Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!

15 ஆண்டுகளாக ஒரு பாலியல் புகார் இழுத்தடிக்கப்பட்டு வருவதே ஒரு அவலம். அதை கறாரான நடவடிக்கை இன்றி, மீண்டும், மீண்டும் சமூகத்தின் பேசு பொருளாக்குவது அதைவிட அவலம்.  ”நீதிமன்றம், சட்டம், சமூகத்தின் மனசாட்சி எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல..” என ஒரு அரசியல் தலைமை வலம் வருவது ஆட்சிக்கே பேரவலம்! 

சமூகத்திற்கு பயனற்ற இது போன்ற விவகாரங்களை எழுதுவதையும், பேசுவதையும் முடிந்த அளவு தவிர்த்தே வருகிறேன். அதை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து உண்மையான குற்றவாளியை தண்டிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

இந்த மாதிரி ஒரு விவகாரம் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு பேசப்படுவதற்கு இங்குள்ள  ஆட்சியாளர்களின் நேர்மையின்மையும் ஒரு காரணமாகும்.

ஒரு பெண் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறாள். ஒருவனை தீவிரமாக காதலித்த காரணத்தால், அவன் விருப்பபடி மீண்டும், மீண்டும் கருக் கலைப்பு என்ற அவலத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

பிறகு காதலித்தவளை கைவிட்டு , செல்வாக்கும், செல்வ வளமும் உள்ள அரசியல் குடும்பத்து பெண்ணை மணந்துள்ளார்.

83524.jpg

சீமான் மண்ணும், மரபும் சார்ந்த தமிழ் தேசியம் என்னும் உன்னத அரசியலை பேசுகிறார்! ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்கிறார். அந்த வகையில் கணிசமான இளைஞர்களின் நம்பிக்கையை வென்று எடுத்துள்ளார். எனில், அவர்கள் பின்பற்றத் தக்க முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது தான் ஒரு தலைவனுக்கு அழகாகும்.

மற்றொரு கல்யாணம் செய்து கொண்ட பிறகும் காதலித்த பெண்ணை கைவிட முடியாமல் மாதாமாதம் ரூ50,000 தந்து தொடர்பை நீடித்துக் கொண்டே வந்துள்ளார். பிறகு அதையும் தராமல் அந்த பெண்ணை நட்டாற்றில் விடுகிறார். அவள் தெருவிற்கு வருகிறாள்! இவரும் மல்லு கட்டுகிறார்.

கவியரசர் கண்ணதாசன் மூன்று மனைவியரோடு  வாழ்ந்திருக்கிறார். கருணாநிதி அவர்களும் இரு பெண்ணோடு வாழ்ந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவும் மூன்று மனைவியரையும், ஏராளமான ஆசை நாயகிகளையும் கொண்டிருந்திருக்கிறார்!  நிச்சயமாக இவை எதுவும் பின்பற்றத் தகுந்த முன் உதாரணங்கள் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்களை சமமாக நடத்தி, சந்தோசமாக வைத்துக் கொள்ளும் பக்குவப்பட்டவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

சீமானால் அது முடியவில்லை. மாதம் வெறும் 50,000 அனுப்பி போனில் பேசக் கூட பயந்து வாழ்ந்த காலமும் முடிவுக்கு வந்து, முதல் மனைவியால் அவர் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து நிராதரவாக விட்டு விடுகிறார், விஜயலட்சுமியை! இந்தச் சூழலில் அந்தப் பெண் பல முறை ஆண்டுக்கணக்கில் போலீசில் புகார் தந்தும் எந்தப் பயனுமற்று தான் சில காலம் கிணற்றில் போட்ட கல்லானது, விவகாரம்! சீமான் குறைந்தபட்ச மனசாட்சி உள்ளவராக இருந்திருந்தால், இந்த பிரச்சினைக்கு என்றோ முற்றுபுள்ளி வைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு கெளரமான ஒரு நஷ்ட ஈட்டை தந்து, புதியதொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள உதவி இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் எளியவர்களோடு சமரசமாகமாட்டார். கட்சிக்காக உழைத்த எத்தனை பேரை அலட்சியப்படுத்தி வெளியே அனுப்பி உள்ளார்! அவரது அகங்கார மனோபாவமே இந்த பிரச்சினை நீடிப்பதற்கு முழு முதற் காரணம். இதற்கு தோதாக இவரது மனைவி கயல்விழியும் அமைந்துவிட்டார்.

