Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை

தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

அதற்கு காரணங்கள் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தற்போது தமிழ் மக்களின் அதிகளவான பிரதிநிதித்துவங்களை கொண்டுள்ள கட்சியாகும்.

தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் தமிழரசுக் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தான் தங்களின் இலக்கினை அடைய முடியும்.

ஆகவே, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட எட்டு ஆசனங்களை வடக்கு – கிழக்கில் வென்றெடுத்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ள தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கட்சிக்குள் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முனையும் தரப்புக்கள் பாரிய சதிவலையொன்றை பின்னியிருக்கின்றார்கள் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் எச்சரித்துள்ளார்.

 

https://oruvan.com/sumanthirans-faction-is-conspiring-to-create-a-rift-within-the-tamil-nadu-party-cvk-sivagnanam-warns/

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வரும்…..

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் டொட் கொம்,....🤣

  • கருத்துக்கள உறவுகள்

பேரவைச் செயலகம் – Northern Provincial Council, Sri Lanka    Fluorescent Light GIFs - Find & Share on GIPHY   M._A._Sumanthiran.jpg

சிவஞானம்  சரியான "ரியூப் லைற்" போலை இருக்கு.  
தமிழரசு கட்சியை பிழக்க... சுத்துமாத்து  சுமந்திரன் சதி செய்வது, 
இப்பதான் இவருக்கு தெரிந்து உள்ளது என்றால்... 
எப்படிப்பட்ட "அறிவாளியாக"  இவர் இருந்திருக்கின்றார்?

இதுவரை... சுத்துமாத்து சுமந்திரனின் தான்தோன்றித்தனமான, தரக்குறைவான  செயல்பாடுகளுக்கு... 
கோவில் மாடு மாதிரி  தலை ஆட்டிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் சிவஞானம், 
மற்றவர் செயலாளர் சத்தியமூர்த்தி. 

யாழ். களத்திலேயே... இவர்களின் சுத்துமாத்து சுமந்திரன் சார்பு  செயல்பாடுகள், 
75 வருட பாரம்பரியம் கொண்ட தமிழரசு கட்சியை,  நடுத்தெருவில் நிறுத்தும் என்று 
பலராலும், பலமுறை எழுதப்பட்டுள்ளது.

இது... அனைத்தும் தமிழ் மக்களுக்கு நன்கு  தெரியும். 
இவருக்கு இப்போ தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்வது...?
தாழும் கப்பலில் இருந்து தாங்கள் தப்பிக்க..  கடைந்தெடுத்த கடைசி  அயோக்கியத்தனம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

சிவஞானம்  சரியான "ரியூப் லைற்" போலை இருக்கு.  
தமிழரசு கட்சியை பிழக்க... சுத்துமாத்து  சுமந்திரன் சதி செய்வது, 
இப்பதான் இவருக்கு தெரிந்து உள்ளது என்றால்... 
எப்படிப்பட்ட அறிவாளியாக இவர் இருந்திருக்கின்றார். 

இதுவரை... சுத்துமாத்து சுமந்திரனின் தான்தோன்றித்தனமான, தரக்குறைவான  செயல்பாடுகளுக்கு... 
கோவில் மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் சிவஞானம், 
மற்றவர் செயலாளர் சத்தியமூர்த்தி. 

 

தெரிந்து இருக்கும், சந்தேகித்து இருக்கலாம், (அனால் இப்போது ஏதாவது உறுதியான ஆதாரங்கள் சிக்கி இருக்கலாம்.)

மற்றது, பிரியப்போகுது என்று வெளியில் சொன்னால் பிரிவதன் சாத்தியக்கூறு  அதிகம்.

உள்ளுக்குள் வைத்து முடிகலாம் என்று பலரு சிந்தித்து இருக்கலாம்.

அனால், சுமந்திரன் தன் வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறாரோ? (ஏனெல், சுமந்திரனுக்கு இப்போது   வேறு வேலை இல்லைத்தானே).

