கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
By
கிருபன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
13 DEC, 2024 | 01:36 PM Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், நிலைபேறான தன்மை எனும் சாதனைக்கான உலகளவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் பெறும் இலங்கையின் 50ஆவது கட்டிடமாகும். அமெரிக்க பசுமைக் கட்டிட சபையின் LEED பசுமைக் கட்டிடம் எனும் நிகழ்ச்சித் திட்டமானது, ஆற்றல் வினைத்திறன், நீர் முகாமைத்துவம், வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலில் உட்புற சுற்றுச்சூழல் தரத்தை பேணுதல் போன்ற விடயங்களை அங்கீகரிக்கிறது. நடைமுறையில் நிலைபேறானதன்மை மற்றும் காலநிலை மாற்றங்களின் போதான மீண்டெழும் தன்மை ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான தூதரகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சூழலியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மதித்தல் ஆகியவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த அடைவு விளங்குகிறது. இச்சாதனையினை நினைவுகூரும் வகையிலும், டிசம்பர் 14ஆம் தேதி வரவிருக்கும் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், தூதரகத்தின் அதிநவீன வசதிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஆகியோரை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அண்மையில் சந்தித்தார். கட்டிடத்தின் ஆற்றல் திறன் கொண்ட புத்தாக்க வடிவமைப்பு, உள்ளூர் கூறுகளை உள்ளடக்குதல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் நிலைபேறான செயற்பாடுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை இதன்போது தூதுவர் வலியுறுத்தினார். “LEED Gold சான்றிதழைப் பெறுவதானது, நிலைபேறான தன்மையினை அடைவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “இக்கட்டிடம் ஒரு தூதரகம் என்பதையும் தாண்டி, இலங்கையின் கலாச்சார மற்றும் இயற்கை மரபுரிமைகளை கௌரவிக்கும் அதே வேளை, சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் பசுமையான நடைமுறைகள் எவ்வாறு எமது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பதற்கான ஒரு அடையாளமாக விளங்குகிறது. இலங்கையின் பசுமையான எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், நாட்டில் 50ஆவது LEED Gold சான்றிதழ் பெற்ற கட்டிடமாக நிமிர்ந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்கத் தூதரகம் LEED Gold சான்றிதழைப் பெற்றமையானது, நிலைபேறான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு LEED Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் 50ஆவது கட்டிடமாக மாறிய கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் போன்றவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இக்கட்டிடம் விளங்குகிறது. இது எதிர்கால செயற் திட்டங்களுக்கான ஒரு அளவுகோலை நிறுவுவதுடன் இலங்கையில் நிலைபேறான இலக்குகளை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான வலுவான பங்காண்மையினை இது பிரதிபலிப்பதுடன் சிந்தனைமிக்க வடிவமைப்பானது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.” என அமைச்சர் பட்டபெந்தி கூறினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு கட்டிட நடவடிக்கைகள் பணியகத்தினால் (OBO) முகாமை செய்யப்படும், அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான வெளிநாட்டு இராஜதந்திர மற்றும் தூதரக சொத்துக்கள் தொடர்பான துறையானது, புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் LEED Silver சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது. LEED சான்றிதழைப் பெற்றுள்ள உலகெங்கிலுமுள்ள 63 அமெரிக்க தூதரகங்களுடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இணைகிறது. அவற்றுள் 23 Gold சான்றிதழ்களைப் பெற்றவை. Gold சான்றிதழ்களைப் பெற்றவற்றுள் 17 கட்டிடங்கள் அந்தந்த நாடுகளில் முதன் முதலாக LEED சான்றிதழ் பெற்றவையாகும். கட்டிட செயற்திறன் தொடர்பான சிறப்பம்சங்கள்: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது, இலங்கையின் வளமான கலாச்சாரம் மற்றும் உயிரினப் பல்வகைமையினை வெளிப்படுத்தும் அதே வேளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை மிகவும் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: எரிசக்தித் திறன்: காலநிலைக்கு ஏற்ற மேலோடு, ஆழமான கூரை