Screenshot_20250228_165800_YouTube.jpg

முதன் முதலாக  இது வெளியே தெரிய வந்த போது, ஜெயலலிதா ஆட்சியில் இந்த காரணத்தால், தன்னை தண்டித்துவிடக் கூடாதே என  ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என அரசியல் ஸ்டண்ட் அடித்தார் சீமான்.

அதன் பிறகும் அதிமுகவுடனும், பாஜகவுடனும் நல்லுறவு வைத்துக் கொண்ட நிலையில், தொடர்ந்து விஜயலட்சுமி புகார் தூங்கிக் கிடந்தது. பாஜகவினர் அன்று சீமானுக்கு ஆதரவாகத் தன்னை மிரட்டியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது புகார் கவனிக்கபடுமென்று நம்பிய விஜயலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது…! கடந்த நான்காண்டுகளில்  பல முறை விஜயலட்சுமி புகார் தந்து, பல முறை போலீசால் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு முறை காவல்துறையினர் சீமானை அழைத்து விசாரித்ததோடு விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் இருந்த காரணத்தால் சீமான் ஒருபோதும் தண்டிக்கப்பட முடிந்தவரல்ல… என்ற முடிவுக்கு தான் வந்ததை விஜயலட்சுமி வெளிப்படையாக  அழுகையோடு அறிவித்து விட்டுத் தான் பெங்களூர் சென்றார்.

vijaya-lakshmi_1595829736.jpg

இந்தச் சூழலில் தான் வழக்கை நீதிமன்றம் விசாரித்ததில் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும், இந்த புகார் தொடர்ந்து அலட்சியப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டு சீமானை விசாரித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிடுகிறார்.

நீதிபதி விசாரிக்கத் தான் கூறியுள்ளார். தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்றல்லவா சீமான் சொல்லி இருக்க வேண்டும். ஏற்கனவே 15 ஆண்டுகள் இழுத்தடித்தது போதாது என்று, தற்போது மீண்டும் வாய்தா கேட்பதும், விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக நினைப்பதும் கோழைத்தனமின்றி வேறென்ன?

வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது என்பது ஒரு நடைமுறை தானே. அதை நான் தான் படிப்பதற்காக கிழித்து வரச் சொன்னேன் என்கிறார் சீமான் மனைவி. ஆனால், வாயிற்காவலர் அதை அக்குவேறு ஆணிவேராக கிழித்து போட்டாரே தவிர, படிக்கத் தோதாக கிழிக்கவில்லை என்பதே நிஜம். அதை செல்போனில் போட்டோ எடுத்து வரச் சொல்லி கூட சீமான் மனைவி கயல்விழி அம்மையார் படித்திருக்க வாய்ப்புள்ளது.

Screenshot_20250228_165734_YouTube.jpg

கிழித்துப் போட்ட விவகாரத்தை அவமதிப்பாக கருதி காவல்துறை வருகின்றனர்.  கேட்டை திறந்து அவர்களை பார்த்தவுடன், சட்டென்று கேட்டை மீண்டும் சாத்த முயற்சிக்கிறார் அந்த செக்யூரிட்டி மனிதர். வந்த காவல்துறையினரிடம் இயல்பாக பேசி, விசாரணைக்கு தானே ஒத்துழைத்து அவர் சென்று இருக்க முடியும் தானே!

இத்தனைக்கு பிறகும் சீமானும், அவர் மனைவியும் எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆவேசம் காட்டுகின்றனர் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக இவர்கள் தங்களை கருதுகிறார்கள் என்றே பொருளாகும்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்று விசாரிக்கவே தடை கேட்கிறார் சீமான் என்றால், இது தப்பிக்கும் முயற்சி தானே! எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் தானே!

