Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திபெத்திய பீடபூமியின் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணைத் திட்டமானது இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

திபெத்தில் உருவாகும் நதி யார்லுங் சாங்போ. இந்த நதி திபெத்தை விட்டு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்காளதேசத்திலும் பாயும் போது பிரம்மபுத்திரா நதியாக மாறுகிறது. இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட சீனா முயற்சித்து வருகிறது.

முன்னதாக, 2020ம் ஆண்டில், சீனாவில் உள்ள பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் என்ற நிறுவனம், தன்னாட்சி பெற்ற திபெத்தில் உற்பத்தியாகும் யார்லுங் சாங்போ ஆற்றில் அணை கட்டினால் ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் யார்லுங் சாங்போ ஆற்றில் அணைகட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணையானது மத்திய சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய த்ரீ கோர்ஜஸ் அணையின் 88.2 பில்லியன் kWh வடிவமைக்கப்பட்ட கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இத்திட்டத்தின் மூலம் சீனாவின் கார்பன் உச்சம் மற்றும் கார்பன் நடுநிலைமை இலக்குகளை அடைவதிலும், பொறியியல் போன்ற தொடர்புடைய தொழில்களை அதிகப்படுத்துவதிலும், திபெத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அணை கட்டுவதற்காக 254.2 பில்லியன் யுவான் ($34.83 பில்லியன்) செலவாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அணை கட்டும் திட்டத்தை திபெத்தில் அமல்படுத்தினால் எத்தனை பேரை இடமாற்றம் செய்யும் என்பதையும், பீடபூமியில் உள்ள பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

ஆனால், திபெத்தில் கட்டப்பட உள்ள அணையினால் சுற்றுச்சூழலோ அல்லது கீழ்நிலை நீர் விநியோகத்திலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இது பெரும் தலைவலியை உண்டு பண்ணும். இந்த அணைக்கட்டுவதால் ஆற்றின் ஓட்டம் மற்றும் அதன் போக்கும் மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

https://thinakkural.lk/article/314181

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இண்டியன்ஸ். சீனா அணைகட்டுவதைப் பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு நிக்கவேண்டியதுதான்!😂

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இந்தியாவிற்கு ஒரு இராட்சத 'நீர்க்குண்டு' தயார் செய்கின்றது என்று ஒரு செய்தியில் இருந்தது.......... இந்தப் பெரிய அணை உடைவதை நினைத்துப் பார்த்தாலே திகிலாகத்தான் இருக்கின்றது..........

  • கருத்துக்கள உறவுகள்

சீன செய்கிறது தான், அனால், அது இணங்கிய UN இன் தீர்மானமான, ஆறு மற்ற நாடுகளுக்கும் பங்கு இருந்தால் அதை மதித்து செயற்றப்பட வேண்டும் என்றதை.   

மற்றது நீர் மின் ஆணை என்றால், ஆம் ஓடுவது ஒரு இடத்தில சேமிக்கப்பட்டு பின் அது திறந்து விடப்படும், மின்பிறப்பாக்கியை இயக்க  .

அணைக்கட்டு நிரம்பும் வரையிலும் தண்ணீர்  ஓட்டம் குறையும் பின்பு, வழமைக்கு திரும்பும் 

 பிரமபுத்திராவில், அதற்கு ஒப்பனை பரிமாணத்தில் கிளைகளும் இருக்கிறது.

சீன எங்கு காட்டுகிறது என்பதைப்பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

சீன எங்கு காட்டுகிறது என்பதைப்பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

https://minnambalam.com/india-news/how-can-chinas-new-super-dam-to-be-built-in-tibet/

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியா இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் தான் வல்லரசு.😋

சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அல்ல... :cool:

மாலை தீவுகூட கிந்தியாவை மதிப்பதில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஆறுகள் மற்றும் நீர்வளங்களைப் பயன்படுத்துவதில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்கள் சில முக்கியக் கோட்பாடுகளை வலியுறுத்துகின்றன:

1. சம மற்றும் நியாயமான பயன்பாடு:

பகிரப்பட்ட நீர்வளங்களை நாடுகள் சமமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும். இதில் சமூக மற்றும் பொருளாதார தேவைகள், மக்கள் தொகை, மாற்று வளங்களின் கிடைப்புகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.

