Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி

Saturday, April 05, 2025 செய்திகள்

GnxF7arWQAAWPlm.jpeg

இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். 

சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி  குறிப்பிட்டுள்ளார்.

https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1

.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழ்த் தலைவர்தானே… அவரை ஏன் அழைக்கவில்லை. சுமந்திரன், சிவஞானம் எல்லாத்துக்கும் அழைப்பு கொடுக்கும் போது… அர்ச்சுனாவுக்கு என்ன குறை. அர்ச்சுனா… போயிருந்தால்… இவர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழ்த் தலைவர்தானே… அவரை ஏன் அழைக்கவில்லை. சுமந்திரன், சிவஞானம் எல்லாத்துக்கும் அழைப்பு கொடுக்கும் போது… அர்ச்சுனாவுக்கு என்ன குறை. அர்ச்சுனா… போயிருந்தால்… இவர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.

அர்ச்சனா போயிருந்தால் மோடியே எழும்பிஒட்டியிருப்பார்...வடக்கும் கிழக்கும் மோடியுடன் என்பதுபோல சும் வலதிலும் ..சாணக்ஸ் இடதிலும் ஒட்டி நிற்பதைப் பார்த்தீர்களா😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நானும் நினைத்தேன்” ஆனால் எழுதவில்லை கள உறவுகளின். கருத்துகளையும் எழுத்துகளையும். பார்த்து எழுதலாம் என்று காத்திருந்தேன்… நீங்கள் எழுதி விட்டீர்கள் நன்றி

பயம் தான் காரணம் இவரை சந்தித்ததால். ஏதாவது ஒரு பலம் உண்டா ?? அல்லது கிடைக்குமா??. இவர்களை நம்புவதை விட. நாங்கள் மக்கள் தொகையில் அதிகரிக்கும்போது இலங்கை எங்கள் நாடு ஆகும் மக்கள் அதிகரிப்புக்கு ஏதாவது சிறந்த பொறிமுறை இருந்தால் என்னால் இயன்றவரை உதவுவேன். சும்மா பழைய கதைகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கதைத்து பிரயோஜனம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

அர்ச்சனா போயிருந்தால் மோடியே எழும்பிஒட்டியிருப்பார்...வடக்கும் கிழக்கும் மோடியுடன் என்பதுபோல சும் வலதிலும் ..சாணக்ஸ் இடதிலும் ஒட்டி நிற்பதைப் பார்த்தீர்களா😀

கிழக்கில்… நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துத் தந்த சாணக்கியன், மோடிக்குப் பக்கத்தில் நிற்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால்… சுமந்திரன் தானும் தோற்று, தமிழரசு கட்சி தோற்பதற்கும் காரணமான ஆளுக்கு, இந்தச் சந்திப்பிற்கு போவதற்கே அருகதை இல்லை. வெட்கம் இல்லாமல் போய் பல்லை காட்டிக் கொண்டு நிற்கிது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால்… சுமந்திரன் தானும் தோற்று, தமிழரசு கட்சி தோற்பதற்கும் காரணமான ஆளுக்கு, இந்தச் சந்திப்பிற்கு போவதற்கே அருகதை இல்லை. வெட்கம் இல்லாமல் போய் பல்லை காட்டிக் கொண்டு நிற்கிது.

ஒன்றை கவனித்தீர்களோ? எப்போதும் கறுப்பு கோர்ட் சூட்டோடு திரிபவர், இந்தமுறை மோடி நிறத்தில நிக்கிறார். நானும் உங்களில் ஒருவன்! யாரோ சொன்னார்கள் சுமந்திரன் இந்தியாவின் கைக்கூலியல்ல, அமெரிக்க எஜமானின் நண்பன் என்று. இங்க பாத்தால்; மோடியோடு ஒட்டிக்கொண்டு நிக்கிறார். உவர் மக்களுக்காக உழைப்பவரல்ல, சும்மா படம் காட்ட ஒவ்வொரு நவீன உடுப்பை வெளியிடுவார். முந்தி கடற்தொழிலாளர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குல்லா தொப்பியோட படம் காட்டினவர். நான் தமிழர் பிரதிநிதி, ஆனால் வெள்ளைக்காரன் என்கிற நினைப்பு. இவர் நவீன உடை அழகு காட்சிக்குத்தான் பொருத்தமானவர்.

