Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-50561cdd540242c80aaa2e01491558

நம் கண்கள் நம் எதிரே இருப்பவைகளை மட்டுமே காணும் எனவே கண்களால் காண்பது பொய் இரண்டாவது படத்தில் சிங்கம் தன் குட்டியை விழுங்குவது போல் தோன்றும் ஆனால் முதல் படத்தில் அது கவி கொண்டு செல்கிறது. நாம் எல்லா நேரத்திலும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் ஏற்படப்போகும் நிகழ்வுகள் அதைக் கொண்டு நாம் நிகழ்காலத்தில் இருக்கிறோம் காலையில் வேலைக்கு செல்லும்போது இருக்கும் பரபரப்பு இரவு வீட்டிற்கு வரும் போது இருப்பதில்லை காலையில் பார்க்கும்போது அனைவரும் வேலைக்கு செல்வதாகவே தோன்றும் இரவு பார்க்கும்போது அனைவரும் வீட்டுக்கு செல்வதாகவே தோன்றும் ஆனால் இரவு நேர ஷிப்ட் முடிந்து காலையில் வீட்டிற்கு செல்பவர்கள் கலைந்த ஆடையோடு முகத்தில் சோர்வுடன் இருப்பார்கள் அதை நம் கண்கள் உற்று நோக்காது ஏனெனில் நாம் பரபரப்பாக வேலைக்கு செல்கிறோம் அவர்களும் பரபரப்பாக தான் செல்வார்கள் என்பது நம் மூளை உடனடியாக எடுக்கும் ஒரு முடிவு அதை அலசி ஆராய நேரமோ அல்லது அதற்கான தெளிவு அந்த நேரத்தில் நமக்கு இல்லை. எனவே தான் நம் முன்னோர்கள் கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று கூறியிருக்கின்றார்கள்.

நாம் ஒரு அறைக்குள் தொலைபேசியை எடுக்க நுழைகிறோம் அப்பொழுது உங்களது பார்ட்னர் உங்கள் தொலைபேசியை எடுத்து கீழே வைத்து வைத்து விட்டு போகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் பார்வைக்கு உங்கள் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்பதை அவர் பார்க்கிறாரோ என்று ஒருகணம் நினைக்கத் தோணும

ஆனால் அந்த சூழ்நிலையையும் நிகழ்ச்சியையும் ஆராயும்போதுஆராயும் போது அவர் உங்கள் தொலைபேசி எடுத்து விட்டு எடுத்து வைத்துவிட்டு அவரது தொலைபேசியை சார்ஜ் செய்துவிட்டு போயிருக்கிறார் என்பது தெரியும்.

sddefault.jpg

  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, alvayan said:

அநேகமாக சுத்தந்திரதினத்துக்கு கொடி பிடித்தபடியால் தப்பிவிடுவார்...பருத்திதுறை நகரசபை முதல்வராகவும் வரலாம்...யார் கண்டது

பார்த்தேன் ..முகம்காட்டி அழுவது உதவியின் தாய்...இந்த யோலி ..காரர் இவரைவிட பயங்கர சுத்து...

1 hour ago, ஏராளன் said:

இந்த கருத்துக்காக தான் விருப்பக் குறியிட்டேன்.

2 hours ago, நிலாமதி said:

ஆரம்பத்தில் நேர்மையாக செயல்பட்டவர் பணத்தைக் கண்டதும் புத்தி தடுமாறிவிட்ட்து . காசு அனுப்பியவர்கள் கண் காணித்து இருக்கணும். காசு அனுப்பியவர்கள் காசுபெற்ற்வர்களை கேட்டு இருக்கணும். யூ துபே காரர் எல்லாம்ஆடிபோய்விட்டார்கள். சிலர் சாட்டு போக்கு சொல்லி ஒதுங்க நினைக்கிறார்கள். சில காலம் காணொளி வராது என்று நழுவுகிறார்கள்.

