Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது.

https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html

 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சவுதி அரேபியா 50 வயதான டொக்டரின் ஜிஹாத் தாக்குதல். 2006 தொடக்கம் இவர்  யேர்மனியில் வசிக்கின்றாராம் டொக்டர் கருப்பு நிற பிஎம்டபிள்யு யேர்மன் காரினால் மக்களை தாக்கினாராம். 2016 லும் இது மாதிரி நத்தார் கடை வாகன தாக்குதல் யேர்மனியில் ஒரு முஸ்லிம் மதத்தவரால் நடத்தபட்டு 12 பேர் கொல்லபட்டனரராம்
கந்தையா அண்ணா நத்தார் கடைபக்கம் போகாமல் சாதாரண சுப்பமாக்கெட்டில்  தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள  உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் – சவுதிமருத்துவர்- தனித்து செயற்பட்டுள்ளார்

21 DEC, 2024 | 08:15 AM
image

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது மாநிலத்திற்கும் அதன் தலைநகரிற்கும் துயரமான நாள்,இருவர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் மக்டர்பேர்க்கிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பேர்க்கில் மருத்துவராக பணிபுரிந்திருந்தார்.

எங்களிற்கு கிடைத்த தகவலின்படி அவர் தனியாக இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்,வேறு எவரும் இணைந்து செயற்பட்டதாக தகவல் இல்லை,என சம்பவம் இடம்பெற்ற மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/201779

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனிக்கென்று ஒரு குணமுண்டு ,

அகதியென்று வந்து அமைதியாக அந்தநாட்டு மக்களை எந்த தொந்தரவும் பண்ணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக வாழ்கிறவர்களை நிரந்தர வதிவிட அனுமதி வழங்காமல் ஓட ஓட குடும்பம் குடும்பமாக நாட்டைவிட்டு விரட்டுவார்கள்,

ஆளுக்கு பத்து பிள்ளை பெத்துக்கொண்டு, அகதி காசில் வண்டியோட்டிக்கொண்டு, அல்லாவின் பெயரால் குண்டு,கத்தி குத்து, லொறி கார் ஏத்தி நசுக்கு, சரமாரி துப்பாக்கிசூடு என்று  ஜேர்மன்காரனுக்கே ஆப்படிக்குறவர்களுக்கு நிரந்தர அனுமதியை கொத்து கொத்தாக அள்ளி வழங்குவார்கள்.

இது ஜேர்மனி பெற்ற வரமா இல்லை வேண்டி பெற்ற சாபமா ஜேர்மனிக்கே வெளிச்சம்.

  • Haha 3
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார்.

இது அவர்களது இரத்தத்தில் ஊறிய குணமாக இருக்கலாம். தமது நாட்டிலேயே சிறு சிறு குற்றங்களுக்கெல்லாம் கையை துண்டிப்பது, காலை வெட்டுவது, தலையை கொய்வது. வீட்டுப்பழக்கந்தான் போகிற இடத்திலும் வரும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ]

தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟

ஒவ்வொரு தனி இசுலாமியர்களும் ஒவ்வொரு ஜிஹாத் தானே. 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும்  முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம்

அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-7912.webp
அவனது பெயர்
ராலெப் (Taleb A). சவுதி அரேபியாவில் 1974ம் ஆண்டு பிறந்தவன். 50 வயதான ராலெப் யேர்மனியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, யேர்மனியில் பேர்ன்பர்க்கில்  Bernburg உள்ள வைத்தியசாலையில் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றுகிறான்.

யேர்மனி சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ராலெப் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் வளைகுடா நாடுகள் மீதான தனது எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தான்.

‘நல்ல இஸ்லாம் என்று எதுவும் இல்லைஎன்பது ராலெப்பின் வாதமாக இருந்தது. 2019 யூன் மாதம், பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து வரும் பத்திரிகை   (Frankfurter Allgemeine Zeitung) இஸ்லாம் மற்றும் சவுதி அரேபியாவில் பெண்களின் நிலைமை பற்றி  ராலெப்புடன் ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியது, இஸ்லாத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து தான் இஸ்லாத்தை விட்டு  எப்பொழுதோ விலகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் ராலெப் சொல்லியிருந்தான்.

சவுதியில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தில் யேரமனியில் ஒரு முக்கியமான ஆளாக ராலெப் இருந்தான். சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களுக்கான விழிப்புணர்வு அவர்களது உரிமைகள் பற்றி அதிகம் பேசினான். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவைகளை பற்றி பெரிதாக அக்கறை கொண்டிருந்தான்.

ராலெப் பற்றிய தகவல்கள் இப்படியாக இருக்கையில் அவன் 21.12.2024 சனிக்கிழமை காலை ஒரு வாடகைக் காரில் ஏறி, மாக்டேபர்க்  (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் காரை ஓட்டி ஒரு சிறு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர்களைக் கொன்றிருக்கின்றான். 200 பேர்களுக்கு மேல் காயப் படுத்தியிருக்கின்றான். போலீசார் அவனது காரைத்  தடுத்து நிறுத்தி அவனைக் கைது செய்திருக்கின்றார்கள். ராலெப் மீது நடத்தப்பட்ட சோதணையில் அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கை வெளிவந்திருக்கின்றது.

இன்று நடந்த  இந்த அனர்த்தத்தால், யேர்மனியில் இந்த வருட கிறிஸ்மஸ் சந்தை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொது மக்களோடான நேர்காணலில், அதிகளவான இஸ்லாமியர்களுக்கு அன்று புகலிடம் தந்த அன்றைய கன்ஸிலர் அஞ்சலா மேர்க்கலை பலர் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது.   

யேர்மனியில் இந்த வாரம்தான்  நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆட்சி கலைக்கப்பட்டு பெப்ரவரி 23ந் திகதி தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்தச் சம்பவம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

 

 

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Associated Press (AP)  ன் வெள்ளையடிப்பைக் கண்டித்திருக்கும் எலோன் மஸ்க். 

🤣

ஜேர்மனி அதிபரை பதவி விலகச் சொல்லும் எலன் மஸ்க் 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சவுதிஅரேபியா   ஏற்கனவே ஜேர்மனியை எச்சரிக்கை செய்திருக்கிறதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

Saudi Arabia warned Germany ahead of Christmas market ramming, source claims

 

https://m.jpost.com/breaking-news/article-834294

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்!

ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்!

ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார்.

2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார்.

மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1413409



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.