அல்லது, சுமந்திரன் இப்படி ஆக்கினை கொடுப்பது, தேசியப்பட்டியல், பா.உ அவருக்கு கொடுக்க வைக்கும் அழுத்தமாவும் பாவிக்கலாம்

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் யாரை வைத்து தனது திட்டங்களை நிறைவேற்ற பாவிக்கிறாரோ, அவர்களை வைத்து நிறைவேற்றிய பின் அவர்களை தூக்கி எறிந்து விடுவார். காரணம்; அவர்கள் சாட்சியாக இருந்துவிடுவார்கள் என்பதற்காக. முதலில் மாவையரையும் சம்பந்தரையும் பாவித்தார், அடுத்து ஆனோல்ட், முறையே சிறிதரன் சி வி கே சிவஞானம். அடுத்து தொடரப்போவது, சத்தியலிங்கம் இறுதி சாணக்கியன். அதற்கிடையில் சுமந்திரனை எல்லோரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே எச்சரித்தோம், அப்போவெல்லாம் மௌனம் காத்தவர்கள், இப்போ காய் தமக்கெதிராக திரும்பும்போது கருத்து தெரிவிக்கிறார்களாம். இவர்கள் சோரம்போகாமல் இருந்திருந்தால்; அவர் தானாகவே வெளியேறியிருப்பார். 

3 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள்

இந்தியப்புலனாய்வு?

1 hour ago, தமிழ் சிறி said:

சிவஞானம்  சரியான "ரியூப் லைற்" போலை இருக்கு.  
தமிழரசு கட்சியை பிழக்க... சுத்துமாத்து  சுமந்திரன் சதி செய்வது, 
இப்பதான் இவருக்கு தெரிந்து உள்ளது என்றால்...

இல்லை, அவருக்கு ஏற்கெனவே தெரியும், அந்த சதிவலையில் அவருக்கும் பங்குண்டு. பதவிக்காக காத்திருந்திருக்கிறார், இப்போ அது வேறு திசை மாறுவதால் இவர் தனது ஏமாற்றத்தை எச்சரிக்கையாக கொட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆவது ஆண்டுவிழா கோலகாலமாகவே நடக்கிறது.

இப்படி ஒரு கொண்டாட்டத்தை காணவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

75 ஆவது ஆண்டுவிழா கோலகாலமாகவே நடக்கிறது.

இப்படி ஒரு கொண்டாட்டத்தை காணவேயில்லை.

இதுதான்...  ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது.   😂

எல்லாப் புகழும்.. சுமந்திரனுக்கே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இல்லை, அவருக்கு ஏற்கெனவே தெரியும், அந்த சதிவலையில் அவருக்கும் பங்குண்டு. பதவிக்காக காத்திருந்திருக்கிறார், இப்போ அது வேறு திசை மாறுவதால் இவர் தனது ஏமாற்றத்தை எச்சரிக்கையாக கொட்டுகிறார்.

👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும்.

—————————————-

@island 1987 புலிகளும் ஜே ஆரும் இடைக்கால மாகாணசபை நிறுவலில் பிடுங்குபட்டார்கள்.

இந்த இடைக்கால சபையின் தலைவராக புலிகள் மூன்று ஆட்களை பிரேரிக்க அதில் ஒருவரை ஜே ஆர் தேர்வார் என உடன்பாடு காணப்பட்டது.

மூன்று பெயர் களை புலிகள் பிரேரித்து அதில் ஒன்றை ஜே ஆர் தெரிய, அதன் பின் இல்லை தாம் கொடுத்த மூன்றில் இன்னொரு பெயர்தான் இந்த சபையின் தலைவர் என புலிகள் அடம்பிடிக்க அது அப்படியே ஸ்தம்பித்து நின்றது.

பின் இந்தியன் ஆமியுடன் போர் வந்து விட்டது.

இதில் புலிகள் வேண்டும் என அடம்பிடித்த ஆளின் பெயரும் சிவஞானம்தான்.

இவருவரும் ஒரே ஆளா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சிவஞானம் ஐயா அவர்களே, நீங்கள் தயவுசெய்து தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதில் புலிகள் வேண்டும் என அடம்பிடித்த ஆளின் பெயரும் சிவஞானம்தான்.

இவருவரும் ஒரே ஆளா?

