Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அவர் நிச்சயம் புலிகள் அமைப்பின் தலைமையைத்தான் கூறினார்.

இந்த விடையைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் கோசான், சொல்லிவிட்டீர்கள்,  இனிமேல் கீழேயுள்ள நீங்கள் பகிர்ந்த கருத்தை சரி பார்த்துக்கொள்ளுங்கள்

1 hour ago, goshan_che said:

ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை.

87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது.

அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல.

மாவீரர்கள், வேறு, புலிகள் வேறு அதன் தலைவர் வேறா?

உள்ளுக்குள் விடை தெரிந்தும் வெளியே  பகிரும் முரண்பாடான இந்த கருத்துப்பகிர்வை  இத்தோடு நிறுத்திக்கொள்வதில் எனக்கு மிக விருப்புண்டு.

  • Replies 113
  • Views 5.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது. சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்று

  • அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் , சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம் அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

@குமாரசாமி

இப்போ உங்களிடம் ஒரு கேள்வி.

நீங்கள் அனுர 1 அல்லது 4 வருடத்தில், இணைந்தோ அல்லது தனி தனியாகவோ வடக்கு, கிழக்குக்கு மாகாண மட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தருவார் என நீங்கள் நம்புகிறீர்களா?

ஆம் அல்லது இல்லை என மட்டும் பதில் தரவும்.

இதற்கு மொட்டையாக பதில் எழுத முடியாது. விளக்கங்களுடன் மட்டுமே ஆம் இல்லை என்பதற்கு பதில் எழுத முடியும்.

நீங்கள் விடுதலைப்புலிகளின் அணுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். அனுரவின் அணுகுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். ஒட்டு மொத்த உலகின் அரசியலில் ஒன்றையாவது சரியென விவாதித்தது இன்றுவரைக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

87 ஐ பற்றி இப்பொ கதைப்பாதால் ஏதும் பலன் உண்டா என என்னை கேட்டால்?

2024 முடியும் இந்த நேரத்தில் இல்லை என்பேன்.

புலிகள் பிழையே விட்டாலும் - இப்போ அவர்கள் இல்லை. அதை இட்டு கதைத்து இனி ஒன்றும் ஆக போவதில்லை.

2009 ற்கு பின்னான 10 வருடம் நாம் சுயபரிசோதனைக்கான review காலம் - அதில் கதைத்தது சரி.

வாழ்க்கை முழுவதும் ரிவியூவில் வாழ முடியாது. இனி முன்னோக்கி பார்க்கும் காலம், இப்போ இதை உடைந்த ரெக்கோர்ட் போல மீள மீள சொல்வது தேவையில்லை.

அதே போல், பிழையே விடவில்லை, தலைமையை விமர்சித்தால் மாவீரரை அவமரியாதை செய்தது போல என உணர்சி பிழம்பாவதும் வெறும் மாய்மாலம்.

Move on guys ….

புலிகள் மெளனித்து 15 வருடங்கள்.

இன்னுமா அவர்களை வைத்து வால் தலை என ஆடுவீர்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

தமிழ்த்தேசியத்தை வேரறுக்க, இலங்கையராக வாழ்வோம், அடையாளம் துறப்போம் என்று இங்கு தொடர்ச்சியாக கூப்பாடு போட்டுவரும் ஒருவர் குறித்து நீங்கள் இவ்வளவு தூரத்திற்கு வருந்துவது ஏனோ? அவரின் நோக்கம் இங்கு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததுதானே? விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் சரியென்று நினைப்பதைத் தொடர்ந்து எழுதுங்கள், எவரினதும் அனுமதியும், அனுசரணையும் உங்களுக்குத் தேவையில்லை. 

நிச்சயமாக அது ஐலண்ட் ஒருவருக்கான பதிலும் மட்டுமோ கோபதாபமுமோ  இல்லை ரஞ்சித்,

அதுபோன்ற எண்ணங்களைகாவி திரியும் அனைவருக்குமான ஒரு பதிவு. ஐலண்டின் எல்லா கருத்துக்களுடனும் எனக்கு முரண்பாடில்லை, சரியென்று தெரியும் சமூக ஒதுக்கல் பிரதேச வேறுபாடுகளுக்கெதிரான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.

ஆனால் பல லட்சம்பேரின் ரணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் எள்ளிநகையாட கூடாது என்பதால் எழுதினேன்.

இனமானம் என்ற விடயத்தில் ரஞ்சித்துக்கு தெரியாத ஒன்றையா புதிதாக எழுதிவிட போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

மாவீரர்கள், வேறு, புலிகள் வேறு அதன் தலைவர் வேறா?

நிச்சயமாக இதை நீங்கள் கேள்வி யாக கேட்பதே அதிசயமாக இருக்கிறது.

போராளிகள், மாவீரர்கள் = படை வீரர்கள்.
அவர்கள் தலைமைக்கு கட்டுபட்டவர்க்ள்.

