Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இவர் புலம்பெயர் தேசத்தில் வசித்து இருந்தும், பாடசாலைக்குள் சிறுவர், சிறுமியரை படம் எடுக்கக் கூடாது என்ற அடிப்படை சட்டம் கூட தெரியாதவர் போலுள்ளது.

பொலிஸ் ஸ்ரேசனிலும் போய் அடாவடி செய்த படியால்… நட்டு, கிட்டு கழண்ட ஆளோ தெரியவில்லை. 😂

அண்மைய இலங்கை விஜயத்தின்போது...நானொரு கமராப் பித்தம் ..எப்பவும் போனும் கராவும் கையில் இருக்கும்...தங்கிய இடம் புத்தூர்...அழகிய கிராமியசூழல்...ஆடு மாடு..தோட்டம் துரவு எதுவும் தப்பாமல் படமெடுப்பு...ஒருநாள்காலை டிரக்டரில் உழுத ஒருவரை அவரின் அமுமதியில்லாமல் படமெடுத்தேன்....ஆரடா நீ என்னை படமெடுக்கிறது என்று கேட்டு அடிக்கவே வந்துவிட்டார்...நான் கனடாக்காரன்..ஊர்பார்க்க..வந்தனான் ..இதுதான் என்வீடு என்று சொன்னதால் தப்பித்தேன்...ஆனால் ..வழமையாக..யாரையுமனுமதி பெறாமல் படமெடுப்பதில்லை...இங்கு..ஆட்டையும் மாட்டையும் கேளாமல் பட்மெடுத்தமாதிரி...மனுசனை படமெடுத்து அடிவாங்கப் பார்த்தேன்..

படித்த பாடசாலை...அதிபரின் அனுமதி பெற்றே படமெடுத்தேன்.....பெண்பிள்ளைகள் ஓடி ஓடிவந்து படமெடுத்தினம் ..என்னோடையல்ல மனுசியோடை...ஆசிரியைகளும் அப்படித்தான்..அது ஒரு சந்தோசநேரம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாடசாலை பப்ளிக் பிளேஸ் அல்ல என்பதால் இந்த கேள்வியே தேவை இல்லை.. எடுக்க முடியாது.. அதுதான் சட்டம்..

பாடசாலை, வங்கி பப்ளிக் பிளேசில்லை ஓக்கே….

அப்போ நீங்கள் முதல் கொடுத்த உதாரணத்தில் உள்ள அகதிகள் ஹோட்டல் எப்படி பப்ளிக் பிளேஸ் ஆகியது?

ஒரு வங்கிக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

பாடசாலை, வங்கி பப்ளிக் பிளேசில்லை ஓக்கே….

அப்போ நீங்கள் முதல் கொடுத்த உதாரணத்தில் உள்ள அகதிகள் ஹோட்டல் எப்படி பப்ளிக் பிளேஸ் ஆகியது?

ஒரு வங்கிக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்?

சட்டங்கள் அனேக நாடுகளில் ஒரே மாதிரித் தான் இருக்கின்றன. அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் "படம் எடுப்பது தடை" என்று அறிவிப்பு இருந்ததாம். அனேகமாக அமெரிக்காவிலும் தனியார் சொத்து/பொது இடமல்லாத இடங்களில் இப்படி அறிவித்தல் வைக்கலாம். மீறினால் அது சட்டப் பிரச்சினை. பொலிஸ் "வலது சாரி மூலக் கொதியர்"😂 என்பதால் பேசாமல் விட்டிருப்பரென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

அண்மைய இலங்கை விஜயத்தின்போது...நானொரு கமராப் பித்தம் ..எப்பவும் போனும் கராவும் கையில் இருக்கும்...தங்கிய இடம் புத்தூர்...அழகிய கிராமியசூழல்...ஆடு மாடு..தோட்டம் துரவு எதுவும் தப்பாமல் படமெடுப்பு...ஒருநாள்காலை டிரக்டரில் உழுத ஒருவரை அவரின் அமுமதியில்லாமல் படமெடுத்தேன்....ஆரடா நீ என்னை படமெடுக்கிறது என்று கேட்டு அடிக்கவே வந்துவிட்டார்...நான் கனடாக்காரன்..ஊர்பார்க்க..வந்தனான் ..இதுதான் என்வீடு என்று சொன்னதால் தப்பித்தேன்...ஆனால் ..வழமையாக..யாரையுமனுமதி பெறாமல் படமெடுப்பதில்லை...இங்கு..ஆட்டையும் மாட்டையும் கேளாமல் பட்மெடுத்தமாதிரி...மனுசனை படமெடுத்து அடிவாங்கப் பார்த்தேன்..