" தேன் எடுப்பவன் பிறங்கையை நக்குவான்" அதாவது பணத்தோடு புழங்குபவன் தனக்கும் கொஞ்சம் கையகப்படுத்துவான் . என்று பெரிசுகள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். இனியாவது காசு அனுப்புவார்கள் சிந்திக்கணும்.

4 hours ago, யாயினி said:

இல்லை..ஒருவர் வீடியோ எடுப்பவர்.மற்றவர்கள் பக்கத்தில் நிற்கும் இருவரும் கிருஸ்ணாவோடு சேர்த்து நால்வர்.27 லட்சம் வாங்கிக் கொண்டவருக்கு ஒரு 25 வயதுக்குள் தான் இருக்கும்.அவரை தடுப்பில் எல்லாம் வைத்திருக்க இயலாது (கண்பார்வை இல்லை.).

வன்னியில் நடந்த பிரச்சனையில் அகப்பட்டு பார்வை இளந்த இன்னுமொருவர் தேவன் என்று முன்ளாள் போராளியாம்..அவர் தான் இப்போ அழுது , அழுது கிருஸ்ணாவுக்கு ஆதரவாக வீடியோடு போடுறார்..காரணம்...அவரை யாருமே பார்க்க மாட்டம் என்று வெளியே விட்டு விட்டார்கள்.

இவர் வேறு சிலரோடு சேர்ந்து இருந்த காப்பகத்தில் பணம் களவாடப்பட்டதில் முக்கியமானவர் என்று எழுதுகிறார்கள்..அதனாலயே இவரை காப்பத்திலிருந்தும் மற்றும் சகோதரர்களும் பார்க்காமல் விட்டார்கள்.

அதன் பின் தான் கிருஸ்ணாவைத் தொடர்ப்பு கொண்டு இப்போ வெளிநாட்டிலிருந்து ஊரோடு போய் இருக்கும் ஆண் பிள்ளை ஒருவர் பொறுப்பெடுத்து வைத்து பார்க்கிறார்..இந்த தேவன் என்றவருக்கும் கிருஸ்ணா 3லடம்சம் குடுத்தது..தேவன் கிருஸ்ணாவை விட பல மடங்கு பொய், புரட்டு..

.இது ஏணையோருக்கு எழுதிக் கொள்ளும் சின்னத் தகவல்.என்னைப் பொறுத்த மட்டில் ஒன்று சொல்லி விட்டு போய் விடுகிறேன்.

இதுவரைக்கும் நான் பொதுவில்லை.என் சார்ந்த எந்த விடையத்தையும் அலட்டிக் கொள்வதில்லை..அது எனக்கு தேவையும் இல்லை..நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்..அப்படி இருக்கையில் எனக்கு யார் மேலும் பொறாமையோ, எரிச்சலோ வர வேண்டிய அவசியமில்லை..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்..

கிருஸ்ணாவின் விடையத்தில் எனக்கு கிருஸ்ணாவில் கூட கோவம் இல்லை.அவர் அதி மிஞ்சிய பணத்தை கண்டதும் புதுப் பணக்காரர் ஆகி கொஞ்சம் ஆட்டம் கூடி விட்டது..அந்த அம்மா பாவம்.இவ்வளவு காலமும் வீடியோவுக்கு வாறதே இல்லை..அவா செய்தது சரி தானே..

எல்லாரும் பார்க்க‌ வேண்டிய‌ 6 நிமிட‌ காணொளி

கிருஷ்னாவின் உண்மை முக‌த்தை ந‌ங்கு அறிந்த‌ இந்த‌ ச‌கோத‌ர‌ன் வ‌டிவாக‌ சொல்லி இருக்கிறார்...............கிருஷ்னா எப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ப‌ர் என்ப‌த‌ இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ

ஆர‌ம்ப‌த்தில் நான் இந்த‌ திரியில் கிருஷ்னா ஒரு மாபியா என்று எழுத‌ சில‌ர் ந‌ம்பி இருக்க‌ மாட்டின‌ம் அத‌ற்கான‌ உண்மை காணொளி இது................யூடுப்புக்கு வெளியால் கிருஷ்னாவின் ர‌வுடிச‌ம் அதிக‌ம்😡😡😡😡😡😡😡..................

