Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்ன அண்ணை சுமந்திரன் மாரி கதைக்கிறியள்🤣.

 

இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன?

1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். 

ஆம்? இல்லை?

2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்?

ஆம்? இல்லை?

3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்?

ஆம்? இல்லை?

4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்?

ஆம்? இல்லை?

5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்?

ஆம்? இல்லை?

இது உங்களுக்கு மட்டும் அல்ல.

புதுசா எதுவும் பண்ணுவோம் எண்டு சொல்லும் சகலரும் விடையளிக்கலாம்.

இவர் ஒருத்தர். ஆம், இல்லை எனும் கேள்விப்பேப்பரோடை.

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

இவர் ஒருத்தர். ஆம், இல்லை எனும் கேள்விப்பேப்பரோடை.

ஏன் பதில் சொன்னால் உங்கள் அரசியல் வங்குரோத்து தனம் வெட்ட வெளிச்சமாயிடும் எண்டு பயமா சாத்ஸ்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஏன் பதில் சொன்னால் உங்கள் அரசியல் வங்குரோத்து தனம் வெட்ட வெளிச்சமாயிடும் எண்டு பயமா சாத்ஸ்🤣.

நான் எதை சொன்னாலும் மல்லுத்தான் என்றாகிப்போச்சு.  நீங்கள் நினைத்தபடியே வைத்துக்கொள்ளுங்கள். சிங்களம் தமிழருக்கு வைக்கும் தேர்வு இது போன்றதே. எதை தெரிந்தாலும் பாதகம் நமக்குத்தான். அது தேர்வல்ல பொறி! பதிலளித்தேன் என்று வையுங்கோ; எல்லா திரியும் அமோகமா ஓடும்! எனக்கெதிரா கூட்டம் இலகுவா சேர்த்துவிடுவீர்கள் போங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

நான் எதை சொன்னாலும் மல்லுத்தான் என்றாகிப்போச்சு.  நீங்கள் நினைத்தபடியே வைத்துக்கொள்ளுங்கள். சிங்களம் தமிழருக்கு வைக்கும் தேர்வு இது போன்றதே. எதை தெரிந்தாலும் பாதகம் நமக்குத்தான். அது தேர்வல்ல பொறி! பதிலளித்தேன் என்று வையுங்கோ; எல்லா திரியும் அமோகமா ஓடும்! எனக்கெதிரா கூட்டம் இலகுவா சேர்த்துவிடுவீர்கள் போங்கோ!

🤣

இதே கேள்விகளுக்கு 2009 க்கு முன் டக்கு, டக்கு எண்டு எவரை பற்றியும் நினைக்காமல் பதில் சொல்லி இருப்பியள்.

இப்ப  யோசிக்க வேண்டி கிடக்கு.

நான் எந்த முத்திரை குத்தலுக்கும் பயப்படாமல் என் பதிலை நாளை எழுதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

போராளிகள் சுயமாக நிதி வசூலிப்பில் ஈடுபடுவதில்லை, தலைமைபீடம், தளபதிகளின் கட்டளைப்படியே செயல்பட்டிருக்கிறார்கள், அக்காலத்தில் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் மீது இந்த நிதி வசூலிப்பு தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படி கருணா செயற்பட்டார் என்று சடைந்து விடாதீர்கள், தலைமைப்பீட உத்தரவுப்படிதான் அவர் காலம் முழுவதும் செயற்பட்டார் என்றிருந்தால் போராளிகளையே வடக்கு கிழக்கு என்று பிரித்திருக்கமாட்டார்.

முக்கியமான விடயம் இங்கு நான் அசாத் ஆதரவாளனில்லை. மத்தியகிழக்கு முக்கியமாக எந்த முஸ்லீம் நாடும் நாடுகளுக்கிடையிலான போரினாலோ அல்லது சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலோ நான்  அவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. இதற்க்கு காரணம் அவர்களது 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட முரண்பாடுகளின் மூட்டையை பற்றியும் அந்த மூட்டையை அவிழ்த்து தினந்தோறும் நுகர்பவன் எப்படியாக சிந்திப்பான் என்றும்  போதுமான அறிவிருப்பதாலே. இங்கு நான் குறிப்பிட்டது புலிகள் மட்டும் ஒன்றும் தவறு செய்யாத உத்தமர்கள் அல்ல என்பதனையே. அசாத் போன்ற ஒரு கொடுங்கோலனுடன் புலிகளை ஒப்பிட முடியாது. ஆனால் புலிகளும் மனித உரிமை மீறல்களை படு சர்வசாதாரணமாக செய்துள்ளனர். 
கருணா புலிகளுடன் சேர்ந்து இயங்கிய காலம் முழுவதும் இழைத்த தவறுகளுக்கு தலைமைப்பீடம் மட்டுமே பொறுப்பு. 
நீங்கள் சொல்லவருவதைப்பார்த்தால் கிழக்கை கருணாவிடம் தூக்கிகொடுத்துவிட்டு தலைமைப்பீடம் அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விரல்சூப்பிக்கொண்டிருந்தது என்பது போல் இருக்கிறது. கருணா தலைமையின் கட்டளையை மீறி அனுமதிக்கப்படாத முறையில் நிதி வசூலித்திருந்தால் உடனடியாக தலைமை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் இது தலைமையின் பொறுப்பு. அளவுக்கதிகமான நம்பிக்கையை கருணாமீது வைத்து அவனை அவனது போக்கில் தான்தோன்றித்தனமாக ஆட அனுமத்திருந்தாலும் அதுவும் தலைமையின் பிழை.

 

8 hours ago, valavan said:

வசூலித்த விதங்கள் தவறுதான், ஆனால் வசூலித்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா?

