Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளமாகிய இந்தக் குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி மேலதிக நீரைச் சேமித்து, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே இத்திட்டத்தின்படி தண்ணீர் விநயோகம் செய்யக்கூடியமாதிரி குழாய்கள் பொருத்தப்பட்டு வேலைகள் ஆரம்பித்திருந்த நிலையில் இத்திட்டம் இடை நடுவில் தடைப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வன்னி விவசாயிகள் எதிர்க்கின்றனர். கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டமாக இருக்கும் பட்சத்தில் இரணமடுக்குளத்திலிருந்து ஆயிரக்கான ஏக்கர் வயல்காணிகளுக்கு இன்னும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை என கிளிநொச்சி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார். இவரது வாக்கு வங்கி கிளிநொச்சி என்ற வகையில் சிறிதரன் கிளிநொச்சி விவசாயிகளின் பக்கம் நிற்பதில் ஒரு நியாயமும் உள்ளது. அதேபோல் இராமநாதன் அர்ச்சுனாவின் வாக்கு வங்கி யாழ்ப்பாணத்தில் இருப்பதால் தண்ணியை யாழ் கொண்டு வருவது அவரது வாக்கு வங்கிக்கு முக்கியம்.

ஒருபக்கம் சமமான வளப்பங்கீடு பற்றி பேசினாலும் மறுபக்கம் வளச்சுரண்டல் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும். யாழ் மாவட்டத்தின் நீர்ப்பற்றாக்குறைக்கு அம்மாவட்டத்தின் தவறான மற்றும் பொறுப்பற்ற நீர் மேலாண்மையே காரணம். யாழிலில் காணப்பட்ட பல நீர் நிலைகள் மூடப்பட்டு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊதிப் பெருத்த நகரத்தாலும் முறையற்ற கழிவகற்றலாலும் நன்னீர் நிலைகள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் பழுதடைந்துள்ளன. குறிப்பாக சுண்ணாகம் மின்சார உற்பத்தி மசகு எண்ணெய்க் கழிவுகள் நிலத்திற்கடியில் விடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடிநீர் கெட்டுப் போனமையும் குறிப்பிடத்தக்கது. ஏன் யாழ் மாவட்டம் மாற்றுத் திட்டங்களை ஆலோசிக்க கூடாது. கடல் நீரை நன்னீராக சுத்திகரித்தல், மழை நீரை சேகரிக்கலாம், சட்டவிரோத கட்டிடங்களை தகர்த்து நீர்நிலைகளை மீட்டு புனரமைக்கலாம் என கிளிநொச்சியில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

தமிழருக்குள் கொம்புசீவுவதில்  வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

தமிழருக்குள் கொம்புசீவுவதில்  வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

தமிழருக்குள் சண்டையை மூட்டி குளிர் காயும் நபர்கள் சார்ந்து மிக மிக கவனமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

தமிழருக்குள் சண்டையை மூட்டி குளிர் காயும் நபர்கள் சார்ந்து மிக மிக கவனமாக இருங்கள்.

கடந்து 15 ஆண்டுகளிற் தமிழினத்தைக் ''கொத்துப்பறோட்டா'' வாக்கிவிட்டுள்ளது.இது போதாதென்று சில ஊட(கா)கங்கள் வேறு கரைகின்றன. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂

நியாயமான கேள்வி. 

4 hours ago, nochchi said:

கடந்து 15 ஆண்டுகளிற் தமிழினத்தைக் ''கொத்துப்பறோட்டா'' வாக்கிவிட்டுள்ளது.இது போதாதென்று சில ஊட(கா)கங்கள் வேறு கரைகின்றன. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இது கொம்பு சீவிவிடும் கட்டுரைதான். அதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂

அந்த, பாதிக்கப்பட்டவர்களுக்காக தண்ணீர் கேட்டுத்தான் வாதாடுகிறாரோ அர்ச்சுனா? 

