Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25-678ff35aad342.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு  எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது.

 

 

இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

மேலும், அவருக்கெதிராக இந்து சமய கலாசார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

 

அத்துடன், "இராமநாதன் அர்ச்சுனா, பயன்படுத்துகின்ற வார்த்தைகள், சைவக்குருமார்கள், இந்துக்குருமார்கள் அனைவரையும் தாக்கக் கூடிய அளவிற்கு உள்ளன. 

 

ஆகவே, எமது புனிதமான திருநீற்றையும் அதனை அணிகின்ற சைவ மக்களையும், குறிப்பாக "அங்கு ஒருவன் இருப்பான்" என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை மூலம் எங்களுடைய குருமார்களை தாக்கி அவர் பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

 

எனவே, இவ்வாறான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துபவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

அத்துடன், அவர் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பேசுகின்ற இவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் கவலைப்படுவர். எனவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும்.

 

இதேபோன்று, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்த்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாக பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

 

ஜனாதிபதியோ, இந்து கலாசார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள், சைவ அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடிக் கொண்டிருப்போம் என்பதை சகலருக்கும் அறியத் தருகின்றோம்" என குறிப்பிட்டுள்ளனர். 

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்துக் குருக்களுக்கும் சைவக் குருக்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் என்றும், சைவ சமயம் என்றும் பள்ளியில் பாடம் படிப்பித்தார்கள். கொழும்பான் அவர்கள் இந்துவும் சமயம் என்று சொல்கிறாரே? 🧐

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்துக் குருக்களுக்கும் சைவக் குருக்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? 

இந்தியாவில் உள்ள குருக்கள் இந்து

இலங்கையில் உள்ள குருக்கள் சைவம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் உள்ள குருக்கள் இந்து

இலங்கையில் உள்ள குருக்கள் சைவம்.

🤣. இந்தியாவில் உள்ள கடவுளும்   இலங்கையில் உள்ள கடவுளும்   வேறுபடுகிறதா. ???  அல்லது     ஒன்றா   ??? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கில்  அர்ச்சுனா வெல்லுவான்.    .....

இன்றைய அனுரதபுர. வழக்கில் பொலிஸார் தோல்வி வழக்கு தள்ளுபடியில் முடிந்தது  .....அர்ச்சுனா.  தன்னை அறிமுகம் மட்டுமே செய்தார்   ......ஆனால் பொலிஸார் கொடுத்த முறைப்பாட்டில்.  அர்ச்சுனா    பெயர் இல்லை   மாறி கொடுத்து விட்டார்கள்    ....நீங்கள் சொன்ன நபரை கொண்டு வாருங்கள்… என்றது நீதிமன்றம் 🤣🤣🤣🤣🤣

விடயத்துக்கு வருகிறேன்,......இந்த வழக்கில்  சமயம்   பற்றி பேசப்படும்   .....சமயம் சட்டம் இல்லை   எனவே… அது பற்றி பேசலாம்     பிழைகள் நீக்க படவேண்டும்.      அமைதியாக இருப்பது நல்லது    நடப்பதை பார்ப்போம்   🙏

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீடியோவை நானும் பார்த்தேன். தேவையற்ற கதை தான். ஆனால் வழக்கு போட்டு எல்லாம் வெல்ல முடியாது. ஏனெனில் பொதுவாக தான் சொல்கிறார். யாரையும் தனிப்பட சுட்டிக் காட்டவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அந்த வீடியோவை நானும் பார்த்தேன். தேவையற்ற கதை தான். ஆனால் வழக்கு போட்டு எல்லாம் வெல்ல முடியாது. ஏனெனில் பொதுவாக தான் சொல்கிறார். யாரையும் தனிப்பட சுட்டிக் காட்டவில்லை. 

அர்ச்சுனா.  வெல்வார்.      ஐயார்மாரின்.  இருந்த மதிப்பும். இல்லாமல் போய் விடும்    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

🤣. இந்தியாவில் உள்ள கடவுளும்   இலங்கையில் உள்ள கடவுளும்   வேறுபடுகிறதா. ???  அல்லது     ஒன்றா   ??? 

தென்னிந்தியாவில் முருகன்.

வடஇந்தியாவில் பலர்.

இப்போ மூன்று இடங்களிலும் பிரபலமானவர் ஆஞ்சனேயர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னிந்தியாவில் முருகன்.

வடஇந்தியாவில் பலர்.

இப்போ மூன்று இடங்களிலும் பிரபலமானவர் ஆஞ்சனேயர்.

சைவ குருமார்களின் போராட்டம் சரியா??? வெற்றி பெறுமா  ??   