ஆம் நான் மேலே குறிப்பிட்ட STF இனால் கொல்லப்பட்ட போராளி வசூலித்த பணமூட்டைகளை ஒரு வீட்டில் பதுக்கி வைப்பது வழக்கம், குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் அவை மொத்தமாக  அனுப்பிவைக்கப்படும்
இந்த ரகசியம் அந்த போராளி உட்பட இன்னும் இருவருக்கும் மட்டுமே தெரியும். STF வைத்த கண்ணியில் 
மூவரும் மாட்டி கொல்லப்பட அந்த வீட்டு உரிமையாளர் அவ்வளவு பணத்தையும் ஏப்பம் விட ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சும் தொழில் செய்தவர் இன்று இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பல வியாபார நிறுவனங்களுக்கு உரிமையாளர். பெரும் பணமுதலை. அதாகப்பட்டது  மக்களிடம் அடித்து பிடுங்கி, எங்கேயோ இருந்த கள்ளச்சாராயக்காரனை கோடீஸ்வரனாக்கி விட்டிருக்கிறார்கள் புலிகள்.

 

8 hours ago, valavan said:

போராளியை கம்பியால் குத்தி உயிர் ஊசலாட ஜீப்பில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே சேர்ந்து ஜெயவேவா என்று கோஷம்போட்டு மகிழ்ந்து ஆரவாரித்ததா? கேட்கும்போதே புல்லரிக்கிறது,

என்ன செய்வது அவன் ஆடிய ஆட்டம் அப்படி. இவ்வளவிற்கும் இவன் புலிகளின் கப்டன் தர போராளி கூட இல்லை. கிழக்கில் புலிகளை விட புலிகளுடன் சேர்த்தியங்கிய இந்த On & Off வால்களால் மக்கள் பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவர்களது ஆட்டத்தை புலிகளும் அனுமதித்திருந்தார்கள்

 

2 hours ago, goshan_che said:

இது உங்களுக்கு மட்டும் அல்ல.

புதுசா எதுவும் பண்ணுவோம் எண்டு சொல்லும் சகலரும் விடையளிக்கலாம்

.   

இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன?

1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். 

இல்லை

2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்?

 இல்லை

3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்?

இல்லை

4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்?

இல்லை

5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்?

இல்லை

இவ்வளவும் நடக்கவேண்டும் இவ்வவளவும் நடக்க 
அவ்வளவு புலம்பெயர் தமிழர்களும்  தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பெட்டிபடுக்கை எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கட்டுநாயக்கா வந்திறங்கி நேரடியாக  போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கையில் நடக்கவேண்டியவற்றிற்கு இலங்கையில் போராடுவது தானே முறை. அப்போதுதானே சர்வதேசத்திற்கு ஒரு கடும் தொனியில் செய்தியை சொல்லலாம். இலங்கையில் நான்கு கிழவிகளை தெருவோரம் உட்காரவைத்து ஒவ்வொன்றாக போட்டு தள்ளுவதை விட சர்வதேசம் தீர்வு தராததால் நாங்கள் சர்வதேசத்தையே துறந்துவிட்டோம் என்று நாம் சொல்லப்போகும் செய்தியால் சர்வதேசமே ஆட்டம்காணாதா ...?   

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

🤣

இதே கேள்விகளுக்கு 2009 க்கு முன் டக்கு, டக்கு எண்டு எவரை பற்றியும் நினைக்காமல் பதில் சொல்லி இருப்பியள்.

இப்ப  யோசிக்க வேண்டி கிடக்கு.

நான் எந்த முத்திரை குத்தலுக்கும் பயப்படாமல் என் பதிலை நாளை எழுதுகிறேன். 

 

 

 

 

 

பயமா? முத்திரைக்கா? என்னை விட நீங்கள் அரசியல், சட்ட, பரந்த, இதர பல திறமையுடையவர். நான் ஒரு சாதாரணமான ஆள். எனது சொந்த சுற்றாடல் அனுபவத்தை வைத்தே எழுதுகிறேன்.    

3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இவ்வளவும் நடக்கவேண்டும் இவ்வவளவும் நடக்க 
அவ்வளவு புலம்பெயர் தமிழர்களும்  தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பெட்டிபடுக்கை எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கட்டுநாயக்கா வந்திறங்கி நேரடியாக  போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கையில் நடக்கவேண்டியவற்றிற்கு இலங்கையில் போராடுவது தானே முறை. அப்போதுதானே சர்வதேசத்திற்கு ஒரு கடும் தொனியில் செய்தியை சொல்லலாம். இலங்கையில் நான்கு கிழவிகளை தெருவோரம் உட்காரவைத்து ஒவ்வொன்றாக போட்டு தள்ளுவதை விட சர்வதேசம் தீர்வு தராததால் நாங்கள் சர்வதேசத்தையே துறந்துவிட்டோம் என்று நாம் சொல்லப்போகும் செய்தியால் சர்வதேசமே ஆட்டம்காணாதா ...?

இவ்வளவும் கோசானின் தலைமையில் நடைபெற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!    

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவ்வளவும் நடக்கவேண்டும் இவ்வவளவும் நடக்க 
அவ்வளவு புலம்பெயர் தமிழர்களும்  தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பெட்டிபடுக்கை எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கட்டுநாயக்கா வந்திறங்கி நேரடியாக  போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கையில் நடக்கவேண்டியவற்றிற்கு இலங்கையில் போராடுவது தானே முறை. அப்போதுதானே சர்வதேசத்திற்கு ஒரு கடும் தொனியில் செய்தியை சொல்லலாம். இலங்கையில் நான்கு கிழவிகளை தெருவோரம் உட்காரவைத்து ஒவ்வொன்றாக போட்டு தள்ளுவதை விட சர்வதேசம் தீர்வு தராததால் நாங்கள் சர்வதேசத்தையே துறந்துவிட்டோம் என்று நாம் சொல்லப்போகும் செய்தியால் சர்வதேசமே ஆட்டம்காணாதா ...?

பதிலுக்கு நன்றி.

உங்கள் நக்கலில் உள்ள கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன்.

இந்த நக்கல் நானே யாழில் பலதடவை அடித்ததுதான்🤣.

புலம்பெயர் தமிழர் அப்படி எல்லாம் வரமாட்டார்கள். போராட்டம் நடக்கும் போதே எஸ் ஆனவர்கள் (வன்), இப்போ வருவார்களா (வேனா).

அப்படி வந்தாலும் மனிசிமாரை டிவோஸ் எடுத்து போட்டுத்தான் வரவேண்டும் - பிள்ளயள் சொல்லவே வேண்டாம்.