ஒரு பாலியல் குற்றச் செயல் செய்தவர் 15 ஆண்டுகளாக வருங்கால முதல்வரை போல வலம் வருவதும், அரசியல் நியாயங்கள் பேசி அரசியல் நட்சத்திரமாக வலம் வருவதும் அவரது செல்வாக்கை மட்டும் காட்டவில்லை. தற்போதுள்ள ஆட்சியாளர்களின் ஆளுமை பற்றாகுறையையும் சேர்த்தே காட்டுகிறது. முதலமைச்சர்  ஸ்டாலினால், சீமானை நியாயப்படி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தண்டிக்க முடியாவிட்டால், அது அவரது திறமையின்மையை – உறுதிபாடற்ற நிர்வாக ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமைந்துவிடும். இத்தனைக்கு பிறகும் சீமானை தண்டிக்கவியலாமல் போனால் அது – சட்டம், நீதிமன்றம், காவல்துறை, ஆட்சி நிர்வாகம், சமூகம் போன்ற சகலத்தின் தோல்வியாக – வரலாற்றில் கரும்புள்ளியாகிவிடும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…!

லட்சிய நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தம்பி, தங்கைகள் சீமானை புறக்கணித்து, தங்களில் இருந்து ஒரு புதிய தலைமையை கண்டடைய வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/20907/seeman-vijayalaxmi-stalin/

  • Replies 71
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்..

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட

  • goshan_che
    goshan_che

    இது சட்ட நடைமுறைதான். Ex parte அல்லது without notice application என சொல்வார்கள். ஒரு வழக்கில் மறு பகுதியின் நியாயத்தை கேட்காமல் ஒரு தடையுத்தரவு (injunction) கொடுப்பது. இங்கே தமிழ் நாடு அரசுக்கு - பதில

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நேர்மையான கட்டுரை.

சீமானோடு அரசியல் செய்யும் பெண்கள் அனைவரும் “பெண்ணுறுப்பை கவர்ந்து இழுப்பேன்” என சொன்ன பின்பும் அவருக்கு ஆதரவ கொடுக்கும் பெண் டிரம்ப் விசுவாசிகள் போன்றனரே.

இங்கே யாழில் கூட சீமானுக்கு இந்த விடயத்தில் ஆதரவாக எழுதும் பலரை பார்த்தால், தாம் பாலியல் ஒழுக்கம் கெட்டவர்கள் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவர்களும், சிறுவர் துஸ்பிரயோகத்தை நியாயப்படுத்தி எழுதுபவர்களும் அதில் அடக்கம் என்பதை காணலாம்.

2 hours ago, கிருபன் said:

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்று விசாரிக்கவே தடை கேட்கிறார் சீமான் என்றால், இது தப்பிக்கும் முயற்சி தானே! எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் தானே!

இந்த நீதிபதி உத்தரவு வந்ததுமே, அமித் ஷா மூலம் சீமான் வழக்கை முடிக்க பார்ப்பார் என எழுதினேன்.

அதன் முதல்படிதான் இது.

மிக அருமையாக, இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக எல்லாம் சீமானுக்கு எப்படி உதவின என்பதை பட்டியல் இட்டுள்ளார் ஆசிரியர்.

2 hours ago, கிருபன் said:

லட்சிய நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தம்பி, தங்கைகள் சீமானை புறக்கணித்து, தங்களில் இருந்து ஒரு புதிய தலைமையை கண்டடைய வேண்டும்

காலத்தின் தேவை இது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.

நேற்று இரவு நியூஸ் 18 செய்திகளிலும் பார்த்தேன். நேற்றைய நாள் இரண்டு விடயங்களுக்காக மறக்கவே முடியாத ஒரு நாளாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வழக்குகளில் உள்ள பெரும் சிக்கல் அவற்றை நிருப்பிப்பது, இந்திய நீதிமன்றங்களில் சில வழக்குகளில் பாதிக்கபட்டவரின் நடவடிக்கையை குறை சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சங்கிகளின் ஆதரவு பெற்ற இந்த பாலியல் சைக்கோ விடுவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இதோடு அவரது நாறவாய் அனைவருக்கும் வாடகைக்கு தேவைபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, செவ்வியன் said:

இங்கிலாத்தில் கூட 2023/24 ஆண்டில் கோர்ட்டுக்கு போன பாலியல் வன்கொடுமை (rape) வழக்குகளில் வெறும் 53% சதவீதமே குற்றம் என தீர்ப்பாகின.

