Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+-+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். 

போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 

இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால் போலந்து நாட்டின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் ஆகும். 

தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

https://www.hirunews.lk/tamil/399212/அனைத்து-ஆண்களுக்கும்-கட்டாய-இராணுவ-பயிற்சி-டொனால்ட்-டஸ்கின்-அதிரடி-அறிவிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள் ஆனால் போர் என்று வந்துவிட்டால் ஆண் மட்டும் தான் சாக வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகிடி said:

ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள் ஆனால் போர் என்று வந்துவிட்டால் ஆண் மட்டும் தான் சாக வேண்டுமாம்.

தல கேட்டான்யா ஒரு கேள்வி.. இதேபோல் உக்ரைனிலும் பெண்கள் நாட்டைவிட்டு வரலாம் ஆனால் ஆண்கள் வரமுடியாது.. இதில் எங்க சம உரிமை உள்ளது..? காலகாலமாக ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது..

றோட்டு போடும் வேலைக்கு ஒரு பெண்களும் வரமாட்டார்கள் சுப்பர்மாக்கெட்டில் ஸ்ரோர் பக்கம் ஒரு பெண்கலும் வேலை செய்யமாட்டார்கள் ஆனால் காசு பே பன்னுமிடத்தில் வரிசையாக கதிரைய போட்டு உடம்பு நோகாமல் பூரா பெண்கள்தான் உக்காந்திருக்கிறார்கள் ஒரு ஆணையும் காணம்.. அரச அலுவலக்ங்களுக்கு போனால் பெண்கள் மட்டும்தான்.. உடம்பு நோகாத தொழில் எல்லாம் பெண்களுக்கு உடம்பு பெண்ட் எடுக்கும் தொழில் எல்லாம் ஆண்களுக்கா..? இதில் எங்க சம உரிமை இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓணாண்டி அவர்கள் முதலில் பத்துமாதம் கரு சுமந்து சுக பிரசவம் ஒன்றை நடத்தி காட்ட்டுவார்.

அதன் பின் பெண்களையும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Donald-Tusk.jpg?resize=750%2C375&ssl=1

அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு!

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்  (Donald Tusk) தெரிவித்துள்ளார்.

போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும்  அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர் எனவும் ஆனால் போலந்தில் 2 இலட்சம்  இராணுவ வீரர்களே உள்ளனர் எனவும்,  தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானத்தின் நோக்கம் எனவும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1424501

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஓணாண்டி அவர்கள் முதலில் பத்துமாதம் கரு சுமந்து சுக பிரசவம் ஒன்றை நடத்தி காட்ட்டுவார்.

அதன் பின் பெண்களையும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கலாம்.

இதை சொல்லி சொல்லியே பெண்கள் காலா காலமாக தப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது எத்தனை பெண்கள் C section செய்யாமல் பிள்ளை பெறுகின்றர்கள். Pain அளவு மிகக் குறைந்த அளவில் தான் இன்று பிள்ளைப் பேறுகள் நடக்கிறது. இயற்கை பிரசவம் என்றாலும் epidural முலம் வலி நிவாரணி எடுத்து விட்டுத் தான் மிச்சம் எல்லாம்.

பெண்களுக்கு சம உரிமை வழங்கத் தயார். ஆனால் போர் என்று வரும்பொழுது அவர்களும் சாக ரெடி ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண் ஈஈயம் ஒரு பம்மாத்து வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பகிடி said:

ஒரு வைத்தியரான நீங்களா இப்படி எழுதுவது.

சீ செக்சன் புண் ஆற வரும் வேதனை கொஞ்ச நஞ்சமா?

எபிடியூரல் கொடுக்கும் முதுகு வலி உட்பட்ட பிரச்சனைகள்?

அத்தோடு post natal, pre natal depression ?

எமக்கு 50 வருடத்துக்கு ஒருக்கா யுத்தம் வரும் சண்டைக்கு போக வேணும்.