உங்களுக்கு ஒன்று விளங்க வேண்டும் புலம்பெயர் தமிழர் ஊரின் அரசியலில் ஈடுபாடு காட்டுவது என்பது மிக வேகமாக அருகி வரும் ஒன்று. யாழில் எழுதுவோரை பார்த்து நீங்கள் முழு சமூகமும் இப்படி என எண்ணக்கூடாது.

முதல் புலம்பெயர் தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக விடை பெறுகிறது. 

ஆகவே  ஊரில் உள்ள உங்களுக்கு இந்த புலம்பெயர் சமூகத்தின் வெளிநாட்டு இருப்பின் மூலமாக ஒரு அரசியல் அளுத்தம் கொடுத்து ஏதேனும் நல்லது நடப்பதற்கான காலச்சாளரம் (window of opportunity) மூடிக்கொண்டே வருகிறது.

யூதர்கள் போல் இந்த உணர்வை, இருப்பின்பால் வரும் மென்வலுவை, அடுத்த சந்ததிகளில் நாம் கட்டிகாப்போமா, பயன்படுத்துவோமா என்பது பலத்த கேள்விக்குரியதே. புலம்பெயர் தமிழர் நாமும் அப்படி ஓர்மமாக இருக்க வாய்ப்பில்லை, நாம் அப்படி இருந்தாலும் புலத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் வாயால் போட்டடிப்பீர்கள், இதை இனவாதிகள் மேலும் தூண்டி விடுவார்கள்.

இதுதான் இந்த புலம்பெயர் தமிழர் மென்வலுவின் போக்குவழி (trajectory).

நிற்க,

ஆனால் மேலே கேட்ட கேள்வி இப்போதும் புலம்பெயர் தேசத்தில் ஊர் அரசியலில் ஆர்வமாக இருப்போரிடம் + ஊரில் இருந்து எழுதுவோரிடம்.  

ஊரில் உள்ள மக்களில் இன்று வரை (கிழக்கில் அறுதி பெரும்பான்மை) தமிழ் தேசிய அரசியலை தேர்ந்து எடுத்துள்ள நிலையில் - அவரவர் நிலைப்பாடு என்ன என்பதையே.

உண்மையில் சாத்தான் சொன்னது போல இது பொறி வைக்கும் கேள்வி அல்ல.

நீங்கள் நக்கலாக இல்லை என சொன்னாலுக், மேலே உள்ள அனைத்தையும் ஆம் என்றே பதில் அளிப்பீர்கள் என தெரிந்ததே.  அதுதான்  யதார்தம்.

என்றைக்கு நீங்கள் கருணா/பிள்ளையான் வாக்காளராக மாறினீர்களோ அன்றே நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து விட்டீர்கள்.

ஆனால் உங்களிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது.

அதே போல் வட கிழக்கு தமிழ் வாக்காளர் பெரும்பான்மை இந்த கேள்விகளுக்கு இல்லை என்றே வாக்களிக்கும் என கடந்த தேர்தல் முடிவை வைத்து ஒரு எடுகோளை எடுக்கலாம் என நினைக்கிறேன்.

 இந்த சூழ்நிலையில் புதிதாக சிந்திப்போம் என கூறும் கு.சா அண்ணை, சாத்ஸ் போன்றோரை நோக்கியே எனது கேள்வி.

நீங்கள் புத்தர் சிலை முளைத்தால், இனி என்ன செய்வது என கடந்து போக அல்லது அனுகூலம் வரின் நிண்டு கும்பிட தயாரான ஆள்….

ஆனால் உங்களை போல அல்ல இவர்கள். புத்தர் சிலை முளைத்தாலும் கெம்புகிறார்கள், அனுர இனவாதியாக செயல்பட்டார் என்பதையும் ஏற்கிறார்கள்.

ஆனால் புதிதாக முயல்வோம் என்கிறார்கள். அவகாசம் கொடுப்போம் என்கிறார்கள்.

ரணில், மைத்திரி காலத்தில் சுமந்திரன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்கும் இவர்களுக்குத்தான் என் கேள்விகள்.

உங்களுக்கோ, (எனது பார்வையில்) @islandக்கோ அல்ல. 

தமிழ்தேசியத்தை பொறுத்த மட்டில் நீங்கள் இருவரும் பூட்ட கேசுகள். ரதி அன்ரியையும், யாழ், வன்னி, மட்டகளப்பில் என் பி பிக்கு போட்டவர்களையும் இந்த பூட்ட கேசு லிஸ்டில் சேர்க்கலாம்.

எனது கேள்வி இப்போதும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்த படி அனுர ஆதரவு நிலையிலும் இருப்போருக்க்கே.

ஊரில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்கு போட்டோருக்கும் என் கேள்விகள் அல்ல. அவர்கள் நிலைப்பாடும் உங்களை போலவே தெளிவானது. ஆனால் உங்களினற்கு நேர் எதிரானது.

 

7 hours ago, satan said:

இவ்வளவும் கோசானின் தலைமையில் நடைபெற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!    

எனக்கு எழும்பி பல்லு தீட்டவே சோம்பலா கிடக்கு…🤣

  • கருத்துக்கள உறவுகள்

சரி இனி என் நிலைப்பாட்டை சொல்கிறேன்.

அதற்கு முன் இரெண்டு பொறுப்பு துறப்புகள்.

1. சும்மா எழுதுகிறேன் என்பதால் என்னை போராட எல்லாம் கூப்பிட கூடாது. பிறகு எழுதுவதையும் நிப்பாட்டி போடுவன். முன்னர் இன்னொரு திரியில் எழுதியது போல கூட்டாக புலம்பெயர்தேசத்தில் போராடும் போது ஒரு தலை என்பதுதான் என உச்ச எல்லை.

2. கீழே நான் சொல்லும் நிலைப்பாடு - வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் மட்டும்தான். அவர்கள் கைவிடாமல் இவற்றை கைவிடும் அல்லது கைவிட கோரும் அதிகாரம் எமக்கு இல்லை என்பது என் நிலைப்பாடு.

அதே போல் அவர்கள் கைவிட்டால் நானும் அக்னி, ஐலண்ட் போல உஜாலாவுக்கு மாறி விடுவேன்.  ஆனால் அந்த நிலைப்பாட்டை பற்றி பத்தி எழுதி மினகெடமாட்டேன், தேவையும் இல்லை.