அவர்கள் எந்த அரசியல் முடிவையும் எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் எந்த அரசியல் முடிவுக்கும் பொறுப்பு அல்ல.

தலைமையின் அரசியல் முடிவு விமர்சிக்கபட்டால் அது அந்த முடிவின் மீதான விமர்சனமே. தனிப்பட்டு அந்த தலைவர் மீதான விமர்சனம் கூட இல்லை.

14 minutes ago, valavan said:

உள்ளுக்குள் விடை தெரிந்தும் வெளியே  பகிரும் முரண்பாடான இந்த கருத்துப்பகிர்வை  இத்தோடு நிறுத்திக்கொள்வதில் எனக்கு மிக விருப்புண்டு.

இதில் என்னளவில் எந்த முரண்பாடும் இல்லை.

திருகோணமலை நகரில், குடியேற்ற ஊர்களில், மணலாறில், வவுனியா தெற்கில் எமது நிலம் பறிக்கும் எதிரி எந்தளவு பயத்துடன் இருந்தான் என்பதை 87 யூலை-அக்டோபரில் நேரில் கண்டவன் நான்.

எமது எதிரி அப்படி பயந்து அதன் பின் நான் கண்டதே இல்லை.

இன்று வரை இந்த ஊர்கள் எல்லாம் சிங்களமயப்பட்டு தாண்டி போகும் போது - “தலைவர் ஒரு அப்பழுக்கற்ற போராளியாக அன்றி ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருக்கலாம்” என எண்ணி மருகாத நாட்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இதற்கு மொட்டையாக பதில் எழுத முடியாது. விளக்கங்களுடன் மட்டுமே ஆம் இல்லை என்பதற்கு பதில் எழுத முடியும்.

நீங்கள் விடுதலைப்புலிகளின் அணுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். அனுரவின் அணுகுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். ஒட்டு மொத்த உலகின் அரசியலில் ஒன்றையாவது சரியென விவாதித்தது இன்றுவரைக்கும் இல்லை.

அப்படி ஒன்றும் கடினமான கேள்வி இல்லை அண்ணை.

அனுரவுக்கு சும்மா கால அவகாசம் கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்தானே.

ஆகவே கால அவகாசம் கொடுக்க சொல்வது ஏன்?

அவர் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள ஒரு தீர்வை தமிழருக்கு 4 வருடத்தில் தரக்கூடும் என நீங்கள் நினைப்பதாலா?

இதற்கு ஆம் இல்லை என இலகுவாக பதில் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

ஆகவே கால அவகாசம் கொடுக்க சொல்வது ஏன்?

அவர் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள ஒரு தீர்வை தமிழருக்கு 4 வருடத்தில் தரக்கூடும் என நீங்கள் நினைப்பதாலா?

இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இல்லை.

பதிலுக்கு நன்றி.

நானும் உங்களை போலவே அனுர எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தரமாட்டார் என்றே நம்புகிறேன்.

இதன் பின் இவருக்கு நான் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? 4 வருடத்தை வீணடிக்கவா?

ஆகவேதான் அவரின் இனவாத பின்புலத்தை சுட்டி காட்டி, இவரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கூறி, எமது மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற போராடும் தமிழ் தேசிய அரசியலை முந்தள்ளுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

வார்த்தைகளில் கண்ணியம் அவசியம்.

எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே  போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள்,  தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை. 

2 hours ago, ரஞ்சித் said:

தமிழ்த்தேசியத்தை வேரறுக்க, இலங்கையராக வாழ்வோம், அடையாளம் துறப்போம் என்று இங்கு தொடர்ச்சியாக கூப்பாடு போட்டுவரும் ஒருவர் குறித்து நீங்கள் இவ்வளவு தூரத்திற்கு வருந்துவது ஏனோ? அவரின் நோக்கம் இங்கு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததுதானே? விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் சரியென்று நினைப்பதைத் தொடர்ந்து எழுதுங்கள், எவரினதும் அனுமதியும், அனுசரணையும் உங்களுக்குத் தேவையில்லை. 

😂வளவனும், ரஞ்சித்தும் இன்னும் ஏதாவது பாஸ் அலுவலகம் நடத்துகிறீர்களா? "அனுமதி" யெல்லாம் யார் உங்களிடம் கேட்டது அல்லது நீங்கள் இருவரும் யார் அதைக் கொடுப்பதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள்.

