Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்   அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு  முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு  பிரதியிடப்பட்ட கடிதம் மூலம்  அறியத்தரப்பட்டுள்ளது என மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1410527

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டாயம் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பது நியதி இல்லை என நினைக்கிறேன்.

யாழில் 3 எம்பிகள் என்பிபிக்கு இருக்கும் போது தலைவராக தெற்கில் இருந்து ஒருவரை போடுவதன் பிண்ணனி வெளிப்படையானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி ஒரு வடக்கன் உயர்குடி யாழ்ப்பாண மக்களுக்கு தலைமையேற்ற முடியும். கடந்த காலங்களில் ஒருங்கமைப்பு தலைவர்களாக இருந்த பார் அங்கஜன், ஒட்டுக்குழு டக்கிலஸ் விட கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து அடிமடட மக்களுக்கு உழைத்த இராமலிங்கம் எவ்வளவோ திறம் .

  • Thanks 1
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

கட்டாயம் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பது நியதி இல்லை என நினைக்கிறேன்.

யாழில் 3 எம்பிகள் என்பிபிக்கு இருக்கும் போது தலைவராக தெற்கில் இருந்து ஒருவரை போடுவதன் பிண்ணனி வெளிப்படையானது.

இது தமிழர்களை தமிழர்களோடு உரசவிட நூல் விடும் ஏற்பாடு. அவர்கள் நினைத்ததை விட அதிகமான பலனை கொடுக்கத் தொடங்கி இருப்பது யாழ் களத்திலும் காணக்கிடைக்கிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

உழவு இயந்திர விபத்து - உயிர்தப்பிய இளைஞன் வௌியிட்ட விடயம்

அம்பாறை, கார்த்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றுமொரு பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று (30) காலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில், 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"மத்ரசா பாடாசலையிலிருந்து காரைத்தீவுக்கு பஸ்ஸில் வந்தோம். அப்போது மாலை 3.30 மணி இருக்கும். அங்கு இருந்தவர்கள் உழவு இயந்திரத்தை கொண்டு ஆட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்கள். நாங்கள் 11 பேர் உழவு இயந்திரத்தில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும், வெள்ளப்பெருக்கு காரணமாக டிராக்டரின் முன் சக்கரம் ஒரு பக்கமாக சரிந்தது. உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீருக்குள் வீழ்ந்தோம்.அப்போது உழவு இயந்திரம் முழுவதுமாக மூழ்கியது. அந்நேரத்தில் ஒரு அண்ணன் வந்து இரண்டு பேரை இழுத்துக் காப்பாற்றானார். நான் அங்கிருந்து விரைந்து சென்று அருகில் இருந்த மரத்தைப் பிடித்தேன். பின்னர் மரத்தில் ஏறினேன். ஒரு படகு அருகில் வந்தது. நான் கத்தினேன், கேட்கவில்லை. மீண்டும் அந்த படகு சென்றுவந்ததை அவதானித்தேன். அப்போது கத்தினேன், அவர்கள் வந்தார்கள். நான் படகில் ஏற்றப்பட்டேன். நடந்ததைச் சொன்னதும் அவர்கள் போய்ப் பார்த்தார்கள். அப்போதும் ஒருவர் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. பின்னர் என்னை கரைக்கு அழைத்து வந்தார்கள்"

https://tamil.adaderana.lk/news.php?nid=196673

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்தியரசின் ஒருபலமான அமைச்சர் தலைவராக இருப்பதும் சிலவேளை நன்மை பயக்கலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

இது தமிழர்களை தமிழர்களோடு உரசவிட நூல் விடும் ஏற்பாடு. அவர்கள் நினைத்ததை விட அதிகமான பலனை கொடுக்கத் தொடங்கி இருப்பது யாழ் களத்திலும் காணக்கிடைக்கிறது.

அப்படி இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

இது தமிழர்களை தமிழர்களோடு உரசவிட நூல் விடும் ஏற்பாடு. அவர்கள் நினைத்ததை விட அதிகமான பலனை கொடுக்கத் தொடங்கி இருப்பது யாழ் களத்திலும் காணக்கிடைக்கிறது.