மேலடுக்குகள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் பசுமைக் கூரை என்பன சூரிய வெப்பத்தை குறைப்பதன் காரணமாக கட்டிடத்தை குளிர்விப்பதற்கான எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கின்றன. வருடாந்த எரிசக்தி நுகர்வினை 40% குறைப்பதற்கு சோலார் பெனல்கள் பங்களிப்புச் செய்கின்றன. அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது. நீர் சேமிப்பு: உயர்தர மழைநீர் முகாமைத்துவ அமைப்பு மற்றும் தூதரகத்திற்குள்ளேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு என்பன ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நீரை பாசனத் தேவைகளுக்காக மறுசுழற்சி செய்வதன் மூலம் மனித பயன்பாட்டிற்கு உகந்த நீரை சேமிக்கின்றன. பசுமையான இடங்கள்: உள்ளூர் சூழலுடன் ஒரு இணக்கமான தொடர்பை உருவாக்குதல் மற்றும் மேலதிக நீர்ப்பாசனத்திற்கான தேவையைக் குறைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் தூதரக நிலங்கள் இலங்கையின் பூர்வீக மரங்கள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கியுள்ளன. போக்குவரத்து: பணிக்குழுவினர்களுக்கிடையில் துவிச்சக்கர வண்டிகளை பகிர்ந்து பயன்படுத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சித் திட்டமானது, குறுகிய பயணங்களுக்கு மோட்டார் வாகனங்களை நம்பியிருப்பதை குறைக்கிறது. மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல்: செயற்திறனை மேம்படுத்துவதற்காகவும் எரிசக்தி நுகர்வினைக் குறைப்பதற்காகவும், மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல் செயன்முறையானது, கட்டிடத்தின் அனைத்து கட்டமைப்புகளும் வினைத்திறனுடனும் எதிர்பார்க்கப்பட்டவாறும் தொழிற்படுவதை உறுதிப்படுத்துகிறது. மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களைப் பயன்படுத்துதல்: பொருட்களுடன் மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களை இணைப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்படுகிறது. குறைவாக உமிழும் பொருட்கள்: குறைவாக உமிழும் வண்ணப்பூச்சுகள், பூச்சுகள் மற்றும் தரை அமைப்புகளைப் பயன்படுத்துவது உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. உலக எரிசக்தி பாதுகாப்பு தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது எரிசக்தி நுகர்வினைக் குறைத்து நிலைபேறான ஆற்றல் நடைமுறைகளுக்கு மாற வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தூதரகத்தின் LEED Gold அத்தாட்சிப்படுத்தலானது ஆற்றல் சேமிப்பு மற்றும் செயற்திறன் வினைத்திறன்களுக்கான புத்தாக்க அணுகுமுறைகளுக்கான ஒரு தெளிவான உதாரணமாக விளங்குவதுடன் பசுமையான, மிகவும் நிலைபேறான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொதுவான விழுமியங்களையும் மீளவலியுறுத்துகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்: Gold LEED சான்றிதழ் வழங்கப்பட்ட இலங்கையின் 50ஆவது கட்டிடம். இலங்கையின் இயற்கை சூழலுடன் ஒரு தொடர்பை பேணி, தூதரகத்தின் பசுமையான இடங்கள் உள்ளூர் விலங்கினங்கள் மற்றும் பறவையினங்களை ஈர்த்து அவற்றிற்கு ஒரு அனுகூலமான சூழலை எவ்வாறு வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தூதரக மைதானத்தில் உலாவும் ஒரு சுறுசுறுப்பான மயில். ஆற்றல் வினைத்திறன், இயற்கையான வெளிச்சம் மற்றும் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும், LEED அத்தாட்சிப்படுத்தலின் தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தினுள் உள்ள ஒரு பணியிடப் பரப்பு. இலங்கையின் இயற்கை அழகைத் தழுவிய, LEED Gold சான்றிதழைப் பெறுவதற்கு உதவிய நிலைபேறான வடிவமைப்புக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் தூதரகத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் கடலின் அற்புதமான காட்சி. PV தொகுதி : அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது. புத்தாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர்-வினைத்திறனுள்ள தரைத்தோற்றவமைப்பு மற்றும் நீரின் பயன்பாட்டைக் குறைத்தல் என்பன LEED அத்தாட்சிப்படுத்தல் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பாக கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய அம்சங்களை எடுத்துக் காட்டும் அமெரிக்கத் தூதரகத்திலுள்ள நீர் வடிகட்டும் தொட்டிகள். https://www.virakesari.lk/article/201158 -
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்எப்படி குவைத்தில் வாங்கினவர்கள்😂; விளக்க முடியுமா???