இனவாதத்தை அல்ல இனவாதிகளை. தமிழர் நாம் ஒன்றுசேர்ந்து வாக்களித்து அரியாசனம் ஏறிய தலைமைகளே, நமக்கு ஒன்றும் தரவில்லை. மாறாக நமது மண்ணை பல துறைகளாக பிரிந்து நின்று ஆக்கிரமித்து, வளங்களை சுரண்டி, எங்களை நுழையவிடாது தடுத்தது. நமது அரசியல் தலைவர்களே எதுவும் செய்யவில்லை. விகாரை கட்டும்போது எங்கே போனார்கள்? திறப்புவிழா செய்யும்போது எங்கே போனார்கள் என்று கேள்வி கேக்கிறார்கள். ஆனால் அனுரா தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கிறார். அவரால் எதுவும் செய்யமுடியும். கடைசி நேரத்தில் சுமந்திரன் விசர்க்கூத்தாடாமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் இந்தளவுக்கு அனுராவை வாக்களித்து தெரிந்திருக்க மாட்டார்கள். தமிழரின் வாக்குகள் இல்லாவிட்டாலும் அவர் ஜனாதிபதியாவதை நம்மால் தடுத்திருக்க முடியாது. இருந்தாலும் அவரின் வெற்றியை நானோ நீங்களோ மாற்றமுடியாது, அவர் செய்வதை தடுக்கவும் முடியாது. அவர் அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கிறார். அவருக்கு அதிக பொறுப்புண்டு, பெருமை பேசவல்ல. ஆனால் கடந்த தலைவர்களை விட ஏதோ செய்ய முயற்சிக்கிறார், அதை நம்புவதைவிட நமக்கு வேறொரு தெரிவில்லை. நீங்கள் பொங்கியெழுவதாலோ அல்லது நான் வழிவதாலோ எதுவும் மாற்ற முடியாது.  முன்னைய ஆட்சியாளர்களிடம் உங்களுக்கு இல்லாத கோபம் அனுரா மீது மட்டும் எதற்கு? நாம் விரும்பினாலோ, இல்லையோ அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலேயே இருப்பார். நல்லது செய்தால் தொடர்வார், இல்லையேல் வீழ்வார். எதற்காக அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? வசை பாடுகிறீர்கள்? தருவதை பெற்றுக்கொண்டு மிகுதியையும் பெற முயற்சிப்போம். இவர் வெல்வார் என அவரே நினைத்திருக்க மாட்டார் ஆனாலும் வென்றார். ஆகவே அவர் மனமும் மாறலாமல்லவா? சுமந்திரன் தோற்பேன் என நினைத்தா சன்னதமாடினார்? அவரது ஆட்டமே வேறு வழியின்றி மக்களை அனுரா பக்கம் தள்ளியது.  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரே ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி. நாங்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். இருந்தாலும் இவரது ஆட்சிக்குப்பின்  யார் வந்தாலும், இவரை விட நல்லது செய்வார் யாருமில்லை. எல்லோரும் பலதடவை ஆட்சியை நிர்வகித்தவர்கள், எங்கள் வாக்குகளின் உதவியோடு. இவரோ முதற்தடவையாக ஆட்சியேற்றிருக்கிறார். பாப்போம்!        

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

😂வளவனும், ரஞ்சித்தும் இன்னும் ஏதாவது பாஸ் அலுவலகம் நடத்துகிறீர்களா? "அனுமதி" யெல்லாம் யார் உங்களிடம் கேட்டது அல்லது நீங்கள் இருவரும் யார் அதைக் கொடுப்பதற்கு?

அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் ,

சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன்.

நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம்

அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம்

இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம்.

ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள்  மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து.

 தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன்.

ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம்,

அலுவலகம் என்று அர்த்தமில்லை,  அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை .

அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம்  என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன்.

இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும்  அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால்  விதிவிட்ட வழி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மைத்திரி வந்த போது அவகாசம் கொடுத்தோமா?

கோட்ட வந்த போது?

அவர் ஓடி ரணில் வந்த போது?

அப்போ இவருக்கு மட்டும் ஏன் அவகாசம்?

அப்படி இவர் மீது நம்பிக்கை வர என்ன இருக்கிறது?

