Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, குமாரசாமி said:

சிங்களம் தமிழர்கள் மீதான எத்தனையோ இனக்கலவரங்கள்,மனித அழிவுகளை செய்தது. அத்து மீறல் குடியேற்றங்களை செய்தது/செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே வைத்து ஆட்சி செய்கின்றது.இது போல் சிங்களத்தின்  தமிழர் மீதான அஜாரகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது சர்வதேசத்திற்கு தெரியாமல் இல்லை. இருந்தும் சர்வதேசம் இன்று வரை  இனவாத சிங்களம் சார்பாகவே நிற்கின்றது. இதற்கான காரணம் என்ன?

ஒரு காலத்தில் அரசியல் பிரச்சனையாகினும் சமாதான பிரச்சனையாகினும் தமிழீழ புலிகளை மேசைக்கு அழைத்து பேசியவர்கள் தான் அவர்களை அழிக்கவும் உதவினார்கள். அழிப்பின் முன் சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் எதையும் நிறைவேற்றவில்லை.சர்வதேசமும் அதைப்பற்றி திருப்பி கேட்கவில்லை. இல்லாத புலிகள் மீதான தடைகளும் நீக்கப்படவில்லை.தமிழர் பிரச்சனைகளும் நீக்கப்படவில்லை.ஈழத்தமிழர் என்றால் பயங்கரவாதிகள் என்ற பட்டங்களும் நீங்கவில்லை.சர்வதேசமும் இதை கண்டுகொள்ளவில்லை.

உண்மையான பயங்கரவாதிகள் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். ஆனால் உண்மையாக  விடுதலைக்காக போராடியவர்கள்பயங்கரவாதிகளாக்கப்பட்டு  நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். 

ஈழத்தமிழினம் பல வகைகளிலும் போராடி பார்த்தாகி விட்டது. இனி ஈழத்தமிழர்களுக்கு மடிப்பிச்சை எடுப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.

எமது தனித்துவம் எமக்கு தேவையோ இல்லையோ சிங்களத்துக்கும் சர்வதேசத்திற்க்கும் தேவை ....அந்த தேவை வரும்பொழுது அதை மீண்டும் ...தூசி தட்டி வெளிக்கொண்டு வருவார்கள்....

இப்ப ஆயுத முனையில் சிறிலங்கா பிரச்சனையை கையில் எடுக்க மாட்டார்கள் ... ஒரு காலத்தில் எடுத்தாலும் எடுக்கலாம்...ஆனால் நாங்கள் இருப்போமோ தெரியவில்லை அது வரைக்கும்...

சிரியாவை பாருங்கள் ...போர் தேவை என்றவுடன் சொல்லி வைச்சு அடிக்கின்றனர்...அமெரிக்கா,ரஸ்யா,துருக்கி என பெரிய நாடுகள் இருக்கும் நாட்டில் திடிரென ஆயுத கிளர்ச்சி 

  • Like 1
  • Replies 164
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

நிழலி

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

ரஞ்சித்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

இது @island ஐலண்ட் எடுக்கும் நிலைக்கு நேர் எதிரான நிலை.
 
ஆனால் நீங்கள் இருவரும் வந்து சேர்ந்துள்ள final destination ஒன்றேதான்.

அவர் எமது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோற்றதன் முழு அல்லது பாரிய பழியை புலிகள்+ஏனைய 75 வருட தலைவர்கள் மீது போட்டு, இனி மடிப்பிச்சைதான் (இலங்கை தேசியம்) ஒரே வழி என்கிறார்.

நீங்கள் அதே பழியை சர்வதேசம் (மேற்கு ரஸ்யாவை சொன்னால் உங்களுக்கு கோவம் வரும்) + புலிகள் தவிர் தலைமைகள் மேல் போட்டு, இப்போ மடிப்பிச்சைதான் ஒரே வழி என்கிறீர்கள். 

நீங்களும் ஐலன்டும் ஒரே இடத்தில் இருப்பது அபூர்வம், gentleman please enjoy each other’s company 🤣.

ஆனால் இன்னும் முன்நோக்கி பார்க்க அவகாசம் இருக்கிறது. மடிப்பிச்சைக்கு மேலேயும் பெற வாய்புண்டு.