ஆகவே இந்த வழக்கில் சீமான் தப்பவே வாய்ப்புகள் அதிகம்.

குற்றம், குற்றம் அல்ல என்பதற்கு அப்பால் - 15 வருடமாக ஒரு வழக்கை தானே அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கிடப்பில் போட வைத்து விட்டு, இப்போ அதையே காட்டி ”15 வருடாமாயிற்று, நான் பிள்ளை பெற்றுகொண்டேன்” என தப்ப நினைப்பது மிகவும் கீழ்தரமானது.

அதைவிட கீழ்தரமானது, கயல் அண்ணியை பொலிஸ் ஸ்டேசன் கூட்டி வருவதும் பேச வைப்பதும்.

நாம் தமிழர் பெண் பிள்ளைகளை தன்னை சூழ நிற்கவைத்து கொண்டு “சோளக்காட்டில் தூக்கி போய் கற்பழித்தேனா” என வக்கிரம் கக்குகிறார்.

பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையை இந்த தமிழ் சமூகம் புறம்தள்ளி 30+ வருடங்கள்.

அதன் பெயர் பாலியல் வன்கொடுமை.

சோளக்காட்டில் நடந்தாலும், சொகுசு அறையில் நடந்தாலும் - அது பாலியல் வன்கொடுமைதான்.

ஆனால் சீமானை போன்ற காமவெறியர்கள் ஏதோ தாம் ஒரு பெண்ணின் கற்பை அழித்து விட்டதாக இன்னும் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

சீமான் எப்படி பட்ட ஒரு கீழ்தரமான ஆணாதிக்க, பிற்போக்குவாதி என்பது இதில் வெளிப்பட்டது.

தும்புத்தடிக்கு சேலை சுத்தினாலே பாய்ந்து குதறி விட கூடிய காமாந்தகன் சீமான் -இந்த இலட்சணத்தில் அவரிடம் நாட்டை கொடுக்க வேணுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அடிப்பொடிகளை காணோம்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sasi_varnam said:

ஐ!!!

அதே பழைய “திமுக செய்யலாம், நாங்க செய்ய கூடாதா” இத்து போன லாஜிக்🤣.

நாளைக்கு சீமான் 2 ஆயிரம் கோடி ஊழலை மறைக்க இனப்படுகொலைக்கு ஆதரவளித்தாலும் - திமுக செய்யலாம் நாம் செய்யகூடாத என்பார்கள்.

திமுக ஆபாசத்தை பற்றி கதைக்க முடியாது - நாங்கள் கதைக்கலாம்…

ஏன் என்றால் இந்த ஆபாச ஆமைகுஞ்சு பயன்படுத்துவது எங்கள் மாவீர செல்வங்களின் பெயரை, தியாகத்தை.

3 hours ago, நந்தன் said:

எங்கே அடிப்பொடிகளை காணோம்

ஒருத்தர் நீண்ட நித்திரையில் இருந்து எழும்பி வந்து ஆஜர்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

எங்கே அடிப்பொடிகளை காணோம்

இப்பவெல்லாம் சீமான் ஆதரவாளர்களுக்கு "வார்த்தைகள் முட்டுகின்றன"! யூ ரீயூபில் யாராவது வார்த்தைகளைக் கோர்த்து "வாய் வழி வரும் பேதியாக - verbal diarrhea" இணையத்தில் போட்டு விட அதை மட்டும் தான் "முட்டுக் கோலாக" கொண்டு வந்து இணைக்க வேண்டியிருக்கிறது😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