இதென்ன புதுக்கதை? மைத்திரியை அரியணை ஏற்றியது நாமேதான். அப்போ, சந்திரிகா உடன்படிக்கை எழுத சொல்ல, நாம்தானே எழுதவெல்லாம் வேண்டாம், நமக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நல்லெண்ண  சமிக்ஞை கொடுத்தோம். பிறகெதற்கு அவகாசம்? கோத்தாவை நாங்கள் தேர்ந்தெடுக்கவுமில்லை, விரட்டவுமில்லை. அவரின் பதவியேற்பில் நாங்கள் பங்காளிகளுமில்லை, தப்பியோட்டத்தில் பங்குதாரருமில்லை. அவர் சரியாக உடுத்தவே அவகாசம் கொடுக்கப்படவில்லை அவருக்கு? ரணில் ஓடிவந்து குந்தியவர், அவருக்கு கிடைத்த காலமே கொஞ்சம். அவர் ஒன்றும் தேர்தெடுக்கப்பட்டவரல்லர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியேறியவர். அனுராவுக்கு அவகாசம் கொடுக்க நாம் யார்? அவர் அதிகப்பெரும்பான்மையோடு ஜனாதிபதியாகியவர். அவர் தனது காலம் மட்டும் இருக்கலாம், மீண்டும் ஜனாதிபதியாகலாம் மக்கள் விரும்பினால், இல்லை அவரே சட்டத்தை திரித்து மாற்றி ஜனாதிபதியாக தொடரலாம். எமக்கு காத்திருப்பதை விட வேறு வழியில்லை. இருந்தவர்கள் எதையும் தரவில்லை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், இனிமேலும் சாத்தியமில்லை. இவர் ஒருவர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்துள்ளார், எமக்கு பிரச்சினை உள்ளதென ஏற்றுக்கொள்கிறார், அவராலேதான் முடிவு வரவேண்டும். அதை செய்வாரா என தெரிந்து கொள்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகவேண்டும், நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதை நீங்கள், நாங்கள் அனுராவுக்கு கொடுக்கும் அவகாசம் என்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரில் உள்ள நம்பிக்கையல்ல, முன்னொருபோதும் ஆட்சிசெய்யாத ஒருவரிடம் எப்படி நம்பிக்கை வரும்? அவர் மேல் நானோ, என்போன்றோரோ கொண்டிருப்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் நாட்டில் முக்கிய பிரச்சினை பொருளாதாரப்பிரச்சனை, அதற்கே முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அதன் பின் மற்றைய பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவேன் என்று சொல்கிறார். வேறு என்ன உங்களால், என்னால் செய்ய முடியும்? சொல்லுங்கள். நீங்கள் என்னை வசை பாடலாம், நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம் என்பதை தவிர. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அனுர இருவரையும் தோற்கடிக்க வேண்டும்

ஐயோ, மாத்தையாவை தோற்கடித்து வரலாற்றுதுரோகத்தை செய்து, வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்காதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2024 at 17:55, தமிழ் சிறி said:

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப் படும் போது...
சூடு கண்ட பூனை, ஸ்ரீதரன் வேறொரு வியூகத்தை எடுப்பார் என நம்புகின்றேன்.

ஆனால்... நீங்கள் சொல்வது போல்... சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி அமைக்க தற்போது காலம் கனியவில்லை. ஓரிரு வருடத்தில் நடக்கலாம்.

சிறி ஜயா குரூப் சொல்கிறது கஞ்சா, கசிப்பை ஒழிக்க Bar ஓகேயாம்…இது பார் லைசன்ஸ்க்கு சிபாரிசு கொடுத்ததை நியாயப்படுத்த சொன்ன வார்த்தைகள்.. அதை உங்களைப்போல் பார்சிறி விசிறிகள் ஆமோதித்து நியாயப்படுத்துகினம்..

இது விபச்சாரத்தை ஒழிக்க மசாஜ் சென்ரருக்கு அனுமதிகொடுத்திருக்கிறம் என்று சொல்வதைப்பொன்றது..

பார் வந்ததால் கசிப்பு எங்க குறைஞ்சிருக்கு......? தேர்தலுக்கு முன்னர் பார் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்ற சில அல்லக்கைகளள தற்போது சிபாசு யார் செய்தார் என்ற உண்மை வரப்போகுது என்ற அச்சத்தில் அவரின் சில அடிவருடிகள் இப்பவே கூவ வெளிக்கிட்டாங்கள்…

சிறி ஐயா விடம் வேலை வாய்ப்பு பெற்று தரும்படி யாரும் சென்றால் ஐயா கூறுவாராம் நாட்டின் நிலமை உங்களுக்கு விளங்கவில்லையா நாங்கள் இப்போ  முக்கிய விடயங்களை பற்றி தான் பேசுகிறோம் தேசிய பிரச்சினை எவ்வளவு இருக்கிறது இந்த நேரத்தில் அவங்களிடம் வேலைவாய்ப்பு கேட்டால் ஒன்றும் நடக்காது என்று கூற கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம் என்று அனுப்பி விடுவாராம்…

ஆனால் அவர்களிடம் bar போமீற்கள் வாங்கி பல கோடிக்கு விற்பனை செய்யலாம் அது பரவாயில்லை..

அடிப்படை தொழில் கேட்டு தனது வாழ்வாதாரம் நிமித்தம் போனவர்களுக்கு தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை… 

தமிழ்த் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டத்தாரிடம் மக்கள் நலன்களை எதிர்பார்க்க முடியாது... தன்மானம் விற்று வயிறு வளர்க்கும் கூட்டம்... இனியென்ன அடுத்துவரும் 5 வருடங்களுக்கு நம்மை அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆடுவார்கள்…

****

உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் முற்று புள்ளி வைத்துவிட்டார்கள் இனி என்றாலும் ஏமாற்று வித்தையை நிறுத்துங்கள் *****…

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிறி ஜயா குரூப் சொல்கிறது கஞ்சா, கசிப்பை ஒழிக்க Bar ஓகேயாம்…இது பார் லைசன்ஸ்க்கு சிபாரிசு கொடுத்ததை நியாயப்படுத்த சொன்ன வார்த்தைகள்.. அதை உங்களைப்போல் பார்சிறி விசிறிகள் ஆமோதித்து நியாயப்படுத்துகினம்..