இது கிருஷ்னான்ட‌ தாய்க்கு தெரியுமா , த‌ன்ட‌ ம‌க‌னுக்கு வாய்க்கை வாழைப் ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌த் தெரியாது என்று தான் சொல்லுவா😁

வ‌டிவாய் பாருங்கோ காணொளிய‌ இன்னும் இதை ப‌ல‌ருக்கு தெரிய‌ப் ப‌டுத்துங்கோ அப்ப‌ தான் சில‌ருக்கு ந‌ல்ல‌ புத்தி வ‌ரும்.........................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்யும் சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் அக்கா.

பண இழப்பு என கருதாதீங்க அக்கா, உங்கள் மனத்திருப்திக்கு உதவி செய்தீர்கள். தவறான கைகளுக்கு போகாது பார்த்துக்கொள்ளுங்கள்.

முடிந்தளவு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்.

அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்க முயலுங்கள்.

உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.

2011/2012 காலங்களில் இருந்து உதவி ஒழுங்குகள் சிலவற்றில் ஈடுபட்ட அனுபவத்தில் யாரிடமும் 100% சரியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

நெடுங்கேணியில் கிணறு கட்ட முப்பதாயிரம் கேட்டு உதவ வெளிக்கிட்டு கட்டி முடிக்கையில் 90ஆயிரம் செலவளித்து முடிந்தது. கணவர் வவுனியா சிறையில் இருக்க 5 பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் இருந்த பெண்மணிக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணத்தை அனுப்புவோம். அவவிற்கு வீட்டுத் திட்டமும் கிடைத்திரு்தது என ஞாபகம். கிணறு கட்ட குடுத்த காசை வீட்டு வேலைக்கும் எடுத்துப்போடுவார். இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு தோட்டம் செய்ய ஏற்கனவே தோண்டப்பட்ட கிணறை கட்டி முடிக்க லண்டனில் வசித்த உறவுகள் உதவினார்கள்.

நான் எழுதிய விதம் சிலருக்கு குழப்பத்தை தந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது..அப்படி இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.எனக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..நாட்டில் என்ன நடக்கிறது என்று மட்டும் அவ்வப்போது நேரம் இருக்கும் போது அவும் இரவு நித்திரை குழம்பி விட்டால் மட்டும் பொழுதை போக்குவதற்கு பார்ப்பேன்..இங்கு யாரும் எதுவும் கேட்டவில்லை. எனது உதவி திட்டம் சுனாமியோடு ஆரம்பித்து அவ்வப்போது நம்பிக்கையானவர்கள் ஊடாகத் தான் செய்து வந்தேன்.மற்றப்படி சொல்வதற்கு ஒன்றுமில்லை.உங்களை யாரும் எதிலும் இழுத்து எழுதவில்லை..சோ.பேசாமலிருப்பது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

"முள்ளை அகற்ற இன்னொரு முள்" என்பது போல, மேலும் மேலும் யூ ரியூப் அலட்டலாளர்களை இங்கே இணைத்து அறிமுகம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த லூசுப் பட்டாளங்களின் வீடியோக்களை மேலும் பகிர்ந்து சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும் உருவாக்க முடியாது நண்பர்களே. இவர்களை அடித்துப் பூட்டி விட்டு பேசாமல் வேறு வேலையைப் பாருங்கள்! தாமாகவே மறைந்து விடுவர்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

விட்டால் நீங்க‌ள் சொல்லுவிங்க‌ள் போல‌

வீர‌ப் பைய‌ன்

அல்வ‌ய‌ன்

யாயினி இவ‌ர்க‌ள் பொறாமையில் யாழில் எழுதுகின‌ம் என்று.......................