அர்ச்சுனா.  விரித்த வலையில் மாட்டிகிட்டார்கள்.  

இப்போதுகூட அர்ச்சுனா தேர்தல் பிரசாரம்  தான் செய்கிறார்.   

இப்படி வலைகளை விரிந்து     வைத்து விட்டால்   ஒரு மாதம்   இழு படும்   கடைசியில் வென்றும்.  விடுகிறான்     மக்கள் ஆதரவும் கூடுகிறது     

அடுத்த வடமாகாண முதல்வர் அர்ச்சுனாவா. ??? 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

அடுத்த வடமாகாண முதல்வர் அர்ச்சுனாவா. ?

இருக்கும்,இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இன்றைய அனுரதபுர. வழக்கில் பொலிஸார் தோல்வி வழக்கு தள்ளுபடியில் முடிந்தது  .....அர்ச்சுனா.  தன்னை அறிமுகம் மட்டுமே செய்தார்   ......ஆனால் பொலிஸார் கொடுத்த முறைப்பாட்டில்.  அர்ச்சுனா    பெயர் இல்லை   மாறி கொடுத்து விட்டார்கள்    ....நீங்கள் சொன்ன நபரை கொண்டு வாருங்கள்… என்றது நீதிமன்ற

அருச்சுனா ஒரு பொலிஸ்காரனை நீ பத்தாம் வகுப்பு படித்த மொக்கன் என்ற ரீதியில் மிக கண்ணியமாக கண்டித்த, விஐபி லைட் போட்டு கார் ஓடிய, வீடியோ ஒண்டு உலா வந்தது.

அந்த வழக்கா இது?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

    

அடுத்த வடமாகாண முதல்வர் அர்ச்சுனாவா. ??? 😁

தமிழனின் தலைவிதியை  ஆண்டவனும் மாற்ற முடியாது என சொல்லுறீயல் 

20 minutes ago, goshan_che said:

அருச்சுனா ஒரு பொலிஸ்காரனை நீ பத்தாம் வகுப்பு படித்த மொக்கன் என்ற ரீதியில் மிக கண்ணியமாக கண்டித்த, விஐபி லைட் போட்டு கார் ஓடிய, வீடியோ ஒண்டு உலா வந்தது.

அந்த வழக்கா இது?

அதுதான்...என நினைக்கிறேன் ...இவர் எல்லாம் ஏன் அரசியல் செய்ய வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, putthan said:

இவர் எல்லாம் ஏன் அரசியல் செய்ய வருகிறார்

அதிகார மமதை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் உள்ள குருக்கள் இந்து

இலங்கையில் உள்ள குருக்கள் சைவம்.

இந்தியக் குருக்களுக்காகவும் அவர்கள் குரல் கொசுக்கிறார்களா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அருச்சுனா ஒரு பொலிஸ்காரனை நீ பத்தாம் வகுப்பு படித்த மொக்கன் என்ற ரீதியில் மிக கண்ணியமாக கண்டித்த, விஐபி லைட் போட்டு கார் ஓடிய, வீடியோ ஒண்டு உலா வந்தது.

அந்த வழக்கா இது?

அனுரதபுரத்தில்.  நடந்ததோ???   நான் வீடியோ பார்க்கவில்லை    🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:
1 hour ago, putthan said:

அதுதான்...என நினைக்கிறேன் ...இவர் எல்லாம் ஏன் அரசியல் செய்ய வருகிறார்

 

ஆள்கள். இல்லை      🤣.     

மிக மிக குறுகிய காலத்தில்   பாராளுமன்ற உறுப்பினராக  மக்களால்   தெரிவு செய்யப்பட்டவர்.  இந்த உலகில் அர்ச்சுனா    ஒருவர் மட்டுமே தான்    

குறிப்பு,.....கோஷான்.    இது சீமான்   இல்லை   என்பதை  நினைவில் கொள்ளுங்கள் 🤣.   

1 hour ago, goshan_che said:

அதிகார மமதை.

இல்லை    மக்களுடன்    தோளில் கை போட்டு   நண்பனாகவே   பழகுவார்,..... அவருக்கு மழை என்றாலும்  மக்கள் குடை பிடிக்கத் தேவையில்லை    

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

🤣. இந்தியாவில் உள்ள கடவுளும்   இலங்கையில் உள்ள கடவுளும்   வேறுபடுகிறதா. ???  அல்லது     ஒன்றா   ??? 

இந்தியாவில் உள்ள கடவுளுக்கு அவர் காணும் குமரிகள் எல்லாம் பெண்டாட்டிகள்.