இப்போதும் ஜனநாயக வழியில், முஸ்லிம்களுக்கு அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ கொடுத்து, புலம்பெயர் சமூகம், சகல புலத்து சக்திகளும் ஒன்றுபட்டால் - ஒரு காத்திரமான அதிகார பகிர்வு நோக்கி பேரினவாதத்தை தள்ள முடியும்.

ஆனால் அதற்கு பழசை மறந்து எல்லோரும் ஒரு அணியில் வரவேண்டும்.

மாவட்ட அதிகார சபையை விரிவு படுத்துவார்கள் மாகாணசபையை இல்லாது செய்வார்கள் ...மாகாண சபை தமிழரின் வீகிதாசாரம் அதிக மாக இருப்பதை உலகுக்குக்கு உணர்த்துகின்றது ஆகவே மாவட்ட அதிகாரசபைக்கு அதிகாரங்களை கொடுக்க முன் வருவார்கள் ஜெ.ஆர் உருவாக்க்கியது...தேர்தல்களும் மாவட்ட அடிப்படையில் இருப்பதால் ...யாழ் மாவட்டம் ,மட்டக்கிளப்பு மாவட்டம்..மட்டும் தமிழ் மாவட்டங்களாக இருக்கும்.... திருகோணமலை மாவட்டம்  75 வீத சிங்கள மாவட்டம் வட‌க்கையும் கிழக்கையும் தமிழர்கள் உரிமை கோர முடியாது....வன்னி ,முல்லைதீவு பல்லின சமுக மாவட்டம் ,மன்னார் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டம்....
தமிழருக்கு ஒர் இணக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பு தொடர்இல்லாமல் பண்ணுவதில் சிங்களம் வெற்றியடைந்து கொண்டே வருக்கிறது  ...இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கு இணையானவ்ர்கள் சிங்களவர்கள் ...

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/11/2024 at 11:50, நிழலி said:

மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள  அங்கு மிகவும் வரவேற்கின்றனர்.

வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.

இப்படித்தான் நடக்கப் போகின்றது..................

நாங்கள்  சுமந்திரனையும், சிறீதரனையுமே இன்னும் அடித்து முடியவில்லை. அடுத்ததாக யார் வரப் போகின்றார்கள் தேர்தல்களில் முன்னுக்கு நிற்க..................

இப்படிக் கைது செய்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்று ஒன்று தான் அவசியம் என்று இல்லை. கைது தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் வேறு சட்டங்களும் இருக்கின்றன.

அமெரிக்காவில் பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று இல்லை தானே............ 2009ம் ஆண்டின் பின்னர் ஒரு நாள் எங்களில் நாலோ ஐந்து பேர்களின் வீடுகளின் கதவுகள் ஒரு அதிகாலைப் பொழுதில் தட்டப்பட்டன.  அன்றுடன் அதுவரை இங்கு மிகப் பெரிதாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த மாவீரர் தினங்கள் அந்த வடிவில் முடிவுக்கு வந்தன.

ஆனாலும் ஒரு சிறு வட்டத்திற்குள் வருடா வருடம் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டேயிருக்கின்றோம், இந்த வருடம் உட்பட, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட படங்கள் இல்லாமல்..................    

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, ரசோதரன் said:

தானே............ 2009ம் ஆண்டின் பின்னர் ஒரு நாள் எங்களில் நாலோ ஐந்து பேர்களின் வீடுகளின் கதவுகள் ஒரு அதிகாலைப் பொழுதில் தட்டப்பட்டன.  அன்றுடன் அதுவரை இங்கு மிகப் பெரிதாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த மாவீரர் தினங்கள் அந்த வடிவில் முடிவுக்கு வந்தன.

4 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் என்ன ஹைகோர்டையா அகற்றுகிறீர்கள்?

இதற்கான விடை 2008 மாவீரர் நாள் உரையில் உள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது  முடிந்ததால் 16 ஆண்டுகளில் செய்திருப்பார்கள்.  🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.virakesari.lk/article/200132

மாவீரர் தினம் தொடர்பான பழைய காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்ட மூவர் கைது

Published By: DIGITAL DESK 2

01 DEC, 2024 | 05:31 PM
image
 
கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளனர். கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது  முடிந்ததால் 16 ஆண்டுகளில் செய்திருப்பார்கள்.  🙏

நாங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முடிந்ததை முழுமனதுடன் செய்தோமே, கந்தையா அண்ணா........