அதே பழைய “திமுக செய்யலாம், நாங்க செய்ய கூடாதா” இத்து போன லாஜிக்🤣

தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழ்நாட்டில் அரசியலையும் சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாது. இப்போதெல்லாம் சினிமாவை கூடுதலாக அரசியல் பிரச்சாரத்திற்காகவே மட்டும் பிரயோகிக்கின்றார்கள். சினிமா என்பது ஒரு கனவுத்தொழிற்சாலை. அங்கு நடக்கும் விட்டுக்கொடுப்புகள்,கதை டிஷ்கசன், விடுதிகளில் நடக்கும் புரிந்துணர்வு சந்திப்புகள் என வெளியே சொல்ல முடியாத சம்பவங்கள் அன்றைய இன்றைய வெள்ளித்திரைகளுக்கு பின்னால் நடக்கும் சம்பவங்கள் ஏராளம்.ஏராளம். அன்றும் சீமான் செய்தது போல் பல பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஆனால் அன்று ஊடக வெளிச்சம் இல்லை. பத்திரிகைகளும் அரசியல் கட்சிகள் சார்ந்தே இருந்திருக்கின்றன. அந்த அரசியல் சார்பு இன்றும் ஊடகங்களில் இருக்கின்றது. அன்றைய சினிமா அரசியல் தலைவர்கள் உள்வீட்டு விடயங்கள் வெளிவந்தாலும் அவை அடக்கப்பட்டு விட்டன.அப்படி இருந்தும் முன்னைய தலைவர்களின் அசிங்க செயல்கள் ஒரு ஓரமாக விவாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டு அரசியலில் பாலியல் சீர்கேடுகளும்,ஊழல் லஞ்ச நடைமுறைகளும் சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. அத்துடன் சாதி எனும் கொடூரம் தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் அதிகமாக இல்லை.இவற்றையெல்லாம் அரசியலில் பேசு பொருளாக்க மாட்டார்கள். ஏனென்றால் அவை அனைத்தும் அவர்களுக்கு மூலதனம். இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் சித்திரம்.

குற்றவாளியும் சுத்தமில்லை. சுத்தவாளிகளும் குற்றம் செய்யாமலில்லை.

இது இப்படி இருக்க சீமான் மட்டும் தமிழ்நாட்டு அரசியலில் குற்றவாளி அல்ல.சீமானை குற்றம் சாட்டுபவர்களும் குற்றவாளிகள் மட்டுமல்ல நீதிமான்களும் அல்ல. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

அத்துடன் சீமானின் முன்னாள் காதலி கணவனே கண்கண்ட தெய்வம் எனும் கொள்கையுடையவராக இருந்தாலும் மேலும் பேசலாம். அதுவும் அங்கே பூச்சியம்.

நியாயமில்லாத அரசியல் வெற்றிகள் என்றுமே நிலைக்காது. அது யாராக இருந்தாலும் சரி..👈

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதில் மாற்று கருத்து எதுவும் எனக்கு இல்லை.

எனக்கு மட்டும் அல்ல, எவருக்கும் இருக்க முடியாது.

இதனால்தான் நான் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியையும், இன்னொரு தமிழ் நாட்டு அரசியல்வாதியை விட திறம் என முந்தள்ளுவதில்லை.

சிலர் பெரிய கருணாநிதிகள், சிலர் சின்ன கருணாநிதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சிலர் பெரிய கருணாநிதிகள், சிலர் சின்ன கருணாநிதிகள்.

Hence LHS=RHS

தமிழ்நாட்டை ஆள இந்த தகுதிபோதும். தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தகுதியும் கூடவே ஒட்டிக்கொள்கிறது

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, குமாரசாமி said:

அத்துடன் சீமானின் முன்னாள் காதலி கணவனே கண்கண்ட தெய்வம் எனும் கொள்கையுடையவராக இருந்தாலும் மேலும் பேசலாம். அதுவும் அங்கே பூச்சியம்.

இது என்ன கொடுமை பாதிக்கப்பட்டவரையே குற்றஞ்சாட்டுவது, ஒரு பெண் இப்படிதான் கட்டுப்பாடாக இருக்க வேண்டும், அப்படியில்லையென்றால் அவரை ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பது போல் உள்ளது.

இந்த வழக்கை பொறுத்த வரை வெறும் வதந்தியாகவோ வெற்று குற்றச்சாட்டாகவோ அந்த பெண் வைக்கவில்லை, முறைப்படி வழக்கு பதிந்திருக்கிறார். அவருக்கு நியாமாக கிடைக்கவேண்டிய ஆதரவு அரசிடமிருந்து கிடைக்கவில்லை. இதை மற்ற வதந்திகளோடு பொதுவாக கூறப்படும் விடயங்களோடு ஒப்பிடுவது இதை நீர்த்து போகத்தான் செய்யும்.