😂

உறவே எனது வழி நீங்கள் இங்கே சிபாரிசு செய்தது தான் தெரிந்தவர் உறவினருக்கு காசு அனுப்பி கொடுக்க சொல்வது அல்லது வங்கி கணக்கிற்கு நேரடியாகவே அனுப்பிவிடுவது யுரியுப்பருக்கு கொடுத்து ஏன் கொடுக்கிறார்கள் என்பது விளங்கவில்லை ஆனால் அப்படி பலர் செய்கின்றார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிலாமதி said:

ஆரம்பத்தில் நேர்மையாக செயல்பட்டவர் பணத்தைக் கண்டதும் புத்தி தடுமாறிவிட்ட்து . காசு அனுப்பியவர்கள் கண் காணித்து இருக்கணும். காசு அனுப்பியவர்கள் காசுபெற்ற்வர்களை கேட்டு இருக்கணும். யூ துபே காரர் எல்லாம்ஆடிபோய்விட்டார்கள். சிலர் சாட்டு போக்கு சொல்லி ஒதுங்க நினைக்கிறார்கள். சில காலம் காணொளி வராது என்று நழுவுகிறார்கள்.

" தேன் எடுப்பவன் பிறங்கையை நக்குவான்" அதாவது பணத்தோடு புழங்குபவன் தனக்கும் கொஞ்சம் கையகப்படுத்துவான் . என்று பெரிசுகள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். இனியாவது காசு அனுப்புவார்கள் சிந்திக்கணும்.

தரமான கருத்து. 👍

நாம் எமது கடையை மூடினால் அவர்களும் தமது கடையை தாமாகவே மூடுவர்.

பனங்காய் பணியாரம் சுடுவது எப்படி என தங்கள் காணொளிகளை காட்டட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

எல்லாரும் பார்க்க‌ வேண்டிய‌ 6 நிமிட‌ காணொளி

கிருஷ்னாவின் உண்மை முக‌த்தை ந‌ங்கு அறிந்த‌ இந்த‌ ச‌கோத‌ர‌ன் வ‌டிவாக‌ சொல்லி இருக்கிறார்...............கிருஷ்னா எப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ப‌ர் என்ப‌த‌ இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ

ஆர‌ம்ப‌த்தில் நான் இந்த‌ திரியில் கிருஷ்னா ஒரு மாபியா என்று எழுத‌ சில‌ர் ந‌ம்பி இருக்க‌ மாட்டின‌ம் அத‌ற்கான‌ உண்மை காணொளி இது................யூடுப்புக்கு வெளியால் கிருஷ்னாவின் ர‌வுடிச‌ம் அதிக‌ம்😡😡😡😡😡😡😡..................

இது கிருஷ்னான்ட‌ தாய்க்கு தெரியுமா , த‌ன்ட‌ ம‌க‌னுக்கு வாய்க்கை வாழைப் ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌த் தெரியாது என்று தான் சொல்லுவா😁

வ‌டிவாய் பாருங்கோ காணொளிய‌ இன்னும் இதை ப‌ல‌ருக்கு தெரிய‌ப் ப‌டுத்துங்கோ அப்ப‌ தான் சில‌ருக்கு ந‌ல்ல‌ புத்தி வ‌ரும்.........................................

நன்றி வீரப்பையா.....செய்தி போட்டாலும்...கருத்து எழுதினாலும்...காழ்ப்புணர்ச்சி ..பொறாமை என்ற பதங்களல் சாடப்படுகின்றோம்...இங்கு நான் செய்தது...வீரகேசரி, ஆதவன் போன்ற பத்திரிகைகளீல் இருந்து செய்தியை இணைப்போர் போல் நானும் இந்த காணொளியை இணைத்தேன்...இதற்கான கருத்துக்கள் வரும் என பார்ப்பதற்கே...இதனை வைத்து சம்பந்தப்பட்ட நபரின்மீது எரிச்சல் பொறமை என்றூ கருத்தே வந்தது....எனக்கு அவர்களை தனிப்பட்ட ரீதியில் தெரியவே தேரியாது...கனடாவில் 35 வருடம் இருக்கும் நான் அவரைப்பார்த்து எரிச்சல் படும் கீழ்நிலைக்கு செல்லவில்லை...இதனவிட படம்காட்டி ..பாடம்படி என்ற இழிநிலை உடையவனும் நானல்ல...இந்த விடையத்தை நீண்டநாள் பார்த்து ...நடப்பது அநியாயம் என்றுணர்ந்தபடியாலேயே இதனை இணைத்தேன்...நன்றி ..