ஏற்கெனவே இரணை மடுக்குளத்தில் கட்டிய கட்டுமானம், தரமில்லாமல் இடிந்து விழுந்ததாக அண்மையில் செய்தி ஒன்று வந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீதரன் யாழ் மாவட்ட எம்பி இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

ஶ்ரீதரன் யாழ் மாவட்ட எம்பி இல்லையா? 

எங்கே யார் யார் பக்கம் என்பதல்ல முக்கியம் 

யாழ் மாவட்டத்திற்கு தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கும் அளவுக்கு இரணைமடு குளத்தில் தண்ணீர் உள்ளதா என்பதே முக்கியம்.

அது இல்லையென்றால் இது எமக்குள் பகை வளர்க்கும் நரித்தனம் மட்டுமே.

(நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன். எனவே குடிதண்ணீர் எங்கிருந்து எனது ஊருக்கு வந்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்திற்கு கிளிநொச்சியில் இருந்து  தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக சிறிதரன் எதிர்த்திருக்கக் கூடாது. கிளி நொச்சி ஒரு விவசாய பூமி  அதற்கு தண்ணீர் தேவை என்ற வகையில் சொல்லி இருந்தால் அதை நியாயப்படுத்தலாம். மேலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதில் நிறைய பணச் செலவு ஏற்படும்.அத்துடன் கடல் நீரப் பெருமளவில் எடுக்கும் பொழுது மீன் முட்டைகள் சிறு மீன் குஞ்சுகள்>பவளப்பாறைகள் என்று பெருமளவு கடல்வளம் விணாக்கப்படும். சிறிய அளவில் மீன்பிடிக்கும்கரையோர மீனவர்கள் பாதிக்கப் புடுவவார்கள். மின்சாரச்செலவு பில்டர் செலவு பராமரிப்புச் செலவு கடலோர உபகரணங்கள் விரைவில் துரப்பிடித்தல்  உப்பு த்தண்ணீர் அரிப்புக் காரணமாக அடிக்கடி பழுதடையும் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும் அதன்பக்க விளைவுகள் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் கொட்டப்படும். அதுவும் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.  இப்பொழுது வழமைக்கு அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. மழைவெள்ளம் அநியாயமாக கடலுக்குப் போகின்றது. அந்த மழைநீரைத் தேக்கும் பெரிய நீர்த்த்தேக்கங்களை அமத்த்து மழை நீரை சேகரிக்கும் முறை உண்மயில்நல்ல பலனைத் தரும் நிலத்தடி நீரை உயர்த்தும்  எற்கனவே உவர்நீராகிக்கொண்டிருக்கும் நன்னீர்க் கிணறுகள் காலப்போக்கில்நன்னீராகும். கடலோர வெளிகள் குடாநாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. அவற்றை மழைநீரைத் தேக்கும் பெரிய நீர்த்தேக்கங்களை அமைக்கலாம். இதன் மூலம் வெள்ளப் பெருக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆறுமுகம் திட்டமும் செயற்படுத்தப்படுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இரணைமடு தண்ணீர் வினியோகம் தொடர்பாக சிறீதரனுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கருத்துரைப்பவர்கள் மிகவும் முக்கியமான விடயங்களைக் கருத்தில் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது. 

1) யாழ்ப்பாணத்திற்கு, குறிப்பாக கரப்பகுதிக்கு 24 மணித்தியால நீர் வினியோகம் தேவை. 

2) தொடர்ச்சியான நீர் வினியோகத்திற்கு நிலக்கீழ் நீரை நம்பியிருக்க முடியாது. அது சாத்தியமில்லாத விடயம். அது ஏனென்று எல்லோருக்கும் தெரியும். 

2) யாழ்ப்பாணம் ஒரு சம தளப் பிராந்தியம். அங்கே மலைகளோ பள்ளத்தாக்குகளோ இல்லை. எனவே மழைநீரைச் சேமித்து அதனை குடிநீர்த் திட்டத்திற்குப் பயன்படுத்துதல் என்பது தொடர்ச்சியாக சாத்தியப்படாதது. 

3) கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்குப்  பாரிய நிதி முதலீடு தேவை. அதனால் பாவனையாளருக்கான கட்டணமும் அதிகரிக்கும். 

