Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 10 பேர் பலி!

ADDED : ஜன 01, 2025 06:30 PM

spacer.png

வாஷிங்டன்: அமெரிக்காவின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தால் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசாரும் தாக்குதல் நடத்தினர். தற்சமயம் அந்த சாலையில் யாரும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், புலனாய்வுக்குழுவினர் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.

https://www.dinamalar.com/news/world-tamil-news/vehicle-plows-into-crowd-at-new-years-eve-party-in-us-killing-10-/3819833

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயங்கரவாதியாக இருப்பானோ? 

😏

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் வாகனத்தை பொதுமக்கள் மீது மோதிய நபர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார் - பொலிஸ் அதிகாரி

01 JAN, 2025 | 08:49 PM
image

அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில்  பொதுமக்கள் மீது வாகனத்தை மோதியவர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார் என நியுஓர்லியன்சின்  தலைமை பொலிஸ் அதிகாரி ஆன்கேர்க்பட்ரிக் தெரிவித்துள்ளார்

அவர் தெரிவித்துள்ளதாவது,

அந்த நபர் மிகவேகமாக டிரக் வண்டியை செலுத்தினார்.

அவர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார், தனது வாகனத்தை பயன்படுத்தி தன்னால் முடிந்தளவிற்கு பலரை தாக்குவதற்கு அவர் முயன்றார்.

பத்து பேர் உயிரிழந்துள்ளனர் 35 பேர் காயமடைந்துள்ளனர், இந்த எண்ணிக்கை மாறலாம்.

மருத்துவமனையில் உள்ள நபர் குறித்து எங்களிடம் குறைந்தளவு தகவல்களே உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் எத்தனை பேர்  அமெரிக்கர்கள் என்பது தெரியவில்லை.

வாகனத்தை செலுத்தியவர் அதிலிருந்து பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார்.

இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/202736

  • கருத்துக்கள உறவுகள்

நியூ ஓலின்சில் 10 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிய ஐரோப்பா மட்டும் அடி,அழிவுகள் வாங்காமல் அமெரிக்காவும் கொஞ்சமாவது வாங்கத்தானே வேண்டும். அதுதானே நியாயம்?😂

உலகிற்கு விதைத்த அழிவுக் கலாச்சாரம் ஆங்காங்கே  பொசிந்து தன் வீட்டுக்கும் வருமாம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம்

02 Jan, 2025 | 01:19 PM

image

நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணிபுரிந்தவர்  ஆப்கானிலும் பணிபுரிந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது

new_orleans_2.jpg

அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள்  நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை  வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் - தின் - ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர்.

இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தார்.சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜபார் 2004 இல்  இணைந்துகொண்டார் எனினும் ஒருமாதத்தின் பின்னர் அதிலிருந்து விலக்கப்பட்டார் என அந்த அதிகாரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி.
 
https://www.virakesari.lk/article/202774

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், தனது டிரக் வாகனத்தில் இஸ்லாமிய அரசுக் (ஐஎஸ்ஐஎஸ்) கொடியை பறக்கவிட்டபடி நியூ ஆர்லியன்ஸின் நெரிசலான பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளார்.

அமெரிக்க நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பிரெஞ்சு காலனியின் மையத்தில் உள்ள போர்பன் தெருவில் புதன்கிழமை (01) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அல்ல என்று விபரித்துள்ள அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) அது ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளது.

மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வாகன் மோதி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை செலுத்திய சாரதி தடுப்பி ஓட முயற்சித்த போது சட்ட அமுலாக்கத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதனால், இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.

மேலும், சட்ட அமுலக்கா அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள், சந்தேக நபர் 42 வயதான அமெரிக்க குடிமகன் என்றும், அண்டை மாநிலமான டெக்சாஸைச் சேர்ந்த ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற இராணுவ வீரர் என்றும் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் 15 பேரைக் கொன்ற நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் சந்தேக நபர் தனியாக செயல்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஒரு இஸ்லாமிய அரசுக் குழுவின் கொடியும், அருகிலேயே இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

https://athavannews.com/2025/1414848

  • மோகன் changed the title to கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தனிய ஐரோப்பா மட்டும் அடி,அழிவுகள் வாங்காமல் அமெரிக்காவும் கொஞ்சமாவது வாங்கத்தானே வேண்டும். அதுதானே நியாயம்?😂

உலகிற்கு விதைத்த அழிவுக் கலாச்சாரம் ஆங்காங்கே  பொசிந்து தன் வீட்டுக்கும் வருமாம். 🤣

இறுதியில் இவர்களால்  எல்லா அழிவையும் சந்திக்க போவதும் அமெரிக்காதான். எங்கெங்கு எதையெதை விதைத்தார்களோ, எல்லாம் ஒன்றுசேர்ந்து திருப்பி தாக்கும் நேரம் வரும். ஏன், நெருங்கி விட்டது என்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம்

02 Jan, 2025 | 01:19 PM

image

நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணிபுரிந்தவர்  ஆப்கானிலும் பணிபுரிந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது

new_orleans_2.jpg

அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள்  நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை  வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் - தின் - ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர்.

இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தார்.சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜபார் 2004 இல்  இணைந்துகொண்டார் எனினும் ஒருமாதத்தின் பின்னர் அதிலிருந்து விலக்கப்பட்டார் என அந்த அதிகாரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி.
 
https://www.virakesari.lk/article/202774

யாரோ ஜபாருக்கு மண்டையை நல்லாய் கழுவி போட்டார்களோ.  

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நியூஓர்லியன்ஸில்  நடந்து இருக்க வேண்டிய Georgia vs. Notre Dame College Football Playoff போட்டி இதனால் நேற்று நடைபெறவில்லை...............இன்று மதியம் இந்தப் போட்டி நடைபெறுகின்றது.

இன்று சுவடே இல்லாமல் மக்கள் இந்தப் போட்டியை பார்ப்பார்கள், ரசிப்பார்கள்............

ஊரில் அரசாங்கம் எங்களின் பாடசாலைக்கு குண்டு போட்ட மறுநாளே நான் பள்ளிக்கூடத்திற்கு முதல் ஆளாகப் போயிருந்தேன்............ எனக்கும் விசர், எல்லாருக்கும் விசர்..............🫣.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2025 at 00:17, கிருபன் said:

இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.

இப்படியான தெருக்கள் .தாக்குதல் நடத்திய நபர்களின்  மததில் பாவச்செயல்  (ஹராம் )என சொல்லப்பட்டுள்ளது...ஆகவே தான் இவர்கள் தாக்குதல் செய்யும் சகல இடங்களும் இசை நிகழ்ச்சி சம்ப்ந்தப்பட்டதாக இருக்கும்.... 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்திலும் உயிர்களை கொல்லுமாறு கூறுவதில்லை, இந்த முட்டாள்கள் செய்யும் செயலுக்கு மதத்தினை காரணம் காட்டி மதத்தினை ஒரு பயங்கரவாத மதமாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள் இந்த முட்டாள்கள்.

எதிர்காலத்தில் நாடுகள் இந்த மதத்தினை தடை செய்யும் நிலை கூட வரலாம் இந்த முட்டாள்களால், அமெரிக்க அரசின் படுகொலைகளுக்கு எவ்வாறு அப்பாவி மக்கள் உடந்தையாவார்கள், அமெரிக்க அரசின் அப்பாவி மக்கள் படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் போலவே அப்பாவி மக்கள் இறப்பதனை விரும்பும் இவர்களும் மனநோயாளிகள்தான்.

பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இலங்கையில் நடக்க இருந்த தீவிர தாக்குதலை அறிந்தவர்களால் தம் நாட்டிற்குள்ளே நிகழும் தீவிர வாத தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது நம்புவதாக இல்லை!

இதில் அனைத்து தரப்பினது குறியும் அப்பாவி பொதுமக்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

எந்த மதத்திலும் உயிர்களை கொல்லுமாறு கூறுவதில்லை,

உண்மை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை அல்ல.

சில நாடுகளின்  கொடியில் "வாள்" தான் சின்னம் ...அந்த நாடுகளின் பிரஜைகள் சொல்வார்கள் தமது மதம் வாள் கொண்டு  பரவியதாக...நிச்சமாக அந்த வாள் கேக் வெட்ட உபயோகப்படுத்தவில்லை....மனித் தலைகளை வெட்ட பயன்படுத்த பட்டுள்ளது...
அன்று வாள் இன்று துப்பாக்கி ,வெடிகுண்டு என ....அந்த இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே தாகுதல் செய்கின்றனர்

12 hours ago, vasee said:

பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இலங்கையில் நடக்க இருந்த தீவிர தாக்குதலை அறிந்தவர்களால் தம் நாட்டிற்குள்ளே நிகழும் தீவிர வாத தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது நம்புவதாக இல்லை!

இதில் அனைத்து தரப்பினது குறியும் அப்பாவி பொதுமக்கள்தான்.

இலங்கை தாக்குதல் எச்சரிக்கை அவர்கள்(அமெரிக்கா) நலன்சார்ந்து அவர்களே திட்டமிட்டது ...எனவே தான் முன்னெச்சரிக்கை...இதை(இலங்கையில்)  உண்மையாகவே ஒர் தீவிரவாத அமைப்பு  செய்ய நினைத்திருந்தால் செய்திருப்பார்கள் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, vasee said:

எந்த மதத்திலும் உயிர்களை கொல்லுமாறு கூறுவதில்லை, இந்த முட்டாள்கள் செய்யும் செயலுக்கு மதத்தினை காரணம் காட்டி மதத்தினை ஒரு பயங்கரவாத மதமாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள் இந்த முட்டாள்கள்.

