Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அப்படியே கொஞ்சதூரம் நடந்தியள்  என்றால் ..உங்கடை ஊர் வந்திடும்...அன்னபூரணி வந்த பாதைதானே

யார் இந்த அன்னபூரணி? 

  • Replies 105
  • Views 4.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள். இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவசர அவசரமாக தே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும்  கலிபோர்ணியா தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

யார் இந்த அன்னபூரணி? 

வல்வெட்டிதுறையில் இருந்து அமெரிக்கா வந்த பாய்மரக்கப்பல்.. கனடாவில் போன வருடம் நடந்த தெருத்திருவிழாவிலும் மாதிரி ஒன்றை காட்சிப்படுத்தி இருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
 
LA County Fire Department

தற்போது கிடைத்த செய்திகளின்படி 5 பேர் இறந்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, vasee said:

யார் இந்த அன்னபூரணி? 

ஹலோ ஜோசப் த ட்ரீமர், என்ன கேள்வி இது............................🤣.

எத்தனை கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், காமிக்ஸ் ஒன்று கூட சமீபத்தில் வந்திருந்தது. ஒரு முழுப்படம் தான் இன்னும் எடுக்கப்படவில்லை. அதையும் எடுத்து விடுவோமா என்று இரண்டு மூன்று பேர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்...........

1930ம் ஆண்டுகளிலேயே சிலர் ஊரிலிருந்து உள்ளூரில் செய்த கப்பலில் ஏறி அமெரிக்கா வந்தார்கள். அன்றிலிருந்து கோதுமை மாவை அமெரிக்கன் மா என்று சொல்லவும் ஆரம்பித்தார்கள்.................😜.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

வல்வெட்டிதுறையில் இருந்து அமெரிக்கா வந்த பாய்மரக்கப்பல்.. கனடாவில் போன வருடம் நடந்த தெருத்திருவிழாவிலும் மாதிரி ஒன்றை காட்சிப்படுத்தி இருந்தார்கள்

22 minutes ago, ரசோதரன் said:

ஹலோ ஜோசப் த ட்ரீமர், என்ன கேள்வி இது............................🤣.

எத்தனை கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், காமிக்ஸ் ஒன்று கூட சமீபத்தில் வந்திருந்தது. ஒரு முழுப்படம் தான் இன்னும் எடுக்கப்படவில்லை. அதையும் எடுத்து விடுவோமா என்று இரண்டு மூன்று பேர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்...........

1930ம் ஆண்டுகளிலேயே சிலர் ஊரிலிருந்து உள்ளூரில் செய்த கப்பலில் ஏறி அமெரிக்கா வந்தார்கள். அன்றிலிருந்து கோதுமை மாவை அமெரிக்கன் மா என்று சொல்லவும் ஆரம்பித்தார்கள்.................😜.

spacer.png

ஏதாவது சுவாரசியமான தகவல்களை அறியலாம் என்பதற்காக கேட்டேன்😁.

26 minutes ago, ரசோதரன் said:

1930ம் ஆண்டுகளிலேயே சிலர் ஊரிலிருந்து உள்ளூரில் செய்த கப்பலில் ஏறி அமெரிக்கா வந்தார்கள். அன்றிலிருந்து கோதுமை மாவை அமெரிக்கன் மா என்று சொல்லவும் ஆரம்பித்தார்கள்.................😜.

இன்னுமொரு கேள்வி அன்னபூரணி அமெரிக்கா போனதா அல்லது கோதுமை மா முதலில் இலங்கைக்கு வந்ததா? எது முதலில் இடம்பெற்றது?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

இன்னுமொரு கேள்வி அன்னபூரணி அமெரிக்கா போனதா அல்லது கோதுமை மா முதலில் இலங்கைக்கு வந்ததா? எது முதலில் இடம்பெற்றது?

கப்பலில் போனவர்கள் திரும்பி வரும்போது வெள்ளை மா கொண்டு வந்ததாகச் சொல்வார்கள்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:
 
LA County Fire Department

தற்போது கிடைத்த செய்திகளின்படி 5 பேர் இறந்துள்ளனர்.