இது விபச்சாரத்தை ஒழிக்க மசாஜ் சென்ரருக்கு அனுமதிகொடுத்திருக்கிறம் என்று சொல்வதைப்பொன்றது..

பார் வந்ததால் கசிப்பு எங்க குறைஞ்சிருக்கு......? தேர்தலுக்கு முன்னர் பார் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்ற சில அல்லக்கைகளள தற்போது சிபாசு யார் செய்தார் என்ற உண்மை வரப்போகுது என்ற அச்சத்தில் அவரின் சில அடிவருடிகள் இப்பவே கூவ வெளிக்கிட்டாங்கள்…

சிறி ஐயா விடம் வேலை வாய்ப்பு பெற்று தரும்படி யாரும் சென்றால் ஐயா கூறுவாராம் நாட்டின் நிலமை உங்களுக்கு விளங்கவில்லையா நாங்கள் இப்போ  முக்கிய விடயங்களை பற்றி தான் பேசுகிறோம் தேசிய பிரச்சினை எவ்வளவு இருக்கிறது இந்த நேரத்தில் அவங்களிடம் வேலைவாய்ப்பு கேட்டால் ஒன்றும் நடக்காது என்று கூற கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம் என்று அனுப்பி விடுவாராம்…

ஆனால் அவர்களிடம் bar போமீற்கள் வாங்கி பல கோடிக்கு விற்பனை செய்யலாம் அது பரவாயில்லை..

அடிப்படை தொழில் கேட்டு தனது வாழ்வாதாரம் நிமித்தம் போனவர்களுக்கு தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை… 

தமிழ்த் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டத்தாரிடம் மக்கள் நலன்களை எதிர்பார்க்க முடியாது... தன்மானம் விற்று வயிறு வளர்க்கும் கூட்டம்... இனியென்ன அடுத்துவரும் 5 வருடங்களுக்கு நம்மை அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆடுவார்கள்…

ஜயாவோட அடுத்த பேர்மிற் விபச்சார விடுதிகளுக்காகத்தான் இருக்கும்..

உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் முற்று புள்ளி வைத்துவிட்டார்கள் இனி என்றாலும் ஏமாற்று வித்தையை நிறுத்துங்கள் பார் சிறி….

large.IMG_7869.jpeg.b26f4d33d0ca14e3b40a

 ஓணாண்டி... மேலே உள்ளது உங்களை போன்றவர்களுக்காகத்தான் எழுதியிருக்கு.

நன்றி கவியரசு கண்ணதாசன்  & @Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

large.IMG_7869.jpeg.b26f4d33d0ca14e3b40a

 ஓணாண்டி... மேலே உள்ளது உங்களை போன்றவர்களுக்காகத்தான் எழுதியிருக்கு.

நன்றி கவியரசு கண்ணதாசன்  & @Kavi arunasalam

சிறியர் "இயலுமெண்டா நிருபி, போலீசுக்கு போவேன் எண்டெல்லாம் வீர வசனம் தான் பேசுவார் ஒழிய…மதுபோதைக் கலாச்சாரம் எங்கட இளம் சந்ததியை எப்பிடி அழிக்கும் என்டெல்லாம் சொல்ல மாட்டார்….

ஏன் எண்டா புரண்டது அத்தனை கோடிகள்…

கிளி நொச்சில ஒரு கோயிலுக்கு முன்னால பார்ராம் சனம் கேட்டா மூலஸ்தானத்தில இருந்து அளந்து பார்க்க தூரம் சரி என்றாங்க…
 
கிளிநொச்சி MP கிளிநொச்சி MP என்று வாய் கிழிய கத்தின இவர் ஏன் இதுவரைக்கும் 16 பார் திறந்தத எதிர்க்க இல்ல..? ஏன் மூச்சுக்கூட காட்டெல்ல…

கேட்டா யாழ்ப்பாணத்தில இத்தின பார் இருக்கெண்டு பிரதேச வாதம் கதைப்பார்...

இப்படியாக, பேரினவாதிக்கு வெறும் காசுக்காக சோரம் போன பார் தரகர் தானாம் எங்கட தமிழினத்த வழிநடத்த போற தலமை…

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் மிதவாத அரசியல் ரீதியான நடவடிக்கையினால் எந்த வித நடைமுறையிலான தீர்வும் எட்டப்படவில்லை, இனியும் எட்டப்படபோவதில்லை, இது ஒரு நிதர்சனமான விடயம், ஆனால் தமிழரசியல்வாதிகள் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுவது வாக்குகளுக்காக, தற்போதுள்ள நிலையில் இந்திய அனுசரணை இன்றி தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை எனும் யதார்த்தத்தினை புரிந்து இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவுடனான தமது உறவை வலுப்படுத்த வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மையினமாக எக்காலத்திலும் நிரந்தர அமைதியுடன் வாழ முடியாது என்பது நிதர்சனமான விடயம், தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனை விடுத்து இந்தியாவுடனும், மேற்கு, இந்திய நலனை கருத்தில் கொண்டு தமிழர்கள் தமது கொளகையினை உருவாக்குவதன் மூலம் சிறுபான்மை இனம் இலங்கையில் அமைதியாக வாழும் சூழ்நிலையினை அதிஅக் அதிகாரங்கள் கொண்ட அலகுகளை பெற முடியும்.