நேரலை மரண தண்டனைகளும்,கை விரல் வெட்டும் தண்டனைகள்,கல்லால் எறிந்து கொல்லும் தண்டனகள் போன்ற நாடுகளில் இருந்து தப்பி வருபவர்களை நம்ப சொல்கின்றீர்களா?

அவ்வளவு கொடூர தண்டனைகள் ஒரு நாட்டில் இருக்கின்றதென்றால் அந்த பொது  சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்த நாடுகளிலிருந்து மேற்குலகிற்கு வந்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்?

சருகு ஆமையை மெத்தையில் வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.....அது போல்தான் அவர்கள் நடவடிக்கைகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இலங்கையில் நடக்க இருந்த தீவிர தாக்குதலை அறிந்தவர்களால் தம் நாட்டிற்குள்ளே நிகழும் தீவிர வாத தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது நம்புவதாக இல்லை!

எவ்வாறு ஒசாமா பின்னலேடனை அழித்து, ஆப்கானிஸ்தானை சூறையாட, சதாம் குசேனை கொன்று, ஈராக்கை சுடுகாடாக்க, நாடகம், கதாபாத்திரம் தயாரித்தார்களோ, அவ்வாறே தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வேண்டிய இடத்தில் தங்கள் நாடகங்களை அரங்கேற்றுவார்கள். அவர்களுக்கு எந்த மக்களைப்பற்றியும் கவலையில்லை. அப்பாவிமக்களே அவர்கள் பாவிக்கும் கேடயங்கள். நாம் என்ன செய்ய முடியும்? நாமும் அவ்வாறே, பல தலைமுறைகளை, அவர்கள் வருந்தித்தேடிய யாவற்றையும் இழந்தவர்கள்.

On 3/1/2025 at 06:39, ரசோதரன் said:

ஊரில் அரசாங்கம் எங்களின் பாடசாலைக்கு குண்டு போட்ட மறுநாளே நான் பள்ளிக்கூடத்திற்கு முதல் ஆளாகப் போயிருந்தேன்............ எனக்கும் விசர், எல்லாருக்கும் விசர்..............🫣.

நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்று தெரிந்துகொண்டேன், உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஆமாம். அந்த அதிர்ச்சி செய்தி, எல்லோருக்கும் விசர் வர வைத்ததோடு அச்சத்தையும் ஏற்படுத்தியது. செய்வதேறியாமல் தாக்குதல் நடந்த இடத்துக்கு போயிருந்தார்கள்.          

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இன்று திமிங்கிலம் ஒன்று தன் இறந்த குட்டியை தலையில் சுமந்து கொண்டு கடல் கடலாக நீந்தும் செய்தியை பார்த்தீர்களா தெரியவில்லை, சாத்தான். நான்கு வருடங்களின் முன்னும் இதே திமிங்கிலத்தின் குட்டி ஒன்று இறந்துபோனது. 17 நாட்கள் இறந்த குட்டியை தலையில் சுமந்து கொண்டு அது நீந்தியது.........😢

நேசத்துடனும், பாசத்துடனுமே வாழ்ந்திருக்க வேண்டிய மனிதர்கள், ஆனால் இன்று வெறுப்பு எல்லாவற்றையும் மேவிவிட்டது.....................😔  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

நேசத்துடனும், பாசத்துடனுமே வாழ்ந்திருக்க வேண்டிய மனிதர்கள், ஆனால் இன்று வெறுப்பு எல்லாவற்றையும் மேவிவிட்டது.....................😔

எத்தனை உண்மை! ஒரு மனிதன் செய்யும் தீங்கு, ஒரு மனிதனை மட்டுமல்ல அல்லது ஒரு பண்பை மட்டுமல்ல மொத்த சமூகத்தையும் மனித மாண்புகளையும் புரட்டிப்போட்டுவிட்டது என்பது கசப்பான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நேரலை மரண தண்டனைகளும்,கை விரல் வெட்டும் தண்டனைகள்,கல்லால் எறிந்து கொல்லும் தண்டனகள் போன்ற நாடுகளில் இருந்து தப்பி வருபவர்களை நம்ப சொல்கின்றீர்களா?

அவ்வளவு கொடூர தண்டனைகள் ஒரு நாட்டில் இருக்கின்றதென்றால் அந்த பொது  சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்த நாடுகளிலிருந்து மேற்குலகிற்கு வந்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்?

சருகு ஆமையை மெத்தையில் வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.....அது போல்தான் அவர்கள் நடவடிக்கைகளும்.