2009ம் ஆண்டுகளில் எத்தனை நாட்கள் இங்கிருக்கும் அமெரிக்க மத்திய அரச செயலத்தின் முன் நின்றிருக்கின்றோம். அங்கே அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கவேண்டும்.

அதற்கு அருகிலேயே எல்லா நாட்டுத் தூதரகங்களும் இருக்கின்றன, இலங்கைத் தூதரகம் உட்பட. இலங்கைத் தூதரகத்திலிருந்து ஆட்கள் வந்து எங்களைப் படமெடுத்துக் கொண்டு போவார்கள்.

ஒருநாள் இலங்கை தூதரகத்திலிருந்து ஒருவர் எங்களை பேட்டி எடுக்க வந்தார். ஹசீனா, லங்கா கார்டியன் என்று நினைக்கின்றேன். முன்னுக்கு நின்றவர்கள் நழுவிவிட்டார்கள். இவற்றை ஒழுங்கு செய்யாதவர்கள்,  ஆனால் ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும் என்ற விருப்புடன் அங்கே போயிருந்த இருவருடன் ஹசீனா கதைத்து விபரங்களை தெரிந்துகொண்டார்.

பின்னர் கோதபாயவின் அரசு வெளியிட்டிருந்த தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் அந்த இருவரின் பெயர்களும் விபரங்களுடன் இருந்தது....................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

இங்கே யாரும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று எழுதவில்லை அண்ணா.

உங்கட கோவணத்தையும் கழட்டி குடுத்துவிடாமலாவது இருங்கோ என்று தான் சொல்கிறார்கள்..

நான் என் கொள்கையை  தமிழினத்தின் கொள்கையை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை.நிகாரிக்கவுமில்லை. சிறிய இடைவெளி பற்றி மட்டுமே எழுதினேன்.இலங்கையிலும் இந்த கோணத்தில் தான் தமிழ்மக்கள் இருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன். 
ஆனால் நீங்கள் கோவணத்தில் வந்து நிற்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமல்  கேட்க்கிறேன் ஜே வி  பி நாட்டை பிரித்து தர  சொல்லி போராடினார்களா?...அவர்களது போராட்டமும்,எமது போராட்டமும் எப்படி ஒன்றாகும்

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs

இதாரிது? எங்கையோ கேட்ட குரலாய் கிடக்கு....🙂

f12112d45a4c19b3f4464036b2f91e4e.jpg

Edited by குமாரசாமி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

நாங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முடிந்ததை முழுமனதுடன் செய்தோமே, கந்தையா அண்ணா........

2009ம் ஆண்டுகளில் எத்தனை நாட்கள் இங்கிருக்கும் அமெரிக்க மத்திய அரச செயலத்தின் முன் நின்றிருக்கின்றோம். அங்கே அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கவேண்டும்.

அதற்கு அருகிலேயே எல்லா நாட்டுத் தூதரகங்களும் இருக்கின்றன, இலங்கைத் தூதரகம் உட்பட. இலங்கைத் தூதரகத்திலிருந்து ஆட்கள் வந்து எங்களைப் படமெடுத்துக் கொண்டு போவார்கள்.

ஒருநாள் இலங்கை தூதரகத்திலிருந்து ஒருவர் எங்களை பேட்டி எடுக்க வந்தார். ஹசீனா, லங்கா கார்டியன் என்று நினைக்கின்றேன். முன்னுக்கு நின்றவர்கள் நழுவிவிட்டார்கள். இவற்றை ஒழுங்கு செய்யாதவர்கள்,  ஆனால் ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும் என்ற விருப்புடன் அங்கே போயிருந்த இருவருடன் ஹசீனா கதைத்து விபரங்களை தெரிந்துகொண்டார்.

பின்னர் கோதபாயவின் அரசு வெளியிட்டிருந்த தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் அந்த இருவரின் பெயர்களும் விபரங்களுடன் இருந்தது....................... 