-
காமம் , கோபம் , குரோதம் தடுப்பது எப்படி ,தவிர்ப்பது எப்படி ........ அழகு தமிழில் அரிய விளக்கம் . .....! 🙏
-
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரானியுக் பதவி, பிபிசி ஃபியூச்சர் கொதிக்கும் நதி வழக்கமாகவே 86 டிகிரி செல்சியஸை அடைகிறது. இது சுற்றியுள்ள மழைக்காடுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெருவின் கொதிக்கும் ஆற்றை நோக்கி, சமதளம் நிறைந்த, நான்கு மணி நேரம் பயணம் செய்து, மழைக்காடு வழியாகச் சென்று, நிலப்பரப்பில் உள்ள முகடுகளைத் தாண்டிய பிறகுதான், அதை உங்களால் பார்க்க முடியும் என்று, சுவிஸ் ஃபெடரல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் லொசேனில் (EPFL) தாவர சூழலியல் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் அலிசா குல்பெர்க் கூறுகிறார். கீழே உள்ள நிலப்பரப்பில், பரந்த, கிண்ண வடிவத்தில் அமைந்துள்ள தாழ்வாரத்தில் உள்ள மரங்களின் சிறு பகுதியிலிருந்து அடர்த்தியான நீராவி மேகங்கள் வெளிப்படுகின்றன. காலநிலை மாற்றம் அமேசானை எவ்வாறு மாற்றும்? "அது ஏதோ மாயாஜாலமாக இருந்தது," என கொதிக்கும் நதியை முதன்முதலாக பார்த்தது குறித்து குல்பெர்க் நினைவு கூர்ந்தார். 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு, கிழக்கு-மத்திய பெருவில் உள்ள ஒரு துணை நதியின் ஒரு பகுதியாக இருந்து, அமேசான் நதியுடன் இணைகிறது. இந்த பகுதியில் உள்ள மலைகளில், 1930-களில் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் எண்ணெய் வளங்களைத் தேடின. ஆனால் இந்த பழம்பெரும் கொதிக்கும் நதியின் ரகசியங்கள் குறித்து தற்போது மேற்கத்திய விஞ்ஞானிகளால் ஆழமாக பேசப்படுகின்றன. உதாரணமாக, கீழே நிலத்தில் ஆழமான புவிவெப்ப ஆற்றல் மூலங்களால் நதி வெப்பமடைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். குல்பெர்க் முதன்முதலில் இந்த மர்மமான இடத்தை 2022 இல், அமெரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் பார்வையிட்டார். அதில், தற்போது மியாமி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ரிலே ஃபோர்டியரும் ஒருவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆராய்ச்சியாளர்கள் காடு வழியாக மலையேறும்போது, அவர்களைச் சுற்றியிருந்த தாவர வாழ்வியலில் அசாதாரணமான ஒன்றை கவனித்தனர். "நதியில் தெளிவான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று இருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது" என்கிறார் ஃபோர்டியர். "காடு சிறிய பகுதிகளாகத் தோன்றியது. பெரிய மரங்கள் அதிகம் இல்லை. அது ஓரளவு காய்ந்திருந்ததாகவும் உணர்ந்தோம். தரையில் விழுந்த இலைகள் சலசலப்பான தன்மையுடன் இருந்தன" என்கிறார். பொதுவாக வெதுவெதுப்பான அமேசானுடன் ஒப்பிடும் போது, இந்த வனப் பகுதியின் கடுமையான வெப்பத்தால் ஃபோர்டியர் வியப்படைந்தார். புவி வெப்பமடைதல், சராசரி வெப்பநிலையை அதிகரிப்பதால், காலநிலை மாற்றம் அமேசானை எவ்வாறு மாற்றும் என்பதை இந்த இடம் விளக்கக்கூடும் என்பதை அவரும் அவரது