ஐயா, என்கருத்தில் என்ன குறை கண்டீர் என தாங்கள் செம்புள்ளி குத்தியுள்ளீர், சொற்குற்றமா, பொருட்குற்றமா? . 😋

ஒருசில எலும்பு துண்டுகளுக்காக, தமிழ் மக்களை காட்டியும், கூட்டியும் கொடுத்த கருணா, டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை விடவா இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் நியமனம் தமிழர்களை தமிழர்களோடு உரசவிடப் போகின்றது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இதை யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல.

கூடுதலாக பாதிக்கப்பட்டது கஸ்டப்பட்ட மக்களே.

எனவே அவர்களுக்கு யார் குத்தியாவது அரிசியாகட்டும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் செய்ய மாட்டேன். மற்றவன் செய்யவும் விடமாட்டேன்”. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இதை யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல.

கூடுதலாக பாதிக்கப்பட்டது கஸ்டப்பட்ட மக்களே.

எனவே அவர்களுக்கு யார் குத்தியாவது அரிசியாகட்டும்.

அதே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, zuma said:

ஐயா, என்கருத்தில் என்ன குறை கண்டீர் என தாங்கள் செம்புள்ளி குத்தியுள்ளீர், சொற்குற்றமா, பொருட்குற்றமா? . 😋

ஒருசில எலும்பு துண்டுகளுக்காக, தமிழ் மக்களை காட்டியும், கூட்டியும் கொடுத்த கருணா, டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை விடவா இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் நியமனம் தமிழர்களை தமிழர்களோடு உரசவிடப் போகின்றது.

சில சொற்களை உபயோகத்திற்கு கொண்டு வராதீர்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, zuma said:

எப்படி ஒரு வடக்கன் உயர்குடி யாழ்ப்பாண மக்களுக்கு தலைமையேற்ற முடியும். கடந்த காலங்களில் ஒருங்கமைப்பு தலைவர்களாக இருந்த பார் அங்கஜன், ஒட்டுக்குழு டக்கிலஸ் விட கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து அடிமடட மக்களுக்கு உழைத்த இராமலிங்கம் எவ்வளவோ திறம் .

சுமா,

தயவு செய்து இந்த பொய் பித்தலாட்ட கதைகள் வேண்டாம்.

1. மட்டகளப்புக்கு ஒரு யாழ் எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும், 

2. நுவரலியாவுக்கு ஒரு மட்டகளப்பு எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும் எவ்வளவு பிழையோ அதை ஒத்த பிழைதான் இதுவும்.

இது அதிகாரபரவலாக்கம், localism சம்பந்தமானது. மாகாண அதிகாரம், மாநில சுயாட்சி கூட கொடுக்க வேண்டாம்….அந்த மாவட்ட மக்களின் மாவட்ட ஒருங்கிணைப்பை அந்த மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேற்கொள்வதே முறை.

இது ஜனநாயகத்தின் அடிப்படை.

டக்ளஸ், அங்கயன், விஜயகலா எல்லோரும் அந்த மாவட்ட மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்.

சந்திரசேகரன் அப்படியல்ல.

இது குறித்து எழுதுவது பிரதேசவாதம் அல்ல - குறித்த மாவட்ட மக்களை மட்டம் தட்டி, மலையக மக்களோடு அவர்களை கோத்து விடும் கீழான பேரினவாத அரசியலை வெளிக்காட்டுகிறோம் அவ்வளவே.

முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை ஏன்? ஏன் என்றால் தகுதியான முஸ்லிம் எம்பிகள் என் பிப்பியில் இல்லை.

அதே போல் யாழிலும் ஒரு தகுதியான என் பி பி எம்பி இல்லை?

யாழ்மாவட்டத்தில் ஒரு முன்னாள் MS இருக்கிறார். அவரோடு ஒப்பீடு செய்தால் சந்திரசேகரனின் நிர்வாக அனுபவம் என்ன?

ஏன் அவரை போட முடியாது? இதுதான் கேள்வி.

எனக்கு தெரியும் பல வெள்ளை இனத்தவர் அனுரவை விட ஜனாதிபதியாக தகுதி உள்ளவர்கள் - ஏன் அவர்களை இலங்கை ஜனாதிபதியாக்குவதுதானே?

6 hours ago, RishiK said:

மத்தியரசின் ஒருபலமான அமைச்சர் தலைவராக இருப்பதும் சிலவேளை நன்மை பயக்கலாம். 