பிரியன்சார்...முழிப்பா இருங்க...யாழ்களம் தீயாய் வேலை செய்யுது...சிவப்பு எச்சரிக்கையை நாம் விட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுங்க... கோபிக்காதீங்க துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதற்காக

2 minutes ago, ரசோதரன் said:

கப்பலில் போனவர்கள் திரும்பி வரும்போது வெள்ளை மா கொண்டு வந்ததாகச் சொல்வார்கள்...............🤣.

அட போங்கையா..அதுதான் உவ்வளவு பெரிய பட்டமெல்லாம் ஒட்டி ஏத்த துணிவு வந்தது போல இருக்கு🙃

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

பிரியன்சார்...முழிப்பா இருங்க...யாழ்களம் தீயாய் வேலை செய்யுது...சிவப்பு எச்சரிக்கையை நாம் விட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுங்க... கோபிக்காதீங்க துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதற்காக

அட போங்கையா..அதுதான் உவ்வளவு பெரிய பட்டமெல்லாம் ஒட்டி ஏத்த துணிவு வந்தது போல இருக்கு🙃

அல்வாயன் அய்யா..ஏன் இந்த கொலை வெறி.🤭

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, alvayan said:

பிரியன்சார்...முழிப்பா இருங்க...யாழ்களம் தீயாய் வேலை செய்யுது...சிவப்பு எச்சரிக்கையை நாம் விட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுங்க... கோபிக்காதீங்க துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதற்காக

சாப்பாடு தூக்கம் முக்கியம் தலைவரே.

இனி என்ன நடந்தாலும் காலையில்த் தான்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

சாப்பாடு தூக்கம் முக்கியம் தலைவரே.

இனி என்ன நடந்தாலும் காலையில்த் தான்.

நன்றி.

மகளும், யாழ் உறவுகளும் நலமே இருப்பதாக அறிந்த நிறைவால், நலிந்த வயிறு துள்ளி ஆடுதே பிரியரே! உங்கள் நிம்மதி எங்களுக்கும் மகிழ்ச்சி. 🤩 நல்லிரவு.🙌

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா.....,  ஜஸ்ரின், யூட், கற்பகம் எல்லோரும் அங்குதானே இருக்கிறார்கள்? சத்தத்தை காணவில்லை. தெரிந்தவர்கள் யாராவது அழைப்பெடுத்து பார்க்கவும்.   

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, satan said:

ஆமா.....,  ஜஸ்ரின், யூட், கற்பகம் எல்லோரும் அங்குதானே இருக்கிறார்கள்? சத்தத்தை காணவில்லை. தெரிந்தவர்கள் யாராவது அழைப்பெடுத்து பார்க்கவும்.   

நுணவிலனும்.   இருக்கிறார்    சாத்தன்.     மற்றும் ஒரு நடிகையின் 

விதம் விதமான படங்களை இணைப்பார்    ஒருவர்   ஒரு ஊரின் பெயர் தான்    அதை மறந்து விட்டேன்    ......அவரும் இருக்கிறார்   ரி வரியில் பெயர் வரும் இன்னொருவர் உண்டு”      தேடிப் பாருங்கள் 🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பாடற்ற காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸில் 5 பேர் உயிரிழப்பு!

கட்டுப்பாடற்ற காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸில் 5 பேர் உயிரிழப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸைச் புதன்கிழமை (08) சூழ்ந்த காட்டுத் தீயானது குறைந்தது 5 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளை அழித்தது, 100,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றவும் கட்டாயப்படுத்தியது.

இதனிடையே, தீ விபத்தினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு விரார்களும், விமானப் படையினரும் போராடி வருகின்றனர்.

சூறாவளி காற்று தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்ததுடன், இதன் தாக்கம் காரணமாக செவ்வாய்க்கிழமை (07) ஆரம்பித்த தீயானது வேகமாக பரவியது.

தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image

பல ஹொலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸின் அழகிய புறநகர்ப் பகுதியான பசுபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறத்தில் புதன்கிழமை தீ வேகமாக பரவியது.

தீப்பரவலினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு பெரிய பேரழிவு அறிவிப்புக்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தார் மற்றும் கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூசோம் அவசரகால நிலையை அறிவித்தார்.

எனெனில், புதன்கிழமை இரவு முழுவதும் காற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வியாழன் வரை நிலைமை மோசமாக இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்தனர்.

