Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

07 Jan, 2025 | 01:04 PM

image

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த UL-174 விமானமும் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், துருக்கியிலிருந்து பயணித்த TK-730 விமானம் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பின்னர், கடும் பனிமூட்டம் படிப்படியாக குறைந்ததை அடுத்து, ஏனைய விமான நிலையங்களில் தரையிறங்கிய நான்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
https://www.virakesari.lk/article/203203

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி இருக்கிறது.

ஏற்கனவே பெரும் நட்டத்தில் ஓடுது.

இதை ஏன் இன்னமும் இழுத்து பிடித்து வைத்திருக்கிறார்களோ?

தனியாருக்கு விற்றுவிடலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி இருக்கிறது.

ஏற்கனவே பெரும் நட்டத்தில் ஓடுது.

இதை ஏன் இன்னமும் இழுத்து பிடித்து வைத்திருக்கிறார்களோ?

தனியாருக்கு விற்றுவிடலாமே?

இரண்டு கிழமைக்கு முன் நண்பர் ஒருவர், 
எயார் லங்காவில் இலங்கைக்கு பயணித்த போது...
விமானத்தில் கொடுக்கப் பட்ட  உணவை உண்ட அனைவருக்கும் 
வாந்தியும், வயித்தாலை அடியும் என்று சொன்னார்.

அந்த உணவை உண்ணாதவர்களுக்கு எதுவும் நடக்கவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு கிழமைக்கு முன் நண்பர் ஒருவர், 
எயார் லங்காவில் இலங்கைக்கு பயணித்த போது...
விமானத்தில் கொடுக்கப் பட்ட  உணவை உண்ட அனைவருக்கும் 
வாந்தியும், வயித்தாலை அடியும் என்று சொன்னார்.

அந்த உணவை உண்ணாதவர்களுக்கு எதுவும் நடக்கவில்லையாம்.

சிறி இது எப்படி நடந்ததோ தெரியவில்லை.

எனக்கு தெரிந்தவரை பலரும் பலகாலமாக எயர்லங்கா விமான உணவுகளை புகழ்ந்தே சொல்லிவருகிறார்கள்.

கடந்த வருடம் கூட எனது மச்சான் இதில் பயணித்துவிட்டு நல்ல சாப்பாடு என்றார்.

கனடாவிலிருந்து எயர் பிரான்ஸ்சில் உதவாத சாப்பாடு என்று பேசினார்.

இவ்வளவு காலம் பயணம் செய்தும் நான் ஒருநாளும் எயர் லங்காவில் பயணிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடாவிலிருந்து எயர் பிரான்ஸ்சில் உதவாத சாப்பாடு என்று பேசினார்.

உங்கள் நண்பருக்கு நாக்கில் பிரச்சினை என்று நினைக்கிறேன் 😅

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, விசுகு said:

உங்கள் நண்பருக்கு நாக்கில் பிரச்சினை என்று நினைக்கிறேன் 😅

உயிரே போனாலும் விட்டுக் குடுக்கான்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

உங்கள் நண்பருக்கு நாக்கில் பிரச்சினை என்று நினைக்கிறேன் 😅

அவர் ஒரு சாப்பாட்டுப் பிரியர்.

அவர் சாப்பிட்டதைச் சொல்கிறார்.

நீங்களோ சாப்பிடாமலே சேர்டிபிக்கற் கொடுக்க முனைகிறீர்கள்.

2 minutes ago, குமாரசாமி said:

உயிரே போனாலும் விட்டுக் குடுக்கான்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இது எப்படி நடந்ததோ தெரியவில்லை.

எனக்கு தெரிந்தவரை பலரும் பலகாலமாக எயர்லங்கா விமான உணவுகளை புகழ்ந்தே சொல்லிவருகிறார்கள்.

கடந்த வருடம் கூட எனது மச்சான் இதில் பயணித்துவிட்டு நல்ல சாப்பாடு என்றார்.

கனடாவிலிருந்து எயர் பிரான்ஸ்சில் உதவாத சாப்பாடு என்று பேசினார்.

இவ்வளவு காலம் பயணம் செய்தும் நான் ஒருநாளும் எயர் லங்காவில் பயணிக்கவில்லை.