இக்குற்றச்சாட்டின் உண்மை தன்மை நீதிமன்றத்தில் தான் நிருப்பிக்கபடவேண்டும், அது எப்படியிருந்தாலும், சீமான் இரு நாட்களாக உதிர்த்த சொற்கள் அவரது வக்கிர எண்ணங்களையே பறைசாட்டுகிறது.

இதில் எனக்கு உள்ள பெருங்கோவம், இது போன்ற கேவலங்களை செய்துவிட்டு இயக்கத்திற்கு பின் போய் ஒளிந்துகொள்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

அன்னார் பிஜேபி தலைமையிலான NDA யின் ராஜ்யசபா உறுப்பினர் ஆவார். இவரின் ராஜ்ய சபா பதவி காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிகு

இந்த தடவை நேராக அண்ணாமலையை இறக்கினால் பாரதீய ஜல்சா பார்ட்டி என்பது மேலும் உறுதியாகும் என்பதால் மணியை அடித்துள்ளார்கள் 🤣

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

Hence LHS=RHS

தமிழ்நாட்டை ஆள இந்த தகுதிபோதும். தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தகுதியும் கூடவே ஒட்டிக்கொள்கிறது

ஆகவே திமுக=நாதக, கருணாநிதி=சீமான் என ஒத்து கொள்கிறீர்கள்!

நன்றி. உங்களை எமது அணிக்கு வரவேற்பதில் பெருமை அடைகிறேன்😃.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, செவ்வியன் said:

இது என்ன கொடுமை பாதிக்கப்பட்டவரையே குற்றஞ்சாட்டுவது, ஒரு பெண் இப்படிதான் கட்டுப்பாடாக இருக்க வேண்டும், அப்படியில்லையென்றால் அவரை ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பது போல் உள்ளது.

இந்த வழக்கை பொறுத்த வரை வெறும் வதந்தியாகவோ வெற்று குற்றச்சாட்டாகவோ அந்த பெண் வைக்கவில்லை, முறைப்படி வழக்கு பதிந்திருக்கிறார். அவருக்கு நியாமாக கிடைக்கவேண்டிய ஆதரவு அரசிடமிருந்து கிடைக்கவில்லை. இதை மற்ற வதந்திகளோடு பொதுவாக கூறப்படும் விடயங்களோடு ஒப்பிடுவது இதை நீர்த்து போகத்தான் செய்யும்.

இக்குற்றச்சாட்டின் உண்மை தன்மை நீதிமன்றத்தில் தான் நிருப்பிக்கபடவேண்டும், அது எப்படியிருந்தாலும், சீமான் இரு நாட்களாக உதிர்த்த சொற்கள் அவரது வக்கிர எண்ணங்களையே பறைசாட்டுகிறது.

நான் இங்கே யாருக்காகவும் வாதடவில்லை. நடந்த சம்பவம் யாருக்காக எந்த சந்தர்ப்பத்தில் பந்தாடப்படுகின்றது என்பதையே சொல்ல வருகின்றேன். பாதிக்கப்பட்டவர் சீமானால் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பது உலகறிந்த விடயம். சீமான் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றால்...... ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இது முன்னுதாரணமாக இருக்கட்டும்.

15 hours ago, செவ்வியன் said:

இதில் எனக்கு உள்ள பெருங்கோவம், இது போன்ற கேவலங்களை செய்துவிட்டு இயக்கத்திற்கு பின் போய் ஒளிந்துகொள்கின்றனர்.

அரசியல் என்பது தெளிந்த நீரோடை அல்ல. அது ஒரு சாக்கடை.

அரசியல் தெளிந்த நீரோடை என்றால் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்திருக்காது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீமான் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றால்...... ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இது முன்னுதாரணமாக இருக்கட்டும்.

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து கதைக்கிறீர்கள், இச்சம்பவத்தில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீமானின் மோசமான பேச்சை சரி என்பது போல் உள்ளது. அப்பெண் எப்படி பட்டவராக இருக்கட்டும், ஆனால் ஒரு தலைவராக இவரது பேச்சு அருவருக்கதக்கது, அதுவும் தவறுதலாக அல்ல, திட்டமிட்டே தன் உள்ள வக்கிரங்களை வெளிபடுத்துகிறார்.

2 hours ago, குமாரசாமி said:

அரசியல் என்பது தெளிந்த நீரோடை அல்ல. அது ஒரு சாக்கடை.