4) யாழ்க் கடனீரேரியை நன்னீராக மாற்றும் முயற்சி என்பது பகற்கனவு. அது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும். 

நிலைமை அப்படி இருக்கையில்,  எங்களுக்கு தற்போது  உள்ள மிகவும் இலகுவான நீர் அனுசரணை என்பது இரணைமடு நீர்த் திட்டம்  மட்டுமே. 

இது சிறியருக்குத் தெரியாதா? தெரியாது என்று கூறுவாரானால் அவர் பாலர் பாடசாலை ஆசியராக இருப்பதற்கே தகுதியற்றவர். எனவே இது அவருக்குத் தெரியும் என்பது உண்மை. அப்படியானால் ஏன் அவர் அதற்கு எதிராக நிற்கிறார்? 

உண்மையில் இரணைமடுக் குழத்தின் கொள்ளளவு காணாது என்றால் கொள்ளலவைக் கூட்டுவதற்கான வழிமுறைகளைத்தான் ஆய்வு செய்ய வேண்டும். 

இந்தத் திட்டத்தை முன்மொழிந்து அதற்கான நிதியொதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது என்றால்  இதனால் எளக்கூடிய பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கும்  தீர்வுகளை முன்மொழிவுகளைச் செய்துதான் இருப்பார்கள்  என்பது பொது அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். 

அப்படியானால் சிறியர் ஏன் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்? 

வன்னி வயல்களுக்கு தண்ணீரை நிறுத்தி வைத்து வயல்களைக் காயவிட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை வழங்குவார்கள் என்று  முட்டாள்தான் எதிர்பார்ப்பான்? நம்புவான்? 

அப்படியானால் சிறியர் இதனை ஏன்  எதிர்க்கிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

அப்படியானால் சிறியர் இதனை ஏன்  எதிர்க்கிறார்? 

வாக்கு அரசியல். வாயை விட்டுவிட்டார். இனி புத்தியீவிகள்  அதன் சாத்தியங்களைச் சொன்னாலும் முன்வைத்த காலை பின்வைக்க ஈகோ விடாதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நன்றி புலவர். தெளிவூட்டும் காணொளி. 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி விளை நிலங்களை நம்பி வாழும் பூமி. அதன் தண்ணீர் தேவையை தீர்க்காமல் வெளி இடங்களுக்கு தண்ணீர் வழங்குவது தற்கொலைக்கு சமனானது.

யாழ் மாவட்டத்தில் சரியான நீர் முகாமைத்த்துவம்.. மழை நீர் சேமிப்பின்மை.. குளங்கள் ஏரிகள் சரியாக பராமரிக்கப்படாமை..நிலத்தடி நீர் பிடிப்பை அதிகரிக்கும் திட்டங்கள் இன்மை என்று பல குறைபாடுகள் இருக்க...கடல் நீரை நன்னீராக்கி பாவிக்கக் கூடிய வசதிகள் இருக்க. எதற்கு வன்னியை வாட்ட நினைக்கனும்...???

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

வாக்கு அரசியல். வாயை விட்டுவிட்டார். இனி புத்தியீவிகள்  அதன் சாத்தியங்களைச் சொன்னாலும் முன்வைத்த காலை பின்வைக்க ஈகோ விடாதே.

சொல் புத்தியுமில்லாத, சுய புத்தியுமில்லாத உந்தச் சிறியர்தான் எங்கள் டமிலினத் தலீவர்,..😏

Just now, nedukkalapoovan said:

வன்னி விளை நிலங்களை நம்பி வாழும் பூமி. அதன் தண்ணீர் தேவையை தீர்க்காமல் வெளி இடங்களுக்கு தண்ணீர் வழங்குவது தற்கொலைக்கு சமனானது.

யாழ் மாவட்டத்தில் சரியான நீர் முகாமைத்த்துவம்.. மழை நீர் சேமிப்பின்மை.. குளங்கள் ஏரிகள் சரியாக பராமரிக்கப்படாமை..நிலத்தடி நீர் பிடிப்பை அதிகரிக்கும் திட்டங்கள் இன்மை என்று பல குறைபாடுகள் இருக்க...கடல் நீரை நன்னீராக்கி பாவிக்கக் கூடிய வசதிகள் இருக்க. எதற்கு வன்னியை வாட்ட நினைக்கனும்...???

