Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

👆76 வருடங்களின் பின் இதை எழுதி விளங்கப்படுத்த வேண்டி இருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி கூட மொழிப்பிரச்சினையாகவே சிறுபான்மையினரின் பிரச்சினையினை பார்க்கிறாரே?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

எனக்குக் கிடைக்கவேண்டிய என் பதவி உயர்வுக்கு அந்தச் சிங்கள மொழி என்மீது திணிக்கப்பட்டதால் நான் இலங்கையை விட்டு நீங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.😢

எனது பல உறவினர்கள் போலீஸ் துறையில் பணிசெய்தார்களாம். அதன்பின் இந்த சிங்கள திணிப்பு வந்ததால் எல்லாரும் தம் வேலையை இராஜினாமா செய்துவிட்டு ஊரில் வந்து தோட்டம் செய்வதாக கூறியிருந்தார்கள். இன்று தமிழ்ப்பொலிசாருக்கு நிறையவே தட்டுப்பாடுள்ளது. இவையெல்லாம் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டன. இதை பண்டாரநாயக்க வாரிசுகளும்  ஏற்றுக்கொண்டுள்ளனர்.

10 hours ago, RishiK said:

எல்லோரும் வடக்கில் தமிழிலும் தெற்கில் சிங்களத்திலும் கதைத்தாலே இனப்பிரச்சனை இல்லாது போயிருக்கும்.

தவறு. தமிழர் ஒருபோதும் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை, எவ்வளவுக்கு விட்டுக்கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு விட்டுக்கொடுத்துபோனார்கள். இருந்தும் சிங்களம் அதற்குமேலும் அடித்து பறிக்க நினைத்தது. தலைநகரில் சிங்களமும் தமிழும் கதைத்த தமிழரையே முதலில் அடித்து விரட்டியது. கல்வி தரப்படுத்தல் சட்டம் யாருக்கெதிராக, யாரால், ஏன் கொண்டுவரப்பட்டது? வரலாறு ஏன் யாருக்கெதிராக திரிக்கப்பட்டது? தமிழர் ஒரு விடாமுயற்சியுள்ளவர்கள், சிக்கனமானவர்கள், கட்டுப்பாடும் கல்வியில் ஒழுக்கத்தில் ஆர்வம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் உழைத்து முன்னேறினார்கள். அதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. தங்களை சுரண்டித்தான் அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று இனவாதிகள் அரச கட்டிலேறுவதற்கு மக்களின் ஆதரவை பெறுவதற்காக கிளப்பப்பட்ட வதந்தியே (வாந்தியே)  நாட்டை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.  விழுந்துபோன நாம் எதையோ சொல்லி சரியாக்கப்பார்கிறோம். ஆனால் எதிரி அதை தனது பலமாக எடுக்கிறான். இது வரலாறாகிவிட்டது. நாங்கள் அதற்கு நிறைய விலையும் கொடுத்துவிட்டோம். நம்மை நாமே நோவதை, சமாதப்படுத்துவதை தவிர வேறு தெரிவில்லையோ எனத்தோன்றுகிறது.               

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, vasee said:

இலங்கை ஜனாதிபதி கூட மொழிப்பிரச்சினையாகவே சிறுபான்மையினரின் பிரச்சினையினை பார்க்கிறாரே?

அனுரவுக்கு நல்லாத்தெரியும் இது தனியே மொழிப்பிரச்சனை இல்லை என ஆனால்

அப்படி சுருக்கி வைப்பதுதான் அவர்களின் பாணி இனவாதம்.

ரணிலை கேட்டால் இது பொருளாதாரம், அபிவிருத்தியின்மை பிரச்சனை என்பார்.

ஜேவிபி இது வெறும் மொழிபிரச்ச்னை என்று சொல்லும்.

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, goshan_che said:

அனுரவுக்கு நல்லாத்தெரியும் இது தனியே மொழிப்பிரச்சனை இல்லை என ஆனால்

அப்படி சுருக்கி வைப்பதுதான் அவர்களின் பாணி இனவாதம்.

ரணிலை கேட்டால் இது பொருளாதாரம், அபிவிருத்தியின்மை பிரச்சனை என்பார்.

ஜேவிபி இது வெறும் மொழிபிரச்ச்னை என்று சொல்லும்.

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

சிங்களம் தமிழர்க்குரிய உரிமைகளை தீர்க்க ஆர்வமாக இருந்தாலும் இந்தியா அனுமதிக்குமா?

பழைய வரலாறுகள் சம்பவங்கள் உறுதி மொழிகள் எல்லாவாற்றையும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2024 at 04:24, RishiK said:

எல்லோரும் வடக்கில் தமிழிலும் தெற்கில் சிங்களத்திலும் கதைத்தாலே இனப்பிரச்சனை இல்லாது போயிருக்கும்.

நீங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தற்கால சந்ததியைச் சேர்ந்தவர் என்றால் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கையில் தமிழினம் மீதான சிங்கள இனத்தின் அடக்குமுறையென்பது பன்முகப்படுத்தப்பட்டது. மொழி என்பது அதில் ஒரு முகம் மட்டுமே. 