அரசியல் தெளிந்த நீரோடை என்றால் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்திருக்காது அல்லவா?

நீங்களுமா? ஒரு தனி மனித மீதுள்ள ஒழுங்கீனமான குற்றச்சாட்டுக்கும் . நிலத்தில் நடந்த பெருங்கொடுமைக்கும் , இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்.

நகளை அவர் குற்றவாளி என ஒரு வேளை தீர்ப்பு வந்தால், அதற்கு இயக்கத்தை காரணம் சொல்லமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2025 at 23:46, நந்தன் said:

எங்கே அடிப்பொடிகளை காணோம்

You mean ஜக் கோலயாஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, செவ்வியன் said:

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து கதைக்கிறீர்கள், இச்சம்பவத்தில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீமானின் மோசமான பேச்சை சரி என்பது போல் உள்ளது. அப்பெண் எப்படி பட்டவராக இருக்கட்டும், ஆனால் ஒரு தலைவராக இவரது பேச்சு அருவருக்கதக்கது, அதுவும் தவறுதலாக அல்ல, திட்டமிட்டே தன் உள்ள வக்கிரங்களை வெளிபடுத்துகிறார்.

அப் பெண் இவ்வளவு காலமாக சீமானை --- மவனே,------ க்கு பொறந்தவனே என வெளிப்படையாக திட்டும் போது பெண் உரிமைவாதிகளுக்கு வராத கோபம் இன்று சீமானின் வார்த்தை பிரயோகத்திற்கு வருகின்றது என்றால்....?

9 hours ago, செவ்வியன் said:

நீங்களுமா? ஒரு தனி மனித மீதுள்ள ஒழுங்கீனமான குற்றச்சாட்டுக்கும் . நிலத்தில் நடந்த பெருங்கொடுமைக்கும் , இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்.

நகளை அவர் குற்றவாளி என ஒரு வேளை தீர்ப்பு வந்தால், அதற்கு இயக்கத்தை காரணம் சொல்லமுடியுமா?

அது அரசியல் சம்பந்தப்பட்டதால் எழுத வேண்டி வந்துவிட்டது. ஆனால் இதே விஜலட்சுமிதான் ஈழதமிழர்களை பயங்கரவாதிகள் என வெளிப்படையாக கூறியவர். எனவே அவர் தன் தனிப்பட்ட வெறுப்புகளுக்காக ஒரு இனத்தின் மீது வன்மத்தை கொட்டியவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2025 at 11:30, செவ்வியன் said:

பாலியல் வழக்குகளில் உள்ள பெரும் சிக்கல் அவற்றை நிருப்பிப்பது, இந்திய நீதிமன்றங்களில் சில வழக்குகளில் பாதிக்கபட்டவரின் நடவடிக்கையை குறை சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சங்கிகளின் ஆதரவு பெற்ற இந்த பாலியல் சைக்கோ விடுவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இதோடு அவரது நாறவாய் அனைவருக்கும் வாடகைக்கு தேவைபடுகிறது.

இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை

நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?

சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அப் பெண் இவ்வளவு காலமாக சீமானை --- மவனே,------ க்கு பொறந்தவனே என வெளிப்படையாக திட்டும் போது பெண் உரிமைவாதிகளுக்கு வராத கோபம் இன்று சீமானின் வார்த்தை பிரயோகத்திற்கு வருகின்றது என்றால்....?

நான் அந்த பெண்ணை திட்டியதை சொல்லவில்லை , "நான் என்ன குச்சுக்கள் இருந்த பெண்ணையா.." என்று மிக எளிதாக சிறுமிகள் மீதான பாலியல் விடயங்களை பொதுவில் பேசுகிறார். அப்பெண்ணை நாதகவினரும் இதற்கு முன்னரும் தான் கேவலமாக பேசியுள்ளனர். கேவலத்திற்கு கேவலம் பதில் கிடையாது, அதோடு அவர் நம்மை போன்ற தனிமனிதர் கிடையாது , நாம் பேசுவது பல வேளைகளில் கண்டுகொள்வதும் கிடையாது, பாதிப்பு ஏற்படுத்துவது கிடையாது. இவர் தனி மனிதர் அல்ல ஈழத்தை அடிப்படையாக கொண்டு எழுப்பபட்ட ஒரு கட்சியின் தலைவர், அதற்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது.