இதற்கு உதாரணமாக உக்கிரேனை கூறலாம் போரில் ஈடுபடும் இரஸ்சியாவினை தவிர்த்து அமைதி முயற்சியில் உக்கிரேன் அரசு ஈடுபடுவதனை போல இலங்கை அரசினுடன் பேச்சுவார்த்தை என காலம் கடத்துவதனை விட இந்தியா, மேற்கு நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.

இது முகாமையாளருடன் பேசுவதனை விடுத்து நேரடியாக முதலாளியுடன் பேசுவது போன்றதாகும்.😁

எந்த நாடும் தனது நலனின்றி தேவையில்லாமல் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது அதனால் இந்தியா மேற்கு நாடுகள் தவற விடக்கூடாது எனும் வகையான  அவர்களது நலனை தூண்டில் இரையாக இலங்கையினை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற முயற்சிக்கவேண்டும்.😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செயலுக்கும் மைக் பேச்சுக்குமான வித்தியாசம் என்னவென்றால்

இங்கே அனுவுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பவர்களும் 

கொடுக்க கூடாது என்பவர்களும் கூட இதற்காக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆனால் செயல் முடிவடைந்துவிடும். இதில் மதில் மேல் பூனைகள் மட்டுமே தப்பிக்கொள்ளும். 

உண்மை பொய் என்று இரண்டு தான் உண்டு. இதில் எந்த முடிவையும் எடுப்பதற்கு ஒரு காலக்கெடுவும் உந்துதலும் இருக்கும். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை காலம் கடந்தோ ஞானம் பெற்றோ விமர்சனம் செய்வது பொருத்தமற்றதும் பொறுப்பற்றதும் கூட. 

முடிவுகளை எடுக்கும் போது வரலாறே வழி காட்டி என்று தான் தலைவர் முடிவுகளை எடுத்தார். அந்த வரலாற்றை வைத்து நாம் தற்போதைய முடிவுகளுக்கு பாவிக்கலாம். ஆனால் அதை நக்கல் நையாண்டி செய்வது மதில் மேல் பூனைகளின் தொடர்ச்சியே. அதை பார்த்து கடந்து செல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள்.

அதே போன்று நேரிலேயே மற்றும் வட்சப் குழுவில் எல்லாம் அப்படி நிறைய தமிழர்கள் உலாவுகின்றனர். முன்பு மோசமான சிங்களவரோடு வாழ முடியாது தனி ஈழம்  தான் என்று வீரவேசமான பேச்சுக்கள் அநுரகுமார திசாநாயக்க வெற்றி அடைந்தவுடன் வீர பேச்சு எல்லாம் மயஜாலம் மாதிரி அவர்களிடம்  இருந்து மறைந்துவிட்டது.  உத்தமர் வந்துவிட்டார் ஸ்ரீலங்கன் என்று நேர்எதிர் நிலைபாடு.  முன்பு பிரபாகரன் எங்கள் தலைவன் தன்னிகரற்ற தலைவன் என்றீர்களே என்றால் ஓம் அவர் இனிவரப்போவது இல்லை நடக்க கூடியதை செய்ய வேண்டும் என்கிறார்களாம்.  இந்த முடிவுக்கு வர இவர்களுக்கு 15 வருடங்கள் பிடித்ததா அல்லது ஜேவிபிக்கு பலம் சேர்ப்பதற்காக நாடகம் ஆடினனார்களா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிறியர் "இயலுமெண்டா நிருபி, போலீசுக்கு போவேன் எண்டெல்லாம் வீர வசனம் தான் பேசுவார் ஒழிய…மதுபோதைக் கலாச்சாரம் எங்கட இளம் சந்ததியை எப்பிடி அழிக்கும் என்டெல்லாம் சொல்ல மாட்டார்….

ஏன் எண்டா புரண்டது அத்தனை கோடிகள்…

கிளி நொச்சில ஒரு கோயிலுக்கு முன்னால பார்ராம் சனம் கேட்டா மூலஸ்தானத்தில இருந்து அளந்து பார்க்க தூரம் சரி என்றாங்க…
 
கிளிநொச்சி MP கிளிநொச்சி MP என்று வாய் கிழிய கத்தின இவர் ஏன் இதுவரைக்கும் 16 பார் திறந்தத எதிர்க்க இல்ல..? ஏன் மூச்சுக்கூட காட்டெல்ல…

கேட்டா யாழ்ப்பாணத்தில இத்தின பார் இருக்கெண்டு பிரதேச வாதம் கதைப்பார்...