டக்லஸ் வச்சிருந்த அதே சொப்பன சுந்தரி கடற்தொழில் அமைச்சுத்தான் இவருக்கும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இதை யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல.

கூடுதலாக பாதிக்கப்பட்டது கஸ்டப்பட்ட மக்களே.

எனவே அவர்களுக்கு யார் குத்தியாவது அரிசியாகட்டும்.

1 hour ago, குமாரசாமி said:

அதே....

யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்றால் துரையப்பாவையே குத்த விட்டிருக்கலாம் இல்லையா?

நாம் ஒவ்வொருவரும் நாட்டிலும், வெளிநாட்டிலும் அரிசி முக்கியமா, அபிலாசை முக்கியமா என முடிவுக்கு வரவேண்டும்.

பெரும்பான்மையின் முடிவு அரிசிதான் எண்டால் சரி ஏற்கலாம்.

உண்மையிலேயே மேலே சந்திரசேகரனை நியமித்ததன் பின்னால் உள்ள பிரித்தாளும் தந்திரம் உங்களுக்கு விளங்கவில்லையா?

நாளைக்கு ஹிஸ்புல்லாவை யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்கினால் அதையும் வரவேற்று, எதிர்ப்போரை மதவாதிகள் என்பீர்களா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

கட்டாயம் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பது நியதி இல்லை என நினைக்கிறேன்.

யாழில் 3 எம்பிகள் என்பிபிக்கு இருக்கும் போது தலைவராக தெற்கில் இருந்து ஒருவரை போடுவதன் பிண்ணனி வெளிப்படையானது.

8 hours ago, விசுகு said:

இது தமிழர்களை தமிழர்களோடு உரசவிட நூல் விடும் ஏற்பாடு. அவர்கள் நினைத்ததை விட அதிகமான பலனை கொடுக்கத் தொடங்கி இருப்பது யாழ் களத்திலும் காணக்கிடைக்கிறது.

சரியான கருத்துக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, goshan_che said:

சுமா,

தயவு செய்து இந்த பொய் பித்தலாட்ட கதைகள் வேண்டாம்.

1. மட்டகளப்புக்கு ஒரு யாழ் எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும், 

2. நுவரலியாவுக்கு ஒரு மட்டகளப்பு எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும் எவ்வளவு பிழையோ அதை ஒத்த பிழைதான் இதுவும்.

இது அதிகாரபரவலாக்கம், localism சம்பந்தமானது. மாகாண அதிகாரம், மாநில சுயாட்சி கூட கொடுக்க வேண்டாம்….அந்த மாவட்ட மக்களின் மாவட்ட ஒருங்கிணைப்பை அந்த மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேற்கொள்வதே முறை.

இது ஜனநாயகத்தின் அடிப்படை.

டக்ளஸ், அங்கயன், விஜயகலா எல்லோரும் அந்த மாவட்ட மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்.

சந்திரசேகரன் அப்படியல்ல.

இது குறித்து எழுதுவது பிரதேசவாதம் அல்ல - குறித்த மாவட்ட மக்களை மட்டம் தட்டி, மலையக மக்களோடு அவர்களை கோத்து விடும் கீழான பேரினவாத அரசியலை வெளிக்காட்டுகிறோம் அவ்வளவே.

முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை ஏன்? ஏன் என்றால் தகுதியான முஸ்லிம் எம்பிகள் என் பிப்பியில் இல்லை.

அதே போல் யாழிலும் ஒரு தகுதியான என் பி பி எம்பி இல்லை?

யாழ்மாவட்டத்தில் ஒரு முன்னாள் MS இருக்கிறார். அவரோடு ஒப்பீடு செய்தால் சந்திரசேகரனின் நிர்வாக அனுபவம் என்ன?

ஏன் அவரை போட முடியாது? இதுதான் கேள்வி.