2. முக்கியமான சேதத்தைத் தவிர்த்தல்:

ஒரு நாடு தனது நடவடிக்கைகள் மூலம் மற்ற நாடுகளுக்கு முக்கியமான சேதத்தை ஏற்படுத்தக்கூடாது. எந்த சேதமும் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஆலோசித்து தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.

3. ஒத்துழைப்பு கடமை:

பகிரப்பட்ட ஆறுகளின் மேலாண்மையில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பகிர்ந்து, ஆலோசித்து, திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

4. திட்ட அறிவிப்பு மற்றும் ஆலோசனை:

புதிய அணைகள் போன்ற திட்டங்களை முன்னெடுக்க முனைந்தால், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

இந்த கோட்பாடுகள், 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “சர்வதேச நீர்வழிகளின் நவீன நவீனமற்ற பயன்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தம்” (UN Watercourses Convention) மற்றும் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “நாடுகள் கடந்து செல்லும் நீர்வழிகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த ஐரோப்பிய பொருளாதார ஆணைய ஒப்பந்தம்” (UNECE Water Convention) ஆகியவற்றில் உள்ளன.

இந்த ஒப்பந்தங்கள், நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நீர்வளங்களை சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

(ChatGPT யைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. குறைபாடுகளைப் பொறுத்தருள்வீர்  😁)

நீர்ப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பாக UN ல் தெளிவான வரையறை இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது என்பதைக் கவனிக்க. 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வகையில் தமிழருக்கு மகாவலி திட்டம் போல் திபெத்திய மக்களுக்கு??

சீனா வைக்கும் ஆப்பு???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், கேவின் பட்லர்
  • பதவி, பிபிசி நியூஸ்

உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்தக் கவலைகளை அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.

யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவின் இந்த நதியின் பெயர் பிரம்மபுத்திரா) கீழ் பகுதியில் இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான, 'த்ரீ கார்ஜஸ்' அணையைவிட இந்த அணை மூன்று மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கக்கூடும்.

"இந்த அணைத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செழுமை மேம்படும். சீனாவின் காலநிலை இலக்குகளை அடைய இது வழிவகுக்கும்," என்று சீன அரசு ஊடகம் இந்தத் திட்டம் குறித்து விவரித்துள்ளது.

ஆனால் மனித உரிமை குழுக்கள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்தின் விளைவுகள் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

விளைவுகள் என்ன?

இந்த அணையின் கட்டுமானத் திட்டம் குறித்து 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவிப்பு வெளியானது. இந்த அணை கட்டப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள பல சமூகங்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் உள்ளது.

அதோடு இந்தத் திட்டம், திபெத் பீடபூமியின் மிகவும் செழுமையான, பல்வகைமையான சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கடுமையாக மாற்றியமைத்து, அவற்றுக்குச் சேதம் விளைவிக்கும் என்ற அச்சமும் உள்ளது.

சீனா, திபெத்தில் பல அணைகளைக் கட்டியுள்ளது. 1950களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டதில் இருந்து, இந்த பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

திபெத் மக்களையும் அவர்களது நிலங்களையும் சீனா எவ்வாறு சுரண்டியுள்ளது என்பதற்கு இந்த அணைகளே சமீபத்திய உதாரணம் என்று ஆர்வலர்கள் முன்பு பிபிசியிடம் கூறியுள்ளனர்.

முக்கியமாக பௌத்த மதத்தைப் பின்பற்றும் திபெத் மக்கள் மீது பல ஆண்டுகளாக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மற்றொரு நீர்மின் அணை கட்டுமானத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான திபெத் மக்களை சீனா அரசு சுற்றி வளைத்தது. இது கைது மற்றும் தாக்குதலில் முடிந்தது. இதனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்பதை சில மக்களிடம் பேசியதன் மூலமும் சரிபார்க்கப்பட்ட காட்சிகளின் மூலமும் பிபிசி அறிந்து கொண்டது.

படக்குறிப்பு, சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் த்ரீ கார்ஜஸ் அணை

அவர்கள் கேங்டு அணை (Gangtuo dam) மற்றும் நீர்மின் நிலையக் கட்டுமானத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தத் திட்டங்கள் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை இடம்பெயரச் செய்யும் மற்றும் தொல்பொருட்களைக் கொண்ட பழங்கால மடங்களைச் மூழ்கடிக்கும்.