இலங்கையில் உள்ள கடவுளுக்கு பாவம் இரண்டே இரண்டுதான்.😩

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அதிகார மமதை.

கல்வித்திமிரும் கூட 
யாராவது எடக்கு மடக்காக கேள்வி  கேட்டு மடக்கினால் உடனே M.B.B.S டிகிரிக்கு தாவி  மட்டம் தட்டும் பைத்தியன் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அதிகார மமதை.

இல்லை 

அந்த அளவுக்கு தமிழர்களின் அரசியலில் ஓட்டை இருக்கிறது. இது கூட பரவாயில்லை என்றநிலை. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொலிஸார் பற்றி தெரியாமல் கருத்துகள் எழுத கூடாது 

இலங்கை பொலிஸார் அடிக்கடி தேவையில்லாமல் காரை மறிப்பது,...ஆவணங்களை கேட்பது    சும்மா லைன் மாறி ஓடியது   ....வேகமாக ஓடியது,........இப்படி சின்ன    சின்ன  

சாட்டுகளை.  சொல்லி     வழக்கு போட வேணும்”னு சொல்வார்கள்  ...உங்களுக்கு  கோட்.   சட்டத்தரணி 

என்று இருபது ஆயிரம் மட்டில். முடியும்    எங்களுக்கு இரண்டு ஆயிரம் அல்லது மூன்று ஆயிரம் தந்தால்.    வழக்கு போட மாட்டோம்னு   என்று சொல்லி   பலரிடம் பணம்  வேண்டி உள்ளார்கள்    

இப்படி நாலு  ஐந்து    செய்திகள் வாசித்து உள்ளேன்   தமிழ் பகுதிகளில் அல்லது   தமிழரிடம்.   இது அடிக்கடி நடப்பது உண்டு”     மக்கள் அர்ச்சுனாவுக்கும்.   முறையிட்டிருக்கிறார்கள்.   இப்ப தான்  அர்ச்சுனாவிடம்.  மாட்டிக்கொண்டார்கள். அர்ச்சுனா  நடந்த முறை  ....இலங்கை பொலிஸார் உடன் நடந்த முறை   மிகவும் சரியானது    

ஒரு வருடத்திற்கு ஒருமுறை கூட ஜேர்மனியில்   என்னை பொலிஸார் சோதிக்கவில்லை    

விசுகரை   பாரிஸ் ஒவ்வொரு நாளும் சோதிப்பது உண்டா.??? 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kandiah57 said:

விசுகரை   பாரிஸ் ஒவ்வொரு நாளும் சோதிப்பது உண்டா.??? 

இல்லை அண்ணா 

அதிலும் மிகக்கடுமையான சோதனை நடக்கும் இடங்களில் கூட எம்மை (தமிழர்கள்) கண்டால் நீங்கள் போகலாம் என்று கை காட்டி அனுப்பி விட்ட சம்பவங்கள் நிறைய. இதற்கு காரணம் நம்பிக்கை நாணயம் உழைப்பு முயற்சி என்று எம் தலைமுறை விதைத்த பதிவுகள். (அதற்காக உங்கள் தகுதிக்கு மீறிய அதிக விலை சொகுசு கார்களில் சுத்தக் கூடாது. )

ஆனால் இலங்கையில் இது தமிழர்களின் மேல் இல்லாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

இந்துக் குருக்களுக்கும் சைவக் குருக்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? 


தமிழர்களை பொறுத்தவரை குருக்கள் என்பது சாதியின் (இது சாதியை குறித்து அல்ல) அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும்.

பிராமணர் என்றால் அவர் ஐயர். குறிப்பாக ஐயர் இறந்தவருக்கு கிரியை செய்வதில்லை .

குருக்கள் என்பது வேறு எந்த சாதியில் வரமுடியும், உரிய தீட்சை மூலம் (அனால், இதில் யதார்த்த சிக்கல்கள், பிரச்சனைகள் சாதி பாகுபாட்டால் இருக்கிறது).

இவர்களைத் தான் , இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் (சைவக்) குருக்கள் என்பது.