  • கருத்துக்கள உறவுகள்

திட்டம் போட்டு திருடிற கூட்டம்… திருடிக்கொண்டே இருக்கும்….

அதற்கு திட்டமில்லாமல் பலியாகும் கூட்டம்…. பலியாகி கொண்டே இருக்கும்…

புலம்பெயர் மொக்கராய் பார்த்து திருந்தாவிட்டால்….

திருட்டை ஒழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

நன்றி வீரப்பையா.....செய்தி போட்டாலும்...கருத்து எழுதினாலும்...காழ்ப்புணர்ச்சி ..பொறாமை என்ற பதங்களல் சாடப்படுகின்றோம்...இங்கு நான் செய்தது...வீரகேசரி, ஆதவன் போன்ற பத்திரிகைகளீல் இருந்து செய்தியை இணைப்போர் போல் நானும் இந்த காணொளியை இணைத்தேன்...இதற்கான கருத்துக்கள் வரும் என பார்ப்பதற்கே...இதனை வைத்து சம்பந்தப்பட்ட நபரின்மீது எரிச்சல் பொறமை என்றூ கருத்தே வந்தது....எனக்கு அவர்களை தனிப்பட்ட ரீதியில் தெரியவே தேரியாது...கனடாவில் 35 வருடம் இருக்கும் நான் அவரைப்பார்த்து எரிச்சல் படும் கீழ்நிலைக்கு செல்லவில்லை...இதனவிட படம்காட்டி ..பாடம்படி என்ற இழிநிலை உடையவனும் நானல்ல...இந்த விடையத்தை நீண்டநாள் பார்த்து ...நடப்பது அநியாயம் என்றுணர்ந்தபடியாலேயே இதனை இணைத்தேன்...நன்றி ..

இதுக்கை நான் நேர‌த்தை ஒதுக்க‌ கார‌ன‌ம்

எம் உற‌வுக‌ள் இப்ப‌டியான‌ க‌ள்ள‌க் கூட்ட‌த்திட‌ம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஏமாற‌க் கூடாது என்ர‌ ப‌டியால்.................நான் டென்மார்க்கு வ‌ந்து 26வ‌ருட‌ம் ஆக‌ போகுது , இதுவ‌ரை சிறு துளி பொறாமை கூட‌ ப‌ட்ட‌து கிடையாது ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மேல் இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌👍..........................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இதுக்கை நான் நேர‌த்தை ஒதுக்க‌ கார‌ன‌ம்

எம் உற‌வுக‌ள் இப்ப‌டியான‌ க‌ள்ள‌க் கூட்ட‌த்திட‌ம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஏமாற‌க் கூடாது என்ர‌ ப‌டியால்.................நான் டென்மார்க்கு வ‌ந்து 26வ‌ருட‌ம் ஆக‌ போகுது , இதுவ‌ரை சிறு துளி பொறாமை கூட‌ ப‌ட்ட‌து கிடையாது ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மேல் இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌👍..........................

அதே...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அதே...நன்றி

Dk vanni யூடுப்ப‌ரையும் சிறையில் அடைத்து விட்டின‌மாம் இல‌ங்கை காவ‌ல்துறை......................

இவ‌ர் மேலையும் ப‌ல‌ குற்ற‌ச் சாட்டுக‌ள் எழுந்து இருக்காம்

இவ‌ரை ப‌ற்றி என‌க்கு ஒன்றும் பெரிதாக‌ தெரியாது..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

Dk vanni யூடுப்ப‌ரையும் சிறையில் அடைத்து விட்டின‌மாம் இல‌ங்கை காவ‌ல்துறை......................