என்னுடைய சுவைக்கேற்ற சாப்பாடு சிறிலங்கன்  எயர்லைன்சில்தான் கிடைக்கிறது. தண்ணியும் போதும் போதும் எண்ட தருவாங்கள்.மற்ற எயர்லைன்ஸ்சில் தண்ணி விடயத்தில் தண்ணிகாட்டிப் போடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

என்னுடைய சுவைக்கேற்ற சாப்பாடு சிறிலங்கன்  எயர்லைன்சில்தான் கிடைக்கிறது. தண்ணியும் போதும் போதும் எண்ட தருவாங்கள்.மற்ற எயர்லைன்ஸ்சில் தண்ணி விடயத்தில் தண்ணிகாட்டிப் போடுவாங்கள்.

எம்மவரை விட வெள்ளைகளைக்கு கூடுதல் கவனிப்பு என்றும் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, புலவர் said:

என்னுடைய சுவைக்கேற்ற சாப்பாடு சிறிலங்கன்  எயர்லைன்சில்தான் கிடைக்கிறது. தண்ணியும் போதும் போதும் எண்ட தருவாங்கள்.மற்ற எயர்லைன்ஸ்சில் தண்ணி விடயத்தில் தண்ணிகாட்டிப் போடுவாங்கள்.

றொட்டி,கட்டசம்பல்,விதம் விதமான புக்கை கட்டியள் எல்லாம் குடுக்கிறாங்களாம் மெய்யே? 😎

  • கருத்துக்கள உறவுகள்

எயர்கனடா சாப்பாடு மோசம் தண்ணியும் பெரிசா காட்டமாட்டர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிய எயர்லைன்சில் நித்திரை கொள்ள விடாமல் அடிக்கடி எழுப்பி சாப்பாடு போடுவார்கள். தண்ணி விசயத்தில படுமோசம். இஜ்ரன்பூல் விமான நிலையத்தில் கிலோமீற்றர் கணக்கில நடக்க வேண்டும். நடந்த களைக்கு இது  காணாது. இனிமேல் அந்தப்பக்கம் தலை வைச்சும் படுக்க மா;டன். ஏற்கனவே 2.45 மணித்தியாலம் இலண்டனில் லேற் இஸ்ரன்பூலில் இறங்கி ஓட்டமும் நடையுமய் போனால் அடுத்த பிளைட் கேற் மூடிற்றாங்கள். பிறகு அவங்களோட வாதாடி ஓரமாதிரி உள்ளே பேனேன். லக்கேஜ்  என்ன மாதிரி என்று கேட்டேன். அதெல்லாம் வரும் என்றார்கள். கொழும்பில் இறங்கினால்.1 லக்கேஜ்தான் கிடைத்தது. 2 மிஸ்ஸிங். என்குப் பரவாயில்லை. கூடவந்தவர் சொன்னார். கலியாணத்துக்குப் போகிறோம். முக்கியமான உடுப்புகளுடன் ஒரு லக்கேசும் தனக்கு வரவில்லை என்றார். விமான நிலையத்தில் முறையிட்டோ;. அடுத்த பிளைட்டில்  ஆனுப்பி வீட்டுக்கே  கொண்டு வந்து தந்தார்கள். கலியாண வீட்டுக்காரர் அடுத்தநாள் கலியாணம் என்று சொன்படியால் அவர்களுக்கு  அது கஉரிய நேரத்தில் கிடைத்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

தனியாருக்கு விற்றுவிடலாமே?

நாங்கள் எல்லாத்தையும் பொதுவுடமையாக்க அரசியலுக்கு வந்தானாங்கள் கண்டியளோ ....உந்த விமானங்களின் வாலில் சிவப்பு நட்சத்திரமும்,உடம்பு பகுதியில் அரிவாள்,சுத்தியல் சின்னம் பதிவது எங்கள் இலட்சியத்தில் ஒன்று

கட்டிய மனைவியை தவிர மற்றெல்லாம் பொதுவுடமை...எதுவும் எவருக்கும் சொந்தமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, புலவர் said:

எயர்கனடா சாப்பாடு மோசம் தண்ணியும் பெரிசா காட்டமாட்டர்கள்.

