Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன் | Shanakiyan Took A Selfie With M K Stalin Chennai

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே.

சிலவேளை இது குறித்து ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம். ஏனெனில், உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம். ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும்.

ஆனால், வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது கடற்றொழிலாளர்களின் வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள்” என்றுள்ளார்.

https://tamilwin.com/article/jaffna-fishermen-criticize-tamil-mp-s-1736781703

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன் | Shanakiyan Took A Selfie With M K Stalin Chennai

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன் | Shanakiyan Took A Selfie With M K Stalin Chennai

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன் | Shanakiyan Took A Selfie With M K Stalin Chennai

நடந்து போன தமிழக முதல்வரை,  இழுத்துப் பிடித்து… செல்பி எடுத்துவிட்டு…
இலங்கை அகதிகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக, கதை அளக்கின்றார்கள்.

ஓரு கலந்துரையாடல்… எப்படி இருக்கும் என்பதை, தெரியாத முட்டாள் மக்கள் என நினைத்து விட்டார்கள் போலுள்ளது.

முன்பு ஒருமுறை…  சுமந்திரனும், சாணக்கியனும் கனடாவில் உள்ள பாராளுமன்றத்தின் முன்னால் நின்று படம் எடுத்து விட்டு வந்து, கனடா அரசுடன் இலங்கைத் தமிழர் விடயமாக பேச்சு வார்த்தை நடத்தினோம் என்று மக்களின் காதில் பூ சுற்றிய… சுத்துமாத்து கூட்டம் தான் இது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

👇  கீழே உள்ள இணைப்பை அழுத்தி, காணொளியை பார்க்கவும். 👇

👉    https://www.facebook.com/100072424320459/videos/1370364317293121/   👈

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் தான் மேடையில் இருந்தார்கள். 
அழைப்பு இல்லாமல் போனவர்கள் அனைவரும் பார்வையாளர் வரிசையில் கீழே இருத்தப்பட்டார்கள்.

கீழே... இருத்தப் பட்டவர்கள் யார் என்பது, உங்களுக்கு இப்போ புரிந்து இருக்கும்.
சாணக்கியனின் தயவில்... தொத்திக் கொண்டு போன சுமந்திரனும் கீழே தான்
.

சாணக்கியனும், சுமந்திரனும்...  மேடைக்கு கீழே பார்வையாளர் பகுதியில் 
2500 பார்வையாளர்களுடன்...  இருத்தப்பட்டிருந்தனர்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரன் எம்பி தமிழ்நாடு பயணம்! தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ அழைப்பில்,  “அயலக தமிழர் தினம்” நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்குபற்ற ...

அழைப்பிதழ் பார் ஸ்ரீதரனுக்கு  வந்துள்ளது சுமத்திரன் நா..   அழையா விருந்தாளியாகி போய் ஈழத் தமிழரின் மானத்தை வாங்கியிருக்கிறார்  .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

invitation-110125-seithy.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

invitation-110125-seithy.jpg

அப்போ... சுமந்திரன், சாணக்கியன்... 
அழையா விருந்தாளிகளாக,  "பிலிம்" காட்டப் போனவர்களா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

அப்போ... சுமந்திரன், சாணக்கியன்... 
அழையா விருந்தாளிகளாக,  "பிலிம்" காட்டப் போனவர்களா. 🤣

அதுதான் விமானநிலையத்திலேயே சிறிதரனை நிற்பாட்டிவிட்டால் என்று திட்டம் போட்டிருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை ஒரு "கிராமிய மட்ட" மாநாட்டில் கூட பங்கு பற்றாத பலர் இங்கே உலவுகிறார்கள் போல தெரிகிறதே😂?