உங்களுடைய கதையை கேட்டால் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று தான் பரசூட் மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கியவர் போல் உள்ளது. அவர் கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து முழு நேர அரசியல் செய்கின்றார். 2015, 2020 பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி/NPP சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டி இட்டு கணிசமான  அளவு வாக்குகள் பெற்றவர் ஆவர். அந்த மண்ணில் பிறந்தவர்கலே தலைமை தங்க வேண்டும் என்பது கடைந்தெடுத்த பிரதேசவாதமாகும். இப்படித்தான் கருணாவும் யோசப் பரராஜசிங்கத்துக்கு எதிராக பிரதேசவாதம் பேசி 2004 தேர்தலில் அவர் தேறற்கடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பாட்டர்.

Edited by zuma
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்றால் துரையப்பாவையே குத்த விட்டிருக்கலாம் இல்லையா?

நாம் ஒவ்வொருவரும் நாட்டிலும், வெளிநாட்டிலும் அரிசி முக்கியமா, அபிலாசை முக்கியமா என முடிவுக்கு வரவேண்டும்.

பெரும்பான்மையின் முடிவு அரிசிதான் எண்டால் சரி ஏற்கலாம்.

எல்லாவற்றுக்கும் காரணம் முதல் 30 ஆண்டு கால  எதிர்பார்ப்பு இடைவெளி....
அடுத்தது 2009க்கு பின்னரான 10 ஆண்டுகள் இடைவெளி......

எதுவுமே நடக்கவில்லை. அழிவுகளை தவிர.......
செயற்கை அழிவுகளோடு இயற்கை அழிவுகளுடனும் தொடர்ந்து மக்கள் போராட வலுவில்லை.
இயதலாத கட்டத்தில் மக்கள் புதியதை எதிர்பார்க்கின்றார்கள் ஏதாவது ஒரு விடியல் வராதா என.....

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, zuma said:

உங்களுடைய கதையை கேட்டால் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று தான் பரசூட் மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கியவர் போல் உள்ளது. அவர் கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து முழு நேர அரசியல் செய்கின்றார். 2015, 2020 பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி/NPP சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டி இட்டு கணிசமான பெற்றவர் ஆவர். அந்த மண்ணில் பிறந்தவர்கலே தலைமை தங்க வேண்டும் என்பது கடைந்தெடுத்த பிரதேசவாதமாகும். இப்படித்தான் கருணாவும் யோசப் பரராஜசிங்கத்துக்கு எதிராக பிரதேசவாதம் பேசி 2004 தேர்தலில் அவர் தேறற்கடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பாட்டர்.

அந்த மண்ணில் பிறந்தவர் என நான் எங்கும் எழுதவில்லை.

அந்த மாவட்ட மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்.

சந்திரசேகரன் இந்த தேர்தலிலும் யாழில் நின்று வென்றிருந்தால் - அப்போ இந்த கேள்வியே எழுந்திராது.

இதை பிரதேசவாதம் என்று நீங்கள் கூறினால், நம்மை நாமே நிர்வகிக்க வேண்டும் என இந்த உலகில் ஒலிக்கும் அத்தனை குரல்களும் பிரதேசவாதம் என்றாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லிம்கள், வடக்கு-கிழக்கு மாகாண தமிழர் மீது மிக மோசமான இன ஒதுக்கலை கடைப்பிடிக்கிறது இந்த அரசு.

இதை கேள்வி கேட்டால்- கேட்க்கும் வாய்களை பிரதேசவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என வாயை மூடப்பண்ணும் முயற்சி.

————-

எங்கள் மாவீரகள் -

இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்…

போர்களம் புகுந்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்…

இந்த நெருப்பை ஈரசாக்குகள் அணைக்க முடியாது.👇

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் வரும்,.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

அந்த மண்ணில் பிறந்தவர் என நான் எங்கும் எழுதவில்லை.

அந்த மாவட்ட மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்.

சந்திரசேகரன் இந்த தேர்தலிலும் யாழில் நின்று வென்றிருந்தால் - அப்போ இந்த கேள்வியே எழுந்திராது.

சந்திரசேகர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார், யாழ்ப்பாண வாக்குகளும் அவர் தெரிவு செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது. வடமாகாண (யாழ்ப்பாணம்/ வன்னி) தேர்தல் பரப்புரைகளுக்கும்/ வேட்ப்பாளர்களை தெரிவு செய்வதுக்கும் தலைமை தாங்கியவர் அவரே ஆகும்.