ஒரேகான், நியூ மெக்சிகோ மற்றும் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த குழுவினர் உட்பட கிட்டத்தட்ட 5,000 வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கலிபோர்னியா தீயை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆதாரங்களை வழங்குகிறது என்று பைடன் அறிவித்தார்.

இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடற்படை ஹெலிகொப்டர் நீர் விநியோக வாளிகள் அடங்கும்.

https://athavannews.com/2025/1415818

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் ; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ

Published By: Rajeeban

09 Jan, 2025 | 12:04 PM
image

லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

los_angeles_fire.jpg

இதேவேளை காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் நிம்மதியடைந்துள்ள போதிலும் ஆபத்து இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

ஹொலிவூட் ஹில்ஸ் பகுதியில் புதிதாக காட்டுதீ மூண்டுள்ளதாக  தெரிவித்துள்ள அதிகாரிகள் லொஸ் ஏஞ்சல்ஸின் சன்டா மொனிகாவில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆயிரம் கட்டிடங்கள் அனேகமாக வீடுகள் முற்றாகதீக்கிரையாகியுள்ளன.நகரப்பகுதியிலிருந்து 13000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பசுபிக் கரை  முதல் பசெடானா வரையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாங்கள் இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து விடுபடவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்துள்ளார்.

los_angles_fire_6.jpg

பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள்

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டு தீ ஆபத்து செல்வாய்கிழமையே உருவானது.

ஒரு சக்திவாய்ந்த காற்று புயல் இயற்கை எழில் கொஞ்சும் பசுபிக்கின் பாலிசோட்ஸ் சுற்றுப்புறத்தில் தீப்பிழப்புகளை மூண்டெழச்செய்த போது ஆயிரக்கணக்காணவர்கள் அங்கிருந்து தப்பி விரைவாக வெளியேறவேண்டிய நிலை உருவானது.

கடும் காற்றுகாரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் திணறியதால் இரவில் அவசரநிலைமை தீவிரமடைந்தது.அந்த இரவை நகரின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான திகிலூட்டும் இரவு என அதிகாரியொருவர் வர்ணித்துள்ளார்.

அந்த பகுதியை சுற்றிவளைத்திருந்த நான்கு காட்டுதீயை  கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக மறுநாள் காலை கலிபோர்னியாவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காட்டுதீ காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20க்கும் மேற்பட்டவர்களி;ற்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

நான்கு பகுதிகளில் இவ்வளவு ஆக்ரோசமாக பரவிவரும் காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்தார். நாங்கள் இரண்டு மூன்று காட்டுதீ பரவலிற்குதான் தயாராகயிருந்தோம் நான்கு ஐந்தை எதிர்பார்க்கவில்லை,அன்று மாலை அது ஆறாக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

பாலிசேட்ஸ் காட்டுதீயே லொஸ்;ஏஞ்சல்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒன்று என அதிகாரிகள் கருதுகின்றனர்.இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 50 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் .

தீயினால் அந்த பகுதியின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன.அதிகரித்த தேவை காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில இடங்களில் நீரை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

பொதுமக்களை நீரை சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

los_angles_fire_1.jpg

லொஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் காட்டுதீ மிகவேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள்  தாங்கள் கார்களை விட்டுவிட்டு  இறங்கி ஓடவேண்டிய நிலைக்கும் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

ஹெலிக்கொப்டரிலிருந்து காட்டுதீயை அணைப்பதற்காக நீர் வீசப்பட்டவேளையே எனக்கு எங்கள் பகுதியில் காட்டுதீ மூண்டுள்ளமை தெரியும்,என அந்த பகுதியை சேர்ந்த ஷெரீஸ் வலஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார். எனது சகோதரி என்னை அழைத்து அதனை தெரிவித்தார் என்கின்றார் அவர்.

நான் மழை பெய்கின்றது என நினைத்தேன்  என தெரிவிக்கும் அவர் எனது சகோதரி இல்லை உங்கள் பகுதியில் காட்டு தீ மூண்டுள்ளது அதனை அணைக்க முயல்கின்றனர் நீங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என தெரிவித்தார்  என வலஸ் தெரிவித்துள்ளார்.