50 minutes ago, Kandiah57 said:

இவரை சந்தித்ததால். ஏதாவது ஒரு பலம் உண்டா ?? அல்லது கிடைக்குமா??.

போயும் சந்திக்கினம், வரும்போதெல்லாம் சந்திக்கினம், அவரும் பாசாங்காக தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென சவுண்டு விடுவார்.  அந்தப்பிரச்சனை தீர்ந்தால் இந்தியாவை யார் கணக்கெடுப்பார்? ஏன் இங்கு வரவேண்டிய தேவை அவர்களுக்கு? தன் நாடுபோல் தன் நாட்டு பாதுகாப்போடு வந்திருக்கிறார், யாரும் எதிர்க்கவில்லை. அப்படியிருக்கும்போது தமிழர் பிரச்சனை அவர்களுக்கு சாதகமானதே.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:
  6 hours ago, தமிழ் சிறி said:

நானும் நினைத்தேன்” ஆனால் எழுதவில்லை கள உறவுகளின். கருத்துகளையும் எழுத்துகளையும். பார்த்து எழுதலாம் என்று காத்திருந்தேன்… நீங்கள் எழுதி விட்டீர்கள் நன்றி

பயம் தான் காரணம் இவரை சந்தித்ததால். ஏதாவது ஒரு பலம் உண்டா ?? அல்லது கிடைக்குமா??. இவர்களை நம்புவதை விட. நாங்கள் மக்கள் தொகையில் அதிகரிக்கும்போது இலங்கை எங்கள் நாடு ஆகும் மக்கள் அதிகரிப்புக்கு ஏதாவது சிறந்த பொறிமுறை இருந்தால் என்னால் இயன்றவரை உதவுவேன். சும்மா பழைய கதைகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கதைத்து பிரயோஜனம் இல்லை

அர்ச்சுனாவில் பல விமர்சங்கள் இருந்தாலும்,

எந்த விடயத்தையும்... ஆழமாக கணித்து தரவுகளுடன் வெளியிடும் போது ,

எதிரியே அதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி இருப்பார்கள்.

சென்ற வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகளுக்கு, இழைத்த துரோகத்தை அர்ச்சுனா, புள்ளி விபரத்துடன் எடுத்து வைத்த போது அரச அமைச்சர்கள் எவருமே வாய் திறக்கவில்லை.

இப்போ... மோடியை சந்தித்த இவர்களுக்கு,

தமிழ் தரப்பு சார்பாக எதனையும்... சரியாக பேசும் அடிப்படை அரசியல் அறிவு கூட அற்றவர்கள்.

எல்லாத்துக்கும் தலை ஆட்டி விட்டு... வடையும், மிக்சரும் சாப்பிட்டு விட்டு வரத்தான் லாயக்கு.

இப்போ... இவர்கள் மோடியை சந்தித்ததால்.... எந்த ஒரு பலனும் இல்லை. சம்பந்தன், மாவை காலத்தில் இருந்து படம் காட்டும் அரசியலைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

மக்களை பேய்க்காட்டும் அரதப் பழசான இவர்களின் அரசியல் இனி எடு படாது. தம்மைத்தானே இவர்கள் சுய பரிசோதனை செய்து, தமது அரசியல் நகர்வுகளை முன் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். இல்லையேல் விரைவில் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்.

  • நியானி changed the title to தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

மிகசரியான கருத்துகள் வாழ்த்துக்கள்,....அர்ச்சுனா போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவும். வளரவும். இவர்கள் விடமாடடார்கள.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

மிகசரியான கருத்துகள் வாழ்த்துக்கள்,....அர்ச்சுனா போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவும். வளரவும். இவர்கள் விடமாடடார்கள.

நன்றி.

26 minutes ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனாவில் பல விமர்சங்கள் இருந்தாலும்,

எந்த விடயத்தையும்... ஆழமாக கணித்து தரவுகளுடன் வெளியிடும் போது ,

எதிரியே அதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி இருப்பார்கள்.

சென்ற வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகளுக்கு, இழைத்த துரோகத்தை அர்ச்சுனா, புள்ளி விபரத்துடன் எடுத்து வைத்த போது அரச அமைச்சர்கள் எவருமே வாய் திறக்கவில்லை.

இப்போ... மோடியை சந்தித்த இவர்களுக்கு,

தமிழ் தரப்பு சார்பாக எதனையும்... சரியாக பேசும் அடிப்படை அரசியல் அறிவு கூட அற்றவர்கள்.