படித்த பாடசாலை...அதிபரின் அனுமதி பெற்றே படமெடுத்தேன்.....பெண்பிள்ளைகள் ஓடி ஓடிவந்து படமெடுத்தினம் ..என்னோடையல்ல மனுசியோடை...ஆசிரியைகளும் அப்படித்தான்..அது ஒரு சந்தோசநேரம்.

இயற்கை காட்சிகளை படம் எடுப்பதற்கும், முன்பின் தெரியாத மனிதரை படம் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் படம் எடுத்த ட்ரக்றர்காரர், அந்தப் படத்தை வைத்து தவறான வழிகளில் பயன்படுத்தப் போகின்றீர்களோ என்று பயந்து இருக்கலாம். அதுகும்… இலங்கையில் புலனாய்வு பிரிவுகள் என்று மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு இருக்கும் அன்னியர்களை நினைத்து அவர் உசாராகி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

481503606_1049060747257299_3908412249201

481082106_1049060240590683_3383827362952

ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅

சட்டையினை கிழித்து விட்டிருக்கிறார்களே!

இதனை செய்தது இலங்கை காவல்துறையா? அல்லது பொது மக்களா?

மற்றவர்களை அனுமதியின்றி படமெடுத்தவரை அவமதித்து உள்ளே தள்ளியுள்ளார்கள் (அடித்தும் உள்ளார்கள்), இனி சட்டம் தன் கடமையை வேறு செய்யப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வங்கியில் நடந்தது இதுவாக இருக்கலாம்

https://www.facebook.com/Jaffna.Investigation/videos/1483275412383632

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vaasi said:

வங்கியில் நடந்தது இதுவாக இருக்கலாம்

https://www.facebook.com/Jaffna.Investigation/videos/1483275412383632

அண்ணேயின்ட பேச்சை கேட்டா இவர் புலம்பெயர்ந்த ஜெ.வி.பி ஆதரவாளர் போல இருக்கு ...நாட்டின் பொருளாதரத்தை உயர்த்த வந்த ஜெ.வி.பியின் புலம்பெயர் விசுவாசி ...சிஸ்டம் செஞ்சுக்காக அதிரடி நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து இருக்கிறார் ...அது புமராங்க் மாதிரி அவருக்கு திரும்பி வந்திட்டது...

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, putthan said:

இவர் புலம்பெயர்ந்த ஜெ.வி.பி ஆதரவாளர் போல இருக்கு ...நாட்டின் பொருளாதரத்தை உயர்த்த வந்த ஜெ.வி.பியின் புலம்பெயர் விசுவாசி ...சிஸ்டம் செஞ்சுக்காக அதிரடி நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து இருக்கிறார் ...

சாட்சாத் அதுவேதான்...சிவத்த சட்டையும் ...அப்படியே....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பாடசாலை, வங்கி பப்ளிக் பிளேசில்லை ஓக்கே….

அப்போ நீங்கள் முதல் கொடுத்த உதாரணத்தில் உள்ள அகதிகள் ஹோட்டல் எப்படி பப்ளிக் பிளேஸ் ஆகியது?

ஒரு வங்கிக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்?

4 hours ago, Justin said:

சட்டங்கள் அனேக நாடுகளில் ஒரே மாதிரித் தான் இருக்கின்றன. அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் "படம் எடுப்பது தடை" என்று அறிவிப்பு இருந்ததாம். அனேகமாக அமெரிக்காவிலும் தனியார் சொத்து/பொது இடமல்லாத இடங்களில் இப்படி அறிவித்தல் வைக்கலாம். மீறினால் அது சட்டப் பிரச்சினை. பொலிஸ் "வலது சாரி மூலக் கொதியர்"😂 என்பதால் பேசாமல் விட்டிருப்பரென நினைக்கிறேன்.