நான் நாலைஞ்சு தரம் எயர் கனடாவிலை போயிருக்கிறன். சாப்பாடும் சரியில்லை. அதிலை வேலை செய்யிற ஆக்களும் வடிவில்லை. கனடா போறதையே வெறுத்துப்போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

றொட்டி,கட்டசம்பல்,விதம் விதமான புக்கை கட்டியள் எல்லாம் குடுக்கிறாங்களாம் மெய்யே? 😎

உப்படி பிளைட்டில் பறக்கிற சன‌த்துக்கு புக்கை கட்டிகளை கொடுக்கிறதால் நாட்டில் நடக்கிற மக்களுக்கு சோறு கிடைக்கிற்தில்லையாம் ...இந்த ஊழல் பற்றி விசாரணைக்கு தோழர் உத்தரவிட்டுள்ளார்..
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, putthan said:

உப்படி பிளைட்டில் பறக்கிற சன‌த்துக்கு புக்கை கட்டிகளை கொடுக்கிறதால் நாட்டில் நடக்கிற மக்களுக்கு சோறு கிடைக்கிற்தில்லையாம் ...இந்த ஊழல் பற்றி விசாரணைக்கு தோழர் உத்தரவிட்டுள்ளார்..
 
உங்களுக்கு அள்ளு கொள்ளையாய் உல்லாசபயணிகளும் வரவேணும்....வாற சனத்துக்கு பச்சத்தண்ணியும் காய்ஞ்ச பாண் துண்ட மட்டும் தான் குடுப்பம் எண்டால் என்ன மாதிரி?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு அள்ளு கொள்ளையாய் உல்லாசபயணிகளும் வரவேணும்....வாற சனத்துக்கு பச்சத்தண்ணியும் காய்ஞ்ச பாண் துண்ட மட்டும் தான் குடுப்பம் எண்டால் என்ன மாதிரி?

எங்களுக்கு காஞ்ச பாணும்,பச்சை தண்ணீரும் பாவிக்கும் உல்லாச பயணிக‌ள்😅 தான் வேணும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புலவர் said:

என்னுடைய சுவைக்கேற்ற சாப்பாடு சிறிலங்கன்  எயர்லைன்சில்தான் கிடைக்கிறது. தண்ணியும் போதும் போதும் எண்ட தருவாங்கள்.மற்ற எயர்லைன்ஸ்சில் தண்ணி விடயத்தில் தண்ணிகாட்டிப் போடுவாங்கள்.

நான் முதல் முதலில் விமானம் என ஏறியது சிறிலங்கன்  விமானம் தான். நாட்டை விட்டு வெளியேறியதும் கட்டுநாயக்கா விமான நிலைய மூலமாகத்தான்.வந்து இறங்கியதும் ஜேர்மனிய  விமான நிலையத்தில்....

எனவே சாப்பாட்டு விடயத்தில் சிறிலங்கா எயர்லைன் சாப்பாடு நல்ல சாப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கன்ஸ் எயர்லைன்சில் சாப்பாடு எமது சுவைக்கு ஏற்ப கிடைக்கும். கண்ணிற்கும் விருந்து…

ஆனால் ஏயர் கனடாவில் இரண்டும் உதவாது.

10 hours ago, ஈழப்பிரியன் said:

எம்மவரை விட வெள்ளைகளைக்கு கூடுதல் கவனிப்பு என்றும் கூறுகிறார்கள்.

ஓம் வெள்ளைகளுக்கு கவனிப்பு சற்று அதிகம்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நான் நாலைஞ்சு தரம் எயர் கனடாவிலை போயிருக்கிறன். சாப்பாடும் சரியில்லை. அதிலை வேலை செய்யிற ஆக்களும் வடிவில்லை. கனடா போறதையே வெறுத்துப்போச்சுது.

