்க வைக்கிறன. 

  • கருத்துக்கள உறவுகள்

4. மேலே சுட்டிய  விடயங்கள் இலங்கையில் இரு வேறு தமிழர் பகுப்புகள் உள்ளதை காட்டி நிற்கிறன.

இந்த பகுப்பு ஒன்றும் தனியே 1815 ஐ ஒட்டிய தொழில் நுட்ப பகுப்பு மட்டும் அல்ல. பண்பாடு, மதம், சாதிய கட்டமைப்பை போலவே  இந்த ஒரு பகுப்பினரதும் அரசியலும் மிகவும் வேறுபட்டதாக உள்ளது.

இலங்கை வம்சாவழியினர் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்கிறனர். வடக்கு கிழக்கை தம் பாரம்பரிய வாழிடமாக கருதுகிறனர். இதன் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கோரி நிற்கிறனர்.

இந்த எந்த அபிலாசைகளும், பாரம்பரிய வாழிடத்துக்கான உரிமை கோரலும் இந்திய வம்சாவழியினரிடம் இல்லை.

ஆகவே இலங்கை அரசியல் என வரும் போது இவ்விருதரப்பையும் ஒரே சட்டியில் வறுக்க முடியாது.

இந்திய வம்சாவழிக்குள் கூட மேலக, மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வேறுபட்டாலும், நிலத்துடன் பிணைந்த இலங்கை வம்சாவழியின் தமிழ் தேசிய அரசியல் அங்கே இல்லை.

இந்த அடிப்படையில்தான் இலங்கை வம்சாவழியை குறிக்கும் போது பிரக்கெட்டில் வடக்கு-கிழக்கு என எழுதினேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இதை மிக இலகுவாக ஒரு விடயம் மூலம் உணரலாம்.

நான் நினைக்கிறேன் மனோ கணேசன் இந்தியா வழங்கும் Persons of Indian Origin கார்ட் வைத்துள்ளவர் என.  இது கிட்டதட்ட இந்தியாவில் permanent residence வைத்திருப்பதை போன்றது.

தலை கீழாக நிண்டு தண்ணி குடித்தாலும் எனக்கு இந்த கார்ட் எடுக்க முடியாது. ஏன் என்றால் என் தாத்தா அல்லது அவர் தந்தை இந்தியாவில் பிறக்கவில்லை.

ஆகவே மனோ - இந்திய வம்சாவழி

நான் - இந்திய வம்சாவழி இல்லை

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

நான் ஒரு இலங்கை பூர்வீக தமிழன் என்பதை நிறுவ எவ்வளவு சுத்தி சுத்தி வரவேண்டியுள்ளது.... 😰

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விரிவான பதில் கோஷன். ஆனால் இது பிரக்டிகலாக இருக்காது என நினக்கின்றேன்.
என்னுடைய பிறப்பத்தட்சி பதிவில். என்னை இல‌ங்கை தமிழர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
என்னுடை பெற்றோர் இருவரும் கொழும்பிலே பிறந்தவர்கள். ஆனால் என்னுடையா தாய்வழி, தந்தைவழி தாத்தா, பாட்டிமார்கள் பிரித்தானிய காலனித்துவகாலத்தில் தொழிலுக்காக‌ இங்கு வந்து தங்கிவிட்டவர்கள். குடியுரிமை கிடைத்த பிற்பாடு அவர்கள் தாங்களை இலங்கை தமிழராகவே அடையாளப்ப்டுத்தி கொண்டார்கள்.

நீங்கள் இந்திய permanent residence பற்றி குறிப்பிட்டது உண்மை, என்னுடைய இளைய தங்கையிடம் இந்த PR உண்டு என நினக்கின்றேன். மதுரையில் என்னுடைய பாட்டியின் deed extract மூலம் இதை நிருபிக்க கூடியதாக இருந்தது என நினக்கின்றேன்.

ஆக பிறப்பத்தாட்சி பேப்பரில் நான் இலங்கை தமிழன், ஆனால் உண்மையில் இந்திய வம்சாவளி தமிழன்.

ஐசே, மச்சான் பேரு மதுர....வா, மைனர் குஞ்சி வா...

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2024 at 12:15, goshan_che said:

29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது.

1 முஸ்லிம்.

1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள்.

ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣.

@MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?