இவ‌ர் மேலையும் ப‌ல‌ குற்ற‌ச் சாட்டுக‌ள் எழுந்து இருக்காம்

இவ‌ரை ப‌ற்றி என‌க்கு ஒன்றும் பெரிதாக‌ தெரியாது..............................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

ச‌மூக‌ சேவ்வை செய்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் வால் வெட்டு ர‌வுடிக‌ள் போல் தெரியுது..................ஆர‌ம்ப‌த்தில் நான் இவ‌ரை ந‌ல்ல‌வ‌ர் என‌ நினைத்தேன்................இவ‌ரும் கோடி காசை ஆட்டைய‌ போட்ட‌வ‌ர் என்று காணொளி வெளியிடுகின‌ம்...................

ஏழை ம‌க்க‌ளை காட்டி ஏன் இப்ப‌டி ஊத்தை வேலை செய்கின‌ம்

இப்ப‌டியான‌ ஆட்க‌ள் ச‌முக‌ சேவ்வை செய்ய‌ த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது....................

இவ‌கிரின் குள‌று ப‌டிக‌ளை சொல்ல‌த் தான் இவ‌ர் ர‌வுடிக‌ளை அனுப்பி வெட்டி இருக்கிறார்😡.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

இது எங்கு போய் முடியுமோ...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

இது எங்கு போய் முடியுமோ...

ஊரில் கூலி வேலைக்கு போனால் கூட‌ 1500ரூயாயில் இருந்து 2000ரூபாய் வ‌ரை ஒரு நாளுக்கு உழைக்க‌லாம்

யாழ்பாண‌த்தில் 92வ‌ய‌து பாட்டி க‌ச்சான் வித்து த‌ன‌து வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்தின‌து , அந்த‌ பாட்டிய‌ யாரோ ஒரு யூடுப்ப‌ர் வீடியோ பிடிச்சு போட‌ அந்த‌ப் பாட்டிக்கு நிறைய‌ உத‌வி கிடைச்ச‌து இந்த‌ வ‌ருட‌ம்

பாட்டிக்கு புது க‌ட்டில் புது பான் அதோட‌ உடுப்புக‌ள் , கை செல‌வுக்கு 1ல‌ச்ச‌ம் ரூபாய் கொடுக்க‌ , அடுத்த‌ நாளே பாட்டிக்கு கொடுத்த‌ ஒரு ல‌ச்ச‌ம் ரூபாய‌ யாரோ க‌ள‌வெடுத்து போட்டின‌ம்...................அடுத்த‌வேட்ட‌ கை ஏந்தாம‌ தானும் த‌ன்ட‌ தொழிலும் என்று வாழ்ந்த‌ பாட்டிக்கு , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ஒரு குடும்ப‌ம் அம்ம‌ட்டு உத‌வியை செய்ய‌ , பாட்டி வேலையில் நிக்கும் போது பாட்டியின் வீடு புகுந்து அந்த‌ ஒரு ல‌ச்ச‌ம் காசையும் ஆட்டைய‌ போட்ட‌ கூட்ட‌ங்க‌ள் ஊரில் இருப்ப‌தை நினைத்து வேத‌னை ப‌டுகிறேன்.....................

ஈழ‌ ம‌ண்ணில் காசுக்காக‌ கொலையும் செய்ய‌ த‌ய‌ங்காதுக‌ள்😞................................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

ஊரில் கூலி வேலைக்கு போனால் கூட‌ 1500ரூயாயில் இருந்து 2000ரூபாய் வ‌ரை ஒரு நாளுக்கு உழைக்க‌லாம்

2000க்கு மேல தான் தொடக்கம்.

அத்தோடு காலை பிற்பகல் பணிஸ் தேநீர் மதியம் சாப்பாடு.

இடைஇடை தொலைபேசி உரையாடல்.