பொதுவாக நான் கந்தசாமி அண்ணை உடந்தான் இப்படி மல்லுக்கட்டவேண்டி இருக்கும்..

ஆனால் நீங்கள் இருவரும் விடய அறிவுள்ளவர்கள்.. உங்களுக்குமா வாசித்து விளங்கிக்கொள்வதில் சிக்கல்..?

பொதுவாக கருத்து என்ன என்பதை பார்க்காமல் கருத்தாடுபவர் யார் எனப்பார்த்து அவர் மீது தீர்க்கவேண்டும்🤣 என்ற அவசரத்தால் வரும் பிரச்சினை இதுவென்று நினைக்கிறேன்..

சீமான் திரிகளில் என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகும் பலர் மற்றைய திரிகளில் என்னுடன் முரண்படுபவர்களே.. அதே போல் சீமான் திரிகளில் என்னுடன் முரண்படும் பலர் மற்றைய கருத்துக்களில் என்னுடைய கருத்தை கொண்டவர்களே.. உதாரணம் கோசானும் நீங்களும்..

நாளை இன்னொரு திரியில் இவர்களுடன் அடித்துப்பிரழவும் அவர்களுடன் கட்டிக்கொஞ்சவும் முடியும்.. கருத்தை மட்டும் பார்ப்பதால்..

சரி இனி நான் முன்னர் எழுதியதை கொப்பி பண்ணி கீழ போடுறன்.. ஓணண்டி எழுதினார் என்பதை மறந்துவிட்டு முடிந்தால் மீண்டும் ஒருக்கால் வாசித்துப்பார்க்கவும்..👇

யூரோப்பில் அப்படி ஒன்றும் இல்லை.. பப்ளிக் இடத்தில் படம் பிடிப்பதை யாரும் தடை செய்ய முடியாது.. அண்மையில் கூட தீவிர வலது சாரி ஒருவர் அகதிகள் தங்கி இருந்த ஹோட்டலை பிரதான வீதியில் நின்று படம்பிடித்தவாறு போவோர் வருவோரிடம் இந்த அகதிகள் இங்கு தங்கி இருப்பதால் உள்ளூர் மக்கள் உங்களுக்கு எவ்வளவு இடையூறு என்று வெறுப்பு கருத்துக்களை பதிவிட அகதிகள் அவருடன் முரண்பட அத்துடன் அந்த அகதிகளை மெயிண்டெயின் பண்ணும் தொண்டு நிறுவன் வெள்ளை என நினைக்கிறேன் அந்த பெண்ணும் படம்பிடிக்க முடியாதென அந்த ஹொட்டலின் வாசலில் படப்பிடிப்பு தடை என்ற ஒட்டி இருந்த நோட்டிஸ் இனை காட்டி வாக்குவாதப்பட அந்த யூரியுப் ஊடகவியளாலர் சொல்கிறார் இது பப்ளிக் பிளேஸ் இங்கு நான் படம்பிடிப்பதை யாரும் தடை செய்யமுடியாது இது சட்டம் என்று வாதிட இறுதியில் பொலிஸ் அழைக்கப்பட்டு அந்த யூடியூப்பருகு சாதகமாகவே பொலிஸ் சொல்லிவிட்டு சென்றனர்..”

விசமத்துடன் விளங்க மறுப்பவர்களுக்கு இன்னும் விளக்கமாக..👇

அதாவது அவர் சொல்கிறார் வீதி பப்ளிக் பிளேஸ் நான் வீதியில் நின்றுதான் வருவோர் போவோரை படம்பிடித்து கொட்டலின் வெளிப்புறத்தைகாட்டி கேள்வி கேட்டு படம்பிடிக்கிறேன்.. வீதியில் நின்று கொட்டலை படம்பிடிக்க தடை இல்லை.. அதேபோல் வீதியால் போவோரை படம்பிடிக்கவும் தடை இல்லை.. நான் கோட்டலின் உள்ளே வந்து படம்பிடிக்கபில்லை.. இங்கே கொட்டலின் வெளிப்புறமும் போவோர் வருவோரும் பப்ளிக் பிளேஸ் இல் நின்று படம்பிடிக்கும்போது வருபவை என்பது அவர் வாதம்.. கொட்டலின் வாசலில் எழுதி இருப்பதிலும் விளக்கம் இல்லை.. இங்கே படம்பிடிக்க தடை என்று மன்றுமட்டுமே உள்ளது.. அதன் அர்த்தம் கொட்டல் உள்ளே நுழையும்போது உள்ளே படம்பிடிக்க தடையா அல்லது தெருவில் நின்று கொட்டலை படம்பிடிக்க தடையா என்ற தெளிவு இல்லை.. ஆனால் அந்த கொட்டல் பெண்ணின் வாதம் போட்டோ ஒட்ட தடை என்று எழுதி இருப்பதால் நீ அந்த பகுதியில் றோட்டில் நின்றுகூட எடுக்கமுடியாது என்பதும் றோட்டில் போவோர் வருவோரை அவர்கள் அனுமதி இன்றி போட்டோ எடுக்க முடியாது என்பதும்..

