Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7    06 JAN, 2025 | 07:06 PM

image

(செ.சுபதர்ஷனி)

கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் சுமார் 6,700 பேர் விசர்நாய் கடிக்கு ஆளானவர்கள் என அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும் அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 42,700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,700 பேர் விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகியவர்கள் என  வைத்தியசாலை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவ்வாறு விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகிய 6,700 நோயாளர்களில் சுமார் 95 சதவீதமானோர் தாம் வாழும் வீட்டை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளர்ப்பு பிராணிகள் மூலம் விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐவரில் ஒருவர் விசர்நாய் கடி நோயாளராவார். ஆகையால் வளர்ப்பு நாய்கள் மற்றும் உரிமையாளர்கள் இல்லாத வீதியில் நடமாடும் நாய்களுக்கு ஊசி வழங்குவதை உள்ளூராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

அத்தோடு வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு உரிய ஊசிகளை வழங்கி அதற்கான அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/203159

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாக்காலி நாய்களுக்கும் ஊசியைப்போட்டு மட்டையை கழுத்தில் மாட்டி விடவும். 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாக்காலி நாய்களை ஒழிப்பது பற்றி ஏன் பேசத் தயங்குகிறார்கள் என விளங்கவில்லை. வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட்டுப் பேணுவது ஓரளவுக்குத் தான் மனிதர்களுக்கு றேபிஸ் தொற்றாமல் கட்டுப் படுத்தும். யாரும் கவனிக்காத கட்டாக்காலி (stray) நாய்கள் அல்லது ஊரே சேர்ந்து உணவு போட்டு வளர்க்கும் சமுதாய (community) நாய்கள் ஆகியவை இருக்கும் வரை இலங்கையில் றேபிசை கட்டுப் படுத்த முடியாது. மனித நடவடிக்கைகளும், சமுதாய நாய்கள் உருவாக ஒரு காரணம். தெருவோரங்களில் குப்பைகள், உணவுகளை வீசுவது முற்றாகத் தடுக்கப் பட வேண்டும்.

ஒரு சின்ன நாட்டையும், படித்த மில்லியன் கணக்கான மக்களையும் வைத்துக் கொண்டு றேபிசைக் கட்டுப் படுத்த இயலாமல் இருப்பது இலங்கைக்கு வெக்கக் கேடான ஒரு விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி மறு இணைப்பு நன்றி கிருபன் ஜி .

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாய்களை அவ்வாறு கொல்வதற்குத் தடை விதித்து ஒரு சுற்றுநிருபத்தை வெளியிட்டார். அதாவது 2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்களை பூச்சி,புழுக்களைப் போல கொன்று யுத்தத்தை வென்ற ஒருவர்,சரியாக ஆறு ஆண்டுகளின் பின் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

கட்டாக்காலி நாய்களை ஒழிப்பது பற்றி ஏன் பேசத் தயங்குகிறார்கள் என விளங்கவில்லை. வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட்டுப் பேணுவது ஓரளவுக்குத் தான் மனிதர்களுக்கு றேபிஸ் தொற்றாமல் கட்டுப் படுத்தும். யாரும் கவனிக்காத கட்டாக்காலி (stray) நாய்கள் அல்லது ஊரே சேர்ந்து உணவு போட்டு வளர்க்கும் சமுதாய (community) நாய்கள் ஆகியவை இருக்கும் வரை இலங்கையில் றேபிசை கட்டுப் படுத்த முடியாது. மனித நடவடிக்கைகளும், சமுதாய நாய்கள் உருவாக ஒரு காரணம். தெருவோரங்களில் குப்பைகள், உணவுகளை வீசுவது முற்றாகத் தடுக்கப் பட வேண்டும்.

ஒரு சின்ன நாட்டையும், படித்த மில்லியன் கணக்கான மக்களையும் வைத்துக் கொண்டு றேபிசைக் கட்டுப் படுத்த இயலாமல் இருப்பது இலங்கைக்கு வெக்கக் கேடான ஒரு விடயம்!