ஆனால் சீனா, உள்ளூர் மக்களை இடம்பெயரச் செய்ய அவர்களுக்கு இழப்பீடு வழங்கியதாகவும், பழங்கால சுவர் ஓவியங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியதாகவும் தெரிவித்தது.

இந்த யார்லுங் சாங்போ அணை கட்டுமானத் திட்டம் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீனா அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திட்டம் எத்தனை மக்களை இடம் பெயரச் செய்ய வைக்கும் என்பது குறித்து அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. 'த்ரீ கார்ஜஸ்' நீர்மின் அணை கட்டுமானத்தின்போது, 14 லட்சம் மக்கள் இடம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது.

திபெத்தின் மிக நீளமான நதியான யார்லுங் சாங்போவின் நீரோட்டத்தை திசைதிருப்ப, நம்சா பர்வா மலையில் சுமார் 20கி.மீ நீளத்திற்கு நான்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு?

படக்குறிப்பு, யார்லுங் சாங்போ கிராண்ட் கேன்யன் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி, உலகின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்று.

யார்லுங் சாங்போ ஆறு இந்தியாவில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

இந்த ஆறு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் வங்கதேசத்திலும் பாய்கிறது. பல நாடுகளின் எல்லையை கடந்து ஓடும் இந்த ஆற்றின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த அல்லது திசை திருப்ப இந்த அணை சீனாவுக்கு அதிகாரம் அளிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையில் "திபெத்திய பீட பூமியில் உள்ள இந்த நதிகளைக் கட்டுப்படுத்துவது, சீனாவுக்கு இந்திய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த உதவும்" என்று கூறுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் யார்லுங் சாங்போ அணை திட்டத்தை சீனா அறிவித்ததும், இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சீனாவின் அணை திட்டத்தின் எதிர்மறையான பாதிப்பைக் குறைக்க, இந்திய அரசு அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெரிய நீர்மின் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் கவலைகளுக்கு கருத்துகளுக்கு முன்பு பதிலளித்து. 2020-ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஆற்றின் மீது அணை கட்டுவதற்கு "சட்டப்பூர்வ உரிமை" இருப்பதாகவும், ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தது.

சீனாவை தொடர்ந்து இந்தியாவும் இந்த ஆற்றில் அணை கட்டினால், அதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது வங்கதேசம்தான்.

பெரிய அணை கட்டுவதால் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி காடுகள் மற்றும் காட்டுயிர்களும் பாதிக்கப்படுகின்றன. அதோடு, இந்த நதி கொண்டு வரும் வண்டல் மண் கனிமங்கள் நிறைந்தது, விவசாயத்திற்கும், கடலோரப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாதது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டுவது, அப்பகுதியின் பல்லுரிய வளங்களைப் பாதிக்கும்.

''இதுபோன்ற திட்டங்களில், தூய்மையான ஆற்றலாக தண்ணீரைப் பயன்படுத்துவதாக சீனா கூறுகிறது. ஆனால், சீனா அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லையில் 2020ஆம் ஆண்டில் பார்த்தது போல சர்ச்சை அதிகரிக்கும்போது அதைச் செய்யக்கூடும்," என்கிறார் பேராசிரியர் நித்யானந்தம்.

ஆற்றின் நீரோட்ட திசையில் அணை கட்டும்போது, தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மக்கள் முன்பைவிட அதிகமாக நிலத்தடி நீராதாரங்களை நம்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் இதனால் நிலத்தடி நீர்மட்ட படிப்படியாகக் குறையும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணை கட்டப்பட்ட பிறகு கங்கை நதியின் அதிகபட்ச நீரோட்டம் கணிசமாகக் குறைந்தது. நீரோட்டம் குறைவதால் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் மீன் இனங்களின் இழப்பு, கங்கையின் துணை நதிகள் வறண்டு போவது, நிலத்தடி நீர் உப்பாவது உட்படப் பல பிரச்னைகளுக்கு வழிவகுத்தது.

ஆனால், தாங்கள் கட்டும் அணையால் தண்ணீர் வரத்து தடைபடாது என்று இதற்கு முன்பு சீனா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியா?

கடந்த பத்து ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நோக்குடன் சீனா யார்லுங் சாங்போ ஆற்றின் போக்கில் பல நீர்மின் நிலையங்களை உருவாக்கியுள்ளது.