இப்படியாக, பேரினவாதிக்கு வெறும் காசுக்காக சோரம் போன பார் தரகர் தானாம் எங்கட தமிழினத்த வழிநடத்த போற தலமை…

சிறியர் இதற்கும் சும்மை இழுத்துத்தான் பதில் சொல்வார். 

Bar சிறீ யின் அடிபொடியளுக்கு சிபாரிசுகளை யார் செய்தார்கள் என்கிற  விபரம் வெளிவந்துவிடுமோ என்பதுதான் பிரச்சனை. 

சிறீ மூலம் Bar License எடுத்த ஆட்கள் ஒருவரேனும் யாழ் களத்தில் இருக்கினமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் ,

சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன்.

நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம்

அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம்

இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம்.

ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள்  மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து.

 தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன்.

ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம்,

அலுவலகம் என்று அர்த்தமில்லை,  அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை .

அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம்  என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன்.

இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும்  அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால்  விதிவிட்ட வழி.

எனக்கு விளக்கிய போது யாழ் களத்தில் உங்கள் "எல்லை" உங்களுக்கும் போல  விளங்கியிருக்குமென நினைக்கிறேன், அதைப் பின்பற்றினால் மகிழ்ச்சி!

இந்தக் குறிப்பிட்ட விடயத்தைப் பொறுத்தவரை, இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய திரியில் அதன் கடந்த காலம் பற்றி ஐலன்ட் எழுதியிருப்பது பொருத்தமானதே. அதைப் "பேசுவதால் இப்போது பயனில்லை" என்பதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அப்போது தூக்கியெறிந்தது போல இப்போதும் நடந்து கொள்ளக் கூடாதென்ற கருத்து அங்கே வெளிப்படுகிறதல்லவா? அது தான் ஐலன்ட் கருத்தின் பயன்.

"இதைப் பேசுவதால் பிரபாகரனையும், மாவீரர்களையும் கொச்சைப் படுத்தினார்கள், நெஞ்சில் மிதித்தார்கள்" என்று நீங்கள்  சொல்வது உங்கள் உணர்ச்சிமயமான புரிதலின் பாற்பட்டது. உங்கள் கருத்திற்கு ஆதரவு தந்திருப்போர் அனைவருமே நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாமல் ஒரு  மூலையில் முடங்கும் போது இறுதி அஸ்திரமாக "மாவீரர்கள், போராளிகள், பிரபாகரன்" கொச்சை என்று சவுண்ட் விட்ட படி எஸ்கேப் ஆகும் உறவுகள் தான்😎

என் அபிப்பிராயத்தில், இப்படியான செயல்கள் செய்வோர் தான் மேற்சொன்ன தரப்புகளை அதிகம் மலினப் படுத்துகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

@valavan எனது கருத்து என்பது  அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து  நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும்  பொருந்தும்.  

 ஒரு அரசியல் அமைப்பு  அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும்,   அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும்,  அதை  நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது   உலக வழமை.  சாதாரணமாக  கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை  திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. 

தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு   என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட   விளைவுகளும. காரணமாக  இருக்கும் போது அவற்றை பற்றி  உரையாடுவது  தவறானதல்ல.  இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை.  அரசியல்  தீர்மானங்கள் முடிவுகள்  புனிதமானவை அல்ல. 

அரசியல் தலைமைகளை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது  அது  சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும்.

ஒரு பழைய அரசியல்  தலைமைகளை புனிதப்படுத்துவதானது,  அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. 
 
ஒரு அரசியல்  தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால்  அந்த அரசியலை உள்வாங்கி, அதை   முன்னுதாரணமாக தொடரும்  புதிய தலைமுறையும் அதே பாணியை  மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability)  இல்லாத  முடிவுகளை மீண்டும் எடுக்கும்.

மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது  அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? 

 ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின்  மீதான  விமர்சனம் என்பது  ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு  அந்த  கருத்து இருக்கலாம். ஆனால் , அதை  நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

@valavan 

ஒரு பழைய அரசியல்  தலைமைகளை புனிதப்படுத்துவதானது,  அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. 
 
ஒரு அரசியல்  தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால்  அந்த அரசியலை உள்வாங்கி, அதை   முன்னுதாரணமாக தொடரும்  புதிய தலைமுறையும் அதே பாணியை  மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability)  இல்லாத  முடிவுகளை மீண்டும் எடுக்கும்.

இவை மிக முக்கியமான கருத்துக்கள், மீள மீள இங்கே பலராலும் வலியுறுத்தப் பட்டிருந்தாலும், இதைக் கவனிக்காமல் அடுத்த தலைமுறையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்க வேண்டுமென்று "வனைதல்-molding" முயற்சியில் இருக்கிறார்கள்.