உண்மையான காரணம் மதம் 

பௌத்த, இந்து மத பீடங்களின் எதிர்ப்பு. 

இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ கட்டாக்காலி நாய்களை ஒழிக்க குறுக்கே நிற்பதில்லை.

 மனித உயிருக்கான மதிப்பு நாய்களின் மதிப்பை விட உயர்ந்தது.

விசர் நாய் கடித்தால் அதற்கான மருத்துவ செலவு மட்டும் ஒரு நோயாளிக்கு 2 லட்ஷம் வரைக்கும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்களை பூச்சி,புழுக்களைப் போல கொன்று யுத்தத்தை வென்ற ஒருவர்,சரியாக ஆறு ஆண்டுகளின் பின் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

தான் கொன்றவர்களை மறைப்பதற்குத்தான் அந்த உத்தரவு.

16 hours ago, ஏராளன் said:

பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இங்கேயும் அவர்தானா?

ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் நன்றாக நின்ற நாய், அது யார் வீட்டுக்கும் போகாது. அதற்கு நாய்க்கு ஊசி போடுகிறார்கள் என்று வழமைபோல் கொண்டுபோய் போட்டோம். அடுத்தநாள் அதனால் எழுந்து நடமாட முடியவில்லை, இருந்தாலும் யாராவது வந்தால் பின்பக்கத்தால் இழுத்துப்போய் குரைத்தது. அடுத்த இரண்டுநாளில் இறந்து விட்டது. அது நமக்கு பெரிய துயரமும் இழப்பும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் நன்றாக நின்ற நாய், அது யார் வீட்டுக்கும் போகாது. அதற்கு நாய்க்கு ஊசி போடுகிறார்கள் என்று வழமைபோல் கொண்டுபோய் போட்டோம். அடுத்தநாள் அதனால் எழுந்து நடமாட முடியவில்லை, இருந்தாலும் யாராவது வந்தால் பின்பக்கத்தால் இழுத்துப்போய் குரைத்தது. அடுத்த இரண்டுநாளில் இறந்து விட்டது. அது நமக்கு பெரிய துயரமும் இழப்பும்.

இதே போன்ற சம்பவம் எனது வீட்டிலும் நடந்திருந்தது, ஊசி போட்ட அடுத்த சில நாட்களில் வளர்ப்பு நாய் இறந்துவிட்டது. காலாவதியான ஊசி போட்டிருப்பினமோ?! நண்பர் வீட்டில் இரண்டு பொக்கற் நாய்கள் தடுப்பூசியின் பின் இறந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

தான் கொன்றவர்களை மறைப்பதற்குத்தான் அந்த உத்தரவு.

இங்கேயும் அவர்தானா?

ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் நன்றாக நின்ற நாய், அது யார் வீட்டுக்கும் போகாது. அதற்கு நாய்க்கு ஊசி போடுகிறார்கள் என்று வழமைபோல் கொண்டுபோய் போட்டோம். அடுத்தநாள் அதனால் எழுந்து நடமாட முடியவில்லை, இருந்தாலும் யாராவது வந்தால் பின்பக்கத்தால் இழுத்துப்போய் குரைத்தது. அடுத்த இரண்டுநாளில் இறந்து விட்டது. அது நமக்கு பெரிய துயரமும் இழப்பும்.

56 minutes ago, ஏராளன் said:

இதே போன்ற சம்பவம் எனது வீட்டிலும் நடந்திருந்தது, ஊசி போட்ட அடுத்த சில நாட்களில் வளர்ப்பு நாய் இறந்துவிட்டது. காலாவதியான ஊசி போட்டிருப்பினமோ?! நண்பர் வீட்டில் இரண்டு பொக்கற் நாய்கள் தடுப்பூசியின் பின் இறந்தன.

இப்படி சில விடயங்கள் நடந்திருக்கின்றன.  மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் தந்துதவுங்கள்.