துலைஞ்சுது போ,.......விடிய விடிய ராமர் கத,!விடிஞ்சாப்பிறகு ராமருக்குச் சீத என்ன மு,...? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயங்களை அரசியல்வாதிகள்கையாளாமல் துறைசார்ந்த புத்தியீவிகள் கையாள்வது நல்லது.

தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் பூர்த்தியடைந்து அதன் இயக்கம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுவிட்டது. தாளையடி-மீசாலை-யாழ்ப்பாணம் வரையுள்ள வினியோக குழாய்கள் துப்புரவாக்கப்படும் (flushing and disinfecting) வேலை நடைபெறுகின்றது. இதற்கு 1-2 மாதங்கள் எடுக்கலாம்.
யாழ் குடாநாட்டிற்கு நீர் அவசரமாக தேவைப்படுவது குடிப்பதற்கே. இரசாயன உரங்கள், இரசாயன பூச்சி, பீடை நாசினிகள், மனிதக்கழிவுகள் ஆகியவற்றால் குடாநாட்டு நிலத்தடி நீர் குடிக்கமுடியாதளவு மாசடைந்துவிட்டதால் ஒரு வருடத்தின் 365 நாளும் குடி நீர் வினியோகம் தேவையாகவுள்ளது.
கடல் நீரை நன்னீராக்கும் RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட (desalinatied) நீரை உற்பத்தி செய்வதற்கான செலவு பொதுவாக US$0.5 முதல் $3 வரை இருக்கும். அதாவது ஒரு லீட்டருக்கு Rs 0.20 - Rs1.00 வரை இருக்கும். இதில் மின்சக்திக்கான செலவு 50%-60% ஆகவும் filter இற்கான செலவு 20-30% ஆகவும் தற்போது இருந்து வருகின்றது. இது தற்போது விற்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையுடன் ஒப்பிடும்போது நூறில் ஒன்றாக உள்ளது. காற்றாலை, சூரிய சக்தி போன்ற மலிவான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பாவித்தால் இதன் உற்பத்தி செலவு மேலும் சிறிதளவு குறையலாம்.
மேற்படி எனது கணிப்பீடு அண்ணளவானதே. இதில் அரச மானியம், சுத்திகரிப்பு நிலைய கட்டுமான செலவு, சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கான விலை ஆகியன உள்ளடக்கப்படவில்லை.
தற்போது இலங்கை முழுவதும் நீர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அவை எப்படி சுத்திகரிக்கப்பட்டாலும் சமனாகவே இருந்தாலும் எதிர்காலத்தில் இச்செலவை மாகாணம் பொறுப்பேற்கவேண்டி வரலாம் அல்லது அரசே இது கட்டுபடியாகவில்லை என்று இழுத்து மூடலாம். நாம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வுக்கு செல்வதே புத்திசாலித்தனம்.
கோடையில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரும் (desalinated water) மாரியில் சுத்திகரிக்கப்பட்ட இரணைமடு நீருமே பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வாக இருக்கமுடியும்.
இவ்விடயமாக பல பதிவுகளும், குழுக்களுமாக கடந்த பல வருடங்களாகவே நாம் பேசி வருகின்றோம். கடந்த வருட பதிவை பகிர்ந்துள்ளேன்.
No photo description available.
 
Thanks Kumaravelu Ganesan
 
  • கருத்துக்கள உறவுகள்

கபிதன்... 

இஸ்ரேலை விடவா...? இஸ்ரேல் கடல் நீரை நன்னீராக்கி பாவிப்பதும் இன்றி..பல நீர்முகாமைத்துவ உக்திகளை பாவித்தே பாலை வனத்திலும் வளமாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

யோவ் சிறியர்,....

உத தங்களின் டமிலினத் தல்லீவர் சிறிதரன் MP க்கு அனுப்பிவிடுங்கோ, புண்ணியமாப்போம். 