ஒம. இதோ மாதிரி நாங்களும் ஜேர்மனியில் செய்தோம்   பலன் பூச்சியம். .....நான்  அளுத்தம். அதாவது  இலங்கை அரசாங்கம் செயல்பட வைக்கும் அளுத்தம்  இதை  இலங்கையிலுள்ள தமிழர்கள் சரி  புலம்பெயர் தமாழர்கள்  சரி செய்ய முடியுமா?? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம்.

ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து  பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை.

இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல

பலஸ்தீனர்களின் போராட்டம் மாதிரி எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இவர்கள் சண்டைக்காரர்கள்/குழப்பகாரர்கள் என்ற பெயர் ஈழத்தமிழர்களும் எடுக்காத வரைக்கும் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, Kandiah57 said:

அதாவது  இலங்கை அரசாங்கம் செயல்பட வைக்கும் அளுத்தம்  இதை  இலங்கையிலுள்ள தமிழர்கள் சரி  புலம்பெயர் தமாழர்கள்  சரி செய்ய முடியுமா?? 🙏

புலத்தில் இருக்கும் தமிழர்களோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களோ அப்படியான ஒரு அழுத்தத்தை இலங்கை அரசின் மீது ஏற்படுத்தும் பலம் இல்லாதவர்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். இது ஏலவே தேய்ந்து இன்று ஒரு கட்டெறும்பு, சிற்றெறும்பு நிலைக்கு வந்துவிட்டது.

பல கருத்துகளை கருத்துகள் சொல்பவர்களின் நம்பிக்கைகளாகவும், அந்த நம்பிக்கைகளை தாங்கி நிற்கும் ஒரு வகைப் பிரச்சாரங்களாகவும் தான் எடுக்கவேண்டும் போல. ஒரு மதப் பிரச்சாரம் போல.  

Edited by ரசோதரன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:

இப்படிக் கைது செய்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்று ஒன்று தான் அவசியம் என்று இல்லை. கைது தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் வேறு சட்டங்களும் இருக்கின்றன.

அவசரகால சட்டம் இல்லாத காலத்தில் அதிக தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

நான் என் கொள்கையை  தமிழினத்தின் கொள்கையை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை.நிகாரிக்கவுமில்லை. சிறிய இடைவெளி பற்றி மட்டுமே எழுதினேன்.இலங்கையிலும் இந்த கோணத்தில் தான் தமிழ்மக்கள் இருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன். 
ஆனால் நீங்கள் கோவணத்தில் வந்து நிற்கின்றீர்கள்.

ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியை மடியில் வைத்திருந்தால் அதற்கு பெயர் இடைவெளியா அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியை மடியில் வைத்திருந்தால் அதற்கு பெயர் இடைவெளியா அண்ணா?

உங்கள் அரசியல்/போராட்ட அனுபவத்தில் அனுர அரசு ஈழத்தமிழர்களுக்கு என்ன கெடுதல்களை செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள் விசுகர்?
அதாவது மகிந்த,ரணில்,மைத்திரி,கோத்தபாய போன்றவர்களை விடுத்து...?

அதிலும் இன்று இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடியில்.......?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, ரசோதரன் said:

பல கருத்துகளை கருத்துகள் சொல்பவர்களின் நம்பிக்கைகளாகவும், அந்த நம்பிக்கைகளை தாங்கி நிற்கும் ஒரு வகைப் பிரச்சாரங்களாகவும் தான் எடுக்கவேண்டும் போல. ஒரு மதப் பிரச்சாரம் போல

உண்மை தான்
ஆனால் தாங்களே பின்பற்றாதவைகளை உதாவாது என்று தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு சரி என்று சொல்லி பிரசாரமாக   நடத்தபடுவதும் நடைபெற்று கொண்டிருக்கின்றது 😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான்
ஆனால் தாங்களே பின்பற்றாதவைகளை உதாவாது என்று தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு சரி என்று சொல்லி பிரசாரமாக   நடத்தபடுவதும் நடைபெற்று கொண்டிருக்கின்றது 😟

நீங்கள் சொல்வது விற்பனைக்கான அல்லது வியாபாரத்துக்கான விளம்பரங்கள் அல்லது முன்னேற்ற நடவடிக்கைகள் போன்ற ஒன்றை. இதன் பின்னால் இலாப நோக்கம் ஒன்று இருக்கும். பொதுவாகவே இவை பொய்கள் தான், அதனால் தானே விளம்பரங்கள் தேவைப்படுகின்றன................