எல்லாத்துக்கும் தலை ஆட்டி விட்டு... வடையும், மிக்சரும் சாப்பிட்டு விட்டு வரத்தான் லாயக்கு.

இப்போ... இவர்கள் மோடியை சந்தித்ததால்.... எந்த ஒரு பலனும் இல்லை. சம்பந்தன், மாவை காலத்தில் இருந்து படம் காட்டும் அரசியலைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

மக்களை பேய்க்காட்டும் அரதப் பழசான இவர்களின் அரசியல் இனி எடு படாது. தம்மைத்தானே இவர்கள் சுய பரிசோதனை செய்து, தமது அரசியல் நகர்வுகளை முன் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். இல்லையேல் விரைவில் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஒன்றை கவனித்தீர்களோ? எப்போதும் கறுப்பு கோர்ட் சூட்டோடு திரிபவர், இந்தமுறை மோடி நிறத்தில நிக்கிறார். நானும் உங்களில் ஒருவன்! யாரோ சொன்னார்கள் சுமந்திரன் இந்தியாவின் கைக்கூலியல்ல, அமெரிக்க எஜமானின் நண்பன் என்று. இங்க பாத்தால்; மோடியோடு ஒட்டிக்கொண்டு நிக்கிறார். உவர் மக்களுக்காக உழைப்பவரல்ல, சும்மா படம் காட்ட ஒவ்வொரு நவீன உடுப்பை வெளியிடுவார். முந்தி கடற்தொழிலாளர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குல்லா தொப்பியோட படம் காட்டினவர். நான் தமிழர் பிரதிநிதி, ஆனால் வெள்ளைக்காரன் என்கிற நினைப்பு. இவர் நவீன உடை அழகு காட்சிக்குத்தான் பொருத்தமானவர்.

இந்தியா... சிங்கள அரசியல்வாதிகளை மதிக்கின்ற அளவிற்கு,

தமிழ் அரசியல்வாதிகளை கால் தூசிற்கும் மதிப்பதில்லை.

சும்மா... சம்பிரதாயத்துக்காக சந்தித்து, படம் எடுத்துவிட்டு போய் விடுவார்கள்.

பல வருடங்களாக இவர்கள் இந்தியாவை சந்தித்தும், இதனை உணர்ந்த மாதிரி தெரியவில்லை.

இவர்களை இந்தியனை நம்பி மோசம் போனதைவிட சீனாகாரனை நம்பி இருந்தாலாவது, ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும்.

முட்டாள் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளி விட்டார்கள்.

இதற்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு... சுத்துமாத்து செய்து கொண்டு திரிகிறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியா... சிங்கள அரசியல்வாதிகளை மதிக்கின்ற அளவிற்கு,

தமிழ் அரசியல்வாதிகளை கால் தூசிற்கும் மதிப்பதில்லை.

சும்மா... சம்பிரதாயத்துக்காக சந்தித்து, படம் எடுத்துவிட்டு போய் விடுவார்கள்.

திருப்பி திருப்பி சந்திச்சு என்னத்தைத்தான் கதைக்கிறார்களோ தெரியேல்லை?

70,80 வருட பிரச்சனையை தீர்க்க வக்கில்லாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திருப்பி திருப்பி சந்திச்சு என்னத்தைத்தான் கதைக்கிறார்களோ தெரியேல்லை?

70,80 வருட பிரச்சனையை தீர்க்க வக்கில்லாதவர்கள்.

இந்தியா... தமிழ் அரசியல்வாதிகளை பேய்க்காட்ட,

தமிழ் அரசியல்வாதிகள், மக்களை பேய்க்காட்ட...

கணக்கு சரிதானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்

GnxF7arWQAAWPlm.jpeg

Up-Country.jpeg?fit=1170%2C658&ssl=1

பிரதமர் மோடி இலங்கையுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டிருக்கிறார். இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும்.

இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்க வழி செய்கிறது.

இது தமிழ் மக்களுக்கு ஒரு தீங்கான ஒப்பந்தம் ஆகும்.

அதனால் வைகோகூட பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால் மோடியை சந்தித்த எமது தலைவர்கள் ஒருவர்கூட இதற்கு எதிர்ப்போ அல்லது கண்டனமோ தெரிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஏன்?