அவர்கள் பிறப்பதே பிள்ளைபேறு எனும் யுத்தத்துக்காகவே.

ஆனால் பெண்களை ஆட்சேர்ப்பில் முதல் ரவுண்டில் சேர்க்காமைக்கு பல காரணங்கள் உள.

  1. ஒரு ஆண் இறப்பதை விட, ஒரு பெண் இறந்தால் அது அந்த நாட்டி சனத்தொகை வளர்ச்சியில் பல மடங்கு தாக்கத்தை தரும்.

    யுத்தத்தில் இறக்கும் ஒரு பெண்ணுடன் 3,4 எதிர்கால சிப்பாய்களும்/ பிரசைகளும் சாகிறார்கள்.

  2. முன்னரங்கை விட, பின்னரங்கில் பெண்கள் வினைதிறனான செயல்படுவர்.

  3. இந்த வித்தியாசம் கட்டாயமாக சேர்க்கப்படும் காலாட்படையினருக்கு மட்டுமே. தாதிகள், வைத்தியர், பைலட், மாலுமிகள் பெண்களும் முன்னரங்கு போவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

பெண்களுக்கு சம உரிமை வழங்கத் தயார். ஆனால் போர் என்று வரும்பொழுது அவர்களும் சாக ரெடி ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண் ஈஈயம் ஒரு பம்மாத்து வேலை.

பெண்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும் என அவர்கள் உங்களிடம் கேட்டார்களா? அவர்களின் உரிமையை நீங்கள் பறித்து நிறைய சேமித்து வைத்துள்ளீர்களா? அதை கண்டிசன் அடிப்படையில் இப்போது வழங்க போகின்றீர்களா?

இந்த உலகின் பிறந்த அனைவருக்கும் சம உரிமை இயற்கையிலேயே உள்ளது. அதை கெளரவிக்க தெரிந்தாலே போதும், நாம் civilization அடைந்த மனிதராகி விடுவோம்.

யுத்த காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கி அவர்களை தற்கொலை போராளிகளாக கூட பாவித்து விட்டு விட்டு யுத்தம் முடிந்த பின்னர் அவர்களுக்கு இயல்பாக இருக்கும் சம உரிமையை கேள்விக்குள்ளாக்கும் இனம் தமிழர்கள் மட்டும் தான் போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீ செக்சன் புண் ஆற வரும் வேதனை கொஞ்ச நஞ்சமா?

எபிடியூரல் கொடுக்கும் முதுகு வலி உட்பட்ட பிரச்சனைகள்?

அத்தோடு post natal, pre natal depression ?

எமக்கு 50 வருடத்துக்கு ஒருக்கா யுத்தம் வரும் சண்டைக்கு போக வேணும்.

எதுவுமே இல்லை என்று சொல்லவில்லை,

ஆனால் புண் பொதுவாக ஒரு மாதத்தில் ஆறி விடும்,

epidural கொடுக்கும் முதுகு வலி பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும்.தவிர அந்த நோவினப் போக்கவும் வலி நிவாரணிகள் உண்டு

இதனால்த் தான் பெண்களால் மேலும் பிள்ளைகள் பெற முடிகின்றது.

அடுத்த விஷயம் ஆண்களை விட பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி அதிகம், அது இயற்கையாக அமைந்தது.

புருஷன் போருக்குப் போகாமல் வீட்டில் உதவியாக இருந்தால் மனைவிக்கு depression பிரச்சனைகள் குறைவு.

ஆனால் இதை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு ஆண்களை மட்டுமே கொலைக்களம் அனுப்புவது தவறு என்கின்றேன்.

பெண்கள் நாட்டின் சனத் தொகை க்கு முக்கியம், ஆகவே பிள்ளைப் பெறும் வயதுடைய பெண்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது.