On 21/11/2024 at 19:45, MEERA said:

ஆம் தமிழர். தனிப்பட்ட ரீதியில் இவரை தெரியாது.

(இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது)

images?q=tbn:ANd9GcRMJrgnR37Tki-jIwqxoQz

Deputy-Minister-1.jpeg

திருகோணமலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக  தேர்தெடுக்கப் பட்ட அருண் ஹேமச்சந்திர என்ற தமிழர்... வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றார்.

இவர்  பிரதி அமைச்சர் என்றாலும்... ஓரு கனமான அமைச்சிற்குத்தான் நியமிக்கப் பட்டுள் ளார்.  

இவரது தந்தை யாழ்.மத்திய கல்லுரியில் கல்வி கற்றவர். அவர் ஒரு வைத்தியர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனகுத் தெரிந்த  ஒருவர்,  * * * * குமார் என்று  முடியும் தனது பெயரை,
* * * * குமார என்று மாற்றி வைத்தார். 
அதற்குப் பிறகு அவருக்கு, வாழ்க்கையில்  ஒரே ஏறு முகம் தான்.
தனது பதவியில் உச்சத்தை தொடும் மட்டும் சென்றார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2024 at 10:19, colomban said:

நல்ல விரிவான பதில் கோஷன். ஆனால் இது பிரக்டிகலாக இருக்காது என நினக்கின்றேன்.
என்னுடைய பிறப்பத்தட்சி பதிவில். என்னை இல‌ங்கை தமிழர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
என்னுடை பெற்றோர் இருவரும் கொழும்பிலே பிறந்தவர்கள். ஆனால் என்னுடையா தாய்வழி, தந்தைவழி தாத்தா, பாட்டிமார்கள் பிரித்தானிய காலனித்துவகாலத்தில் தொழிலுக்காக‌ இங்கு வந்து தங்கிவிட்டவர்கள். குடியுரிமை கிடைத்த பிற்பாடு அவர்கள் தாங்களை இலங்கை தமிழராகவே அடையாளப்ப்டுத்தி கொண்டார்கள்.

நீங்கள் இந்திய permanent residence பற்றி குறிப்பிட்டது உண்மை, என்னுடைய இளைய தங்கையிடம் இந்த PR உண்டு என நினக்கின்றேன். மதுரையில் என்னுடைய பாட்டியின் deed extract மூலம் இதை நிருபிக்க கூடியதாக இருந்தது என நினக்கின்றேன்.

ஆக பிறப்பத்தாட்சி பேப்பரில் நான் இலங்கை தமிழன், ஆனால் உண்மையில் இந்திய வம்சாவளி தமிழன்.

ஐசே, மச்சான் பேரு மதுர....வா, மைனர் குஞ்சி வா...

தனிப்பட்ட ரீதியில் அனைவரையும் இலங்கை தமிழர் என அழைப்பதே எனக்கு விருப்பமான தெரிவு - ஆனால் இப்படி செய்தால் மலையக/மேலக தமிழர்களின் நலனை யாழ் மையவாதத்துள் போட்டு அமுக்கவும் வாய்ப்புகள் உண்டு.

வடக்கு-கிழக்கு தமிழர் ஒற்றுமையை தக்க வைக்க, யாழ் மையவாதத்திடம் கிழக்கு தமிழர் இழந்தது அதிகம்.

இதே போல் ஒரு நிலை உங்களுக்கு தேவையா?

வடக்கு, கிழக்கு தமிழருக்கு ஒரே அணியாக தமிழ் தேசியத்தின் கீழ் அணி திரள்வதுதான் - அவர்கள் தேசிய இன இருப்பை தக்க வைக்க ஒரே வழி.

ஆனால் மலையக, மேலக தமிழர்களின் அரசியல் அபிலாசை - ஒரு சிறுபான்மை இனக்குழுவாக இலங்கைக்குள் சம உரிமை கோருவது - இவர்களோடு உங்களை சேர்த்து கொள்வது - உங்களுக்கு இருப்பதையும் கெடுக்கும் வேலையாய் முடியும்.

செளமியமூர்த்தி தொண்டமான் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து விலகி ஆனால் தொடர்ந்தும் வடக்கு-கிழக்கு அரசியல் கட்சிகளோடு நல்லுறவில் இருந்தார். புலிகளை ஒரு போதும் எதிர்த்ததில்லை, புலிகளும் எதிர்த்ததில்லை. மனோவும் அப்படியே.