பூமியின் மிக ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் இந்த ஆற்றின் ஒரு பகுதி, 50 கி.மீ. தொலைவுக்கு உள்ளாகவே 2,000 மீட்டர் சாய்வாகப் பாய்கிறது. இதனால் இங்கு நீர்மின் உற்பத்திக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.

அதேவேளையில், ஆற்றின் இந்த பிரமிப்பூட்டும் நிலவியல் முக்கிய பொறியியல் சவால்களை முன்வைக்கிறது. ஆனால் சவால்கள் இருந்தபோதிலும், இந்த அணைத் திட்டம்தான் சீனா இதுவரை முன்னெடுத்த அணைத் திட்டங்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகவும், லட்சியம் மிக்க திட்டமாகவும் உள்ளது.

இந்த அணை கட்டுமானத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட கண்டத்தட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. செங்குத்தான, குறுகிய பள்ளத்தாக்கில் விரிவாகத் தோண்டியெடுத்து, அணை கட்டுவது அடிக்கடி நிலச்சரிவுக்கு வழிவகுக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் முன்பே எச்சரித்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டில், சிச்சுவான் மாகாண நிலவியல் பணியகத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் ஒருவர், "நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்படும் நிலச்சரிவுகள், மண்-பாறை ஓட்டங்கள் கணிக்க முடியாத வகையிலும் ஆபத்தானதாகவும் இருக்கும். இது திட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்" என்று எச்சரித்தார்.

சோங்கி நீர்வளப் பணியகத்தின் மதிப்பீட்டின்படி இந்தத் திட்டத்திற்கு ஒரு டிரில்லியன் யுவான் (127 பில்லியன் டாலர்) வரை செலவாகும்.

கூடுதல் தகவல்: அன்ஷுல் சிங்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எந்தப் பாதிப்பும் இந்தியாவிற்கு இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதியைத் தோண்டி எடுத்தால் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

China-ன் மெகா திட்டம்; Brahmaputra-ல் World Biggest Hydropower Dam? இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்தா?

உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. அதே போல, இந்த அணை மூலம் இந்திய பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் திட்டம்தான் என்ன? இது குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2024 at 15:49, ஏராளன் said:

பீடபூமியில் உள்ள பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை

யாழ்கள விண்ணர்களுக்கு மட்டும் அல்ல, தினக்குரலுக்கும் கூகிள் டிரான்சிலேட்டர்தான் துணை போல கிடக்கு….

Rich and highly diverse environment என்பதை தான் “பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட” என எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன்.

செழிப்பானதும், மிகுந்த பன்முகதன்மை உடையதுமான என்பது பொருந்தும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 08:21, விசுகு said:

இது ஒரு வகையில் தமிழருக்கு மகாவலி திட்டம் போல் திபெத்திய மக்களுக்கு??

சீனா வைக்கும் ஆப்பு???

நிச்சயமாக. ஐரோப்பாவில் நிலம் விழுங்கி ரஸ்யா போல் ஆசியாவில் நிலம் விழுங்கி சீனா.

இந்தியா ஒரு பேப்பர்-புலி என்பதால் திபெத்தை சீனா லபக்கியது மட்டும் அல்லாமல் வளங்களை உறிஞ்சுகிறது.

திபத்தினை சீன மயமாக்கலின் அடுத்த கட்டம் இது.

எத்தனை தேசிய இனங்களை விழுங்கிய கட்டமைப்பு சீனா என்பதை இந்த மேப் விளக்கும்.

யார்லுங் சாங்போ ஆற்றை மறிப்பதால் தர்மபுத்திராவுக்கு அதிகளவு பாதிப்பு உள்ளதாகத் தெரியவில்லை.

On 30/12/2024 at 17:18, ஏராளன் said:

இந்த அணை கட்டுமானத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட கண்டத்தட்டுக்கு அருகில் அமைந்துள்ளது.

இன்று காலை ஏற்பட்ட 6.8 றிச்டர் அளவான பூமிஅதிர்வு இந்தப் பகுதியில்தான் ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் அயல் மாநிலங்களான....  கர்நாடகம், ஆந்திரம், கேரளா போன்றவை,
தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை மறித்து  அணை கட்டும் போது... 
தடுக்காமல், வேடிக்கை  பார்த்துக் கொண்டு இருந்த இந்திய  மத்திய அரசுக்கு நல்ல படிப்பினை.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா அணை கட்டிவதால் இந்தியாவுக்கு வயிறெரிகிறதோ இல்லையோ, விடயங்களை யாழ் களத்தில்  இணைப்பது ஒரு சிலருக்கு வயிறெரிச்சலைத் தருவது தெளிவாகத் தெரிகிறது. 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

நிச்சயமாக. ஐரோப்பாவில் நிலம் விழுங்கி ரஸ்யா போல் ஆசியாவில் நிலம் விழுங்கி சீனா.