"புனிதம் செய்கிறோம்" என்ற போர்வையில் , பொய் வரலாற்றைக் கூட பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன.

உதாரணமாக, மிகுந்த உணர்வோடு வளவன் எழுதிய கருத்தில் "புலிகள் உட்பட பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டனர்.." என்று இருக்கிறது. இது எவ்வளவு உண்மை?

1987 இல் இந்திய இராணுவம் பலாலியில் வந்திறங்கிய  போது வீடு வீடாகப் புலிகளின் அரசியற்பிரிவினர் சென்று மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு நினைவிருக்கும். சுது மலையில் பிரபாகரனின் உரையில் கூட முழுமையாக ஏற்றுக் கொள்ளல் இருக்கவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அமிர் யாரால், ஏன் கொல்லப் பட்டார்?

இவையெல்லாம், '87 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளங்கள் என்றால், வரலாறு "சுத்தம்" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிறியர் "இயலுமெண்டா நிருபி, போலீசுக்கு போவேன் எண்டெல்லாம் வீர வசனம் தான் பேசுவார் ஒழிய…மதுபோதைக் கலாச்சாரம் எங்கட இளம் சந்ததியை எப்பிடி அழிக்கும் என்டெல்லாம் சொல்ல மாட்டார்….

ஏன் எண்டா புரண்டது அத்தனை கோடிகள்…

கிளி நொச்சில ஒரு கோயிலுக்கு முன்னால பார்ராம் சனம் கேட்டா மூலஸ்தானத்தில இருந்து அளந்து பார்க்க தூரம் சரி என்றாங்க…
கிளிநொச்சி MP கிளிநொச்சி MP என்று வாய் கிழிய கத்தின இவர் ஏன் இதுவரைக்கும் 16 பார் திறந்தத எதிர்க்க இல்ல..? ஏன் மூச்சுக்கூட காட்டெல்ல…

கேட்டா யாழ்ப்பாணத்தில இத்தின பார் இருக்கெண்டு பிரதேச வாதம் கதைப்பார்...

இப்படியாக, பேரினவாதிக்கு வெறும் காசுக்காக சோரம் போன பார் தரகர் தானாம் எங்கட தமிழினத்த வழிநடத்த போற தலமை…

👍................

எனக்கும் இது பெரும் குழப்பமாகவே இருக்கின்றது. சிறிதரனை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றார்கள், அதே நேரத்தில் சுமந்திரனை அதைவிட அதிகமாக வெறுத்துக் கருத்து எழுதுகின்றார்கள்.

இது வெறும் பிரச்சார மேடை போலத் தான் இருக்கின்றது............. ஒரு கருத்துக்களம் போல அல்ல.............. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் சுமனை எதிர்ப்பது அவரை கும்மினால், சிறிதரன் தப்பிக்கலாம் என்பதாலேயே.

ஆகவேதான் சிறி ஆதரவு பிரச்சார மேடை போல் யாழ் மாறிவிட்டது.

உதாரணமாக இந்த பார் லைசன்ஸ் ஊழல் ரணில் ஆட்சிக்கு வந்த பின் நடந்த ஊழல்.

ஆனால் சுமந்திரன் 2021 இல் guest house ஒன்று அதனுடன் கூடிய ரெஸ்டுரன் அதில் பார் வசதி உள்ளது - அதை திறந்ததை படமாக போட்டு - அங்கே விபச்சாரம் நடக்கிறது - என்றது வரை @தமிழ் சிறி அண்ணை இங்கே பகிர்ந்தார்.

இந்த பார் விடயத்தில் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் - இவர் கிளிநொச்சியில் 16 பார் திறந்ததையிட்டு சிறிதரன் மீது ஒரு சின்ன கேள்வியாவது வைப்பார் என நீங்கள் எதிர்பார்த்தால்….

கிளிநொச்சியில் பார் வைத்ததில் சிறிக்கு தொடர்பில்லையாம். ஆதாரம் ஏதும் இல்லையாம் என சொல்லி விட்டார் என முழு பூசணிக்காயை சோத்தில் அமுக்குகிறார்.

உண்மையை ஓணாண்டி எழுதினால் அவரை பொய்யன் என்கிறார்.

மிக தெளிவாக தெரிகிறது…

இங்கே சிறிதரன் ஆதரவு பிரச்சாரம், damage control நடக்கிறது.

யாழ்கள வாசகர்கள் முட்டாள்கள் என நினைத்தபடி.

இதை @தமிழ் சிறி அண்ணை சுயலாபத்துக்கு அன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் செய்வதாகவே நான் இன்னும் நம்புகிறேன்

பிகு

இன்னொருவர் சிறிதரனின் இலண்டன் வாகனச்சாரதி. அவரின் உறவினர் பெயரில் இவரே வன்னியில் ஒரு லைசன்சை வைத்துள்ளார் என வதந்தி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.