என நிலைப்பாடு

1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். 

இல்லை. இப்போ காணாமல் போனோர் என எவரும் இல்லை அனைவரும் கொல்லப்பட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் - கேள்வி 4க்கு இது முக்கியம்.

2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்?

 இல்லை. இதை தனியார் சட்ட, போராட்ட வழிகளில் போராடி பெற வேண்டும். இது அந்த மக்களின் தனியார் காணிகள். இதை அவர்கள் மீட்க மிகுதி அனைவரும் உதவ வேண்டும்.

3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்?

இல்லை - மேலே குசா அண்ணை சொன்னது போல் - இதில் இந்தியாவை மீறி இலங்கை தண்டிக்கபட வாய்ப்புகள் அரிது. ஆனால் இதுவும் கேள்வி 4 க்கு முக்கியம்.

4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்?

இல்லை - இந்த கோரிக்கைதான் சகலதுக்கும் அச்சாணி. இதை கைவிட்டால் - குறைந்த பட்ச அதிகாரபரவலாக்கலை கூட கைவிட்டதற்கு சமன்.  காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த குற்ற விசாரணை, புலம்பெயர் மென்வலு இவை அனைத்தையும் leverage பண்ணி இந்த அதிகாரத்தை பெறுவதே நமக்கான குறைந்த பட்ச தீர்வாக இருக்க முடியும். 

5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்?

ஆம் - ஒரு கடைசி பேரம் பேசலில் காத்திரமன, மீள பெற முடியாத காணி அதிகாரத்தை பெறும் போது, ஒரு காம்ப்ரமைசாக, இனவாதிகளை சாந்தபடுத்த. இதை விட்டு கொடுக்கலாம் (வேறு வழியில்லை - தமிழர் பொலிசை எந்த சிங்களவனும் ஏற்க போவதில்லை).

ஆனால் இதன் போது ஒரு பொறுப்பு கூறல் மிக்க, சேவை பிராந்தியங்களின் இன பரம்பலை ஒத்த பொலிஸார்ரை கொண்ட தேசிய பொலிஸ் சேவை அமைவதை வலியுறுத்தலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் புத்தர் சிலை முளைத்தால், இனி என்ன செய்வது என கடந்து போக அல்லது அனுகூலம் வரின் நிண்டு கும்பிட தயாரான ஆள்…

யாரது?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

வீட்டு உரிமையாளர் அவ்வளவு பணத்தையும் ஏப்பம் விட ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சும் தொழில் செய்தவர் இன்று இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பல வியாபார நிறுவனங்களுக்கு உரிமையாளர். பெரும் பணமுதலை. அதாகப்பட்டது  மக்களிடம் அடித்து பிடுங்கி, எங்கேயோ இருந்த கள்ளச்சாராயக்காரனை கோடீஸ்வரனாக்கி விட்டிருக்கிறார்கள் புலிகள்.

புலிகள் காலத்திலேயே புலிகள் பணத்தை ஏப்பம் விட்டு சுதந்திரமா இருந்திருக்கிறார் பலே கில்லாடிதான்.

அந்த உரிமையாளர் பெயர், பெட்ரோல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்கள் , வியாபார நிறுவனங்களின் பெயரை கூற முடியுமா? அனைவரும் அறிந்தால் அந்த உரிமையாளரை அவர் வருமானம் ஈட்டிய விதம் பற்றி விசாரிக்க சொல்லி அரசுக்கு அறிவிக்கலாம்,

ஆக குறைந்தது  பொதுவெளியில் அறிவித்தால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, valavan said:

புலிகள் காலத்திலேயே புலிகள் பணத்தை ஏப்பம் விட்டு சுதந்திரமா இருந்திருக்கிறார் பலே கில்லாடிதான்.

அந்த உரிமையாளர் பெயர், பெட்ரோல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்கள் , வியாபார நிறுவனங்களின் பெயரை கூற முடியுமா? அனைவரும் அறிந்தால் அந்த உரிமையாளரை அவர் வருமானம் ஈட்டிய விதம் பற்றி விசாரிக்க சொல்லி அரசுக்கு அறிவிக்கலாம்,

ஆக குறைந்தது  பொதுவெளியில் அறிவித்தால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

விடுங்க சகோ

இப்போதொல்லாம் கருத்தாடலில் ஒருவரை மடக்க புலிகள் தேவைப்படுகிறார்கள். இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் தான். 

மாறி மாறி ஆளை ஆள் கடுப்பேத்தி புலிகளை தோண்டி எடுத்து வறுக்கும் நிலை கண்டு ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன் 😭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

புலிகள் காலத்திலேயே புலிகள் பணத்தை ஏப்பம் விட்டு சுதந்திரமா இருந்திருக்கிறார் பலே கில்லாடிதான்.

அந்த உரிமையாளர் பெயர், பெட்ரோல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்கள் , வியாபார நிறுவனங்களின் பெயரை கூற முடியுமா? அனைவரும் அறிந்தால் அந்த உரிமையாளரை அவர் வருமானம் ஈட்டிய விதம் பற்றி விசாரிக்க சொல்லி அரசுக்கு அறிவிக்கலாம்,

புலிகளுக்கே தெரியாது அவர் புலிகளின் பணத்தை தான் ஏப்பம் விட்டு சுத்தலில் விடுகிறார் என்று அப்படியான எமகாதகன். அவர் ஒரே நாளில் முழுப்பணத்தையும் வெளியே விட்ட ஆளல்ல மெதுவாக ஒரு ஸ்டேஷனரி கடை திறந்து அதில் தான் சம்பாத்திப்பதாக ஊரிட்கு காட்டிக்கொண்டு படிப்படியாக விஸ்வரூப வளர்ச்சியெடுத்தவர். 
அவரையெல்லாம் புலிகளாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை இருந்த ஆதாரம் STF உடன் போயிற்று. இதற்குள் அரசு வேற.
இப்படியான வீக்கான கட்டமைப்புதான் கிழக்குமாகாணத்தின் பலபாகங்களில், ஒருகாலத்தில் புலியை மதிலால் எட்டிப்பார்த்தவன் கூட கிழக்குமாகாணத்தில் மேஜர் தர நிலை அதிகாரிதான். நானும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளன் தான் ஆனால் உண்மையை சொல்லாமல் இருக்கமுடியாதே. 