5 minutes ago, nedukkalapoovan said:

கபிதன்... 

இஸ்ரேலை விடவா...? இஸ்ரேல் கடல் நீரை நன்னீராக்கி பாவிப்பதும் இன்றி..பல நீர்முகாமைத்துவ உக்திகளை பாவித்தே பாலை வனத்திலும் வளமாக இருக்கிறது. 

சிரிலங்கன் டமில்ஸ் யூதர் போன்றவர்கள் என்கிற நினைப்போ,.🤣

புலவர் இணைத்த காணொளியைப் பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

யோவ் சிறியர்,....

உத தங்களின் டமிலினத் தல்லீவர் சிறிதரன் MP க்கு அனுப்பிவிடுங்கோ, புண்ணியமாப்போம். 

சிரிலங்கன் டமில்ஸ் யூதர் போன்றவர்கள் என்கிற நினைப்போ,.🤣

புலவர் இணைத்த காணொளியைப் பாருங்கோ. 

யாழ் மாவட்டம் நன்னீர் தேவைக்கு வன்னியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வராது சரியான மழை நீர் சேமிப்பு.. குளங்கள் ஏரிகள் நீரை சேமிச்சு பாவிக்கவும் நிலத்தடி நீர்பிடிப்பை தக்க வைக்க கூடிய நீர் முகாமைத்துவம்.. மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் என்று ஒருங்கிணைந்த திட்டங்களை பாவிப்பின். வீணான அரசியல் சண்டை இங்கு அவசியமில்லை. அது தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தி ஆதாயம் தேட நினைப்போருக்கே நன்மையாக அமையும். மக்களுக்கு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இரணைமடு நீரை யாழுக்கு கொண்டு வாருங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள்.

என்னுள் புரியாத புதிராய் எப்போதும் இருப்பது என்னவென்றால், இரணைமடுகுளம் ஒன்றும் வற்றாத ஜீவநதி அல்ல, மாரிகாலத்தில் நிரம்பி வழிவதும் கோடைகாலத்தில் வற்றிபோவதுமாயுள்ள நீர்பிடிப்பு பகுதி.

மாரிகாலத்தில் யாழுக்கு குடிநீர்தேவை வராது, கோடைகாலத்துக்குத்தான் அதிகமாக தேவை , கோடைகாலத்தில் வற்றி காணப்படும் இரணைமடு  கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சமுள்ள யாழ்மண்ணின் தேவையை எப்படி பூர்த்தி செய்யும்?

நீர்மட்டம் கீழிறங்கி காணபடும் இறணைமடுவிலிருந்து  பல லட்சம் மக்கள் குடிதொகையை கொண்ட யாழ்ப்பாணத்தின் தேவையை பூர்த்தி செய்ய  எப்படி நீரை வழங்கமுடியும்?  ஒரே உறிஞ்சலில் அணையிலுள்ள நீரே காலி ஆகிவிடும்.

மறுபக்கம் இரணைமடுவை நம்பியிருக்கும் நமது விவசாயிகள் எப்படி நெற்செய்கை பயிற்செய்கைகளில் ஈடுபடமுடியும்? யாழ்ப்பாணத்துக்கு குடிக்க நீர் தேவையென்றால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உணவை உற்பத்தி செய்ய நீர் வேண்டும். இதில் எதை இழக்கலாம் என்று எப்படி முடிவு செய்வது?

முதலில் யாழ்பகுதி மக்கள் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம், அளவுக்கதிகமாக குளாய்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதை தவிர்ப்பது,  நீர்பிடிப்பு இருக்ககூடிய பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்க்கவேண்டும்.

மூன்றுபக்கமும் உப்புநீராலும், குடாநாட்டை ஊடறுத்தும் ஓடும் உப்புநீர் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும் நமது பிரதேசம் பொறுப்பற்றமுறையில் நன்னீரை வீணாக்கினால் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக உப்புநீர் மண்ணாக மாறிவிடும். 