1. போட்டது விசர் நாய் தடுப்பூசியா அல்லது வேறெதும் நோய்களுக்கான தடுப்பூசியா?
2. ஊசியை தொடையில் போட்டார்களா அல்லது முதுகில் தோலை உயர்த்திப் போட்டார்களா?
3. மிருக வைத்தியரிடம் சென்று அங்கே இருந்தோர் ஊசி போட்டார்களா அல்லது உள்ளூராட்சி சபை, பிரதேச சபை ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ஊசி போட்டார்களா?
4. ஊசி போட்ட பின்னர் புத்தகத்தில் பதிந்த ஊசி தயாரிப்புக் கம்பனியின் விபரம் இருக்கிறதா?
5. இறப்பதற்கு முன் நாயின் கண்கள், மூக்கில் இருந்து ஏதாவது சுரப்புகள் வெளிவந்தனவா? அல்லது நாய் நடக்க இயலாமல் அவயவங்கள் செயலிழந்த நிலை இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகிடி said:

உண்மையான காரணம் மதம் 

பௌத்த, இந்து மத பீடங்களின் எதிர்ப்பு. 

செய்தி ஆதாரம் எதுவும் உள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

1. போட்டது விசர் நாய் தடுப்பூசியா அல்லது வேறெதும் நோய்களுக்கான தடுப்பூசியா?
2. ஊசியை தொடையில் போட்டார்களா அல்லது முதுகில் தோலை உயர்த்திப் போட்டார்களா?
3. மிருக வைத்தியரிடம் சென்று அங்கே இருந்தோர் ஊசி போட்டார்களா அல்லது உள்ளூராட்சி சபை, பிரதேச சபை ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ஊசி போட்டார்களா?
4. ஊசி போட்ட பின்னர் புத்தகத்தில் பதிந்த ஊசி தயாரிப்புக் கம்பனியின் விபரம் இருக்கிறதா?
5. இறப்பதற்கு முன் நாயின் கண்கள், மூக்கில் இருந்து ஏதாவது சுரப்புகள் வெளிவந்தனவா? அல்லது நாய் நடக்க இயலாமல் அவயவங்கள் செயலிழந்த நிலை இருந்ததா?

அவர்கள் ஏதும் பதிந்து விபரம் தந்ததாக நினைவில்லை. நாய் நடக்க முடியாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டது, சாப்பிடவில்லை. இருந்தாலும் அதன் நன்றியுணர்வு, யாராவது வீட்டுக்கு வந்தால், தனது பின்பக்கத்தால் அரைந்து சென்று அவர்களை பார்த்து குரைத்தது. எல்லா நாய்களுக்கும் பாவித்த ஊசியை பாவித்தார்களோ, அல்லது காலஞ்சென்ற ஊசியை செலுத்தினார்களோ தெரியவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் ஒரு விசர்நாய் கடித்தது. அதன் தாக்கத்தால் நான் எவரையும் கடிக்கப் போனதில்லை ஆகவே சாமியார், தமிழ்சிறீ உட்பட மற்றும் யாழ்உறவுகள் எவரும் என்னைக்கண்டு பயப்படத் தேவையில்லை இது நடந்தது வாழைச்சேனை ஓட்மாவடியில் எனது 24வது வயதில். நாயின் கடிக்குள்ளாகி அதன் 14 பற்கள் என் கையில் ஆழப்பதிந்திருந்தன. காயங்களுக்கு காரத்திரி வைத்து, பன்றி இறைச்சி உண்ண வைத்து, தலைக்கு அரப்புப் பிரட்டி  முழுகவைத்து, மட்டக்களப்பில் மாமாவுக்குத் தெரிந்த தமிழ் வைத்தியத்தியர் ஒருவரின் வைத்தியத்திற்கு ஆளாக்கப்பட்டு தேறிவிட்டதாக எண்ணிய பின்பு……

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, satan said:

20 வருடங்கள் முன்பு வவுனியாவில் நடந்த  சம்பவம், இது தான் உங்கள் விடயத்திலும் நடந்திருக்கிறது என நினைக்கிறேன்.