குழுவினரும் உணர்ந்தனர். அந்த அடிப்படையில் கொதிக்கும் நதியை ஓர் இயற்கை பரிசோதனையாகக் கருதலாம். இது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. இருப்பினும், அதைக் குறித்து ஆய்வு செய்தது சவாலாக இருந்தது. "இது நீராவிக் குளியல் தொட்டி உள்ள அறையில் களப்பணி செய்வது போன்றது" என்று ஃபோர்டியர் குறிப்பிட்டார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, கொதிக்கும் நதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது கடினம் என்கிறார், ஃபோர்டியர் பல்லுயிர் பெருக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஃபோர்டியர், குல்பெர்குடன் அமெரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்த அவர்களது குழுவினர், 13 வெப்பநிலை பதிவு சாதனங்களைப் பயன்படுத்தி கொதிக்கும் ஆற்றின் அருகே ஒரு வருடத்திற்கு காற்றின் வெப்பநிலையைக் கண்காணித்ததை விவரித்தனர். ஆராய்ச்சியாளர்கள் ஆற்றின் ஒரு பகுதியில் வெப்பநிலை பதிவு சாதனங்களை வைத்தனர், அதில் குளிரான மண்டலங்களும் அடங்கும். குளிர்ந்த இடங்களில் சராசரி ஆண்டு வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் (75-77F) முதல் வெப்பமான பகுதிகளில் 28-29 டிகிரி செல்சியஸ் (82-84F) வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை, கொதிக்கும் ஆற்றின் ஒரு சில வெப்பமான இடங்களில், 45 டிகிரி செல்சியஸை (113F) நெருங்கியது. புவி வெப்பம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி ஆன்ட்ரூஸ் ரூஸோ கடந்த காலத்தில் மேற்கொண்ட பகுப்பாய்வில் அந்த ஆற்று நீரின் சராசரி வெப்பநிலை 86 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக கண்டறிந்தார். இந்த பகுப்பாய்வு, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழில் வெளியிடப்படவில்லை. எந்த தாவர இனங்கள் உள்ளன என்பதைப் பற்றிய விரிவான பகுப்பாய்வைச் செய்ய, கடினமான சூழல்களை எதிர்த்து, குழு போராடியது. ஆராய்ச்சியாளர்கள் ஆற்றங்கரையின் பல அடுக்குகளில் உள்ள தாவரங்களை உன்னிப்பாக ஆராய்ந்தனர். அதில் , ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பைக் கண்டறிந்தனர். ஆற்றின் வெப்பமான பகுதிகளில் தாவரங்கள் குறைவாக இருந்தன. சில தாவர இனங்கள் முற்றிலுமாக இல்லை. "அடித்தளத்தில் தாவரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. நீராவி இருந்தாலும், தாவரங்கள் மிகவும் உலர்ந்ததாகத் தோன்றின." என குல்பெர்க் குறிப்பிட்டார். மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 எடுத்துக்காட்டாக, 50 மீ (164 அடி) உயரம் வரை வளரக்கூடிய பசுமையான குவாரியா கிராண்டிஃபோலியா போன்ற சில பெரிய மரங்கள், ஆற்றின் வெப்பமான பகுதிகளுக்கு அருகில் வளர்வதற்கு போராடுவதாக தோன்றியது. ஒட்டுமொத்தமாக, வெப்பம், பல்லுயிர் பெருக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. காற்றில் உள்ள நீராவியின் அளவு, அப்பகுதியில் பறக்கும் பூச்சிகள் அல்லது பிற விலங்குகளை பாதிக்கக்கூடும் என்று ஃபோர்டியர் தெரிவிக்கிறார். ஆனால், குறிப்பிட்டு