ஐரோப்பியர்களை முன்னர் பார்பேரியன் என அழைபார்கள் என நினைவுள்ளது, மொசப்பதேமியாவிலிருந்து ஏற்பட்ட (தற்போதய ஈராக் என நினைக்கிறேன்) மக்கள் இடப்பெயர்வு ஐரோப்பாவில் காட்டுமிராண்டி சமூகமாக இருந்த ஐரோப்பியர்களை மாற்றி தற்போதய மேன்னிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக கருத்குகிறேன் (சிறு வயதில் படித்த விடயங்கள் சரியாக நினைவில்லை).

மத்திய கிழக்கு மக்களிடன் மிக சிறந்த கலாச்சாரம் நிலவியிருந்தது என்பதற்கு தற்போதும் காணப்படும் கட்டட கலைகள் என்பவை ஆதாரமாக இருக்கின்றது, தற்போதய சமூகவியல் மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் இவ்வாறு நாசமாக போனதிற்கு தமது வல்லாதிக்கத்திற்காக மக்களாட்சினை கலைத்து தமக்கு சாதகமான மன்னராட்சியினை நிறுவுதல் மற்றும் தீவிர மத அமைப்புக்களை உருவாக்கி ஆட்சியினை கைப்பற்றி மக்களை காட்டாட்சிக்குள் தள்ளிய மேற்கும் ஒரு பங்காளிகள்தான், தற்போது அவர்களுக்கு ஏற்படுவது அவர்கள் செய்த பாவத்திற்கான கர்ம பலன் போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, vasee said:

எதிர்காலத்தில் நாடுகள் இந்த மதத்தினை தடை செய்யும் நிலை கூட வரலாம்

இஸ்லாம் மட்டும் அல்ல, இந்தியாவில் ஹிந்து மத , அமெரிக்காவில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் ஆட்டமும், ரஷ்யா ukraine இல் orthodox அமைப்பின் ஆட்டமும் கட்டுக்கு மீறி விட்டது. எல்லா மதங்களின் அழிவும் நெருங்குவது போல் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

இஸ்லாம் மட்டும் அல்ல, இந்தியாவில் ஹிந்து மத , அமெரிக்காவில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் ஆட்டமும், ரஷ்யா ukraine இல் orthodox அமைப்பின் ஆட்டமும் கட்டுக்கு மீறி விட்டது. எல்லா மதங்களின் அழிவும் நெருங்குவது போல் தெரிகிறது 

மற்ற மதங்கள் தமது நாட்டிற்குள் தமது அட்டகாசத்தினை நிறுத்திக்கொள்கிறார்கள், இவர்கள் முட்டாள்த்தனமாக மற்ற நாடுகளுக்குள் மாத்திரம் தமது அட்டகாசத்தினை செய்கிறார்கள் அதனால் மற்ற நாடுகளால் தடை செய்யப்படும்  நிலை ஏற்படலாம். 

எந்த மதமும் அழியாது, மதங்களில் எந்த குறைபாடும் இல்லை பகுத்தறிவில்லா முட்டாள்களில்தான் குறைபாடு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பகிடி said:

இஸ்லாம் மட்டும் அல்ல, இந்தியாவில் ஹிந்து மத , அமெரிக்காவில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் ஆட்டமும், ரஷ்யா ukraine இல் orthodox அமைப்பின் ஆட்டமும் கட்டுக்கு மீறி விட்டது. எல்லா மதங்களின் அழிவும் நெருங்குவது போல் தெரிகிறது 

சிறிலங்கா,மியான்மார் போன்ற நாடுகளின் பெளத்த அடிபடைவாதிகளை மறந்து விட்டீர்கள் ...😅

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2025 at 10:54, ரசோதரன் said:

இன்று திமிங்கிலம் ஒன்று தன் இறந்த குட்டியை தலையில் சுமந்து கொண்டு கடல் கடலாக நீந்தும் செய்தியை பார்த்தீர்களா தெரியவில்லை, சாத்தான். நான்கு வருடங்களின் முன்னும் இதே திமிங்கிலத்தின் குட்டி ஒன்று இறந்துபோனது. 17 நாட்கள் இறந்த குட்டியை தலையில் சுமந்து கொண்டு அது நீந்தியது.........😢

நேசத்துடனும், பாசத்துடனுமே வாழ்ந்திருக்க வேண்டிய மனிதர்கள், ஆனால் இன்று வெறுப்பு எல்லாவற்றையும் மேவிவிட்டது.....................😔  

ஒரு தேவையற்ற போரினால் உயிரிழக்கும் இளையோர். இப்படியான போரினை ஆதரிப்பவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்காக மற்றவர்களின் உயிரோடு விளையாடுகிறார்கள், புதிய அமெரிக்க தலைமையால் போர் முடிவிற்கு வந்தால் நன்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.