தோழர் பாலன்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_rajiv_ghandi_colombo_atta.jp

488613605_682972674403237_12287167893969

இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள்.

தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂

துவக்குப் பிடியால்... பிடரியில் அடிக்கவில்லை என்று, நன்றி தெரிவித்தாரோ. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1838.png

Screen Shot 2025-04-06 at 11.43.32 AM

மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவரது நடவடிக்கைகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் நம்பிக்கையை நொறுக்கிய அந்த கர்மா, மோடியின் எழுச்சிக்கு வழி வகுத்தது - தெய்வீக அருளோ ஜனநாயக தர்மமோ அல்ல.

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இலங்கைப் பயணத்தின் போது, இந்துக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் மகாவம்சக் கோட்பாட்டைப் போதிக்கும் தீவிரவாத பௌத்த பிக்குகள் முன் மண்டியிட அவர் எடுத்த முடிவு வெட்கக்கேடானது.

இந்த சமர்ப்பணம் இலங்கையின் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தலாம், ஆனால் முள்ளிவாய்க்காலில் நடந்த அட்டூழியங்களை நினைவுகூரும் மில்லியன் கணக்கான மக்களை இது மிகவும் புண்படுத்துகிறது, அங்கு 145,000 அப்பாவி தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இலங்கைத் பௌத்த பிக்குகள் வெறுப்பை வளர்த்ததற்காகவோ அல்லது தமிழ் இந்துக்களின் இனப்படுகொலைக்காகவோ பௌத்த பிக்குகள் பங்கிற்காக ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. மோடியின் இந்த நடவடிக்கை, தமிழர் உயிரின் மதிப்பும் இந்து மதத்தின் கௌரவமும் அரசியல் கோலச்சிதம்பரத்திற்காக தியாகம் செய்யப்படும் என்பதையே உணர்த்துகிறது.

இலங்கைப் பயணத்தின் போது மோடி ஒரு இந்து கோவிலுக்கும் செல்லவில்லை. தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கோ முன்வரவில்லை. இது ஒரு மாநிலத்தலைவரின் நடத்தை அல்ல; இது மதவாதமும் அரசியல் அனுகூலப்போக்கும் கொண்ட ஒருவரின் நடத்தைதான்.

சில தமிழர்கள் இன்னும் மோடி அவர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவார் என்று நம்புவது அவமானம். உண்மையில், அவர்தான் இந்தியா கண்ட மிக மோசமான பிரதமர் - மன்மோகன் சிங்கைக் காட்டிலும் மோசமானவர், குறைந்தபட்சம் கண்ணியத்தைக் காப்பாற்றியவர். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூட இந்து மதம் மற்றும் தமிழ் மக்கள் மீது அதிக மரியாதை காட்டினார்.

இந்தியாவில், சிறுபான்மையினரான இந்தியர்களால் பேசப்படும் இந்தி மொழியை தமிழ்நாட்டு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் மோடி தமிழ் கலாச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். அவரது கலாச்சார ஏகாதிபத்தியம் தமிழ் நாகரிகத்தின் அடையாளத்தையே அச்சுறுத்துகிறது.

மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவரது நடவடிக்கைகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் நம்பிக்கையை நொறுக்கிய அந்த கர்மா, மோடியின் எழுச்சிக்கு வழி வகுத்தது - தெய்வீக அருளோ ஜனநாயக தர்மமோ அல்ல.

உலகத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மோடி எங்களை பாதுகாக்க மாட்டார். அவர் நம்மை மதிக்க மாட்டார். நீதிக்காக நிற்க மாட்டார்.

நமது வரலாற்றை அவமதிக்கும் அடையாளச் சைகைகளை நாம் நிராகரிக்க வேண்டும், அதற்குப் பதிலாக உண்மையான நீதி, உண்மையான அங்கீகாரம் மற்றும் உண்மையான பொறுப்புணர்வைக் கோர வேண்டும்.

GoDaddy
No image preview

மோடியின் இலங்கை பயணம் – தமிழர்களுக்கும் இந்து மதத்துக்கும...

மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தம...
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அதனால் வைகோகூட பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர். வை .கோ. இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ஒரே நிலைப்பாடு தான் என்றும்

அன்று தொடங்கி இன்று வரை மாற்றங்கள் இல்லை

அவரின் தமிழ்நாட்டு அரசியல் வேறு விடயம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் மோடியை சந்தித்த எமது தலைவர்கள் ஒருவர்கூட இதற்கு எதிர்ப்போ அல்லது கண்டனமோ தெரிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஏன்?