உங்கள் நியாயப்படி ஆண்கள் கட்டாயம் போரில் சாக வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் இத்தனை பிள்ளைகள் பெற வேண்டும் என்றாவது சட்டம் கொண்டு வர வேண்டும்

பெண்கள் பிறப்பதே பிள்ளைப் பேறு என்னும் போருக்காகவே என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லிய உங்களுக்கு நன்றி. இதை கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று பேசும் இன்றைய பெண்ணியப் போராளிகள் ஏற்க மாட்டார்கள்

தவிர பெண்கள் பின் அரங்கில் நன்றாக செயல்படுவார்கள் என்பதை ஏற்கின்றேன். ஆகவே பெண்களுக்கு கட்டாய தாதிப் பயிற்சி போன்றவையாவது கொடுக்கப்பட வேண்டும்.

என்னை பொறுத்தவரை ஆணுக்கு, பெண் சமம் என்பதை நான் அதன் literal meaning இல் பார்ப்பதில்லை.

எல்லாமனிதர்களும் சமம் என்பதை நாம் ஏற்றாலும் சாதி வேறுபாட்டை களைய நாமே இட ஒதுக்கீடு எனும் positive discrimination ஐ ஆதரிக்கிறோம்.

பால் சமநிலை என்பது தனிமனிதராக ஒரு ஆண் செய்வதை பெண்ணும், ஒரு பெண் செய்வதை ஆணும் செய்யும் செய்யவிரும்பின், அதற்குரிய சுதந்திரத்தை கொடுப்பது.

இதை பொது வேலை பகுப்புகளான பிள்ளை பெறல், யுத்தத்துக்கு போதல் போன்றனவற்றோடு போட்டு குழப்பி அடிக்க தேவையில்லை.

பிள்ளை பெறுவதில் 99.9% பெண்கள்தான் ஈடுபடுவர்.

யுத்தத்துக்கு போவதில் >90% ஆண்கள்தான் ஈடுபடுவர்.

இதை காரணம் காட்டி field engineer ஆக, அல்லது artillery gunner ஆக ஒரு பெண் பிள்ளை வர விரும்பினால் -அதை தடுக்க கூடாது.

இதுதான் பால் சமநிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில் பொதுவாக ஆண்கள் எல்லோருக்கும் இராணுவ பயிற்சி கட்டாயமாக இருந்தது.அந்த கட்டாய பயிற்சியை அண்மைக்காலங்களில் நாடுகளுக்கேற்ப நீக்கியிருந்தார்கள்.அதே நேரத்தில் பெண்களுக்கு கட்டாய மருத்துவ பயிற்சிகளும் இருந்தது.

மற்றும்படி இயற்கை ரீதியாக என்றுமே பெண்கள் ஆண்களுக்கு சமமாக வாழ முடியாது.சம உரிமைகளுடன் யாவரும் வாழலாம். இயற்கையில் சமம். அது நடைபெறாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் புலிகள் அமைப்பில் போரடிய பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை இல்லை அல்லது கழட்டி வைத்துவிட்டு போராடினார்களாக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு எங்கிருந்து வந்தது உடல் வலிமை எங்கிருந்து வந்தது ஓர்மம் வீரம்?

தங்கள் நாடு இன்னலில் இருந்தபோது தன்னந்தனியாக பனகுற்றிகளையும் தென்னங்குற்றிகளையும் தறித்து தோழில் சுமந்து கொண்டுபோய் பங்கர் கட்டி போராடியவர்கள் அவர்கள்..

இதேபோல் குர்தீஷ் பெண்போராளிகள்..

அவர்களால் எல்லாம் முடிகிறது அப்போ மற்றவர்கள் நடிப்புத்தானே..?