Quote

இதை பிரதேசவாதம் என்று நீங்கள் கூறினால், நம்மை நாமே நிர்வகிக்க வேண்டும் என இந்த உலகில் ஒலிக்கும் அத்தனை குரல்களும் பிரதேசவாதம் என்றாகிவிடும்

Xenophobia

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, zuma said:

சந்திரசேகர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார், யாழ்ப்பாண வாக்குகளும் அவர் தெரிவு செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது. வடமாகாண (யாழ்ப்பாணம்/ வன்னி) தேர்தல் பரப்புரைகளுக்கும்/ வேட்ப்பாளர்களை தெரிவு செய்வதுக்கும் தலைமை தாங்கியவர் அவரே ஆகும்

அவர் கட்சியில் என்னவாகவும் இருக்கட்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பது கட்சி குழு அல்ல. அதில் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் வருவதுதான் ஜனநாயகம். 

9 minutes ago, zuma said:

Xenophobia

You clearly don’t know the difference between xenophobia and a demand for self determination.

Demanding that your elected representatives should be the ones deciding your fate is not xenophobia, it is the very essence of representative democracy.

The clue is the the word “representative”.  

By your incorrect definition - Ghandi, Mandela and Pirabakaran will all be xenophobes  which they clearly are not. 

Edited by goshan_che
Capitalization
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்றால் துரையப்பாவையே குத்த விட்டிருக்கலாம் இல்லையா?

மக்கள் அவசரகால நிலையில் இருக்கும்போது இது வேண்டாம் என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

அவர் கட்சியில் என்னவாகவும் இருக்கட்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பது கட்சி குழு அல்ல. அதில் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் வருவதுதான் ஜனநாயகம். 

You clearly don’t know the difference between xenophobia and a demand for self determination.

Demanding that your elected representatives should be the ones deciding your fate is not xenophobia, it is the very essence of representative democracy.

The clue is the the word “representative”.  

By your incorrect definition - Ghandi, Mandela and Pirabakaran will all be xenophobes  which they clearly are not. 

It seems there’s been a misunderstanding. Xenophobia means fear or dislike of things that seem foreign or unfamiliar, often based on dividing people into "us" and "them." Gandhi, Mandela, and Pirabakaran fought for justice and freedom from oppression or colonialism. They did not act out of fear or hatred of anything foreign, so they were not xenophobic.

இனவாதம், இனத்தூய்மைவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம், சாதிவாதம் இவை எல்லாம் ஒரே குட்டையில் உறியட்டைகள் என்ற சீரிய தெளிவு எனக்கு உள்ளதுதொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைத்தால் பதில் அளிக்கின்றேன். இனிய இரவு வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, zuma said:

It seems there’s been a misunderstanding. Xenophobia means fear or dislike of things that seem foreign or unfamiliar, often based on dividing people into "us" and "them." Gandhi, Mandela, and Pirabakaran fought for justice and freedom from oppression or colonialism. They did not act out of fear or hatred of anything foreign, so they were not xenophobic.

And likewise Goshan is also not opposing Chandrasekaran’s appointment on the basis that he is an outsider. The opposition stems from the fact that he is not someone who is directly  elected by the people of the said district. Therefore he is being imposed upon the people of Jaffna by the Sinhala-Buddhist hegemony, in other words - the oppressors, against whom Mr Pirabakaran fought valiantly.

எனக்கும் பிரதேசவாதம் எது, உள்ளூரியல், பிரதிநிதிதுவ ஜனநாயகம், அதிகார பரவலாக்கம், சுய நிர்ணயம் என்பன எவை, இவற்றுக்கிடையான வேறுபாடுகள் பற்றி சீரிய தெளிவு உள்ளது.

இணைந்திருங்கள். பதில் எழுதும் போது நானும் எழுதுகிறேன்.

15 minutes ago, ஈழப்பிரியன் said:

மக்கள் அவசரகால நிலையில் இருக்கும்போது இது வேண்டாம் என்கிறேன்.

அவர்களே அவசரகால நிலையை தந்தார்கள்.

அவர்கள் அவசரகால நிலையை மாற்றவே மாட்டார்கள்.

முடிவு? மக்களுக்கு இது எப்போதும் வேண்டாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

மக்கள் அவசரகால நிலையில் இருக்கும்போது இது வேண்டாம் என்கிறேன்.

இங்கை யார் மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.