இணைக்கப் பட்டிருப்பது விழாவின் நிகழ்ச்சி நிரல் - எனவே விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களின் (invited guests) பெயர்கள் இருக்கும். நிகழ்ச்சி நிரல் என்பது அழைப்பிதழ் அல்ல. இது போன்ற மாநாடுகளுக்கு சில மாதங்கள் முன்பாகவே ஆர்வமுள்ள யாரும் பதிவு செய்து, கலந்து கொள்ளும் இணையத்தள இணைப்பும் வழங்கப் பட்டிருக்கும்👇.

https://nrtamils.tn.gov.in/

அந்த இணைப்பில் சென்று பங்குப் பற்ற விரும்புவோர் ஒரு தொகையை செலுத்தி பதிவு செய்தால், அவர்கள் பங்கு பற்றுனர்களாக (attendees) அனுமதிக்கப் படுவர். இப்படி பதிவு செய்து பங்கு பற்றுவோருக்கு விசா அனுமதிகளுக்கு அவசியமெனில், ஒரு அழைப்பிதழ் கடிதமும் வழங்கப் படும்.

ஒரு விடயம் முழுதாகத் தெரியாவிட்டால், முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், பின்னர் "படம் பார் பாடம் படி"😎 அலட்டலைச் செய்யலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்புக்கும் கதவை தட்டிஅனுமதி பெற்று வருவதும் ஒரே படிநிலை????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது கடற்றொழிலாளர்களின் வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள்.

இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கி, இங்குள்ள ஊடகங்களுக்கு, பேட்டி கொடுக்கும்போது தங்களது கண்டனத்தையும் கவலையையும் வெளியிடுவார்கள். இவர்கள் விரும்பாத, பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் பதிலிறுக்க வேண்டிவரும். ஆனால் எஎல்லாவற்றுக்கும் தயாராய்த்தான் வருவார்கள். "தலைக்கு மேலே வெள்ளம் போனபின், சாண் ஏறினாலென்ன முழம் ஏறினாலென்ன?"

36 minutes ago, Justin said:

இணைக்கப் பட்டிருப்பது விழாவின் நிகழ்ச்சி நிரல் - எனவே விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களின் (invited guests) பெயர்கள் இருக்கும்.

சிறிதரன்.

37 minutes ago, Justin said:

ஆர்வமுள்ள யாரும் பதிவு செய்து, கலந்து கொள்ளும் இணையத்தள இணைப்பும் வழங்கப் பட்டிருக்கும்

37 minutes ago, Justin said:

அந்த இணைப்பில் சென்று பங்குப் பற்ற விரும்புவோர் ஒரு தொகையை செலுத்தி பதிவு செய்தால், அவர்கள் பங்கு பற்றுனர்களாக (attendees) அனுமதிக்கப் படுவர்.

நானும் போகலாம், விரும்பிய யாரும் போகலாம். ஆனால் குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்துவது முக்கியம்! இந்த வழியாக பதிவு செய்து முன்னுக்கு ஓடி சந்திப்புகளை நடத்தினால், முதல் இருக்கை கிடைக்கலாமென நம்பி முண்டியடித்து சிறிதரனுக்கு அறிவிக்காமல் ஓடியிருப்பார்களோ? 

3 hours ago, பெருமாள் said:

“எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே.

சிவஞானம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, சிறிதரனை இலங்கை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதற்கு காரணம்; மக்களின் பிரச்சனைகளை பற்றி கதைத்ததாலாம். அப்போ, இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், ஏன் ரகசிய சந்திப்புகளை தனியாக நடத்துகிறார்கள்? ஏன் வெளிநாடுகளுக்கு, இந்தியா  உட்பட போகிறார்கள்? தனிப்பட்ட பயணம் போகட்டும். மக்களுக்காக போனோம், பேசினோம் என்று ஏன் புலுடா விடுகிறார்கள்? போனவுடனே, போகிற இடங்களிலே, அரசியல் முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து படம் பிடித்து போடுவதிலேயே நேரம் செலவழித்திருக்கிறார்கள். மக்களுடைய பிரச்சனை அவர்களுக்கு இப்போ முக்கியமில்லை, தங்களை முன்னிலைப்படுத்த முக்கியம்.        