யாருக்கு உடல்வலிமை இல்லை என்று கதைவிடுகிறார்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

பால் சமத்துவம் என்பது உரிமைகளில் மட்டுமல்ல, பொறுப்புகளிலும் சமமாக இருக்க வேண்டும்... பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதோடு, அவர்களும் சமூக பொறுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதே நியாயமானது... ஆண்கள் மட்டும் போர் கடமையை ஏற்க வேண்டும் என்பதும், பெண்கள் மட்டும் பிள்ளை பெற்றல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதும் சமத்துவம் இல்லை…

சமூக பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளை ஆண்களும், பெண்களும் சமமாக ஏற்க வேண்டும்…

ஆண்கள் பிள்ளை பெறமுடியாது என்றாலும் குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்புகளில் சமமாக பங்கு பெற வேண்டும் எனபது சட்டம், தப்பி ஓடமுடியாது.. பொறுப்பை பகிர்ந்தே ஆகவேண்டும்... பால் சமத்துவம் என்றால், உரிமைகளிலும் பொறுப்புகளிலும் சமமாக இருப்பதே உண்மையான சமத்துவம் என்று நான் நம்புகிறேன்…

பகிடி சொல்லியதுபோல் பெண்கள் பின் அரங்கில் நன்றாக செயல்படுவார்கள் என்றால் பெண்களுக்கு கட்டாய தாதிப் பயிற்சிபோன்றவையாவது கொடுக்கப்பட வேண்டும்… பெண்கள் போர் மையத்தில் மட்டுமல்ல, மருத்துவம், தகவல் தொடர்பு, தளபதி பதவிகள் போன்ற பல பிரிவுகளில் பங்கு பெறலாம்... ஆகக்குறைந்தது ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கேற்ற வகையில் பங்கிடலாம்... தப்பி ஓடக்குடாது..

போரில் பங்கேற்பது ஆண்களின் கடமை என்று மட்டும் வரையறுப்பது பால் சமத்துவத்துக்குப் புறம்பானது... பால் சமத்துவம் என்பது உரிமைகளின் சமத்துவத்தையும், பொறுப்புகளின் சமத்துவத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்..

மேலும், போர் கடமை என்பது அனைத்து குடிமக்களுக்கும் பொது கடமையாக இருக்க வேண்டும்... பெண்கள் தங்களது திறமைகளின் அடிப்படையில் போர் மையத்தில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த மற்றும் தலைமையிடப் பொறுப்புகளில் பங்குபெறுவதும் சாத்தியமே….

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கோசான் சொல்லுவதுபோல் ஒரு பெண் இறந்தால் எதிர்கால குழந்தை பிறப்பே தடைப்படும் என்பது தவறானது.. ஒரு ஆண் இறப்பு குறைவாக பாதிக்கும் என்ற கருத்து பால் சமத்துவத்திற்கு எதிரானது…

ஒரு ஆண் இறப்பின் தாக்கத்தையும் கணிக்க வேண்டியது அவசியம்..

சனத்தொகை வளர்ச்சி என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் பங்களிப்பாலும் அமைகிறது..

பிறப்பு விகிதத்துக்கு ஆண் மற்றும் பெண் இருவரும் அவசியம்.. ஆண்கள் இறப்பதால் திருமண விகிதம், குடும்ப அமைப்பு, மற்றும் குழந்தை பெறும் வாய்ப்பு குறையக்கூடும். எனவே, ஆண்களின் இறப்பையும் சமமான பார்வையில் கணிக்க வேண்டும்..

உலக அளவில் சனத்தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்தினை மட்டும் சார்ந்ததல்ல.. மருத்துவ வசதி, குழந்தை இறப்பு விகிதம் குறைவு, கல்வி நிலை உயர்வு, பெண்களின் சமூக இடம் ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன..

சனத்தொகை வளர்ச்சி ஒரு பெண்ணின் இறப்பால் மட்டுமே பாதிக்கப்படும் என்பது தவறான புரிதல்..