நம்பிக்கைகள் ஞாயிறு காலைகளில் என் கதைவை தட்டுபவர்களிடம் உள்ளவை. அவர்கள் தீர்க்கமாக நம்புகின்றார்கள், கண்களைப் பார்த்திருக்கின்றேன். எங்களையும் அவர்கள்  நம்புவதை நம்பும்படி அவர்கள் சில வேளைகளில் வாதிடுகின்றார்கள், சில வேளைகளில் மன்றாடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@Kandiah57 @ரசோதரன்

புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது….

புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ…

புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை.

அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள்.

தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம்.

ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது.

இனியும் திருந்தவாய்ப்புள்ளது.

வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.

Edited by goshan_che
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமல்  கேட்க்கிறேன் ஜே வி  பி நாட்டை பிரித்து தர  சொல்லி போராடினார்களா?...அவர்களது போராட்டமும்,எமது போராட்டமும் எப்படி ஒன்றாகும்

ஜேவிபி நாட்டை ஒட்டு மொத்தமாக கியூபா போல், ஜனநாயகமற்ற ஒரு கம்யூனிச நாடாக்க போராடினார்கள்.

புலிகள் நாட்டின் ஒரு பகுதியை தமிழீழ குடியரசாக்க போராடினார்கள்.

சோசலிச ஜனநாயக இலங்கை குடியரசின் இருப்புக்கு இரெண்டு போராட்டங்களும் ஏற்படுத்திய ஆபத்து ஒரே மாதிரியானதே.

ஆனால் வேறுபாடு

ஒன்று பெளத்த சிங்கள மேலாண்மையை பேணும்,

மற்றையது நாட்டின் வட-கிழக்கில் இந்த மேலாண்மைக்கு சாவு மணி அடிக்கும்.

இந்த வேறுபாடுதான், இருவரையும் வேறு விதமாக கையாள அடிப்படை காரணம்.

புலிகளை போல, ருகுணு தனிராச்சியம் கோரி தெற்கில் ஒரு சிங்கள் குழு போராடி இருந்தால் -அதுவும் கூட ஜேவிபி போல் மன்னிக்கப்பட்டிருக்கும்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

@Kandiah57 @ரசோதரன்

புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது….

புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ…

புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை.

அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள்.

தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம்.

ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது.

இனியும் திருந்தவாய்ப்புள்ளது.

வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.

உங்கள் விளக்கங்கள் தற்கரீதியானவை..நியாயமானவை... யாழ்களம் இப்போது ஒரு மாயையில் ..சிக்கித்தவிக்கிறாது...இதனை 2009 ற்கு பின் மகிந்த ,ரணில், மைத்திரி,கோட்டா..காலத்தில் அடித்த மழைதான் இப்ப அடிக்குது..இதுவும் நீண்டநாள்  நிலைக்காது....காலவோட்டம் பதில் சொல்லும்

தற்சமயம் கொழும்பில்

கல்வியமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம் - மோதல் ! பொலிசார் காயம் !

தொடங்கிவிட்டது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

2009ம் ஆண்டின் பின்னர் ஒரு நாள் எங்களில் நாலோ ஐந்து பேர்களின் வீடுகளின் கதவுகள் ஒரு அதிகாலைப் பொழுதில் தட்டப்பட்டன.  அன்றுடன் அதுவரை இங்கு மிகப் பெரிதாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த மாவீரர் தினங்கள் அந்த வடிவில் முடிவுக்கு வந்தன.