அவனவனுக்கு எத்தினை எதிர்பார்ப்பு, சிலருக்கு  பாதுகாப்பாய் விமானப்பயணம் அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு பயணத்தை தடங்கல் இல்லாமல் சுகமாய் சென்று மீள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, பரிமாறும் உணவு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு உறவுகளை பிரிந்து மீண்டும் சந்திக்கப்போகிறோமென்கிற  எதிர்பார்ப்பு,  நம்ம சாமியாருக்கு; விமானத்தில் வேலை செய்பவர்கள் வடிவாக இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு. ரசனை மன்னன்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் முதல் முதலில் விமானம் என ஏறியது சிறிலங்கன்  விமானம் தான். நாட்டை விட்டு வெளியேறியதும் கட்டுநாயக்கா விமான நிலைய மூலமாகத்தான்.வந்து இறங்கியதும் ஜேர்மனிய  விமான நிலையத்தில்....

எனவே சாப்பாட்டு விடயத்தில் சிறிலங்கா எயர்லைன் சாப்பாடு நல்ல சாப்பாடு.

இது எப்ப? Sri Lankan airlines அல்லது Air Lanka காலமா? 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

நம்ம சாமியாருக்கு; விமானத்தில் வேலை செய்பவர்கள் வடிவாக இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு. ரசனை மன்னன்!

ஆண்கள்,. விமானத்தில் வேலை செய்யும் ஆண்கள்   எப்படியும் இருக்கலாம்  அதாவது வடிவு இல்லாமல் இருக்கலாம் 

ஆனால் விமாத்தில். வேலை செய்யும் பெண்கள்   வடிவானவர்களாக. இருக்க வேண்டும்  ......இப்படியானவர்களிடம்.  ரிக்கற்றுக்கு இரண்டு மடங்குகள் பணம் வசூலிக்க வேண்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

ஆண்கள்,. விமானத்தில் வேலை செய்யும் ஆண்கள்   எப்படியும் இருக்கலாம்  அதாவது வடிவு இல்லாமல் இருக்கலாம் 

ஆனால் விமாத்தில். வேலை செய்யும் பெண்கள்   வடிவானவர்களாக. இருக்க வேண்டும்  ......இப்படியானவர்களிடம்.  ரிக்கற்றுக்கு இரண்டு மடங்குகள் பணம் வசூலிக்க வேண்டும் 🤣

அதேபோல் விமானத்தில் பயணஞ் செய்யும் பெண்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தால்:

சாமியாருக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை கொடுப்பார், ஆனால் வீட்டுக்கார அம்மாவையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:
14 hours ago, குமாரசாமி said:

நான் நாலைஞ்சு தரம் எயர் கனடாவிலை போயிருக்கிறன். சாப்பாடும் சரியில்லை. அதிலை வேலை செய்யிற ஆக்களும் வடிவில்லை. கனடா போறதையே வெறுத்துப்போச்சுது.

அவனவனுக்கு எத்தினை எதிர்பார்ப்பு, சிலருக்கு  பாதுகாப்பாய் விமானப்பயணம் அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு பயணத்தை தடங்கல் இல்லாமல் சுகமாய் சென்று மீள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, பரிமாறும் உணவு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு உறவுகளை பிரிந்து மீண்டும் சந்திக்கப்போகிறோமென்கிற  எதிர்பார்ப்பு,  நம்ம சாமியாருக்கு; விமானத்தில் வேலை செய்பவர்கள் வடிவாக இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு. ரசனை மன்னன்!

பயணம் கிளுகிளுப்பாக இருக்கணுமில்ல.

நான் சென்னையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து சென்னைக்கும் எயார் லங்கா வில் தான் பயணம் செய்தேன். குறுகிய, ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம் என்றாலும் வெள்ளைப் பொங்கல் தந்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது.  அதை விட அதை பரிமாறிய பெண் மிக அழகாக இருந்தார்.

எயர் கனடா வில் பல முறை பயணம் செய்துள்ளேன். பயணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் சேவை மிக மிக மட்டம்.  அவர்கள் தரும் உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, சுவிங்கத்தை உமிஞ்சு கொண்டு இருக்கலாம்.

எனக்கு பிடித்தது கட்டார் விமான சேவை. நல்ல உணவு. பாரபட்சமற்ற உபசரிப்பு. விமானங்களும் புதுசாக, மிகவும் தூய்மையாகவும் இருக்கும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.