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிறீதரனை மேடையில் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்களாம்…
இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை இரண்டாவதை வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று சிறீதரன் மீதுள்ள அதீத பாசத்தில், சுமந்திரன் சாணக்கியன் சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் சிலர் கதறீட்டே இருக்கிறார்கள்.
அட தம்பிகளா, தனியே செம்படித்து அறளை பேந்தவர்கள் போல இருக்காமல் கொஞ்சமாவது மூளையை பயண்படுத்திப்பாருங்கள்.
சிறீதரன் மேற்குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சிறப்பு பேச்சாளரா அழைப்பிதலில் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டவர். அவர் அழையாவிருந்தாளியாக பார்வையாளர் கலரியில் இருந்து நிகழ்வை பார்வையிட செல்லவில்லை.
Protocol வரிசையில் சிறப்பு விருந்தினர்களில் மூன்று பேர் இரண்டாம் வரிசையில் மேடையில் தமிழ்நாடு முதலமைச்சரோடு அமர்த்தப்பட்டார்கள். இதில் என்ன பிரச்சினை இருக்கிறது?
ஈழத்தமிழர்கள் சார்பில் அயலக தமிழர் நிகழ்விற்கு உத்தியோகபூர்வமாக அழைக்க ஒரே ஒரு மக்கள் பிரதிநிதி சிறீதரன் மட்டும் தான். அதனால் தான் ஈழத்தமிழ் பிரதிநிதிகளில் சிறீதரன் மட்டும் மேடையில் இருந்தார்.
இதே நிகழ்விற்கு சாணக்கியனும் சுமந்திரனும் சென்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் மேடைக்கு கீழே பார்வையாளர் பகுதியில் 2500 பார்வையாளர்களில் இருவராக இருத்தப்பட்டிருந்தனர். (இப்ப விளங்குதா இவர்கள் இருவரின் தராதரம்.)
நிகழ்வின் போது மேடையில் இருந்த சிறீதரன் தமிழ்நாடு முதலமைச்சருடன் எழுந்து சென்று பேசிறானார். அதைப்பற்றியும் எழுதி கதறுகிறார்கள் சுமந்திரன சாணக்கிய சந்திரகுமார் செம்புகள். அந்தாள் என்ன கதைத்தது என்று தெரிந்திருந்தால் நவதுவாரத்தையும் மூடீட்டு இருந்திருப்பார்கள். (சிறீதரன் மேடையில் எழுந்து சென்று என்ன கதைத்தார் என்று 5 வாரங்களில் செயற்பாடு மூலம் பகிரங்கமாக தெரியவரும்.)
சிறீதரன் உத்தியோகபூர்வமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதால் அவருக்கு “ஐயா உங்களுடன் ஒரு செல்பி எடுக்கலாமா” என்று கெஞ்சிக்கூத்தாடி படம் எடுக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. எம் மக்களும் தம் தலைவர்கள் இப்படி கோமாளிகூத்து காட்டுவதை விரும்பமாட்டார்கள்.
நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிறீதரன் மேடையில் முதலமைச்சரோடு இருந்தார். சுமந்திரன் சாணக்கியன் மேடைக்கு கீழே பார்வையாளராக இருந்தார்கள்.
மேடையில் சிறீதரன் முதலமைச்சர் ஸ்ராலினுடன் பேசிய விடயத்தின் செயற்பாட்டுக்கு மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் பங்குபற்ற முடியாது என்பது தான் கவலையான விடயம்.
ஆமை ஆயிரம் முட்டையிட்டுவிட்டு அமைதியாக இருக்குமாம், கோழி ஒரு முட்டை போட்டுவிட்டு கூவிக்கொண்டே திரியுமாம் என்பது உண்மை தான்.