இது எதிர்பார்த்தது தான் மோடியை அவர்கள் எதிர்க்க தாயார் இல்லை ஆனால்

வை. .கோ. மகிந்த. ராஜபக்ஷ ஐனதிபதியாக இந்தியா முதல் தடவை விஷயம் செய்தார்

அதுவரை மோடியும். வை. கோ வும். நல்ல நண்பர்கள் ....வை. .கோ. மோடியை எந்தவொரு நேர ஒதுக்கீடு இன்றி போனார் சந்தித்தார் கோரினார் மகிந்தவுக்கு சிவப்பு கம்பள. வரவேற்பு கொடுக்கக்கூடாது என்று ஏனெனில் 1.5. லட்சம் தமிழர்களை கொன்றவனுக்கு வரவேற்பு சிவப்பு கம்பள. வரவேற்பு இந்தியா கொடுக்கக்கூடாது என்றார் மோடி உடன்படவில்லை சண்டை போட்டுக் கொண்டு வந்தார் அதன் பிறகு உறவு இல்லை

ஆனால் இந்த இலங்கை தமிழ் தலைவர்கள் மோடி உடன் படமெடுக்க. அடி படுகிறார்கள்.

கேவலமாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

thumb_large_rajiv_ghandi_colombo_atta.jp

488613605_682972674403237_12287167893969

இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள்.

தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂

துவக்குப் பிடியால்... பிடரியில் அடிக்கவில்லை என்று, நன்றி தெரிவித்தாரோ. 🤣

அன்று பிடரியில். அடித்தவன். ஒரு தமிழனாக. இருந்து இருந்தால் இந்தியாவின் நடப்புகள் என்ன மாதிரி இருந்து இருக்கும் ?????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவரது நடவடிக்கைகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் நம்பிக்கையை நொறுக்கிய அந்த கர்மா, மோடியின் எழுச்சிக்கு வழி வகுத்தது - தெய்வீக அருளோ ஜனநாயக தர்மமோ அல்ல.

தெய்வத்திற்கு போட்டியாக சாத்தான் தான் இருக்கின்றது என்று பார்த்தால் கர்மா என்று இன்னும் ஒருவரும் இருக்கின்றார். தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவை தடுக்க சக்தி இல்லாத வெத்து வேட்டு கர்மா தனது சக்தியால் செய்த வேலை மோடியை இந்திய பிரதமராக்கி அவரது எழுச்சிக்கு வழி வகுத்ததும் , சோனியா காந்தியின் கட்சியை இந்திய பாரளுமன்றத்தில் எதிர்கட்சியாக்கியதும் .

இலங்கை கம்யுனிச புரட்சியாளர் என்று சொல்லபட்டவர்களின் ஆட்சியே மோடியை அழைத்து அவரை தங்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் படிசெய்ததும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2025 at 17:42, alvayan said:

இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். 

இங்கு உமைமொழியில் தான் பேசியிருப்பார்கள் மோடிக்கு ஆங்கிலம் தெரியாது. எழுதிவைத்து அல்லது காதுக்குள்ள இயர்போன் வைத்து ஆங்கிலம் பேசும் மேதை அவர். நேரடியாக அவரால் ஆங்கிலம் பேசமுடியாது. இங்காலைத் தரப்பிலையும் முழுசிக்கொண்டு நிக்கிற ஆக்களுக்கும் ஆங்கிலம் சுத்தம். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

இங்கு உமைமொழியில் தான் பேசியிருப்பார்கள் மோடிக்கு ஆங்கிலம் தெரியாது. எழுதிவைத்து அல்லது காதுக்குள்ள இயர்போன் வைத்து ஆங்கிலம் பேசும் மேதை அவர். நேரடியாக அவரால் ஆங்கிலம் பேசமுடியாது. இங்காலைத் தரப்பிலையும் முழுசிக்கொண்டு நிக்கிற ஆக்களுக்கும் ஆங்கிலம் சுத்தம். 😂

மிக்ஸ்சர் சாபிட்டுவிட்டு ..தேத்தண்ணியும் குடிச்சிட்டு வந்திருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

மோடி தமிழ்த் தலைவர்களிடையே சந்திப்பு! நடந்தது என்ன? அம்பலமாகும் விடயங்கள்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.