சிறிது காலத்தின் முன்னர் தாளையடி பகுதியில் கடல்நீரை குடிநீராக்குகிறோம் அதை யாழுக்கு வழங்கபோகிறோம் என்று ஆரம்பகட்ட நடவடிக்கைகளீல் இறங்கி பெரும் எடுப்பில் பிலிம் காட்டினார்கள், பின்பு அதுபற்றிய பேச்சையே காணோம்.

எனக்கென்னமோ இன்னும் ஓரிரு தசாப்தங்களில் நீர் விஷயத்தில் மிக பெரும் அபசகுனத்தை யாழ் எதிர்கொள்ளபோகிறது என்று அச்சமுள்ளது.முடிந்தவரை நீரை சிக்கனமாக பாவிக்க கற்றுக்கொள்ளூங்கள், சிங்களவன் நமக்கு எப்போ நாக்கு வரண்டு சாவோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் அதற்கான வாய்ப்புகளை நாமே தேடி கொடுக்ககூடாது,

புலம்பெயர்ந்த உறவுகள் உணவில்லையென்றால் காசு அனுப்பலாம், உடையில்லையென்றால் அதற்கும் உதவலாம், நீர் இல்லையென்றால் எதுவுமே யாரும் செய்ய முடியாது

அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை இப்போதே ஏற்படுத்தவேண்யது அரசியல்வாதிகள், கற்றவர்கள், சமூக ஆர்வலர்களது கடமை.

Edited by valavan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுப்பதில்லை. எல்லாம் மழை நீரை தேக்கங்களிள் சேகரித்தே அன்றாட பாவனைக்கு உபயோகப்படுத்துகின்றார்கள்.

இலங்கை அரசியல்வாதிகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போவார்களே ஒழிய இவர்களின் அரசியல் முறைகளையும்,வாழ்க்கை முறைகளையும்,தன்னார்வ திட்டங்களையும் கண்டு கொள்வதேயில்லை.

ஆனால் அவர்களின் கோட்டு சூட்டுக்களுக்கு இன்னும் பஞ்சமில்லை.கோட்டு சூட்டின் அர்த்தம் தெரியாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nedukkalapoovan said:

யாழ் மாவட்டம் நன்னீர் தேவைக்கு வன்னியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வராது சரியான மழை நீர் சேமிப்பு.. குளங்கள் ஏரிகள் நீரை சேமிச்சு பாவிக்கவும் நிலத்தடி நீர்பிடிப்பை தக்க வைக்க கூடிய நீர் முகாமைத்துவம்.. மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் என்று ஒருங்கிணைந்த திட்டங்களை பாவிப்பின். வீணான அரசியல் சண்டை இங்கு அவசியமில்லை. அது தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தி ஆதாயம் தேட நினைப்போருக்கே நன்மையாக அமையும். மக்களுக்கு அல்ல. 

இந்தக் கலந்துரையாடலை / பேட்டியை பார்க்கவில்லை என்பதை தாங்கள்  திரும்பவும் ஒருமுறை நிறுவுகிறீர்கள். 

🥺

47 minutes ago, valavan said:

அடிக்கடி இரணைமடு நீரை யாழுக்கு கொண்டு வாருங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள்.

என்னுள் புரியாத புதிராய் எப்போதும் இருப்பது என்னவென்றால், இரணைமடுகுளம் ஒன்றும் வற்றாத ஜீவநதி அல்ல, மாரிகாலத்தில் நிரம்பி வழிவதும் கோடைகாலத்தில் வற்றிபோவதுமாயுள்ள நீர்பிடிப்பு பகுதி.

மாரிகாலத்தில் யாழுக்கு குடிநீர்தேவை வராது, கோடைகாலத்துக்குத்தான் அதிகமாக தேவை , கோடைகாலத்தில் வற்றி காணப்படும் இரணைமடு  கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சமுள்ள யாழ்மண்ணின் தேவையை எப்படி பூர்த்தி செய்யும்?