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன் | Shanakiyan Took A Selfie With M K Stalin Chennai

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அழைப்புக்கும் கதவை தட்டிஅனுமதி பெற்று வருவதும் ஒரே படிநிலை????

படிநிலையென்றால்... அழைத்த விருந்தாளிகளை ஆரம்ப நிகழ்வில் மேடையில் அமர வைப்பார்கள், பங்கு பற்றுவோரை மண்டபத்தினுள் அமர வைப்பார்கள் (வெளியே திண்ணையில் இருக்க வைத்து சிரட்டையில் ரீ கொடுப்பதெல்லாம் செய்ய மாட்டார்கள்😎!).

மற்றபடி அனுமதி இருந்தால் யாரும் எங்கேயும் போய் வரலாம்.

இப்ப நான் மேல் விளக்கத்தை எழுதியதன் காரணம்: அழையா விருந்தாளி, "நாய்.." என்றெல்லாம் பங்கு பற்றியவர்களை மேலே எழுதியிருக்கிறார்கள். உங்களுக்கு அதெல்லாம் கண்டனத்திற்குரியதாகத் தெரியவேயில்லை! ஆனால் "படி நிலை" உறுத்தி விட்டது! "அங்க" நிற்கிறீர்கள் நீங்கள்😂!

49 minutes ago, satan said:

நானும் போகலாம், விரும்பிய யாரும் போகலாம். ஆனால் குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்துவது முக்கியம்! இந்த வழியாக பதிவு செய்து முன்னுக்கு ஓடி சந்திப்புகளை நடத்தினால், முதல் இருக்கை கிடைக்கலாமென நம்பி முண்டியடித்து சிறிதரனுக்கு அறிவிக்காமல் ஓடியிருப்பார்களோ? 

முன்னுக்கு பதிவு செய்தால் "முன் இருக்கை" கிடைக்க இது புங்குடு தீவு முதலாளியின் KG பஸ் அல்ல சாத்தான்😂.

இது சர்வதேச மாநாடு. அழைத்தால் அழைக்கப் பட்ட விருந்தாளி, நீங்களே பதிவு செய்து போனால் விருந்தாளி அல்லது பங்கு பற்றுனர்! அது சரி, ஏதாவது மாநாட்டிற்கு நீங்கள் போயிருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:
சிறீதரனை மேடையில் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்களாம்…
இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை இரண்டாவதை வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று சிறீதரன் மீதுள்ள அதீத பாசத்தில், சுமந்திரன் சாணக்கியன் சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் சிலர் கதறீட்டே இருக்கிறார்கள்.

ஐயோ, மக்கு பெருமாள். ஐயா! நீங்கள் ஏன் மேடையின் கீழ் பார்வையாளர் வரிசையில் இருத்தப்பட்டீர்கள், எதற்காக சிறீதரனுக்கு முன்னாடியே இந்தியாவுக்கு சென்றீர்கள், சேர்ந்து போயிருக்கலாமே, அங்கு எமது மக்கள் சார்பாக என்ன பேசினீர்கள் என்று கேட்டால், என்ன சொல்வது? அதை தவிர்ப்பதற்காக, சிறீதரனுக்காக அழுகிறார்களாம். அப்படி அக்கறையுள்ளவர்கள், ஏன் அவரை விலத்திவிட்டு சென்றார்கள்? நாங்கள் எங்கே இருந்தோம் என்பதை கேட்கமுதல், சிறிதரன் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டால், அதோடு கதை திசை திரும்பிவிடும். இது ஒரு தந்திரம்! தங்கள் குற்றத்தை, வெட்கத்தை மறைக்க. நீங்கள் ஏன் தோற்றீர்களென்றால்; நாங்கள் நான்கு ஆசனங்களை பெற்று வென்றிருக்கிறோம், இது வெற்றிதான்.   