ஆனால் அந்த யூ டியூப்பர் வாதம் நீ கதவில் என்ன உன் நெத்தியில் ஒட்டி இருந்தாலும் பொது இடத்தில் இருந்து வீதியோரம் இருக்கும் கொட்டலையோ கடைகளையோ பில்டிங்குகளையோ படம்பிடிப்பதை தடை செய்யமுடியாது அது சட்டம் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் அதேபோல் வீதியால் போவோர் வருவோரிடமும் அனுமதி கேட்க வேடியதில்லை அதுவும் சட்டம் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் என்பது..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்று.. (இது எனது அனுமானமே.)கூகிளில் கூட வீதியால் போகும்போது இருமருங்கும் உள்ள கட்டடங்களை படம் எடுத்து போடுவார்கள் தெளிவாக ஆனால் ராணுவ மற்றும் விசேட இடங்களை மறைத்துவிடுவார்கள்.. நான் நினைக்கிறேன் பப்ளிக் பிளேசில் நின்றுகூட ஒரு இடத்தை படம்பிடிக்க கூடாதென்றால் அதற்கு விசேட அனுமதிபெற்று அந்த நகரசபை நோட்டீசை வாசலில் ஒட்டவேண்டு என்று.. வெறுமனேஅந்த கொட்டல் வாசலில் ஒட்டியதுபோல் போட்டோ எடுக்க தடை என்ற நோட்டீஸ் பொது இடத்தில் நின்று படம்பிடிப்பத்தை தடுக்க போதாது என்று..அது பிறைவேற் உள்பக்கதுக்கு ஓகேயாக இருக்கும் என்று நினைக்கிறேன்( இது என் அனுமானம் மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

சட்டையினை கிழித்து விட்டிருக்கிறார்களே!

இதனை செய்தது இலங்கை காவல்துறையா? அல்லது பொது மக்களா?

மற்றவர்களை அனுமதியின்றி படமெடுத்தவரை அவமதித்து உள்ளே தள்ளியுள்ளார்கள் (அடித்தும் உள்ளார்கள்), இனி சட்டம் தன் கடமையை வேறு செய்யப்போகிறது.

தெரியவில்லை வசி.

காவல் துறை என்றால்... மாவு கட்டு போட்டிருப்பார்கள். 😀

பொது மக்கள் தான்... (இங்கிலாந்து) சட்டையை கிழித்து இருப்பார்கள். 😂

அது சரி... சண்டையில் கிழியாத சட்டையா... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vaasi said:

வங்கியில் நடந்தது இதுவாக இருக்கலாம்

https://www.facebook.com/Jaffna.Investigation/videos/1483275412383632

இதே ஆள்தான்.... வங்கியிலும் போய், குழப்பம் விளைவித்திருக்கின்றார்.

நீங்கள் இணைத்த காணொளியை... மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் பார்த்து,

712 பேர் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

கருத்து தெரிவித்தவர்களின் 95 வீதமானவர்கள், இவரை திட்டி எழுதியுள்ளார்கள்.

லண்டன் அங்கிள்... சொத்தக் காசில், சூனியம் வைத்த கதையாகி விட்டது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பொதுவாக நான் கந்தசாமி அண்ணை உடந்தான் இப்படி மல்லுக்கட்டவேண்டி இருக்கும்..

ஆனால் நீங்கள் இருவரும் விடய அறிவுள்ளவர்கள்.. உங்களுக்குமா வாசித்து விளங்கிக்கொள்வதில் சிக்கல்..?