நம் பெண்கள் இந்திய இலங்கை படையினரால் சொல்லொன்னா அவலங்களை சந்தித்தனர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது புலிகளின் தலைமையோ அல்ல ஒரு இயக்க வீரரோ சிங்கள பெண்களை பற்றி ஒரு சிறு தவறான சொற்பிரயோகம் பயன்படுத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

எதிரிகளால் நாம் போரில் தான் வீழ்த்தப்பட்டோம், நம் கண்ணியத்தையும், மனிததன்மையையும் வீழ்த்திவிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை

நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?

சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?

இலங்கை அரசினர் இன அழிப்பு செய்தனர், இந்திய இராணுவம் ஈழத்தில் செய்யாத வன்கொடுமை இல்லை, இனதுரோகிகள் பலவுண்டு. இவை ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனதா? அதனால் இவை குற்றமாகாதா?

ஒரு குற்றச்சாட்டு வெறும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மட்டும் நிலைபெறுவது கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் மற்ற நடவடிக்கைகள், அதற்கான எதிர்வினை என பிற விடையங்களும் காரணியாக அமையும்.

இந்திய இராணுவத்தின் பாலியல் குற்றம் கூறும் சக ஈழத்தவர் அனைவரும் சகமனிதரின் துன்பம் அறிந்தவர்கள், மனிதத்தன்மை கொண்டவர்கள் , நீங்கள் நினைப்பது போல் கூட படுத்துவர்கள் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2025 at 20:12, goshan_che said:

குற்றம், குற்றம் அல்ல என்பதற்கு அப்பால் - 15 வருடமாக ஒரு வழக்கை தானே அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கிடப்பில் போட வைத்து விட்டு, இப்போ அதையே காட்டி ”15 வருடாமாயிற்று, நான் பிள்ளை பெற்றுகொண்டேன்” என தப்ப நினைப்பது மிகவும் கீழ்தரமானது.

சீமான் எங்கே வழக்கை இழுத்தடித்தார்? வழக்கு தொடுத்த விஜி அண்ணிதானே வழக்கை இருமுறையும் வாபஸ் வாங்கினார்? சும்மா அடிச்சுவிடக்கூடாது!!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை

நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?

சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?

இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட்டும் நடைபெற இல்லை.. எங்கள் வீடு உங்கள் வீடு பக்கத்துவீடு என்று எல்லோருமே இதனால் பாதிக்கப்பட்டோம்.. வாழும் சாட்சிகள்..

ஆனால் லிவ்விங் ருகெதர் ஆக வாழ்ந்த காலப்பகுதியில் சீமானுக்கும் விஜலட்சுமிக்கும் இடையே நடந்ததை,தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு நடுவே இருந்த உறவை, நீதிமன்றம் கண்டுபுடிக்கும் முன்னமே ஒரு சிலர் பாத்திருக்கிறார்கள்.. பாலியல் வல்லுறவு என்பதை கண்டிருக்கிறார்கள்..

அப்படி எனில் அவர்கள் ஒன்றில் இந்த இருவரும் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த பெட் ரூமில் விளக்கு பிடிப்பவர்களாக அல்லது மாமா வேலை பார்ப்பவர்களாக அல்லது அடுத்தவன் பெட் ரூமில் கமெரா வைத்து அந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் சைக்கோக்களாகத்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செவ்வியன் said:

நான் அந்த பெண்ணை திட்டியதை சொல்லவில்லை , "நான் என்ன குச்சுக்கள் இருந்த பெண்ணையா.." என்று மிக எளிதாக சிறுமிகள் மீதான பாலியல் விடயங்களை பொதுவில் பேசுகிறார்.

அவர் பேசியது இப்போது தமிழகத்தில் நடந்த பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகள் மீதான பாலியல் பலாத்கார வழக்குகளை பற்றியது! இப்படி எத்தனையோ வழக்குகளை கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறையும், நீதிமன்றமும் தனது வழக்கில் மாத்திரம் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறது என்பதற்காகவே!!

Edited by Eppothum Thamizhan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.