கோஷான், சாட்சாத் அதே சிவஞானம் தான் இவர். யாழ் மாநகரசபை ஆணையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவர். புலிகள் பிரேரித்த மூவரில் சிவஞானமும் ஒருவர். 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

கோஷான், சாட்சாத் அதே சிவஞானம் தான் இவர். யாழ் மாநகரசபை ஆணையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவர். புலிகள் பிரேரித்த மூவரில் சிவஞானமும் ஒருவர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவஞானம  கடந்த தேர்தல்வரை சுமத்திரனோடு ஒட்டிக் கொண்டு திரிந்தவர். இப்ப என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது.சிவஞானம அரசியலில் எந்தப்பதவிக்கும் இனிச்சரிப்பட்டு வரமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பம் தமிழரசு கட்சியின் முகம் அறியா தாபகர்கள் 

5 hours ago, goshan_che said:

இதில் புலிகள் வேண்டும் என அடம்பிடித்த ஆளின் பெயரும் சிவஞானம்தான்.

இவருவரும் ஒரே ஆளா?

ஆம்.

 

5 hours ago, goshan_che said:

நாளைக்கு சுமன் இவருக்கு பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும்.


குடும்பம் வழிவழியாக, தமிழரசு கட்சியின் முகம் அறியா தாபகர்கள், போசகர்கள், இரத்த நலன் போற்றுபவர்கள், வளர்த்தவர்கள் ....

அது கடினம் (ஆயினும் மனித மனம் குரங்கு).

தமிழரசு முடிவுக்கு வந்தால் ஒழிய  மாறுவார்  என்று நான் நினைக்கவில்லை.

 

1 hour ago, புலவர் said:

சிவஞானம  கடந்த தேர்தல்வரை சுமத்திரனோடு ஒட்டிக் கொண்டு திரிந்தவர். இப்ப என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது.சிவஞானம அரசியலில் எந்தப்பதவிக்கும் இனிச்சரிப்பட்டு வரமாட்டார்.

இருக்கலாம், ஆனால் அது அவரின் பார்வையில், சுமந்திரன் எண்ணம் என்ன, எதில் ஈடுபாடு, தமிழரசுக்குள் வழிக்கு கொண்டு வருவதற்கு.

இப்பொது, சுமந்திரன் cvk இன் உண்மையான சொரூபத்தை கண்டுவிட்டாரோ, அல்லது cvk அசுமந்திரன் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவாகி விட்டதோ, கட்சி உட்பட.

cvk, கட்சியின் ,  ஆகக்குறைந்தது முக்கியமானவர்கள் கருத்தை   ஆகக்குறைந்தது அனாமதேயமாக அறியாது, இதுக்கு வாய் திறந்து இருக்கமாட்டார் என்றே நினைக்கிறன்.

மற்றது, கழற்றுவதற்கு இது ஏற்ற நேரம் அல்லவா, சுமந்திரனுக்கு மக்கள் ஆதரவில்லை என்று தேர்தல் முடிவுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு இப்போதாவது தெரிந்து  இருக்க வேண்டும், அவற்றிலும் பார்க்க தமிழரசு கட்சி game விளையாடும் என்று.

கட்சியில் உள்ள அநேகமானவர்கள், குடும்பம் குடும்பமாக, சந்ததி சந்ததியாக  இரத்தத்தை ஊற்றி வளர்த்தவர்களின் சந்ததிகள் , அல்லது அந்த சந்ததிகளோடு நேரடி உறவு, தொடர்பு உள்ளவர்கள்.

எனவே தமிழரசு பிரிவது , விழுவது  ஓருவருக்கும் மனம் வராது.

ஆயினும், புதியவர்கள் ஆக்கபூர்வமாக செயற்றப்பட்டால், கட்சி வழிவிடும், அப்படி சுமந்திரனும் கட்சியில் முக்கிய அங்கத்தவராக மாறலாம்.

இப்போதும் வாய்ப்பு சுமந்திரன் கையில் அடுத்து முழுமையாக அகலவில்லை. அனால், செய்த வேலைக்கு பரிகாரம் என்பது இருக்கிறது என்பதையும் சுமந்திரன் உணர வேண்டும்.