பொதுவாக கருத்து என்ன என்பதை பார்க்காமல் கருத்தாடுபவர் யார் எனப்பார்த்து அவர் மீது தீர்க்கவேண்டும்🤣 என்ற அவசரத்தால் வரும் பிரச்சினை இதுவென்று நினைக்கிறேன்..

சீமான் திரிகளில் என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகும் பலர் மற்றைய திரிகளில் என்னுடன் முரண்படுபவர்களே.. அதே போல் சீமான் திரிகளில் என்னுடன் முரண்படும் பலர் மற்றைய கருத்துக்களில் என்னுடைய கருத்தை கொண்டவர்களே.. உதாரணம் கோசானும் நீங்களும்..

நாளை இன்னொரு திரியில் இவர்களுடன் அடித்துப்பிரழவும் அவர்களுடன் கட்டிக்கொஞ்சவும் முடியும்.. கருத்தை மட்டும் பார்ப்பதால்..

சரி இனி நான் முன்னர் எழுதியதை கொப்பி பண்ணி கீழ போடுறன்.. ஓணண்டி எழுதினார் என்பதை மறந்துவிட்டு முடிந்தால் மீண்டும் ஒருக்கால் வாசித்துப்பார்க்கவும்..👇

“யூரோப்பில் அப்படி ஒன்றும் இல்லை.. பப்ளிக் இடத்தில் படம் பிடிப்பதை யாரும் தடை செய்ய முடியாது.. அண்மையில் கூட தீவிர வலது சாரி ஒருவர் அகதிகள் தங்கி இருந்த ஹோட்டலை பிரதான வீதியில் நின்று படம்பிடித்தவாறு போவோர் வருவோரிடம் இந்த அகதிகள் இங்கு தங்கி இருப்பதால் உள்ளூர் மக்கள் உங்களுக்கு எவ்வளவு இடையூறு என்று வெறுப்பு கருத்துக்களை பதிவிட அகதிகள் அவருடன் முரண்பட அத்துடன் அந்த அகதிகளை மெயிண்டெயின் பண்ணும் தொண்டு நிறுவன் வெள்ளை என நினைக்கிறேன் அந்த பெண்ணும் படம்பிடிக்க முடியாதென அந்த ஹொட்டலின் வாசலில் படப்பிடிப்பு தடை என்ற ஒட்டி இருந்த நோட்டிஸ் இனை காட்டி வாக்குவாதப்பட அந்த யூரியுப் ஊடகவியளாலர் சொல்கிறார் இது பப்ளிக் பிளேஸ் இங்கு நான் படம்பிடிப்பதை யாரும் தடை செய்யமுடியாது இது சட்டம் என்று வாதிட இறுதியில் பொலிஸ் அழைக்கப்பட்டு அந்த யூடியூப்பருகு சாதகமாகவே பொலிஸ் சொல்லிவிட்டு சென்றனர்..”

விசமத்துடன் விளங்க மறுப்பவர்களுக்கு இன்னும் விளக்கமாக..👇

அதாவது அவர் சொல்கிறார் வீதி பப்ளிக் பிளேஸ் நான் வீதியில் நின்றுதான் வருவோர் போவோரை படம்பிடித்து கொட்டலின் வெளிப்புறத்தைகாட்டி கேள்வி கேட்டு படம்பிடிக்கிறேன்.. வீதியில் நின்று கொட்டலை படம்பிடிக்க தடை இல்லை.. அதேபோல் வீதியால் போவோரை படம்பிடிக்கவும் தடை இல்லை.. நான் கோட்டலின் உள்ளே வந்து படம்பிடிக்கபில்லை.. இங்கே கொட்டலின் வெளிப்புறமும் போவோர் வருவோரும் பப்ளிக் பிளேஸ் இல் நின்று படம்பிடிக்கும்போது வருபவை என்பது அவர் வாதம்.. கொட்டலின் வாசலில் எழுதி இருப்பதிலும் விளக்கம் இல்லை.. இங்கே படம்பிடிக்க தடை என்று மன்றுமட்டுமே உள்ளது.. அதன் அர்த்தம் கொட்டல் உள்ளே நுழையும்போது உள்ளே படம்பிடிக்க தடையா அல்லது தெருவில் நின்று கொட்டலை படம்பிடிக்க தடையா என்ற தெளிவு இல்லை.. ஆனால் அந்த கொட்டல் பெண்ணின் வாதம் போட்டோ ஒட்ட தடை என்று எழுதி இருப்பதால் நீ அந்த பகுதியில் றோட்டில் நின்றுகூட எடுக்கமுடியாது என்பதும் றோட்டில் போவோர் வருவோரை அவர்கள் அனுமதி இன்றி போட்டோ எடுக்க முடியாது என்பதும்..