தமிழ் மக்களுக்கான பிரச்சனையை கதைக்க, விளக்க ஜெனிவா போங்கள் என்றால்; அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்பவர்கள், வைகோ போகிறார் அதுபற்றி பேச. அயலக தமிழர் தினத்துக்கு முண்டியடித்து ஓடுகிறார்களாம். எது முக்கியம் நமது அரசியல் சட்ட மேதைகளுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

படிநிலையென்றால்... அழைத்த விருந்தாளிகளை ஆரம்ப நிகழ்வில் மேடையில் அமர வைப்பார்கள், பங்கு பற்றுவோரை மண்டபத்தினுள் அமர வைப்பார்கள் (வெளியே திண்ணையில் இருக்க வைத்து சிரட்டையில் ரீ கொடுப்பதெல்லாம் செய்ய மாட்டார்கள்😎!).

மற்றபடி அனுமதி இருந்தால் யாரும் எங்கேயும் போய் வரலாம்.

இப்ப நான் மேல் விளக்கத்தை எழுதியதன் காரணம்: அழையா விருந்தாளி, "நாய்.." என்றெல்லாம் பங்கு பற்றியவர்களை மேலே எழுதியிருக்கிறார்கள். உங்களுக்கு அதெல்லாம் கண்டனத்திற்குரியதாகத் தெரியவேயில்லை! ஆனால் "படி நிலை" உறுத்தி விட்டது! "அங்க" நிற்கிறீர்கள் நீங்கள்😂!

முன்னுக்கு பதிவு செய்தால் "முன் இருக்கை" கிடைக்க இது புங்குடு தீவு முதலாளியின் KG பஸ் அல்ல சாத்தான்😂.

இது சர்வதேச மாநாடு. அழைத்தால் அழைக்கப் பட்ட விருந்தாளி, நீங்களே பதிவு செய்து போனால் விருந்தாளி அல்லது பங்கு பற்றுனர்! அது சரி, ஏதாவது மாநாட்டிற்கு நீங்கள் போயிருக்கிறீர்களா?

ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு.

அழைப்பிதழில் ஒருவரது பெயர் போட அவரது அனுமதி பெறவேண்டும். ஒரு விழாவில் பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு விருந்தினர், விழாத்தலைவர் என்பதெல்லாம் அதற்கேற்ப விழா ஒழுங்கமைப்பாளர்களால் படிநிலை மரியாதை கொடுக்கப்படல் வேண்டும். இதெல்லாம் தெரியாமலா நீங்கள்???

அப்புறம் வாசலில் காவலில் நிற்பவர்களுக்கு இன்னன்னாரை வாசலில் நிறுத்த வேண்டும் என்றும் விழா ஒருங்கிணைப்புக்குழு ஆணையிடுதலும் உண்டு. அதை சிரட்டை என்று நீங்கள் நினைத்தால் அதுவே. கடைசியாக என் மீதான உங்கள் கோபக்கணல் என் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவதில் வந்து நிற்கிறது. என்ன செய்வது அறப்படிச்சவர் எல்லாம் இப்ப இப்படி தான் திரிகிறார்கள் இங்கும் பாராளுமன்றத்திலும். ஆனால் இந்த சீண்டுதல் மற்றும் இழிவு படுத்துதல் என் ஊர் மற்றும் தேசம் மீதான பற்றை அதிகப்படுத்தவே இதுவரை உதவி இருக்கிறது. தொடருங்கள். நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்பி பிள்ளைகள் 😀

Donkey Selfie Stock Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஸ்டாலினுடன் படம் எடுப்பதற்கு ஈழதமிழர்களின் தலைவர்கள் முண்டியடிப்பதை சீமான் பார்த்தால் மிகவும் மனம் உடைந்து போய்விடுவார் தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்

கிடைக்கிற சந்தர்ப்பத்தை பாவித்து கொள்ள வேணும் என்று பாடம் எடுப்போம் ...அப்படி அவர்கள் முண்டியடித்து படம் எடுத்தால் உடனே திட்டுவம் ...
அணுராவுக்கு மத்திய அரசு செம்கம்பள வர்வேற்பு கொடுத்தல்லோ ...அப்ப எங்கே போனது கடற்தொழிலார்களின் ஆவேசம் ,கோபம்,காட்டம் எல்லாம்
 எங்கன்ட எம்.பி மாருக்கு இந்த வ்ரவேற்பை ஸ்டாலின் கொடுத்ததே பெரிய விடயம்.. ..