இதெல்லாம் இவ்விரு மக்களின் அபிலாசைகள், தேவைகள் வேறுபட்டவை என்பதாலேயே.

செளமியமூர்த்தி, சந்திரசேகரன், இப்போ ஜீவன், 2ம் சந்திரசேகரன், மனோ - உண்மையில் கடந்த 75 ஆண்டில் வடக்கு-கிழக்கு தமிழ் தலைவர்களை விட, தம் மக்களுக்கு இவர்கள் சாதித்தது மிக அதிகம்.

இப்போதைக்கு நீங்கள் உங்கள் தனிதன்மையை பேணுவதே உங்கள் நலனுக்கு நல்லது என நான் நினைக்கிறேன்.

பிகு

1. உங்கள் பிறப்பு சான்றிதழ் உங்கள் பெற்றார் சொன்ன தகவல் அடிப்படையில்தான் பதியப்படும். நான் கூட என் மகனை இந்திய வம்சாவழி என பதிய முடியும் என நினைக்கிறேன்.

2. அண்மையில் முஸ்லிம்களின் சதவீதத்தை குறைத்து காட்ட, இரு தமிழரையும் ஒன்றாக காட்டும் முஸ்தீபுகள் சிங்கள தரப்பால மேற்கொள்ள படுவதாக கேள்விப்பட்டேன்.

ஒரு காலத்தில் தமிழரை குறைக்க -மலையக தமிழரை நாடு கடத்தியோர், இப்போ இப்படி செய்கிறார்கள். எல்லாம் அவர்கள் இன நலனின் அடிப்படையிலேயே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRMJrgnR37Tki-jIwqxoQz

Deputy-Minister-1.jpeg

திருகோணமலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக  தேர்தெடுக்கப் பட்ட அருண் ஹேமச்சந்திர என்ற தமிழர்... வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றார்.

இவர்  பிரதி அமைச்சர் என்றாலும்... ஓரு கனமான அமைச்சிற்குத்தான் நியமிக்கப் பட்டுள் ளார்.  

இவரது தந்தை யாழ்.மத்திய கல்லுரியில் கல்வி கற்றவர். அவர் ஒரு வைத்தியர்.

தகவலுக்கு நன்றி.

பிரதி வெளிவிவகார அமைச்சராக சர்வதேச விசாரணைகளை நானும் தமிழந்தான் என்ற போர்வையில் அடித்து நூத்து, அடுத்த முறை வெளிவிவகார அமைச்சர் ஆவார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி.

பிரதி வெளிவிவகார அமைச்சராக சர்வதேச விசாரணைகளை நானும் தமிழந்தான் என்ற போர்வையில் அடித்து நூத்து, அடுத்த முறை வெளிவிவகார அமைச்சர் ஆவார் என நினைக்கிறேன்.

May be an image of 1 person and text

ஓம். மேலுள்ள செய்தியும்,  நீங்கள் கூறியதைத்தான்...  சொல்கின்றது.
அப்படி செய்தாலும் தாயகத்தில் இருந்து பெரிய எதிர்ப்பு வராது என நினைக்கின்றேன்.

எங்களுடைய தமிழ் கட்சிகள்... அந்த  அளவுக்கு காரியத்தை கெடுத்து வைத்துள்ளார்கள்.
அத்துடன் எங்களுடைய "யூ - ரியூப்" தம்பிமாரும், அந்த மாதிரி அனுரா அரசுக்கு முட்டுக் கொடுப்பார்கள்.

ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலின் போது... சில "யூ - ரியூப்" தளங்களுக்கு 
250,000 ரூபாய் வரை கொடுக்கப் பட்டதாக சில செய்திகள் உலாவியது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இணைப்புக்கு நன்றி.

இதை ஹேரத் சொன்ன சிங்கள பேட்டியை பார்த்தேன். தமிழ் வடிவம் கிடைக்கவில்லை இணைக்க.

  • கருத்துக்கள உறவுகள்

468405777_3841773672819792_8803796129852

May be an image of 2 people and text

10 லட்சம் முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற்று வந்த இந்த அரசாங்கம்,
முஸ்லீம்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை இப்போதே ஆரம்பித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.