ஆனால் அந்த யூ டியூப்பர் வாதம் நீ கதவில் என்ன உன் நெத்தியில் ஒட்டி இருந்தாலும் பொது இடத்தில் இருந்து வீதியோரம் இருக்கும் கொட்டலையோ கடைகளையோ பில்டிங்குகளையோ படம்பிடிப்பதை தடை செய்யமுடியாது அது சட்டம் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் அதேபோல் வீதியால் போவோர் வருவோரிடமும் அனுமதி கேட்க வேடியதில்லை அதுவும் சட்டம் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் என்பது..

யோவ் சீமான் திரிக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஐயா.

நீங்கள் மேலே கொடுத்த கொட்டை எழுத்தில் உள்ள விளக்கத்தை பெறவே அந்த கேள்வியை கேட்டேன்.

What is a public place, is a matter of fact, not a matter of law and it’s very fact-specific.

ஒரு இடம் பொது இடமா இல்லையா என்பது குறித்த சம்பவத்தின் தரவுகள் அடிப்படையானது. சட்ட விதிகள் அடிப்படையிலானது அல்ல.

உண்மையில் நீங்கள் இந்த கேள்விக்கு விடை தேடப்போய் பல primary sources இல் வாசித்துள்ளீர்கள் 👏.

கீழே ஒரு கட்டுரை கொடுக்கிறேன், caselaw உதாரணத்தோடு. பத்திரபடுத்தி வைக்கவும்.

யூகேயில் drink driving, driving without insurance, MOT. Parking போல விடயங்களில் ஏதும் பிரச்சனை வந்தால் இது உதவும்.

Stephen Oldham Solicitors
No image preview

Road or other public place: Where do driving laws apply?

Super market car park – is it a road or other public place You have to be in a road or other public place to commit most driving offences. There are a few exceptions like keeping a vehicle with no...

இங்கே பாடசாலை பொது இடமா?

அநேக நாட்களில் இல்லை. ஆனால் ஒரு விளையாட்டு போட்டியன்று கதவுகளை திறந்து விட்டு, அனைவரும் வருக, ஆதரவு தருக என போஸ்டர் ஒட்டி இருந்தால் - அந்த நிகழ்வுக்கு மட்டும் அது பொது இடமாகலாம். அப்போதும் மைதானம் மட்டும்தான். கழிப்பறை அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 06:21, தமிழ் சிறி said:

481503606_1049060747257299_3908412249201

481082106_1049060240590683_3383827362952

ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅

இந்தக்காட்சியை யாரும் வீடியோ எடுக்கவிலலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

இந்தக்காட்சியை யாரும் வீடியோ எடுக்கவிலலையோ?

யாரோ எடுத்தபடியாற்தான் நாமும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." இவர் தன் முதுகுச்சட்டையை கவனிக்க வாய்ப்பில்லை, களட்டிப்பார்க்கும் வரை.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

இந்தக்காட்சியை யாரும் வீடியோ எடுக்கவிலலையோ?

வீடியோ… எனது கண்ணில் படவில்லை புலவர்.

ஆனால் நிச்சயம் எடுக்கப்பட்டிருக்கும் என்றே நம்புகின்றேன்.