டிஸ்கி: இலங்கையில் எரிபொருள் சிக்கல் வந்ததருணம் சமூக வலைதளத்தில் ஒரு பெண் எரிபொருள் பௌசர் ஒன்றிலிருந்து நேரடியாக தனது வாகனத்திற்கு எரிபொருள் பெறுவதாக கொழும்பில் வைத்து பதிவு செய்த காணொளி சக்கைபோடு போட்டது. அந்த பெண் யாருமல்ல நம்முடைய எமகாதகனின் இரண்டாவது மகள் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

அவர் கொஞ்சம் வசதி, சராசரியிலும் கூட என்று இல்லை

எனது அப்போதைய அனுபவ கண்ணனுக்கு தெரிந்தது.

 

 

17 hours ago, ரசோதரன் said:

திருவடிவேல் அவர்களைச் சொல்லி இவரைச் சொல்லுவதை வாழ்நாளில் இப்போது தான் முதன்முறையாகக் கேட்கின்றேன்................. இவரைச் சொல்லித்தான் திருவடிவேலைச் சொல்லுவார்கள் எங்களின் பக்கத்தில்.


எனதுஉறவுக்கு தெரிந்தது வேலும்மயிலும், திருவடிவேல், அதனால் , பின் அவர்களை தெரிய வந்தது.
அனாலும் முதல் நிலை அறிமுகம், நட்பு, தொடர் நட்பு,

 

பரீட்சியம், சந்திப்பு, குசலம் விசாரிப்பு, பிடிப்பிக்கப்பட்டவரின் நிலை, எவ்வாறு அது முழு குடும்பத்தையும் பாதித்தது, புலிகளுடன் தொகையை குறைப்பது  அவர்கள் கதத்தளித்து  என்று ... பல சம்பாஷணைகள் ... எல்லாம்    வேலும்மயிலும், திருவடிவேல் உடன் தானே.

அப்படியே அவர்களின் உறவும் நிலைத்து விட்டது திருவடிவேலின் ... 

 

17 hours ago, ரசோதரன் said:

உறவினர்கள் அவரை வெளியில் இருந்து போய் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு இதைச் சொன்னவர்களிடம் கேட்டீர்கள் என்றால் காரணம் சொல்வார்கள்.

ஒருத்தரும் சொல்லலை, இடைக்கிடை சந்திக்கும் சந்தர்ப்பம் அப்போது எனது உறவு ககதைத்ததில்  இருந்த்து நான் ளங்கியது, பொறுக்கியது.

அவருக்கு (தெஇருவடிவேலின் உறவு) கெட தொகையை கேட்டு, சில நொடிகள் எனது மதியில் அது பதியவில்லை, பின் ஆயிரம் , இலட்சம், 10 இலட்சம் என்று யோசித்து,  தொகையின் பரிமாணத்தை எடை போட்டேன்.

புலிகள் இப்படி பணம் பெற்றதை, அதன் தேவையை நியாயப்படுத்தி இருக்கிறேன். அப்போது உனது (உறவுக்கு வந்தால்) என்று மற்றவர்கள் வையா குறை கதை சூடாகும் போது .. பின் எனது உறவுக்கும் வந்தது..

எனக்கு ஆதங்கம் (எனக்கு அவரை யார் என்றே தெரியாது) என்னவென்றால் , ஒரு முறை (ஹிந்தியா படைகள் காலத்தில் 88-89 ரன்றே நினைவு) அவரை பிடித்து கறந்து விட்டு, 2ம் தரமும் அவருக்கு செய்தது என்று நான் அறிந்தது

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலிகளுக்கே தெரியாது அவர் புலிகளின் பணத்தை தான் ஏப்பம் விட்டு சுத்தலில் விடுகிறார் என்று அப்படியான எமகாதகன்.

புலிகள் மூட்டை மூட்டையாக கட்டிவைத்த பணத்தை ஒருவர் கையாடியது புலிகளுக்கே தெரிந்திருக்காதபோது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. 

அப்படிப்பட்ட ஈன செயலை செய்தவர் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருந்தும் அவர் பெயரையோ, வியாபார நிறுவனங்களின் பெயர் இடங்களையோ நீங்கள் உங்களை தனிப்பட்ட ரீதியாக யாரும் அறியா புனை பெயரில் உலவுகின்றபோதும் சொல்லாமல் தவிர்க்கிறீர்கள் அது ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, valavan said:

புலிகள் மூட்டை மூட்டையாக கட்டிவைத்த பணத்தை ஒருவர் கையாடியது புலிகளுக்கே தெரிந்திருக்காதபோது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. 

அப்படிப்பட்ட ஈன செயலை செய்தவர் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருந்தும் அவர் பெயரையோ, வியாபார நிறுவனங்களின் பெயர் இடங்களையோ நீங்கள் உங்களை தனிப்பட்ட ரீதியாக யாரும் அறியா புனை பெயரில் உலவுகின்றபோதும் சொல்லாமல் தவிர்க்கிறீர்கள் அது ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது.

 

இது ஏன் உங்களுக்குப் புதிராக இருக்கிறதென விளங்கவில்லை😂. புலிகளுக்கே டிமிக்கி கொடுத்த ஒருவரை "இவர் தான்" என்று சுட்டிக் காட்டும் ஒருவர் ஊர் போய் பாதுகாப்பாகத் திரும்ப இலங்கை, அவுஸ், அமெரிக்கா போல இன்னும் வளர்ந்து விடவில்லை. ஆனாலும், அவர் ஒரு துப்பு தந்திருக்கிறார் என நினைக்கிறேன். மகளை அறிந்தால், தகப்பனை அறிவது கஷ்டமா ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எனக்கு ஆதங்கம் (எனக்கு அவரை யார் என்றே தெரியாது) என்னவென்றால் , ஒரு முறை (ஹிந்தியா படைகள் காலத்தில் 88-89 ரன்றே நினைவு) அவரை பிடித்து கறந்து விட்டு, 2ம் தரமும் அவருக்கு செய்தது என்று நான் அறிந்தது

அந்த நாட்களில் ஐந்து கோடி ரூபாய்களை ஒரே இரவில் பத்து கோடி ரூபாய்களாக மாற்றும் வல்லமை சிலருக்கு அங்கே இருந்தது............. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், முதலாவது என்ன தொகை கேட்டார்கள் என்ற திகைப்பை அகற்ற, இரண்டாவது ஏன் திரும்பவும் வந்தார்கள் என்பதன் பின்னணியை அறிந்து கொள்ள................