சனத்தொகை வளர்ச்சி என்பது ஆண் மற்றும் பெண் இருவரின் பங்களிப்பினாலும் அமைகிறது.. குழந்தை பெற்றெடுப்பது ஒரு பெண்ணின் உடல் திறனை மட்டும் சார்ந்ததல்ல; சமூக நிலை, பொருளாதார நிலை, சுகாதார வசதிகள், மற்றும் அரசாங்கம் வழங்கும் ஆதரவு ஆகியவை மிகுந்த தாக்கம் அளிக்கின்றன..

பெண்களின் இறப்பை குழந்தை பெறுவைதை காட்டி பெரிதாகவும் ஆண்களின் இறப்பு சிறியதாகவும் கருதப்பட வேண்டும் என்பது தவறானது…

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் எனும் அமைப்பு செயலிழக்கும் நிலையினை நோக்கி நகர்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, இரஸ்சியாவின் குறி தாம் என கூறிக்கொண்டு போலந்து அரசு தன்னை பலப்படுத்தி வருகிறது, ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பிற்கு வெளியே தன்னை பலப்படுத்தி வரும் ஒரே நாடு போலந்து, நேட்டோவின் வகிபாகம் எதிர்காலத்தில் இல்லாது போகும் பட்சத்தில் போலந்து ஒரு அதிகார மையமாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம்.

போலந்து இந்த நீண்ட கால நிலைப்பாடு அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எனும் நிலைப்பாடாகும்.

உக்கிரேன் போரிற்கு பின்னரான ஐரோப்பா என்பது மிகவும் பலவீனமான உள்முரண்பாடு நிறைந்ததாக காணப்பட போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி , இன்டெர்நாஷனல் மென்ஸ் டே எப்பவாம் வருது ..?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

அது சரி , இன்டெர்நாஷனல் மென்ஸ் டே எப்பவாம் வருது ..?

ஒடுக்கப்படும் அல்லது துன்பப்படும் பெண்களுக்கு என்று உருவாக்கப்பட்ட சட்டங்களை பயன்படுத்து சமூகத்தில் மேல் நிலையில் இருக்கும்பெண்களால் ஆண்கள் மேல் நிகழும் ஒடுக்குமுறைகளில் இருந்து என்றைக்கு விடுதலை கிடைக்குதோ அன்றைக்குத்தான் மென் டே ஆண்களுக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 22:04, goshan_che said:

ஓணாண்டி அவர்கள் முதலில் பத்துமாதம் கரு சுமந்து சுக பிரசவம் ஒன்றை நடத்தி காட்ட்டுவார்.

அதன் பின் பெண்களையும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கலாம்.

ராமா நீயுமா?

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இதையே சொல்லி சொல்லி??

அல்லது பெண்கள் போர்க்குணம் அற்ற?????

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈழத்தில் புலிகள் அமைப்பில் போரடிய பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை இல்லை அல்லது கழட்டி வைத்துவிட்டு போராடினார்களாக்கும்..

16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவர்களுக்கு எங்கிருந்து வந்தது உடல் வலிமை எங்கிருந்து வந்தது ஓர்மம் வீரம்?

தங்கள் நாடு இன்னலில் இருந்தபோது தன்னந்தனியாக பனகுற்றிகளையும் தென்னங்குற்றிகளையும் தறித்து தோழில் சுமந்து கொண்டுபோய் பங்கர் கட்டி போராடியவர்கள் அவர்கள்..

இதேபோல் குர்தீஷ் பெண்போராளிகள்..

அவர்களால் எல்லாம் முடிகிறது அப்போ மற்றவர்கள் நடிப்புத்தானே..?

யாருக்கு உடல்வலிமை இல்லை என்று கதைவிடுகிறார்கள்..

உங்களுக்கு சுதந்திர பறவைகள் வரலாறு அது எப்படி பெண்புலிகளாக மாறியது என்பது மறந்து விட்டதா?

1987 இல் காட்டுக்குள் போன பின் தான் புலிகள் இயக்கம் முதன்முதலாக ஆள்பற்றாகுறை அனுபவித்தது.