இது எனது சொந்த ஊரில் நடந்த ஒரு சம்பவம் அவர் பெண் பிள ளைகளை படம் எடுக்க வில்லை இல்ல மெய்வல்லுனர் போட்டியைதான் ஒளி பதிவு செய்ய முற்பட்டவர் அவரும் அதே பாடசாலை மாணவன் தான் கொஞ்சம் மூல கொதிகாறன் ்யேர்மனியில் இருந்து பிரித்தானியாவில் வசிப்பவர் முத்த பிள்ளை யேர்மனியிலும் இரண்டாவது பெண் பிள்ளை பிரித்தானியில் ஒரு பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பிலும் கடைசி மகனும் பல்கலைகழகத தில் படிக்கினம்்பாடசாலை சம்பவம் எல்லாம் முடிந்து மூன்று நாட்கள் பிறகே கைதானவர் இதற்கு அவருடைய மனைவி தான் காரணம் என்று ஊரில் கதைக்கிறார்கள் அவர் மனைவியின் ******* ***** பிரித்து வாழ்கிறார் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு மனைவியின் தம்பி கட்டின புது வீட்டுக்குஅந்த அக்கா போறதற்கு முதல் தற்பாதுகாப்பிற்காக கொடிகாம காவல் துறைக்கு 5 லட்சம் கொடுக்க பட்டு ஒளிபதிவு பிரச்சனை உயிர் பிக்க பட்டதாம்

Edited by நிழலி

நானும் வரணி வித்தியாலயம் சாவகச்சேரி இந்து கல்லூரி என்ற இரு பாடசாலைகளில் கல்வி கற்று 2000 முற்பகுதியில் லண்டனுக்கு அகதியானவன் நான் படிக்கிற காலத்திலும் சரி பின்பும் மெய் வல்லுனர் போட்டிகளை ஒளிப்பதிவில் பார்த்து இருக்கின்றேன் அப்பொழுது எல்லாம் இவ்வாறன பிரச்சனை எழ வில்லை இப்பொழுது மட்டும் ஏன்??

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 01:09, பாலபத்ர ஓணாண்டி said:

பொதுவாக நான் கந்தசாமி அண்ணை உடந்தான் இப்படி மல்லுக்கட்டவேண்டி இருக்கும்..

ஆனால் நீங்கள் இருவரும் விடய அறிவுள்ளவர்கள்.. உங்களுக்குமா வாசித்து விளங்கிக்கொள்வதில் சிக்கல்..?

பொதுவாக கருத்து என்ன என்பதை பார்க்காமல் கருத்தாடுபவர் யார் எனப்பார்த்து அவர் மீது தீர்க்கவேண்டும்🤣 என்ற அவசரத்தால் வரும் பிரச்சினை இதுவென்று நினைக்கிறேன்..

சீமான் திரிகளில் என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகும் பலர் மற்றைய திரிகளில் என்னுடன் முரண்படுபவர்களே.. அதே போல் சீமான் திரிகளில் என்னுடன் முரண்படும் பலர் மற்றைய கருத்துக்களில் என்னுடைய கருத்தை கொண்டவர்களே.. உதாரணம் கோசானும் நீங்களும்..

நாளை இன்னொரு திரியில் இவர்களுடன் அடித்துப்பிரழவும் அவர்களுடன் கட்டிக்கொஞ்சவும் முடியும்.. கருத்தை மட்டும் பார்ப்பதால்..

சரி இனி நான் முன்னர் எழுதியதை கொப்பி பண்ணி கீழ போடுறன்.. ஓணண்டி எழுதினார் என்பதை மறந்துவிட்டு முடிந்தால் மீண்டும் ஒருக்கால் வாசித்துப்பார்க்கவும்..👇

“யூரோப்பில் அப்படி ஒன்றும் இல்லை.. பப்ளிக் இடத்தில் படம் பிடிப்பதை யாரும் தடை செய்ய முடியாது.. அண்மையில் கூட தீவிர வலது சாரி ஒருவர் அகதிகள் தங்கி இருந்த ஹோட்டலை பிரதான வீதியில் நின்று படம்பிடித்தவாறு போவோர் வருவோரிடம் இந்த அகதிகள் இங்கு தங்கி இருப்பதால் உள்ளூர் மக்கள் உங்களுக்கு எவ்வளவு இடையூறு என்று வெறுப்பு கருத்துக்களை பதிவிட அகதிகள் அவருடன் முரண்பட அத்துடன் அந்த அகதிகளை மெயிண்டெயின் பண்ணும் தொண்டு நிறுவன் வெள்ளை என நினைக்கிறேன் அந்த பெண்ணும் படம்பிடிக்க முடியாதென அந்த ஹொட்டலின் வாசலில் படப்பிடிப்பு தடை என்ற ஒட்டி இருந்த நோட்டிஸ் இனை காட்டி வாக்குவாதப்பட அந்த யூரியுப் ஊடகவியளாலர் சொல்கிறார் இது பப்ளிக் பிளேஸ் இங்கு நான் படம்பிடிப்பதை யாரும் தடை செய்யமுடியாது இது சட்டம் என்று வாதிட இறுதியில் பொலிஸ் அழைக்கப்பட்டு அந்த யூடியூப்பருகு சாதகமாகவே பொலிஸ் சொல்லிவிட்டு சென்றனர்..”