உலகின் பெரிய நில விழுங்கி  பெரிய பிரித்தானியா எல்லோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நிச்சயமாக. ஐரோப்பாவில் நிலம் விழுங்கி ரஸ்யா போல் ஆசியாவில் நிலம் விழுங்கி சீனா.

இம்முறை தை பொங்கல் தமிழர் திருவிழா ரஷ்யாவில் கலந்து கொள்ள இருக்கின்றேன். ரஷ்யர்கள் தமிழர்களுடன் இணைந்து நடத்துகின்றனர் யாழ்பாணத்து பாரம்பரிய உணவுகள் எல்லாம் உண்டு நீங்களும் வருகின்றீர்களா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இம்முறை தை பொங்கல் தமிழர் திருவிழா ரஷ்யாவில் கலந்து கொள்ள இருக்கின்றேன். ரஷ்யர்கள் தமிழர்களுடன் இணைந்து நடத்துகின்றனர் யாழ்பாணத்து பாரம்பரிய உணவுகள் எல்லாம் உண்டு நீங்களும் வருகின்றீர்களா

சும்மா போங்க அங்கால…உப்பிடித்தான் ஒரு தைபொங்கலுக்கு வெடி சுட, படுத்த பாய்க்கும் சொல்லாமல் மேற்குக்கு ஓடி வந்ததனான்…

மறுபடியும் பொங்கலா…🤣🤣🤣

8 hours ago, குமாரசாமி said:

உலகின் பெரிய நில விழுங்கி  பெரிய பிரித்தானியா எல்லோ? 😁

நிச்சயமாக. ஆனால் ஒரு வழியா பல இடங்களில் துரத்தி போட்டாங்கள்.

அண்மையில் சாகோஸ் தீவுகள்.

ஆனால் அவுஸ், நியூசி விழுங்கினது விழுங்கினதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

நிச்சயமாக. ஆனால் ஒரு வழியா பல இடங்களில் துரத்தி போட்டாங்கள்.

அண்மையில் சாகோஸ் தீவுகள்.

ஆனால் அவுஸ், நியூசி விழுங்கினது விழுங்கினதுதான்.

என்ன நீங்கள்! கனடாவை விட்டுட்டியள்? கனடா  இப்ப ஆர்ரை கொன்றோல்ல இருக்கு? 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

என்ன நீங்கள்! கனடாவை விட்டுட்டியள்? கனடா  இப்ப ஆர்ரை கொன்றோல்ல இருக்கு? 🙂

இந்தியன் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

இந்தியன் 🤣

இந்த ஒரு சொல்லை மற்றவர்கள் வாயால் கேட்க தவமிருந்தேன்.👈
இதற்காகத்தான் நான் அமெரிக்காவின் முக்கிய அரசியல்வாதியை ஆதரிக்கின்றேன்.😎
அவனவன் நாட்டடை அவனவனே ஆள வேண்டும் என்ற கொள்கை எனக்கு உண்டு.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

😎

இன்றைய குறுக்கெழுத்து போட்டி மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் ஒரே பதில்தான் 🤣

உ க் ரே ன்

க்

ரே

ன்

1 hour ago, குமாரசாமி said:

இதற்காகத்தான் நான் அமெரிக்காவின் முக்கிய அரசியல்வாதியை ஆதரிக்கின்றேன்.

ஆனால் டிரம் மூலம் ஆளுவது புட்டினும் மஸ்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

யாழ்கள விண்ணர்களுக்கு மட்டும் அல்ல, தினக்குரலுக்கும் கூகிள் டிரான்சிலேட்டர்தான் துணை போல கிடக்கு….

Rich and highly diverse environment என்பதை தான் “பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட” என எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன்.

செழிப்பானதும், மிகுந்த பன்முகதன்மை உடையதுமான என்பது பொருந்தும் என நினைக்கிறேன்.

நல்ல கவனிப்பு 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.