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நீங்கள் உங்களை தனிப்பட்ட ரீதியாக யாரும் அறியா புனை பெயரில் உலவுகின்றபோதும் சொல்லாமல் தவிர்க்கிறீர்கள் அது ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது

யாழ் கள உறவுகள் சில பேருக்கு நான் யாரென்று தெரியும். நான் 2012 இலிருந்து யாழ் கள உறுப்பினன் சிலர் என்னை நேரடியாக சந்தித்தும் இருக்கின்றனர். ஆகவே நான் தனிப்பட்ட ரீதியாக யாரும் அறியாதவன் அல்ல. அத்துடன் இலங்கை பிரசை எனவே டிஸ்கியை தவிர மேலதிக தகவல்களை தர முடியாது. டிஸ்கியை பார்த்து மோந்து கண்டுபிடிக்கக்கூடியவர்கள் கண்டுபிடிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பு ஒரு மோசமான அமைப்பாகவும், அதன் தலைவரை பொல் பொட்டிற்கு இணையாக கூறுகின்ற இந்த உலகு, அந்த அமைப்பினை பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன ஆனாலும் இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் அவர்களால் ஏதோ ஒரு வகையால் பாதிக்கப்பட்டாலும், ஆனாலும் அவர்களையே ஆதரித்த, ஆதரிக்கின்ற நிலையே காணப்படுகிறது.

அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள், புலிகளின் மீதான வெறுபினால் அல்ல ஒரு ஆதங்கத்திலேயே.

அடக்குமுறைகளிற்குள்ளாக்கும் இலங்கை அரசிற்கோ, அல்லது அதற்கெதிராக போராடிய எந்த ஒரு போராட்ட அமைப்புகளுக்கோ எந்தவகையிலும் தொடர்பற்றவனாக இருந்து வெறும் பத்திரிகை செய்திகளினூடாக இலங்கை அரசியலினை பார்க்கும் வெறும் பார்வையாளனாக எனது பார்வையில் புலிகள் மற்ற எந்த தரப்பினையும் விட அதிக அழுத்தத்திற்குள் செயற்பட்டவர்களாக தோன்றுகிறது.

மற்ற போராளி அமைப்புகள், மற்றும் இராணுவத்தில் உள்ளது போல கேளிக்கைகள் (அவை என்னவென கூற தேவையில்லை என கருதுகிறேன்) புலிகள் அமைப்பில் தடை செய்யப்பட்ட விடயங்களாக உள்ளன, அவர்கள் போரில் வென்றாலும் அதற்கு கொடுக்கும் விலையுடன் சேர்ந்து அவர்களால் போரில் கொல்லப்பட்ட எதிரணி வீரர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனும் உணர்வு, அது ஏற்படுத்தும் மன அளுத்தம் (சக தோழர்கள் இறப்பினால் ஏற்படும் சோகம் கண்ணீரில் கரைந்துவிடும் ஆனால் இந்த கொலைகள் ஏற்படுத்தும் வலிகளை வேறு வழிகளில் வடிகாலிட முடியாது) இவைகளை எவ்வாறு போராளிகள் எதிர்கொள்ளுகிறார்கள் என ஒரு சாதாரண பொதுமகனாக நினைத்து பார்ப்பதுண்டு.

போர் மனிதர்களை மிருகமாக்குகின்றது, நாங்கள் எமக்கு நெருக்கமானவர்களின் மீதுதான் குற்றம் காணுகிறோம், அந்த குற்றத்திற்கு காரணமானவர்களாக இருந்து கொண்டு.

ஒரு இராணுவ நிர்வாகத்தில் எந்தவித ஜனநாயகப்பண்புகளும் பேணப்பட முடியாதது, சாத்தியமுமில்லை. அந்த நிர்வாகத்திற்குட்பட்ட மக்களின் நிலை கடினமான ஒன்றாக இருக்கும், அதற்கு மாற்றீடாக இராணுவத்துறை சம்பந்தமற்றவர்களை பணிகமர்த்தி அவற்றினை செயற்படுத்தும்போது வருகின்றவர்களும் தவறாக இருந்தால் மக்களின் நிலை மோசமாகிவிடும்.

விமர்சனங்களின் மூலம் எதிர்காலத்தில் இது போல நிகழாமல் இருப்பதற்கான விமர்சனமாக இதனை பார்ப்பதாக கூறும் நாம் எம்மீதான எந்தவித சுய விமர்சனமுமில்லாமல் எமது தவறுகளுக்கு பலிக்கடா தேடுகின்றோம்.

அதற்காக தம்மீதான விமர்சனங்களை எதிகொள்ளும் சக்தியற்ற பலவீனமானவர்களாக இருந்த புலிகளின் அதிகார வெறியினை நியாயப்படுத்தவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

சில நிகழ்வுகள் சினிமாவில் மட்டுமே வருமென்று நினைத்திருந்தோம்.................   

 

சிலவேளையில் நீங்களும், நானும் அல்லது இங்குள்ள சிலர் இப்படி உரையாடுவது சினிமாவில் நடப்பது  போல இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில், வேலும்மயிலும், திருவடிவேல் எனது உறவுக்கு அறிமுகமுகமாகி, நட்பு வளர்ந்த்து, யார் என்று பார்த்த போது இரு பகுதியின் முப்பாட்டனுக்கும் ஒருவரை ஒருவர் அறிந்து இருந்தகர்கள்.