அன்று எம்.ஜி.ஆர் தொடக்கம் இன்று ஸ்டாலின் வரை தமிழ் மக்களை பொறுத்தவரை ..படம் எடுப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

அழைப்புக்கும் கதவை தட்டிஅனுமதி பெற்று வருவதும் ஒரே படிநிலை????

இதுதான் தமிழனுக்கு வந்த சோதனை.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஸ்டாலினுடன் படம் எடுப்பதற்கு ஈழதமிழர்களின் தலைவர்கள் முண்டியடிப்பதை சீமான் பார்த்தால் மிகவும் மனம் உடைந்து போய்விடுவார் தானே

சீமான் ஏன் ம‌ன‌ம் உடைந்து போக‌னும்....................சீமானை முத‌ல் க‌ரும்புலி மில்ல‌ரின் அம்மா தொட்டு ம‌ற்றும் சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ச‌ந்திச்சு இருக்கின‌ம்

இந்த‌ கேப்மாரிய‌ல் ஸ்டாலின‌ ச‌ந்திச்சு ஈழ‌ ம‌ண்ணில் ஏதும் ந‌ன்மை ந‌ட‌ந்துவிட‌ப் போகுதா

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ அத்த‌னை ஆன்மாக்க‌ளும் இவ‌ங்க‌ளை ம‌ன்னிக்காது😉.................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு.

அழைப்பிதழில் ஒருவரது பெயர் போட அவரது அனுமதி பெறவேண்டும். ஒரு விழாவில் பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு விருந்தினர், விழாத்தலைவர் என்பதெல்லாம் அதற்கேற்ப விழா ஒழுங்கமைப்பாளர்களால் படிநிலை மரியாதை கொடுக்கப்படல் வேண்டும். இதெல்லாம் தெரியாமலா நீங்கள்???

அப்புறம் வாசலில் காவலில் நிற்பவர்களுக்கு இன்னன்னாரை வாசலில் நிறுத்த வேண்டும் என்றும் விழா ஒருங்கிணைப்புக்குழு ஆணையிடுதலும் உண்டு. அதை சிரட்டை என்று நீங்கள் நினைத்தால் அதுவே. கடைசியாக என் மீதான உங்கள் கோபக்கணல் என் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவதில் வந்து நிற்கிறது. என்ன செய்வது அறப்படிச்சவர் எல்லாம் இப்ப இப்படி தான் திரிகிறார்கள் இங்கும் பாராளுமன்றத்திலும். ஆனால் இந்த சீண்டுதல் மற்றும் இழிவு படுத்துதல் என் ஊர் மற்றும் தேசம் மீதான பற்றை அதிகப்படுத்தவே இதுவரை உதவி இருக்கிறது. தொடருங்கள். நன்றி.

எந்த தவறை யார் மறைத்தார்கள் என்கிறீர்கள்?

இது ஒரு சர்வதேச மாநாடு, இதற்கு யாரும் பதிவு செய்து உள்ளே செல்லலாம். அப்படிப் பதிவு செய்து சென்றவர்களை, "படிநிலைப்படுத்த" வேண்டுமென்று சொன்னது நீங்கள் ( "அழையா விருந்தாளி, நாய்கள்" என்று அழைத்தவரும் உங்களுக்கு பச்சை குத்தி மகிழ்ந்திருக்கிறார்😎!). மாநாடுகளில் இந்த படிநிலைப்படுத்தல் ஓரளவுக்குத் தான் நடக்கும் என்று உண்மையை நான் சொல்லியிருக்கிறேன்.