அதன் போதே பெண்களை போருக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை அவர்கள் தளர்த்தி கொண்டார்கள்.

Necessity is the mother of all inventionச். தேவையே சகல மாற்றங்களினதும்/கண்டுபிடிப்புகளினதும் தாய்.

போலந்திலும் இந்த தேவை உணரப்படும் போது இந்த நிலமை மாறும்.

*பெண்களை சண்டைக்கு முதலில் அனுப்பியது ஈபி. காரைநகர் முகாம் மீதான தோல்விதாக்குதல். அதில் ஒரு பெண் போராளி சாவு என நினைக்கிறேன்.

அப்போ அந்த முடிவை புலிகள் விமர்சித்தார்கள் (கேணல் கிட்டு).

15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பால் சமத்துவம் என்பது உரிமைகளில் மட்டுமல்ல, பொறுப்புகளிலும் சமமாக இருக்க வேண்டும்... பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதோடு, அவர்களும் சமூக பொறுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதே நியாயமானது... ஆண்கள் மட்டும் போர் கடமையை ஏற்க வேண்டும் என்பதும், பெண்கள் மட்டும் பிள்ளை பெற்றல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதும் சமத்துவம் இல்லை…

உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை.

சமத்துவம் - தனிநபராக தேரும் உரிமை.

Societal division of labour சமூகத்தின் வேலை பங்கு பிரிப்பு - நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்து கலாச்சாரம் வேறுபடும்.

இந்த பொதுமைக்குள், அதற்கு எதிராக போகும் தனி நபர்களை போகவிடுவதே சமத்துவம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

போரில் பங்கேற்பது ஆண்களின் கடமை என்று மட்டும் வரையறுப்பது பால் சமத்துவத்துக்குப் புறம்பானது... பால் சமத்துவம் என்பது உரிமைகளின் சமத்துவத்தையும், பொறுப்புகளின் சமத்துவத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்..

இது யாரோ தலையில் பெயிண்ட் டப்பாவை கவிழ்த, பிரா போடாமைதான் பெண்ணியம் என சொல்லும் ஆளிடம் கற்று கொண்ட, சமத்துவம் பற்றிய மிக தவறான புரிதலும் அதன் பால் ஏற்பட்ட விமர்சனமும்.

சமத்துவம் என்பது அனைவரையும் ஒரே விதமாக நடத்த வேண்டும் என்பதால், கொக்கு தேனீர் கொடுக்கும் நீண்ட குவளையில், நாய்க்கும் தேனீர் கொடுப்பதல்ல.

15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேலும் கோசான் சொல்லுவதுபோல் ஒரு பெண் இறந்தால் எதிர்கால குழந்தை பிறப்பே தடைப்படும் என்பது தவறானது.. ஒரு ஆண் இறப்பு குறைவாக பாதிக்கும் என்ற கருத்து பால் சமத்துவத்திற்கு எதிரானது…

சிம்பிள் கணிதம்.

10 பெண்களும் ஒரு ஆணும் இருந்தால் அத்தனை பெண்களும் கர்பவதி ஆகலாம்.

10 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால் ஒரு பெண்மட்டுமே கர்பவதி ஆகலாம்.

இது ஒவ்வொரு இனமும்/நாடும் தன் இருப்பை பேண செய்வது.

இது பாலின சமத்துவத்தை விட பெரிய, இருப்பு சம்பந்தபட்ட விடயம்.

15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிறப்பு விகிதத்துக்கு ஆண் மற்றும் பெண் இருவரும் அவசியம்.. ஆண்கள் இறப்பதால் திருமண விகிதம், குடும்ப அமைப்பு, மற்றும் குழந்தை பெறும் வாய்ப்பு குறையக்கூடும். எனவே, ஆண்களின் இறப்பையும் சமமான பார்வையில் கணிக்க வேண்டும்..

