Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும்.

2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை.

பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம்.

3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே. 

நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா?

எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.

நீங்கள்  இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள்.  🙏

அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை  அர்சசுனா  பட்டியல் இடடுள்ளார்.  அந்தந்த துறையில் உள்ளவர்களால்  சொல்ல முடியவில்லை  அதுமட்டுமல்ல  

பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும்  இங்கே ஒவ்வொரு துறையிலும்  எப்படி செலவு செய்கிறீர்கள்??  என்பதை  கேட்க மக்கள்  பிரதிநிதிகளுக்கு  உரிமை உண்டு  என்று அர்ச்சுனா கூறியுள்ளார்  இதை  அமைச்சர் சந்திரசேகரன் 

எற்றுக்கொண்டு  இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார்   இதன் மூலம்  அர்ச்சுனா  வைத்தியசாலையில் உள்ளிட்டது  தவறு இல்லை என்று உறுதியானது 

இந்த முறை தான்  மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம்  ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது  என்று பலரும் கூறுகிறார்கள் 

குறிப்பு,...அர்ச்சுனா  தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது  ஊழல்வாதிகளுக்கு  துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை  அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள்   நீங்கள் இருந்து பாருங்கள்  அர்ச்சுனா பலரின் ஊழல்களை  தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள் 

4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 8 people and text

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂

இன்று பலருக்கு வேர்த்து உள்ளது    🤣

  • Replies 140
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்...   நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான்,  வைத்தியர் அர்ச்சுனா...  என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்

  • அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2024 at 20:55, Kandiah57 said:

ஆமாம்  கழுத்து பகுதியில்  வெட்டி   சிறுநீரகத்துக்கு போகும் நாடி அல்லது நாளம் ஆக இருக்கும் அதற்குள்  

மிக மிக  மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுப்பார்கள்   மயக்கி விட்டு தான் செய்வார்கள்   அடைப்பு எடுப்பது தான் நோக்கம்  இலங்கையிலும் இருக்கும்    

முதலில் நோயாளர்கள் நன்றாக பரிசோதனைகளுக்கு உள்படுத்திய பின் தான் செய்வார்கள்   இது தான் வருத்தம்  இப்படி தான் செய்ய வேண்டும் என்று மருத்துவ குழு தீர்மானிப்பது உண்டு”   இங்கே கொஞ்சம் பிழை விட்டு கண்டு பிடிக்கப்பட்டது என்றால் பல ஆயிரம் யூரோ நட்டடீடு  மருத்துவர் கட்ட வேண்டும் நோயாளிக்கு   

இலங்கையில் சாக கொண்டாலும் கேள்விகள் இல்லை  எனவே… துணிந்து   விரும்பியபடி மருத்துவம் செய்யலாம் மற்றும் நான் அர்ச்சுனாவின். விசிறி,..ஆதரவளான். இல்லை    மிகவும் பதிக்கப்பட்ட மக்களுக்கு  கேள்விகள் கேட்க பயந்து துணிவு அற்ற மக்களுக்கு அவர் தனக்கு வரும் பாதிப்பை பொருள் படுத்தமால். குரல் கொடுப்பதை மட்டுமே வரவேற்கிறேன்  

அவரை எதிர்க்கலாம். ஒரு மூலையில் இருத்தி விடலாம்   

இந்த மக்களுக்கு யார் குரல் கொடுப்பது?? ஒருவருமில்லை   அவரை ஒழுக்கப்படுத்தவும்.  பேச கற்றுக் கொடுக்கவும் முன் வருபவர்கள்   மக்கள்  இந்த மருத்துவ துறையால் படும் சொல்லொண்ணத் துன்பங்களை  நீக்க எந்தவொரு வழியையும். சொல்லவில்லை   🙏 வணக்கம் அண்ணை 

கருத்துக்கு நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

காலம் எல்லாவற்றையும் மாற்றும். அர்ச்சனாவின் பணி 😷 அது தான் என்று நினைக்கிறேன். 

இவரும் பல தடவைகள் பொதுவெளியில் நான் டொக்டர் என்னுடன் நீ எப்படி இது போல் பேசலாம் என த்ன்னுடைய ஒளிவட்ட பேச்சுகளை பேசியுள்ளார் ... 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂

ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/12/2024 at 20:26, Paanch said:

யாழ் போதனா வைத்தியசாலையில் எனது உறவினர் ஒருவர் தாதியாகப் பணிபுரிகிறார், அவரின் கூற்றுப்படி அங்கு பணிபுரியும் பலருக்குப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியர்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 🤔

உங்கள் கருத்திற்கு நன்றி. 🤙

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

யாழ் போதனா வைத்தியசாலையில் எனது உறவினர் ஒருவர் தாதியாகப் பணிபுரிகிறார், அவரின் கூற்றுப்படி அங்கு பணிபுரியும் பலருக்குப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியர்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 🤔

பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2024 at 23:34, கிருபன் said:

இது என்ன வருத்தம்?