எல்லாம் பார்த்துக் கொண்டு கம் என்று இருக்கணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வீரப் பையன்26 said:

அந்த காசு கொடுத்தகாட்சியை வீடியோ போடாமல் விட்டிருந்தால்கூட பாட்டி அந்த காசை அனுபவித்திருப்ப...அல்லது ...வீடியோவிற்கு மட்டும்தான் காசோ...யாரறிவார்...நாட்டு நிலமையில் பலதை சிந்திக்க வேண்டியிருக்குது

24 minutes ago, ஈழப்பிரியன் said:

2000க்கு மேல தான் தொடக்கம்.

அத்தோடு காலை பிற்பகல் பணிஸ் தேநீர் மதியம் சாப்பாடு.

இடைஇடை தொலைபேசி உரையாடல்.

எல்லாம் பார்த்துக் கொண்டு கம் என்று இருக்கணும்.

நேர்மையான உழைப்பு என்றபடியால் விட்டிடுங்க சார்

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, alvayan said:

அந்த காசு கொடுத்தகாட்சியை வீடியோ போடாமல் விட்டிருந்தால்கூட பாட்டி அந்த காசை அனுபவித்திருப்ப...அல்லது ...வீடியோவிற்கு மட்டும்தான் காசோ...யாரறிவார்...நாட்டு நிலமையில் பலதை சிந்திக்க வேண்டியிருக்குது

நேர்மையான உழைப்பு என்றபடியால் விட்டிடுங்க சார்

உண்மை தான்

பாட்டிக்கு ஒரு ல‌ச்ச‌ம் கொடுத்த‌ காணொளியை காசு அனுப்பின‌வ‌ர்க‌ளுக்கு காட்டி விட்டு பொது வெளியில் போடாம‌ விட்டு இருந்தால் அந்த‌ காசை பாட்டி த‌ன‌து தேவைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி இருக்கும்

92வ‌ய‌திலும் த‌ன்ட‌ கையால் உழைச்சு சாப்பிட்டு வாழ‌னும் என்ர‌ ம‌ன‌சை ஆண்ட‌வ‌ர் பாட்டிக்கு கொடுத்த‌ ப‌டியால் 92வ‌ய‌திலும் நோய் நொடி இல்லாம‌ பாட்டி வாழுது.............................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

2000க்கு மேல தான் தொடக்கம்.

அத்தோடு காலை பிற்பகல் பணிஸ் தேநீர் மதியம் சாப்பாடு.

இடைஇடை தொலைபேசி உரையாடல்.

எல்லாம் பார்த்துக் கொண்டு கம் என்று இருக்கணும்.

வ‌வுனிய‌வில் வ‌சிக்கும் ஜ‌யா ப‌ல‌ ஏக்க‌ரில் தோட்ட‌ம் செய்கிறார்

வேலைக்கு ஆட்க‌ள் தேவையாம் , வேலைக்கு வார‌ ஆட்க‌ள் இர‌ண்டு நாள் தொட‌ர்ந்து வ‌ருவாங்க‌ள் பிற‌க்கு சொல்ல‌ம‌ கொள்ளாம‌ வேலைக்கு வ‌ர‌மாட்டின‌ம் , எப்ப‌டி இவையை ந‌ம்பி நான் தோட்ட‌த்தை கொண்டு ந‌ட‌த்த‌ முடியும் என்று அந்த‌ வ‌ய‌து போன‌ ஜ‌யா வேத‌னை ப‌ட்டார்...............அப்ப‌டி இருந்தும் த‌ன‌க்கு வேலைக்கு ஆட்க‌ள் இன்னும் தேவையாம்........................எங்க‌டை ஈழ‌ ம‌க்க‌ளுக்கு உழைச்சு முன்னுக்கு வ‌ர‌த் தெரியாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........................மாத‌த்தில் 31 நாளில் 27 நாள் த‌ன்னும் வேலை செய்தால் 54ஆயிர‌ம் ரூபாய் உழைக்க‌லாம்................... ந‌ல்ல‌ காசு அதோட‌ ம‌னைவி மார் சில‌ரின் வீட்டு வேலைக்கு போனால் 4 , 5 ம‌ணித்தியால‌ம் செய்தால் 700ரூபாய் கொடுப்பின‌மாம்..............அப்ப‌டி எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ வ‌ச‌தி இருக்கு.................................

  • கருத்துக்கள உறவுகள்

1 வெளிநாட்டு காசுல சொகுசா வாழ பழகிவிட்டினம்

2. உடலைவளைச்சு வேலை செய்ய விருப்பமில்லை.

3. இப்ப பெண்கள்க்கு சமைக்க விருப்பமில்லை ஓடர் பண்ணி

பிள்ளைகளுக்கு கொடுத்திட்டு சாப்பிட பழகிவிட்டினம்

4. டிக் டொக் க்கும் செல் போன் உம கெடுத்துவிட்ட்து .

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிலாமதி said:

1 வெளிநாட்டு காசுல சொகுசா வாழ பழகிவிட்டினம்

2. உடலைவளைச்சு வேலை செய்ய விருப்பமில்லை.

3. இப்ப பெண்கள்க்கு சமைக்க விருப்பமில்லை ஓடர் பண்ணி

பிள்ளைகளுக்கு கொடுத்திட்டு சாப்பிட பழகிவிட்டினம்

4. டிக் டொக் க்கும் செல் போன் உம கெடுத்துவிட்ட்து .

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி அக்கா

ஆனால் அங்கை இருக்கும் ஆம்பிளைக‌ள் த‌மிழ் நாட்டு ஆம்பிளைக‌ளை போல் குடிக்கு அடிமை ஆகி விட்டின‌ம்..............உழைக்கிற‌ காசு பாதி அவ‌ர்க‌ளின் குடிக்கே போய் விடுது...............இப்ப‌த்த‌ உண‌வு பெருட்க‌ளின் விலைவாசியை உண‌ர்ந்து பிள்ளைக‌ளின் எதிர்கால‌த்தை நினைத்து த‌க‌ப்ப‌ன் மார் பொறுப்புட‌ன் ந‌ட‌ந்து கொள்ள‌னும்..................போன‌ வ‌ருட‌ம் மூக்கு முட்ட‌ குடித்து விட்டு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ஒரு குடும்ப‌ த‌றுத‌லை வீட்டையே நெருப்பால‌ கொழுத்தின‌வ‌ர்....................க‌ன‌டாவில் வ‌சிக்கும் அண்ணா தான் அந்த‌ வீட்டை க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்துக்கு க‌ட்டி கொடுத்த‌வ‌ர் ப‌ல‌ ல‌ச்ச‌த்தில்..................ந‌ல்ல‌ வேலை ம‌னைவி பிள்ளைக‌ள் ஓடி த‌ப்பி விட்டின‌ம் வீட்டுக்கை நின்று இருந்தால் அவையையும் கொழுத்தி இருப்பான்...................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் இப்ப‌டி கொடுமைக‌ள் ந‌ட‌ந்த‌தில்லை..............................

  • கருத்துக்கள உறவுகள்

Youthub.jpg?resize=750%2C375&ssl=1

யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை.

அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது.

அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது.

இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது.

அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி.

பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது.

குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது.

பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது.

இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன.

ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள்.

இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள்.

இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார்.

எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள்.

https://athavannews.com/2025/1425347

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்னாவுக்கு பினை ம‌றுப்பு இன்னும் இர‌ண்டு கிழ‌மை சிறையில் அடைக்க‌ உத்த‌ர‌வு

கிருஷ்னா செய்த‌ ஏதோ பெரிய‌ குள‌று ப‌டிய‌ க‌ண்டு பிடித்து விட்டின‌ம் போல் தெரிகிற‌து...................

ஏப்பிர‌ல் 2ம் திக‌தியும் வெளியில் வ‌ருவ‌து ச‌ந்தேக‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறிய யூடியூப்பருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

அத்துமீறிய யூடியூப்பரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த யூடியூப்பர் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் யூடியூப்பரை கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் கடந்த 10ஆம் அன்று அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து அவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துமீறிய யூடியூப்பருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பிழம்பு said:

பணம் ..

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.