நான் வீட்டு கதவை திறந்ததும் காட்டுதீக்கு எதிரே நின்றேன், என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/203378

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நுணவிலனும்.   இருக்கிறார்    சாத்தன்.     மற்றும் ஒரு நடிகையின் 

விதம் விதமான படங்களை இணைப்பார்    ஒருவர்   ஒரு ஊரின் பெயர் தான்    அதை மறந்து விட்டேன்    ......அவரும் இருக்கிறார்   ரி வரியில் பெயர் வரும் இன்னொருவர் உண்டு”      தேடிப் பாருங்கள் 🙏🤣

மருதங்கேணியரை சொல்லுறியளோ? கள உறவுகள்  எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலிபோர்னியாவில் வாழும் யாழ்கள உறவுகள் நலமுடன் இருப்பதையிட்டு மிக்க சந்தோசம்.
தொலைக்காட்சியில் பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கின்றது. நேரில் எப்படியிருக்கும்?
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கலிபோர்னியாவில் வாழும் யாழ்கள உறவுகள் நலமுடன் இருப்பதையிட்டு மிக்க சந்தோசம்.
தொலைக்காட்சியில் பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கின்றது. நேரில் எப்படியிருக்கும்?
 
படங்கள் யுத்த காலத்தை நினைவு படுத்துகிறது.😏காட்டுத் தீயை இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த முறை தீ ஏட்பட்டுள்ளதாகவும் ,அதனை அணைப்பதற்கு தண்ணீருக்கு கூட தட்டுபாடு நிலவியுள்ளதாகவும் பத்திரிகை செய்திகளில் வந்திருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of fire

இது இன்றைய (அமெரிக்கா) லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டு தீ 🔥 

AB Amam

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

நுணவிலனும்.   இருக்கிறார்    சாத்தன்.     மற்றும் ஒரு நடிகையின் 

விதம் விதமான படங்களை இணைப்பார்    ஒருவர்   ஒரு ஊரின் பெயர் தான்    அதை மறந்து விட்டேன்    ......அவரும் இருக்கிறார்   ரி வரியில் பெயர் வரும் இன்னொருவர் உண்டு”      தேடிப் பாருங்கள் 🙏🤣

மருதங்கேணி.

இவர்கள் வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of fire

இது இன்றைய (அமெரிக்கா) லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டு தீ 🔥 

AB Amam

ஜேர்மனியர்கள்.  அதிகமாக வாழும் பகுதி    

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியர்கள்.  அதிகமாக வாழும் பகுதி    

May be an image of fire

மேலுள்ள படத்தப் பார்த்து... இலங்கை முஸ்லீம் ஒருவர், 
அமெரிக்காவின்... காஸா போலுள்ளது என   கருத்து எழுதி இருந்தார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

ஆமா.....,  ஜஸ்ரின், யூட், கற்பகம் எல்லோரும் அங்குதானே இருக்கிறார்கள்? சத்தத்தை காணவில்லை. தெரிந்தவர்கள் யாராவது அழைப்பெடுத்து பார்க்கவும்.   

விசாரித்தமைக்கு நன்றி!

நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் நலமாக  இருப்பாரென நம்புகிறேன்.  

பகிடி என்னவென்றால், தாயகத்தில் இருக்கும் என் சொந்தக் குடும்ப உறவுகளுக்கு நான் அமெரிக்காவில் எங்கே வசிக்கிறேன் என திக்குத் திசை தெரியாது. ஆனாலும் இன்னும் ஒருவரும் ஒரு கோல் எடுத்து "நீ ஓகேயா?" எனக் கேட்கவில்லை. யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார்.

"சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்😂!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார்.

"சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்

என்னையும் கேட்டிருந்தார்.

மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார்.

36 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையும் கேட்டிருந்தார்.

மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

டக்கென்று ஞாபகத்தில் வந்தது உங்கள் இருவரையும் தான், அத்துடன் இருவரின் வட்சப் இருந்தபடியால் படுத்திருந்து கொண்டே செய்திகளை அனுப்பினேன். யாழிணையம் முகந்தெரியாத பல புதிய உறவுகளை வழங்கி இருக்கிறது. யாழுக்கும் அதை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. 

வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு.

இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.