விசமத்துடன் விளங்க மறுப்பவர்களுக்கு இன்னும் விளக்கமாக..👇

அதாவது அவர் சொல்கிறார் வீதி பப்ளிக் பிளேஸ் நான் வீதியில் நின்றுதான் வருவோர் போவோரை படம்பிடித்து கொட்டலின் வெளிப்புறத்தைகாட்டி கேள்வி கேட்டு படம்பிடிக்கிறேன்.. வீதியில் நின்று கொட்டலை படம்பிடிக்க தடை இல்லை.. அதேபோல் வீதியால் போவோரை படம்பிடிக்கவும் தடை இல்லை.. நான் கோட்டலின் உள்ளே வந்து படம்பிடிக்கபில்லை.. இங்கே கொட்டலின் வெளிப்புறமும் போவோர் வருவோரும் பப்ளிக் பிளேஸ் இல் நின்று படம்பிடிக்கும்போது வருபவை என்பது அவர் வாதம்.. கொட்டலின் வாசலில் எழுதி இருப்பதிலும் விளக்கம் இல்லை.. இங்கே படம்பிடிக்க தடை என்று மன்றுமட்டுமே உள்ளது.. அதன் அர்த்தம் கொட்டல் உள்ளே நுழையும்போது உள்ளே படம்பிடிக்க தடையா அல்லது தெருவில் நின்று கொட்டலை படம்பிடிக்க தடையா என்ற தெளிவு இல்லை.. ஆனால் அந்த கொட்டல் பெண்ணின் வாதம் போட்டோ ஒட்ட தடை என்று எழுதி இருப்பதால் நீ அந்த பகுதியில் றோட்டில் நின்றுகூட எடுக்கமுடியாது என்பதும் றோட்டில் போவோர் வருவோரை அவர்கள் அனுமதி இன்றி போட்டோ எடுக்க முடியாது என்பதும்..

ஆனால் அந்த யூ டியூப்பர் வாதம் நீ கதவில் என்ன உன் நெத்தியில் ஒட்டி இருந்தாலும் பொது இடத்தில் இருந்து வீதியோரம் இருக்கும் கொட்டலையோ கடைகளையோ பில்டிங்குகளையோ படம்பிடிப்பதை தடை செய்யமுடியாது அது சட்டம் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் அதேபோல் வீதியால் போவோர் வருவோரிடமும் அனுமதி கேட்க வேடியதில்லை அதுவும் சட்டம் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் என்பது..

இன்னும் சீமான் திரி எfபெக்ரில் இருப்பதால் உங்களுக்கு நான் குறிப்பிட்டது விளங்கவில்லை என நினைக்கிறேன்😂.

கோசான் சொன்னது போலவே, எது பொது இடம், எது தனியார் இட எல்லை என்பதை சட்டம், வரையறுக்க இரண்டு அளவு கோல்களைப் பாவிக்கிறது: 1. reasonable expectation of privacy, 2. the intent of suspected violator.

எனவே, தெருவில் நின்று ஒரு தனியார் இடத்தின் வாசலை படமெடுத்தால் "photography/vieography is prohibited" என்ற கட்டிட ஓனரின் விதியை மீறுவதாகத் தான் சட்டம் எடுத்துக் கொள்ளும். இதை உங்கள் உதாரணத்தில் பொலிஸ் பின்பற்றவில்லை என்பதால் அது தான் சட்ட நியமம் - legal standard என்று புரிந்து கொண்டமை உங்கள் பிரச்சினை. அதை நான் மறுக்க இயலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனங்களுக்கு பந்தா காட்டாட்டில் பத்தியப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/61555822700733/videos/993748038819254

உள்ளாடையை காணொளியில் காட்டும் sk கிருஸ்ணா குடும்பம்.

சீனித் தம்பி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.