உலக அளவில் சனத்தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்தினை மட்டும் சார்ந்ததல்ல.. மருத்துவ வசதி, குழந்தை இறப்பு விகிதம் குறைவு, கல்வி நிலை உயர்வு, பெண்களின் சமூக இடம் ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன..

சனத்தொகை வளர்ச்சி ஒரு பெண்ணின் இறப்பால் மட்டுமே பாதிக்கப்படும் என்பது தவறான புரிதல்..

சனத்தொகை வளர்ச்சி என்பது ஆண் மற்றும் பெண் இருவரின் பங்களிப்பினாலும் அமைகிறது.. குழந்தை பெற்றெடுப்பது ஒரு பெண்ணின் உடல் திறனை மட்டும் சார்ந்ததல்ல; சமூக நிலை, பொருளாதார நிலை, சுகாதார வசதிகள், மற்றும் அரசாங்கம் வழங்கும் ஆதரவு ஆகியவை மிகுந்த தாக்கம் அளிக்கின்றன..

பெண்களின் இறப்பை குழந்தை பெறுவைதை காட்டி பெரிதாகவும் ஆண்களின் இறப்பு சிறியதாகவும் கருதப்பட வேண்டும் என்பது தவறானது…

மூச்சுவிடாமல் எழுதிய இத்தனைக்கும் பதில் மேலே உள்ள இலகு கணிதம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ராமா நீயுமா?

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இதையே சொல்லி சொல்லி??

அல்லது பெண்கள் போர்க்குணம் அற்ற?????

இல்லை அண்ணை. இது தனியே இயலுமை சம்பந்தபட்ட விடயம் மட்டும் இல்லை.

ஏன் எந்த சமூகமும் (புலிகளும்) எடுத்த எடுப்பில் பெண்களை போருக்கு அனுப்புவதில்லை என்பதற்க்கான காரணங்களை மேலே சொல்லி உள்ளேன்.

உலகில் பெரும்பாலான ஆண்களிடம் நீ போருக்கு போகிறாயா, உன் மனைவி மகள் போகட்டுமா? என கேட்டால் அநேகரின் பதில் என்னவாக இருக்கும்?

அந்த பதிலின் அடிப்படைதான் அரசுகள் முதலில் ஆண்களை கூப்பிடுவது.

ஆனால் தேவை வரும் போது இருபாலாரும் அழைக்கப்படுவர்.

புலிகளும், இஸ்ரேலும் உதாரணங்கள்.

20 hours ago, குமாரசாமி said:

இயற்கையில் சமம். அது நடைபெறாது.

நீங்கள் சொன்ன மிகுதியில் முழு உடன்பாடே.

யானை மரத்தை முறிக்கும். குரங்கு மரம்தாவும்.

குரங்கால் மரத்தை முறிக்க முடியாது. ஆனால் யானையால் மரம்தாவ முடியாது.

ஆகவே சமமின்மை உள்ளது. ஆனால் ஒரு குழுவில் இல்லாதது, மற்ற குழுவில் இருக்கும்.

அதே போல் சில குரங்குகளுக்கு மரத்தை முறிக்க வேண்டும் என்றால் அதை பொதுமையை காட்டி தடுக்க கூடாது.

இதுதான் சமத்துவம்.

14 hours ago, vasee said:

போலந்து இந்த நீண்ட கால நிலைப்பாடு அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எனும் நிலைப்பாடாகும்.

போலந்து தற்போது வைத்திருக்கும் இராணுவ தளபாடங்கள் அமெரிக்காவுடையது. விலை கொடுத்து வாங்கியதால் இவை எல்லாவற்றையும் கண்டபடி பாவிக்க முடியாது. உதாரணமாக போலாந்து வைத்திருக்கும் அமெரிக்க F16 F35 போர் விமானங்களைத் தான் விரும்பிய தாக்குதல்களுக்குப் பாவிக்க முடியாது. அந்த விமானத்தின் திட்டமிட்ட பறப்புப் பாதை அமெரிக்க பாதுகாப்பு அரிகாரிகளுக்குப் பிடிக்காவிட்டால் விமானம் தரையை விட்டுக் கிழம்பாது.