உள்ளூராட்சி சபையினர் மூலம் இலவச றேபிஸ் தடுப்பூசியை வீடுவீடாகக் சென்று நாய்களுக்குப் போட்டார்கள். சில நாட்களில், ஊசி போட்ட நாய்களில் றேபீஸ் போன்ற குணங்குறிகள் தோன்றி பல நாய்கள் இறந்தன. ஆனால், வந்தது றேபிஸ் அல்ல, சில குணங்களில் றேபிஸ் போலவே தென்படும் இன்னொரு வைரஸ் நோயான Distemper என்ற நோய். ஒரு தடவை பாவிக்க வேண்டிய (single use) ஊசியை, ஊழல்/அறிவின்மை காரணமாக, பல தடவைகள் பல நாய்களில் றேபிஸ் தடுப்பூசி போடப் பாவித்திருக்கிறார்கள்.  Distemper வைரஸ் ஊசி மூலம் தொற்றி நாய்களைக் கொன்று விட்டது.

சிறிலங்காவில் றேபிஸ் தடுப்பூசிகளை நாடுவோர் பின்வரும் விடயங்களைக் கவனியுங்கள்:

1. றேபிஸ் தடுப்பூசி குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட வேண்டும். சும்மா யாராவது வெளியே இருந்து எடுத்துத் தந்தால் கேட்டு உறுதிப் படுத்துங்கள்.

2. ஊசியை நாயின் தொடையிலோ, முதுகில் இருக்கும் தோலிலோ போட வேண்டும்.

3. ஊசி புதிதாக இருக்க வேண்டும். உங்கள் கண்கள் முன்னாலேயே புதிய ஊசியை பக்கெற்றில் இருந்து எடுக்கிறார்களா என்று கவனியுங்கள். பாவித்த பின் ஊசியை வீசுகிறார்களா என்றும் கவனியுங்கள். இவை தெளிவில்லா விட்டால், கேட்டு உறுதி செய்யுங்கள்.

4. வசதி இருந்தால், மிருக வைத்திய அலுவலகத்திலேயே ஊசியைப் போட்டுக் கொள்ளுங்கள். அங்கே இருப்போர், அனேகமாக உள்ளூராட்சி சபை ஊழியர்களை விட நாயின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பர்.

5. ஊசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கு நாயை அவதானியுங்கள். ஏதாவது வித்தியாசம் தெரிந்தால், மிருக வைத்தியரிடம் எடுத்துச் செல்லுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

என்னையும் ஒரு விசர்நாய் கடித்தது. அதன் தாக்கத்தால் நான் எவரையும் கடிக்கப் போனதில்லை ஆகவே சாமியார், தமிழ்சிறீ உட்பட மற்றும் யாழ்உறவுகள் எவரும் என்னைக்கண்டு பயப்படத் தேவையில்லை இது நடந்தது வாழைச்சேனை ஓட்மாவடியில் எனது 24வது வயதில். நாயின் கடிக்குள்ளாகி அதன் 14 பற்கள் என் கையில் ஆழப்பதிந்திருந்தன. காயங்களுக்கு காரத்திரி வைத்து, பன்றி இறைச்சி உண்ண வைத்து, தலைக்கு அரப்புப் பிரட்டி  முழுகவைத்து, மட்டக்களப்பில் மாமாவுக்குத் தெரிந்த தமிழ் வைத்தியத்தியர் ஒருவரின் வைத்தியத்திற்கு ஆளாக்கப்பட்டு தேறிவிட்டதாக எண்ணிய பின்பு……

இனிமேல்... உங்களுக்கு கிட்ட வந்து கதைக்க, நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இனிமேல்... உங்களுக்கு கிட்ட வந்து கதைக்க, நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது. 😂