1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தவுடனேயே முதலாவது சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டாயிற்று. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை ஆற்றினை அண்டி உருவாக்கப்பட்ட குடியேற்றமே கல் ஓயாக் குடியேற்றம். 1952 இல் பூர்த்தியாக்கப்பட்ட இக்குடியேற்றத்தில் கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றினார்கள். அப்போது மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் தாயகத்தில் சிங்களவர்கள் குடியேறினார்கள். இப்பகுதிகளில் இருந்த வெளியேற மறுத்த தமிழர்களுக்கும் குடியேற்றச் சிங்களவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அரச ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டும் அடித்தும் விரட்டப்பட்டார்கள். 

கல்லோயாக் குடியேற்றத்தைத் தொப்டர்ந்து பதவியா (பதவிக்குளம்), மொறவெவ (முதலிக் குளம்), கந்தளாய் ஆகியவையும் 80 களில் முல்லைத்தீவின் வலி ஓய (மணலாறு), கொக்குத்தொடுவார், கொக்கிளாய், தென்னைமரவாடி, கென்ட், டொலர் பண்ணைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிங்களக் குடியேற்றங்களும் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்தன. 

ஆனால் இவற்றினை தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்பதாலோ அல்லது சிங்களவர் தமிழ் மொழியைக் கற்பதாலோ தடுத்திருக்க முடியுமா? அவர்கள் செய்வதே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து இருப்பை அழிப்பதற்காகவே எனும்போது மொழிகளைப் பரஸ்பரம் கற்பது எவ்வாறு இதனைத் தடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

நவீன காலத்துச் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அறியப்பட்ட பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார். இலங்கையில் ஒரே உத்தியோகபூர்வ அரச மொழியாக சிங்கள மொழியே இருக்கவேண்டும் என்றும் தமிழர்கள் உட்பட அனைவரும் சிங்கள மொழியைக் கற்பது அவசியம் என்று கூறப்பட்டது. குறிப்பாக அரச சேவைகளில் சிங்களம் கற்றால் ஒழிய தமிழர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டது, தனியார் துறை பற்றிக் கேட்கவே தேவையில்லை. தாய்மொழியாகிய தமிழ் மொழியிருக்க தம்மை ஆக்கிரமித்து நிற்கும் அந்நிய மொழியான சிங்களத்தைக் கற்குமாறு தமிழர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இச்சட்டமே தமிழர்களை இன்னொரு வழியில் அடக்கியாளத்தான் என்றாகிறபோது நாம் அதனைக் கற்றிருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று எப்படி நினைக்கிறீர்கள்?

தமிழ் இனம் தனது தாய்மொழிக்கு அடுத்ததாக இன்னொரு மொழியினைக் கற்கவேண்டும் என்றால் பொது மொழியொன்றைக் கற்கலாம், ஆங்கிலம் இங்கு கைகொடுக்கும். மூன்றாவதாக சிங்களத்தை, விரும்பினால் கற்கலாம். ஆனால் இவை எதுவுமே சிங்களம் எம்மீது நடத்தும் ஆக்கிரமிப்பை தடுக்காது. சிங்களத்தைக் கற்றால் அவர்களுக்கு எமது பக்க நியாயத்தை எடுத்துரைக்கலாம் என்று கூறுவதெல்லாம் எம்மை நாமே ஏமாற்றும் வேலை, ஏனென்றால் தாம் செய்வது என்னவென்று நன்கு தெரிந்தே  சிங்களவர்கள் செய்கிறார்கள். சகோதர இனமொன்றிற்கு எதிராக தாம் செய்யும் அக்கிரமங்கள் அநீதியானவை என்பதை நாம் சிங்களம் கற்றுத்தான் அவர்களுக்குக் கூற வேண்டியதில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரஞ்சித் said:

அருமையான விளக்கம்.நன்றி ரஞ்சித்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

நன்றி ..இந்த விளக்கம் அனிவரையும் சென்றடைய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2024 at 21:40, குமாரசாமி said:

இங்கிருந்துதான் பல பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.

ஏன் அண்ணா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

ஏன் அண்ணா 

தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள்.
அவர்கள் அப்படியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2024 at 21:47, குமாரசாமி said:

இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.

On 17/12/2024 at 08:12, goshan_che said:

இலங்கையில் அனைவரும் மும்மொழி தேர்ச்சி பெறுவதே நல்லது.

ஆனால் உங்களுக்கு சிங்களம் தெரிந்தபடியால் குடியேற்றம் நிற்காது. புத்தர் சிலையும் முளைக்காது விடாது.

வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் ..

On 17/12/2024 at 13:59, vasee said:

இலங்கை ஜனாதிபதி கூட மொழிப்பிரச்சினையாகவே சிறுபான்மையினரின் பிரச்சினையினை பார்க்கிறாரே?

அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:
On 17/12/2024 at 03:59, vasee said:

இலங்கை ஜனாதிபதி கூட மொழிப்பிரச்சினையாகவே சிறுபான்மையினரின் பிரச்சினையினை பார்க்கிறாரே?

அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 

👍

இலங்கையின் 10 வது ஜனாதிபதி.
முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் முன்ணணி பிரசாரம் செய்வது போன்று எதுவும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.