இதனை அவர்கள் ஆராயவில்லை. அதிக வெப்பநிலையை பொறுத்துக்கொள்ளும் தாவர இனங்கள் வெப்பமான பகுதிகளில் மிகவும் பொதுவானவை. இது எதிர்பாராதது அல்ல. ஆனால், மிகச்சிறிய இடைவெளியில் கூட இந்த விளைவைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது. அவர்களின் ஆய்வுப் பகுதியின் முழு நீளமும் சுமார் 2 கிமீக்கு (1.24 மைல்கள்) அதிகமாக இல்லை. கூடுதலாக, கொதிக்கும் ஆற்றின் வெப்பமான பகுதிகள் ஆங்காங்கே உள்ளன. இதில் சில நீராவி பகுதிகள் ஆற்றின் குறுக்கே அங்கும் இங்கும் சிதறி உள்ளன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டியவுடன், தாவரங்கள், கிட்டத்தட்ட உடனடியாக வினைபுரியும் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலநிலை மாற்றம் அமேசான் படுகையை வெப்பமாக்குவதால், கொதிக்கும் நதியின் எல்லைப் பகுதிகளைப் போல மழைக்காடுகள் வறண்டு போகக்கூடும் எதிர்காலத்தில் அமேசான் எவ்வாறு மாறக்கூடும்? ஆய்வில் ஈடுபடாத எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் போல்டன் கூறுகையில், கொதிக்கும் நதியை 'இயற்கைப் பரிசோதனையாக' குழு விளக்கியது பற்றி பேசுகிறார். "இது மிகவும் நன்றாக இருந்தது என்று நான் நினைத்தேன். இது ஒரு புத்திசாலித்தனமான விஷயம்" என்கிறார் அவர். அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், அமேசானுக்கான அறிவியல் குழுவின் தொழில்நுட்ப-அறிவியல் செயலகத்தின் உறுப்பினரான டியாகோ ஒலிவேரா பிராண்டோ, எதிர்காலத்தில் அமேசான் எவ்வாறு மாறக்கூடும் என்பதற்கு கொதிக்கும் நதி ஒரு உதாரணம் என்கிறார். காலநிலை மாற்றத்தின் இத்தகைய விளைவுகள் பழங்குடியின மக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து தாம் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார். "இந்த மக்கள் உயிரியல் வளங்களை சார்ந்துள்ளனர்," என்றும் அவர் கூறுகிறார். அமேசானில் உள்ள பழங்குடி குழுக்கள் ஏற்கனவே வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். சில சமயங்களில் இது காலநிலை மாற்றத்தால் மோசமடைகிறது, எனவும் போல்டன் தெரிவித்தார். அமேசானின் அதிக வெப்பநிலை அங்குள்ள பல தாவரங்களின் செயல்பாட்டை அச்சுறுத்தும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோடோல்போ நோப்ரேகா கூறுகிறார் . கொதிக்கும் நதி இதை மிகச்சரியாக விளக்குகிறது. "நீங்கள் பிராந்தியத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது, அருகில் நீர் கிடைத்தாலும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை திறனை நீங்கள் குறைக்கலாம்," என்று அவர் கூறுகிறார். "நான் நம்புவது என்னவென்றால், சுற்றி நீர் இருந்தாலும், தாவரங்களுக்கு வெப்பநிலையால் அழுத்தம் ஏற்படுகின்றது." நிலத்தடி நீரின் வெப்பநிலை அல்லது அளவை ஆராய்ச்சியாளர்கள் அளவிடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அதிகரிக்கும் வெப்பநிலை பல்லுயிர் மற்றும் தாவர வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதை கொதிக்கும் நதி சுட்டிக்காட்டினாலும், இந்த