இந்த வேறுபாடு (அதாவது குருக்கள், ஐயர்) - ஐயர் என்பது பெரும் பொறுப்பு, சிறுவயதில் இருந்தே மந்திர  பயிற்சி தொடங்கவேண்டும். அதிகாலை (இந்த நேரத்தை  பிரம்ம முகூர்த்தம் என்பது , கிட்டத்தட்ட 4.00 - முதல் சூரிய ஒளி தெரியும் வரை) மந்திர பிரணாயமம் (அதன் முதல் எழுந்து, குளித்து, உடல் (அசைவின் மூலம், கிட்டத்தட்ட யோக போல), மனம், மதி சுத்தப்படுத்தி ஆயத்தம் ஆக வேண்டும்  ),  உணவு கட்டுப்பாடு வேண்டும். இங்கே நான் (மந்திர) பிரணாயாமம் என்று சொல்வது ஏனெனில், ஒவொரு மந்திரங்களுக்கும் மூச்சு, எங்கே இருந்து எழுவது  (அடிவயிற்றில் வயிற்றில், தொண்டையில், குரல் இழையில் ...  என்று விதி இருக்கிறது, பொதுவாக இது குறிப்பது மூச்சை (மந்திர) இசையாக்குவது).  (முன்பு) பிராமண ஐயர்களின் இருப்பிடம், கிட்டத்தட்ட குருகுலம் போல.  அப்போதைய நிலையில் (ஏன் இப்போதும் இலங்கையில்)  அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. இதனால், பரம்பரையாக ஐயர் தொழில் செய்தவர்கள் விலத்துகிறார்கள். அதில் உள்ள பிரச்சனை, பரம்பரையாக வழங்கி வரும் அறிவு மற்றும் அனுபவம் இழக்கப்படுவது. இதை சொல்லி புரிவது கடினம், ஐயர்களின் வாழ்க்கையோடு பழகினால் தான் அதன் யதார்த்தம் புரியும். 

பொதுவாக் சைவக் குருக்கள் இப்படியாக கிரியை செய்யமுடியாது, ஏனெனில் பயிற்சி  இல்லை.

(ஒரு நம்பிக்கை இப்போதும் இருக்கிறது - அதாவது பிராமணர் ஏன் விவேகமாக வந்துளார்கள் என்பதற்கு  - அதாவது அரசர் காலத்தில் இருந்து, காலனித்துவம் , அதன் பின்னும்  பல முக்கிய பொறுப்புகளில் - அவர்கள் செய்யும் மந்திர பயிற்சியால்  என்று. இங்கேயும் பல வேறு தளங்களிலும் பிராமணர் தம்மவர்களை கூடி சேர்ப்பது என்ற வாதம்  இருந்தாலும், உலகப் புகழ்பெற்ற விவேக மேதைகள் பெரும்பாலும் பிராமண (ஐயர்கள்), அதிலும் மந்திர பயிற்சி செய்தவர்கள், பின் விலத்தியவர்கள்)  


இறந்தவர் கிரியைக்கு பொதுவாக வருவது, கிரியை செய்வது குருக்கள்.  

அனால், இப்போது வெளிநாடுகளில் (பிராமண) ஐயரும் இறந்தவர் கிரியைக்கு வருகிறார்கள், செய்கிறார்கள்.

ஆயினும், சிலர் (பிராமண ஐயர்) இறந்தவர் கிரியைக்கு அழைத்தும் வர மறுத்துள்ளதை அறிந்து, கண்டு  இருக்கிறேன். (இவர்களில் தமிழ்நாட்டை மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்)

இந்துவில் குருக்கள் என்பது, குருஜி என்று வடக்கு இந்தியாவில் அழைக்கப்படுபவர்களுக்கு ஒப்பானது.

அனால், அப்படியான இந்து குருக்கள் என்று தமிழரில் பொதுவாக இல்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இல்லை 

அந்த அளவுக்கு தமிழர்களின் அரசியலில் ஓட்டை இருக்கிறது. இது கூட பரவாயில்லை என்றநிலை. 

👆👇 + நான் சொன்னது எல்லாமுமே

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

கல்வித்திமிரும் கூட 
யாராவது எடக்கு மடக்காக கேள்வி  கேட்டு மடக்கினால் உடனே M.B.B.S டிகிரிக்கு தாவி  மட்டம் தட்டும் பைத்தியன் 

 

11 hours ago, Kandiah57 said:

குறிப்பு,.....கோஷான்.    இது சீமான்   இல்லை   என்பதை  நினைவில் கொள்ளுங்கள்

🤣. அருச்சுனா மீது எனக்கு கள்ளன் என்ற ஐமிச்சம் இல்லை.

ஆனால் பந்தா பரமசிவம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஆனால் பந்தா பரமசிவம்.

இன்று பாராளுமன்றத்தில்  பேசினார் பார்த்தீர்களா  ??  பயங்கரவாதசட்டம்.  நீக்கப்படும்‘  என. அறிகிறேன்,......இவரது கோரிக்கை,பேச்சால்      உண்மை  தான் இல்லையா????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.