இதனால்தான் ஐரோப்பா தனித்துவமான தனது இராணுவத்தை உருவாக்க முயல்கிறது. இதற்குப் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தங்கள் நாடு இன்னலில் இருந்தபோது தன்னந்தனியாக பனகுற்றிகளையும் தென்னங்குற்றிகளையும் தறித்து தோழில் சுமந்து கொண்டுபோய் பங்கர் கட்டி போராடியவர்கள் அவர்கள்..

இதேபோல் குர்தீஷ் பெண்போராளிகள்..

அவர்களால் எல்லாம் முடிகிறது அப்போ மற்றவர்கள் நடிப்புத்தானே..?

யாருக்கு உடல்வலிமை இல்லை என்று கதைவிடுகிறார்கள்..

யேர்மனியிலும் பெண் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களின் தொகை 24,000க்கு மேல். விகிதாசாரத்தின்படி யேர்மனிய இராணுவத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்.

33 minutes ago, இணையவன் said:

ஐரோப்பா தனித்துவமான தனது இராணுவத்தை உருவாக்க முயல்கிறது. இதற்குப் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உண்மை. யேர்மனி 500 பில்லியன் யூரோக்களை தனது பாதுகாப்புக்காக ஒதுக்க உள்ளது. ட்ரம்ப்தான் ஆட்சிக்கு வருவார் என்பதை ஏற்கனவே கணித்திருந்ததால், சென்ற வருடமே யேர்மனி இராணுவத்துக்கான பயிற்சிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரித்திருந்தது.

தாங்கள்தான் அடுத்த இலக்கு என சுவீடனிலும் ஒரு கருத்து இருக்கிறது என இன்றைய யேர்மனிய பத்திரிகைகளில் செய்தி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, இணையவன் said:

போலந்து தற்போது வைத்திருக்கும் இராணுவ தளபாடங்கள் அமெரிக்காவுடையது. விலை கொடுத்து வாங்கியதால் இவை எல்லாவற்றையும் கண்டபடி பாவிக்க முடியாது. உதாரணமாக போலாந்து வைத்திருக்கும் அமெரிக்க F16 F35 போர் விமானங்களைத் தான் விரும்பிய தாக்குதல்களுக்குப் பாவிக்க முடியாது. அந்த விமானத்தின் திட்டமிட்ட பறப்புப் பாதை அமெரிக்க பாதுகாப்பு அரிகாரிகளுக்குப் பிடிக்காவிட்டால் விமானம் தரையை விட்டுக் கிழம்பாது.

இதனால்தான் ஐரோப்பா தனித்துவமான தனது இராணுவத்தை உருவாக்க முயல்கிறது. இதற்குப் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் எனும் கட்டமைப்பினை உடைத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சிறிய ஐரோப்பிய நாடுகள் பாதிப்புள்ளாகலாம்.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தி கொண்டது தற்போதய புதிய அரசின் கொள்கை என கருதவில்லை, உக்கிரேனிற்கு ட்ரம்ப் அரசு ஆயுத உதவி முதல் ஆட்சிக்காலத்தில் செய்துள்ளது, அமெரிக்க கொள்கை தடம்மாறும் போது வரும் புதிய அரசு தடாலடியாக தமது படையினரை விலக்கி கொள்வதும், ஆதரவினை விலக்கிகொள்வதும் நடைமுறையில் நிகழும் விடயம்.

போலந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையே ஏற்கனவே வெளித்தெரியும் முரண்பாடுகள் கடந்த காலத்தில் இருந்துவருகிறது, தற்போதய நிலையினை போலந்து தனக்கு சாதகமாக பயன்படுத்த விளைகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.