பகுதி, அமேசானின் மழைக்காடுகளின் எதிர்காலத்தை பெரிய அளவில் பிரதிபலிக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று குல்பெர்க் கூறுகிறார். உதாரணமாக, வேறு எங்கும் இவ்வளவு நீராவியை எதிர்பார்க்க முடியாது. புயல் அல்லது மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பெரிய வானிலை விளைவுகள், வரும் ஆண்டுகளில் ஒட்டுமொத்த காடு எவ்வாறு உருவாகிறது என்பதையும் பாதிக்கும். செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்'11 டிசம்பர் 2024 சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, கொதிக்கும் ஆறு பூமிக்கு அடியில் உள்ள ஆழமான புவிவெப்ப மூலங்களால் வெப்பமடைவதாக கருதப்படுகிறது காற்றில் ஓடும் வளிமண்டல ஆறுகள் மீதான பாதிப்பு மேலும் காலநிலை மாற்றத்தினுடைய தாக்கத்தின் கீழ் பரந்த அமேசான் படுகையின் நிலைமைகளை, 'கொதிக்கும் நதி' முழுமையாக பிரதிபலிக்காததற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அமேசான் ஒரு பெரிய பரப்பு என்று நோப்ரேகா சுட்டிக்காட்டுகிறார். இது பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா மற்றும் பிரெஞ்சு கயானா, கடல்கடந்த பிரெஞ்சு பிரதேசம் உட்பட ஒன்பது வெவ்வேறு நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. மொத்தத்தில், 6.7 மில்லியன் சதுர கிமீ (2.6 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை அமேசான் கொண்டுள்ளது . "ஒரு பகுதியில் நீங்கள் கண்டறிவது, வேறொரு மழைப்பொழிவு முறை அல்லது தாவர விநியோகம் கொண்ட மற்றொரு பகுதிக்கு அறிவியல் ரீதியாக பொருந்தாது" என்றும் அவர் கூறுகிறார். முன்னதாக, போல்டன் மற்றும் அவரது நண்பர்கள் அமேசான் 'பேரழிவு கட்டத்தை' நெருங்கி இருக்கலாம் என்ற கருத்தை ஆராய்ந்தனர். அங்கு காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்புச் செயல்கள், அந்த காடுகளை விரைவாக மோசமடையச் செய்யலாம். "கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரங்களின் திடீர் அழிவை நீங்கள் காணலாம்," என்கிறார் போல்டன். மேலும், காலநிலை மாற்றத்தால் மட்டுமே அமேசான் வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறுவது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். காடழிப்பு பெரும் பிரச்னையாகும். இது காடுகளுக்கு மேலே காற்றில் ஓடும் வளிமண்டல ஆறுகளை துண்டித்துவிடும். இல்லையெனில், இவை மழை வடிவில் காடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொண்டு வரும். "நீங்கள் மரங்களை வெட்டினால், அந்த இணைப்பை அழித்துவிடுவீர்கள், அடிப்படையில், நீங்கள் வறட்சியை ஏற்படுத்துகிறீர்கள்," என்றும் அவர் விளக்குகிறார். அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்பா மரம் போல, குறிப்பிட்ட தாவரங்களால் கொதிக்கும் ஆற்றின் தீவிர சூழலை சமாளிக்க முடியும் அமேசான் மழைக்காடுகள் வறண்ட இடமாக மாறும் அபாயம் போல்டன் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் 2023 இல் வெளியிடப்பட்ட 'குளோபல் டிப்பிங் பாயிண்ட்ஸ்' பற்றிய ஒரு அறிக்கை, அமேசான் மழைக்காடுகள் விரைவில் மிகவும் வறண்ட இடமாக மாறும் அபாயத்தை ஆராய்ந்தது. இது காட்டை விட பரந்த சமதள வெளியிடத்தைப் போன்று உள்ளது. கொதிக்கும் நதியை மேலும் ஆராய்வதன் மூலம், கடுமையான புதிய நிலைகளில் எந்த இனங்கள் உயிர்வாழ அதிக வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றிய ஒரு தகவலைப் பெறலாம் என ஃபோர்டியர் பரிந்துரைக்கிறார். 