 சாமியார் எத்தனை? ஏனையவர்கள் எத்தனை தரம் யோசிக்க வேண்டும்?? என்பதைக் குறிப்பிட்டால் தன்யனாவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

என்னையும் ஒரு விசர்நாய் கடித்தது. அதன் தாக்கத்தால் நான் எவரையும் கடிக்கப் போனதில்லை ஆகவே சாமியார், தமிழ்சிறீ உட்பட மற்றும் யாழ்உறவுகள் எவரும் என்னைக்கண்டு பயப்படத் தேவையில்லை இது நடந்தது வாழைச்சேனை ஓட்மாவடியில் எனது 24வது வயதில். நாயின் கடிக்குள்ளாகி அதன் 14 பற்கள் என் கையில் ஆழப்பதிந்திருந்தன. காயங்களுக்கு காரத்திரி வைத்து, பன்றி இறைச்சி உண்ண வைத்து, தலைக்கு அரப்புப் பிரட்டி  முழுகவைத்து, மட்டக்களப்பில் மாமாவுக்குத் தெரிந்த தமிழ் வைத்தியத்தியர் ஒருவரின் வைத்தியத்திற்கு ஆளாக்கப்பட்டு தேறிவிட்டதாக எண்ணிய பின்பு……

அந்த நாய்க்கு என்ன நடந்தது ஐயா🤣

On 6/1/2025 at 17:29, ஏராளன் said:

அவ்வாறு விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகிய 6,700 நோயாளர்களில் சுமார் 95 சதவீதமானோர் தாம் வாழும் வீட்டை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனது பயண கட்டுரையில் எழுதி இருந்தேன் இந்த நாய்க்கடிக்கு பயந்து 500 மீட்டர் பயணங்களை கூட ஆட்டோவில் செய்யும் அவல நிலைக்கு ஆளாகினேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2025 at 00:19, goshan_che said:

அந்த நாய்க்கு என்ன நடந்தது ஐயா🤣

தெரியவில்லை ஐயா! என்னைக் கடித்ததால் வந்த இரத்தம் அதற்குள் பரவி, அது எங்கோ ஓடிப்போய் இறந்திருக்கலாம். மனிதர் கடித்தாலும் ஊசி போடவேண்டும் என்ற வைத்தியரின் ஆலோசனையை அறிந்திருக்கிறேன். அத்தனை கொடிய விடம் மனிதரிலும் இருக்கிறதாம்.😳

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தெரியவில்லை ஐயா! என்னைக் கடித்ததால் வந்த இரத்தம் அதற்குள் பரவி, அது எங்கோ ஓடிப்போய் இறந்திருக்கலாம். மனிதர் கடித்தாலும் ஊசி போடவேண்டும் என்ற வைத்தியரின் ஆலோசனையை அறிந்திருக்கிறேன். அத்தனை கொடிய விடம் மனிதரிலும் இருக்கிறதாம்.😳

சும்மா பகிடிதான் பாஞ்ச் ஐயா 🙏.

நான் கேள்விபட்டவரை சரோஜாதேவியின் இட்லி-நண்பரையே நான் கடித்தேன் தெரியுமா என அந்த நாய் வாழைச்சேனை, வாகரை, மன்னம்பிட்டி வரை லெவல் காட்டி திரிந்ததாக தகவல்🤣.

1 hour ago, goshan_che said:

சும்மா பகிடிதான் பாஞ்ச் ஐயா 🙏.

நான் கேள்விபட்டவரை சரோஜாதேவியின் இட்லி-நண்பரையே நான் கடித்தேன் தெரியுமா என அந்த நாய் வாழைச்சேனை, வாகரை, மன்னம்பிட்டி வரை லெவல் காட்டி திரிந்ததாக தகவல்🤣.

கடைசியாக இலங்கை சென்றபோது காலையில் ஐந்தரை மணிக்கு ஓட்டப் பயிற்சிக்காக நாய்ப் பயத்தினால் பிரதான வீதிக்கு மெதுவாக வந்துதான் ஓட வேண்டியிருந்தது.

பிரதான வீதியின் ஓரங்களில் படுத்திருக்கும் நாய்கள் அருகில் செல்லும்போது தலையைத் தூக்கி ஏதோ விசாரிப்பதுபோல் பார்க்கும். நானும் பார்க்காததுபோல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பியதும் அவை மீண்டும் படுத்துவிடும். 😀

வீட்டுக்கு அருகிலும் வயற்புறங்களிலும் அழகான ஓடக்கூடிய பாதைகள் இருந்தும் நாய்கள் துரத்தும் என்பதால் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நேரம் இயக்கத்தின் பாஸ் தடை பலரும் கொழும்புக்கு போக உதவியது இந்த விசர் நாய்கடி கதைகள் தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, இணையவன் said:

கடைசியாக இலங்கை சென்றபோது காலையில் ஐந்தரை மணிக்கு ஓட்டப் பயிற்சிக்காக நாய்ப் பயத்தினால் பிரதான வீதிக்கு மெதுவாக வந்துதான் ஓட வேண்டியிருந்தது.

பிரதான வீதியின் ஓரங்களில் படுத்திருக்கும் நாய்கள் அருகில் செல்லும்போது தலையைத் தூக்கி ஏதோ விசாரிப்பதுபோல் பார்க்கும். நானும் பார்க்காததுபோல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பியதும் அவை மீண்டும் படுத்துவிடும். 😀

வீட்டுக்கு அருகிலும் வயற்புறங்களிலும் அழகான ஓடக்கூடிய பாதைகள் இருந்தும் நாய்கள் துரத்தும் என்பதால் போவதில்லை.

இந்த லட்சணத்தில் ஊருக்குபோய் இயற்கை அமைப்புடன் வீடு கட்டி வாழவேண்டும் என எங்கேயோ தாங்கள் எழுதிய நினைவுகள்.....😎

இனிவரும் நாட்களுக்கு  நான் எழுதும் கருத்துக்களில் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

சும்மா பகிடிதான் பாஞ்ச் ஐயா 🙏.

நான் கேள்விபட்டவரை சரோஜாதேவியின் இட்லி-நண்பரையே நான் கடித்தேன் தெரியுமா என அந்த நாய் வாழைச்சேனை, வாகரை, மன்னம்பிட்டி வரை லெவல் காட்டி திரிந்ததாக தகவல்🤣.

நீண்ட காலத்தின் பின்பு, இப்போதுதான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. நான் கடிவாங்கியது தெருநாயிடமோ, பறைநாயிடமோ அல்ல, உயர்சாதி நாயிடம். அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி. இத்துடன் எந்த நாயினம் என்று அறியத்தந்தால் இன்னும் மகிழ்ந்து நன்றி கூறுவேன்.🙏🐕🕺

  • பாக்கர்வால் - கால்நடை பாதுகாவல் நாய்
  • பஞ்சாரா வேட்டை நாய்
  • புல்லி குத்தா - காவல் நாய்
  • குல் டாங் - காவலர் நாய் 
  • வேட்டை நாய்
  • குல் தெரியர் நாய்
  • இமாலய மேய்ப்பு நாய்
  •  கால்நடை பாதுகாவல் நாய்
  • இந்திய பரியா நாய் 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

பறைநாயிடமோ அல்ல, உயர்சாதி நாயிடம்.

ம்ம்ம்…2025 இலுமா ஐயா நாயுக்கும் சாதி பார்க்கவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ம்ம்ம்…2025 இலுமா ஐயா நாயுக்கும் சாதி பார்க்கவேண்டும்?

கலிபோர்னியா எரிந்தபோது தங்கள் நாயைத் தூக்கிக் கொண்டு பலபேர் ஓடினார்களே! படமோ, வீடியோவையோ ஐயா பார்க்கவில்லையா!!🐕

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.