ஹொஸ்பிட்டல் செகியுற்றியை வீடியோ எடுத்தது என்று வெருட்டுவதும் சண்டித்தனம் காட்டுவதும் கீழே வந்திருக்கு!

இந்தப் பனிப்பைத்தியருக்கு நிறைய fan clubs இருக்கு @ரதி🤪

 

 

‘சேர்’ பைத்தியம்பிடித்து அலையும் வைத்திய அதிகாரியும், மக்கள் பிரதிநிதியும்! யாழில் உலாவரும் அதிகார போதை!!

By Independent Writer 3 hours ago

 எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக்கொண்டிருக்கின்ற ‘சேர்’ வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது. மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது.

‘Call me Sir’ என்று ஒரு சிரேஷ்ட வைத்தியர் கூறியதை அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவுசெய்து வெளியே கசியவிட்டு அனுதாபம் தேடி எம்பியானவர்தான் வைத்தியர் அர்ச்சுனா.

ஆனால் அதே அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, ‘நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்’ என்றும், ‘நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை... என்னை சேர் என்றுதான் அழைத்தாகவேண்டும்;’ என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்றபோது, ‘இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது..’ என்று நினைக்கத்தோன்றுகின்றது.

அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன், ‘வாயை மூடுடா..’ ‘ராஸ்கல்..’ அது இது என்று கண்டிபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது.

‘உனக்குத் தெரியுமா நான் யாரென்று..’ ‘CID யிடம் பிடித்துக்கொடுப்பேன்…’ என்று அந்த ஊழியரை அவர் மிரட்டுவதையும் அந்த வீடியோவில் காண முடிகின்றது.

சக மனிதர்களையும், அரச ஊழியர்களையும் மதித்துப் பேசுவதற்கு முதலில் மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

தெரு ரவுடிகள் போன்றும், சினிமாக்களில் வருகின்ற தாதாக்கள் போன்றும் நடந்துகொள்ளாது, பதவிகள் உயருகின்றபோது தனது பண்புகளையும் உயர்திக்கொள்வற்கு அர்ச்சுனா என்கின்ற மக்கள் பிரதிநிதி கற்றுக்கொள்ளவேண்டும். 

‘ என்னை சேர்’ என்று அழையுங்கள்..’ “உனக்குத் தெரியுமாடா நான் யார் என்று..’ “ராஸ்கல்..’ இவ்வாறு நீங்கள் அழைக்கின்ற நபர்கள்தான் உங்களுக்கு வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்தவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் சீ.ஐ.டி.யிடம் பிடித்துக்கொடுக்கமுனையும் அந்தத் தமிழ் இளைஞனைத்தான் நீங்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள் என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள்.

மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு அழுக்குகளைக் கக்குகின்ற காரியத்தைத்தான் நீங்கள் தொடர்ந்துசெய்வீர்களாக இருந்தால், உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்த யாழ் மக்கள் உங்களையிட்டு வெட்கப்பட்டு நிற்பார்கள் என்பது மாத்திரமல்ல, உங்களது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட நிச்சயம் ஆப்பு வைத்துவிடுவார்கள்.

உங்களைப் போல அதிகார வெறியில் ஆடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடந்துசென்ற பண்பாளர்கள் நிறைந்துள்ள மண்ணில் நின்று நீங்கள் கூத்தாடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம்.

 

 

 

 

https://ibctamil.com/article/mp-arjunas-atrocity-in-jaffna-hospital-1733949837

நான், அவரின் ரசிகை இல்லை ...ஆனால்,தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அதிகார வெறியில் ஆடுபவர்களுக்கு இவரை போல கேள்வி கேட்பவர்கள் அவசியம். முறையான அனுமதி இல்லாமல் அங்கு போக முடியாது என்று அவருக்குத் தெரியும்...போனது அவர்களுக்கு பயம் காட்டுவதற்கு 
யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இவர் செய்தது சரி என்று தான் சொல்கிறார்கள் ....ஏதோ ஒரு தேவைக்காய் அன்றாடம் வைத்தியசாலைக்கு போய் வருபவர்களுக்கு தான் அங்கு காவலிருப்பவர்கள் செய்யும் அநியாயம் தெரியும்.இந்த வைத்தியசாலை காவலில் இருக்கும் கொம்பனி யாருடையது என்பதும் , அந்த காவலில் இருப்பவர்கள் எத்தனை பேரை காலால் எட்டி உதைத்து அடித்து இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கும். அல்லது தெரிந்திருந்தாலும்,அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை இங்கு அர்ஜுனாவை எதிர்ப்பது தானே முக்கியம் என்று எழுதி கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்களும்,மற்றவர்கள் மாதிரி ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காய் அவர் செய்யும் எல்லா செயல்களையும் எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்களும்,மற்றவர்கள் மாதிரி ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காய் அவர் செய்யும் எல்லா செயல்களையும் எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது .

தலைவரும் கருணா அம்மானின்  தவறுகளை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு என்ன நடந்தது என்று சொன்ன வரலாற்றில் இருந்து படிக்கவேண்டாமா?

அதிகாரிகளின், நிறுவனங்களின், மருத்துவமனைகளின் தவறுகளை சும்மா கேள்விமட்டும் கேட்டால் நிறுத்தமுடியாது. சட்டம், நீதிமன்றம் என்று பலவழிகள் இருக்கின்றது.

அருச்சுனா மிகவும் மோசமாக ஒருவரை (இன்னும் பலரை) நடத்துவதைப் பார்த்தும் அவருக்கு முண்டுகொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

நீங்கள்  இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள்.  🙏

அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை  அர்சசுனா  பட்டியல் இடடுள்ளார்.  அந்தந்த துறையில் உள்ளவர்களால்  சொல்ல முடியவில்லை  அதுமட்டுமல்ல  

பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும்  இங்கே ஒவ்வொரு துறையிலும்  எப்படி செலவு செய்கிறீர்கள்??  என்பதை  கேட்க மக்கள்  பிரதிநிதிகளுக்கு  உரிமை உண்டு  என்று அர்ச்சுனா கூறியுள்ளார்  இதை  அமைச்சர் சந்திரசேகரன் 

எற்றுக்கொண்டு  இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார்   இதன் மூலம்  அர்ச்சுனா  வைத்தியசாலையில் உள்ளிட்டது  தவறு இல்லை என்று உறுதியானது 

இந்த முறை தான்  மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம்  ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது  என்று பலரும் கூறுகிறார்கள் 

குறிப்பு,...அர்ச்சுனா  தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது  ஊழல்வாதிகளுக்கு  துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை  அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள்   நீங்கள் இருந்து பாருங்கள்  அர்ச்சுனா பலரின் ஊழல்களை  தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள் 

இன்று பலருக்கு வேர்த்து உள்ளது    🤣

உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன்.

எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை.

ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன்.

அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன்.

எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை.

ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன்.

அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.

நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள்    சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள்  இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான  அபிவிருத்தி நடைபெற  உதவலாம்..ஆனால்  அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

ஆனால்  அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்

எல்லோரது விருப்பமும்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உங்கள் கருத்திற்கு நன்றி. 🤙

இது என்கருத்தல்ல சாமியர் அவர்களே! உண்மையைப் பதிந்தேன். 

முன்னாளில் கருணா அம்மான் தலைவராலும் பாராட்டப்பட்ட சிறந்த போராளி, ஆனால் இன்று????????

வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது மக்களுக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிது, ஆனால் இன்று??????

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின்  மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா?  

பிரச்சனைகளை  தீர்ப்பதை விட  பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால்  கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே  ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட  ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார்.   இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே.

தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை.  அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும்.  இதனை  சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம்  ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன்  நேரடியாக பேசக்கூடிய  இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு.  இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின்  அலுவலக்கதுக்குள் அத்து மீறி  நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும்  தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. 

மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு  முழுவதும்  ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு   இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம்.   

ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத,  அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு  நம்பும் ஒரு   மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். 

பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை  அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரீ. சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றில் முன்னிலை

இது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையாகியிருந்தார்.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Order Issued To Archuna

இதன்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2024 at 10:01, கிருபன் said:

தலைவரும் கருணா அம்மானின்  தவறுகளை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு என்ன நடந்தது என்று சொன்ன வரலாற்றில் இருந்து படிக்கவேண்டாமா?

அதிகாரிகளின், நிறுவனங்களின், மருத்துவமனைகளின் தவறுகளை சும்மா கேள்விமட்டும் கேட்டால் நிறுத்தமுடியாது. சட்டம், நீதிமன்றம் என்று பலவழிகள் இருக்கின்றது.

அருச்சுனா மிகவும் மோசமாக ஒருவரை (இன்னும் பலரை) நடத்துவதைப் பார்த்தும் அவருக்கு முண்டுகொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!

தலைவரோடு இருக்கும் போது கருணா செய்த தவறு என்ன?...நீங்களும் ,இங்கு உள்ள சிலர் மாதிரி எழுத ஒன்றும் இல்லா விட்டால் இவரை பற்றி தான் எழுதுவீர்கள் என்று தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்திற்கு போனவைக்கு வடையும் ,பற்றீசும்,தேநீரும் கொண்டு வந்து வைச்ச உடனே அதை காலி செய்வதிலே குறியாயிருந்தினம் என்று ஒருவர் பேட்டி கொடுத்திருக்கார் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.