நீங்களோ, ஊர்ச்சங்கத்தில் "இன்னாரை உள்ளே விடாதே" என்று வாயிற்காப்பாளருக்குச் சொல்லி விட்டு நடத்தும் கூட்டங்களின் அனுபவத்தில் நின்று பேசுகிறீர்கள்! இதற்கு மேல் எப்படி உங்களுக்கு விளங்கப் படுத்துவது? ஒன்று செய்யலாம். இந்த ஆண்டு இதே போன்ற ஒரு மாநாட்டிற்கு ஸ்ராலின் பாரிஸ் வருகிறார் என நினைக்கிறேன். ஒரு தடவை பதிவு செய்து உள்ளே சென்று வாருங்கள். நான் சொல்வது புரியலாம்!

எண்பதுகளில் புங்குடுதீவு முதலாளியின் கொழும்புக்கு ஓடிய கேஜி ட்ரவல்ஸ் உங்களுக்குத் தெரியாதா? அதைத் தான் சுட்டிக் காட்டியிருந்தேன் உதாரணமாக. புங்குடுதீவு என்றாலே "விசுகரைத் தான் கூப்பிடுகிறார்கள்" என்று நீங்கள் எண்ணுவது ஏன்😂? புங்குடுதீவு  ஒரு ஊர், உங்களுக்கு மட்டுமே தொடர்புடைய ஒரு சொத்தல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அதாவது பதிவு செய்து நான் சென்றால் ஸ்டாலின் மேடையின் ஓரத்திலும் நான் மேடையின் நடுவில் விழாத்தலைவரின் பக்கத்திலும் நிற்போம் என்கிறீர்கள்?

விமானங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் வரை பணத்திற்கேற்ப படிநிலை வரிசை இருக்கும் போது உங்களுக்கு புங்குடுதீவு அதுவும் 80 களில் நடந்தது ஞாபகம் வருகிறது என்றால்.....

அதுவும் புங்குடுதீவு முதலாளி. இதன் அர்த்தம் எனக்கு மட்டுமல்ல இங்கே எல்லோருக்கும் தெரியும். இனி மேல் மதம் சாதி பிரதேசவாதம் சார்ந்த கருத்துருக்களை எழுதும் தகுதியை இழந்தநிலையை நீங்களாகவே ஏற்படுத்தி விட்டீர்கள்.

இந்த பழிவாங்குவது மற்றும் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவது எல்லாமே உங்கள் தவறை மறைக்க தொடரும் நாடகங்கள் தான். அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனங்கள் பெரிதாக உறைப்பதில்லை காரணம் நீங்கள் அதுக்கு முதலே இங்கே அதை விட பலமடங்கு அதிகமாக எல்லோருடனும் சொறிந்துள்ளீர்கள். தொடருங்கள். நீங்கள் அம்மணமாக நிற்கும் வரை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

அதுதான் விமானநிலையத்திலேயே சிறிதரனை நிற்பாட்டிவிட்டால் என்று திட்டம் போட்டிருப்பார்களோ?

ஸ்ரீதரன் விழா மேடையில் தமிழக முதல்வர் ஸ்ராலினுடன் அமர்ந்திருக்க,
சுமந்திரனும், சாணக்கியனும்.... கீழே 2500 பார்வையாளர்களுடன், 
24´வது வரிசையில் குந்தி இருந்து வேடிக்கை பார்க்க, 
அவமானமாக இருக்கும் என்றுதான்....

கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே... புலனாய்வுத் துறைக்கு பெட்டிசம் போட்டு,
ஸ்ரீதரனின் பயணத்தை, தடை செய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள். 😎

ஸ்ரீதரன் அதனையும் தாண்டி... நிகழ்வில் கலந்து கொண்டு,
சுமந்திரன், சாணக்கியன் முகத்தில் அசடு வழியப் பண்ணியுள்ளார். 😂

இவர்களின்... ஊத்தைவாளி வேலை, 
மக்களுக்கு அம்பலப் படுத்தப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு. 👍

இந்த அரசியல் அநாதை...  செய்யும் சுத்துமாத்து எல்லாம், 
உடனே அம்பலத்துக்கு வருவது தெரியாமல், வெட்கமில்லாமல் 
பல்லைக் காட்டிக் கொண்டு திரிவதை பார்க்க... தமாசாக இருக்கு. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அதாவது பதிவு செய்து நான் சென்றால் ஸ்டாலின் மேடையின் ஓரத்திலும் நான் மேடையின் நடுவில் விழாத்தலைவரின் பக்கத்திலும் நிற்போம் என்கிறீர்கள்?

விமானங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் வரை பணத்திற்கேற்ப படிநிலை வரிசை இருக்கும் போது

நான் எழுதியது: "இது போன்ற மாநாடுகளில் படிநிலை வேறுபாடுகள் ஊர்ச்சங்கப் பொன்னாடை போர்த்தும் நிகழ்வுகளில் இருப்பது போல நிலவுவதில்லை" என்று தான். ஆனால், "கண்ணில் நீர் வரும் அளவு ஆத்திரத்தோடு" வாசித்ததால்,உங்களுக்கு இன்னும் புரியவில்லை. அதை அப்படியே விடுங்கள்.

ஏனைய உங்கள் அலட்டல்களுக்கு  நான் நீண்ட பதில் கூறி கௌரவம் செய்ய விரும்பவில்லை.

இதை மட்டும் எல்லோரும் புரிந்திருக்கிறார்கள்: "பச்சை மட்டை" தமிழ் தேசியத்திற்கும் நீங்கள் தான் இங்கே இன்ஸ்பெக்ரர், இப்போது புங்குடுதீவுக்கும் நீங்கள் தான் ஓனர்!" இதை நீங்கள் உங்கள் தலைக்குள் வைத்து இன்பங் காண்வதை யாரும் தடுக்க உரிமையில்லை! ஆனால், உங்கள் தலைக்கு வெளியே இருக்கும் யாரும் இதை அங்கீகரித்துக் கருத்தாட வேண்டிய கடமையில்லை😎!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says "நந்தம்பக்கம் கம் N முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்ட அயலகத் தமிழர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம்- -2025 விழாவில், கலந்துகொண்ட ண்ட அயலகத் தமிழர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். 12.01.2025 தளிகித்: இமக்குகட்,செந்தி மங்கள் tndar www.fiprin.geein @wome.mtaftodaah y attadds SulnB தமிழர் பிணைம் 2028 TN DIPR ពគ្គុគ្មី២លុយ"

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

May be an image of text that says "நந்தம்பக்கம் கம் N முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்ட அயலகத் தமிழர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம்- -2025 விழாவில், கலந்துகொண்ட ண்ட அயலகத் தமிழர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். 12.01.2025 தளிகித்: இமக்குகட்,செந்தி மங்கள் tndar www.fiprin.geein @wome.mtaftodaah y attadds SulnB தமிழர் பிணைம் 2028 TN DIPR ពគ្គុគ្មី២លុយ"

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன் | Shanakiyan Took A Selfie With M K Stalin Chennai

ஓ.... இப்படி செல்பி எடுப்பதைத்தான்,  
இலங்கை அகதிகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக... சுமந்திரனும், சாணக்கியனும் 
ஊருக்குள் சொல்லிக் கொண்டு திரிகிறார்களா.

அவர்கள் இலங்கைக்கு திரும்பி வருவதற்குள், அவர்களின் தில்லாலங்கடி  செய்திகள் 
வேகமாக...  தாயகத்தை நோக்கி  வந்து விட்டமை  மகிழ்ச்சி.

இது இணையத்தள காலம். 
எங்கும் பேய்க்காட்ட முடியாது என்பதை... அவர்களுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.