நீர்மட்டம் கீழிறங்கி காணபடும் இறணைமடுவிலிருந்து  பல லட்சம் மக்கள் குடிதொகையை கொண்ட யாழ்ப்பாணத்தின் தேவையை பூர்த்தி செய்ய  எப்படி நீரை வழங்கமுடியும்?  ஒரே உறிஞ்சலில் அணையிலுள்ள நீரே காலி ஆகிவிடும்.

மறுபக்கம் இரணைமடுவை நம்பியிருக்கும் நமது விவசாயிகள் எப்படி நெற்செய்கை பயிற்செய்கைகளில் ஈடுபடமுடியும்? யாழ்ப்பாணத்துக்கு குடிக்க நீர் தேவையென்றால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உணவை உற்பத்தி செய்ய நீர் வேண்டும். இதில் எதை இழக்கலாம் என்று எப்படி முடிவு செய்வது?

முதலில் யாழ்பகுதி மக்கள் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம், அளவுக்கதிகமாக குளாய்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதை தவிர்ப்பது,  நீர்பிடிப்பு இருக்ககூடிய பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்க்கவேண்டும்.

மூன்றுபக்கமும் உப்புநீராலும், குடாநாட்டை ஊடறுத்தும் ஓடும் உப்புநீர் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும் நமது பிரதேசம் பொறுப்பற்றமுறையில் நன்னீரை வீணாக்கினால் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக உப்புநீர் மண்ணாக மாறிவிடும். 

சிறிது காலத்தின் முன்னர் தாளையடி பகுதியில் கடல்நீரை குடிநீராக்குகிறோம் அதை யாழுக்கு வழங்கபோகிறோம் என்று ஆரம்பகட்ட நடவடிக்கைகளீல் இறங்கி பெரும் எடுப்பில் பிலிம் காட்டினார்கள், பின்பு அதுபற்றிய பேச்சையே காணோம்.

எனக்கென்னமோ இன்னும் ஓரிரு தசாப்தங்களில் நீர் விஷயத்தில் மிக பெரும் அபசகுனத்தை யாழ் எதிர்கொள்ளபோகிறது என்று அச்சமுள்ளது.முடிந்தவரை நீரை சிக்கனமாக பாவிக்க கற்றுக்கொள்ளூங்கள், சிங்களவன் நமக்கு எப்போ நாக்கு வரண்டு சாவோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் அதற்கான வாய்ப்புகளை நாமே தேடி கொடுக்ககூடாது,

புலம்பெயர்ந்த உறவுகள் உணவில்லையென்றால் காசு அனுப்பலாம், உடையில்லையென்றால் அதற்கும் உதவலாம், நீர் இல்லையென்றால் எதுவுமே யாரும் செய்ய முடியாது

அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை இப்போதே ஏற்படுத்தவேண்யது அரசியல்வாதிகள், கற்றவர்கள், சமூக ஆர்வலர்களது கடமை.

காணொளியைப் பாருங்கோ. 

குறிப்பாக 42.26  சொல்வதைக் கேழுங்கள். அரசியல் வியாதிஸ்தர்களின் உண்மை முகம் தெரியும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

5 லீற்றர் தண்ணீத்க்கான் 400 ரூபாய்.. நேற்று 5 போத்தில் வாங்கின்னான் 2000 ரூபாய்.. 15 நாளைக்குத்தான் காணும்.. 30000 ஆயிரம் சம்பளம் எடுக்கும் ஒரு தொழிலாளி தண்ணிவாங்கி குடிக்க முடியுமா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

5 லீற்றர் தண்ணீத்க்கான் 400 ரூபாய்.. நேற்று 5 போத்தில் வாங்கின்னான் 2000 ரூபாய்.. 15 நாளைக்குத்தான் காணும்.. 30000 ஆயிரம் சம்பளம் எடுக்கும் ஒரு தொழிலாளி தண்ணிவாங்கி குடிக்க முடியுமா..?

ஐயனே நான் ஊரில் இருந்த வரைக்கும் தண்ணீர் காசுக்கு வாங்கி குடித்ததே கிடையாது.
ஏன் இந்த நிலமை?
விளக்குவீர்களா?

கால மாற்றம் எனும் உலகளாவிய பொய்யை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.