ஓகோ... கதவை தட்டினத்திற்கே பதுங்கிய வீர மறவர்கள் தான் 
புலிக்கொடியை போர்த்திக்கொண்டு முகநூலில் பயர் விடுகினமா.  அங்க பதுங்கிக்கொண்டு தாயகத்தில் மக்கள் போராடவேண்டும் இவர்கள் சொல்வதில் தப்பேயில்லை. 
முதலில் ஈழ தமிழர்கள் மங்கோ மடையர்ஸ் மாதிரி சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
எமது போராட்டத்தை எவ்வளவு பெரிய விலை கொடுத்து சிங்களவன் ஒழித்தவன் என்பது எமக்கு தெரியுமல்லவா...? அப்படிப்பட்ட விலை கொடுத்தவன் கண்கொத்தி பாம்பாக தான் இருப்பான். 
அது யாழ்ப்பாண/கிழக்கு தமிழர்களின் ஆஸ்தான நாயகன்  அனுர வந்தாலும் சரி தேசிக்காய்களின் ஆஸ்தான நாயகன் பொன்சி வந்தாலும் சரி. இந்த அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் உணர்ச்சிவேகத்தில் முகப்புத்தக லைக்குகளை அள்ள ஸ்டண்ட் அடித்தால் சிலவேளை மாமியார் வீட்டுக்களி அவர்களுக்கு இந்த பொதுஅறிவை கற்பிக்கும். நாங்கள் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அரசியல் கிடைப்பதை எடுத்து உங்கள் புள்ளைகுட்டிகளை படிக்கவையுங்கள். எப்பவுமே கிடைக்காத மட்டன் பிரியாணிக்காக கிடைக்கும் குஸ்காவையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பட்டினி படுக்காதீர்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மட்டன் பிரியாணியை பெற்றுத்தர ஆண்டவனால் கூட முடியாது. இந்த புலம்பெயர்ஸ் எல்லாம் மட்டனும் வேணாம் மண்ணாங்கட்டியும்  வேணாம் எண்டு இருப்பது முப்பது வருஷத்திற்கு முன் இடத்தை காலி பண்ணிய கோஷ்ட்டி அவர்கள் டோமஹாவ்க் ஸ்டேக்கை ஐரோப்பிய அமேரிக்க ஸ்டைலில் உள்ளவிட்டுக்கொண்டு  நீங்கள் பட்டினி படுத்தால் தான் தீர்வு வரும் என்று  கதையடிப்பார்கள். இவர்களுக்கு நீங்கள் ஆய்வுகூட எலிகள் மட்டுமே. உங்களுக்கு என்ன நடந்தாலும் அவர்களுக்கு போச்சு ஒரு ஹைகோர்ட்    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

ஜேவிபி நாட்டை ஒட்டு மொத்தமாக கியூபா போல், ஜனநாயகமற்ற ஒரு கம்யூனிச நாடாக்க போராடினார்கள்.

புலிகள் நாட்டின் ஒரு பகுதியை தமிழீழ குடியரசாக்க போராடினார்கள்.

சோசலிச ஜனநாயக இலங்கை குடியரசின் இருப்புக்கு இரெண்டு போராட்டங்களும் ஏற்படுத்திய ஆபத்து ஒரே மாதிரியானதே.

ஆனால் வேறுபாடு

ஒன்று பெளத்த சிங்கள மேலாண்மையை பேணும்,

மற்றையது நாட்டின் வட-கிழக்கில் இந்த மேலாண்மைக்கு சாவு மணி அடிக்கும்.

இந்த வேறுபாடுதான், இருவரையும் வேறு விதமாக கையாள அடிப்படை காரணம்.

புலிகளை போல, ருகுணு தனிராச்சியம் கோரி தெற்கில் ஒரு சிங்கள் குழு போராடி இருந்தால் -அதுவும் கூட ஜேவிபி போல் மன்னிக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்கே தெரியுது தனி நாடு கேட்ட படியால் தான் புலிகள் முழுமையாகவே அழிக்கப்பட்டார்கள் என்று இத்தகு மேல் கதைப்பதற்கு ஒன்னுமேயில்லை ...சிங்களவர்கள் எப்பவுமே நாட்டை பிரித்து கேட்க மாட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

@Kandiah57 @ரசோதரன்

புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது….

புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ…

புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை.

அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள்.

தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம்.

ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது.

இனியும் திருந்தவாய்ப்புள்ளது.

வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.

ஆமாம் விளங்குகின்றது    மாற்றுக்கருத்துக்கள் இல்லை பலரும் செயல்பட ஆர்வத்துடன் இருக்க கூடும்  இதை செய்ய கூடாது என்று யாரும் சொல்லவில்லை  மீண்டும் சொல்லுகிறேன்   செய்யக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை  

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் இருந்து கொண்டு செயய முடியாது   என்று தான் சொல்லுகிறோம். 