50 மீ (164 அடி) உயரம் வரை வளரக்கூடிய மாபெரும் செய்பா மரத்தின் (செய்பா லுபுனா) உதாரணத்தை அவர் குறிப்பிடுகிறார். குல்பெர்க்கின் கூற்றுப்படி, இந்த மரம் கொதிக்கும் ஆற்றின் அருகே அதிக வெப்பநிலையைத் தாங்கும் தன்மையைக் கொண்டதாகத் தோன்றியது. மேலும், இது முந்தைய ஆராய்ச்சியின் மூலம் ஆதரிக்கப்பட்டது. செய்பா மரம், அதன் தண்டுகளில் தண்ணீரை சேமிக்க முடியும் என்று குல்பெர்க் குறிப்பிடுகிறார். இது வறண்ட நிலைமைகளிலும் உயிர் வாழ உதவுகிறது. இது தொடர்பாக மேற்கொண்டு பேசும் ஃபோர்டியர், கொதிக்கும் ஆற்றின் அருகே வளரும் குறிப்பிட்ட தாவர வகைகள், இந்த கடுமையான சூழலை சமாளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஆர்வலர்களுக்கு நன்மை அளிக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் பரந்த மழைக்காடுகளில், எந்த பகுதிகளில் இருக்கும் இயற்கை சூழலுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பதை தீர்மானிக்க முடியும் என்பதை அவர் நம்புகிறார். இந்த மரக்கவிகைகளுக்கு கீழே நிலவும் மைக்ரோ கிளைமேட்டிக் சூழலில் கடுமையான சூழலிலும் உயிர்வாழ தேவையான தகவமைப்புகளைக் கொண்ட உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு இது உதவும். அமேசானைப் பாதுகாப்பதை காடுகளுக்கு அப்பால் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக போல்டன் கருதுகிறார். ஆபத்து என்னவென்றால், மழைக்காடுகள் ஒரு பேரழிவு கட்டத்தை அடைந்தால், அது விரைவாக அழியத் தொடங்கினால், முழு உலகமும் பாதிக்கப்படும். "காடு அழிந்தால், அதிகளவு கார்பன் வளி மண்டலத்திற்குச் செல்லப் போகிறது, அது காலநிலையை பாதிக்கும். இது உள்ளூர் பிரச்னை மட்டுமல்ல, உலகளாவிய ஒன்று" என்றும் அவர் கூறுகிறார். அப்படியானால், கொதிக்கும் நதி எதிர்காலத்தின் ஒரு முன்னோட்டம் மட்டுமல்ல. இது ஒரு எச்சரிக்கையும் கூட. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c9vke70nn1ro -
இந்த புதிதா சட்டை போட்ட சபாநாயகர் ..முதல்நாளே வெட்கப்பட்டுத்தான் நின்றவர்..அந்த வெள்ளைத் தொப்பியையும் கண்டபடி போடுவதில்லை...மனச்சாட்சி உறுத்தியிருக்கும் உபசபாநாயகரும்..தானு பாகிஸ்ஹான் பட்டதரி என்றூ கை உயர்த்திவிட்டார்...நீதி அமைச்சரும் தன்னுடைய பட்டம் அச்சுபிழை என்று மன்னிபுக் கேட்டுவிட்டார்...இன்னும் எத்தினை பூதம் வரப்போகுதோ...என்.பி.பி மாயை 2 மாதத்தில் வெளிக்குது..நம்ம யாழ்ப்பண என்.பி.பி எம்பியும் இப்படியொரு சிக்கலில் மாட்டுப் பட்டிருப்பதாக கேள்வி....பார்ப்பம் யாழ் களம் களைகட்டும்
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts