Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமது ஊரில் வீடு இருந்தாத்தான் அதுவும். இல்லை என்றால் உடைத்தும்விடுவார்கள்.

சொந்த ஊரில், உறவுகளே வீட்டின் ஓடுகளை, கதவுகள், மின்குமிழ்கள்களை கழற்றி தமது வீட்டுக்கு மாற்றினார்கள், விற்றார்கள். எல்லா இடத்திலும், எல்லாரிடமும் உந்த கள்ள புத்தி உண்டு. ஒருவர் களவெடுத்து கொண்டு வீட்டை மாறினால், சொந்தக்காரர் எந்த நடவடிக்கையும் அதற்கெதிராக எடுக்காவிட்டால், தொடர்ந்து வருபவர்களும் அதையே செய்வார்கள். நீங்கள் எத்தனை பேரை மாற்றி மாற்றி இருத்தினாலும் உது தொடர்கதையாகும்.

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

சொந்த ஊரில், உறவுகளே வீட்டின் ஓடுகளை, கதவுகள், மின்குமிழ்கள்களை கழற்றி தமது வீட்டுக்கு மாற்றினார்கள், விற்றார்கள். எல்லா இடத்திலும், எல்லாரிடமும் உந்த கள்ள புத்தி உண்டு. ஒருவர் களவெடுத்து கொண்டு வீட்டை மாறினால், சொந்தக்காரர் எந்த நடவடிக்கையும் அதற்கெதிராக எடுக்காவிட்டால், தொடர்ந்து வருபவர்களும் அதையே செய்வார்கள். நீங்கள் எத்தனை பேரை மாற்றி மாற்றி இருத்தினாலும் உது தொடர்கதையாகும்.

எமது ஊரில் பல வீடுகள் பூட்டியபடி இருக்கின்றன. எந்த வீடும் உடைத்துத் திருடியதாகக் கேள்விப்படவில்லை. எம்மூரில் நெருக்கமாக வீடுகள் இருப்பதனால் கள்வர்கள் இது வரை உடைக்கவில்லையோ என்னவோ. ஆனால் ஆட்கள் குடியிருக்கும் வீட்டில் கடந்த ஆண்டு வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்குச் சென்ற நேரம் பார்த்து இரண்டு திருட்டுகள் நடந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் ஆட்கள் குடியிருக்கும் வீட்டில் கடந்த ஆண்டு வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்குச் சென்ற நேரம் பார்த்து இரண்டு திருட்டுகள் நடந்தன.

தெரிந்தவர்கள் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது

உடனே ரதி அக்காவுக்கு போன் செய்து, “கிறைண்டரின் ஒரு கப் எமது படுக்கை அறையில் உள்ள அலுமாரியுள் கிடந்தது அக்கா” என்றுவிட்டு எடுத்துக்கொண்டு போனவர்கள் பற்றி அவருக்குத் திட்டுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதேங்கோ நிவேதா. பிச்சைக்காரக் கூட்டத்தைக் கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள் என்கிறா. எப்பிடிக் கதவைத் திறந்ததுகள். நீங்கள் பூட்டாமல் போட்டியளோ என்கிறா. முதல் வந்து இருந்த சனங்கள் எந்தப் பொருளையுமே எடுத்துக்கொண்டு போகேல்லை என்றுவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் சென்று எப்படித் திறந்து எடுத்திருப்பார்கள் என்று ஆராய எனக்குப் புரிய ஆரம்பிக்க, கதவுகளை கொண்டியை எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து கதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு போய் கதவுக்கு அருகில் வைக்கிறேன்.

கதவுக்கு அண்மையில் ஒரு காற்றோட்டமாக இருப்பதற்காக ஒரு சிறிய யன்னல் உயரத்தில் உண்டு. இரண்டு பக்கமும் திறக்கும்படியான ஒரு அமைப்பு உள்ள யன்னல். கதிரையில் ஏறி நின்று அதைத் திறக்கப் பார்க்கிறேன் எனக்கு எட்டவில்லை. அந்தநேரம் பார்த்துக் கணவர் போன் செய்கிறார். ஆரும் இல்லாதபோது ஏன் தேவையில்லாத வேலை பார்க்கிறாய். விழுந்தாலும் தூக்க ஆட்கள் இல்லை என்று திட்டுகிறார். நான் என்  கண்டுபிடிப்பைச் சொல்ல கணவருக்கு விளங்குகிறது.

கடந்த தடவை கணவருடன் சென்றபோது மூன்று அறைகளுக்கு மாபிள் பதித்திருந்தோம். இந்த அறைக்கு மேலே திறாங்கு இருந்ததுதான். கீழே புதிதாக ஓட்டை போடவேண்டும். அதைப் போடக் கணவர் மறந்துவிட்டார். அவர்கள் எனியை வைத்து மேலே உள்ள சிறிய யன்னலை எப்படியோ திறந்து கம்பியை விட்டுத் திறாங்கையும் மேலே இழுத்துவிட்டு கதவைத் தள்ள கதவு திறந்திருக்கும். பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் பூட்டைப் பொருத்தி வைத்து இழுக்கக் கதவு பூட்டியிருக்கும் என்று கணவர் சொல்ல நானும் அப்படியே செய்து பார்க்க, பூட்டிய கதவு திறந்து மீண்டும் பூட்டு அதேபோல் நன்றாகப் பூட்டுகிறது.

சரி இப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ஆர் எடுத்திருப்பினம் என்று நானும் கணவரும் கதைத்துக் களைத்து, வீட்டுக்குள்ள சரி வெளியில hose பைப் மூன்று வைத்துவிட்டுச் சென்றது. அதைவிட 25 ஆயிரம் பெறுமதியான முள்ளுக் கம்பி ரோள். அதுகள் இருக்கோ பார் என்கிறார். சென்று பார்த்தபோது ஒரு 12 மீற்றர் நீளமான பைப்பும் முள்ளுக்கம்பிகளும் இல்லை. கணவரிடம் சொல்ல “எல்லாம் எங்கடை பிழை. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் எடுத்திருக்கினம். போலீசில சொன்னாலும் அவங்கள் வெளிநாடு எண்டதும் எங்களிட்டைக் காசு கறக்கப் பார்ப்பார்கள். இனி என்ன செய்யிறது. பேசாமல் விடு. உடன அந்த தச்சப் பெடியைக் கூப்பிட்டு ஓட்டை போட்டுத் திறாங்கைப் போடு” என்றவுடன் அவருக்கு போன் செய்கிறேன்.  

அடுத்தநாள் புல்லுப் பிடுங்க இருவர் வருகின்றனர். அதைவிட இன்னும் சில மரங்களும் நடுவோம் என்று முன்னர் எனக்கு அடிக்கடி வேலை செய்பவர்கள் இருவரையும் வரும்படி சொல்கிறேன். ஊரெழுவில் இருக்கும் லங்கா பார்மில் கொஞ்ச மரக் கன்றுகளையும் வாங்கி அவர்கள் அழைத்த ஓட்டோவில் கன்றுகளை கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்டு இணுவிலுக்குச் செல்கிறேன்.

 அடுத்தநாள் காலை எழுந்து எனக்கும் அன்ரிக்கும் இடியப்பம், சொதி, சம்பல், பருப்பு சமைத்துவிட்டு சாப்பாட்டுப் பெட்டியில் கொண்டு செல்கிறேன். போகும் போது கடலை வடைகளும் றோள்ஸ்களும் எல்லாருக்கும் வாங்கிச் செல்கிறேன். ஒன்பதரை ஆகியும் யாருமே வேலைக்கு வந்து சேரவில்லை. ரஜிதனுக்கு போன் செய்ய அவை பத்து மணிக்குத்தான் வருவினம் அக்கா என்கிறார். தோட்ட வேலைக்கும் 10 மணிக்குத்தான் போறவையோ என்கிறேன். அவை வந்திடுவினம் அக்கா. நான் 11 இக்கு வந்திடுவன் என்கிறார்.

நான் போனை வைக்கவும் நான் வேலைக்கு அழைத்தவர்கள் வந்துவிட கன்றுகளைக் கொண்டுசென்று அந்த அந்த இடங்களில் வைத்துவிட்டு எப்படி நடுவது என்று மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த “ என்னம்மா எங்களுக்குச் சொல்லுறியள். எங்கள் வேலையே இதுதானே என்கின்றனர். அவர்கள் கேட்ட மண்வெட்டிகள் இரண்டைக் கொண்டுவந்து கொடுத்தபடி “உங்கள் வேலை உதுதான். ஆனால் கடந்த ஆண்டு நீங்கள் பின்பக்கக் கரையில் ஊன்றிய எந்தக் கிளுவையும் முளைக்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கிளுவையும் பட்டுப்போய் இருந்தது. ஒன்றை இழுத்துப் பார்க்க சும்மா கையோடை வருது. ஏனெண்டால் நீங்கள் ஆழமாய் கிடங்கு எடுத்து நடவில்லை. அதுதான் திருப்பவும் சொல்லுறன். எந்த நேரமும் பக்கத்தில நிண்டு சொல்ல ஏலாது. ஒழுங்காக நடுங்கோ” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு பக்கத்திலேயே நிற்க, அவர்கள் நான்கு கன்றுகளை நட்டு முடிக்க இரண்டு பெண்டுகள் வருகிறார்கள்.

எத்தினை மணிக்கு வரச் சொன்னது. ஆடிப்பாடி வருகிறீர்கள் என்றுவிட்டு அவர்களுக்குப் புற்களைப் பிடுங்கவேண்டிய இடங்களைக் காட்டுகிறேன். 11.15 இக்கு ரஜிதன் வருகிறார். அக்கா இவைக்குச் சமைக்க வேண்டாமே என்கிறார். எல்லாருக்கும் கடையில வாங்கிக் கொடுப்பதாகத்தானே கதைத்தது. பிறகென்ன என்று கொஞ்சம் காரமாகச் சொல்லிவிட்டு, பெரிய hose பைப்பைக் காணவில்லை. எங்கே என்கிறேன். எனக்குத் தெரியாது அக்கா என்கிறார். நான் லண்டனில் நின்றபோது நீங்கள் கேற் வரை கொண்டுபோய் தண்ணீர் விட்டீர்களே? இல்லை அக்கா அது சின்னனாலதான் விட்டனான் என்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் மேற்கொண்டு எதுவும் கதைக்காது அவர் சொன்னதை நம்பியதுபோல் அப்பால் சென்று மரங்கள் நடுபவர்களைப் பார்க்கிறேன்.

கன்றுகளை நட்டுவிட்டு வந்த ரங்கன் அம்மா ஒரு தேத்தண்ணி தாறியளே என்று கேட்க குசினிக்குச் சென்று எல்லாருக்கும் தேநீர் ஊற்றிவந்து ரோலஸ்சும் கொடுக்கிறேன்.

அம்மா பின்னால வேலை செய்யிறவையிலையும் ஒரு கண் வச்சிருங்கோ. ஒராள் பிடுங்க மற்றவ நிழலுக்குள்ள போய் நிக்கிறா என்று எனக்கு மட்டும் கேட்பதுபோல் சொல்கிறார். அதன்பின் அவர்கள் ஒரு பதினைந்து நிமிடத்தில் மீண்டும் வேலையை ஆரம்பிக்க இரண்டு பெண்டுகளும் எழும்பாது மரக் குற்றிமேல் இருக்க "என்ன வேலை செய்யிற நோக்கம் இல்லையா? எழும்புங்கோ" என்கிறேன். ஆடி அசைந்து அவர்கள் எழுந்து செல்ல சிறிதுநேரம் அவர்கள் வேலை செய்வதை நின்று பார்க்கிறேன்.

ரதியக்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவவுடன் கதைத்தபடி முன்பக்கம் வர ரஜிதன் பின்பக்கமாகச் செல்கிறார். வேலை செய்ய வந்தவர்கள் பற்றிக் கூற வடிவா பாக்கவேணும் நிவேதா. சும்மா நேரத்தைக் கடத்துவினம் என்கிறா. எல்லாம் கதைத்து முடிய “ நிவேதா உங்களிட்டைக் கிடக்கிற கிறைண்டர் கப்பை எனக்குத் தாங்கோ. நான் ஒரு விலை போட்டு எடுக்கிறன்” என்கிறா. எனக்கு யோசனை ஓட அது எல்லாத்துக்கும் பொருந்தாதே அக்கா என்கிறேன். என்னட்டை இரண்டு பழைய கிறைண்டர் இருக்கு. ஏதாவது ஒன்றுக்குப் பொருந்தும் தானே என்கிறார். பார்ப்போம் அக்கா என்றபடி போனை வைக்க “அக்கா என்னவாம்” என்றபடி ரஜிதன் வருகிறார்.

கிறைண்டர் கப்பை அக்கா தனக்குத் தரட்டாம் என்றவுடன் “அப்ப அக்கா வீட்டினர் தான் எல்லாத்தையும் எடுத்தவையோ” என்கிறார். எனக்குத் தெரியேல்லை என்றுவிட்டு அப்பால் நகர்க்கிறேன். மதிய உணவு நேரம் வர முன்னரே ரங்கனிடம் உணவு வாங்கிவருமாறு கூற தான் சென்று வாங்குவதாக ரஜிதன் கூற அவரிடம் பணத்தைக் கொடுக்கிறேன். அவர் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்ல பக்கத்தில் வந்த ரங்கன்

“அம்மா குறை நினையாதேங்கோ, உவரைப் பார்த்ததால் சரியில்லைப் போலத் தெரியிது. உவரை இருத்திறதெண்டால் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசியுங்கோ என்கிறார். நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன் என்றுவிட்டு பெண்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஆடிப்பாடிப் புற்களைப் பிடுங்க, நான் எதுவும் கூறாது பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார். வந்ததும் கூப்பிடுறன் என்றுவிட்டு உள்ளே செல்கிறேன்.

உணவுப் பொதிகள் வந்ததும் எல்லோரும் உண்ண ஆரம்பிக்க, அவர்களுக்கு தண்ணீர் கொண்டுசென்று கொடுத்துவிட்டு நான் உள்ளே சென்று உண்ண ஆரம்பிக்கிறேன். ரஜிதனை உண்ணச் சொல்ல தனக்கு ரோள்ஸ் சாப்பிட்டது பசிக்கவில்லை என்கிறார். உங்கள் உணவு பழுதாகப் போகிறதே என்கிறேன். "அக்கா நீங்கள் ஃபிரிஜ் வாங்கேல்லையோ" என்கிறார். "எனக்கு எதற்கு இப்ப ஃபிரிஜ். நான் வந்து இருக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" என்கிறேன்.

“அக்கா என்னட்டை வீட்டில ஒரு ஃபிரிஜ் இருக்கு. அதைக்  கொண்டுவரட்டோ?

“அதுக்கென்ன கொண்டுவாரும், ஆனால் எனக்குத் தேவை இல்லை”

“லாண்ட் மாஸ்டருக்கு 1500 வேணுமக்கா”

“சரி அதை நான் தாறன்”

உடனேயே வீட்டுக்குச் சென்று ஃபிரிஜ்சைக் கொண்டுவந்து குசினியில் வைக்கிறார்.

“அக்கா விரும்பினதெல்லாம் நீங்கள் வைக்கலாம்”

“எனக்கு அதற்குள் வைக்க ஒன்றும் இல்லை”

“உங்களுக்காகத்தான் கொண்டுவந்தனான்”

“நான் முதலே சொன்னானதானே எனக்கு வேண்டாம் என்று, பிறகென்ன புதுக் கதை. உம்மடை வீட்டில இருந்தால் ஆரும் களவெடுத்துக்கொண்டு போயிடுவினம் என்றுதானே இங்கு கொண்டுவந்தனீர், பிறகென்ன எனக்காக கொண்டு வந்தது என்ற கதை. உப்பிடியான கதையள் எனக்குப் பிடிக்காது என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் திண்ணையில கதைத்துக்கொண்டு இருக்கினம் பெண்டுகள். வந்ததே பிந்தி. நான் சொல்லாட்டில் வேலை செய்ய மாட்டியளோ? சாப்பிட்டு முடிச்சு ஒரு மணித்தியாலமாப் போச்சு என்றவுடன் எழுந்து செல்கின்றனர்.      

ரஜிதன், நான் தென்னைக்கு பொச்சுத் தாக்கிறவையை பார்த்திட்டு வாறன். உவையை ஒழுங்கா வேலை செய்யச் சொல்லுங்கோ என்றுவிட்டு சென்று அவர்களைக் கவனித்துவிட்டு வர பின்பக்கத்திலிருந்து வந்த ரஜிதன், அக்கா நீங்கள் இருக்க நிக்க விடாமல் வேலை வாங்கிறியளாம் என்றவுடன் “வாறது பத்து மணிக்கு. ரோஸ் சாப்பிட்டு தேத்தண்ணி குடிக்க அறை மணித்தியாலம், மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணித்தியாலம். உப்பிடித்தான் மற்ற இடங்களிலையும் வேலை செய்யிறவையாமோ? சம்பளத்தைக் குறைச்சுத் தரட்டோ என்று அவையைக் கேளுங்கோ என்று கோபமாகச் சொல்ல, சரி அக்கா விடுங்கோ என்றுவிட்டு நான் வேலைக்குப் போட்டுவாறன் அக்கா என்றுவிட்டுக் கிளம்ப நான்  பின்னால் சென்று புல்லுப் பிடுங்குவதைக் கண்காணிக்கிறேன்.

இன்னும் கொஞ்ச இடத்துக்குப் புல் பிடுங்க இருக்கு. நான்கு மணியானதும் வீட்டுக்குச் செல்லக் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரத்தில இவ்வளவையும் பிடுங்கிவிட்டுப் போங்கோ என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டா வெறுப்பாக செய்கின்றனர். அவர்களுக்குத் தேனீரும் கடலைவடையும் கொடுக்க உண்டு விட்டு புல்லைப் பிடுங்க எழுகின்றனர். ஐந்து மணியானதும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வர நான் அவர்கள் சம்பளத்தைக் கொடுக்க நாளைக்கும் வாறதோ என்கின்றனர். நாளை வாறதெண்டால் ஒன்பது மணிக்கு நிக்கவேணும். இல்லை என்றால் வரவேண்டாம் என்கிறேன்.

மற்றவர்களின் வேலையும் முடிய இரண்டு மண்வெட்டிகளையும் புத்துவெட்டியையும் கழுவிக் கொண்டு வந்து தர, நான் உள்ளே எடுத்து குசினி மூலையில் வைத்துவிட்டு அவர்களுடனே கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே வர, நான் ஸ்கூட்டியை எடுத்து வந்து கேற்றைப் பூட்டும் வரை என்னுடன் நின்று, நான் பிரதான பாதைக்கு வரும்வரை எனக்கு முன்னால் மெதுவாக ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டுவந்து கவனமாப் போங்கோ என்று சொல்லிவிட்டு வேகமெடுக்கின்றனர்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையின் கதாசிரியை ஏதோ மாஸ்டர் பிளானோட ஊருக்கு திரும்பி போயிருக்கிறார். ஆனால் எல்லாம் சறிக்கீட்டுது.

கதை கரைச்சல் பட்ட கதையாய் போகுது.

ஜேர்மனியிலையும் ஒழுங்காய் இருக்கேல்லை

லண்டனிலையும் அப்பிடி தெரியேல்லை

சொந்த இடத்துக்கு திருப்பி போய் சிக்கலை தவிர வேற ஒரு கோதாரியையும் காணேல்லை...😂

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ ஆளாளுக்கு ஒருவரை சாட்டி ஒருவர் விளையாடுகிறார்கள் போலுள்ளது. சும்மா இருத்துகிறீர்கள் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போகின்றனர். எது எது இருக்கிறது என்றொரு கணக்கில்லாமல் கொடுப்பது, போகும்போது அது எங்கே என்று கணக்கு கேட்பதில்லை கோவில் சொத்துபோல் தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அடுத்தவர் மேல் பழி போடுவது. நான் செய்கிறேன் என்று இழுத்துப்போடுவோர் மட்டும் நல்லவர்கள் இல்லை. ரதி அக்காவில எனக்கொரு சந்தேகம், வீட்டில் குடியிருப்பவர் ரதி அக்காவுக்கு வேண்டப்பட்டவரோ, உறவினரோ? பொறுத்திருந்து பாப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவில் வாற உப பாத்திரங்கள் கனபேர் வருகினம் ...அந்த ரதி அக்காதான் உங்களுக்கு வில்லி.. தொடருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

. "உடையவர் பாரா வேலை ஒரு முழம் கடடை" என்பதுபோல நம்பிக்கையான வர்களை இருத்த வேணும் .அல்லது பென்சனெடுத்துட்டு போய் இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காட்டில் "யார் விறகு " (யார் விறகு என்றால் மரத்தில் ஏறி இருந்து அளவான சைஸ் கிளைகளை வெட்டி விழுத்தி விட்டு அவற்றை ஒரு மீற்றர் அளவில் கொத்தி ஒருவர் உயரம் + நீளம் +அகலமாய் அடுக்கிவைக்க வேண்டும் ......அவை பக்டரி போறணைக்கு அனுப்பப் படும் ) ........ எங்கள் கணக்கர் விடுமுறையில் செல்வதால் அவர் வரும்வரை நான் அங்கு போயிருந்தேன் . ....... ஒரு கிழமையாய் அங்கு நடக்கும் வேலையை கணக்கர் எனக்கு காட்டித் தந்தார் ........ அங்கு 8 பேர் வேலையாட்கள் இருந்தனர் . .......ஒரு நாளைக்கு ஒராள் 2 மீற்றர் விறகு வெட்டி அடுக்க வேண்டும் ......... மாலையில் நாங்கள் போய் அளந்து கணக்கில் வைத்துக் கொள்வோம் . ......... நான் கவனித்தபோது ஒராள் ஒன்றரை மீற்றர் வரைதான் வெட்டி இருப்பார்கள் . ........ என்ன கணக்கர் விறகு குறைவாய் இருக்கு என்று சொன்னால் , அது தம்பி அந்த வேலை கடினம் எங்களுக்கு ஒன்றரை வந்தாலே காணும் ஆனால் இரண்டு என்று சொன்னால்தான் ஒன்றரையாவது வரும் என்றார் . ......... அடுத்தநாள் அவர் விடுமுறை சென்றதும் நான் அவர்களை ட்ரக்ட்டரில் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டுட்டு, நானும் இளந்தாரிப் பொடியன்தானே அவர்களிடம் , நீங்கள் எல்லோருமாய் சேர்ந்து பதினாறு மீற்றர் விறகு தறித்து அடுக்கி வைத்து விட்டு எந்த நேரமெண்டாலும் "வாடி"க்கு வாங்கோ என்று சொல்லி விட்டு வந்திட்டேன் ....... சுமார் மூன்று மூன்றரை மணியளவில் எல்லோரும் வாடிக்கு வந்து விட்டார்கள் . ......... பின்னேரம் நான் ஓராளுடன் சென்று அளக்க பதினாறு மீற்றர் விறகு சரியாக இருக்கு . ........ !

நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

தெரிந்தவர்கள் போல.

அப்பிடித்தான் இருக்கும்.

9 hours ago, குமாரசாமி said:

கதையின் கதாசிரியை ஏதோ மாஸ்டர் பிளானோட ஊருக்கு திரும்பி போயிருக்கிறார். ஆனால் எல்லாம் சறிக்கீட்டுது.

கதை கரைச்சல் பட்ட கதையாய் போகுது.

ஜேர்மனியிலையும் ஒழுங்காய் இருக்கேல்லை

லண்டனிலையும் அப்பிடி தெரியேல்லை

சொந்த இடத்துக்கு திருப்பி போய் சிக்கலை தவிர வேற ஒரு கோதாரியையும் காணேல்லை...😂

முயற்சி திருவினையாக்கும் 😂

8 hours ago, alvayan said:

சினிமாவில் வாற உப பாத்திரங்கள் கனபேர் வருகினம் ...அந்த ரதி அக்காதான் உங்களுக்கு வில்லி.. தொடருங்கோ

அதேதான் . சிரிச்சுக் கதைத்தவுடன் நான் நம்பிவிடுறது.

9 hours ago, satan said:

எனக்கென்னவோ ஆளாளுக்கு ஒருவரை சாட்டி ஒருவர் விளையாடுகிறார்கள் போலுள்ளது. சும்மா இருத்துகிறீர்கள் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போகின்றனர். எது எது இருக்கிறது என்றொரு கணக்கில்லாமல் கொடுப்பது, போகும்போது அது எங்கே என்று கணக்கு கேட்பதில்லை கோவில் சொத்துபோல் தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அடுத்தவர் மேல் பழி போடுவது. நான் செய்கிறேன் என்று இழுத்துப்போடுவோர் மட்டும் நல்லவர்கள் இல்லை. ரதி அக்காவில எனக்கொரு சந்தேகம், வீட்டில் குடியிருப்பவர் ரதி அக்காவுக்கு வேண்டப்பட்டவரோ, உறவினரோ? பொறுத்திருந்து பாப்போம். 

கிட்டத்தட்டச் சரியாகத்தான் நீங்கள் கணித்திருக்கிறீர்கள்.

7 hours ago, நிலாமதி said:

. "உடையவர் பாரா வேலை ஒரு முழம் கடடை" என்பதுபோல நம்பிக்கையான வர்களை இருத்த வேணும் .அல்லது பென்சனெடுத்துட்டு போய் இருங்கோ.

உண்மைதான் அக்கா. முதலில் இருந்தவர்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால் உந்தப் பிரச்சனை ஒண்டும் இருந்திருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

மன்னாரில் காட்டில் "யார் விறகு " (யார் விறகு என்றால் மரத்தில் ஏறி இருந்து அளவான சைஸ் கிளைகளை வெட்டி விழுத்தி விட்டு அவற்றை ஒரு மீற்றர் அளவில் கொத்தி ஒருவர் உயரம் + நீளம் +அகலமாய் அடுக்கிவைக்க வேண்டும் ......அவை பக்டரி போறணைக்கு அனுப்பப் படும் ) ........ எங்கள் கணக்கர் விடுமுறையில் செல்வதால் அவர் வரும்வரை நான் அங்கு போயிருந்தேன் . ....... ஒரு கிழமையாய் அங்கு நடக்கும் வேலையை கணக்கர் எனக்கு காட்டித் தந்தார் ........ அங்கு 8 பேர் வேலையாட்கள் இருந்தனர் . .......ஒரு நாளைக்கு ஒராள் 2 மீற்றர் விறகு வெட்டி அடுக்க வேண்டும் ......... மாலையில் நாங்கள் போய் அளந்து கணக்கில் வைத்துக் கொள்வோம் . ......... நான் கவனித்தபோது ஒராள் ஒன்றரை மீற்றர் வரைதான் வெட்டி இருப்பார்கள் . ........ என்ன கணக்கர் விறகு குறைவாய் இருக்கு என்று சொன்னால் , அது தம்பி அந்த வேலை கடினம் எங்களுக்கு ஒன்றரை வந்தாலே காணும் ஆனால் இரண்டு என்று சொன்னால்தான் ஒன்றரையாவது வரும் என்றார் . ......... அடுத்தநாள் அவர் விடுமுறை சென்றதும் நான் அவர்களை ட்ரக்ட்டரில் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டுட்டு, நானும் இளந்தாரிப் பொடியன்தானே அவர்களிடம் , நீங்கள் எல்லோருமாய் சேர்ந்து பதினாறு மீற்றர் விறகு தறித்து அடுக்கி வைத்து விட்டு எந்த நேரமெண்டாலும் "வாடி"க்கு வாங்கோ என்று சொல்லி விட்டு வந்திட்டேன் ....... சுமார் மூன்று மூன்றரை மணியளவில் எல்லோரும் வாடிக்கு வந்து விட்டார்கள் . ......... பின்னேரம் நான் ஓராளுடன் சென்று அளக்க பதினாறு மீற்றர் விறகு சரியாக இருக்கு . ........ !

நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!

மற்றைய இடங்களில் எப்படியோ தெரியாது. யாழ்ப்பாணப் பக்கம் உதெல்லாம் வேகாது. வேலை ஆட்களுக்குப் பஞ்சம் என்று சொல்லிச் சொல்லியே இப்ப வேலைக்கு ஒழுங்காக வாராயினை. வந்தாலும் வேலை ஒழுங்காச் செய்யாயினை. ஆனால் மரம் வெட்டுறவை, தறிக்கிறவை மட்டும் நாள் முழுதும் நின்று வேலை செய்துவிட்டுப் போவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு மரத்துக்கு இவ்வளவு என்றுதான் கூலி.

  • கருத்துக்கள உறவுகள்

நாள் கூலி இல்லாமல் கொண்ராக்காக கொடுத்தீர்களென்றால் அரைநாளிலேயே செய்து முடித்து விடுவார்கள். சிலர் ஆடு கடித்ததுபோலவும் செய்வார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

நாள் கூலி இல்லாமல் கொண்ராக்காக கொடுத்தீர்களென்றால் அரைநாளிலேயே செய்து முடித்து விடுவார்கள். சிலர் ஆடு கடித்ததுபோலவும் செய்வார்கள். 

கொண்றாக்ராகாக்க கொடுத்தால் செலவு இரட்டிப்பாக்கிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்து

அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி ஓட்டோவில் அனுப்பிவிட்டு நானும் வீட்டுக்குப் போகிறேன். கன்றுகளை இறக்கி வைத்தவர் நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார். தேவையென்றால் உங்களுக்கு போன் செய்யிறன் என்றுவிட்டு காலை உணவை உண்டு முடிய பத்து மணிக்கு இரண்டு பெண்களும் வருகின்றனர். அவர்களோடு கதைத்துப் பயன் இல்லை என்று புரிய, அடுத்த பக்கத்துப் புற்களைப் பிடுங்கும்படி கூறிவிட்டு கதிரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

பதினொரு மணிக்கு ரஜிதன் வருகிறார்.

“என்னக்கா நிறையப் பூக்கண்டுகள் வாங்கிவந்திருக்கிறியள்”

“நல்ல வித்தியாசமான நிறங்கள். அதுதான் நடுவம் என்று வாங்கினனான்”

“நேற்றே வாங்கியிருந்தால் வேலை செய்தவங்களைக் கொண்டே நட்டிருக்கலாம் அக்கா”

“அதனால என்ன? நான் கொண்டுவந்து தாறன். நீங்கள் நடுங்கோ”

“நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில  புண். அது பெருத்திடும் அக்கா”

“என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச்  சொல்லுறீர்”

“என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா”

“சரி நீர் போய் உம்மடை அலுவலைப் பாரும்”

நான் வீட்டுக்குள் சென்று புத்துவெட்டியை எடுக்கும்போது பார்த்தால் இரண்டு மண்வெட்டியையும் காணவில்லை.

“ரஜிதன், மண்வெட்டியளை எங்க வச்சனீங்கள்”

“நான் எடுக்கேல்லை அக்கா. நேற்று வேலை செய்தவங்கள் கொண்டுபோட்டாங்களோ”

“ அவர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையான வேலையாட்கள். அவை கொண்டுபோகாயினை”

“எனக்குத் தெரியாது அக்கா. அவங்கள் உங்கை எங்காலும் மறைச்சு வச்சிட்டு எடுத்துக்கொண்டு போயிருப்பங்கள்”

“வாயை மூடும். அவை கழுவித் தர நான் மூன்றையும் குசினி மூலையில வச்சிட்டுப் போனனான். அதுக்குப் பிறகு நீர் மட்டும்தான் உள்ளுக்குள்ள வந்தனீர்”

“நான் என் மண்வெட்டியைத்தான் விடிய வேலைக்குப் போக்கேக்குள்ள கொண்டுபோனனான்”

“உம்மைத் தவிர மண்வெட்டியை ஆரும் எடுத்திருக்க முடியாது. மரியாதையா என் மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்”

என்று கோபமாகச் சொல்லிவிட்டு வர, “அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா”

“என்ன கோபம் அவவுக்கு?

“தான் தானாம் என்னைக் கூட்டிவந்தது. என்னை இருத்திறது பற்றி நீங்கள் அவவோடை ஒண்டுமே கதைக்கேல்லையாம்”

“நான் ஒவ்வொருநாளும் அவவிட்டைக் கதைக்கிறன் தானே, என்னட்டையே சொல்லியிருக்கலாமே? எதுக்கு உம்மட்டைத் தூதுவிடுறா? நான் பிறகு அவவோடை கதைக்கிறன்”

“அவ இனிமேல் உங்களோடை கதைக்கமாட்டாவாம். தன்னை மதிக்கேல்லையாம்”

“கிரைண்டர் கப் தனக்குத் தரேல்லை எண்ட கோபமோ”

“நீங்கள் வந்த நாள் தொடக்கம் நான் அவைக்குப் போய் உதவி ஒண்டும் செய்யேல்லை”

“எனக்கு விளங்கேல்லை. என்ன உதவி செய்யிறனீர்?

“அவையின்ர வாழைக் குலைகள் சந்தைக்குக் கொண்டுபோய் குடுப்பன், கறக்கிற பால் பண்ணைக்குக் கொண்டுபோறது, மில்லு  க்குப் போறது எண்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை இருக்கும். நீங்கள் வந்தபிறகு நான் அங்க போறேல்லை. இண்டைக்கு நான் வாற நேரம் பாத்து றோட்டில வந்து மறிச்சு சப்பல் பேச்சுப் பேசிப்போட்டு இனி எனக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எண்டு ஏசிப்போட்டுப் போட்டா”

“நான் பிறகு போய் அவவோடை கதைக்கிறன். நீர் முதல்ல போய் என்ர மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்”

நான் வீட்டை போட்டு வாறன் என்றபடி அவர் ஸ்கூட்டியக் கிளப்ப நான் ஓட்டோக்காரருக்கு போன் செய்து கன்றுகள் நட அந்தப் பையனை அனுப்பும்படி கூறுகிறேன்.  

பதினைதே நிமிடங்களில் அந்தப் பையன் கேற்றைத் திறந்துகொண்டு சயிக்கிளில் வருகிறார். பார்த்தால் சிறிய வயது. நல்ல மொடேணாக ஆடை உடுத்தி, தலைவாரி பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவன் போல் தெரிய, பள்ளிக்கூடம் போறேல்லையோ என்கிறேன். இல்லை நான் பத்தாம் வகுப்போடை விட்டிட்டன் என்கிறார். உங்கடை வயதுக்குப் படிச்சா நல்ல வேலை செய்யலாமே என்றவுடன், என்ன அன்ரி நடவேணும் என்கிறார்.

நான் புத்துவெட்டியைக் கொடுத்து நல்ல ஆழமாக் கிண்டுங்கோ. நான் கன்றுகளை வைக்கிற இடத்தில கிடங்கு எடுத்து வையுங்கோ என்றபடி இடங்களைப் பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பி வர நான்கு கன்றுகளை நட்டுமுடித்திருக்க, எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன் என்றவுடன் வந்த கோபத்தை அடிக்கியபடி நீங்கள் ஒருநாளும் கன்றுகள் நடேல்லையா என்று கேட்க இல்லை என்கிறார்.

பொலித்தீனுடன் நட்டால் வேரோட ஏலாமல் கன்று பெரிதாய் வளராது. திரும்பக் கன்றுகளை வெளியே எடுங்கோ என்று கூற திரும்ப வெளியே எடுக்கிறார். அவருடன் கூடவே நின்று அனைத்துக் கன்றுகளையும் நட்டு முடிய அவருக்குப் பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனால் நின்று கதைத்துச் சிரிக்க, வேலையைப் பாருங்கோ என்று கூறிவிட்டு நகர, தேத்தண்ணி இன்னும் தரேல்லை என்று கூற, அட மறந்திட்டன் என்றபடி தேநீர் ஊற்றிக் கொடுத்து பாகோடாவும் கொடுக்க அவர்கள் மாமர நிழலில் அமர்ந்துகொள்கின்றனர்.

தன் வீட்டுக்குப் போன ரஜிதன் ஒரு மண்வெட்டியுடன் வந்கிறங்குகிறார். எங்கே மற்ற மண்வெட்டி என்றதற்கு இது என் மண்வெட்டி அக்கா. நீங்கள் என்னில சந்தேகப்படுறியள் என்று வீட்டை போய் எடுத்து வாறன் என்கிறார். நான் மண்வெட்டியைப் பார்த்தால் அது எனது மண்வெட்டிதான். ஒரு மூலை கல்லில் பட்டுச் சிறிது நெளிந்திருந்தது. நான் அதைக் கூறி இது என்னுடையதுதான் என்றாலும் அவர் விடுவதாக இல்லை. இரண்டாவதும் உம்மட்டைத்தான் கிடக்கு. நாளை அதையும் கொண்டுவாரும் என்றுவிட்டு அதை உள்ளே எடுத்துக்கொண்டு சென்று வைத்துப் பூட்டுகிறேன்.

“அக்கா எனக்கு 10 வருசத்துக்கு அக்றிமென்ற் போட்டுத் தாங்கோவன். நான் உங்கடை வீட்டையும் வளவையும் வடிவாப் பார்க்கிறன்”

“நாங்களே 10 வருஷம் உயிரோடை இங்க இருப்பமோ தெரியாது. அதுக்குள்ள உமக்குப் பத்து வருஷம் எழுதி பிறகு வீடு உமக்கே சொந்தமாகவோ?

“நீங்கள் மாதம் 10 ஆயிரம் எனக்குத் தாறன் எண்டு ரதி அன்ரிக்குச் சொன்னனீங்களோ?

“எனக்கு என்ன விசரா?

“அவ உங்களோடு கதைத்ததாகச் சொன்னாவே அக்கா”

“நான் அப்பிடி ஒண்டும் கதைக்கவில்லை. நான் போக்கேக்குள்ள அவவிட்டை என்ன சுத்துமாத்துக் கதை என்று கேட்கிறன், நீர் போய் இவைக்கும் உமக்கும் எனக்கும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வாரும்” என்று பணத்தைக் கொடுக்கிறேன்.

உணவு வந்தவுடன் நான் உணவுகளைக் கொண்டுபோய் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு நீரும் சாப்பிடும் என்று கூற, தாங்கோ அக்கா நான் ஃபிரிஜ் இல் வைத்து இரவு சாப்பிடுகிறேன். இப்ப பசிக்கவில்லை என்கிறார். அவரின் பொதியைக் கொடுத்துவிட்டு உள்ளே இருந்த சிறிய மேசை ஒன்றில் என் உணவுப்பொதியை கொண்டுசென்று வைக்கும்போது எனது சாச் செய்யும் டோச் லைற் மேசையில் கிடக்கிறது.

ஒருபக்கம் மகிழ்ச்சியும் மறுபுறம் வியப்புமாக அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். அது என்னுடையதுதான். உடனே ரஜிதன், இது எனது லைற் எல்லோ. எங்க இருந்தது? என்கிறேன். இது நேற்று என்ர மாடு அறுத்துக்கொண்டு போட்டுது. இருட்டினதால அன்ரிதான் இதைத் தந்து தேடு எண்டவ என்கிறார். எதுக்கும் என்னட்டையே இருக்கட்டும். நான் அவவோடை கதைக்கிறேன் என்றவுடன் என் கையில் இருந்த டோச் லைற்றை லபக் என்று பறிக்கிறார். அன்ரி என்னட்டைத் தந்தவ. நான் அவவிட்டைக் குடுக்கிறன். நீங்கள் அவவிட்டை வாங்கிக்கொள்ளுங்கோ என்றபடி தன் ஸ்கூட்டியினுள் கொண்டுபோய் வைக்க, நான் அதிர்ந்துபோகிறேன். கோபத்தை வெளியே காட்டவில்லை.

ரஜிதன் வேலைக்குப் போட்டு வாறன் என்று கிளம்ப பெண்களின் வேலைமுடியும் வரை பொறுமையாக இருந்துவிட்டு கதவு கேற் எல்லாம் பூட்டிவிட்டுக் கிளம்புகிறேன். ரதி அக்காவின் வீட்டுக்குச் சென்று அக்கா என்று கூப்பிட, கதிரையில் இருந்த அக்கா விசுக்கென எழுந்து உள்ளே போகிறார். எனக்கு முதலில் விளங்கவில்லை. ஏதோ எடுக்கப் போகிறார் என நினைத்து ஒரு இரண்டு நிமிடம் நிற்கிறேன். அவர் வரவேயில்லை.

நான் என் ஸ்கூட்டியைத் திருப்பிக்கொண்டு இணுவிலுக்குச் சென்று கணவர், மச்சாள், அன்ரி எல்லோரிடமும் நடந்தவற்றைக் கூற உவை இருவரும் சேர்ந்துதான் பொருட்களை எடுத்திருக்கினம். அவ முதல் சில பொருட்களை எடுக்க பெடிப்பிள்ளை மிச்சத்தை எடுத்திருக்கிறார் என்கின்றனர்.

அடுத்தநாள் என் இரு அன்ரிமாரையும் ஓட்டோவில் வரும்படி கூறிவிட்டு நான் முன்னே செல்கிறேன். பதினொரு மணிக்கு  ரஜிதன் சிரித்தபடி வருகிறார். ஆரிவை என்றதும் நான் என்  சித்திமார். நாங்கள் இன்று இங்குதான் தங்கப்போறம். அதுதான் இவையும் வந்தவை என்கிறேன்.

நான் மனிசனோடை நேற்று உங்களை இருத்துவது பற்றிக் கதைச்சனான். அவர் தனிய ஒருவர் வேண்டாம். ஒரு குடும்பம் என்றால் இருத்திவிட்டு வா எண்டவர்” என்று கூற அவரின் முகம் இருண்டுபோகிறது. “என்னக்கா உப்பிடிச் சொல்லுறியள். நான் எல்லாச் சாமான்களையும் உங்களை நம்பிக் கொண்டுவந்திட்டன்”

“நானும் உங்களை நம்பித்தானே மண்வெட்டிகளை வைத்துவிட்டுப் போனனான். முதல்நாள் வைச்சிட்டுப் போனதையே இல்லை எண்டு சொல்லுற உங்களை நம்பி எப்பிடி நான் வீட்டில வச்சிருக்கிறது?

“அப்ப எத்தினை நாளில கிளம்பவேணும்”

“இப்பவே கிளம்புங்கோ “

“இப்பவேவா? உவ்வளவு பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போக வேணும். ஒரு மூண்டு நாள் எண்டாலும் வேணும்”

“நீங்கள் ஒரு லாண்ட்மாஸ்டர் பிடிச்சு ஒரேயடியா எல்லாத்தையும் ஏற்றுங்கோ”

“அதுக்கு 1500 ரூபா வேணும். என்னட்டை அது இல்லை”

“அந்தக் காசை நான் தாறன்”

“இரண்டு பேரும் சேர்ந்து என்னை நடுத்தெருவில விட்டிட்டியள்”

“நீர் நடுத்தெருவில நிக்கிறதுக்குக் காரணம் நீர் தான். நான் நம்பி உம்மை வீட்டுக்குள்ள விட, என்ர வீட்டிலேயே களவெடுத்திட்டு என்னையே ஏமாத்தின உம்மடை எளிய புத்திதான் நீர் வெளிய போகக் காரணம்” முதல்ல போலீசுக்குப் போகத்தான் நினைச்சனான். பிறகும் அங்க இங்க எண்டு இழுபடப் பிடிக்காமல் தான் சும்மா விடுறன்.

அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என்  மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது.  

முடிந்தது                  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன்

சூப்பர் ஆட்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார்.

ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை அறிமுகப்படுத்தி கருவறுக்கிறது

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

“நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில  புண். அது பெருத்திடும் அக்கா”

“என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச்  சொல்லுறீர்”

“என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா”

இந்த லட்ச்சணத்தில பத்து வருஷம் தரட்டாம். இப்பவாவது புத்தி வந்ததே அதுவே போதும். உந்த கூட்டத்தோட என்னென்று குடியிருக்கிறது?

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா”

ம், அக்கா வீட்டில தான் மண்வெட்டி இருந்ததோ? தாங்களாகவே வீட்டில இருக்கிறதென முடிவு எடுத்திட்டினம். வாங்கின வீட்டை ஊரோட உறவோட வாங்கியிருக்கலாம், எடுத்தாலும் உறவுக்குள்ள என்று மனம் ஆறலாம். இப்போ ஊர் ரொம்ப கெட்டுப்போச்சு உயிரோட வந்ததே பெரிய காரியம். ஒருநாளைக்கு நித்திரையால எழும்ப பிந்தினால் தூக்கிக்கொண்டுபோய் தீ வைத்து விடுவார்கள். ஒருவரைபாத்து மற்றவர் பழகுவது, மற்றவரை குறை சொல்லிக்கொண்டு தாங்கள்நல்லவர்கள் போல், தங்கள் குறைகளை மறைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களின் பின் ஒரு தொடர்கதை வாசித்த அனுபவம். முந்தி எவ்வளவு தொடர்கதைகளை வாரம் வாரம் வாசிப்போம்.

முடிந்தது என்பதை இட்டு மகிழ்வதா கவலைப் படுவதா. இதன் பின் என்ன என்று பாகம் இரண்டு வருமோ. இப்போதெல்லாம் அதுதானே.

சொல்ல முடியும் என்றால் சொல்லுங்க. எந்தக் காலப்பகுதியில் இது நடந்தது. எப்போது ஊருக்கு நிரந்தரமாகப் போறது.

ஊருக்குப் போனாப் பிறகு பாகம் 3 எழுதலாம். வெளிநாடுகளில் இருக்கும் பலபேர் இதைப்பத்தி கதைப்பது உண்டுதானே. ஆனால் உண்மையில் எத்தனை பேர் அங்கே திரும்பிப் போய்விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யார் இருக்கினம்.நீங்கள் ஊருக்கு வந்தால சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப யார் இருக்கினம்.நீங்கள் ஊருக்கு வந்தால சொல்லுங்கோ.

உண்மைதான். ஜீரணிக்க முடியாத ஆனால் சத்தியமான கேள்வி. ஊரில் நாங்களும் இப்போ வெளிநாட்டினர் தான். சுற்றுலாப் பயணிகளுக்கும் நமக்கும் நூலிழையே வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களின் பின் ஒரு தொடர்கதை வாசித்த அனுபவம். முந்தி எவ்வளவு தொடர்கதைகளை வாரம் வாரம் வாசிப்போம்.

முடிந்தது என்பதை இட்டு மகிழ்வதா கவலைப் படுவதா. இதன் பின் என்ன என்று பாகம் இரண்டு வருமோ. இப்போதெல்லாம் அதுதானே.

சொல்ல முடியும் என்றால் சொல்லுங்க. எந்தக் காலப்பகுதியில் இது நடந்தது. எப்போது ஊருக்கு நிரந்தரமாகப் போறது.

ஊருக்குப் போனாப் பிறகு பாகம் 3 எழுதலாம். வெளிநாடுகளில் இருக்கும் பலபேர் இதைப்பத்தி கதைப்பது உண்டுதானே. ஆனால் உண்மையில் எத்தனை பேர் அங்கே திரும்பிப் போய்விட்டார்கள்.

உந்தக் காணிக்குள்ள ஆட்களை இருத்தினதில் இருந்து அவ பல லட்சங்களை தன் கண்முன்னாலேயே இழந்து லட்சாதிபதியாகி இருக்கிறா ........ நீங்கள் இரண்டாவது பாகம் எழுதச்சொல்லி அவவை கோடீஸ்வரியாக்க நினைக்கிறீர்கள் . .......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

உண்மைதான். ஜீரணிக்க முடியாத ஆனால் சத்தியமான கேள்வி. ஊரில் நாங்களும் இப்போ வெளிநாட்டினர் தான். சுற்றுலாப் பயணிகளுக்கும் நமக்கும் நூலிழையே வித்தியாசம்.

புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2025 at 23:22, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன் என்றுவிட்டு பெண்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஆடிப்பாடிப் புற்களைப் பிடுங்க, நான் எதுவும் கூறாது பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார். வந்ததும் கூப்பிடுறன் என்றுவிட்டு உள்ளே செல்கிறேன்.

IMG-8260.jpg

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

உந்தக் காணிக்குள்ள ஆட்களை இருத்தினதில் இருந்து அவ பல லட்சங்களை தன் கண்முன்னாலேயே இழந்து லட்சாதிபதியாகி இருக்கிறா ........ நீங்கள் இரண்டாவது பாகம் எழுதச்சொல்லி அவவை கோடீஸ்வரியாக்க நினைக்கிறீர்கள் . .......... ! 😁

நல்ல உள்ளம் அவவுக்கு. வீட்ட விட்டு ஆள எழுப்பிறதுக்கும் தானே காசு குடுத்து லான்ட்மாஸ்டர் பிடிச்சு விடுறா. நீங்கள் வேற.

4 hours ago, vasee said:

புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.

நிதர்சனமான உண்மை வசி. படங்காட்டுறதில நம்ம ஆக்கள அடிச்சிக்க முடியாது. படங்காட்ட வெளிக்கிட்டு மற்றவையை மதிப்பதில்லை. ஆனால் அப்பிடியான ஆக்கள் அங்கே கனநாள் வாழமாட்டினம். அவையால முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

நிதர்சனமான உண்மை வசி. படங்காட்டுறதில நம்ம ஆக்கள அடிச்சிக்க முடியாது. படங்காட்ட வெளிக்கிட்டு மற்றவையை மதிப்பதில்லை. ஆனால் அப்பிடியான ஆக்கள் அங்கே கனநாள் வாழமாட்டினம். அவையால முடியாது.

எனக்கு தெரியும் உங்களுக்கு இவற்றை பார்க்க இரத்த கொதிப்பு ஏற்படும் என🤣, ஆனால் இப்படியான விளம்பர உலகில் வாழ்கிறோம், விளம்பரத்திற்காக அந்த மக்களுக்கு உதவி என செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் வக்கிரங்களை அம்மக்களை மோசமாக நடத்தவதன் மூலம் வெளிப்படுத்தும் போலிகள் ஆக பெரும்பாலான புலம்பெயர்ஸ் இருக்கிறார்கள் ஆனால் அதனை அறிய முடியாதவர்களாக இருப்பது அதனை விட கொடுமை.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

சூப்பர் ஆட்கள் 😄

😀😂

16 hours ago, satan said:

ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை அறிமுகப்படுத்தி கருவறுக்கிறது

இந்த லட்ச்சணத்தில பத்து வருஷம் தரட்டாம். இப்பவாவது புத்தி வந்ததே அதுவே போதும். உந்த கூட்டத்தோட என்னென்று குடியிருக்கிறது?

ம், அக்கா வீட்டில தான் மண்வெட்டி இருந்ததோ? தாங்களாகவே வீட்டில இருக்கிறதென முடிவு எடுத்திட்டினம். வாங்கின வீட்டை ஊரோட உறவோட வாங்கியிருக்கலாம், எடுத்தாலும் உறவுக்குள்ள என்று மனம் ஆறலாம். இப்போ ஊர் ரொம்ப கெட்டுப்போச்சு உயிரோட வந்ததே பெரிய காரியம். ஒருநாளைக்கு நித்திரையால எழும்ப பிந்தினால் தூக்கிக்கொண்டுபோய் தீ வைத்து விடுவார்கள். ஒருவரைபாத்து மற்றவர் பழகுவது, மற்றவரை குறை சொல்லிக்கொண்டு தாங்கள்நல்லவர்கள் போல், தங்கள் குறைகளை மறைப்பது.

உள்ளூர் காரரோடை எப்பிடி இருக்கினாமோ தெரியாது. வெளிநாட்டவர் என்றாலே அவர்களுக்கு தலையில பல்ப் ஏரியா ஆரம்பிச்சிடும்போல. நீங்கள் சொல்வது சரிதான். நாங்கள் பாதுகாப்பாக இருக்காட்டில் நாங்களே காணாமல் போயிடுவம்.

நான் செய்த பெரிய தவறு ஊருக்குள்ளையே காணி வாங்காததுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.