உலகில்…………… இலங்கைக்கு எதிரி நாடுகள் உண்டா???  இருந்தால் அங்கிருந்து செயல்படலாம்     

சீனா இலங்கையின் நண்பன் 

இந்தியாவும் இலங்கையின் நண்பன் 

அமெரிக்கா இலங்கையின் நண்பன் 

ரஷ்யா கூட இலங்கையின் நண்பன்   உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் நண்பர்கள் 

தமிழர்கள் நட்பு நாடுகளை  ஆதரவு நாடுகளை கொண்டிருக்கிறார்களா?? 

கனடாவில் ஒரு நினைவு தூபியினை அமைக்க இலங்கை எதிர்க்கிறது   நல்லிணக்கம் பதிக்க்கும். என்று காரணம் சொல்கிறார்கள்   

லண்டன் பாரிஸ் இல். ஒரு அமைப்பாக இயங்கி  பிரித்தானியா   பிரான்ஸ் ஆதரவை பெற முடியுமா??  அனுமதிப்பார்களா??? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, alvayan said:

தற்சமயம் கொழும்பில்

கல்வியமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம் - மோதல் ! பொலிசார் காயம் !

தொடங்கிவிட்டது...

அது எல்லாம் சிங்கல பிரதேசத்தில் ஆரம்பமானது. யாழ்பாணத்திலும் யாழ்களத்திலும் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் பலமிக்க நிலையில் உள்ளது  அப்படி நடைபெற அனுமதிக்காது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரதி said:

உங்களுக்கே தெரியுது தனி நாடு கேட்ட படியால் தான் புலிகள் முழுமையாகவே அழிக்கப்பட்டார்கள் என்று இத்தகு மேல் கதைப்பதற்கு ஒன்னுமேயில்லை ...சிங்களவர்கள் எப்பவுமே நாட்டை பிரித்து கேட்க மாட்டார்கள் 

நீங்கள் மேலோட்டமாக தெரிவதை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் இதற்கு மேல் கதைக்க ஒண்டும் இல்லத்தான்.

புலிகள் 1/3 ஐ பிரிக்க போராடினார்கள்.

ஜேவிபி 3/3 ஐயுமே பிடித்து கம்யூனிச நாடாக்க போராடியது.

ஆகவே ஆபத்து ஒன்றேதான்.

வித்தியாசம் - ஜேவிபி பெளத்த சிங்கள மேலாண்மையை ஏற்றதும் புலிகள் ஏற்காததும்தான்.

புலிகள் பெளத்த சிங்களவர்களாக இருந்து தனிநாடு கோரி இருந்தாலும் ஜேவிபி போல் மீள ஏற்று கொள்ளப்டிருப்பார்கள்.

4 hours ago, Kandiah57 said:

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் இருந்து கொண்டு செயய முடியாது   என்று தான் சொல்லுகிறோம்.

நான் செய்யலாம், செய்யவேண்டியது என சொல்லுவது எதுவுமே நாம் இருக்கும் நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது அல்ல.

4 hours ago, Kandiah57 said:

தமிழர்கள் நட்பு நாடுகளை  ஆதரவு நாடுகளை கொண்டிருக்கிறார்களா?? 

ஏன் உருவாக்க முடியாது - நாம் இருக்கு நாடுகளில் இருந்து ஆரம்பிக்கலாம்.

மேற்கில் இலங்கையின் இந்த நட்புவட்டம் ரஜீவ் கொலை, 1994 இல் கதிர்காமர் வருகையோடுதான் கட்டி எழுப்பபட்டது.

ஏன் நம்மால் மட்டும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

புலிகள் பெளத்த சிங்களவர்களாக இருந்து தனிநாடு கோரி இருந்தாலும் ஜேவிபி போல் மீள ஏற்று கொள்ளப்டிருப்பார்கள்.

ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதி, கண்டிய சிங்கள பகுதி, எஞ்சிய சிங்கள கரையோர பகுதி என இலங்கை மூன்று சம்ஸ்டிகளாக பிரிக்கப்பட வேண்டும், ஒரு கொன்பெடரேசன் ஆக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த பண்டாரநாயக்க, பின்னர் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தை ஏற்றதால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டு, தலைவரும் ஆகினார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.