வேலுப்பிள்ளை (பிரபாவின் தகப்பன் ) எனது  உறவுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்து யார் என்று பார்த்த போது முனைய சந்ததிகள் அறிந்து இருந்தன. ஆனால் போர்த்துக்கேயர் வருகைக்கு முதல் உள்ள  சந்ததிகள் வியாபாரத்தில் தொடர்பு இருக்க மிக கூடிய  சாத்தியக்கூறுகள் தெரிந்தது.  

அதேபோல, பிரபாவின் மனைவி (மதிவதனி), எனது  இன்னொரு உறவுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, தேவை நிமித்தம் எனது எனது  உறவு வீட்டில் அவ்வப்போது தங்கி சென்றார் (இது பிரபாவை மணம்  முடிக்க முதல்).

அப்போது, முதல் தரம் அப்படி தங்க நேர்ந்த போது, மதிவதனியின் பெற்றோருக்கு சங்கடம், தயக்கமும், 
ஏனெனில் ஒரு பெண் அந்த நேரத்தில் அவரின்  ஊரில் (புங்குடுதீவு) இருந்து உடனடியாக  யாழ் நகரத்துக்கு உடனடியாக வரமுடியாத நிலையில், தெரியாத ஒருவரின் வீட்டில் தங்குவது.

அதனால், மதிவதனி  எனது உறவின் வீட்டில் முதல் தங்க வரும் போது தகப்னும்  (ஏரம்பு) வந்தார்.  எனது உறவின் தாயோ அல்லது மதிவதனியின் தகப்பனோ (ஏரம்பு) ஒருவரை ஒருவர் அடையாளம்  காணவில்லை. யார் என்று எரம்பு விசாரிக்கிறார் என்னுடைய உறவின் அம்மாவை , கதை  தொடர்கிறது ... சிறிது நேரத்தில்  ஏரம்பு அதிர்ச்சியான சந்தோசத்துடன் ... அடே என்னுடைய அக்காவின்  (சொந்த அல்லது தூரத்து  உறவு அக்கா அல்ல) வீட்டிலா எனது மகள் தங்கப்போகிறார் என்று அதிர்ச்சியான நிம்மதியும், ஆனந்தமடைகிறார்.

எனது உறவின் அம்மாவுக்கும் ஆனந்தம் அவரின் அடையாளம் மாறிய தம்பியை கண்டதில். வந்திருப்பது எனது (தொலைந்த தம்பி உறவின் ) மகள் என்று, அவர்களை வாசலில் நிறுத்தி, எனது  உறவின் அம்மா சாமி தட்டில் இருந்த விளக்கு, விபூதி , சந்தணம், குங்குமம் தட்டை எடுத்து வந்த்து தீபம் ஏற்றி ஆரார்த்தி எடுத்து ... வரவேற்றார்.

அப்போது, எனது உறவின் அம்மாவும், மதிவதனின் தகப்பனும் (ஏரம்பு) கிட்டத்தட்ட ஒரேநேரத்தில்  ஒருவரை ஒருவர் குறுக்கிட்டு மதிவதனியை  சுட்டி சொல்கிறார்கள், இது உன் வீடு எப்போதும் வந்து போகலாம், ஏரம்பு சொல்கிறார் நீ  (மவதனியை  சுட்டி) என்னிடம் எதுவும் சொல்லவேண்டியதில்லை இங்கு வரும் போது என்று .

படம் அல்லவா?  

அன்றில் இருந்து மதிவதனி எனது உறவுக்கு ஓர் (உறவு மீட்கப்பட்ட) தங்கை, எனது உறவின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இன்னொரு மகள்.  எனக்கு ... நீங்களே ஊகித்து கொள்ளலாம்.  

ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுக்கு முன்பே, மதிவதனிக்கும், எனது உறவுக்கும் வேறு பல பெண்கள் நட்பாக வாய்ப்பு இருந்தும், இவர்கள் இருவருமே  ஏறாத்தாழ உடன்பிறவா சகோதரிகள்  ஆகிய  நட்பு உருவாகி இருந்தது  (அதனால் தான் மதிவதனி எனது உறவின் வீட்டில் தகுவதற்கு விருப்பப்பட்டார்).

அதேபோல, எனது உறவின் அம்மாவின், அப்பாவின்  முனைய சந்ததிகளும், ஏரம்பு, மற்றும் அவரின்  மனைவி முன்னைய சந்ததிகளும் ஒன்றையொன்று அறிந்து இருந்ததாக, அவர்கள் அறிமுகமாகி  அக்கா - தம்பி என்று உறவு வளர்ந்த நேரத்தில் யார் என்று அறிந்தபோது தெரியவந்தது.    

நான் நினைக்கிறன், யாழ்ப்பாணம் குக்கிராமம், அதுக்குள் இருந்து கொண்டு பீலா விடுறம் நகரம் என்று, இல்லையா?

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஆனாலும் இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் அவர்களால் ஏதோ ஒரு வகையால் பாதிக்கப்பட்டாலும், ஆனாலும் அவர்களையே ஆதரித்த, ஆதரிக்கின்ற நிலையே காணப்படுகிறது.

அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள், புலிகளின் மீதான வெறுபினால் அல்ல ஒரு ஆதங்கத்திலேயே.

அதை செய்தால், இங்கே பெயர் குத்துதல் .

நான் பின்னிற்கமாட்டேன். 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் .

நேரம் கிடைக்கும் போது, கோசானுடன், மற்ற இயக்க அழிப்பை அலசி ஆராயப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

அதை செய்தால், இங்கே பெயர் குத்துதல் .

நான் பின்னிற்கமாட்டேன். 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் .

நேரம் கிடைக்கும் போது, கோசானுடன், மற்ற இயக்க அழிப்பை அலசி ஆராயப்படும்.

இதனை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை, அது ஒரு தவிர்க்க முடியாத இயற்கையியல் விதி, அதில் பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

புலிகள் மூட்டை மூட்டையாக கட்டிவைத்த பணத்தை ஒருவர் கையாடியது புலிகளுக்கே தெரிந்திருக்காதபோது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. 

புலிகளுக்கு, புலிகள் அல்லாதோர் என்ன செய்தார்கள் என்று முழுமையாக தெரியாது.

அப்படி உண்மையில் நடந்தது எண்பத்து கூட புலிகளுக்கு தெரியாது.

இப்படியான, வேறு கட்டுப்பாட்டு பகுதியில்.

சில விடயங்களை செய்யும் போது , இப்படியான புலிகள் அல்லாதோர், ஈடுபடும் புலிகளிடம் சொன்னார்கள் எங்களை வெளியில் சொல்லவேண்டாம், உங்களை எங்களுக்கு தெரியாது, எங்களை உங்களுக்கு தெரியாது.

செய்த விடயமே நடக்கவில்லை.

உதாரணமாக, ஆயுத்தங்கள் இடம் மாற்றப்படும்போது, அவற்றை இடம் மாற்றும் புலிகள் அல்லாதோர் , புலிகளை சந்த்திக்கும் போது முகத்தை சேட்டால் மறைத்து. அளது பொதிகளை புலிகள் குறிப்பிட்ட இடடத்தில் வைத்து செல்வது, மாற்றுபவர் வந்த்த்ஹு எடுப்பது. 

அப்படி இடம் மாற்றுபவர், பொதுவாக (அந்த  ஊரில்) புலிகளில் உள்ள வேறு அங்கத்தவர் மூலம் விடயத்துக்குள்     கொண்டுவரப்படுவார். அநேகமாக,  வேறு புலி உறுப்பினரின் நட்பு.

ஈடுபடும் புலிகளுக்கு யார் என்றே தெரியாது, அது சரியும் கூட.

இந்த அமைப்பை புலிகள் உருவாகவில்லை.

வேறு கட்டுப்பாடு பகுதி என்பதால் தேவையின் நிமித்தம் உருவாகியது.

எனவே, மிக கூரிய, கொடிய ஆபத்துகளை எதிர் கொண்டு செய்த முகம் ஆற்றிய பலர் இப்போதும் இருப்பார்கள்.

அவர்களுக்கு, திருப்தி போராஹில் எந்தவொரு அடையாளமும் இன்றி பங்காளித்தோம் என்பதே, மனசுத்தியுடன் திருகுதாளம் செய்யாமல் ஈடுபட்டு இருந்தகால்.

இப்போதும் சொல்கிறேன், எந்த இயக்கத்திலும் முழுமையாக தெரிந்த எவரும்  இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

  நான் நினைக்கிறன், யாழ்ப்பாணம் குக்கிராமம், அதுக்குள் இருந்து கொண்டு பீலா விடுறம் நகரம் என்று, இல்லையா?

🤣..................

நானும், நீங்களும் விடுவது பீலாவே அல்ல............. எங்களின் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எங்கள் எல்லோருக்கும் மேலே ஒன்று விட்டிருக்கின்றார்............. அவர் 'ஆதித்தாய்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கின்றார். ஆபிரிக்காவில் இருந்த ஒரேயொரு தாயில் இருந்தே நாங்கள் எல்லோரும், முழு உலக மனிதர்களுமே, வந்தோம் என்று அந்தக் கதை போகின்றது...................

அதை வாசித்த பின், எனக்கும் ஓபாமாவிற்கும் இடையில் ஒரு சொந்தம் இருப்பதை நான் உணர்ந்தேன்............😜.

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அவர்....... நல்ல ஒரு படைப்பு அது...... சும்மா ஒரு பகிடிக்காகவே மேலே உள்ளதை எழுதியிருக்கின்றேன்.

ஒரு பிரதேசத்தில் தலைமுறை தலைமுறைகளாக ஏதாவது விடயங்களில் முக்கியமானவர்களாக அல்லது செல்வாக்குள்ளவர்களாக இருக்கும் குடும்பங்களுக்கு இடையே ஒருவரை ஒருவர் தெரிந்து, பழக்கம் இருப்பது வழமை என்றே நினைக்கின்றேன். பெரிய கைகள் எங்கோ, எப்பவோ இணைந்த கைகளாகவும் இருந்திருக்கும். 

விடுபட்ட சொந்தங்கள் மீண்டும் சேர்வதும் நடப்பதுவே, இது மகிழ்வான ஒரு விடயம்.

யாழ்ப்பாணம் சிறிய இடம் என்றாலும், அதற்குள்ளேயே, ஒரு மீன் தொட்டிக்குள் வாழும் மீன்கள் போல, தங்களின் சிறு ஊர்களுக்குள் மட்டுமே வாழ்ந்து முடிக்கும் சில இடங்களும் உண்டு. என்னுடைய ஊர் அப்படியான ஒரு ஊர். 'எங்களுக்கு வெளியில் பெண் கொடுக்கமாட்டார்கள்..............' என்று எங்களை நாங்களே நக்கலும் செய்வோம்.      

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

நானும், நீங்களும் விடுவது பீலாவே அல்ல............. எங்களின் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எங்கள் எல்லோருக்கும் மேலே ஒன்று விட்டிருக்கின்றார்............. அவர் 'ஆதித்தாய்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கின்றார். ஆபிரிக்காவில் இருந்த ஒரேயொரு தாயில் இருந்தே நாங்கள் எல்லோரும், முழு உலக மனிதர்களுமே, வந்தோம் என்று அந்தக் கதை போகின்றது...................

அதை வாசித்த பின், எனக்கும் ஓபாமாவிற்கும் இடையில் ஒரு சொந்தம் இருப்பதை நான் உணர்ந்தேன்............😜.

இருக்கும் இருக்கும்

எதியோப்பியர்களுக்கும் எமக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள்.

18 minutes ago, ரசோதரன் said:

அதை வாசித்த பின், எனக்கும் ஓபாமாவிற்கும் இடையில் ஒரு சொந்தம் இருப்பதை நான் உணர்ந்தேன்......

ஒபாமா சொந்தக்காரன்

கமலா சொந்தக்காரி

அமெரிக்க தலைவர்கள் பலர் சொந்தமாகி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

அதை வாசித்த பின், எனக்கும் ஓபாமாவிற்கும் இடையில் ஒரு சொந்தம் இருப்பதை நான் உணர்ந்தேன்............😜.

அவுஸ்ரேலிய பழங்குடியினரே எங்களுக்கு சொத்தம் என்றாகிவிட்ட போது உங்கள் புதிய ஜனாதிபதி  டொனால்ட்  ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.