அனால் , சகுனி வேலை பார்த்தால், எவர் உள்ளிருந்து கொள்ளும் வியாதி என்பது முடிவிலேயே தெரியும்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2024 at 14:09, satan said:

 அவருக்கு ஏற்கெனவே தெரியும், அந்த சதிவலையில் அவருக்கும் பங்குண்டு. பதவிக்காக காத்திருந்திருக்கிறார், இப்போ அது வேறு திசை மாறுவதால் இவர் தனது ஏமாற்றத்தை எச்சரிக்கையாக கொட்டுகிறார்.

நன்றி சாத்தான். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போல பரம்பரை  தலைவர் என்று அறிவித்து விட்டால் இப்படியான பொது சபை  கூட்ட வேண்டிய அவசியமே இல்லை.  

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போல பரம்பரை  தலைவர் என்று அறிவித்து விட்டால் இப்படியான பொது சபை  கூட்ட வேண்டிய அவசியமே இல்லை.  

🤣

உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடிவு சி. வி. கே. கு மகிழ்ச்சியை கொடுத்திருக்குமென நம்புகிறேன். இனி சுமந்திரனை வாழ்த்துவார். கட்சி தொண்டர்கள், பதாதை வைத்து "கட்சியை சிதைக்காதே" போன்ற வாசகங்களை கூட்டத்திற்கு முன் மண்டப வாயிலில் வைத்திருந்தனர். இவர் ஒரு சட்ட நிபுணர் என இங்கு சிலர் புழுகுகின்றனர். அதனாலோ என்னவோ, அவரும் தான் பெரிய சட்ட மேதை என்கிற நினைவில், கேள்வி கேட்டால் நீதிமன்றத்தில் சந்திப்போம் என எச்சரிக்கிறார். இவ்வளவுதான் இவரது சட்ட அறிவு, பொறுப்பு. நீதிமன்றம் இப்படியான வழக்குகள் வந்தால்; இவர்களை எச்சரித்து, கட்சியை தடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சிறு பிள்ளைகள் மாதிரி, நீதிமன்றத்தில் நிற்பதும், நீதிமன்றத்தை காட்டி பயமுறுத்துவதும், தன்னை விட்டால் மற்றவர்களுக்கு சட்டம் தெரியாது என்கிற மமதை. இனிமேல் இப்படியான சிறுபிள்ளைத்தனமான சில்மிஷங்கள் சுமந்திரன் கட்சிக்குள் செய்தால்; கட்சி தொண்டர்கள், அபிமானிகள், அங்கத்தவர்கள் சுமந்திரனுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து, கட்சியை விட்டு துரத்த வேண்டும். அதோடு, பொறுப்பில்லாமல் கருத்துக்களை வெளியிடும் உளறுவாயனிடமிருந்து பேச்சாளர் பதவியை பிடுங்க வேண்டும். ஏற்கெனவே சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூடியபோது, இவர் பொருந்தாத காரணம் கூறி அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார். இப்போ, மக்கள் இவரை நிராகரித்த பின்னும் விடாப்பிடியாக கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறார். தனக்குப்பிடிக்காதவர்களை நாறடிக்க இந்தபதவி தேவை அவருக்கு. ஊடகவியலாளர் இவரிடம் பேட்டி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

மீதிக்காலத்திற்கான பதில் தலைவர், CVK இன் மீதி ஆயுட்காலத்திற்கா? 

  • கருத்துக்கள உறவுகள்

(சுமந்திரனை விலத்துவதல்ல நோக்கம், விலத்தினால் இபோதைய  நிலையில் பிரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது ஒருபுறம். ஆகவே, இங்கே சில விரும்புவது போன்று, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது.)

இங்கே பலர் தோற்றத்தை வைத்து black & white ஆக சிந்திக்கும் போக்கு.

தமிழரசு செய்வது அதைவிட sophisticated என்றே நான் நினைக்கிறேன்.

இதில், முக்கிய மூத்த  உறுப்பினர்கள்  அமைதியாக இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 

இப்போது நடைபெற்று இருப்பது, இன்னொரு இடைக்கால சமரச முயற்சியாக.

(தவறான  கணிப்பாகவும்  இருக்கலாம்.) 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.